ஆழியின் ஆதவன் 18
ஆழியின் ஆதவன் 18
அத்தியாயம் 18
ஆழி முகில், விஷ்ணுவை பார்த்து, “இதுங்க ரெண்டையும் பில்டிங் பேஸ்மெண்ட்டு தூக்கிட்டு வாங்க” என்றவள் சைத்ராவை பார்க்க, அவள் கீழே உட்கார்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஆழி, மீராவும் சைத்ரா அருகில் சென்று அவள் தோளில் கைவைக்க, அவள் நிமிர்ந்து இருவரின் முகத்தையும் பார்க்க, “எழுந்துவா சைத்து… உன்னோட கணக்கை தீர்க்கும் டைம் வந்துடுச்சு… வா” என்றதும் சைத்ரா கீ கொடுத்த பொம்மை போல் எழுந்து, ஆழி தோளில் சாய்ந்தபடியே செல்ல, எப்போதும் துறுதுறுவென வாய் பேசிக்கொண்டு பட்டாம்பூச்சி போல் திரியும் சைத்ராவை இப்படி, மழையில் நினைத்து, கலந்த வண்ணக் கோலம் போல் இருப்பதைக் கண்ட ஆண்கள் மூவருக்கும் என்னவோ போல் இருந்தது.
ஆறு பேரும் பேஸ்மெண்ட் சென்றனர்.
அங்கு ஒரு பெரிய கண்ணாடி தொட்டி இருக்க, அதனுடன் ஒரு பெரிய பைப் இணைக்கப்பட்டு அதன் முனையில் ஒரு வால்வ் வும் இருந்தது.
ஆழி, “விஷ்ணு, முகில் அங்க இருக்க இரும்பு சங்கிலில இவனுங்க ரெண்டு பேரையும் கட்டுங்க” என்றதும்,
“ம்ம்ம் ஓகே ஆழி” என்று இருவரையும் ஆழி சொன்னது போல் அந்த இரும்பு சங்கிலில் இணைத்து கட்டினார் முகிலும் விஷ்ணுவும்.
மீரா, ஆழி தோளில் சாய்ந்திருந்த சைத்ரா கையில் ஒரு ரிமோட்டை கொடுத்து, “இன்னையோட எல்லாம் முடியட்டும் சைத்து. இந்த புடி…” என்றாள்.
சைத்ரா ஆழி முகத்தை பார்க்க, அவள் கண்களை மூடித்திறக்க, சைத்ரா அந்த ரிமோட்டில் இருந்த ஒரு பட்டனை அழுத்த… அந்த இருவரையும் கட்டி இருந்த சங்கிலி இழுக்கத்தொடங்க, அவர்கள் அந்த கண்ணாடி தொட்டிக்குள் மெல்ல மெல்ல இறங்கி நின்றனர். பின் அவர்கள் மேல் தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“என்ன ஆழி… இவங்களை மூச்சு முட்டவச்சு கொல்லப்போறீயா?” என்று விஷ்ணு கேட்ட,
“அதுக்கு வாய்பில்ல விஷ்ணு… விமலுக்கே அப்படி ஒரு சாவை கொடுத்தவ இவ… இவனுங்களை இவ்ளோ ஈசியா சாகவிட மாட்ட… அதோட சைத்ரா முகத்தை பாக்கும்போதே தெரியுது. இதுல வேற ஏதோ இருக்குன்னு. சோ கண்டிப்பா இவனுங்க சாவு, விமலை விட கொடுமைய தான் இருக்கும்” என்ற ஆதவ்வை ஒரு நிமிடம் ஆழமாக பார்த்தாள் ஆழினி.
“ஏய் ஆழி… சைத்ரா ஏன் இப்படி இருக்கா? எனக்கு அவள இப்படி பாக்க ஒரு மாதிரி கஷ்டம இருக்கு… என்னச்சு இவளுக்கு?” என்ற முகில் குரலில் சைத்ராவுக்காக உண்மையான வருத்தம் தெரிய, சைத்ரா திரும்பி முகிலை நன்றியோடு பார்த்தாள்.
“இப்ப ஒன்னும் கேக்காத முகில்… இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடிஞ்சிடும். அதுக்கு அப்புறம் எங்களுக்கு எங்க பழைய சைத்ரா நிரந்தரம கெடச்சிடுவா” என்ற ஆழி, “சைத்து ம்ம்ம், உன் கணக்கை மூடி” எனும் போதே, அந்த தொட்டியில் இருந்த தண்ணீர், சைலேஷ் மற்றும் விமல் தந்தையின் கழுத்து வரை வந்திருந்தது.
சைத்ரா ரிமோட்டில் இன்னொரு பட்டனை அழுத்த, தண்ணீர் நின்றது. சைத்ரா அந்த தொட்டி அருகில் சென்று சைலேஷை குரோதத்தோடு பார்த்தவள்,
“அன்னைக்கு நான் அனுஅனு துடிச்சதை நீ பாத்து ரசிச்சிட்டு இருந்த மாதிரி, இன்னைக்கு நீ அனுஅனு சாகுறதை நான் ரசிச்சு பாக்ப்போறேன்டா.” என்றவள் இன்னொரு பட்டனை அழுத்த, அந்த தொட்டிக்கு மேல் இருந்த பெரிய பைப் திறுந்துகொள்ள, அதில் இருந்து எண்ணற்ற குட்டி குட்டி மீன்கள் அந்த தொட்டியில் கொட்டியது.
அதை பார்த்து அதிர்ந்த ஆதவ், “ஆழி இது?! இந்த மீன் எல்லாம்…!” என்று ஆழி முகம் பார்க்க, அவள் அந்த தொட்டியில் இருந்த தண்ணீர் கொஞ்ச கொஞ்சமாக சிவப்பு நிறமாக மாறுவதை ஒரு நிறைவோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எஸ் ஆதவ். நீங்க நினைக்குறது சரிதான். இது பிரானா ஃபிஷ் தான். கொஞ்சம் கொஞ்சமாக இவனுங்க உடம்பை அது கடிச்சு முழுசா தின்னு முடிக்க, இன்னும் எப்படி கொஞ்ச நேரம் ஆகும். அதுக்காக தான் சின்ன சின்ன மீன்களை பாத்து பாத்து வர வச்சேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இவனுங்க எலும்பு மட்டும் இந்த தொட்டில் மிதக்கும்.” என்றவள் குரல் இருந்த வண்மை ஆதவ்வுக்கு புதிது.
பிரானா மீன்களின் தாக்குதலில் வலி தாங்கமுடியாமல் சைலேஷ் கத்திய சத்தம், சைத்ராக்கு மனநிறைவை தர, அவள் முகம் கொஞ்ச கொஞ்சமாக மலர ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் ரத்தமாக மாறி இருக்க, சைலேஷ், மற்றும் விமல் அப்பனின் எலும்புகள் மட்டுமே மிச்சம் இருந்தது.
மீரா அங்கிருந்த ஒரு லிவர்ரை பிடித்து இழுக்க, அடுத்த நிமிடம் அந்த தொட்டியில் இருந்த, நீரோடு, மீன்களும் மீதி இருந்த எலும்புகளும் இருந்த இடம் தெரியாமல் எங்கோ ஓடி மறைந்தது.
வெகு நாட்களுக்கு பிறகு, நிம்மதியாக உறங்கும் சைத்ராவை பார்த்த ஆழி, மீரா இருவரும் மனதில் அப்படி ஒரு நிறைவு.
“இப்பவாது சொல்லு ஆழி… சைத்ராக்கு என்ன ஆச்சு? எப்பவும் சுட்டித் தனம சுத்திட்டு இருக்க பொண்ணை இப்படி பாக்கவே மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு…”
“ம்ம்ம்… உங்க மூணு பேருக்கும் அவளை கொஞ்ச நாளா தான் பழக்கம், உங்களுக்கே அவளை இப்படி பாக்க கஷ்டமா இருக்குன்ன, இதுதான் அவளோட நிஜம்னு தெரிஞ்ச எங்களுக்கு எவ்ளோ கஷ்டம இருக்கும் விஷ்ணு” என்றவளை புரியாமல் பார்த்தான் விஷ்ணு.
“நீ சொல்றது எனக்கு புரியல ஆழி” என்ற விஷ்ணுவை பார்த்து இழுத்து மூச்சு விட்ட ஆழி,
“புரியாது விஷ்ணு… எங்களை பத்தி எங்களுக்கே இன்னும் புரியாம இருக்கும் போது உங்களுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது.”
“ஏன் ஆழி ஒரு மாதிரி பேசுற? நாங்க உன்னை இப்படி ஒடஞ்சு போய் பாத்ததே இல்லயே. எப்பவும் தைரியமா கெத்த இருக்க ஆழிய இப்படி பேசுறுது… என்னதான் ஆச்சு ஆழி உங்களுக்கு?”
“ம்ஹூம் தைரியம்…” என்று அசட்டையாக சிரித்த ஆழி, நாங்க மூணு பேரும் தைரியசாலி எல்லாம் இல்ல முகில். ரொம்ப… ரொம்ப ரொம்ப சாதாரணமான உலகம் தெரியாத சின்னப் பொண்ணுங்களா, அடுத்த வேலை சாப்பிட்டு, எங்க எதிர்காலத்துக்கு, படிப்புக்காக போராடிட்டு இருந்த வங்க நாங்க. ஒரு நாள்… ஒரே ஒரு நாள், எங்க மூணு பேர் வாழ்க்கையும் அப்படியே புரட்டிப் போட்டுச்சு முகில். நாங்க கடைசி சிரிச்சதும அன்னைக்கு தான். அதுக்கு பிறகு, எங்களுக்கு உண்மையா சிரிக்குறது எப்படினே மறந்து போச்சு” என்றவள் குரலில் அப்படி ஒரு வெறுமை.
“ப்ளீஸ் ஆழி தேவையில்லாம எதையும் நெச்சு இப்படி ஃபீல் பண்ணாத… நடந்ததை நினைத்து இப்ப வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்ல… நீங்க மூணு பேர் மட்டும் நாள்ல படிச்சிருந்தா, ஒரு நல்ல வேலையில் இருந்து, நல்லபடிய வாழ்ந்திருக்கலாம்” என்ற விஷ்ணுவை நிமிர்ந்து பார்த்து இதழோரமாக சிரித்தவள்,
“சைத்ரா, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. மீரா, கெமிக்கல் இன்ஜினியரிங். ஆழினி, மெக்கானிக்கல் இஞ்சினியர்” என்றது தான் ஆண்கள் மூவருக்கும் பேச்சோடு மூச்சும் ஒரு நிமிடம் நின்றுவிட்டது.
“ஏய் என்ன சொல்ற நீ!!? இவ்ளோ படிச்சிட்டு எதுக்கு நீங்க இந்த மாதிரி?” என்று அதிர்ந்த ஆதவுக்கு அடுத்து என்ன கேட்பதென்று புரியவில்லை.
“ம்ம்ம் படிச்சோம்… படிச்சிருக்கோம். அந்த படிப்பு எப்படி வந்துன்னு உங்களுக்கு தெரியுமா? அத விடுங்க, நான் கொலகாரின்னு உங்களுக்கு தெரியும். ஆனா, எந்த வயசுல, எந்த சூழ்நிலையில் நான் என்னோட முதல் கொலைய செஞ்சேன்னு உங்களுக்கு தெரியுமா?” என்ற ஆழியின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
“எனக்கு பதிமூணு வயசு இருக்கும் போது, என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க, சொந்த பந்தம்னு யாரும் இல்லாம இருந்த என்னை அக்கம் பக்கம் இருந்தவங்க, மும்பைல இருக்க ஒரு சின்ன அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டாங்க, நான் அங்க சேர்ந்த ஆறு மாசம் கழிச்சு மீராவும் அங்க வந்து சேர்ந்தாள். குடிக்க காசு குடுக்கலன்னு இவ அப்பன், இவ அம்மாவை குத்திக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டான். இவ இல்லத்துக்கு வந்துட்டா, அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு சைத்ரா வந்தாள். அவ அம்மா, அப்பா இறந்துட்டாங்க, அவ அம்மாவோட தம்பியால இவளை பாத்துக்கு முடியலன்னு சொல்லி அங்க கொண்டு வந்து விட்டு போய்ட்டான்.” என்ற ஆழியை விழி உயர்த்தி பார்த்த முகில்,
“அப்ப சைலேஷ்?” என்று கேட்க,
“ம்ம்ம் ஆமா, சைத்ரா அம்மாவோட சித்தப்பா பையன் தான் அந்த பொறம்போக்கு சைலேஷ்.” என்றாள்.
“எங்க மூணு பேர்ல சைத்ரா தான் சின்னவ… ஏனோ பார்த்தவுடனேயே எங்களுக்கு அவளை புடிச்சிது. அவளும் எங்ககிட்ட ஒட்டிக்கிட்ட, எப்பவும் நாங்க மூணு பேரும் ஒன்ன தான் இருப்போம். நாங்க இருந்த இல்லத்தில் பெருசா எந்த வசதியும் இல்லாட்டியும், ஒரளவு எங்களுக்கு சாப்பாடு போட்டு பாத்துக்கிட்டாங்க. இல்லத்தில் இருந்தபடியே அங்க பக்கத்தில் இருந்த ஸ்கூல்ல நாங்க படிச்சிட்டு இருந்தோம். ஏனோதானோன்னு வாழ்க்கை போய்ட்டு இருந்தது. நானும் மீராவும் ப்ளஸ் டூ முடிச்சிட்டு லீவ்ல இருந்த சமயம் அது. சைத்துவும் அப்ப டென்த் முடிச்சிருந்தா… அப்பதான் எங்க இல்லத்துக்கு அடிக்கடி வர்ர ஒரு பெரியவர் லீவ்ல இருந்த எங்களை அவர் கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்கு கூப்டாரு… அங்க வந்து வேலைய கத்துக்கிட்ட, பின்னாடி எங்களுக்கு அது உதவிய இருக்கும்னு சொன்னாரு… நாங்க பார்ட் டைம்ம அங்க வேலை பாத்துட்டே, மேல படிக்கலாம்னு சொன்னாரு, அதுக்கு உதவி பண்றதவும் சொன்னாரு. நாங்க இருந்த இல்லத்தில் சாப்பட்டுக்கே கஷ்டம், அதுனால வேற வழி இல்லாம நாங்க அங்கிருந்து வெளிய வந்தோம். நாங்க வேலைக்கு போனா, அவங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ண மாதிரி இருக்கும், அதோட எங்களுக்கு ஒரு தொழில் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கும்னு நெனச்சு, அந்த இல்லத்தை விட்டு வெளிய வந்தோம். சைத்தும் யாருக்கும் தெரியா எங்க பின்னாடியே ஓடி வந்துட்டா. ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு புடிச்சி நாங்க மூணு பேரும் தங்கினோம். அங்க இருந்தே வேலைக்கு போனோம். சைத்ரா நல்லா படம் வரைவா சோ அந்த பெரியவர் அவளையும் டிசைனிங் டிபார்ட்மெண்ட்ல அசிஸ்டன்ட்ட போட்டாரு. எல்லாம் ஒழுங்க தான் போச்சு, அந்த சைலேஷை நாங்க பாக்குற வரை.” என்ற ஆழி கண்களை மூடிக்கொண்டாள்.
ஆழி தோளை அழுத்திப்பிடித்த மீரா, “தீடிர்னு ஒரு நாள் அந்த சைலேஷ் மாமன்னு சொல்லிட்டு, சைத்ராவை பாக்க வந்தான். சொந்தம் பந்தம்னு எதுவும் இல்லாம அநாதை இருந்த அவளுக்கு சொந்தம்னு சொல்லிட்டு ஒருத்தன் வரவும் அவளுக்கு அவளோ சந்தோஷம். இனிமே சைத்துக்கு நல்ல காலம் நெனச்சு நாங்களும் சந்தோஷப்பட்டோம். ஆனா, அப்ப எங்களுக்கு தெரியல, அவன் சொந்தத்தில் அவளுக்கு மாமான்னு சொல்லிட்டு வர்ல, தொழில் முறையில் தான் அவளுக்கு மாமாவ இருக்க வந்தான்னும், அவனால் எங்க மூணு பேர் வாழ்க்கையும் அடியோடு மாறப்போகுதுனும்”
“ஒரு நாள் நாங்க வேலை செஞ்சிட்டு இருந்த கார்மெண்ட்ஸ்ல சைலேஷை பாத்தோம். அவன் அந்த கார்மெண்ட்ஸ் பார்ட்னரோட ஃப்ரண்டுன்னும், அவரை பாக்க வந்ததவும் சொன்னான். அதுக்குப் பிறகு அவன் அடிக்கடி அங்க வந்தான். வரும்போதெல்லாம் சைத்ராவை வந்து பாத்துட்டு போவான்.”
“அன்னைக்கு எங்களுக்கு வேலை முடிய ரொம்ப லேட் ஆகிடுச்சு, கிட்டதட்ட அங்க வேலை பார்த்துட்டு இருந்த எல்லாரும் கிளம்பி இருந்தாங்க. நானும் ஆழியும் சைத்துவை கூப்புடபோனோம். அங்க சைலேஷ் வந்து அவளை கூட்டிட்டு போனாத சொன்னாங்க. எங்கன்னு கேட்டதுக்கு, அந்த கார்மெண்ட்ஸ் பார்ட்னர் சைத்ராகிட்ட ஏதோ டிசைன் வரைஞ்சு குடுக்க சொல்லி கேட்டதாவும், அதுக்காக தான் சைலேஷ் வந்து அவளை அழைச்சிட்டு போனான்னு சொன்னாங்க… ஏற்கனவே அந்த பார்ட்னர் பத்தி எங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்ல… அவன் ஒரு பொம்பளை பொறுக்கின்னு எங்களுக்கு தெரியும். அவனை பாக்க சைத்ரா இந்த நேரத்தில் போயிருக்கான் தெரிஞ்சது. நாங்க உடனே அங்க போனோம்.” என்ற மீரா தன் கட்டுப்பாட்டை இழந்து கதற ஆரம்பிக்க மூடி இருந்த ஆழியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
கதறும் மீராவின் தோளில் ஆதரவாக கைவைத்து அழுத்திய விஷ்ணு, “ப்ளீஸ் மீரா அழத, கண்ட்ரோல் யுவர் செல்ஃப்” என்றவன் அவளை கண்களை துடைத்துவிட, ஆதவ் ஆழி அருகில் அமரந்தவன், அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
ஆதரவுக்கு ஆதவன் தோள் கிடைத்தவுடன், அவள் மொத்த துக்கத்தை அவன் தோளில் கண்ணீராக இறக்கி வைத்தாள் ஆழி.
“பதினாலு வயசு பொண்ணு ஆதவ் அவ. சின்… சின்ன குழந்தை… அவள… அவளை அவனுங்க” என்ற ஆழி பெரும் குரலெடுத்து கதற… ஆதவ்வுடன் விஷ்ணு முகில் கண்களிலும் கண்ணீர் நிறைந்து.
“நாங்க அந்த கதவை திறக்க எவ்வளவோ ட்ரை பண்ணோம் ஆதவ்.”
“ஆ… ஆனா…, எங்ளால முடியல, அந்த நேரம் சைத்து ‘ஆழி, மீரா என்னை விட சொல்லுங்க… எனக்கு வலிக்குது… வலிக்குது… என்னை விடுங்ககன்னு’ கதறுன கதறல் இன்னும் எங்க காதுல கேட்டுட்டு இருக்கு… என்ன நடக்குது, அவனுங்க அவளை என்ன பண்றணுங்கன்னு கூட தெரியல வயசு ஆதவ் அவளுக்கு… அவளை போய்…”
“எங்க ரெண்டு பேர் கண்ணு முன்னாடியே அவளை” என்ற ஆழி ஆதவ் மடியிலேயே முகம் புதைத்து கதற, மீராவும் முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
“அங்க இருந்த ஒரு இரும்பு கம்பிய எடுத்து அந்த ரூம் ஜன்னல் கண்ணாடிய ஒடச்சிட்டு உள்ள போனோம். அங்க தரையில் பாதி உயிர செதஞ்சு போயி, உடம்பு முழுக்க ரத்த காயத்தோட, துணி இல்லாம” என்ற மீராவுக்கு தொண்டை அடைக்க, அந்த காட்சியை இப்போது நினைக்கவும் அவள் இதயம் பதறியது.
“நாங்க குழந்தை மாதிரி பாத்து பாத்து வளர்ந்த புள்ளைய, எங்க கண்ணு முன்னாடியே கசக்கி கிடக்குறதை பாத்த அடுத்த நிமிஷம், எனக்கு எல்லாம் மறந்து போச்சு, என் எண்ணம் முழுக்க என் சைத்து தான் இருந்தா… அவளை இப்படி செஞ்சவனை உயிரோட விடக்கூடாதுனு மட்டும் தான் தோணுச்சு, கையில இருந்த இரும்பு கம்பியல அந்த வெறி புடிச்ச நாயை அடிச்சே கொன்னேன். அந்த நேரம் மீராவோட கவனம் சைத்ரா மேல இருக்க, அதை யூஸ் பண்ணி இந்த பொறுக்கி நாய் சைலேஷ் அங்கிருந்து தப்பிச்சிட்டான்… இல்லாட்டி அன்னைக்கே இவனையும் நான் அடிச்சு கொன்னுருப்பேன்.”
அந்த வீடே அமைதியாக இருந்தது. ஆழிக்கும் மீராவுக்கும் கண்களில் கண்ணீர் வறண்டு விட, அழுக கூட முடியாமல் சுவற்றை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்து இருக்க, முகில் பார்வை முழுவதும், இன்று பிறந்த குழந்தை போல் நிர்மலமான முகத்தோடு உறங்கிக்கொண்டிருந்த சைத்ரா மேலேயே நிலைத்து நின்றது.
“அந்த நாள்கு பிறகு எங்க வாழ்க்கையே அடியோடு மாறிடுச்சு… செத்துகிடந்தவன் பக்கத்தில் பாதி செத்துக்கிடந்த சைத்ராவை மடில போட்டுட்டு அடுத்து என்னனு தெரியாம உக்காந்துட்டு இருந்தோம். அப்ப தான் அங்க பாக்க ரெவுடி மாதிரி இருந்த. நாலஞ்சு பேர் வந்தாங்க, அங்க இருந்த சூழ்நிலையை பாத்துட்டு, யாருக்கோ ஃபோன் பண்ணி பேசினாங்க, அதுக்கு அப்புறம் உடனே அந்த டெட்பாடிய அங்கிருந்து டிஸ்போஸ் பண்ணிட்டு சைத்ராவை ஹாஸ்பிடல் கூட்டி போய் அட்மிட் பண்ணிட்டு, எங்க ரெண்டு பேரையும் எங்கயே கூட்டிடு போய் ஒருத்தன் முன்னால நிறுத்துனாங்… அங்க போன அப்புறம் தான் தெரிஞ்சு அது அண்டர்கிரவுண்ட் வேலை எல்லாம் செய்ற இடம்னும், அந்த ஆள் மும்பைல பெரிய ரெவுடினும்…”
“என்னோட ஆட்கள் அங்க வந்ததே, நீ கொன்னீயே… அந்த நாயை போட்டு தள்ளத்தான். ஆனா, அந்த வேலைய நீ செஞ்சிட்ட… ஹாஸ்பிடல்ல இருக்க அந்த பொண்ணோட ட்ரீட்மென்ட், அதோட நீ செஞ்ச கொலை, இது ரெண்டையும் நான் பாத்துக்குறேன்னு, அதுக்கு பதில் இனிமே நான் சொல்ற எல்லா வேலையும் நீங்க செய்யனும்.” என்றான்.
ஆழியும் மீராவும் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் சைத்ராவுக்காக சரி என்று சொல்ல, அந்த நொடி மூவரின் வாழ்க்கை பாதையும் தடம்புரண்டது.
“அவங்க எங்களை தப்பான தொழில் எதுலயும் யூஸ் பண்ணல, சில இடங்கள்ல எங்களை மாதிரி பொண்ணுங்க ஈசியா நுழைஞ்சிட முடியும். அந்த மாதிரி இடத்தில் எங்களை வச்சு அவங்க வேலைய முடிப்பாங்க… பெரிய பெரிய இடங்கள்ல இன்பாமேஷன் கலெக்ட் பண்ண, சில பணக்கார பசங்களுக்கு எங்களை வச்சு ஆசை காட்டி கடத்தி பணம் புடிங்குறதுனு இப்படி நெறய…”
“கொஞ்ச நாளல் சைத்துவும் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தா, போக வேற இடம் இல்லாம போய்டவே, அவளையும் எங்க கூடவே வச்சிக்க வேண்டிய சூழ்நிலை… கடைசி வரை எங்க வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு பயம் வந்துடுச்ச. அதனால அந்த ரெவுடிங்க ஹெட்கிட்ட நாங்க மேல படிக்கணும்னு கேட்டோம். இங்கிலீஷ் பேசுற பொண்ணுங்க கோங்ல இருந்த பலவிதத்தில் அவனுக்கு உதவும்னு எங்களை படிக்க அலோ பண்ணான்… நாங்களும் மேல படிச்சோம். எங்க அழகு, படிப்பு, புத்திசாலி எல்லாம் நாளுக்கு நாள் வளர, அது அவனுக்கு பணமா மாறுச்சு… அங்கயே இருந்து இருந்து நாங்களும் அவனுங்க மாதிரி மாறிட்டோம். கொலை எல்லாம் எங்களுக்கு ஒரு பெரிய மேட்டரே இல்லன்று அளவுக்கு ஆகிடுச்சு… ஒரு ஸ்டேஜ்ல அந்த ஆள், எங்களை வச்சு வேற வழில பணம் சம்பதிக்க திட்டம் போட்டான். நாங்க அவனையே போட்டுட்டு அங்க இருந்து வெளிய வந்தோம்.” என்ற ஆழியின் முகம் உணர்வு துடைத்து இருந்தது.
“நீங்க மூணு பேரும் தான் இவ்ளோ படிச்சிருக்கீங்களே, வேற எதாவது வேலை செஞ்சு கௌரவமா வாழ்ந்திருக்கலாமே?!” என்ற விஷ்ணுவை பார்த்து விரக்தியாக சிரித்த மீரா,
“படிப்பை குடுத்த கடவுள் கூடவே, கொஞ்சம் அழகையும் எங்களுக்கு சேத்து குடுத்து தப்பு பண்ணிட்டானே விஷ்ணு... நாங்க என்ன பண்றது? ஏன் நீங்களே முதல் தடவை ஆழிய பாத்தப்போ அவளை பாத்து சொன்னீங்களே… நீ செம்ம அழகா, ஹாட்ட இருக்கன்னு… அந்த அழகு தான் எங்களை எங்கயும் நிம்மதிய வாழ விடல… வேலைக்கு போற இடத்தில் எல்லாம் எங்க உடம்புக்கு தான் வெல வச்சணுங்க… ஏற்கனவே சைத்ரா படக்கூடாதது எல்லாத்தையும் பட்டுட்ட, அதுல இருந்து அவளை வெளிய கொண்டு வரவே நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். மறுபடியும் எதாவது தப்ப நடந்த அதை தாங்குற சக்தி எங்களுக்கு இல்ல… சோ பேக் டு தி பெவிலியன் மாதிரி… அந்த ரெவுடிக்காக செஞ்ச வேலையை, நாங்க படிச்ச படிப்பை வச்சு இன்னும் ஹைடெக் எங்களுக்காக செய்ய ஆரம்பிச்சோம். அதுக்கு அப்புறம் கொலையே எங்க தொழில போய்டுச்சு…”
“அந்த வாழ்க்கையில் இருந்து எங்களை மாத்தி வெளிய கொண்டு வந்தா ஆஷா… அவளால நாங்க மாறுனோம். இப்ப அவளுக்காகவே மறுபடியும் இதுக்குள்ள வந்துட்டோம். ஆனா, பல வருஷமா நாங்க தேடிட்டு திரிஞ்ச சைலேஷ்… இங்க இப்படி எங்க கையில் சிக்குவான்னு நாங்க எதிர்பாக்கல... இன்னும் அந்த யுவ்ராஜ் மட்டும் தான் பாக்கி.. அவனையும் முடிச்சிட்ட… ஒன்ஸ் பார் ஆல் எல்லாம் முடிஞ்சிடும்” என்ற ஆழியும் மீராவும் எழுந்து சென்றுவிட, ஆண்கள் மூவரும் அவர்களின் நிலையை நினைத்து அடி நெஞ்சு கணத்தது. அதுவும் சைத்ராவுக்குள் இப்படி ஒரு வலி இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. அவளை நினைக்க நினைக்க, சைலேஷூக்கு இன்னும் மோசம் மரணத்தை தந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.