ஆதிரையன் -அத்தியாயம் 05

ஆதிரையன் -அத்தியாயம் 05
அத்தியாயம் 05
ஞாயிறு மாலையோடு சொல்லிக்கொண்டு வீடு திரும்பியிருந்தாள் அதிதி. வீடு வந்து சேர மணி எட்டை தொட்டிருக்க, நாளைக்கான அலுவலக வேலைகள் அதிகம் இருக்கும் என்பதால் உடைமாற்றிக்கொண்டு உறங்கிவிட்டாள்.
கோயில் சென்று வந்த ஆதிரையன் தன் அன்னையோடு சிறிது நேரம் சமையலறையில் இருந்து அவரோடு நேரம் செல்விட்டவன் அவனது அறைக்கு வர, காலையில் தன் தந்தை அவனிடம் நிலம் பற்றி பேசாதது உறுதிக்கொண்டே இருந்தது. தந்தை எப்போதும் அரசியல் மூளைக் கொண்டு யோசித்து செயல்படுவார் என்றாலும் எப்போதும் தவறான செயல்களில் ஈடுபட்டு கண்டதில்லை. ‘எதுக்கு என்கிட்ட பேசாம போறாங்க. எதாவது கேட்டிருக்கணுமே.’
யோசித்துக்கொண்டிருக்கவுமே,அவன் அன்னை ஞாபகப் படுத்திய அதியின் நினைவும் வந்தது. இதழ் மலர அவன் புத்தகங்கள், அவனது முக்கிய பொருட்கள் என சில அடுக்கி வைக்கப்பட்ட மர அலுமாரியைத் திறந்தான். அதில் அழகாய் ஒரு சோடி கால் சலங்கை. இப்போது அவன் இரு விரல் சேர்த்து போடுமளவில். அதனோடு ஒரு புத்தகம் நான்கைந்து வயது மதிக்க பிள்ளைகள் வரைவது போல சில சித்திரங்கள், நிறைந்தீட்டியும், அதில் சில எழுத்துக்கள் கிறுக்கலாய் கிறுக்கியும் இருந்தது. புரட்டிப்பார்த்தவன்,’செல்லம்மா உன்னையே ஞாபகம் இருக்கா கேக்குறாங்க. உனக்கு என்னை ஞாபகம் இருக்குமா தெரில. ஆனா உன் சுட்டித்தனம்லாம் இன்னும் அப்டியே நினைவிருக்கு. என்ன இப்போ அதே பாப்பா உன் கைலயும் இருக்கும்…’
சிறுவயதில் அவளுடனேயே அவனது பொழுதுகள் பெரும்பாலும் கழியும்.பிறந்தது முதலே அவள் ஒவ்வொரு செயலையும் ரசித்து அனுபவித்து உள்வாங்கிக்கொண்டவன். அத்தனை எளிதில் மறந்திடும் உறவாய் அவளோடு அவன் இருக்கவில்லை. ஏதோ ஓர் பிணைப்பு அவர்களிடையே, அதோடு அருள்குமரனின் கனிவான பேச்சும், எப்போதும் ‘என்ன சொல்றா உன் செல்லமா?’ என்று அவர் கேட்கும் பொழுதெல்லாம் இவன் செல்லம்மாவாகவே அவள் ஆகிப்போவாள். அப்படியே கட்டிலில் சாய்ந்தது பழைய நினைவுகள் நினைத்திருத்தான் ஆதிரையன்.
இப்போது அவன் கட்டியிருக்கும் வீடு இவர்கள் முன்னே இருந்த வீட்டு நிலமே.முன்னிருந்த வீட்டினை இடித்து நிலமாகத்தான் வைத்திருந்தார் அழகன். அதில் தான் ஆதிரையன் ஆலையினை பொறுப்பெடுத்ததோடு வீட்டினை கட்டியிருந்தான். அதியின் வீடு அங்கு இருந்ததற்கான தடையமே இருக்கவில்லை. அழகனும் அவர்கள் மொத்தமாய் ஊர் பெரியவருக்கு விற்று சென்றிருக்க அவர்களிடமிருந்து வாங்கியதாகவே கூறியிருந்தார். ஏதோ குடும்பத்தகராறு என்றும் கூறியிருக்க அப்போதிருந்த அவன் வயதுக்கு அருள்குமரனுக்கு உறவுகளே இல்லை என்பது தெரிந்திருக்கவில்லை.
***
காலை அதிதி அலுவலகம் வந்து நேரம் அரைமணியை தாண்டவில்லை அழகனின் பி. ஏ அவளை சந்திப்பதற்காக வந்திருந்தார். திங்கட்கிழமை என்பதால் சற்றே பிஸியாக இருக்க, வந்தவரைக் காத்திருக்குமாறு கூற இரண்டு மணிநேரம் கடந்த பின்னே அனுமதிக்கப்பட்டார்.அதிதி வேண்டுமென்றே செய்யாவிட்டாலும் வேண்டுமென்றே தன்னை அவதிப்பதாகக் அழகனுக்கும் தகவல் அனுப்பிட, அவரோ அதிதியோடு பேசிவிட்டே வரும் படி கூற, கடுப்போடு அமர்ந்திருந்தார்.
கதவை திறந்து அனுமதி பெற்று உள்ளே சென்றவரை அனுமதித்து அமருமாறு கூறினாள் அதிதி.
“சொல்லுங்க என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க? “
“என்னம்மா எதுவுமே தெரியாத போல கேக்குறீங்க? “
“எனக்கு அந்த இடத்துக்கு அப்ரூவ் பண்ணனும்னு தேவையே இல்லை. எனக்கு அதுல சம்பந்தப்படணும்னு அவசியம் இல்லையே. நீங்களா வந்து நீங்க பாருங்கன்னு சொல்லிட்டு, இப்போ அவசரப்படுத்துனா எப்டி?
நான் அந்த இடத்தை பார்த்துட்டு அப்ரூவ் பண்றதா தானே சொல்லிருந்தேன்.’
‘என்ன ஆனந்தன் அன்னிக்கே அனுப்ப சொல்லிருந்தனே, நீங்க அமைச்சர் அழகனுக்கு தகவல் சொல்லலையா?”
“அன்னிக்கே அனுப்பிட்டோம் மா. “
“அதைப் பற்றி பேசிட்டு வரச் சொல்லித்தான் அமைச்சர் என்னை அனுப்பினாங்க.”
“என்ன பேச இருக்கு? “
“ஏற்கனவே அந்த இடத்துக்கு அப்ரூவ் எடுத்தாச்சு, இப்போ ஆரம்பிச்சா, உங்களை மதிக்காத போல இருக்கும்னு தான் உங்களுக்கு அனுப்பியது. மத்தப்படி அந்த இடத்துல பில்டிங் கட்டுறதுக்கு, அங்க இருக்க மரங்களை வெட்டுறதுக்கெல்லாமே நாம அனுமதி எடுத்துதான் இருக்கோம். அதுனால நீங்க அதை அப்ரூவ் பண்ணிடீங்கன்னா பிரச்சினை இருக்காது.”
தன் இருக்கையில் சாய்வாக அமர்ந்து, அவர் கூறுவதை மிக கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவள், அவர் பேசிமுடிக்கவும்,
“அந்த நிலத்தை இப்போ பயன்படுத்துறது அமைச்சரோட மகன் தானே. அவரும் அந்த இடத்தை பில்டிங் கட்டுறதுக்கு அனுமதிக்க மாட்டார்னு சொன்னாங்களே.”
“அது சின்ன ஐயாவுக்கு அதை பத்துன விவரம்லாம் அவ்வளவா தெரியாது. அதான் அமைச்சரே இதை பண்றாங்க. “
“அவ்ளோ பெரிய தொழில் பண்றவரை விவரம் இல்லாதவர்னு சொல்றீங்க. “
“அதோட, பத்து வருஷத்துக்கு முன்ன இருந்த இடமும், அந்த இடத்துல இருக்க மரங்களோட பெறுமதியும் இன்னிக்கு இருக்க பெறுமதியும் வேறு.”
அதோட அமைச்சர் அவராவே என்னை அவங்க நிலத்துக்கு நானும் அனுமதிக்கணும்னு சொல்றப்ப நானும் கொஞ்சம் யோசிக்கணுமே.”
“அதே தான்மா, அவரா எதுக்கு தந்திருக்கார்னு நீங்க யோசிங்கன்னுதான் அமைச்சரும் சொல்ராங்க.”
“சரிங்க நீங்க என்ன பண்றீங்க,அந்த இடத்தோட தாய்ப்பத்திரம், அப்டின்னா முன்ன அது மொத்தமா ஒரு பதிவுல தானே இருந்தது. இப்போதானே பகுதியா பிரிச்சு வச்சிருக்காங்க. சோ எனக்கு அதோட மூலப் பத்திரம் வேணும். அதைப் பார்த்துட்டு தான் முடிவு பண்ணனும். “
“அதெல்லாம் எதுக்கு?”
“அதெல்லாம் எனக்கு வேணும். உங்க அமைச்சர் கிட்ட போய் சொல்லுங்க,அந்த இடத்தோட முழு பத்திரத்தை பார்த்துட்டுத்தான் அனுமதிப்பாங்கலாம்னு.” கூறியவள் முகத்தில் சற்றே கடுமைக் கலந்த ஏளனமும் இருந்ததோ?
“நீங்க போகலாம்,எனக்கு இப்போ மீட்டிங் இருக்கு, என்று கூறி ஆனந்தன் இருக்கும்பக்கத்திற்கு தன் முகத்தை திருப்பிக்கொண்டவள்,
” வெளில வெய்ட் பண்றவங்களை இன்னும் பத்து நிமிஷத்துல அனுப்புங்க.”
ஆனந்தனை வெளியில் அனுப்பியவள் அமைச்சரின் பி, ஏவும் அவ்விடம் விட்டு எழுத்துக்கொள்ள,அவரைப் பார்த்து,
“எப்படியும் என்னால அந்த இடத்துக்கு அப்ரூவ் வழங்க முடியாது, ஆனா உங்க அமைச்சர் ஒரு தரம் என்னை சந்தித்து பேசினால் மேற்கொண்டு யோசிக்கலாம். வேணும்னா அமைச்சர்கிட்ட சொல்லிப் பாருங்களேன். முலங்கை இரண்டை மேசையில் ஊன்றி விரல்களை பிணைத்து அதில் தன் நாடியை பதித்திருந்தவள் அவரைப் பார்த்துக் கூற,
“என்னம்மா அமைச்சரை இங்க வரச்சொல்றீங்க? “
“ஏங்க, வோட் போடுங்கன்னு ஒவ்வரு வீடா போறீங்க, இது கலெக்டர் ஆபிஸ். தேவைக்காக யாருவேணும்னாலும் வரலாம்.”
“இல்லன்னா இப்டி சொல்லுங்க. ‘கலெக்டர் அதிதி அருள்குமரன் அமைச்சர் வந்து பேசுனா கொஞ்சம் யோசிக்கலாம்னு சொன்னாங்கன்னு.’ நீங்க அமைச்சர்கிட்ட ஒருவாட்டி சொல்லுங்க நாளைக்கே வருவாங்க பாருங்களேன்.”
“அதுக்கெல்லாம் அவசியம் வராதுங்க மேடம். எதுக்கு வம்பை விலைபேசி வாங்கிக்குறீங்க? “
“நான் எப்போங்க வாங்குனேன். நான் சொன்னது போலயே சொல்லிப்பாருங்க. ஒருவார்த்தை மறந்துராம. அமைச்சர் என்னை ஆசையா பார்க்கணும் சொல்வாங்க. போய் அழைச்சிட்டு வாங்க.”
முறைத்துக்கொண்டே அவ்விடம் விட்டுவேளியேற, அதிதி டிசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஹாய் அதி, என்ன இந்த நேரத்துக்கு எடுத்திருக்க? “
“ஜீவாண்ணா, இப்போதான் அமைச்சரோட பிஏ வந்துட்டு போறாங்க. எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அமைச்சர் என்னை பார்க்க வரலாம்.மே பி நாளைக்கு கூட வரலாம். “
“நல்லது தானே மா. நான் அன்னைக்கு பேசி அவர்கிட்ட சொன்னதுல எப்படியும் டென்ஷனாதான் சுத்திட்டு இருப்பார். ‘வந்திருக்க கலெக்டர் ஏதோ அந்த ஊரோட நிலங்களை பற்றி விசாரிச்சிட்டு இருக்காங்க, அதுனால எதுக்கும் கொஞ்சம் அவங்க கூட நட்பா இருங்கன்னு’ மட்டும்தான் சொன்னேன்டா.”
“அவர் சும்மா டாக்குமெண்ட் உங்கைல வச்சு அப்றமா உனக்கு ஏதாச்சும் தரலாம்னு பிளான் பண்ணிருப்பார். இப்டி சிக்கும்னு நினைக்கல.”
“சரிண்ணா ஆனால் நாளைக்கு அவர் வர்றப்ப நான் தனியா…?
“என்ன அதிம்மா, துணிஞ்சி இறங்கியாச்சு, உன்னை ஒன்னும் பண்ண முடியாது. மதர் டீட் (mother deed) உங்கிட்ட இருக்கு. அதோட காப்பிய வச்சுத்தான் அந்தாளு வேறு பத்திரமெல்லாம் தயார் பண்ணிருக்கார்.
நம்மளுக்கு அதுலயும் சாதகமான விஷயம் இருக்கே. அதில்லாம உங்கப்பா கொடுக்காத நிலத்துல தானே, அவங்களோட வீடு அதை சுத்தி இருக்க நிலம் எல்லாம் இருக்கு. உங்கப்பா கொடுத்த பத்திரமெல்லாம் சரியா நம்மகிட்ட இருக்கப்ப உன்னால எதுவேணும்னாலும் பண்ணலாம்டா.”
“சரிண்ணா.”
“அதி அவரோட பையனும் எனக்குத் தெரிஞ்ச பையன்தான், நல்ல பழக்கம். சோ எப்படியும் என்கிட்ட இதுப்பற்றி கேட்கலாம், அவனுக்கு இதுபற்றில்லாம் தெரியாது. இல்ல அவனே கண்டிப்பா நடவடிக்கை எடுத்திருப்பான். “
சரிண்ணா எனக்கு மீட்டிகங் இருக்கு, அப்றம் பேசுறேன், அண்ணியை விசாரிச்சதா சொல்லுறுங்க. “
“சரிடாம்மா, நா இன்னும் ஒருவாரத்துல தான் ஊருக்கு வருவேன்.இல்லன்னா நாளைக்கு வந்திருப்பேன். “
“பரவால்லண்ணா.நா பார்த்துக்கிறேன்.”
சற்றே பெண்ணாய் மனதில் சிறு பயம் இருந்தாலும் உண்மை அவள் பக்கம் இருக்க எதற்கு பயம் கொள்ள வேண்டும் என்று தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டாள்.
***
அழகனிடம் ஆதிரையன் அந்நிலங்களின் பத்திரத்தை கேட்க, அவரே இன்னும் இரு தினங்களில் ஊருக்கு வந்து பார்த்துக்கொள்வதாகக்கூற, தந்தையோடு எதிர்த்து பயனில்லை என புரிந்தவன் அன்னையிடம் கூறிக்கொண்டு ஊர் திரும்பினான்.