அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 09

IMG-20220627-WA0025-21141e5f

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 09

An kn-09

இரண்டு மாதங்கள் வேகமாய் சென்று விட்டதாய் ஐரா புலம்ப, ‘என்ன இத்தனை மெதுவாக ஊர்ந்து போகிறது’ எண்ணிக் கொண்டிருந்தான் அகில். 

அன்றொரு நாள் தனக்கு வந்த அழைப்பின் உரையாடலை அவ்வப்போது அசைப் போட்டுக்கொண்டான். அப்படியாயும் மனம் அதில் பதிகின்றதா பார்க்கிறான். 

‘அவளை எவ்ளோ ஈஸியா முன்னாடி இருந்த போல இருன்னு சொல்லிட்டேன். என்னால முடிலயே. இப்போல்லாம் கோவமே வரமாட்டேங்குது. எதைச் செய்யவும் இத்தனை யோசிக்கிறேன்’

நானும் அவள் எடுக்கும் முடிவிற்கு என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமே. அவள் முடிவு எதுவாகினும் அதை ஏற்கும் மனதை கொண்டிருக்க வேண்டுமே.’

பெருமூச்சொன்றை வெளியிட்டவன் தன் சுழல் நாட்காலியில் இருந்து எழுந்து தன் அறையிருந்து தெரியும் நெடுஞ்சாலையை பார்த்துக் கொண்டிருந்தான். 

நாளை அவன் வாங்கியிருந்த நிலத்தில் அவர்களின் புதிய காம்ப்லெக்ஸின் கட்டிடப்பணிகளை ஆரம்பிக்கப் போகின்றான். அதற்கான ஏற்படுகள் எல்லாம் கொஞ்சம் சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருந்தது. 

அந்த இடத்தை வாங்கிய நபருக்கு ஐரா அப்போதே அதற்கான அட்வான்ஸ் பணத்தை செலுத்தி அவர் நிலம் வாங்க எடுத்திருந்த லோனை முடித்துக் கொடுத்திருந்தாள். கையோடு ஒப்பந்தம் போட்டுவிட்டாள்.

நிலத்தின் டோக்குமெண்ட்சில் குழருபடியென நிலம் வாங்கியவரின் மற்ற நண்பர்களுக்குக் கூற அவர்களும் பயந்து பணத்தை மட்டும் மீண்டும் எடுத்துக்கொண்டாலே போதுமெனக் கூறியிருக்க அவரவர் பணங்களை இரண்டு மாதங்களில் திருப்பிக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதன்படி நேற்றுதான் நிலத்தின் பத்திரம் இவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டு அவர்கள் பணம் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. 

ஏனைய கம்பனிக் காரர்களையும் நிலப்பத்திரத்தில் குழருப்படியினால் அந்த நிலத்தை வாங்கிய நபர் அகிலுக்கு கை மாற்றியதாகவே பேசி நம்பவைத்திருந்தனர். இந்நிலத்தோடு அதனை ஒட்டியிருந்த இன்னும் இரு இடங்களை சேர்த்தே வாங்கியிருந்தான் அகில். 

இன்று காலை கிளம்பி வரும்போது அவர்களிடையான உரையாடலை நினைவு கூர்ந்தான். ‘பிடிவாதக்காரி ‘ 

“நான் சொல்றது ஒன்னும் கேட்கக் கூடாதுன்னு இருக்கியா? வேணும்னே எதுக்கு இவ்ளோ அடம் பண்ற?” 

“நான் மட்டும் வேணும்னா வரேன் அகி,கெளதம் வேண்டாம்.” 

அவன் முறைக்க அவளோ அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. 

“எப்போவும் போலத்தான் நான் இருக்கேன். எப்போவும் நான் கெளதம எதுலயும் இன்வோல்வ் பண்ணல. புதுசா நீ எதுவும் சீன் க்ரியேட் பண்ணாத.” 

“ஓஹ் நான் சீன் போடறனா? நீ ஒன்னும் அவனை கூட்டி வர வேணாம். நான் உன்னை கூட்டி வரச் சொன்னனா, நான் கூட்டிட்டு போறேன்.” 

“ஓகே பைன். அப்போ நான் வரல, எனை எதுலயும் சம்பந்தப் படுத்தாத ஓகே?” 

“படுத்துற ஐரா, எதையும் ஹாப்பியா பண்ண விட மாட்டியா? எது பண்ணுனாலும் அதுல ஏதாவது பண்ணியோ பேசியோ என் மூட் ஸ்பாயில் பண்ற.” 

அவன் அப்படிக்கூறவும், மனம் மிக வருத்தப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. 

“ஈவ்னிங் கிளம்பி வா. அவனை கூட்டிட்டு போய்ட்டு வரலாம்.” 

“அவனுக்கு அங்க என்ன தெரியப்போகுது. இருக்க வேலைல அதெல்லாம் வேண்டாம்.” 

“டூ வாட் ஐ செட்.” கூறியவன்,கிளம்பி வந்து விட்டான். 

இதுவரை ஒரு அழைப்பும் எடுக்கவில்லை அதனால் 

ஈவினிங் வருவாள் எனத் தெரியும். அவளுக்காக காத்திருக்க, அதனிடையே அவனை சந்திக்க தொழிற்துறை நண்பர் ஒருவர் வந்திருப்பதாக ப்ரேம் கூறினான். அவரை வரச் சொல்லிவிட்டு தன் இருகைக்கு வந்து அமர்ந்தான்.

 

அங்கே வீட்டில்,

“வை ம்மி? ப்பா காலைல கோவமா போறாங்க.” 

“வேற வேலை உங்கப்பாக்கு.” 

“ம்மி பாட்டிம்மா பேசுறாங்க…” தன் அன்னையோடு வெளியில் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தவன் அலைபேசியில் ரம்யாவின் மலர்ந்த சிரிப்போடு ஒளிர்ந்த அழைப்பை ஏற்றாள் ஐரா. 

“ஐரா எப்பிடியிருக்க?” 

“பைன் அத்தம்மா.” 

“நீயும் நாளைக்கு வரியா?” 

“ஆமா அத்தம்மா. ” 

“ரெண்டு பேரையும் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.” 

“நான் மட்டுந்தான் வருவேன் அத்தம்மா. அங்க டஸ்டியா இருக்கும் கெளதம்க்கு ஒத்துக்காது.” 

“ஓஹ்! இல்ல அவனையும் பார்க்கலாம்னு ஆசையா இருந்தேன்.” 

“அதுக்கென்ன பார்க்கலாம்.” வீட்டுக்கு வாங்க. 

“அது வந்து…” 

“நாளைக்கு வேலை எப்படின்னு பார்த்துட்டு நானே அகிலுக்கு கூட்டி வரச்சொல்றேன் அத்தம்மா.” 

“அங்க வர்ரதுல எனக்கொன்னும் இல்லை. ராம்தான்…” 

“பரவால்ல அத்தம்மா. நானும் என் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லையே.’ 

‘இங்க வீட்ல ஸ்டே பண்ணுவீங்க தானே. நாளைக்கே போகலையே.” 

“இல்லடா, ரெண்டு நாள் அகிலோட இருக்கனும். அவந்தான் வரல.அதான்… ” 

“அகிக்கு ரொம்ப வேலை, இல்லன்னா வந்திருப்பான் அத்தம்மா.” 

“அவனை ஒன்றும் சொல்லல்லடியம்மா. சரி கெளதம் கிட்ட குடு பேசுறேன்.” 

“சின்னவனே, எங்க கிளம்பிடீங்க?” 

“மம்மி கூட வெளில போறேன் பாட்டிம்மா. ” 

“நாளைக்கு பாட்டி வர்றப்ப என்ன வேணும்?” 

“பாட்டிமா நாளைக்கு நீங்களும் வரீங்களா?” 

“ஆமாண்டா, அதான் என்ன வேணும் கேட்குறேன். சரி நானும் வறேனான்னு ஏன் கேக்குற” 

“பாட்டிம்மா, ப்பா எனக்கு ஒரு காம்ப்லெஸ் கட்டபோறாங்க. என்னையும் அதுல பார்ட்னர் சொல்லிருக்காங்க.” 

“கெளதம் என்ன இது, அப்பா சும்மா சொல்லிருப்பாங்க. அது அப்போவோடது. இப்டி எல்லாகிட்டயும் பேசக்கூடாது.”

ஐரா சற்று குரல் உயர்த்த, 

“ஐரா, பையன் கூட இப்படித்தான் பேசுவாங்களா?’ 

‘அடடே சூப்பர்டா சின்னவனே… அப்போ பாட்டிக்கு அங்க வந்தா எல்லாம் பிரியா தருவீங்களா?” 

“ஹ்ம்…”அன்னையின் பேச்சில் அவன் குரலோ உள்ளே போயிருந்தது. 

“உங்கம்மா அப்பாகிட்ட அதுல ஷேர் கேட்டாங்களாம் கெளதம். அப்பா மாட்டேன் சொல்லிட்டாங்க அதான் திட்றா. சின்னவனே பாட்டிக்கும் ஒரு ஷேர் வேணும்னு நானும் கேட்டேன் உங்கப்பாக்கிட்ட. அவன் என்னடான்னா உன்கிட்ட கேட்டுக்க சொல்றான். பாட்டிக்கும் தரியா கெளதம்?” 

“ஓஹ் எந்த புளோர் வேணும் பாட்டிமா? ” 

“நீ குடுத்தா எதுன்னாலும் ஓகே தான் சின்னவனே.” 

“ஓஹ்! உங்களுக்கு ரொம்ப நடக்கவெல்லாம் முடியாதுல்ல.’ தன் விரலால் நெற்றியில் நீவி விட்டுக்கொண்டே,’

அப்பாகூட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன் பாட்டிம்மா.”

“சரிடா சரிடா… சரி நீங்க கிளம்புங்க, நான் நாளைக்கு பார்க்க வரேன்.” 

“ஓகே அத்தம்மா, உடம்பு பார்த்துக்கோங்க, வச்சிடறேன்.” 

“கெளதம் போலாமா? ” 

“போலாம் ம்மி”அவள் கைப் பிடித்துக்கொள்ள இருவருமாக கிளம்பி அகிலின் அலுவலகத்தை அடைந்தனர். 

கீழே பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவள் ப்ரேமிற்கு அழைத்தாள். 

“ஹாய் மேம்.” 

“ப்ரேம் நாங்க பார்க்கிங்ல வெய்ட் பன்றோம் சொல்லிருங்க உங்க பாஸ்கிட்ட.” 

“ஓகே மேம்.” 

அகில் முக்கியமாக ஏதோ பேசிக்கொண்டிருக்க, ப்ரேம் ஐரா வந்துவிட்டதாகக் கூறவும் அவர்களை மேலே தளத்திற்கு வருமாறு கூறினான். 

“மேம், சார் மீட்டிங்ல இருக்கார், கொஞ்சம் டைமாகுமாம். மேல வரச் சொல்ராங்க.” 

“ஹ்ம்…” 

“ம்மி உள்ள போலாம் ம்மி…” 

‘இவன் வேற நாராயணா… அகில் செய்யும் வேலைக்கு கெளதமை கடிந்து என்ன செய்ய’ 

“கம்…”கெளதமை அழைத்துக்கொண்டு லிப்ட் வழியே மேலே தளத்திற்குச் சென்றாள். 

மணி ஐந்தைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அனைவரும் கிளம்பும் பரபரப்பில் இருக்க இவள் அலுவலகம் உள்ளே நுழையவும் கண்டுகொண்டனர். 

வெள்ளைநிற டாப்ஸ் அடர் நீல வண்ண டெனிம் அணிந்து ஒரு கையில் அவள் அலைபேசி அவ்வளவே. எப்பொழுதும் அலுவலகத்திற்கு சாரியில் தான் வருவாள். இன்று இந்த உடையில் இன்னும் இளமையாய், சின்னப் பெண்ணாய் தெரிந்தாள். 

“குட் ஈவினிங் மேம்”

ஆளாளுக்கு வாழ்த்துச் சொல்ல, இன்முகமாகவே ஏற்றாள். அவளுக்கு வாழ்த்து சொல்லிய போதும் அனைவரின் கண்கள் என்னவோ கெளதமில் தான் நிலைத்திருந்தது. 

 

இவர்கள் உள்ளே வரவும் அகில் அவன் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு வந்தான். 

“ப்பா…” என அவனைக்கண்டதும்

ஐராவின் கைகளை விடுவித்துக் கொண்டவன் ஓடிச்சென்று எப்போதும் போல அவன் கைகளில் தொங்க அவனை தன் ஒரு கையினால் சுழற்றி எடுத்தான். 

“ஹேய்… ஹூ இஸ் ஹி?”அவனோடு வந்திருந்த நபர் கேட்க, 

“ஹி இஸ் மை பாய்.”அகில் பதிலளித்தான். 

அங்கிருந்தவர்களுக்கு கேட்டிருக்கும் தெளிவாக. அதற்கென்ன என்பதாய் அகில், அவரிடம் ஐராவை அறிமுகப்படுத்தினான்.

“ஷீ இஸ்…”

” ஐரா நந்தன்.” இவளாகவே அமுகமாகினாள். இருவரும் கைகுலுக்கி நலவிசாரிப்புகளோடு விடைபெற்றனர். 

“கிவ் மீ டு மினிட்ஸ்.”என அகில் மீண்டும் தன் அறைக்குள்ளே நுழைய அவனோடு கெளதமும் சென்றான். 

ஐரா அவள் அறைக்குள் சென்றாள். 

‘கீழ வண்டிலேயே இருந்திருக்கலாம், சும்மா சீனப்போட வர சொல்லிருக்கான் பூல்.’ 

“ஐரா, இங்கென்னப் பண்ற, டைமாச்சு வா கிளம்பலாம். “அகில் உள்ளே வந்துக்கூற, 

அவனைப் பார்த்த அந்தப் பார்வையில் அவள் இன்னுமாய் கோபம் கொண்டிருப்பதை புரிந்துக் கொண்டான். 

“ஹேய் சாரி. நான் லேட்டாகும்னுதான் நினச்சேன். ப்ரேம்கிட்ட சொல்லவும் அவராதான் இன்னொரு நாள் மீட் பன்னலாம்னு கிளம்பிட்டார்.”

அவளோ மேசை மீது வைத்த அலைபேசியை எடுத்துக்கொண்டு அவனைத்தாண்டி செல்ல, 

“இன்னும் கோவமா இருக்கியா?” 

“சாரி டா.” 

“சும்மா சீன் கிரியேட் பண்ணாத அகி.” 

 

“ஏண்டி, காலைலயும் இதே தான் சொன்ன,என்னை பார்த்தா எப்படி இருக்கு?” 

“என்னால உன் நிம்மதி கெடுதுன்னு சொன்னல்ல.இதுக்குத்தான் வந்தப்பவே சொன்னேன் போய்டுன்னு.” 

“சாரிடா, ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்.” 

அவள் தோள் சுற்றிக் கையிட்டவன் நெற்றி முட்டினான்.

இவள் நன்றாக மோதிட அவன் நெற்றியை பிடித்துக்கொண்டே “இடியட், வலிக்குதுடி…” 

“அடிச்சா வலிக்கத் தான் செய்யும்., கிளம்பு, இருட்டானா என்னத்த காட்டுவ.”

கூறிவிட்டு முன்னே செல்ல, நெற்றியை தடவிக்கொண்டே 

அவள் பின்னோடு வந்தான். அங்கே வரவேற்பறையில் ப்ரேமோடு அமர்ந்து சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கெளதம். 

“கிளம்பலாம் கெளதம்.”

இவர்கள் செல்ல அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்களே தவிர அவர்களால் எதுவும் பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை, அதனால் தமக்கு தாமே ஒரு முடிவை இப்படித்தான் இருக்கும் என்பதாய் முடிவெடுத்துக் கொண்டார்கள். 

ஐராவின் வண்டியை அலுவலக டிரைவரிடம் வீட்டுக்கு எடுத்து செல்லுமாறு கூறவிட்டு மூவரும் அகிலின் வண்டியில் கிளம்பினார்கள். அரைமணி நேர தூரத்தில் அவ்விடத்தை வந்து அடைந்தனர். எந்தவகை அமைப்பிலும் கட்டிடம் அமைக்க ஏதுவாக சதுர வடிவில் இருந்தது நிலம்.

அங்கே நாளைய அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. 

வண்டி விட்டிறங்க மூவரையும் அங்கிருந்த பார்வைகள் கவ்விக்கொண்டது. 

“ப்பா, இப்போவே பில்டிங் கட்ட ஆரம்பிச்சிட்டாங்களா?” 

“நோ கெளதம், நாளைக்குதான் ஸ்டார்ட் பண்ணுவாங்க, இப்போ அதுக்காக பிரிபேர் பண்ணிட்டிருக்காங்க.” 

இவர்களை விட்டுவிட்டு ஐரா மட்டுமாய் கண்ணுக்கு போட்டிருந்த

கூலர்சை நெற்றிக்கு மேல் உயர்த்தி 

தலைக்கு வைத்துக்கொண்டவள் அவ்விடத்தை சுற்றிப் பார்வையிட்டுக் கொண்டு மெதுவாக நடந்தாள். 

‘ப்பா ப்பா’ வென அவன் கையில் தொங்கிக்கொண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டே வளம் வந்தான் கெளதம். 

நாளைய கட்டிட வேலைக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அவன் கம்பனியோடு தொடர்புள்ள பிரமுகர்கள், அவ்வூரின் முக்கிய அரசியல் புள்ளிகள் என பகையில்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.

ஒரு பக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள், அதற்கு எதிரே நாளை வருவோர்களுக்கு அமர ஏதுவாய் நூறுக்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்ட ஹட் அமைத்துக் கொண்டிருந்தனர். அதன் தேவைகள் குறைகள் என்பவற்றை பார்த்து கூறி விட்டு ஐராவின் அருகே வந்தான் அகில். 

“எல்லாம் ஓகே தானே ஐரா.” 

“ஹ்ம்…” 

“ஏன் டல்லா இருக்க? ” 

“ஒன்னுல்ல.”

“என்னனு சொல்லு ஐரா.” 

“இது உனக்கு ஸ்பெஷல் மொமெண்ட் இல்லையா, அவங்களையும் இன்வைட் பண்ணிருக்கலாம்.” 

“ஹ்ம், பண்ணிருக்கேன்.” 

“ஓஹ், அப்போ சரி. கிளம்பலாமா?” 

“என்னாச்சு சொல்லு, இன்னும் உன் பேஸ் சரியாகள.வ்ட் இஸ் ஈட்டிங் யூ?”அவள் கைபிடித்து நிறுத்தினான். 

“காலைல என்னால உன் ஹாப்பினஸ் ஸ்பாயில் ஆகுது சொன்னல்ல.” 

“நீ அப்டி பேசுவும் கோவம் வந்துருச்சு ஐரா.அதனால அப்டி பேசிட்டேன். சாரிடா.” 

அவளை தன் தோள் வளைவுக்குள் கொண்டு வந்தவன், எனக்கு ஹப்பின்னா அது உன் முகம் சிரிச்சிட்டே இருக்கது பார்க்குறது மட்டும் தான். வேறெதுலயும் நான் முழுசா எப்போவும் எதுலயும் சந்தோஷப்பட்டதில்லை, படப்போறதும் இல்லை. புரிதா?’ 

‘ரொம்ப யோசிக்காத வா.”என அவளையும் அழைத்துக்கொண்டு, கெளதம் இருந்த இடத்திற்கு வந்தான். நாளைய பணிக்காக மணல் கொண்டுவந்து கொட்டப்பட்டிருந்த இடத்தில் கெளதம் ஏறி விளையாடிக் கொண்டிருந்தான். 

கெளதம் இவர்கள் வந்து அழைக்கவும், “ம்மி கொஞ்ச நேரம் இருக்கலாம் ம்மி…” கூறிக்கொண்ட அந்த மணலில் கால்கள் புதைய ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான். 

“பாரு ஷூஸ் கூட ரிமூவ் பண்ணாம அப்டியே விளையாடப் போய்ட்ட, ட்ரெஸ்லாம் மணல் ஒட்டிக்கிச்சு.” 

அவனை வீடியோ எடுத்து ரம்யாவிற்கு அனுப்பிவைக்க அவர் உடனே,

“ஐரா பண்ற சேட்டை மொத்தம் அவங்கிட்ட இருக்குடா. முன்ன வீட்டுக்குள்ள இருப்பாளா…” சில பல ஸ்மைலிகளுடன் அவர் பதில் அனுப்பியிருக்க,ஐராவிடம் அந்த மெஸேஜைக் காட்டினான். 

“அதுக்குள்ள அம்ச்சாச்சா,என் பையன் என்னைப் போலதான் இருப்பான், அதுல என்ன சந்தேகம்.” 

“யாரு சந்தேகப்பட்டா ஒன்னொன்னுலயும் இப்டி ப்ரூப் பண்ணிட்டுல்ல இருக்கான்.” 

“போதும்,போய் வண்டிய எடு இவனை அழைச்சிட்டு வரேன்.” 

“இம்ச… ” கூறிக்கொண்டே வண்டியிருக்குமிடம் சென்றான்.

ஐரா கெளதமை அழைத்துக் கொண்டு வந்து வண்டியின் பின் கதவுகளைத் திறந்தவள் அவனது காலணிகளை கழட்டி அவனை நிறுத்தி வைத்து, அவன் உடைகளையும் கழற்றியவள் வண்டியில் இருந்த வாட்டர் பாட்டிலினால் கழுவி விட்டாள்.

“டைர்ட்டி பெல்லொவ். இப்டியே ஜட்டியோட வா.” எனக் கூற,

“ம்மி…”

“ட்ரெஸ் இல்ல கெளதம் இப்படியே ஹோட்டலுக்கு எப்டி போறது.பாரு பண்ணிருக்க வேல நீ.” 

“ப்பா,ம்மி ட்ரெஸ் கொடுக்க மாட்டேங்குறா?” 

“அவனைத் தூக்கிக் கொண்டவன்,எப்போவாவது பண்றது தானே ஐரா லெட் ஹிம் என்ஜோய். கெளதம் இப்படியே நல்லாதான்டா இருக்கு” எனக் கூறிக்கொண்டு அவனை கிச்சு மூட்டிநான்.

“அச்சோப்பா எல்லாரும் பார்க்குறாங்க.”சிரித்துக்கொண்டே அவன் கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள வண்டியில் அமர்ந்து மடியில் அவனை இருத்திக் கொண்டான். 

ஐராவும் வந்து ஏறிக்கொள்ள வண்டியைக் கிளப்பினான்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவனுக்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. என் ஐரா என் பையன், அவனுக்கு அவ்வளவே. அவளுக்கு தான் இப்படி பொதுவில் நடந்துக் கொள்ள இதனால் அவன் வாழ்க்கை பாதிக்குமோ என்று உள்ளுக்குள் நொந்துக் கொண்டாள். 

ஆபிஸில் அவள் வண்டி இன்னும் இருப்பதாகக் கூற அதிலிருந்த கெளதமின் உடையை எடுத்துக் கொண்டவர்கள் இரவுணவையும் முடித்துக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

கெளதம் வண்டிலேயே உறங்கியிருக்க அவனை கட்டிலில் உறங்க வைத்தான் அகில்.

“டைமாச்சு அகி, லேப் ஒன் பண்ணாத இப்போ தூங்கு. காலைல அங்க ஒன்பதுக்கு இருந்தா போதும் தானே? அங்க போகமுன்ன ஆபிஸ் போகணுமா?” 

“இல்ல நேரா அங்கதான் போகணும்.” 

“ஹ்ம் ஓகே அப்போ.” கூறியவள்

அவன் அலுமாரியைத் திறந்து அடுத்த நாள் அவன் உடுத்த ஒரு உடையை எடுத்துக்கொடுத்தவள், ‘இதை போட்டுக்கோ அகி நல்லாருக்கும்.”

“சரிடா, அங்க ரேக்ல ஹெங் பண்ணு.”

மாட்டியவள், ” குட்னைட் அகி.”

கூறிவிட்டு உறங்கச் சென்றாள்.

அடுத்த நாள் காலை அகில் கிளம்பிச் செல்லும் போது இவள் குளித்துக் கொண்டிருக்க அவன் அறை வாயிலிருந்தே கூறிக் கொண்டு கிளம்பிவிட்டான். 

மலர் வீட்டுக்கு வரவும் அவரிடம் கூறிவிட்டு கெளதமை பள்ளியில் விட்டவள் நேராக சென்றது அகிலின் அடிக்கல் விழாவிற்கு.

இவள் போகும் போதே அங்கு அனைவரும் வந்திருந்தனர். வண்டியைக் பார்க்கிங்காக ஒதுக்கி இருந்த இடத்தில் நிறுத்தியவள் கையில் அலைபேசியை எடுத்தாள். ஒருமுறை முகத்தை முன் கண்ணாடியில் பார்த்துவிட்டு இறங்கினாள். 

முழங்கை வரை ஜாக்கெட்,சாம்பல் வண்ணத்தில் கருப்பு பார்டர் முந்தானைக்கு மட்டும் ஆரஞ்சு வண்ண பார்டர் என அழகாய் அணிந்திருந்தாள். அவள் உடலில் பொருந்தி மடிப்புகளில் சீராய் நின்று அழகுச் சிலையாக நடந்து வந்தாள். 

நேற்று அவளுக்காக வாங்கி இருந்தவன் காலையில் வரும் போது கட்டிலில் வைத்து விட்டு வந்திருந்தான். 

அவள் கண்கள் அமர்ந்திருந்தவர்களில் ரம்யாவைக் கண்டுகொண்டு அவரை நோக்கியே நடந்து வந்தாள். ரகுராம் அகில் இன்னும் சிலர் ஓரிடம் நின்றுப் பேசிக்கொண்டிருக்க இவள் நேராக ரம்யாவிடம் சென்றாள்.

“அத்தம்மா.” என அவர் பாதம் தொட்டு எழுந்தவள் அவர் அருகே அமர்ந்தாள். 

அவள் கன்னம் தொட்டு இதழில் ஒற்றி எடுத்தவர், “எப்படி இருக்கடா?” 

“நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க?” 

“ஏர் போர்ட்ல இருந்து நேரா இங்க கூட்டி வந்துட்டாங்க. அதான் கொஞ்சம் டையார்ட். வேறொன்னும் இல்ல.” 

“ஓஹ்! ஓகே வெய்ட் என சுற்றும் அவள் கண்கள் சுற்ற அவளருகே வந்தான் ப்ரேம்.

“மேம் ஏதும் வேணுமா? ” 

“ஹேய் ப்ரேம், ஜூஸ் ஒன்னு வேணும். கேன் யூ?” 

“சூர் மேம்.” என்றவன் அடுத்த நிமிடமே கொண்டுவந்து கொடுத்தான். 

“முதல்ல இதைக் குடிங்க, சரியாகும் அத்தம்மா.” 

ரகுராமோடு பேசிக் கொண்டிருந்தவர்களில் நில உரிமையாளரும் ஒருவர், இவளைக் காணவும், இவள் அமர்ந்திருந்த இடம் வந்தார். 

“வணக்கம் மா. எப்படி இருக்க?” 

எழுந்து வணக்கம் வைத்தாள்.

“தப்பிகிட்ட கேட்டுட்டே இருந்தேன் என்ன இன்னும் காணோமேன்னு. கரெக்டா வந்துட்டம்மா.”

புன்னகையை பதிலாக கொடுத்தவள் அகிலை பார்க்க, அவள் தெரிவு செய்து வைத்திருந்த உடை இவளுடைக்கு அப்படியே பொருத்தமாக இருந்தான்.இவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். மனதோரத்தில் கெளதமை அழைத்து வருவாள் என சின்ன எதிர்ப் பார்ப்பிருந்தது. அவன் கண்களில் அதை

க் கண்டுகொண்டவள் அவனைப் பார்க்க அவள் கண்டுகொண்டதை புரிந்துக்கொண்டான்.

அத்தோடு ரகுராமுடன் பேசிக்கொண்டிருந்தவரை அப்போது தான் கண்டாள். அதன் பின் அகில் பக்கமும் திரும்பினாள் இல்லை. 

“தம்பி நாளி ஆயிடுத்து, பூஜை ஆரம்பிக்கலாமா? “

ஐயர் கேட்க,அனைவரும் அவர் இருக்கும் இடம் சென்றனர். ஐரா ரம்யாவின் கை பிடித்துக்

 கொண்டவள், “அத்தம்மா அங்க சேர் போட்டுத்தறேன் அதுல இருந்துக்கோங்க.” 

“சரிடா.” என அவ்விடம் வர அப்போது தான் நுழைந்தது அந்தக் கார். அதிலிருந்து இறங்கியவனைக் கண்டவள் வியந்துப் பார்க்க அவள் முகபாவனைகளையே பார்த்திருந்தான் அகில் ரகுராம்.

Leave a Reply

error: Content is protected !!