அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 7

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 7
அத்தியாயம் 7
காலை எழும்பும் போது ஐராவின் அருகில் உறங்கியிருந்தான் கெளதம். ‘இவன் எப்போ இங்க வந்தான்’.அவன் சிகை கோத கண் திறந்துப் பார்த்தான்.
“ஹாப்பி மார்னிங் கெளதம்… ”
“ஹாப்பி மார்னிங் ம்மி.” அவள் கழுதைக் கட்டிக்கொள்ள அவனை அருகிழுத்து அணைத்துக் கொண்டாள்.
“எப்போ இங்கவந்த கெளதம் எனக்கு புரியவே இல்ல.”
“கொஞ்ச நேரம் இருக்கும் ம்மி. ஏர்லியா எழுந்துட்டேனா அதான் இங்க வந்துட்டேன்.”
“பசிக்குதுதா? “
“கொஞ்சம் ம்மி. ”
புன்னகைதவள் அவன் நெற்றி முத்தமிட்டு, “சரி வா…” என அவனை அழைத்துச் சென்று காலைக் கடமைகளை முடித்து அவனுக்காக அவசரமாக எக் தோசை சுட்டுக்கொடுக்க சாப்பிட்டான்.
“அம்மாவ எழுப்பியிருக்கலாம்ல கெளதம்?” அவனுக்காக பாலை ஊற்றிக் கொடுத்தவள் அவனருகே அமர்ந்துக்கொண்டாள்.
“அப்போ அவ்ளோ பசிக்கல. இப்போ சாப்பிடரப்ப பசிக்குதும்மி.”
“சரி குடி.” அவன் குடித்து முடிக்கும் வரை இருந்து இருவருமாக முன்னறைக்கு வந்தனர். அங்கிருந்த நீள் இருக்கையில் ஐரா கால் நீட்டி சாய்ந்துக்கொள்ள கெளதமும் அவளுக்கு அருகில் அவள் கைகளில் தலை வைத்து வயிற்றோடு அவன் முதுகு சேர்த்து படுத்துக்கொண்டான்.
“திரும்ப
தூங்கிரப்போறோம் கெளதம், போன்ல அலாரம் வச்சுக்கலாம்.”சொல்லிக்கொண்டு ஏழு மணிக்கு வைத்தாள்.
நேரம் அப்போதுதான் மணி ஆறைத் தொட்டு ஓடிக் கொண்டிருக்க செவனுக்கு எழனும் கெளதம். கூறிக்கொண்டு சிறிது நேரத்தில் இருவருமே உறங்கியிருந்தனர்.
அகில் எழுந்து கெளதமை தேடியவன்,டீ ஷர்ட்டை அணிந்துக்கொண்டு வெளியில் வர, அன்னையும் மகனும் ஒன்றாய் உறங்கியிருப்பதைக் கண்டவன் அவள் அருகே வந்து பார்த்திருந்தான். அலைபேசி அலாரம் ஒலிக்க முன்னே ஒளிரக் காணவும் அதை நிறுத்தி வைத்தவன் குளித்துவிட்டு வந்து எழுப்பலாம் என உள்ளே சென்றுவிட்டான்.
அவன் வந்து எழுப்பும் வரை இருவரும் எழுந்திருக்கவில்லை. ‘இவ்வளவு தூக்கம் தூங்குறவாதான் இவ்ளோ நாளும் தூங்காம இருந்திருக்கா.’
“ஐரா…” அவள் கையில் தட்ட அப்போது தான் விழித்தாள்.
“ஹேய் டைம் என்னாச்சு?அலாரம் அடிச்சது கூட கேட்கவே இல்ல.”
“அது நான் ஆப் பண்ணிட்டேன். கெளதம எழுப்பு. கும்பகர்ணி மாதிரி தூங்க வேண்டியது, இப்போ டைமாச்சா?”
“நான் அலாரம் வச்சுட்டுதான் தூங்கினேன். நீ எதுக்கு ஆப் பண்ணுன.’
‘கெளதம், எழுந்துக்கோ டைமாச்சு.”
அவனும் எழ இருவருமாக சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டு வர நேரம் அவர்கள் வெளியில் கிளம்பும் நேரத்தை தொட்டிருந்தது.
“கெளதம் கொஞ்சமா ஏதாவது சாப்டு கிளம்பலாம்.”
“பசிக்கல ம்மி. அங்க போய் பிங்கி கூடவே சாபிடறேன்.”
“அங்க டைமாகும்,கொஞ்சமா சாப்பிடு கெளதம்.” உணவு மேசைக்கு இருவருமாக வர அங்கே சுடச்சுட இட்டலியை துண்டாக வெட்டி குளம்பில் தொட்டு உண்டுக் கொண்டிருந்தான் அகில்.
“ப்பா, என அழைத்தவன், அவன் அருகில் அமர்ந்துக்கொண்டான். கண்களால் ஐராவைக் காண்பிக்க,
அவளை ஆச்சரியப் படுவது போல பார்த்து, ஏதோ சொல்ல வர,
அகில் எதுவும் கூற கோபித்துக் கொள்வாளோ என அஞ்சியவன், அவசரமாக வாயில் விரல் வைத்து பேச வேண்டாம் எனக் கூறினான்.
“நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்டா.”
“நீங்க ஒன்னும் சொல்லவேணாம் ப்பா.”
“ஏன்டா? ”
“நீங்க சொல்லாட்டியும் ஐ க்நொவ் ஐரா இஸ் ப்ரிட்டி. இப்போ ஏதாவது சொல்லி மூட் ஸ்பாயில் பண்ணி அப்றம் நான் அங்கிள் கூட போக பண்ணிர வேணாம் ப்பா ப்ளீஸ்.”
கண்களைச் சுருக்கி நாசி இதழ் சுழித்து அவன் சைகையாய் கெஞ்ச வென இருவரும் அவரவர் காதுக்குள் ரகசியமாய் பேசிக்கொண்டனர்.
“என்ன அங்க சத்தம்.”
“ஒன்னுல்ல ம்மி, எனக்கும் ஊட்டி விடு சொல்றேன் மாட்டேன் சொல்ராங்கம்மி.”
கெளதம் அருகே ஐராவும் அமர்ந்து “கம் ஓன் குய்க், எனக்கும் ஊட்டு அகி, இட்ஸ் கெட்டிங் லேட்.”
அவளுக்கும் சேர்த்தே இவனும் ஊட்ட மேசையில் வைத்திருந்த அலைபேசி வழியே பேசிக்கொண்டிருந்த ரேவதி இவர்களை ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
எவ்வளவு நாளைக்குப் பிறகு ஐராவை இப்படிப் பார்க்கிறார்.
“ம்மி நான் வண்டில போறப்ப கால் பண்றேன்.இப்போ கட் பண்ணு, கண்ணு வெக்கிற நீ.”
அகில் பேசவும் தான் மேசையில் இருந்த அலைபேசியை கவனித்தாள் ஐரா.
“டேய் என் மருமகளை என் கண்ணு ஒன்னும் பண்ணிராது.”
“அத்தம்மா, டைமாச்சு அதான்.” தப்பாக எடுத்துக் கொள்வாரோ என இவள் கூற,
“அதுக்கென்னடா, குறைஞ்சா போயிடுவான், ஊட்டட்டும், நீ நல்லா சாப்பிடு.”
“சின்னவனே எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் பாட்டிமா. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?
“நல்லா இருக்கேன் டா. இதோ சாப்பிட்டுட்டே இருக்கேன்டா.
“பாட்டிய பார்த்தா பசில இருக்கவங்க மாறி தெரிதா கெளதம். அதெல்லாம் நேரத்துக்கு சாப்பிடுவாங்க.”
“ஸ்கூல் போக ரெடியாகிடியா கெளதம்?”
“பார்த்தா தெரிலையா? யூனிபோர்ம் போட்டு ஸ்கூல் தானே போவாங்க, இதுகூட தெரிலம்மி.”
அங்கே ரேவதி அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கோ இவர்களின் பேச்சுகுரலில் சற்றே அலைபேசியை எட்டி கெளதமைப் பார்க்க, அவர் ஏதோ கூறப்போவதை ஐரா கண்டுகொண்டாள்.
“நாராயணா…”
“நானா?”
“பின்ன நானா? அவங்க உன்னைக் கேட்டாங்களா, அவங்க கெளதம் கூடத்தானே பேசிட்டிருக்காங்க, லெட் ஹிம் டாக். எதுக்கு அடுத்தவங்க பேசிட்டிருக்கப்ப எல்லாத்துலயும் போய் மூக்க நுழைக்குற.” அகிலுக்கு கூறியவள்,
“கெளதம், பாட்டிக்கு பாய் சொல்லு. நாம ஈவினிங் வந்து பேசலாம் டைமாச்சு.” கெளதமிடம் கூறினாள்
“ஓகே பாட்டி, நான் அப்றம் பேசுறேன் பாய்.”
“இப்படி கொஞ்சிட்டே இரு அவன் உருப்பட்டாப்லதான். அவன் இப்படி இருக்கதே உன்னாலதான். குடும்பமா இதெல்லாம்? விளங்கிரும்.”
அங்கே ரகுராம் குரல் கேட்கவும் அலைபேசியை அப்படியே கட் செய்தான் அகில்.
“திருப்தியா? கேட்டாச்சுல்ல, இப்போ கிளம்பு.”
“என்னையும் அப்டியே ஆபிஸ்ல ட்ரோப் பன்றியா ஐரா?”
முன்னே சென்றுக் கொண்டிருந்தவள் நின்று அவனைத் திரும்பிப் பார்க்க,
“நானும் எத்தனை வருஷமா கேட்டுட்டு இருக்கேன்,ஒன்ஸ் கூட்டி போகலாம்ல. ”
“எப்போவும் ஒரே பதில் தான். கிளம்பு டைமாச்சு. கோட்டேஷன் ரிசல்ட் என்னனு பார்த்துட்டு கால் பண்ணு.”
கெளதம் தனது பையினை தோள்களில் மாட்டிக்கொண்டு இவர்களுக்காய் காத்திருக்க அவனோடு சேர்ந்து மூவருமாய் வெளியில் வந்தனர்.
மலர் எப்போதும் போல நேரத்திற்கு வர அவரிடம் கூறிக்கொண்டு
கிளம்பினார்கள்.
கெளதம்,அகிலைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரிக்க, அவனும் புன்னகைத்தான்.
அடர் சாம்பல் நிற டீஷர்ட்அதன் மேல் கருப்பு ஜாக்கெட், கால்களை இருக்கிப்பிடித்த கருப்பு பேன்ட், உயர்த்திக் கட்டிய போனி டேயில் என உடுத்தியிருந்தவள் தன்னுடைய பி எம் டபில்யூ ரக பைக்கில் ஏறி கெளதமை முன்னால் அமர வைத்துக்கொண்டாள்.
தன்னுடைய கார் கதவை திறந்தவன் உள்ளே ஏறாது அதில் கையை வைத்து இவள் கிளம்பும் வரை பார்த்திருந்தான்.
“ம்மி சூப்பர்ம்மி… அத்தனை குதூகலமாய் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சின்னவன்.
அவள் கிளிம்பிச் செல்லவும் அகிலும் அவன் அலுவலகம் சென்றான்.
அத்தனை லாவகமாய், வண்டி நெரிசலில் அதிக வேகமும் இல்லாமல் மிதமாய்ச் செல்ல,
“ம்மி டெய்லி இப்படியே வரலாம் ம்மி.”
‘ஓஹ்! அதுக்கென்ன எப்போவும் இப்படியே வரலாமே. ஆனா உங்கப்பா என் பின்னாடியே வந்தா நாளைல இருந்து அங்கிள் கூடத்தான் போகணும்.”
“நாராயணா… “
“டேய் அது என் ஆளுடா… ஆளாளுக்கு கூப்பிட்டா அவர் கன்பியூஸ் ஆகிற மாட்டாரா?
“ம்மி காலைலயே சொன்னேன். கேட்க மாட்டேன்னா நா என்ன பண்ணட்டும் ம்மி.”
‘தென், அப்பாவ போ சொல்லிரலாம் கெளதம். ரொம்ப தொல்ல பன்றான். ”
“நோ நோ. நாந்தான் அவங்கள கூட்டி வந்திருக்கேன். உங்கிட்ட இருந்து அவங்களை காப்பாத்துறேன்னு ப்ரோமிஸ் பண்ணிருக்கேன் ம்மி.”
பேசிக்கொண்டே பள்ளியின் முன்வாயிலை அடைந்திருந்தனர்.
இவர்கள் பின்னே வந்த அகிலின் கார் ஹாரன் அடித்து விட்டு இவர்களைத் தாண்டி வேகமெடுத்தது.
வண்டியை பார்க்கிங்கில் விட்டு கெளதமை இறக்கி விட்டவள் தன் தலையிலிருந்த ஹெல்மட்டை கலட்டி கைப்பிடியில் வைத்தாள்.
அனைவரது பார்வையும் இவள் வசம்.
கலைந்திருந்த கூந்தலை சரிசெய்தவள் வண்டிவிட்டிறங்க அவள் கைகளை பிடித்துக்கொண்டான் சின்னவன்.
“பிங்கி…” இவர்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த இவன் தோழியைக் கண்டவன் சத்தமாக அழைத்தான்.
அவளும் திரும்பிப்பார்த்து கையசைத்தாள்.
“ஹேய் கெளதம்! ஹூ இஸ் ஷீ? வாவ் வாட் அ பிரிட்டி…”
“ஹாய் பிங்கி அம் ஐரா.”
“மை மாம்…”
“ஹாய் ஆன்ட்டி…”
“யூ டூ சோ கியூட் பிங்கி.”
வெட்கப்பட்டாள் சின்னவள்.
“உன் ரியல் நேம் என்ன? ”
“அம் ப்ரனிதா. பிங்கி மை பெட் நேம்.”
“ஓஹ் ஸ்வீட் நேம் டா. ஓகே லெட்ஸ் கோ. டைமாச்சு.”
அவளும் ஐராவின் மற்ற கையை பிடித்துக்கொள்ள இருவரையும் அழைத்துச் சென்றாள்.
இருவரும் அவர்களின் வகுப்பறை வரவும் கூறிக்கொண்டு உள்ளே செல்லும் வரை பார்த்திருந்தாள்.
ஆளாளுக்கு அவனிடம் ஐராவைக்காட்டி கேட்க,
கெளதமின் முகத்தில் அத்தனை சந்தோஷம். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கெளதமின் வகுப்பாசிரியை வர, ஏற்கனவே அறிமுகமான முகமே எனப் பார்க்க அவரோடும் பேசினாள்.
“நான் இவங்க கிளாஸ் எடுத்து இப்போ டூ மந்த்ஸ் தான் ஆகுது . எனக்கு முன்ன இருந்த மிஸ் லீவ்ல இருக்காங்க.”
“ஓஹ்! அதான் வேற நேம் படிச்சதா ஞாபகம்.”
“யெஸ்டடேய் கெளதம் அப்பா வந்ததா சொன்னாங்க. என்னால சந்திக்க முடில.”
“ஓஹ்…என புன்னகைத்தவள்,
‘நீங்க வர லேட் ஆகவும் போய்ட்டதா சொன்னாங்க. வில் மீட் சம் அதர் டைம். நீங்கன்னு தெரிஞ்சிருக்காது
இல்லன்னா நின்னு பேசிருப்பாங்க.”
“உங்களை மீட் பண்ணுனதே ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐரா. இப்போல்லாம் பேமலி ஆகிட்டா பிரெண்ட்ஸ் மீட் பன்றதே கஷ்டாமகிடுது.”
“ஹ்ம்…’ அதற்கு புன்னகையே பதிலாய் கொடுத்தவள் ‘ஓகே தென்,
எனக்கும் டைமாகிடுச்சு, இனி அடிக்கடி சந்திக்கத் தானே போறோம் பார்க்கலாம்.” எனக் கூறி விடைப்பெற்றாள்.
‘அட,நம்ம வசந்தி அக்கா…டேய் அகி நேத்திக்கு நீ இவங்களை மீட் பண்ணி இருத்திருக்கனுமே.செம ஜொள்ளு பார்ட்டி.’
மனதில் கூறிக்கொண்டே தன் வண்டியிருக்குமிடம் சென்றாள்.
கெளதமின் ஆசிரியை அகிலின் காலேஜ் மெட்.
‘அஞ்சு வருஷம் பின்னாடி போன்னு சொல்றான், அப்டியே அங்க இருக்கவங்களும் வர்ராங்க. இன்னும் யாரெல்லாம் வருவாங்களோ.நாராயணா…’
தன் வண்டியை இயக்கியவள் அடுத்து செல்ல திட்டமிட்டிருந்த இடத்திற்குச் சென்றாள்.
ஐரா சென்ற வேலை முடிந்திருக்க திரும்பிச் சென்று கெளதமை அழைப்பதற்கு நேரம் இன்னும் இருந்தது. அதுவரை என்னச் செய்யலாம் என யோசித்தவள், பிரேமிற்கு அழைத்தாள்.
“சொல்லுங்க மேம்.”
காலையில் நடந்த பேச்சு சம்பந்தமாக இருவரும் பேசிவிட்டு,
“பிரேம், உங்க பாஸ் இருக்காரா? ”
“ஹ்ம் கொஞ்சம் பிஸியா இருக்கார், ஏதாவது அவசரம்னா நான் பேசச் சொல்றேன்.”
“அதெல்லாம் வேண்டாம் பிரேம். நான் கெளதம் பிக்கப் பண்ணிட்டு லஞ்ச்க்கு xy ஹோட்டல் போறேன். அங்க வரச் சொல்லுங்க. நாம வெய்ட் பண்றோம் சொல்லிருங்க.”
“மேம் அந்த டைம் அப்போய்ன்மன்ட் இருக்கு.”
“நான் வெய்ட் பண்ணுவேன் சொல்லிருங்க பிரேம்.” கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
“எனக்கு வேண்டியது பன்ன சொன்னல்ல, உன்னை யோசிக்க வேண்டாம் சொன்னல்ல. அம் கோயிங் டு பி செல்பிஷ்.”
சிரித்துக்கொண்டே அகிலுக்கு ஹோட்டலின் பெயரையும் நேரத்தையும் அனுப்பியவள் கிளம்பி அருகிருந்த காபி ஷாப்பினுள் நுழைந்தாள்.
கால்டு காபிக்கு ஆர்டர் செய்தவள் வரும்வரை அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும் மனம் ஏனோ அவ்விடத்தை சுற்றிப்பார்க்கவே சொன்னது. முன்பெல்லாம் எப்போதும் இங்கே வருவாள்.
அப்போது அவர்கள் இருந்துவிட்டு போகும்வரை இவ்விடம் அத்தனை கலகலப்பாகவே இருக்கும்.
அவள் வந்த நேரம் அத்தனை கூட்டமில்லாமல் இருக்க சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது.
‘என்னால என்னை மாத்திக்க முடியுமா தெரியல அகி.பட் ஐ வில்.’தானக்குத் தானே கூறிக்கொண்டவள், ஒரு செல்ஃபீ வேறு எடுத்து அகிலுக்கு அனுப்பியும் வைத்தாள்.
அதன் பின் அங்கிருந்து நேராக கெளதமின் பள்ளிக்குச் சென்றாள்.
வாயிலில் வண்டியை நிறுத்தி பிள்ளைகள் ஒவ்வருவராய் வர ஆரம்பித்திருக்க அதில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தாள்.
பிங்கியோடு பேசிக்கொண்டே கெளதம் வர தூரம் இருந்தே இவளுக்கு கையசைத்தான். இவளும் கையசைக்க இவளருகே வந்தவன் “ம்மி..” என அவள் கால்களைக் கட்டிக்கொண்டு,
“பிங்கிக்கு நம்ம கூட ஒரு ரைட் போகணும் சொல்றா.”
“இப்போவா? ”
“ஆமா ம்மி… ”
“நாம பிங்கிய கூட்டி போய்ட்டா அவங்க அம்மா வந்து பிங்கி எங்கன்னு தேடுவாங்களே.”
“ஆமா கெளதம், நாளைக்கு நான் மம்மிகிட்ட கேட்டுட்டு வரேன்.”
“தெஸ்ட் மை கேர்ள். அம்மாகிட்ட கேட்டுட்டு நாளைக்கி ரெண்டு பேருமா போய் ஒரு ரௌண்ட் சுத்திட்டு வரலாம் ஓகே.”
“ஓகே ஆன்ட்டி.பாய் கெளதம்… “அவள் அன்னை காரில் இருந்தாவாறே ஹாரன் அடிக்க ஐராவே அவளை ஏற்றி விட்டு பிங்கியின் அன்னையோடும் அறிமுகமாகினாள்.
“கெளதம், போலாமா?”
“ஓகேம்மி.” அவனை தன் முன்னே அமர்த்திக் கொண்டவள், வீட்டுக்கு போலாமா கெளதம்.”
“ம்மி ஆபிஸ் போய் அப்பா என்ன பன்றாங்க பார்க்கலாம் ம்மி.”
“நோ. அங்கெல்லாம் அப்படி போக முடியாது கெளதம். ப்பா ஈவினிங் வந்துருவாங்களே.
“அன்னிக்கு என்னை கூட்டி போனாங்க ம்மி.”
“அது அவங்கதானே கூட்டி போனாங்க. நானெல்லாம் கூட்டி போக முடியாது.”
“ஹ்ம்…”
“சரி எதுக்கு இப்போ முகத்தை
அப்டி வச்சுக்குற கெளதம்?
அப்பாவை பார்க்கணும், அப்பா இங்க வாங்கன்னா வரப்போறாங்க. எதுக்கு நாம போகணும்.”
“அவங்களுக்கு அங்க நிறையா ஒர்க் இருக்கும் ம்மி. எப்படி வர முடியும். அதான் நாம போய் பார்த்துட்டு வரலாம்.”
“அப்டில்லாம் இல்லை கெளதம். அப்பாவ நான் கூப்பிட்டா எப்பவும் எங்கேயும் வருவாங்க. சோ நாம வீட்டுக்கு போய் ட்ரெஸ்லாம் சேன்ஜ் பண்ணிட்டு ஹோட்டேல் போலாம். அப்பா அங்க வருவாங்க.
உனக்கு இப்போவே பசிக்குதுன்னா இப்படியே போய் சாப்பிடலாம்.”
“பசிக்கல ம்மி. வீட்டுக்கு போய்ட்டு வரலாம்.”
பேசிக்கொண்டே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
பின் இருவருமாக ஹோட்டலுக்கு வந்து கார்த்திருக்க இவளை முறைத்துக்கொண்டே வந்து சேர்ந்தான் அகில்.
“எவ்ளோ இம்போர்ட்டண்ட் மீட்டிங்னு தெரியுமா இல்லையா? எதுக்கு தெரிஞ்சே இப்படி பண்ற?”
அவனைக் கண்டு கொள்ளாதவள், “கெளதம் என்ன சாப்பிடற?”
அவனிடம் தேவையான உணவைக் கேட்டவள் இவர்களுக்கும் ஆர்டர் செய்தாள்.
“எதுக்கு இவ்ளோ டென்டஷன்? ரொம்ப பிரஷர் பண்ணாத அகி.”
“ஐரா, நேத்திக்கே சொல்லிட்டேன் அது எவ்ளோ இம்போர்ட்டண்ட்னு. அதோட,”
“எனக்கு இப்போ மூனுப்பேருமா உட்கார்ந்து சாப்பிடணும்னு தோணுச்சு, அதான்.”
“நைட் சேர்ந்தே சாப்பிடுக்கலாமே. அதுக்கு இப்படித்தான் பண்ணுவியா?
“ம்மி சொன்னேன்ல, ப்பாக்கு ஒர்க் நிறையா இருக்கும்னு. நாம ஆபிஸ்கே போயிருக்கலாம் ம்மி.”
‘இதுக்குத்தான் இங்க கூப்பிட்டேன்.’ என்பதாய் அவனைப் பார்க்க,
“நீ அங்கேயே வந்திருக்கலாம். ஒன்னா சாப்பிட்டும் இருக்கலாம், நான் என் வேலையையும் பார்த்திருப்பேன்.”
“லூசா நீ, அங்க கூட்டி வான்னு சொல்ற? ”
“அப்போ இங்க இப்டி யாரும் பார்த்தா பரவால்லயா? ”
“இங்க உனக்கு தெரிஞ்சவங்க யாரும் வரப்போறதில்லை. சும்மா டென்ஷன் ஆகாம சாப்பிடு.”
“எனக்கு பசிக்கல, நீங்க சாப்பிடுங்க.”
கெளதம் சாப்பிடாது அவரகளையே பார்த்துக்கொண்டிருக்க,
“கெளதம் நீ சாப்பிடு. அதுல கொஞ்மா எனக்கும் மிச்சம் வச்சு குடு நான் சாப்பிடறேன்.”
அகில் அப்படிக் கூறவும் கெளதம் அவசரமாக சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
“என்னை பத்தி தானே யோசிக்க வேண்டாம் சொன்னேன். சின்னவனை எதுக்கு உள்ள இழுக்குற இடியட்.” அவள் பக்கமாக குனிந்து மெதுவாகக் கூறினான்.
“ரொம்ப ஒர்க் டென்டஷன்ல இருப்பன்னுதான் கூப்பிட்டேன் பூல்.”அவனைப்போலவே கூறினாள்.
அவளை முறைத்தவனோ அதற்கு மேல் முடியாது போக,
“சரி சாப்பிடு.” அவனும் அவளோடு சேர்ந்து சாப்பிட ஆரம்பித்திருந்தான். ஒரு வாய் சாப்பிட்டவன்,
“ஐரா அவங்க கோட்டஷன் கேன்சல் பண்ணிட்டாங்க.
“நல்லது தானே.”
“லூசா நீ. அவங்க ஏற்கனவே யாரையாவது செலக்ட் பண்ணிட்டு இப்போ வேணும்னே ஸ்டாப் பண்ணிருக்காங்க. ஏதோ இஷுனால இப்போதைக்கு கேன்சல் பன்றோம்னு மட்டும்தான் சொல்லிருக்காங்க.”
“சரி பார்த்துக்கலாம் விடு அகி. முதல்ல சாப்பிடு.”
“என்னத்த பார்க்க.”
“சரி,நீ ரிட்டர்ன் கால் பண்ணி ரீசன் கேட்டியா? ”
“நோ அவங்க பொதுவா ஒரு நோட்டீஸ் தான் அம்ச்சிருக்காங்க. கொட்டேஷன் குடுங்கன்னு கால் பண்ணி கேட்கத் தெரிஞ்சவங்களுக்கு இதையும் தனிப்பட்ட முறைல சொல்லிருக்கனுமா இல்லையா? அதான் நானா பண்ணல.”
“கரெக்ட் தான், அவங்கதானே தேடிவரணும், நாம போனா நல்லாவா இருக்கும்? “அவள் கூற,
அவள் முகத்தைப் பார்த்தவன்,”சரி நீ காலைல கெளதம விட்டுட்டு எங்கப் போன?”
“இதென்ன கேள்வி அகி. எங்கிட்ட நீ எப்படி அதைக் கேட்கலாம்?”அவன் முகம் பார்க்காமலேயே அவள் பதில் கூறினாள்.
‘லூசு என்ன பண்ணி வச்சான்னு தெரிலயே…’ உள்ளுக்குள் அவன் நினைக்க,
“நாராயணா…”
“எதுக்கு இப்போ அவரை ஏலம் விடுற? ” அவன் அவளைக் கேட்கவும் ,அவன் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
“உனக்காகத்தான். கால் வருது எடுத்துப் பேசு.” கூறியவள் கெளதமோடு பேசிக்கொண்டே சாப்பிட்டாள்.
“ஐரா…”
“ஹ்ம் சொல்லு அகி கேட்டுட்டே தான் இருக்கேன்…”
“இங்க என்னைப் பாரு.”
“என்ன?”
“நான் தான் என்னனு கேட்கனும். ”
“சரி கேளு…”
“பீ சீரியஸ் ஐரா.”
முன்பெல்லாம் அவன் இரத்த அழுதத்தை அதிகரிப்பதுதான் அவள் வேலை. அதை அவன் கூறியது போலவே மீண்டும் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
“அகி, அந்த காண்ட்ராக்ட் உனக்கு வேணும். கண்டிப்பா உனக்கு வந்திருக்க சான்ஸ் இருக்கு ஐ க்நொவ் இட். பட் ஒன் பெர்சன்ட் நோ சான்ஸ். அதான் எதுக்கு அந்த ஒரு பெர்சன்ட்க்காக டென்ஷன் ஆகணும்னு போய் பேசிட்டு வந்தேன்.
ரொம்ப பாவம், ஏதோ அஞ்சு பத்துல முடிச்சுக்கலாம்னு நினச்சு லேண்ட் வாங்கினாராம். வெளிநாட்ல வேற வாசகம், சோ அங்க இருக்க பிரெண்ட்ஸ் சர்க்கல் சேர்ந்து இவரை நம்பி வாங்கிருக்காங்க. எல்லாமே அங்கேயே இருக்கவங்க. ஏதோ லாபம் பார்க்கலானு வாங்கிருக்காங்க. இப்போ லேண்ட் வாங்குனதுலேயே அவர் பங்குக்கு பாதிக்கு மேல லோன் தானாம்.
நேத்து நாம பேசிக்கிட்ட போலல்லாம் அவ்ளோ அங்க ஒர்த் இல்லை. நம்மல எல்லாமே யாரோ சொல்லித்தான் கோட்டேஷனுக்கு கேட்டிருக்கான். சோ கண்டிப்பா ரொம்ப லீஸ்ட் அமவுண்ட் பார்த்துதான் கொடுத்திருந்திருப்பான். நல்ல வேளை இன்னிக்கு நான் போனேன். இல்லன்னா மிஸ் பண்ணிருப்போம்.”
அவளை முறைத்தவன், “புது ஆளுங்க, புது இடம் அதான் எதுக்கு அங்கெல்லாம் போனன்னு கேட்டேன். “
“எனக்கு அந்த ஆளை முன்னாடியே தெரியும் அகி. பையனை காலேஜ் சேர்க்க லாஸ்ட் வீக் அது சம்பந்தமா பேச வந்திருந்தார். அப்றம் இன்னிக்கு கூட ஜஸ்ட் ஏதேர்ச்சியா மீட் பண்ற போலத்தான் அரேன்ஜ் பண்ணி மீட் பண்ணேன்.”
“ஓஹ்.”
“என்ன ஓஹ்? இப்போ அடுத்து என்ன பண்ணனும்னு மட்டும் பாரு. சும்மா என்னை கேள்வி கேட்குற வேலை எல்லாம் வச்சுக்காத சொல்லிட்டேன்.”
“அதெல்லாம் அப்டித்தான் கேப்பேன் அதவிடு. இதுல கொட்டேஷன் கொடுத்தவங்க கண்டிப்பா பிரச்சினை பண்ணுவாங்க. அதோட எனக்கு வந்திருக்குனு தெரிஞ்சா ஏதோ பண்ணிருக்கேன்னு புரியும்.”
“நீ என்ன பண்ணுன?அதெல்லாம் இல்ல. கொஞ்சநாள் இது இப்படியே இருக்கட்டும். அந்த லேண்ட் நம்ம கைக்கு வந்ததும் பார்த்துக்கலாம்.
“அந்த ஆளுக்கு மண்ட மேல டென்ஷன் ஏத்திக்க விருப்பம் இல்ல. சோ சின்ன லாபம் வச்சு உனக்கே வித்துரலாம்னு பேசியிருக்கேன்.”
“என்னை நல்லாவே வித்திருக்க அப்போ.”
“கொஞ்சமா.” கூறியவள் புன்னகைத்தாள்.
“ஹ்ம்… பட் அவனை நினைச்சாதான்,சரிவிடு பார்த்துக்கலாம்.”
“அதெல்லாம் உன் பிரச்சினை, எவன்னாலும் நீ பார்த்துக்கோ.
நம்ம வேலை இத்தோட முடிஞ்சது, பட் இதுக்கான பிரதி பலன் எதிர்பார்ப்பேன்.” கூறினாள் ஐரா.
“சரிதான்.’
‘ஹேய் கெளதம், அப்பாக்கு கொடுக்காம புல்லா பினிஷ் பண்ணிட்ட?”
கடைசி வாயை உண்ண வாய்க்கருகே கையை கொண்டுச் சென்றவனைப் பார்த்து அகில் கேட்க,அதை அவனுக்கே நீட்டினான் சின்னவன். அவனும் அதை வாங்கிக்கொண்டு,
‘குட் பாய் மொத்தமா பினிஷ் பண்ணிட்ட. சரி அப்பா கூட ஆபிஸ் போலாமா கெளதம்?”
கெளதமோ திரும்பி ஐராவைப் பார்க்க,
“இப்போ முடியாது கெளதம், நாம இன்னொரு நாள், நல்ல நேரமா பார்த்து போவோம் ஓகே. இப்போ நேரம் நல்லா இல்ல. வீட்டுக்கு கிளம்பலாம்.”
“அகில் அவளை முறைக்க,அவன் தோளில் தலை வைத்தவள்,
“இன்னிக்கு டையார்ட் அகி. ரொம்ப நாள் அப்றமா வெயில்ல அங்க இங்கன்னு சுத்துனனா அதான். இப்போ கூட கார்ல தான் வந்தேன்.”
“அது அவன் ஆசைக்கு. டெய்லி அதுல போகணும்னு இல்ல ஐரா.
“ஹ்ம்… மார்னிங் மட்டும் அதுல போகலாம்னு நினச்சிருக்கேன்.”
“ஹ்ம் ஓகே கிளம்புங்க, எனக்கும் டைமாச்சு, நைட் ஏர்லியா வந்துர்றேன்.”
அகில் கன்னத்தில் முத்தமிட்டவன் கிளம்பினான். போகும் அவனையே பார்த்திருந்தவள் அவன் சென்றதும் இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்குச் சென்றார்கள்.