இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 14

Screenshot_2021-06-21-17-30-01-1-3d6db8a3

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 14

 

காலை நேர தேநீர்‌ பருகிக்கொண்டு இருந்த தந்தையுடன்‌ அமர்ந்தவாறு தாரா அவர்‌ தோள்‌ சாய்ந்து இருக்க, தருண்‌ அவர்களுக்கு எதிரே அமர்ந்து போனில்‌ நிவியுடம்‌ காலை தேநீர்‌ பருகிக்கொண்டு இருந்தான்‌.அவ்விடம்‌ வந்த மாதவி, “என்ன குட்டி குளிக்கமா என்ன பண்ற இங்க. காலேஜ்‌ முடிஞ்சு வந்ததுல இருந்து தினமும்‌ இப்படி பண்ற.பொண்ணா லச்சணமா குளிச்சு ட்ரெஸ்‌ மாத்திக்க வேணாமா. இன்னமும்‌ அந்த நைட்‌ ட்ரெஸ்ல பேண்ட்டு ஷர்ட்டு போட்டுட்டு, சொல்லிருக்கேனா இல்லையா உனக்கு,ரூம் விட்டு வெளியே வரவேணாம்னு. “

பொய்யாக அவளை திட்ட வேண்டுமே என்பதற்காக திட்டி, “போடா போய்‌ குளி பாரு அண்ணாவே எப்டி இருக்கான்னு… ‘ என்று கூற. தாரா விஜயை பார்க்க, அவனோ இவளை பார்த்து காலரை தூக்கிவிட. அய்யே, அவனுக்கு பழிப்பு காட்டியவள்‌ ‘அவன்‌ எதுக்கு இப்படி பவுடர்‌ போட்டுட்டு உட்கார்ந்து இருக்கான்னு நமக்கு தானே தெரியும்‌ ‘ மனதில்‌ அவனை வருத்தவள்‌, அவனை பார்த்து,

“எதுக்குண்ணா இவ்வளவு அவசரமா குளிச்சு போலீஷா முகத்தை வச்சுகிட்டு போனை பார்க்குற, அதுல என்ன

போகுது, அம்மாக்கும்‌ கொஞ்சம்‌ காட்டேன்‌.” என தருணை சீண்ட, ‘அடியேய்‌’ எனும்‌ படியாக அவன்‌ அவளை முறைக்க தாராவின்‌ போன்‌ சினுங்கவும்‌ அதனை

எடுத்தவள்‌. அவனுக்கு கண்ணடித்து நல்ல “பயந்தியா?” என ரகசியமாய்‌ கேட்டு விட்டு அப்படியே முன்‌ வாசல்‌ தோட்டம்‌ நோக்கி நடந்தவாறே, “ஹாய்‌ புன்யா எப்டிருக்க

‘எனவும்‌

 

“ஹாய்‌ தாரு பேபி நா நல்ல இருக்கேன்‌.நீ அப்பா அம்மா எல்லாம்‌ எப்டிருக்கீங்க?” ‘எனவும்‌.

 

“நல்லா இருக்கோம்‌ டி…”

 

“அனிதா பேசவே இல்லடி. உன்கூட பேசினாளா? ” புன்யா கேட்க,

 

‘அனிதா அவங்க அம்மா ஊருக்கு போனதே போனா ஆளையே காணோம்னு இருந்தேன்‌. நேற்று தான்‌ ஒரு மாதம்‌ கழிச்சு கால் பண்ணி அவங்க அம்மா அங்கேயே

ட்ரான்ஸ்பெர்‌ ட்ரை பண்ணி செட்ல்‌ அகலாம்னு சொல்றங்களாம்‌. அதோட நல்ல ப்ரோபோசல்‌ ஒன்னும்‌ வந்திருக்காம்‌. அவளுக்கும்‌ பிடிச்சிருக்கு போல. சோ இப்போவே வரமாட்டாங்க போல.அவளும்‌ இல்லாம எனக்கும்‌ தான்‌ சுத்த போரிங்கா இருக்கு.’

‘அதென்ன மேடம்க்கு என்ன  காலையிலேயே இன்னக்கி என்னை ஞாபாகம்‌ வந்திருக்கு?”

 

“அச்சோ பேபி இதுக்கு மேல என்னால முடியல சுத்த போரிங்கா இருக்குப்பா.

 

‘ஹ்ம்ம்‌ எனக்கும்‌ தான்‌. ‘தாராவும்‌ சோகமாக கூற..

 

“ஹேய்‌ பேபி… என்‌ கசின்‌ ஒருத்தர்ட கம்பனில அவருக்கு கீழ ஒர்க்‌ பண்ண ரெண்டு பேர்‌ வேணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. பெரிய கம்பனி ஒன்னு.  அவங்கட அக்கெளன்ட்‌ செக்ஷனுக்காக நம்பிக்கையா ஆள்‌ வேணுமாம்‌. அவருக்கு ஹெல்ப்பா தான்‌ எடுக்கப்பாக்குறாங்க. நான்‌ தான்‌ உன்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்‌…”

 

‘ஓஹ்‌ அப்டியா? இரு அப்பாகிட்ட பேசிப்பாக்குறேன்‌.என்று

தாரா கூற,

 

‘நான்‌ லைன்லேயே வெய்ட்‌ பண்றேன்‌ கேளு.’

தந்‌தை அருகே வந்தவளை, “என்னடா ஸ்ரீ?” அப்பா கேட்கவும்‌, புன்யா கூறியதை சொன்னாள்‌.

“ஓஹ்‌! ரெண்டு பேருமே ஒரே இடத்துலன்னா பயமும்‌ இல்லை தான்‌… ஸ்ரீ புன்யாட்ட கேளு எந்த கம்பனின்னு?” தருண்‌ கேட்க,

 

‘புன்யா, அண்ணா எந்த கம்பனின்னு கேக்குறாங்க.

 

RP industries’ தாரா தருணுக்கு கூற,

” நம்ம விஜய்‌ட கம்பனி அது. அங்கன்னா ஒன்னும்‌ பிரச்சினையே இல்லப்பா. பயப்படாம இவளை அனுப்பலாம்‌. வேணும்னா நான்‌ விஜய்‌ அப்பாக்கூட பேசுறேன்‌. ” எனவும்‌,

 

” நம்ம அருணாகிட்ட சொல்லி வேணும்னா கேட்கலாம்ங்க. “மாதவியும்‌ கூற,

 

“வேணாம்‌ டா. வேலைன்னு வந்துட்டா பிரென்ஷிப்‌, சொந்தபந்தமெல்லாம்‌ அதுல திணிக்க கூடாது.அவளால பிரீயா வேலை பார்க்க முடியாது போகும்‌.சோ ஸ்ரீ அவன்‌ பிரென்ட்‌ கசின்‌ மூலமாவே அங்க போகட்டும்‌. பிறகு அவங்க உங்க பொண்ணா இவன்னு கேட்டாங்கன்னா அப்புறமா சொல்லிக்கலாம்‌.’ என்றவர்‌, ‘என்னடா ஸ்ரீ ஓகேயா?” எனவும்‌,

“ஓகே ப்பா.” என்றாள்‌.

 

“சரி உன்‌ பிரெண்டுகிட்ட டீடெயில்ஸ்‌ கேட்டுக்கோ.” எனக் கூற அலைபேசியை எடுத்துக்கொண்டு அவள்‌ அறை சென்றவள்‌, “புன்யா…” என போனில்‌ அழைக்க, ” ஹேய்‌ பேபி நம்ம ஹீரோ

கம்பெனியா அது? ”  எனவும்‌ ஹ்ம்ம்‌ என்றாள்‌ தாரா.

“சூப்பர்‌ல… நான்‌ என்‌ கசின்‌ கூட பேசிட்டு என்னனு சொல்றேன்‌ . ‘

‘புன்யா எனக்கு அங்க போகணுமான்னு இருக்கு டி.”

“யேன்‌ என்னாச்சு? “

“ப்ச்‌ ஒன்னில்லை.’

“என்ன ஒன்னில்லை.விஜய்‌ அண்ணாதான் அங்க இல்லையே.

“இல்லை அங்க போனா எனக்கும்‌ இன்னும்‌ இன்னும்‌ பக்கத்துல இருக்க போல தோன ஆரம்பிச்சிடும்னு பயமா இருக்கு. தேவையில்லாம நா ஆசைய வளர்த்துக்கிட்டு அப்புறம்‌ எனக்குதான்‌ கஷ்டம்‌.”

 

“நீ எதுக்கு அப்படி நெகடிவாவே யோசிக்கிற. எதாவது நல்லதும்‌ நடக்கலாம்‌ல. நாம வேலைக்காக போறோம்‌.தெரிஞ்ச இடம்னா நமக்கு சேப்ட்டி தானே. அதுவும்‌ ரெண்டு பேருமா இருக்கப போறோம்‌. அதில்லாம இன்டெர்வியூ வேறு இல்லன்னான்‌. எப்போ வரணும்னு கேட்டு சொல்றேன்‌ தயாரா இரு.தேவை இல்லாம யோசிக்காத.’

‘தாரு பேபி நாம தங்குறதுக்கு தான்‌

என்னை பண்ணலாம்னு பாரு. தருண்‌ அண்ணாகிட்ட கேட்டுக்கோ.” புன்யா அழைப்பை வதுண்டித்தாள்‌.

 

தாராவுக்கு மனம்‌ மகிழ்வாக இருந்தாலும்‌ ஒரு பக்கம்‌ ஏதோ நெருடலாகவே  இருந்தது. தருண்‌ அவளை அழைத்தவாரே அவளறைக்கு வந்தவன்‌,” என்னாச்சுடா ஓகேயா பேசிட்டியா புன்யாக்கிட்ட? ” எனவும்‌

 

“ஓகே தான்‌. ஆனா எங்க தங்குறது, டேலி வீட்டுக்கு வந்து போறதுன்னா கஷ்டமேண்ணா.”

 

“ஆமால்ல. வீகென்ட்ஸ்னா வீட்டுக்கு வந்துரலாம்‌ இல்ல. ஓகே டா நான் பார்க்கிறேன்‌. கம்பனி பக்கமா தங்க இடம்‌ ஏதும்‌ இருக்கான்னு. புன்யாவும்‌ உன்‌ கூட தானே தங்குவா? “

“ஆமாண்ணா.”

 

“பிரபாகர்‌ இந்த சடர்டேய்‌ வந்துருவான்‌. மன்டே நம்ம ஷோரூம்‌ ஓபன்‌ பண்ண இருக்கோம்டா. இன்னும்‌ ஐந்து நாள்‌ தான்‌ இருக்கு. ஆனா இன்னும்‌ நேம்‌ செலக்ட்‌ பண்ணல. அந்த வேலை மட்டும்‌ தான்‌ பாக்கி. விஜய்கிட்ட கேட்டேன்னா நீ பார்த்து செய்ன்றான்‌.பிரபாவை கேட்டா அவனுக்கும்‌ இதுக்கும்‌ சம்பந்தமே இல்லேங்குறான்‌. இவங்க ரெண்டு பேரும்‌ இரண்டு பக்கமா இருந்துட்டு என்னை படுத்துறானுங்க. மூனுபேருக்கும்‌ பொதுவான பெயராக இருக்கவும்‌ வேணும்‌. ஸ்ரீ குட்டி யோசிச்சு

சொல்லேன்‌.”

 

“அண்ணிகிட்ட கேளேன்‌.” தாரா சொல்லவும்‌,

 

“அப்புறம்‌ விளையாட்டுக்கு சரி அவள்‌ பெயரை வெய்னு சொல்லிட்டான்னா நா முடியாதுன்னு வேற சொல்ல மாட்டேன்‌. வேறு வினையே வேணாம்‌ டா.”

 

“என்னண்ணா இப்பவே இப்படி அலறுற? “

“எல்லாம்‌ காதல்‌ படுத்தும்‌ பாடு…’

‘சொல்லேன்‌ பெயரொன்னு?”

 

ஹ்ம்ம்‌… மூனுபேரோட லெட்டர்‌ சேர்ந்து வைக்கலாம்னா

லெட்டர்‌ மூணும்‌ மேட்ச்‌ ஆகல.. புல்‌ நேம்‌ சொல்லு ‘

விஜய்‌ ஸ்ரீ. என்னுடையது தருண்‌ மட்டும்‌ தான்‌ ,அவனோடதும்‌ ஸ்ரீ பிரபாகர்‌. ‘

 

‘அச்சோண்ணா உனக்கும்‌ அப்பா ஸ்ரீ ய சேர்ந்து வச்சிருக்கலாம்‌. அப்போ ஸ்ரீய வெச்சு ஏதாச்சும்‌ பண்ணிருக்கலாம்‌.’

 

“அதுக்கென்ன எனக்கு தான்‌ ஸ்ரீ குட்டி நீ இருக்க தானே.அப்போ எனக்கும்‌ ஸ்ரீ இருக்குன்னு நினச்சு நேம்‌ ஒன்னு சொல்லு பார்ப்போம்‌.”

 

‘அச்சோண்ணா அப்டில்லாம்‌ வேணாம்‌ தாரா மறுக்க, “ஸ்ரீ குட்டி நல்ல இருக்கும்‌ டா சொல்லு. ” கொஞ்ச நேரம்‌ யோசித்தவள்‌, “ஹ்ம்ம்ம்‌…?’

 

‘ஸ்ரீ த வால்டு ஒப் கார்ஸ் (shri The world of cars) போடலாம்‌. ஓகே வா?”

“சூப்பர்டா. நல்லா இருக்கு.”

 

“ஆனா நா சொன்னதுன்னு சொல்லாதே. ஜஸ்ட்‌ எப்டிருக்குன்னு கேளு.” தாரா கூற

 

“ஓகே நா பார்த்துக்குறேன்‌. நாளைக்கு நான்‌ ப்ரபாக்கு வீடொன்னு பார்க்க போறேன்‌.

அதோட உங்களுக்கும்‌ பார்க்கலாம்‌…

 

தருண்‌ ஷோரூம்‌ பெயரை விஜய்க்கும்‌ பிரபாவுக்கும்‌ மெசேஜ்‌ அனுப்ப, இருவருமே சுப்பர்‌ என அனுப்பி இருந்தனர்‌.விஜய்‌ மட்டும்‌, “என்னடா உன்‌ தங்கச்சி பெயரை வைத்தது போல இருக்கு ஷோருமை அவக்கே சீதனமா கொடுத்துருவியோ. ” எனவும்‌

 

“டேய்‌ பெயரை சொன்னதே அவள்‌ தான்‌. மூனுபேருக்கும்‌ பொதுவா இருக்கட்டும்னு. அதோட அவ வச்சதா உங்ககிட்ட சொல்லவும்‌ வேணான்னா. பாரு கரெக்டா தான்‌

சொல்லிருக்கா இப்படி நினைப்பன்னு…”

 

“ச்சே ச்சே… லூசாடா… சும்மா தான்‌ சொன்னேன்‌. ரொம்ப மாட்சிங்கா இருக்கு இன்னைக்கே போர்டு செய்ய குடுத்துரு. டிசைன்‌ பார்த்து கான்போர்ம்‌ பண்ணிக்கோ. பிரபா பேசினானான?’ என அவர்கள்‌ பேச்சு கொஞ்சநேரம்‌ தொடர்ந்தது.

 

அழைப்பை துண்டித்தவன்‌ மனதில்‌,’ஸ்ரீ தேங்க்ஸ்‌ டி. எப்படிடா இந்த பெயரை இவன்களுக்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்‌. பார்த்தால்‌ நீயே சொல்லிட்ட… என்னுடைய ஒவ்வரு செயல்லலையும்‌ எப்படியாச்சும்‌ கலந்து கொள்ற.’

 

இப்போ அவன்‌ கம்பெனியிலேயே அவன்‌ வேலைக்கு அமர்த்தியவனுக்கு கிழேயே வேலை செய்ய ப்போகிறாள்‌.

 

பிரபாகருக்கு பார்த்த வீடு ஷோரூமிட்கும்‌, கம்பனிக்குக்கும்‌ இடையே அமைந்த வீடு. இரண்டு தட்டுகளுடன்‌ அளவாக இரண்டு அறைகள்‌ கொண்ட வீடாக முன்னே பார்க்கிங்‌, சிறிய தோட்டத்துடன்‌ அமைய பிரபாகர்‌ அதனை உடனே விலைக்கு வாங்கினான்‌.மேலே மாடியானது உள்ளாலும்‌ செல்ல படிகள்‌ இருந்தாலும்‌, வெளியிலேயே படிகள்‌ போடப்பட்டு வாடகைக்கு விடும்‌ வகையில்‌ இருக்க, தருண்‌ தாராவுக்கு வீடு பார்ப்பது தெரிந்து இங்கயே தங்கிக்கொள்ளுமாறு சொல்லி ஆனால்‌ வாடகை வாங்க மாட்டேன்‌ என உறுதியாக கூறி விட்டான்.அது அவர்களுக்கு சேபான இடமாக இருக்கும்‌ என எண்ணியவன்‌, தந்தையிடம்‌ பேசிவிட்டு அவர்களுக்கும்‌ அதிலேயே தங்க தேவயான சாமான்களை வாங்கி ஒழுங்கு படுத்தி வைதான்‌…

 

Leave a Reply

error: Content is protected !!