அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 11

1659089737051-0f10ab2e

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 11

ரகுராமின் வீட்டிற்கு வந்த கெளதமிற்கு கொண்டாட்டம். ரம்யா அத்தனை விளையாட்டுப் பொருட்கள் வாங்கி குவித்திருந்தார். அவரோடு பேசி களைத்து போனான், பின்னர் உண்டு களைத்தான்.

வீட்டின் முன்னே இருந்த ஸ்விமிங் ஃபூலில் இறங்கி விளையாட முயல, அவனாடு மல்லுக்கட்ட முடியாது  அகில் வரவும் அவனோடு சேர்ந்து விளையாடலாம் என்று சொல்லி வைத்திருந்தார் ரம்யா.

ரகுராம் ரம்யாவை இங்கு வீட்டிற்கு கொண்டுவந்து விட்டதுமே வெளியில் கிளம்பியிருந்தார். அகில் வீட்டுக்கு வந்து சில நிமிடங்களில் தான் அவரும் வந்து சேர்ந்தார். 

அகில் வந்ததுமே,”போய் குளிச்சிட்டு வாடா.சமச்சிருக்கேன் சாப்பிடலாம்.” 

“அப்பா வந்துட்டாரா?” 

“என்னை கொண்டுவந்து விட்டுட்டு போனதோட சரி, பகல் சாப்பிடவும் வரல. நல்ல வேள கெளதம்  இருந்தான். இல்லன்னா நான் மட்டும் தனியா உட்கார்ந்திட்டு இருக்கணும்.” 

“கொஞ்சமாச்சும் அவன் கூட ஓடி ஆடி விளையாடு. அப்போவாச்சும் உடம்பு குறையுதா பார்க்கலாம்.” 

கூறிக்கொண்டே சட்டையின் மேல் பட்டன்கள் இரண்டையும் கழட்டிவிட்டு சோபாவில் தலர்வாய் அமர்ந்தான். 

“டேய் தூக்கி சுமக்குற எனக்கே ஒன்னும் பிரச்சினை இல்லை. ஏன் என் புருஷனுக்கே ஒன்னும் இல்லை. உனக்கென்ன?” 

“பார்க்குற எனக்கு கண்ணுல்லாம் வலிக்குது மா.” 

‘ப்பா’ என அகில் அருகே வந்தவன்  அவன் தோள்களில் ஏறி அமர்ந்துக்கொண்டு அவன் தலைக்கு மசாஜ் செய்தான். எப்போதும் அவன் வரும்போது சில நேரங்கள் இப்படி செய்வதுண்டு. 

“ஏன் பாட்டிமா, என் மம்மி போல நீங்களும் ஸ்லிம்மா இருக்கலாம்ல?” 

“டேய் உங்கம்மா சாப்பிடறதே இல்லையே அப்போ எங்க உங்கம்மாக்கு சதை ஒட்டிக்கும். முள்ளும் தோளுமா இருக்கா, அதுக்கு பேரு ஸ்லிம்மா?” 

“என் மம்மி நிறையா சாப்பிடுவா, ஷீ நீட் மோர் அன் மோர் இல்லப்பா? பட் ஷீ ஆல்வேஸ் பியூட்டி இல்லப்பா?” அகிலையும் பேச்சில் சேர்த்துக் கொண்டான் சின்னவன்.

“ஆமாண்டா என் சின்னவனே.” அவனை தான் கன்னதோடு சேர்த்து முத்தமிட்டான்.

“அப்போ நா குண்டா இருக்கேன்னு உனக்கு இந்த பாட்டிய பிடிக்கலையா? பாட்டி என்ன அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்?” 

தன் பருத்த தேகத்தை சுற்றிச் சுற்றி காண்பித்தார்.

“நொட் லைக் தட் பாட்டிம்மா. என்னால உங்களை ஹக் கூட பண்ண முடில.” 

“ம்மி எங்கேயாவது சுளுக்கிக்க போகுது நிறுத்து உன் பெர்போமன்ஸ.’

‘கேட்டல்ல கெளதம் என்ன சொல்றான்னு, ஆசையா உன்னை ஹக் கூட பண்ண முடிலயாம். அவன் ஆசையை நிறைவேற்றி வைக்கலைன்னா எப்படி? அதுக்காகவாவது கொஞ்சமா ட்ரை பண்லாம்ல?” 

“பொறாம பிடிச்சவனே நீ பேசாத. கெளதம் கண்ணா உன்னால முடிலன்னா பரவால்லடா பாட்டி உன்னை கட்டிக்கிறேன். நோ வொரீஸ்.” 

ரம்யா கெளதமை அணைத்துக் கொள்ள, “ம்மி என் கழுத்து…”

கொஞ்சம் சுளுக்கிக்கட்டும். முதல்ல போய்க்குளி. ” 

“ஸ்ற்றோங்கா டீ குடு நானும் கெளதமும் ஸ்விமிங் ஃபூல் போறோம்.” 

“சூப்பர்ப்பா” கூறிக்கொண்டே அவனோடு சென்றான் கெளதம். அதன் பின் இருவருமாக விளையாடி முடிக்க நேரம் எட்டை தொட்டிருந்தது.

டேய் உங்கப்பா அவரைக் கவனிக்கலன்னு முறுக்கிட்டு ரெண்டு நாளைக்கு நிற்பார். நான் போய் டின்னெர் எடுத்து வைக்கிறேன் வாங்க ரெண்டு பேரும். 

அத்தனை நேரம் அவர்கள் விளையாட அங்கேயே அமர்ந்து அவர்கள் இருவரையும் ரசித்து பார்த்திருந்தார் ரம்யா. ‘எல்லோரும் ஒன்னா இருந்திருந்தா எத்தனை  சந்தோஷமாய் இருந்திருக்கும். எங்களை இப்படி தவிக்க விட்டுட்டியே கடவுளே.’ 

“ம்மி, ஐராக்கு கால் பண்ணுனியா?”

“பண்ணுனேன், ஆனா பேசல, மெசேஜ் பண்ணிருந்தா, தூங்குறேன்னு.” 

‘என்ன எனக்கும் அப்டியேதான் பண்ணுனா, என்னாச்சு இவளுக்கு? ஓஹ்! கோட் மறந்தே போய்ட்டேன்.’ அப்போதுதான் காலை அவள் காலில் அடிபட்டது நினைவு வந்தவனாக,

“ஓகே கெளதம், வில் ப்லே சம் அதர் டைம்.”

அவன் தலையையும் நன்றாக  துவட்டி டவலினால் அவனை சுற்றி அவனும் இடைக்கு கட்டிய டவளோடு கெளதமை தூக்கிக்கொண்டு உள்ளேச் சென்றான். 

உள்ளே ரகுராம் மேசையில் அமர்ந்து இவனைத்தான் திட்டிக் கொண்டிருந்தார். 

“நேரம் காலம் இல்லாம சின்னவனைக் கொண்டு போய்த் தண்ணில விட்டிருக்கான். அவனுக்கு ஏதாவது ஆகட்டும், அப்றமா அவ நம்மளைல திட்டப் போறா?” 

“ம்மி இவன் மேல உள்ள பாசமா  இல்லை இவன் அம்மா மேல உள்ள பயமா? கொஞ்சம் கேட்டுச் சொல்லு.” 

“நா யாருக்கும் பயமில்லை. எப்போ நான் சொல்றதை கேட்டிருக்க இப்போ கேட்குறதுக்கு.” 

“நான் எப்போ என்ன கேட்கல? ஏதோ ஒன்னே ஒன்னு மட்டும் கேட்கல. அப்போ அதுக்கு காரணம் இருக்கும்னு தெரிய வேணாமா?” 

எப்போதும் அவன் விருப்பப்படி நடத்தாலும் தந்தையின்  வார்த்தைகளை மீறியதில்லை, அத்தோடு ஆலோசனை கேட்க தவறியதும் இல்லை அகில். 

இருவரும் உடை மாற்றிக்கொண்டு வர, மிக நீண்ட நாட்களின் பின்னே நால்வரும் அமர்ந்து ஒன்றாய் உண்டனர். உண்டவண்ணமே களைப்பில் தூங்கிவிட்டான் கெளதம். 

ஐராவுக்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.’என்னாச்சு இவளுக்கு.’

யோசனையாகவே உண்டவன்,

“ம்மி நான் கிளம்புறேன்.” 

“டேய் இரேன் நாளைக்கு போலாம். சின்னவனும் தூங்கிட்டான் பாரு.”

“நோ ம்மி ஐரா தனியா இருக்கா, அதோட கெளதமும் நைட்ல தேடுவான். நாளைக்கு முடிஞ்சா வரேன்.”

அவனும் அவரை வீட்டுக்கு வருமாறு அழைக்கவில்லை. கெளதமை தோள்களில் சாய்த்து தூக்கிக் கொண்டவன், ரம்யாவின் தோள்களில் கையிட்டுக்கொண்டு வாசல் வரை வந்தான்.

“ப்பா நான் கிளம்புறேன், நீங்களா  வீட்டுக்கு வர வரைக்கும் நான் கூப்பிட மாட்டேன்.” 

“சரிதான். அது வீடு இல்லன்னு உனக்கே தெரிஞ்சிருக்கு அதான் கூப்பிடல. அத சொல்ல சங்கடப்பட்டுட்டு எனக்கே குத்தம் சொல்லு.” 

“என்னங்க என்ன இது?”

“ஒன்னும் சொல்லலடி உன் பையன. என்னவோ பண்ணுங்க.” 

“வரேன் ம்மி.” அவர் நெற்றி முத்தமிட்டவன் வண்டியின் முன் கதவினை திறந்து இருக்கையை சாய்த்து கெளதமை உறங்க வைத்தான். அடுத்தபக்கம் வந்து அவனும் ஏறிக்கொள்ள,

“அகி,நாளைக்கு மூனு பேருமா வரீங்களா? வெளில போய் சாப்பிட்டு வரலாம்.”

“காலைல கால் பண்றேன் ம்மி.” 

“சரிடா, பார்த்து போ.” 

அவன் செல்லவும் உள்ள வந்தவர், “அவனை ஏதாவது சொல்லி கஷ்டப்படுத்திட்டே இருங்க. பாருங்க முகமே ஏதோ போல ஆச்சு,” 

“புரியாம பேசாத ரமி. எனக்கும் ஆசையா என்ன, சந்தோஷமா  ஒன்னா இருக்க முடிதா? இப்டி பேசியாவது கேக்குறானான்னு தானே நானும் ஏதாவது சொல்லிட்டே இருக்கேன். இவனை மிஞ்சி அவ.” 

“அவனுக்குத் தெரியும் அவன் வாழ்கை சரி பண்ணிக்க. அதை  விடுங்க,சம்மந்தி இன்னிக்கு வந்ததும் கிளம்பிட்டார்ல.” 

“ஹ்ம்.ஏதோ அவருக்கு முக்கிய வேலையாம். அவன் கூட  பேசிக்கிறேன் சொல்லிட்டு கிளம்பிட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன்.” 

“பாவம் அந்த மனுஷனும்  என்னதான் பண்ணுவார், இதுங்க ஒண்ணுமே ஒருத்தர் பேச்சையும் கேட்குதுங்களா?” 

“இதையே நான் சொன்ன குற்றமா?”

“என்னவோ நல்லதா நடக்கும்னு மனசு சொல்லிட்டே இருக்கு. கடவுள்  இருக்கான்.” 

“நீ இதையே எத்தனை வருஷமா  சொல்ற.”

“ஒரு நம்பிக்கை தான், சரியா வரும் இந்த வருஷம்.”

“ஹ்ம்.” புன்னகைத்தார். அவரும் உள்ளுக்குள் தினம் வேண்டுவதும் இதையே தானே.

***

வீட்டின் கதவுகளை தன்னிடம் இருந்த சாவியினால் திறந்துக் கொண்டு வந்தவன் கெளதமை அவன் படுக்கையில் தூங்க வைத்தான். ஐராவின் அறை சற்றே சாற்றியிருக்க மெதுவாக திறந்தான்.

காலுக்கு கீழே ஒரு தலையணை வைத்து இருக்கைகளால் அதனை பிடித்துக்கொண்டு இடை வளைத்து சுருண்டு தூங்கியிருந்தாள். நன்றாக அழுது சிவந்து உப்பிப்போய் இருந்தது கன்னங்கள். 

“ஐரா…எழுந்துக்கோ. ஐரா…” 

“ஹ்ம்…” மெல்லமாய் கண் திறக்க, 

“ஏண்டி கால் அன்செர் பண்ணல. எத்தனை வாட்டி கால் பண்ணுனேன்.” 

எழுந்து அமர்ந்தவள் அவன் தோள்களிலேயே சாய்ந்துக் கொண்டு,”ரொம்ப முடில அகி ரொம்ப வலிக்குது.”

“ஏன்டி இப்டி பண்ற, வான்னு ஒரு கால் பண்றதுக்கென்ன, எதையுமே கடைசிலதான் சொல்வியா? கிளம்பு ஹாஸ்பிடல் போலாம்.” 

“காலைல சரியா போய்டும் அகி.” 

“என் வாய்ல நல்லா வந்துரும்டி.

வா…” என முழங்கால் கீழ் கையிட்டு 

அவளை இடையோடு தூக்கினான். முன்னறையில் அவளை உட்கார வைத்தவன், “இரு முதல்ல கெளதமை கொண்டுபோய் வண்டில விட்டுட்டு வரேன்.” 

“ம்மி…” என கண்ணைக் கசக்கிக் கொண்டே இவர்கள் சத்தத்திற்கே எழுந்து ஐராவைத் தேடி ஹாலுக்கு வந்தான். 

“கெளதம், அம்மாக்கு கால் வலிக்குதாம். நாம டாக்டர்கிட்ட போய்ட்டு வரலாமா?” 

“வைம்மி..” 

“ஜஸ்ட் பேயினிங் கெளதம்.”

“கெளதம் அப்பாவோட போன், கீ எடுத்துக்கோ.நான் மம்மிய தூக்கிக்கிறேன்.” 

‘வா’ என அவளை மீண்டும் தூக்கினான். “காலைல தூக்கலன்னு பழி வாங்குறல்ல. ஒல்லின்னு பேருதான். செம வெய்ட்டுடி நீ.” கூறிக்கொண்டே வண்டியில் அமர வைத்தான்.

“ரொம்ப பேசாத அகி, இரிடேட்டிங்கா இருக்கு.”

“இருக்கும் டி ஏன் இருக்காது. உனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு. அதுக்கு முதல்ல டிரீட்மென்ட் பண்ணனும்.” 

ஹாஸ்பிடல் வந்து சேர மணி பன்னிரண்டைத் தொட்டிருந்தது. காலில் திஸு டேமேஜ் ஆகியிருப்பதாகக் கூறினார் டாக்டர். ‘காலுக்கு ஒத்தடம் வைத்தீர்களா?’ எனக் கேட்க, அகில் ஐராவை பார்த்தான்.

“யெஸ் டாக்டர் வர்ற வரைக்குமே ஐஸ் பேக் வச்சுட்டுதான் இருந்தேன்.” 

“தென் நதிங் டு வொரி.” கால் வலிக்கு ஸ்பிரே அடித்தவர் அழுத்தி பேண்டேஜ் சுற்றி விட்டார்.

“ரெண்டு நாள் ரெஸ்ட் பண்ணுங்க சரியாயிடும்.’

‘கம்பர்ட்டபல் ஹீல்ஸ் யூஸ் பண்ணுங்க. பேலன்ஸ் இல்லன்னா அடிக்கடி இப்டி ஆக சான்ஸ் இருக்கு.” 

“ஓகே டாக்டர். தேங்க்ஸ்.” 

“இருக்க உயரம் போதாதுன்னா அத  வேற போடற?” 

“சாரி உடுத்துறப்ப ஹீல்ஸ் இல்லன்னா நல்லா இருக்காது.” 

“யாரு உன்னை சாரி உடுத்த சொன்னா? “

“யாரு சொல்லணும்? எனக்கு யாரு இருக்கா அதையெல்லாம் சொல்றதுக்கு.” 

“ஏன் நானிருக்கேன்? நான் சொல்லுவேன். ” 

“ஆனால் நான் கேட்க மாட்டேன். இந்த பேண்டேஜ் சுத்திக்க டாக்டர் கிட்ட வரணுமா, வீட்லயே சுத்திருப்பேன்.” 

“ஏன் வலி போகலயா?” 

அவளை வீல் சேரில் இருந்து வண்டியில் அமர வைத்தவன் அவள் காலை ஆராய்ந்துக்கொண்டே கேட்டான். 

“வீட்ல இருக்கப்பவே திஷு டேமேஜ் ஆகியிருக்கும்னு தெரியும். காலைல சரியாகிடும்னும் தெரியும். ஆனா வலி தாங்க முடில. யாராவது  வலிக்குதான்னு கேட்கணும் போலயே இருந்தது.” 

அகிலுக்கு அத்தனை வேதனையாக இருந்தது. ‘என்னை ஒருவார்த்தை கூப்பிட்டிருக்கலாமே. என்னை யாரோவாகத்தானே பார்க்கிறாள். என்னைப் போல அவள் உணரவில்லைப் போல.’

அவள் பக்கக் கதவை மூடியவன், அவளுக்கு பதில் ஏதும் கூறாது  வீடுவரை மௌனமாகவே வந்தான்.

வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தியவன்,அவளிடம் ஏதும் பேசாமலேயே அவளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்தான். அவளை அவள் கட்டிலில் உட்கார வைத்தவன், “தூங்காத வெய்ட் பண்ணு.” கூறியவன் பின் நன்றாக  உறங்கியிருந்த கெளதமையும்  தூக்கி வந்து அவன் அறையில் உறங்கவைத்து விட்டு, ஐராவிற்கு பால் காய்ச்சு அதனோடு ஒரு பாக்கெட் பிஸ்கட்டையும் கொண்டுவந்து கொடுத்தான். 

“சாப்பிடு.” பாக்கெட்டையும் பிரித்துக்கொடுத்தவன் அங்கிருந்த நீள் இருக்கையில் சாய்ந்துக் கொண்டான். இன்று ஏகப்பட்ட வேலை. ஆனாலும் அன்னை வீட்டுக்குச் சென்று களைப்பை காட்ட விரும்பவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவரோடு நேரம் கழித்தது. இருந்த வேலைப் பளுவில் தான் ஐராவின் கால் வலி பற்றி கேட்க மறந்திருந்தான். அவனுக்கு அங்கே அவள் தடுக்கிய போதே தெரியும் இன்று எப்படியும் வலி இருக்கும் என்பது. 

ஆனாலும் அவள் ஒரு அழைப்பு எடுத்து கூறியிருக்கலாமே. உடனே வந்திருப்பேன் தானே. அத்தனைக் கஷ்டமாய் இருந்தது. 

ஐராவும் மதியம் உண்டது, நல்ல பசியில் தான் இருந்தாள். முழு பாக்கெட்டையும் காழி செய்து, பாலையும் குடித்து முடித்துதான் அவனைப் பார்த்தாள். நெற்றிக்கு மேல் இடக்கை வைத்து ஏதோ  யோசித்துக்கொண்டே இருந்தான். 

“மிஸ்டர் மாமனார் வந்திருந்தார்.”

“ஹ்ம்…” 

“அப்றம் கொஞ்சத்துல தேடறேன் காணோம்.” 

“போய்ட்டார்.” 

“உங்கப்பா கூடத்தான் நின்னுட்டு இருந்தார். நீ பேசுனியா? நான் பார்க்கவே இல்லை.” 

“வந்ததும் வாங்கன்னேன்.

போய்ட்டு வரேன் சொன்னார், சரின்னேன். “

“என்ன இப்டி சொல்ற?” 

“வேறெப்டி சொல்ல? நீயும் சத்யா கூட பேசிட்டு இருந்ததை  நானும் பார்த்தேன்னு சொல்லவா?” 

“என்ன அகி இப்டி? ஏன் இப்டில்லாம் பேசுற? இன்னிக்கு பேசுறளவுக்கு எனக்கு மூட் இல்லை. இல்லன்னா உங்கிட்ட சொல்லாம இருப்பனா?’

‘அவர் கூட ஒரு மரியாதைக்காகவாவது நீ பேசணுமா இல்லையா? நீ கூப்டன்னு தானே வந்தார்.” 

“ஐ க்நொவ் வட் அம் டுய்ங் ஐரா.. உனக்கு கொடுத்த அதே ஆறுமாசம் தான் எல்லாருக்கும். ஆல் ஆர் வெயிட்டிங் போர் இட். ஐ டூ. தட்ஸ் ஆல்.” 

“அகி…” 

அந்த இருக்கையில் இருந்து எழுந்தவன், “காலைல இருந்து ரொம்ப டையர்ட் ஐரா. முடில ப்ளீஸ். குட் நைட். அன்ட் சாரி.” 

“போர் வாட்?”

“தெரில சொல்லணும் தோணுச்சு.” 

“இப்போ எழுந்து எங்கப்போர? ” 

“இதென்ன கேள்வி தூங்கப் போறேன்.” 

“திரும்ப நைட் கால் வலிச்சா? ” 

“அந்த டாக்டர்கிட்ட போ.” கூறியவன் கதவை படாரென சாற்றிக்கொண்டு சென்றான். 

அவன் கோபம் உணர்ந்தாலும் ஏதும் செய்யத் தோன்றாதவளாய் இமை மூடிக் கொண்டாள். கன்னம் நனைத்த கண்ணீரையும் துடைக்க  மறந்தவளாய்.

Leave a Reply

error: Content is protected !!