இரட்டை நிலவு – 8

இரட்டை நிலவு – 8
பத்ரி அதிர்ந்த விழிகளை மாற்றாமல் தன்னெதிரே அமர்ந்த அமீக்காவை நோக்க, அவனுக்கு அருகில் அமர்ந்தான் ஷ்ரவன்.. பத்ரி அவதானித்து கொள்வதற்காக அவகாசம் அளித்து அமைதி காட்ட அமீக்காவிடம், “உனக்கு என்ன பைத்தியமா அமீக்கா?? என்ன பேசுறன்னு புரியுதா?? பப்ளிக் பிளேஸ்ல இருந்துட்டு இந்த மாதிரி பேசாத.. பாக்குறவங்க தப்பா நினைச்சிக்க போறாங்க..” என சன்ன குரலில் கூறினான்..
“சோ வாட் பத்ரி.. நான் லெஸ்பியன்னு சொல்றதை ஏன் மறைச்சு சொல்லணும்.. இது சுதந்திர இந்தியா தானே.. பத்ரி ஒரு பிஸ்னஸ் மேன்.. அண்ட் நீ ஒரு மேன்னு சொல்றது எப்படியோ அதே மாதிரி என்னோட அடையாளமான லெஸ்பியன்னு சொல்றேன்.. இதுல என்ன தப்பு இருக்குது??” என ஏறிட, “நீ பண்ணிட்டு இருக்குற விஷயத்தோட சீரியஸ்னஸ் புரியுதா அமீக்கா.. இதை தான் நான் முதல் நாளே சொன்னேன்.. உன்னோட அப்க்ரேட் இந்த சொசைட்டிக்கு ஒத்துவராது.. டைம் எடுத்துக்கும்.. நீ ஓவர்அப்க்ரேட்.. தேங் காட்.. தன்வி உன்னோட அதிக டைம் ஸ்பென்ட் பண்றதுக்குள்ள நான் வந்துட்டேன்.. நான் இருக்குறதுனால தான் உன்னோட இந்த இடியட்டிக் திங்க்ஸ் தன்வியை அபெக்ட் பண்ணலை..” என பொரிந்து கொண்டிருந்தான்..
ஷ்ரவனிற்கு கோபம் கொப்பளித்தாலும் சம்பந்தப்பட்ட அமீக்காவே அமைதியாக இருப்பதனால் பொறுமையான சூழலுக்கு தள்ளப்பட்டான்.. “பத்ரி..” என அமீக்கா ஏதோ சொல்ல வருவதற்குள், “வெயிட், பத்ரி.. நீங்க மீகாவை வார்ன் பண்ணியிருக்கீங்களா?? இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல.. இப்போவும் என் முன்னாடியே அதட்டி பேசுறீங்க.. பத்ரி.. உங்களுக்கு மீகா ஓவர்அப்க்ரேடா தான் தெரியும்.. எனக்கு அவளை எக்ஸ்செலென்ட்டாவே தெரியும்.. ப்ளீஸ்.. இனி இன்னொரு முறை என் முன்னாடி மீகாவை தப்பா பேசாதீங்க..” என மூச்சு வாங்க பேசி முடித்தாள்..
அவளின் எதிர்பாராத எழுச்சியில் மூவருமே, “இந்த பூந்தென்றலா புயலாக மாறியது??” என அதிர்ச்சியுற, “நீங்க பேசிட்டு வாங்க..” என சட்டென எழுந்தும் சென்றாள்.. “பத்ரி.. நான் லெஸ்பியன்னு தான் சொன்னேன்.. ஏதோ வியாதி இருக்குற மாதிரியும் தனுக்கும் ஒட்டிக்கும்ன்ற மாதிரியும் பேசுறீங்க.. உங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணும்னு ஆசை தான்.. ஆனா தனு தனியா போயிட்டு இருக்குறதுனால நானும் கிளம்புறேன்..” என்று விட்டு அமீக்கா எழுந்து செல்ல, ஸ்ரவனோ பரிதாபமாக பார்த்து வைத்தான்..
கோபத்தினால் தெறித்த விழி நீரோடு வேகத்தில் நடந்து கொண்டிருந்தவளின் மனதினுள் தீராத வலியொன்று பரவி கொண்டிருன்க்கிறது.. தீர்க்கும் வழியே வலியாகி போனதினாலா?? சடுதியாய் அவளின் பின்னே ஹாரன் ஒலி கேட்டிட, கூலரோடு ஹெல்மெட் அணிந்திருந்த அமீக்காவின் கைகளில் மற்றொரு ஹெல்மெட் இடம்பெற்றிட பின்னே அமர்ந்திருந்த ஷ்ரவன் வெற்றிடமாகி போனான்.. கண்களாலேயே அமருமாறு பணித்த அமீக்கா நாவினால் கன்னங்களில் மேதினி உருவாக்கினாள்..
தன்வியோ பொதுவெளி என்றறியாது குலுங்கி சிணுங்கி, உதட்டை பிதுக்கி குழந்தையென கண்களை கசக்கிட, அவளின் பக்கவாட்டிற்கு சென்று நின்றது அந்த புல்லட்.. “தனு.. கமான்.. இந்த முறை பிரான் வாங்கி தர அவசியமில்லை.. நான் இல்லாம ப்ரீயா உங்க மீகாவோட ட்ராவெல் பண்ணலாம்.. பட் மீகாவோட பெஸ்ட் ட்ராப் ஏஜென்ட்டா நான் தான் இருப்பேன்..” என கூறிட, முத்துபார்கள் தெரிய சிரித்தவளின் கன்னங்களில் மீந்திருந்த விழிநீர் முத்துக்களாய் உருண்டோடிட தலையசைத்தாள்..
பலமுறை பதிவிருந்த இடம் தான் ஆனாலும் இன்று புதிய உணர்வுகளுடனும் புதிய உரிமைகளோடும் அமர்கிறாள்.. இருபுறமும் கால்களிட்டு அமர்ந்து பிடிமானத்திற்காக அவளுக்கான ராங்கியின் தோள்களில் கரம் வைத்து, ஹெல்மெட்டை அணிந்து பக்கவாட்டு கண்ணாடியில் இருவரின் சரிபாதியான வதனங்களும் ஒரே பிம்பமாக தெரிய, அந்நிமிடம் வேறுவிதமான உச்சக்கட்ட உணர்வு அது..
சில பல தெருக்களில் நுழைந்து வளைந்து புல்லட்டினை செலுத்திய அமீக்காவின் வேகத்தினை கண்டு வியந்து விடுவாள் என்று எண்ணியிருக்க, அவ்ளோ உஷ்ணமான காற்றில் உறங்கி போயிருந்தாள் முன்னாளிருந்தவளின் மேல் கொண்ட நம்பிக்கையினால்.. “தனு.. தனு..” என ஒற்றை கரங்களால் அவளின் கால்களை தொட்டு உலுக்கிட, ம்ஹும் அசைந்து கூட கொடுத்தாளில்லை.. “சரியா போச்சு போ.. மேடம் தொண்டை தண்ணி வத்த வருங்கால ஹஸ்பன்ட்டுகிட்ட கத்திட்டு ஹஸ்கியா குறட்டை விட்டு தூங்குறாங்க..” என்ற அமீக்கா போக்குவரத்தில் கவனம் செலுத்தினாள்..
பாதுகாப்பான தோள்களில் பகுமானமாய் உறங்கும் பாக்கியம் பலருக்கும் இங்கே கிடைப்பதில்லையே.. பெற்றவளோ அனுபவிக்கிறாள்.. கன்னங்களை வெடிக்க செய்திடும் அளவிற்கு காற்றில் உவர்மனம் கலந்திருக்க, சொருகிய விழிகளை மெல்ல திறக்கிறாள்.. கண்முன்னே மிதமான கடலலைகள் கருமணற்கரையினை தழுவி விட்டு செல்ல விஸ்தாரமாகவும் நெருகடியில்லாத சாலையுமே காட்சி தந்தது.. “வாவ்..” என அன்னிச்சியாகவே அதரங்கள் அசைய, முன்னால் அமர்ந்திருந்தவளின் இதழில் குறுநகை.. ராங்கியவளின் ரகசிய ரசிப்பை கண்டு கொண்ட ராணியவளோ ரம்மியமாகி போனாள் வெட்கத்தில் திளைத்து..
அங்கிருந்த காபி ஷாப் ஒன்றில் காத்திருந்த கடலன்னையை கண்குர்ளிர ரசித்து கொண்டே ஒவ்வொரு மிடறாக பருகி கொண்டனர்.. அங்கிருந்த ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்து மகிழ்ந்த தன்வியை ஆச்சரியப்படுத்துவதில் அலாதி இன்பம் கொண்டாள் அமீக்கா..
கதிரவனோ காதலின் சின்னங்களை கண்டு காதலில் விழுந்தவனாக நிலவு காதலியை தேடி செல்ல, அந்திவான பொழுதில் வோர்லி ஸீ ஃபேசில் ஆளில்லாத இடமாக தேடி அமர்ந்தனர்.. முட்டி மடித்து அமர்ந்த தன்வி பிடிமானத்திற்காக வலது கரத்தை தரையில் ஊன்றிட, அமீக்காவோ இரு கால்களையும் நீட்டில் பின்னால் கரங்களை பதித்து அமர்ந்தாள்..
“இந்த இடம் ரொம்ப அழகா இருக்குதுல்ல மீகா.. உனக்கு ஞாபகம் இருக்குதா?? சின்ன வயசுல மொட்டை மாடியில தெரியுற வின்மீனுக்காக வீட்ல இருக்குற லைட்டை எல்லாம் ஆப் பண்ணிட்டு வேடிக்கை பார்ப்போம்.. அப்போ நமக்குன்னு எந்த கவலையும் இல்லை.. எந்த பிரச்சினையும் இல்லை.. நமக்குள்ள இந்த பிரிவு கூட இல்லை.. அந்த நாட்கள் ரொம்ப அருமையா இருக்கும்.. அப்பா அம்மா அத்த எல்லாரையும் ஏமாத்திட்டு தலையனையோட பனியில நனைஞ்சு அடுத்த நாள் திட்டு அடி வாங்கினது எல்லாம்.. டெய்லி நைட் ஜன்னல் க்ளோஸ் பண்ண போறப்போ தெரியுற விண்மீன்கள் கிட்ட ஏன் அந்த மாதிரியான ஒரு அழகிய ராத்திரிய எங்க கிட்ட இருந்து திருடிகிட்டன்னு கேக்க தோணும்..” என வானை வெறித்தபடி கூறி கொண்டிருந்தாள் தன்வி..
“ம்ம்.. அதுக்கு அப்புறம் உன்கூட இல்லாததுனால தான் என்மேல காதல் வந்துச்சா??” என அமீக்கா சலனமின்றி விளிக்க, திடுக்கிட்டாள் தன்வி.. “தனு, எனக்கு தெரியும்.. உன்னோட ஒவ்வொரு கன்னசைவுக்கும் உள்ள அர்த்தத்தை தெரிஞ்ச டிக்ஷனரி நான்.. என்கிட்டே எந்த பொய்யும் சமாளிப்பும் எடுபடாதுன்னு உனக்கே தெரியும்..” என்ற அமீக்காவின் பார்வை வானை விட்டு விலகவே இல்லை..
அவளின் கரங்களை கட்டிக்கொண்ட தன்வி, “சாரி.. மீகா.. என்னால தானே உனக்கு இவ்ளோ பிரச்சினையும்.. எனக்காக நீயும் லெஸ்பியன்னு பொய் சொல்லி..” என கூறி கொண்டிருந்தவளை, “லேச்பியன்னு சொல்லி..” என திருத்தம் செய்தாள் அமீக்கா.. அவள் செவியில் விழுந்த வார்த்தைகள் சரிதானா என்ற ஆய்வு மூளையில் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, “நீ ஒரு லெஸ்போன்னு உனக்கு எப்போ தெரிய வந்துச்சு..” என அடுத்த கணையை தொடுத்தாள் அவளின் ராங்கி..
“ப்ளீஸ் தனு.. அன்செர் பண்ணு.. உன்னோட ஐ லிட் பாஸ்டா ஒப்பன் க்ளோஸ் ஆகுது.. சோ நெர்வஸா பீல் ஆகுது.. நான் ப்ரீயா தானே பேசுறேன்.. பின்ன ஏன்??” என வினவ, ஒருவாறாக நிலைபடுத்தி கொண்ட தன்வி தொடங்கினாள்.. “ஆக்சுவலா எனக்கு காலேஜ் போனப்போ தான் பீல் ஆச்சுது.. என்னோட இங்க்லீஷ் மேம் ரேபெக்காவை பார்க்கும் போது ஒரு கிரஷ் பீல் வந்துச்சு.. பிரெண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணும் போது டீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. அப்புறமா எதையும் சொல்லாம எனக்குள்ளேயே வச்சிக்கும் போது தான் நான் மத்தவங்களை விட ரொம்ப வித்தியாசமா தோண ஆரம்பிச்சுது.. எல்லாரும் ஸ்டுடென்ட் ஆப் தி இயர் வருண் சித்தார்த் பத்தி வர்ணிச்சு பேசும் போது எனக்கு ஆலியாபட்டோட கியூட்னஸ் அழகா தோணிச்சு.. இப்படி நிறைய வித்தியாசமாவே பீல் ஆகா ஆரம்பிக்க பழைய புக்ஸ்ல தேட ஆரம்பிச்சேன்.. பல இடங்கள்ல இது ஒரு வியாதின்னு போட்டிருந்தது.. கொஞ்ச நாள் ஆக ஆக தான் தெரியும்.. ஹோமொசெக்ஷுவல் பத்தி.. சரி நீ எப்படி??” என கேட்டவளை உறுத்து நோக்கினாள் அமீக்கா..
“இப்போ தானே நீயே சொன்ன.. அது உண்மையா பொய்யா??” என்ற தன்வியின் குரல் கம்மா துவங்க, “உண்மையா என்னன்னு தெரியலை.. ஆனா என்னால உன்னை விட்டு போக முடியாது.. நீ குடுத்த முத்தம் தான் இதெல்லாம் பேச வைக்குதுன்னு நினைக்காத.. அந்த முத்தம் தான் எனக்கு இதை உணர்த்துச்சு.. என்னால நீ இல்லாம வாழ முடியாது.. இதுக்கு பேரு காதலோ காமமோ லெஸ்பியனோ.. என்ன வேணா இருக்கட்டும்.. என்னால உன்னை பத்ரிக்கு விட்டு தரமுடியாது.. அவன் நல்லவன் தான்.. ஆனா என்னோட தனுவை விட்டு தர்ற அளவுக்கு பெரியவன் இல்லை..” என கூறிய அமீக்காவின் வார்த்தைகளில் ஒரு உறுதி..
ஆனந்தத்தினை உதிர்க்கும் தன்வியின் கண்கள் இருந்த வதனமோ பிரகாசமாகி கொண்டே செல்ல, ஆரத்தழுவி கொண்டாள் அவளின் ராங்கியை.. “ஐ லவ் யூ மீகா.. அன்னைக்கு நைட் சொல்ல நினைச்சதும் இது தான்… என்னை பத்தின உண்மை தெரியுறதுக்கு முன்னாடியே தெரியுற என்னோட காதல் உனக்கு புரியுமான்னு தெரியல.. உன்னை மாதிரி தியாகியா விட்டு கொடுத்துட்டு போக மாட்டேன்.. நின்னு சண்டை போடுவேன்.. அந்த பல்லிமிட்டாய் கூட.. இப்போவும் சொல்றேன் மீகா.. நான் செத்தே போனாலும் கடைசியா உன் குரல் கேட்டுட்டு தான் உயிரை விடுவேன்..” என்ற தன்வியின் அணைப்பில் இறுக்கத்தை கொடுத்தாள் அமீக்கா..
“லூசு மாதிரி பேசாதடி.. நான் தான் இருக்குறேன்ல.. இன்னொரு தடவை நான் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்..” என உறுதியளிக்க, “நான் நம்ப மாட்டேன்.. அப்படின்னா இன்னைக்கு மூன்நைட் பண்ணலாம்.. அப்படின்னா தான் ஓகே..” என குழந்தையாக சிணுங்கிய தன்வியை தலையில் தட்டி அறைக்கு அழைத்து சென்றாள் அமீக்கா..
விரிக்கப்பட்ட போர்வையை கடந்து உணரப்பட்ட தரையின் வெம்மை, தேகத்தில் குளிர்விக்கப்படும் பனியின் வன்மை, இருளில் வாழும் விண்மீன் நட்சத்திர கூட்டம்.. ராங்கியின் நிலவாய் அவளின் ராணியும், ராணியின் நிலவாய் ராங்கியும் ஒளிர்ந்து கொள்ள அவ்வானில் ரெட்டை நிலாக்களாகி போனது.. கண்களில் மின்னிய காதலின் அளவு பெருக்கெடுத்து ஓட, அதீத காதலின் பிடியில் சிக்கி இதழ்கள் இணைந்து கொண்டிருந்தது.. வழக்கமான காதல்களில் தான் காமமில்லா முத்தம் என்பதில்லாமல் காதல் இருக்கும் அனைத்திலுமே காமமில்லா முத்தம் இடம்பெறும்.. காதலினை உணர்ந்து கொண்ட தருணத்திலிருந்து காதலுக்கான சாட்சியமாக அவ்விணைப்பு நிகழ்ந்து கொண்டிருக்க, காரணமான விண்மீன் கூட்டங்களோ மலர்வீசி வாழ்த்தி கொண்டன..
சமூகத்தில் பெண்ஓரினசேர்க்கையாளர்கள் பற்றிய தவறான சிந்தனை ஒன்று உலாவி வருகிறது.. ஓரினசேர்க்கையில் ஒருவர் ஆணின் குணாதிசயத்தையும் மற்றொருவர் பெண்ணின் குணாதிசயத்தையும் கொண்டு அந்தந்த பாத்திரத்திற்கான பங்கினை வகிக்க வேண்டும் என்று.. அது முற்றிலும் மாறுபட்ட ஒன்று..
இந்த உறவில் இருவரும் அவர்கள் அவர்களாகவே பங்கு கொள்கின்றனர்.. தங்களுக்கு ஏற்ற உடைகளையும் நடைகளையும் தேர்வு செய்து கொள்கிறார்கள்..
-அமீக்கா