இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 19
இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 19
Epi19
இதோ இன்று தருண் மற்றும் நிவிதாவின் நிட்சயம். ராஜ் வீட்டையே அமர்களப்படுத்தி இருந்தார். ஒரே பெண் வாரிசு குடும்பத்தில். தங்கை மகள் என்ற பேதம் இன்றி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். வீடே பூக்கோலம் இட்டு அழகாக ஜொலித்துக்கொண்டு இருந்தது.
தெரிந்த பெண், தெரிந்த குடும்பம் என்று இருந்தாலும் தருணின் பெற்றோர் மற்றும் குடும்ப பெரியோர்கள் என பத்து பேர் வந்து மரியாதை நிமித்தம் கலந்து பேசி நிச்சய திகதி குறித்துக்கொண்டு சென்றிருந்தனர்.
விஜய்க்கும் மிக்க மகிழ்வே. அருணாவோடு கதைக்கும் நேரம்,’ம்மா நான் வரவில்லை என்று கவலைப்படவேண்டாம். கல்யாணதுக்கு கண்டிப்பா நான் இருப்பேன். அதோட நீங்க விருப்பப்டர ஒரு சர்ப்ரைஸ் வேறு உங்களுக்கு இருக்கு. சோ ஹாப்பியா இருங்க. அத்தை எதுவும் பேசினாங்கன்னா மனம் நோக வேண்டாம்.’ என்றிருந்தான்.
அதனை தாராவுடன் பகிர்ந்துக் கொண்டான், அதோடுஅன்றைய தினத்துக்கான அவளுக்கான உடையை அவன் ஆர்டர் செய்திருப்பதாகவும், அவளுக்கு திருப்தி இருந்தால் அணியுமாறும் கூறியிருந்தான். நிவி இளஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி இருந்தாள்.அழகு தேவதை என தருண் கண்களில் நிரம்பி இருந்தாள். தாராவின் வீட்டில் தருண் வீட்டினருக்கு பகல் விருந்துடன் கூடிய நிச்சய விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க பதினொரு மணியளவில் தருண் வீட்டினர் நிவியில்லம் அடைந்தனர். அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல குமாரும் மருமகளுக்கு இப்போதே சீரெல்லாம் கொண்டு வந்திருந்தார். தருணிடம் கல்யாணதுக்கு நீ வாங்க வேண்டிய தெல்லாம் வாங்கிக்கொடு. இப்போ நம்மளை செய்ய விடு. எனவும் அவனும் ஓகே என்று விட்டான். தருணுக்கு துணையாக பிரபாவும் அவனுடன் வந்திருந்தான். தினமும் வந்த வீடுதான் என்றாலும் இன்று அவன் வந்தது
மாப்பிள்ளையாக அல்லவா. ஒருவித படபடப்பு. அருணாவை பார்க்கவும் கவலையாக இருந்தது. விஜய் இன்று இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு கலகலப்பாக இருந்திருக்கும். அதனை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். சபையில் குமாரும்,
‘ஆண் பிள்ளையாக விஜய் அவனது பலவழக்கங்கள் கொண்டே உங்க வீட்டு பெண்ணும் எப்படி இருப்பாள் என்பதை நாம்
அறிந்தக்கொண்டோம்.’ என்றிருந்தார். அதில் ராஜ் அகமகிழ்ந்து போனார். நிவியின் அன்னை மாதவியுடன் சகஜமாக உரையாடி குடும்பங்கள் ஒருவரோடு ஒருவர் நல்லமுறையில்
அறிமுகமாகிக்கொண்டனர்.
முதல் நாள் இரவு விஜய் பேசும் போது
அவன் அனுப்பிய உடை சற்று பெரிது எனவும் செய்வதற்கு நேரம் போதவில்லை எனவும் கூறியிருக்க. “ஸ்ரீம்மா அதுக்கு பரவால்லடா. அப்புறமா போட்டுக்கோ.தட்ஸ் ஓகே” என்றிருந்தான். ஆனால் இன்று அவன் அனுப்பியிருந்த உடை அவள் உடலுக்கு பந்தமாக பொருந்தி இருக்க அவளுக் கென்றே அளவெடுத்து தைத்தது போல இருந்தது. மஞ்சள் நிற லோங் பிராக் அடர் நீல நிற தடித்த பட்டு பார்டர் அதே வண்ண ஷால் ஒரு பக்கதோளில் பின் செய்து விட்டிருந்தாள். இருவருக்கும் பிடித்த நிறத்தில் ஆடை தெரிவு செய்திருந்தான். காதில் பெரிய ஜிம்மிக்கி ரெண்டு. கைகள் நிறைய த்ரெட் பேங்கல்ஸ். அவள் கூந்தலோ
என்றும் போல உயர்த்தி கட்டிய ஒரு போனி டேல். பார்க்க அம்சமாக இருந்தாள். அவளுடன் புன்யாவும் கைகோர்த்துக் கொண்டு வீட்டின் உள்ளே வர அவள் புஷியான கூந்தலை பார்த்த பிரபா குருவிக்கூடு என செய்கையில் செய்து காட்ட அவனை முறைத்தவாரே உள்ளே சென்றாள்…
தாரா வாசலில் இறங்கியது முதல் அவளை பார்த்திருந்தான் விஜய். அவனது லப்டோப்பில் வீட்டின் கமெராக்கள் பொருத்தப்பட்டிருக்க,
‘அப்போ நைட் பொய்யா சொன்ன… ரொம்ப அழகா இருக்கடி.’ என அவளை மனதில் கொஞ்சியவன், தனித்து அமர்ந்து அவன் வீட்டு விஷேஷத்தை பார்த்திருந்தான். ௮வளை கண்ட அருணாவோ அவளருகே வந்து அவளை கையோடு அழைத்து உச்சி முகர்த்தவர்,
” நீ அன்னக்கி பேசிட்டு போனதுக்கப்புறம் விஜய் என்கூட பேசினான்.” என அவர் மகிழ்வை பகிர்ந்துக் கொண்டவர் அவளை அனைவருடனும் அமர வைத்தார்.
“என்னடி அத்தை இப்போவே இப்படி தாங்குறாங்க. கொடுத்து வச்ச மகராசி ஹ்ம்ம் . கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டாளுங்களை கைக்குள்ள போட்டுக்கிட்ட…” என அவளை கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள் புன்யா. தாரா பாட்டியுடன் அருகே அமர்ந்து நலம் விசாரித்தவள், நிவிக்கும் வாழ்த்துக்களை கூறினாள். மாலதி பட்டு நகை என நிவிக்கு கொடுக்க அதனை மாற்றிக்கொண்டு வர அவளது அன்னை நண்பிகளுடன் சென்றாள்.அவ்விடைவேளையில் விஜய்க்கு அவ்வப்போது குறுந்தகவல் அனுப்பிக்கொண்டு இருந்தாள். அவள் இயல்பாக இருக்க மாட்டாள் என்று விஜய் அவன் பார்ப்பதாக எதுவும் கூறவில்லை. தாரா அருணா, பாட்டி தருண் என அனைவருடனும் இருந்து புன்யாவிடம் கூறி படமெடுத்து அவனுக்கு அனுப்பி விட்டாள். விஜயும் நொடிக்கொரு முறை ‘மிஸ் யூ பாட்லி…’ என்று அனுப்பிய வண்ணம் இருந்தான். இவ்வாறு இனிதாக இனிமையாக தருண் மற்றும் நிவியின் நிச்சயதார்த்தம் நிறைவடைந்தது. திருமணம் விஜய் வரும் நாளில் இருந்து ஒரு மாதத்தில் நடைப்பெறும் வகையில் நடத்த முடுவு
பண்ணலாம், அவனே அனைத்தையும் முன்னின்று செய்ய வேண்டும் என்று குமார் கேட்டுக்கொள்ள விஜய் வீட்டினருக்குமே ரொம்ப மகிழ்ச்சி…
அனைவரும் வீட்டுக்கு வர மாலை ஆகிவிட்டது. நாளை ஞாயிரு என்பதால் புன்யா அவளது ஊருக்கு சென்றிருக்க தாரா அவர்கள் வீடு வந்திருந்தாள். வந்தவள் குளித்து உடை மாற்றியவள் அன்னை தந்தை மற்றும் தருண் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து உறையாடிக் கொண்டிருந்தனர் அன்றைய நிகழ்வு பற்றி.
“மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது மாதவி.நம்ம ஸ்ரீ குட்டிக்கும் இப்படியே நல்ல இடம் அமைந்தால் மனசு ரெண்டு பேர் வாழ்க்கையை நினைத்து நிறைந்து விடும்.”
என குமார் பேசிக்கொண்டிருக்க மற்ற மூவரும் அதற்கு ஏற்ப பதில் கூறிக்கொண்டு இருந்தனர். இரவு படுக்கைக்கு வந்தவள் விஜய்க்கு மெசேஜ் அனுப்பவும் அழைத்தவன்,
“ஹேய் என்ன பண்ற டையடா? ” எனவும்
“ஹ்ம்ம் இருந்தது ஆனா இப்போ இல்லை.” என்றாள்.
“ஏன் நேற்று பொய் சொன்ன ட்ரெஸ் பெருசுன்னு.”
” அது சும்மா சர்ப்ரைஸ் பண்ணலாம்னு. ” என்றாள்.
“ஹ்ம்ம் உண்மையா நீ வண்டில இருந்து இறங்கும் போதே பார்த்துட்டேன். ஹப்பியோ ஹாப்பி…”
“அப்போ எப்டி பார்த்தீங்க? “எனவும்,
“அது நான் வீட்ல கமெராஸ் என் லேப்புக்கு பிக்ஸ் பண்ணிருந்தேனா அது என் ஸ்ரீ குட்டிட ஒவ்வாரு மொவ்மெண்டையும் பார்த்துட்டு
இருந்தேன். அதை சொன்னா நீ டென்சன் ஆகிருவன்னு தான் சொல்லல்ல. ஏன் மாடிக்கு நிவி கூட போகல?” என்று கேட்க.
“எல்லாமே பார்த்துட்டா இருந்திங்க?”
எனவும். “ஆமாடா,வீட்ல மெயின் பிளேஸ் எல்லாமும் தெரியும் எனக்கு.சரி ஏன் போகல சொல்லு. “
“அது உங்க ரூமும் அங்க தான் இருக்குன்னு ஆன்ட்டி சொன்னாங்க. அப்றம் நா போனேன்னா அதை பார்க்கணும்னு தோணும். அதுக்கப்புறம் உங்களை பார்க்கணும்னு தோணும். அதான் போகல.” என்றாள்.அமைதியான குரலில்.
“உண்மையா என் ஞாபகம் வந்ததா என் ஞாபகம் மட்டும் தானா? ரெண்டு பேருமா சேர்ந்து வரல்லயா? அங்க’ நம்ம ரூம்ல இருக்கேன்னு.’ நீ எனக்கு கால் பண்ணுவன்னு எதிர் பார்த்தேன்.” என்றான்.
“அச்சோ ஸ்ரீப்பா அங்க வீட்ல இருந்து நான் எப்படி உங்க கூட பேச முடியும். ஆன்ட்டி பேசிட்டு இருந்ததுக்கே புன்யா என்னை ஒரு வழிப்பண்ணணிட்டாள். அதோட நானும் அங்க உங்க அறைக்கு போயிருந்தேன், அவ்வளவு தான். உங்களை இன்னக்கி பார்க்கணும் போலயே இருக்கு.மனசு ரொம்ப தேடிச்சு உங்களை. அதான் அவ்வளவு போட்டோ அனுப்பினேன் நீங்கதான் உங்களது அனுப்பவே இல்லை. அதும் கெமரால வேறு பார்த்தீங்க. நான்தான் இன்னும் பார்க்கவே இல்லை. ரொம்ப நாளாச்சு உங்கள பார்த்து.” என்றாள்.
“ஹேய் என்னை ரொம்ப மிஸ் பன்றியா?’ ஸ்ரீ…”
“இதென்ன கேள்வி மிஸ் பண்ணாமத்தான் இப்படி பேசுவாங்களா? நீங்க ரொம்ப மோசம். நீங்க மட்டும் நல்லா என்னைய பார்க்கலாம். நான் மட்டும் பார்க்க
கூடாதுன்னா… ப்ச்…”
“ஸ்ரீம்மா நான் சர்ப்ரைஸா நேர்ல வரும்
போதும் என்னை நீ பார்க்கும் பார்வை அப்படியே என் மனதுல பதிஞ்சு போகணும் டா… இப்ப நீ என்னை பார்த்துட்டன்னா அந்தளவுக்கு இருக்காது.” என்றான்.
“நான் உங்களை பார்த்தே இல்லாதது போல தான் நீங்க பேசுறீங்க. ரொம்ப மோசம்.”
“என்னடி ரொம்ப மோசம் சொல்ற நா ஒண்ணுமே பண்ணலை… ” எனவும்,
“அதான் மோசம் சொல்றேன்.’ என கோபமாக பேசியவள்.’நான் தூங்கப் போறேன் என்றாள்.’
“உண்மையா தூக்கமா?”
” ஆமா ” என்றாள்.
“இவ்வளவு பேசுவியா நீ? அமைதியான பொண்ணு பேசினாலே சத்தமே வராதுன்னு இல்ல நான் நினைச்சிருந்தேன். பார்த்தால் இப்படி பேசுற…”
“அப்போ அமைதியா இருந்ததுனாலத் தான் பிடிச்சதா? நான் பேசுறதுனால இப்போ பிடிக்கலையா? அப்பிடின்னா நான் இதுக்கப்றம் பேசல.” என்றவள் அமைதியாகிவிட்டாள்.
” ஹேய் ஸ்ரீ சும்மா சொன்னேன்டா பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. என்கிட்டே மட்டுமே நீ இப்படி பேசணும்னு ரொம்ப ரொம்ப பேசணும்னு.’
‘கோபமா? பேசேன் ஸ்ரீ… உன்கிட்ட அதுமட்டுமில்ல பிடிச்சிருக்கு… இன்னும் நிறையயா, சொல்லட்டுமா?’ என்றவன்
அவள் அமைதியாக இருப்பதைக்கொண்டு,
‘என்கிட்ட மட்டும் பேசுற அந்த இரண்டு ஆரஞ்சு சுளை போல இருக்க இரண்டு இதமழும் பிரிஞ்சு பேசுறப்ப அந்த சுளை இரண்டையும் சாப்பிடனும்னு தோணுற அளவுக்கு பிடிச்சிருக்கு. அதுக்கு ஏற்ப கண்ணு ரெண்டும் ரவுண்டு விட வெக்கத்துல கன்னம் ரெண்டும் ஆப்பிள் போல சிவக்க, அதை கடிச்சி சாப்பிடணும்ன்ற அளவுக்கு பிடிச்சிருக்கு. அந்த நீண்ட கூர் மூக்கு இருக்கே, நீ சிரிக்கிறப்ப அதுக்கு நிகரா மின்னுற முக்குத்தி இருக்கே, அதை கிஸ் பண்ணணும்ர அளவுக்கு பிடிச்சிருக்கு. அதோட இதழ் உரசி ரகசியம் பேச கூப்பிடும் செவிகள் இரண்டும், மூங்கில் தண்டு போல நகை ஒண்ணுமே இல்லாம என் இதழ் மாலைக்காகவே தவம் கிடக்கும் அந்த கழுத்து… அப்றம் அப்றம்…” அதற்கு மேல் அவன் பேசக்கேட்க நாணியவள், முகமோ வெட்கத்தில் சிவந்து வார்த்தைகளுக்கு வலிக்கும் எனும் வகையில் வெளி வந்தன வார்த்தைகள்
“ஸ்ரீப்பா…போதும்… முடில என்னால…” .
“ஏன் பிடிக்கலையா? என விஜய் இடையே கேட்க,
” எல்லாம் பிடிச்சிருக்கு… மொத்தமா என் ஸ்ரீய ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றாள் தாரா .
“ஸ்ரீம்மா மிஸ் யூ லோட். எப்போடா உன்னை பார்ப்போம்னு இருக்கு.” என விஜய் மீண்டு கூறக் கேட்க,
“நானும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் ஸ்ரீப்பா…”
இவ்வாறு தொலை பேசியில் இவர்கள் காதல் வளர நாட்களோ ஆமை வேகத்தில் நகர்ந்தது அவர்களுக்கு என்றால்,
தருண் மற்றும் நிவி அவர்களது காதல் கல்யாண நாளை நோக்கி முயல் வேகத்தில் ஓடியது …