ஆழியின் ஆதவன்

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 17

 

ஆதவ் கோவமாக ஆழியில் அருகில் வந்து, அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட, அந்த அடியில் அனைவரும் அதிர்ந்து நிற்க, ஆழி மட்டும் கன்னத்தில் கை வைத்தபடி ஆதவ்வையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

“அறிவிருக்கடி உனக்கு… மனசுல என்ன உனக்குப் பெரிய வீரமங்கை வேலுநாச்சியார்னு நெனப்ப? யாரைக் கேட்டுடி அந்த நேரத்தில் நீ அந்த இடத்துக்குப் போன? எதுக்குடி போன… இவ்ளோ வாய்கிழிய பேச தெரியுது, கொலைக்கு எல்லாம் ப்ளான் போட தெரியுது இல்ல, அந்த இடத்தில் எவ்ளோ ஆபத்து இருக்குன்னு உனக்குத் தெரியாது. நீ பாட்டுக்கு தனி அந்த நேரத்தில் அங்க போயிருக்கீயே, உனக்கு எதாவது ஆகி இருந்த என்னடி ஆகுறது. ஏற்கனவே ஒருத்திய பறிகொடுத்துட்டு நாங்க தவிக்குறது போதாதா… உனக்கும் ஏதாவது ஆச்சின்னா என்னடி பண்றது… நீ போய்ட்டா நா…” என்றவனை ஆழி விழி உயர்த்திப் பார்க்க,

 

 “உனக்கு எதாவது ஒன்னு ஆச்சின்னா நிலாவை யாரு பாக்குறது. அவளைப் பத்தி ஒரு நிமிஷமாச்சும் யோசிச்சிய நீ?” என்றவன் அவள் தலைமூடியை கொத்தாகப் பிடித்து அவள் முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன், “இன்னொரு முறை இந்த மாதிரி எதுவும் செஞ்சேன்னு வையேன் ” என்றவன் கண்ணில் இருந்தது கோவம் தான் ஆனால், அந்தக் கோவத்தின் உள்ளர்த்தம் ஆழிக்கும் உள்ளே எதையே உணர்த்த, அது அவள் உள்ளத்தை உறுத்தியது.

 

ஆதவ் அங்கிருந்த சேரை எட்டி உதைத்தபடி அங்கிருந்து சென்றுவிட, ஆழியும் அங்கிருந்து அமைதியாகச் செல்ல, முகிலும் விஷணுவும்‌ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

 

“மீரா உனக்கு ஆதவ் சார் கோவத்துக்குக் காரணம் புரியுத?” என்ற சைத்ராவை பார்த்து “ஆம்” தலையாட்டிய மீரா,

 

 “இது நடக்க வாய்ப்பே இல்ல. பட், இது நடந்தால் நான்” என்று திரும்பி சைத்ராவை பார்த்து, “நமக்கு இந்த உலகத்திலேயே அதைவிடப் பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கும்.” என்க.

 

“நீ என்ன சொல்ல வர்ர மீரா? என்ற விஷ்ணுவை பார்த்து, “இந்த வேலை முடிஞ்சதும் ஆழி இங்கிருந்து போய்டுவா… அதோட ஏற்கனவே ஒருமுறை அவ லைஃப் பத்தி நாங்க பேசினோம். ஐ மீன் அவளுக்குனு ஒரு லைஃ பத்தி. பட், ரத்தக்கறை படிஞ்ச அவ வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் போய் நல்ல மருமகள, மனைவிய, தாயா வாழ்ற தகுதி தனக்கு இல்லைனு சொல்லிட்ட… அவளுக்கு இப்ப இருக்க ஒரே எண்ணம் ஆஷாவை கொன்னவங்களை முடிச்சிட்டு, எங்க ரெண்டு பேரையும் நல்லபடிய செட்டில் பண்ணிட்டு எங்கயாது போய்டணும்குறது தான். அவ ஒரு முடிவெடுத்த அதுல இருந்து எக்காரணம் கொண்டும் மாற‌ மாட்ட… அதான் அப்படிச் சொன்னேன்.” என்ற மீராவும் சைத்ராவும் அவர்கள் காட்டேஜ்கு சென்றனர்.

 

விமல் கதையை முடித்த அடுத்த நாளே அனைவரும் கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது.

 

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு ஆழி, ஆதவ் முகத்தைப் பார்ப்பதை கூடத் தவிர்த்தாள். அவனை விட்டு தள்ளி இருப்பதென அவள் முடிவு செய்திருக்க, ஆதவ் இனி ஒரு நிமிடம் கூட அவளைத் தன்னைவிட்டு தள்ளி இருக்க விடக் கூடாது என்ற முடிவில் இருந்தான்.

 

அன்றைய இரவுக்கு மறுநாள் சென்னை வந்தவுடன் விஷ்ணுவும் முகிலும் ஆதவ்வை தனியாகச் சந்தித்து ஆழினி பற்றிப் பேச ஆதவ் அமைதியாக அலைகடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“டேய் நாங்க கேட்டுட்டு இருக்கோம், நீ இப்படிக் கம்முன்னு இருந்த என்ன அர்த்தம் வாயத் திறந்து எதாவது பேசுடா… அப்ப தானா உன் மனசுல என்ன இருக்குன்னு எங்களுக்குத் தெரியும்” என்ற விஷ்ணுவை திரும்பி பார்த்த ஆதவ், “ஆழி” என்றான் ஒரே வார்த்தையில்.

 

“புரியல… ” என்றான் விஷ்ணு.

 

“இன்னுமாடா உனக்கு புரியல… நீ உன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டதுக்குப் பதிலை அவன் சொல்லிட்டான். அவன் மனசுல ஆழி தான் இருக்கான்னு” என்ற முகில் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

 

“டேய் முகில் சொல்றது சரிதானா? நீ ஆழிய விரும்புறீய?” என்று சற்றுக் காரமாகவே கேட்டான் விஷ்ணு.

 

“எஸ் விஷ்ணு… நான் அவளை விரும்புறேன்.” என்றவனை விஷ்ணு முறைக்க,

 

“ப்ளஸ் விஷ்ணு என்ன தப்ப நெனைக்காத… நான் ஆஷாவை மறந்துட்டு இன்னொரு லைஃப்கு ரெடியாக்கிட்டேன்னு தயவுசெய்து என்ன தப்ப நினைக்காத… உனக்கே தெரியும் கல்யாணத்துக்கு முந்தி வரை ஆஷாவை நான் வெறும் உன்னோட தங்கச்சிய மட்டும் தான் பாத்தேன். அவளும் அப்படித் தான். பெரியவங்க பேசி எங்களுக்குக் கல்யாணம் பிக்ஸ் பண்ணிங்க, அதை வேணாம்னு சொல்ல எங்க ரெண்டு பேருக்குமே காரணம் இல்லாமப் போக, நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டோம். கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரமே நான் கேஸ்காக வெளியூர் போட்டேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கக் கூட எங்களுக்கு டைம் இல்லாம போயிடுச்சு. அதுக்குள்ள அவளும் என்னை விட்டு ஒரேயடியா போய்ட்ட” என்ற ஆதவ் கண்கள் கலங்கியதை பார்த்து விஷ்ணுவும் கலங்கி நின்றனர்.

 

“எங்களுக்குள்ள கணவன், மனைவி உறவு இருந்ததே தவிர, காதல் இருந்தது இல்ல. அதுக்கான நேரம் எங்களுக்குக் கடைசி வரை கிடைக்கவே இல்ல விஷ்ணு”

 

“ஒஒஒ இப்ப உனக்கு நேரம் இருக்கு, அதோட ஆஷாவும் இல்ல, சோ நீ ஆழிய ஆஷா இடத்தில் வைக்க நினைக்கிற இல்ல?” என்ற விஷ்ணுவின் பேச்சில் முகிலுக்கு எரிச்சல் வந்தது.

 

“டேய் என்ன பேசுறேன்னு தெரிஞ்சு பேசு. அவன் ஆஷா மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தான்னு நமக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் இப்படிப் பேசுறீயே… நீ சொல்றதை பாத்த, ஆதவ் காலம் பூராவும் இல்லாத ஆஷாவை நினைச்சிட்டு இப்டி தனிவே இருக்கணும்னு நினைக்குறீயா?” என்று கத்த,

 

“டேய் என்ன பேசுற நீ… அவ என் தங்கச்சின்னா, இவன் என்னோட ஃப்ரண்ட். அவன் நல்லா இருக்கக்கூடாதுன்னு நான் நினைப்போனடா. ஆனா, ஆஷா இருந்த இடத்துக்கு ஆழிய போய்… எப்படிடா இவனுக்கு அவ மேல போய்” என்ற விஷ்ணுவை பார்த்து நக்கலாகச் சிரித்த முகில்,

 

“ம்ம்ம் அந்த மீரா பொண்ணைப் பார்த்து, ஒருத்தன் ஜொள்ளு விட்டான்னு சொல்லும்போது உனக்கு எதுக்கு அடிவயிறு கருகுச்சோ… அதுமாதிரி தான் இவனுக்கு ஆழி மேல லவ் வந்திருக்கும்” என்றது தான் அதற்கு மேல் விஷ்ணுவுக்குப் பேச்சு வரவில்லை.

 

“என்னடா பேச்சையே காணும்.” என்று விஷ்ணுவை கலாய்த்த முகில், 

 

“இங்க பாரு விஷ்ணு, ஆஷா இருந்த இடத்துக்கு ஆழி தகுதியானவளான்னு எனக்குத் தெரியாது. ஆனா, இந்த உலகத்தில் நிலாவுக்கு அம்மாவ இருக்கத் தகுதி ஆழி ஒருத்திக்கு மட்டும் தான் இருக்கு, அதை நீ புரிஞ்சிக்க” என்றதும் விஷ்ணுவுக்கு முகில் சொல்வது சரி என்று தோன்றியது.

 

“ஆமா விஷ்ணு, முதல்ல ஆழி பத்தி தெரிஞ்ச போது நான் கூட அவளை வீட்டைவிட்டு அனுப்ப தான் நெனச்சேன். ஆனா, அன்னைக்கு என்னைப் பயமுறுத்த நிலாவை கடத்த, கூடவே ஆழியும் மட்டிக்கிட்ட. அவ நினைச்சிருந்த நிலாவை அவங்ககிட்ட குடுத்துட்டு இவ தப்பிச்சு போயிருக்கலாம். ஆனா, அவ அத செய்யல. அவ உயிருக்கும் மானத்துக்கும் ஆபாத்துனு தெரிஞ்சும், அவ நிலாவை விட்டு போகல, போதை மருந்து மயக்கத்துல, அவ முழு உடம்பும் அவ கண்ட்ரோல்ல இல்லாத நிலையில் கூட நிலாவை விடாம நெஞ்சோட அணைச்சு புடிச்சிட்டு இருந்தாடா அவ… அதைப் பாத்த அந்த நிமிஷம், என்னையும் அறியாமல் அவ எனக்குள்ள வந்துட்டா விஷ்ணு… முகில் சொன்ன மாதிரி நிலாவுக்கு அம்மாவ இருக்கும் தகுதி இந்த உலகத்தில் ஆழிய தவிர வேற யாருக்கும் இல்ல, அதோ மாதிரி என் லைஃப்லயும் அவளைத் தவிர வேற யாரும் வரமுடியாது” என்று உறுதியாகச் சொல்ல, விஷ்ணுவுக்கு ஆதவின் மனது புரிந்தது. அவன் முடிவு சரியென்றே தோன்றியது.

 

“நீ சொல்றது எனக்குப் புரியுது ஆதவ். உனக்காக இல்லாட்டியும், நிலாவுக்காக நான் ஆழிய அக்சப்ட் பண்ணிக்குறேன். ஆனா, இதுக்கு ஆழி ஒருநாளும் சம்மதிக்க மாட்டாளே, அதுக்கு என்ன பண்ணுவ” என்ற விஷ்ணுவை கேள்விய பார்த்தான் ஆதவ்.

 

“ஏன் விஷ்ணு அப்படிச் சொல்ற? ஏன் என்னைப் பத்தி அவ எதுவும் சொன்னால, என்னைப் புடிக்காதுனு உங்ககிட்ட சொன்னாளா?”

 

“ஆழி எதுவும் சொல்லலடா, அன்னைக்கு நைட் நீ ஆழிய பளார்னு ஒன்னு விட்டு போனீயே, அப்ப மீரா தான் சொன்னா. ஆழி கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு ஸ்ட்ராங்கா இருக்காம்.” என்றவன் அன்று மீரா சொன்ன அனைத்தையும் சொல்லி முடிக்க, ஆதவ் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன்.

 

“அவதானா கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொன்னா… இட்ஸ் ஓகே… அவ என்னைக் கல்யாணம் செஞ்சுக்க வேணாம்… நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்குறேன்.” என்று முகம் முழுவதும் புன்னகையோடு சொன்னவன், “அவ்ளோ தான் மேட்டர் சால்வ்வுடு” என்றவன் அங்கிருந்து செல்ல, ரொம்ப நாள் கழித்து ஆதவ் முகத்தில் சிரிப்பை பார்த்த இருவருக்கும் மனது நிறைந்து.

 

ஆதவ் அந்தப் பக்கம் சென்றதும், முகில் கையைப் பிடித்து முறுக்கிப் பிடித்த விஷ்ணு, “டேய் நான் பேசிட்டு இருக்கும்போது நீ ஏன்டா, இடையே மீரா பத்தி இழுத்த?”

 

“அப்படித் தான்டா இழுப்பேன். அவன் ஆழிய விரும்புறது தப்புன்னா, நீ மட்டும் மீராவை பார்த்து ஜொள்ளு விடலாமா? அது மட்டும் நியாயமா. ஆமா‌ அதென்னடா அந்தப் பொண்ணைப் பாத்து அப்டி வழியிற நீ. ஒரு டெப்டி கமிஷனர் பண்ற‌ வேலையா இது?” என்று எதிர் கேள்வி கேட்க, விஷ்ணு அசடு வழிய சிரித்தான்.

 

“தச்சீ முகத்தை ஒழுங்க வை. பாக்க சகிக்கல…” என்ற முகில் கையை மீண்டும் முறுக்கிய விஷ்ணு,

 

“அதையெல்லாம் லவ் ஃபீல்டா, அதெல்லாம் மனுஷங்களுக்குத் தான் தெரியும். உன்னை மாதிரி அனிமல்ஸூக்கு புரியாது… பேசாம நீ ஒன்னு பண்ணுடா… ஆதவ்‌வும் ஆழியும், நானும்‌‌ மீராவும், மீதி இருக்குறது அந்த ஓட்ட வாய் சைத்ரா தான்… பேசாம நீ அவளைக் கரெக்ட் பண்ணு, மூணு பேரும் ஒரே நாள்ல கல்யாணம் முடிச்சு, ஒன்னா ஒரே ஃபேமிலிய, ஹேப்பி ஃபேமிலிய செட்டில் ஆகிடலாம்… என்ன சொல்ற நீ… எப்படி என் ஐடியா?” என்ற விஷ்ணு காலை மிதித்தான் முகில்.

 

“ஏன்டா போயும் போயும் அந்தப் பிசாசு கிட்ட என்னை மாட்டிவிட‌ பாக்குற, வாயாடா அது… ஒரு நிமிஷம் கூட மூடாம எப்ப பாரு படபடனு பேசிட்டே இருக்கு, யப்பா… நான் மட்டும் அதுக்கு வாக்கப்பட்டேன். கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே ஈ.என்.டி டாக்டரை பாத்து என்ன காது நரம்பை கட் பண்ணி என்னைச் செவுடு ஆக்கிடுங்கன்னு, டாக்டர் காலை புடிச்சி கொஞ்சுட்டு இருப்பேன். அந்த நிலைமை தேவையா எனக்கு..‌. ஆள விடுடா சாமி” என்று கையெடுத்து கும்பிட இருவரும் சிரித்தபடியே அங்கிருந்து சென்றனர்.

 

அடுத்து வந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் ஆதவ் ஆழி நெருங்கிக்கொண்டிருக்க, அவன்‌ அருகாமை ஆழியின் மன உறுதியை ரொம்பவே சோதித்துப் பார்த்தது. அவனை நெருங்கவும் முடியாது, விட்டு விலகவும் முடியாமல் தவித்துப் போனாள் ஆழி.

 

இந்த லவ் போராட்டத்தின் இடையிலும், தான் ரத்த போராட்டத்தின் வேலைகளைக் கச்சிதமாகச் செய்து முடித்திருந்தாள்‌ ஆழி.

 

சுற்றி எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு நிலை நிலையில், குப்புற கிடந்தவனைப் பார்த்த ஆதவ், “உயிர் இருக்க… இல்ல எடுத்துட்டீங்களா” என்று கிண்டலாகக் கேட்க,

 

“அதெப்படி ஆதவ் சார்… நீங்க இல்லாமயா?, நீங்க வர கொஞ்சம் லேட் ஆச்சு… அதான் சும்மா கொஞ்சம் டச்சப் பண்ணிட்டு இருத்தோம். உயிர் இன்னும் கொஞ்சம் மீச்சம் இருக்கு…”

 

“மீரா வாய் பேசினது போது, எல்லாம் ரெடிய?” என்ற ஆழி ஆதவை பார்க்காமல் முகத்தை திரும்பிக்கொள்ள, மீரா ஆழியைப் பார்த்து தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள்.

 

“ஆழி, விமலோட அப்பா பெரிய ஆள் ஆச்சே… அவனை எப்படி இவ்ளோ ஈசியா கடத்துனீங்க?”

 

“நாங்க பெருச ஒன்னும் பண்ணல முகில், ஜஸ்ட் சைலேஷ் நம்பர்ல இருந்து, அழக ஒரு பொண்ணு இருக்கு, அது வேணும்னா தனிய வான்னு சும்மா ஒரு மெசேஜ் போட்டு, கூட ஆழியோட பீக் அனுப்பி வச்சேன். கெழட்டு ராஸ்கல், அடுத்தப் பத்தி நிமிஷத்துல, எங்களுக்குப் பெருச வேலை எதுவும் வைக்காமல்

அதுவே வந்து சீக்கிடுச்சு”

 

“ஏன் மீரா, வேற‌ எதாவது பொண்ணு ஃபோட்டோ அனுப்ப வேண்டிய தானா… எதுக்கு ஆழிய பீக் அனுப்பின…” என்ற ஆதவ் யாருக்கும் கேட்காத குரலில், “இவ ஃபோட்டோ பாத்த யாருக்கு தான் ஆச வராது. எதுக்குக் கண்ட கண்ட நாய்க இவ ஃபோட்டோவ பாக்கணும்” என்று‌ பல்லை கடித்தான்.

 

“அவ தான் ஆதவ் சார் அனுப்ப‌ சொன்னா” என்று மீரா சொல்ல, ஆழி ஆவியாகும் அளவுக்குத் தீயாக அவளை முறைத்தான் ஆதவ் .

 

“சரி அந்தச் சைலேஷ் எங்க? அவனையும் இவனோட‌ சேர்த்து தான் வச்சிருக்கேன்னு சொன்னீங்க, எங்க அவன்?” என்றதும் ஆழி, மீரா முகம் சட்டென ரௌத்திரமாக மாறியது.

 

“அவனுக்கு உள்ள ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு விஷ்ணு, முடிஞ்சுது இங்க வருவான்” என்ற ஆழி குரலில் சொல்லமுடியாத ஒருவித வலி. அது மூவருக்கும் புரிந்தது.

 

“ஆமா சைத்ரா எங்க?”

 

“ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்குறது அவதான் முகில்” என்னும் போதே எதோ சத்தம் கேட்க, அனைவரும் திரும்பி பார்க்க, அங்கு இறுகிய முகத்துடன் சைத்ரா, கிழிந்த நாராக இருந்த சைலேஷூன் சட்டை கவரை பிடித்துத் தரதரவென அவனை இழுத்துக்கொண்டு வந்து விமலின் அப்பாவின் அருகில் போட்டவள், மெதுவாகச் சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டாள்.

 

அந்த நேரம் சைத்ரா முகத்தைப் பார்த்த அனைவருக்குமே ‌மனதில் இனம்புரியாத ஒரு பயம் பரவியது. இது உண்மையில் அவர்கள் தோழி சைத்ரா தானா என்று சந்தேகம் கூட வந்தது.

 

சைத்ரா அருகில் வந்த ஆழியும், மீராவும் அவள் தலையை மெதுவாக வருட, நிமிர்ந்து இருவர் முகத்தையும் பார்த்தவள், கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அடிநெஞ்சில் இருந்து கதறியபடி இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

 

ஆழி சைலேஷ் அருகில் வந்து, “உன்னைத் தூக்கின இத்தனை நாள்ல நாங்க கிரிமினல்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும். இப்ப உனக்குத் தெரியாத ஒரு உண்மை நான் சொல்லவா… எங்களைக் கிரிமினல் ஆக்குனதே நீதான்டா‌ பொறுக்கி” என்று கத்திய ஆழி அவன்‌ கை நரம்பு வெட்டிவிட, சைலேஷ் வலியில் கதறி துடிப்பதை பார்த்த சைத்ரா முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது.

 

“எங்கள யாருனு தெரியுத? என்று கேட்ட ஆழியை, நிமிர்ந்து பார்க்க கூடப் பலம் இல்லாமல், கையைப் பிடித்துக் கொண்டு வலியில் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான் சைலேஷ்.

 

“ம்ம்ம் எப்டி ஞாபகம் இருக்கும். நீ நாசம் பண்ண பொண்ணுங்க லிஸ்ட் தான் சீனப் பெருஞ்சுவர் மாதிரி நீளமாச்சே, அதுல நாங்க யாருன்னு எப்படி உனக்குத் தெரியும். சரி என்னைத் தான் தெரியல, அவளையாது தெரியுதா பாரு,” என்று கல்லாக அமர்ந்திருந்த சைத்ராவை கை காட்ட, சைலேஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு, “தெரியல” என்றான்.

 

“பாத்து பல வருஷம் ஆகிடுச்சு இல்ல, முகம் மறைந்திருக்கும்… ம்ம்ம் சரி… அவ பேர சொல்றேன், அப்பவாது தெரியுதான்னு பாரு… அவ பேரு சைத்ரா” என்க, சைலேஷ் சட்டென நிமிர்ந்து சைத்ரா முகம் பார்க்க, அவள் கண்களில் கொலைவெறியோடு சைலேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

எச்சிலக விழுங்கியபடி, “அப்… அப்ப… நீங்க… நீ?” என்று மரணபயத்துடன் ஆழியைப் பார்த்து கேட்க,

 

“கரெக்ட் நீ நினைக்குறது சரிதான். நான் தான்… நானே தான் ஆழினி… உன்னோட எமன். அன்னைக்கு நீ என் கையில இருந்து தப்பிச்சிட்ட, அன்னைக்கே உன்னையும் கொன்னிருந்தால், உன்னால இன்னைக்கு இத்தனை பொண்ணுங்க உயிர் போயிருக்காது. தப்பு பண்ணிட்டேன்… அந்தத் தப்ப இன்னைக்குச் சரி பண்ணப்போறேன். நல்லா இருந்த எங்க வாழ்க்கை பாதைய மாத்துனது நீதான். இன்னைக்கு இந்த இடத்தில் நாங்க இருக்க முழுக் காரணமும் நீதான்… அதுக்கு நாங்க உனக்கு பரிசு தரவேணாம்” என்றவள் பார்வையே சைலேஷூக்கு உணர்த்தியது அவள் அவனுக்கு நரகத்தைக் காட்டப்போகிறாள் என்று.

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!