இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 20

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 20

Epi20

பிரபா மற்றும்‌ புன்யா ஒருவரை ஒருவர்‌ நேர்கொண்டு பார்க்கும்‌ சந்தர்ப்பங்கள்‌

யுத்தக்களம்‌ என மாறி நடுவே தாரா அவளை சமாளிக்கவென அவர்களின் ஓய்வு நேரம் அவ்வாறு கழிய,மற்றைய அனைத்து விடயங்களும்‌ சீராக சென்றுக்கொண்டு இருக்க விஜய்‌ தன்‌ நாடு திரும்ப இன்னும்‌ மூன்று நாட்கள்‌ எனும்‌ நிலை…

 

இருண்ட மேகங்கள்‌ நீல வானை மூடியிருக்க கதிரவனோ. அம்முகில்களுக்குள்ளே குளிருக்காக ஒளிந்திருந்தான்‌. காலை நேரம்‌ இருள்‌ மூழ்கி சோர்ந்து இருக்க, அதிகாலை வரை பொழிந்த அடை மழை தூறலாக நிலத்தினை தொட்டுக்கொண்டு இருந்த வேளை எழுந்த தாரா நேரத்தினை பார்க்க மணி ஏழு.

 

“ஆச்சோ டைம்‌ ஆச்சு.’புன்யா எந்திரி… இன்னக்கி கொஞ்சம்‌ ஏர்லியா

போகலாம்னு இருந்தேன்‌.”

“எதுக்குடி எழுப்பி விட்ட.எப்போவாச்சும்‌ தான்‌ இப்படி கிளைமேட்‌ இருக்கும்‌ கொஞ்சம்‌ தூங்க விடேன்‌.

” ஹ்ம்ம்‌ அப்போ அபிசிக்கு யாரு போவா? மாதக்கடைசில்ல. அதுனால எனக்கு நிறைய ஒர்க்‌ இருக்குப்பா.”  என்றவாறு அவள்‌ கிளம்பச்சென்றாள்‌.

 

அவள்‌ கிளம்பி வர புன்யாவும்‌ வாசலில்‌ இருந்தவாரே, “பேபி என்‌ ஹேர்‌ நல்லா இல்லையா?”

 

“என்ன திடீர்னு இப்படி கேக்குற? ‘ எனவும்‌, ‘இல்ல கொஞ்ச நாளாகவே அப்படி தோணுது.இந்த ஹேர்‌ எனக்கு நல்லா இல்லை போல.நான்‌ இன்னக்கி ஈவ்னிங்‌ போய்‌ ஹேர்‌ ஸ்ரெட்‌ பண்ணலாம்னு இருக்கேன்‌”

 

“புன்யா எனக்குன்னா உன்‌ கூந்தல்‌ தான் பிடிச்சிருக்கு.ஆனா உன்‌ இஷ்டம்‌. உன் விருப்பப்படி பண்ணு.”என்றாள்‌.

 

இருவரும்‌ கிளம்பி வெளி வர,

“‘அதில்லை பேபி என்ன உன்‌ முகம்‌ இன்னக்கி கொஞ்சம்‌ கூடுதலாகவே ஜொலிக்குது.”எனவும்‌,

 

“அது… நாளன்னைக்கி ஸ்ரீ வராங்களாம்‌.”

 

“ஹே ஜாலி இல்ல…”

 

ஆமாம் என்றாள்‌.

“ஓகே ஓகே ஹாப்பியா இரு.” என்றவள்‌

வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும்‌ கீழிறங்க ‘

“அச்சோ புன்யா ஆபிஸ்‌ டாக்குமெண்ட்‌ இருக்க பென் எடுக்க மறந்துட்டேன்‌ இரு வரேன்‌.” என மேலே சென்றாள்‌.அவள்‌ மேலே சென்ற அடுத்த நொடி புன்யாவை ஒரு பக்கமாக ஒரு கரம்‌ இழுத்து சுவரோடு பிடித்து வைக்க,திடீர்‌ தாக்குதலில்‌ முழித்தவள்‌ அது யாரென பார்க்க பிரபாகர்‌.

 “ஹேய்‌!…” என அவள்‌ ஏதோ கூற வர,

“ஷ்…” என வாயில்‌ விரல் வைத்தவன்‌,

பார்லர் போனோமா முகத்துக்கு மேக்கப்‌ பண்ணோமா திரும்பி வந்தோமான்னு

இருக்கணும்‌. அதை விட்டுட்டு இந்த கூந்தல்ல… ‘ என்றவன்‌ அவள்‌ காதோரம்‌ சுருண்ட கூந்தலை இன்னும்‌ கையால்‌ சுருட்டி விட்டவன்‌, ‘கையை வச்சே அப்றம்‌ நான்‌ என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.புரிஞ்சுதா?” என்றவன்‌

 

அவளுக்கு அணையாக வைத்த கையை விளங்கியவன்‌ “போ.” என்றான்‌.

 

“போலாம்‌ புன்யா, வண்டி வர கொஞ்சம்‌

லேட்டாகுமாம்‌. நாம ஆட்டோல போகலாம்‌.” என்றவாறு வந்த தாராவை பார்த்தவள்‌ அவனை பார்த்துவிட்டு முன்னே நடந்தாள்‌.

 

“ஹாய்‌ குட்‌ மானிங்‌ மா என்ன இன்னக்கி வண்டி வரல்லயா? ” எனவும்‌,

“‘மோனிங்‌… இல்லண்ணா, நாம இன்னக்கி கொஞ்சம்‌ நேரத்தோடு போக வேணும்‌ அதான்‌.” என்றாள்‌.

 

“சரி இருங்க என்கூட போகலாம்‌. “என்றவன்‌ வண்டில ஏருங்க இதோ வரேன்‌.” என்றவன்‌ வண்டியை அன்லோக்‌ செய்து விட்டு சென்றவன்‌ வீட்டை பூட்டிவிட்டு வந்து வண்டியை எடுத்தான்‌.

 

அவர்கள்‌ கம்பனி வரும்‌ வரை எதுவும்‌ பேசிக்கொள்ள வில்லை. தேங்ஸ்ணா என்று வண்டி விட்டு இறங்கியவள்‌ முன்னே செல்ல பின்னிறங்கியவள்‌ பிரபாவை பார்க்க அவனோ அவள்‌ ஒருத்தி வண்டியில்‌ வரவே இல்லை என்பது போன்ற பாவனையில்‌ இருந்தான்‌.’கட்பனையோ!’ என நினைத்தவள்‌ திரும்பி நடக்க. “ஓய்! கேகே.”என்றான்‌ திடீரென அவன்‌ அழைக்க திரும்பியவள்‌ “சொன்னதுbஞாபகம்‌ இருக்குல்ல. ஈவினிங்‌ வந்ததும்‌ செக்‌பண்ணுவேன்‌. ஓகே.குருவிக்கூண்டு பேர்‌ பெருசா இருக்குல்ல அதான்‌ ‘கேகே’ நல்லா இருக்குல்ல. இனிஅப்டிதான்‌ கூப்பிடுவேன்‌, வரேன்‌. ” என்றவன்‌ சென்ற பிறகும்‌ அவ்விடமே நின்றிருந்தாள்‌. தாரா லிப்ட்‌ அருகே சென்று திரும்பி பார்க்க புன்யாவை காணாது மீண்டும்‌ வெளியே வந்து பார்க்க அதே இடத்தில்‌ நின்றிருந்தாள்‌.

“ஹேய்‌ புன்யா என்னாச்சு? “என அவள்‌ அருகே வந்தவள் கேட்க.

” ஒன்னில்ல.கால் ஒன்னு வந்தது.வா

போகலாம்‌ என உளேன்‌ சென்றனர்‌.”

 

கம்பனி உளேன்‌ சென்றவர்களுக்கு மாத இறுதி என்பதால்‌ வழமைபோலவே வேலைகள்‌ தலைக்கு மேல்‌ இருக்க

மதிய இடை வெளியிலேயே சந்தித்தித்துக் கொண்டனர்‌..

 

“புன்யா ஈவினிங்‌ நான்‌ வர லேட்டாகும்‌… எனக்காக வெய்ட்‌ பண்ணாம போயிரு. பாலர் போகணும்னு சொன்னியே. நா நைட்க்கு பிரபா அண்ணாவை சாப்பிட எதுவும்‌ வாங்கிட்டு வரச் சொல்றேன்‌. நீ ஒன்னும்‌ பண்ண வேணாம்‌. நான்‌ எப்படியும்‌ வர ஏழு மணியாகலாம்‌.நான்‌ ஆபிஸ்‌ வண்டிலேயே வந்துருவேன்‌.” என்றாள்‌.

இருவரும்‌ பேசியவாறு சாப்பிட்டுக் கொண்டு இருக்க தாராவை ராஜ்‌ அழைப்பதாக கூறவும்‌, இதோ வரேன்‌ என்றவள்‌ புண்யாவிடம்‌ சொல்லிக்கொண்டு கிளம்பினாள்‌. ராஜை சந்திக்க சென்றவள்‌ அவர்‌ தந்த வேலைகளை எடுத்துக்கொண்டு கிளம்பவும்‌, தாராவுடன்‌ மாலை வேலை முடியும்‌ வரை அவளுடன்‌ இன்னும்‌ இருவர்‌ வேலை பார்த்தனர்‌. அதில்‌ ஒருவன்‌ வினோத்‌. அணைத்து வேலைகளையும்‌ முடித்து சரிபார்த்து விட்டு ராஜுக்கும்‌, விஜய்க்கும்‌ மெயில்‌ அனுப்பிவிட்டு அவள்‌

செல்வதற்கு தயாராகிக்கொண்டு இருக்க, அவள்‌ கேபினுக்கு வந்த வினோத்‌,’ஹாய்‌ ‘ என்றவாறு அவள்‌ அருகே வர என்ன என்பது போல பார்த்தவள்‌ கதிரையை விட்டு எழ,

 

“உங்க கூட கொஞ்சம்‌ பேசணுமே.ரொம்ப

நாளா ட்ரை பண்றேன்‌ உங்ககிட்ட பேச சந்தர்ப்பமே கிடைக்கலங்க.உங்களை பார்த்ததும்‌ பிச்சிருச்சுங்க. அவனை நிமிர்ந்து பார்க்க, ‘அச்சோ அப்படி பார்க்காதீங்க இப்போ என்னால ஒன்னும்‌ பண்ண முடியாதே. சுத்திவர

கேமரா இருக்கே.”

 

இவன்‌ என்ன சொல்கிறான்‌ என புரியாது

முழித்துக்கொண்டு தாரா இருக்க, அவள் மனமோ ‘சீக்கிரம்‌ கிளம்பு ‘என எச்சரிக்கை விட அவன்‌விலகினாலேயே அவள்‌ கதவை திறக்க முடியும்‌ எனும்‌ நிலை.

 

“பயப்புடாதீங்க. நான்‌ இப்போ போயிருவேன்‌. ஹ்ம்ம்‌ பிடிச்சிருக்குன்னா லவ்‌ எல்லாம்‌ இல்லீங்க. ஒரே ஒரு தரம்‌ உங்களை போதும்ங்க.ஒன்னும்‌ அவசரம்‌ இல்லை. நாளைக்கு சொன்னாலே போதும்ங்க. மோனிங்‌ நீங்க வரும்‌ வரை கீழ லிப்ட்‌ கிட்ட வெய்ட்‌ பண்றேன்‌.” என்றவன்‌ அவ்வளவு நேரம்‌ அவள்‌ முன்னே நிமிர்ந்து நின்றிருந்தவன்‌ ஏதோ ஆபிஸ்‌ விடயம்‌

பேசும்‌ தோரணையிலே பேசினாலும்‌ அவன்‌ கண்களுக்கு அவளை விழுங்குவது போல பார்க்க அவன்‌ முகம்‌ கேமராவுக்கு மறைந்திருக்க அவளை அவ்வாறு பார்த்துப்‌ பருகினான்‌. பருகியவன்‌, சென்றும்‌ விட்டான்‌.

 

அப்படியே அவளது இருக்கையில்‌ அமர்ந்தவள்‌ உடல்‌ நடுங்க, என்ன கேட்குறான்‌ இவன்‌. என்ன பார்வை அது உடலில்‌ கூசியது. ‘ஒருநாளைக்கு அவன்‌ கூட.. ச்சே ச்சே…’

கண்கள்‌ நீர்‌ நிறைய.எவ்வளவு சாமர்த்தியமாக காமெராக்களில்‌ விளங்காதவாறு, உடல்‌ மொழியில்‌ வேறுபாடு காட்டாது, இவள்‌ கூறினாள்‌ யாரும்‌ நம்பாதவாறு பேசிவிட்டு சென்றான்‌. ஆபிஸிலும்‌ அவ்வளவு நல்லவன்‌. அவள்‌ அறை விட்டே வெளிச் செல்ல பயந்தவள்‌, பியன்‌ வந்து கேட்கவும்‌ “அண்ணா வருவாங்க.” என்றவள்‌,

 

பிரபாவுக்கு அழைத்தாள்‌.இதுவரை அவனுக்கு அழைப்புகள்‌ மேட்கொண்டது இல்லை. பிரபாவும்‌ யோசனையாகவே அழைப்பை எடுக்க “அண்ணா என்னை பிக்கப்‌ பண்ண வர முடியுமா? ” என்றாள்‌.

“எங்க இருக்கம்மா? என்னாச்சு ‘ எனவும்‌, அழுகையை அடக்கியவள்‌,

 “ஆபிஸ்ல கொஞ்சம்‌ வேலை ஜாஸ்தி

இன்னக்கி, புன்யாவையும்‌ அனுப்பிட்டேன்‌. அதான்‌ உங்களை வரமுடியுமானு… “

 

“ஓகே மா நா வரேன்‌.ஆனா ஹாப்‌ அன்‌ அவர்‌ ஆகுமே”.

“பரவல்லண்ணா. நீங்க பார்க்கிங்கு வந்ததும்‌ கால்  பண்ணுங்க அது வரை நான்‌ மேலயே இருக்கேன்‌.”

 

“ஆ யூ ஓகே தாரா? “

 

“ஆமாண்ணா. கீழ வந்தா தனியா நிக்கணும்‌. அதான்‌ வேறொன்னும்‌ இல்லை.”

 

“சரிம்மா நா வந்து பேசுறேன்‌.” என்றவன்‌ உடனே கிளம்பிவிட்டான்‌. அவன்‌ வரும்‌ வரை கேபினை விட்டு வெளி வராதவள்‌, அவன்‌ கால் செய்யவும்‌ படி வழியே ஓடி வந்தவள்‌ வண்டியில்‌ ஏறிக்கொண்டாள்‌. தவறியேனும்‌ இவள்‌ வரும்‌ வரை பார்க்கிங்கில்‌ அல்லது லிப்டில்‌ வினோத் இருந்து விட்டாள்‌, என்று மனதில்‌ சந்தேகம்‌ கொண்டவள்‌ இரண்டையும்‌ தவிர்த்தாள்‌.

தாரா பதட்டமாக இருப்பதை உணர்ந்தவன்‌ ஒன்றும்‌ சொல்லாது வண்டியை செலுத்தியவன்‌ இடையில்‌ அவர்களுக்கு இரவு உணவையும்‌ வாங்கிக்கொண்டு வீடுவந்தனர்‌.

 

“சாரிண்ணா.உங்களுக்கு வேலைகள்‌ ஏதும்‌ இருந்ததோ என்னவோ நான்‌ கூப்பிட்டதும்‌ வந்துடீங்க.”

 

“அண்ணா என்று உரிமைல தானே பேசின அப்றம்‌ எதுக்கு சாரி. போ போய்‌ பிரெஷ்‌ ஆகிட்டு சாப்பிடு.” என்றான்‌.

‘சரியென்றவள்‌ படியேறி மேலே செல்ல இவனும்‌.உள்ளே சென்றான்‌. வீட்டினுள்ளே நுழைந்த தாராவோ வாசலில்‌ அமர்ந்திருந் புன்யாவையும்‌ கண்டும்‌ காணாதவளாக அவளறைக்கு

செல்ல,’என்னாச்சு இவளுக்கு எப்பயுமே எவ்வளவு வேலைன்னாலும்‌ பிரெஷா தான்‌ இருப்பா. இன்னக்கி என்ன நம்மளுக்கு தான்‌ பேய்‌ அடிச்சிருச்சின்னு உட்கார்ந்து இருக்கேன்‌ இவளுக்குமா…’

இவள்‌ இப்படி அமர்ந்து புலம்பிக்கொண்டு இருக்க,

“தாரா சாப்பாடை எடுக்காமையே போய்ட்ட. எடுத்துக்கரியாம்மா?” எனவும்‌,

 

“இதோண்ணா’ என்றவள்‌,’ புன்யா கொஞ்சம்‌.அதை எடுத்துட்டு வந்துரு நான்‌ குளிக்க டிரஸ்‌.மாத்திட்டேன்‌.” என்றாள்‌.

 

‘அச்சோ நானா?’  என்றவள்‌ படி வழியே எட்டிப்பார்க்க பிரபா சாப்பாட்டை மேசை மீது வைத்துவிட்டு செல்வது தெரிய ‘சத்தமில்லாம எடுத்துட்டு வந்துருவோம்‌.’ என படி வழியே  இறங்கி கையில்‌ பையை எடுத்துக்கொண்டு திரும்ப, அவள்‌ முன்னே நின்றிருந்தான்‌ அவன்‌..

 

“இதென்ன தலைல இவ்வளவு பெரிய பொட்டணம்‌ கட்டிருக்க? ” எனவும்‌,

“அது அது வந்து …” என்றவள்‌ அவன்‌

காலையில்‌ தன்னிடம்‌ நடந்துகொண்டது கனவா நனவா என்பதை உறுதி படுத்திக்கொள்ள

 

“ஹேர்‌ ஸ்ட்ராயிட்‌ பண்ணினதால குளிச்சிருக்கேன்‌.” என்றாள்‌… அவ்வளவு தான்‌. அவள்‌ சுதாகரிக்கும்‌ முன்னமே பட்டென அவள்‌ தலையில்‌ கூந்தலை சுற்றியிருந்த துணியை அகற்றியிருந்தான்‌.அவள்‌ கூந்தல்‌ சுருள்‌ சுருளாக வந்து விழ ஒரிரண்டு அவள்‌ கன்னம்‌தொட அவளை அப்படியே சுவரோடு சாய்த்தவன்அதனை தன்‌ விரல்களால்‌ ஒதுக்கியவன்‌ “எதுக்குடி போய்‌ சொன்ன? ” எனவும்‌,

 

” அது காலைல கனவா நனவான்னு குழம்பி அப்றம்,கே கே ன்னு எதுவோ “என அவள்‌ புலம்ப,

 

“இப்போ நனவுன்னு புரிஞ்சுதா?என்றான்‌.

 

“ஹ்ம்ம்‌ என்றாள்‌…”

 

“எனக்கு இப்படி இருந்தால்‌ தான்‌ பிடிச்சிருக்குடி. இது இனி இப்படியே தான்‌ இருக்கணும்‌. புரிஞ்சுதா?”

 

“ஹ்ம்ம்‌” என்றாள்‌ அதற்கும்‌.

 

“புன்யா? “என தாரா அலைக்கும்‌ சத்தம்‌ கேட்க, “நான்‌ போகனும்‌” என்றாள்‌.

 

“நான்‌ தான்‌ அன்னைக்கே சொன்னனே கீழ வந்தா அது எதுன்னாலும்‌ கீழ இருக்கவங்களுக்கு தான்‌ சொந்தம்னு.

சோ…. “

 

“சோ? ” என புன்யாவும்‌ கேட்க,

 

“சோ.நீ இனி எனக்கு தான்‌ சொந்தம்‌ கேகே. புரிஞ்சுதா….?

ஹ்ம்ம்‌ என்றவள்‌,”போட்டுமா? ” என்றாள்‌.

 

“ஓகே போ ‘என்றவன்‌, ‘தாராக்கு எதுவோ ப்ரோப்லம்ன்னு நினைக்கிறேன்‌, என்னன்னு பாரு. அவள்‌ போண்ணா அவளை விட்டுட்டு வாரதா? பாரு கொஞ்சம்‌. முகமே சரியில்லை.” என்றான்‌.

 

ஹ்ம்ம்‌ என்றவள்‌ படியேற போக,

 ‘சரியான தயிர்சாதம்‌’ என்றாள்.

‘ என்ன? ‘ என்று பிரபா கேட்க, ‘ ஹ்ம்ம்‌ நீ ஒரு தயிர்சாதம்னேன்‌”

 

‘எதுக்குடி அப்டி சொல்ற? ‘ எனவும்‌ சும்மாதான்‌. என்றவள்‌ அவசரமாக மேலேறி விட்டாள்‌.

 

உணவை முன்னறையில்‌ வைத்து விட்டு அறைக்குள்‌ போக குளித்து வந்த தாராவோ அப்படியே அமர்ந்திருக்க, “ஹேய்‌ பேபி என்னாச்சு உனக்கு, டல்லா இருக்க” என அவள்‌ அருகே வர அவளை இடுப்போடு கட்டிக்கொண்டவள்‌ அழுதழுது,

 

” அந்த வினோத்‌… அந்த வினோத்‌… என கேவியவள்‌.. என்னாச்சுடா சொல்லு

அழாத, எனக்கும்‌ படபடங்குது… ‘ என புன்யா கூற,

“என்னை அவன் தப்பா பேசுறான்.”

 

“ச்சே ச்சே அவன்‌ விளையாட்டுக்கு ஏதாச்சும் பேசிருப்பான்.” தாரா பட்டென அவளை அணைத்திருந்த கைகளை விலக்கியவள்‌,

 

“ஹ்ம்ம்‌ அவன்‌ அப்படி என்கிட்டே 

பேசினான்னா யாரும்‌ நம்ப மாட்டாங்க தான்‌.பாரு இப்ப நீயே நானாவே எதுவோ நினச்சு சொல்றது போலதான்‌ சொல்ற.”

 

“அசோ பேபி அப்டியில்லடா. உனக்கு ஏற்கனவே அவனைக்கண்டா ஆகாது அதான்‌ அவன்‌ விளையாட்டுக்கு பேசினது உனக்கு தப்பா விளங்கிச் சோன்னு நினச்சேன்‌.”

 

” அவன்‌ அப்படித்தான்‌ மத்தவங்க கூட இலகுவா பிரெண்ட்லியா பேசுறது போலத்தான்‌ பேசினான்‌. பாக்குறவங்களுக்கு அப்படித்தான்‌ தோணும்‌. ஆனா அவன்‌ வார்த்தைகள்‌, அவன்‌ பார்வையை நினைச்சாலே உடம்பெல்லாம்‌ எனக்கு கூசுது. எனக்கு உடம்பெல்லாம்‌ என்னவோ போல்‌ இருக்கு. அவ்வளவு அசிங்கமா என்னை பார்த்தான்‌. “என அழுதாள்‌.

 

” சரி டா .சரி பேபி அழாம என்ன நடந்ததுன்னு சொல்லு?” எனவும்‌ அவன்‌ அவளருகே வந்து பேசியதை கூறினாள்‌

“இங்க பாரு நீ அழுதன்னு எதுவும்‌ ஒகே ஆகிருமா. வா இங்க…’ என அவளை வாயிலுக்கு அழைத்து வந்தவள்‌, ‘நாளைக்கு ஆபிசுக்கு போய்‌ என்னன்னு அவனை ஒரு கைபார்க்கலாம்‌. என்னன்னாலும்‌ நான்‌ உன்‌ கூட இருக்கேன்‌. ஹீரோ சார்‌ வேறு வரங்கள்ல சோ… பயப்புடாத என்ன.சாப்பிடு இப்போ… ” என அவளை

சாப்பிட வைத்தவள்‌. நாளைக்கு லெவனுக்கு வாரதா நா ஆபிஸ்க்கு  கால் செய்து சொல்றேன்‌.நல்லா தூங்கு போ.’ என அவளை அறைக்கு அனுப்பி விட்டு அவளும்‌ உண்டு அவளுடன்‌ அருகே படுத்துக்கொண்டாள்‌.

“தாரா பேபி.எதுன்னாலும்‌ ஆபிஸ்‌ போய்‌ பார்க்கலாம்‌. இப்போ தூங்கு எனவும்‌ விஜயும்‌ வர இருப்பதால்‌ வேலைகள்‌ சில  இருப்பதாகவும் கால் செய்ய முடியவில்லை என மெசேஜ்‌

செய்திருக்க அவளும்‌ சிறிது நேரம்‌ சென்ற கண்ணயர்த்தாள்‌.

 

Leave a Reply

error: Content is protected !!