இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 22

Screenshot_2021-06-21-17-30-01-1-12882794

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 22

22

 

இரண்டங்குல காலணி அவள்‌ மெல்லிய உடலை தாங்கி நடக்க, உயர்த்தி கட்டிய கூந்தல்‌ அதற்கேற்ப அசைந்தாட,காதுகளில்‌ பச்சை பட்டாணி அளவு வெண்‌ வைரக்கல்‌ தோடு, கூர்‌ மூக்கின்‌ அழகினை இன்னும்‌ மெருகூட்டும்‌

வெண்கல் முக்குத்தி. இடக்கை வயிற்றோடு சேர்த்தவாறு வைத்திருக்க அதில்‌ மணிக்கட்டை மறைத்த கர

றுப்பு நிற கைக் கடிகாரம்.அதனுடன்‌ பெரிய கறுப்பு நிற அவளது அலுவலகபை தொங்கிக்கொண்டிருந்தது. வலக்கையில்‌

எப்போதும்‌ இருக்கும்‌ பிளாட்டினம்‌ மெல்லிய பிரேஸ்லட்‌ இவையெல்லாம்‌ அவள்‌ அழகை அலங்கரிக்கும்‌ அபரணங்களாக…

 

முதன்‌ முதலாக என்னவள்‌, எனக்கானவள்‌ எனும்‌

உரிமையில்‌ அணு அணுவாய்‌ அவள்‌ உள்ளே நடந்து வர அவளை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்‌ விஜய்‌. .

 

அவள்‌ உள்‌ நுலையவுமே அவளை கண்டவன்‌ அவள்‌ லிப்ட்டினுள்‌ நுழையவும்‌ பின்னிருந்து அணைத்து அவளை சர்ப்ரைஸ்‌ செய்யலாம்‌ என நினைத்து லிப்ட்‌ அருகே நீல நிற ஜீன்ஸ்‌ அடர்‌ நீல காட்டன்‌ ஷர்ட்‌ அணிந்திருந்தவன்‌,

முரட்டு கன்னங்களில்‌ அடர்ந்த தாடியும்‌ கூர்‌ கண்களை மறைத்த கறுப்பு குலர்ஸ்‌ என நின்றிருந்தான்‌.

 

அவளோ சுற்றம்‌ மறந்து வினோத்‌ வந்திருப்பானோ எனும்‌ யோசனையில்‌ வந்தவள்‌ லிப்டுக்காக நின்றிருப்பவன்‌ யாரென்றும்‌ பார்க்காது அவனருகே நின்றிருந்தாள்‌. லிப்ட்‌ திறக்கவும்‌ முதலில்‌ விஜய்‌ உள்நுழைந்து பின்னாடி நகர்ந்து நிற்க, இவளோ கதவுப்பக்கமாகவே திரும்பி அவனுக்கு பின்னிருந்து அணைக்க இலகுவாய்‌

நின்றிருந்தாள்‌. லிப்ட்‌ கதவுகள்‌ இரண்டும்‌ ஒன்றுடன்‌ ஒன்று இணைய வரும்‌ நேரம்‌ இவன்‌ வலக்கை அவள்‌ இடை தொட்ட நொடி சட்டெனெ கதவிடையே கை வைத்து உள்நுழைந்தான்‌ வினோத்‌. திடீரென அவன்‌ நுழையவும்‌ நிமிர்ந்து பார்த்தவள்‌ அவனைக்கண்டத்தோடு, அவள்‌ இடையை யாரோ தொட்டதையும்‌ உணர்ந்தவள்‌ உடல்‌ நடுங்க ஆரம்பித்திருந்தது. காய்ச்சல்‌ வேறு படுத்தி எடுக்க ஆரம்பித்திருக்க அவனை கண்டு பயந்தவள்‌, இரண்டு ஆண்களோடு தான்‌ தனித்து நிட்பதை உணர்த்தவள்‌

பயத்தில்‌ உடல்‌ வேர்க்க ஆரம்பித்கிருந்தது…

 

வினோத்‌ உள்‌ நுழையவுமே அவனை பார்த்தவன்‌ சட்டென அவன்‌ கையை விலக்கி, போனை பார்ப்பது போல தலையை அதில்‌ நுழைத்துக்கொண்டான்‌. அப்போது தான்‌ அவனுக்குமே லிப்ட்டின்‌ கேமரா நினைவு

வந்தது.யாருமறியாது பொருத்திய கேமராக்கள்‌ தன்‌ தேவதைக்கு உதவப்போவது தெரியாமல்‌, கம்பனியின்‌ ஓரிடம்‌ விடாது கேமரா பொருத்தியதை நினைத்து நொந்துக்கொண்டான்‌.

 

“ஹலோ மேம்‌ குட்‌ மோனிங்‌ காலையில இருந்து வெய்ட்‌ பண்றேன்‌ நீங்க வருவீங்கன்னு. ஏன்‌ லேட்‌. இன்றைய நாளை நினச்சு நைட்‌ தூங்கல்லையாங்க? இன்னக்கி மீட்டிங்‌ முடிய லஞ்ச்‌ முடிச்சிட்டு கிளம்பலாம்னு இருக்கேன்‌. நீங்க பார்கிங்ல வெய்ட்‌ பண்ணுங்க நான்‌

வரேன்‌.வேணாம்‌ நானே உங்க கேபினுக்கு வரேன்‌. என்கூட வர்றதா சொல்லுங்க ஒன்னும்‌ பிரச்சினையே இல்லேங்க. சாருக்கு அவ்வளவு மதிப்பு இங்க ” என்றான்‌.

 

‘என்னடா இவ்வளவு பேசுறான்‌ ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறா… நா பிடிச்சதும்‌ பயந்துட்டாளோ ‘என விஜய்‌ நினைக்க,

 

வினோத்‌ எந்த வித அலட்டலும்‌ இல்லாது அவள்‌ உடல்‌ உரசாது அவன்‌ நின்று பேசும்‌ தோரணை மரியாதையாக அவளுடன்‌ ஆபிஸ்‌ விடயம்‌ எதுவோ பேசுவதாகவே தோன்றும்‌ பார்ப்பதற்கும்‌ அப்படித்தான்‌ இருப்பான்‌. விஜய்‌

கம்பெனி வந்ததிலிருந்தே அவனை யேனோ பிடிக்காது. அது ஏன்‌ என்று காரணம்‌ தெரியவில்லை. ரமேஷ்‌ அவனுக்கு துணையாக இவனை சேர்த்து கொள்ள கேட்டதற்கும்‌ வேணாம்‌ என்றிருந்தான்‌.

 

ஆனால்‌ அவன்‌ பேசுவது ஆபிஸ்‌ விடயம்‌ போலவும்‌ இருக்கு இல்லாதது போலவும்‌ இருக்கு இவ்வளவு பேசுறான்‌ இவ தான்‌ யார்கூடவும்‌ இவ்வளவு நேரம்‌ பேசமாட்டாளே.’என நினைக்கவும்‌ விஜய்‌ தவறவில்லை.

 

“நீங்க முடியாதுன்னு சொல்லமாட்டீங்கன்னு எனக்கு தெரியுங்க. உங்களை மாதிரி இருக்கவங்க இப்படி சான்சை மிஸ்‌ பண்ண மாட்டீங்கன்னு தெரியும்‌. எவ்வளவு பேர்‌

பார்த்திருக்கேன்‌.ஒருநாள்‌ தான்‌ அதுவே எனக்கு

போதும்ங்க. அப்புறம்‌ உங்களுக்கே பிடிச்சதுன்னா நா வேணாம்னும்‌ சொல்லமாட்டேங்க.சரி அப்போ லுஞ்சுக்கு

அப்றம்‌ போலாம்‌,இப்போ கொஞ்சம்‌ பிசிங்க. வரேன்‌.” என்றவன்‌ மூன்றாம்‌ தளத்தில்‌ வெளியேற, மீண்டும்‌ கதவு மூடி சில வினாடிகளில்‌ அவர்கள்‌ தளம்‌ வந்து கதவு திறந்துக்கொண்டது.

 

கதவு திறக்க வெளி செல்ல காலை முன்வைத்தவள்‌ அது ஒத்துழைக்காமல்‌ அப்படியே மயங்கி சரிந்தாள்‌.அவளை

தாங்கியது இனி என்றும்‌ அவளை தாங்கப்போகும்‌ கைகள்‌.

 

“ஹேய்‌ ஸ்ரீ என்னாச்சு” என அவளை தாங்கியவன்‌ கன்னம்‌ தட்டி கேட்க,

 ஹ்ம்ம்‌ ஹ்ம்ம்‌… பலனேது…

அவளை அப்படியே கைகளில்‌ அள்ளிக்கொண்டவன்‌ அவனறையில்‌ சோபாவில்‌ கிடத்தினான்‌. நீர்‌ தெளித்து

கன்னங்கள்‌ தட்டி எழுப்ப அவளிடம்‌ எவ்வித அசைவும்‌ இல்லை. அவளை தூக்கியவன்‌ அவள்‌ உடல்‌ சூட்டினை உணர்ந்திருக்க, ‘காய்ச்சலா வேறு இருக்கும்‌ போல இதுல நான்‌ வேறு பிடிச்சு பயமுறுத்திட்டேன்‌.அவள்‌ காலணிகளை கலட்டி விட்டவன்‌ அவளை சற்று உயர்த்தி தலையணையில்‌ சாய்த்து வைக்கப்போக அவள்‌

உயர்த்தி கட்டியிருந்த கூந்தலை அவிழ்த்து விட்டவன்‌ தலையுடன்‌ சேர்ந்த கூந்தல்‌ பகுதி ஈரமாக இருப்பதை உணர்ந்தான்‌. குளிச்சிட்டு வேற வந்திருக்கா. ஏசியை ஒன்‌ செய்து அளவாக வைத்தவன்‌ மீட்டிங்‌ அறைக்கு தன்‌ கேபினிலிருந்து அழைதான்‌. புன்யா பேசவும்‌,

 ” ஹலோ புன்யா நா விஜய்‌ பேசுறேன்‌. அப்பா வந்துட்டாங்களா? ” என்றான்‌.

 

“ஆமா சார்‌ அரைமணியாகுது.” என்றாள்‌.

 

“அப்டின்னா அப்பாகிட்ட,,’தாரா வந்திருக்கா, உடம்புக்கு கொஞ்சம்‌ முடியல போல, போய்‌ பார்த்துட்டு வரேன்னுமட்டும்‌ சொல்லிட்டு என்‌ கேபினுக்கு வாங்க. சீக்கிரம்‌.” என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தவன்‌ அவளருகே வந்து அமர்ந்து கொண்டான்‌.அவன்‌ அருகே வர அவள்‌ ஷர்ட்‌ சற்று மேலேறி அவள்‌ இடை வெளி தெரிய அதில்‌ மின்னிய பொருளை கண்டவன்‌ கண்கள்‌, அவளுக்கு தன்மேல்‌ இருக்கும்‌ பிடித்தத்தின்‌ அளவை உணர்ந்துக்கொண்டான்‌.அவன்‌ காதலை கண்களில்‌ நிரப்பியவாரே அவள்‌ முகம்‌ பார்க்க வாடிய கொடியென்‌ உடல்‌ ஒரு பக்கம்‌ சாய்ந்து படுத்திருந்தாள்‌. மயக்கம்‌ தெளிந்திருந்தாலும்‌ சுயம்‌ மறந்து ஏதேதோ

பேசினாள்.

 

“என்னாச்சுடா ஸ்ரீ…’ என அவள்‌ தலை வருடியவன்‌,’உனக்கு சர்ப்ரைசா வரலாம்னா நீ இப்படி என்னையே பயமுறுத்துற’ என மனதால்‌ வருத்திக்கொண்டு இருக்க அறையுள்ளே வந்தவள்‌,

“என்னை ஹீரோ சார்‌ போனை வச்சிடீங்க… பேசும்‌ போதே தெரிஞ்சுகிட்டேன்‌ சர்ப்ரைஸ்‌

விசிட்டா…? தாராக்கு என்னாச்சு என புன்யா அவளருகே வர, “மயங்கிட்டா.” என்றான்‌.

 

கேட்டவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“அச்சோ! என்ன ஹீரோ சார்‌ உங்களை பார்த்தாலே மயங்கி விழரா.” என அவள்‌

அருகே அமர.

 

“அவளுக்கு பிவரா இருக்கு.அதுவும்‌ அவகூடத்தான்‌ லிப்ட்ல வந்தேன்‌. ஆனா நான்‌ தான்‌ அவகூட வந்தேன்னு தெரில. ஏதோ யோசிச்சுகிட்டே இருந்தா. அப்படியே

மயங்கி விழுந்துட்டா.” என்றான்‌.

 

“பிவர்‌? மோனிங்‌ நல்லாத்தானே இருந்தாள்‌ ஹேய்‌! பேபி எழுந்துக்கோ ” என அவள்‌ கன்னம்‌ தட்ட,

 

“விடுங்க இருக்கட்டும்‌ இப்போ டாக்டர்‌ வந்துருவாங்க.”என்றான்‌.

 

“தேவை இல்லாததுக்கு பயந்துகிட்டு இருக்கா. சொன்னேன்‌இவளுக்கு.இன்னக்கி பார்த்துக்கலாம்னு.” புன்யா அவள்‌

பங்கிற்கு எதுவோ சொல்ல. அவளிடம்‌,

 

 “நம்ம ஆபிசில்‌ இருக்க விநோத்‌ என்ன மாதிரி?” என்றான்‌ விஜய்‌. .

 

“ஏன்‌ ஏன்‌ என்னாச்சு திரும்ப என்ன பண்ணான்‌?” புன்யா பதட்டமாக கேட்க,

 

“இல்லை நானும்‌ தாராவும்‌ அப்றம்‌

அவனும்‌ தான்‌ லிப்ட்ல இருந்தோம்‌.எதுவோ

பேசினாங்க,

 

“என்ன பேசினாங்கன்னு கேட்டதா உங்களுக்கு?அவன்‌ பேசினதுக்கு தாரா என்ன சொன்னா?” அவனை இடைவெட்டி இவள்‌ கேட்க

 

” சரியா விளங்கல.இவ எங்க பேசினா அவன்‌ பேசிட்டு போய்ட்டான்‌ அதோடத்தான்‌ மயங்கி விழுந்துட்டாளே….”

 

“அவன்‌ அப்டித்தான்‌ பேசுவான்‌.ஆனா தப்பு தப்பா.நேற்றும்‌ அப்படிதான்‌.இருக்கு அவனுக்கு இன்னக்கி” என அவள்‌அவனை அர்சிக்க.

 

“என்னாச்சு நேற்று என்ன நடந்தது க்லியரா

சொல்லுங்க.என்னனு சொன்னாத்தானே எனக்கு புரியும்‌” என விஜய்‌ சொல்ல, அவன்‌ பேசியதை கூறினாள்‌. கூறியவள்‌,

 ” இன்னக்கி என்ன சொன்னானோ தெரிலயே பயந்துட்டாலோ என்னவோ. அதோட கேமரா எவிடேன்ஸ்‌ எடுக்க முடியாது அவன்‌ பார்க்க அப்படி பேசினது போலயே இருக்காது. ஆடியோ இருந்ததுன்னாதான்‌ மாற்றிவிடலாம்‌ அவனை.”

என புன்யா கூற, சரி விடுங்க பார்த்துக்கலாம்‌.

யார்கிட்டயும்‌ சொல்லிக்க வேணாம்‌ என பேசிக்கொண்டு இருக்க டாக்டரை அழைத்து வந்தான்‌ ராமேஷ்‌.

 

“தேங்க்ஸ்‌ ரமேஷ்‌ மீட்டிங்‌ டைமாச்சு நீங்க போங்க நாம அப்புறமா மீட்‌ பண்ணலாம்‌. அப்பாகிட்ட சொல்லவேணாம்‌ நா வந்தது.மீட்டிங்‌ அட்டென்ட்‌ பண்ற மூட்ல நா இப்போ இல்லை.” எனவும்‌,

 

” ஓகே சார்‌. நாம லஞ்ச்‌ டைம்ல மீட்‌ பண்லாம்‌. என்றவன்‌ புன்யாவிடம்‌,’ டாக்டர்‌ போனதுக் கப்புறம்‌ வா, நா அட்ஜஸ்ட்‌ பண்ணிக்கிறேன்‌.’

என்றுவிட்டு சென்றான்‌.

 

அவளை பரிசோதித்த டாக்டர்‌… ‘என்னாச்சு? ‘ எனவும்‌ 

” எதுக்கோ நேத்து நைட்‌ பயந்துட்டாங்க போல. அதோட காலையில குளிச்சுட்டு வேறு வந்திருக்காங்க என்றான்‌ விஜய்‌.

 

“அதான்‌ பிவேர்‌ ஜஸ்தியா இருக்கு.இன்ஜெக்ஷன்‌ போடலாம்‌, கொஞ்ச நேரம்‌ கழிச்சு எதுவும்‌ சாப்பிடக்கொடுத்துட்டு மாத்திரை குடுங்க என்றவர்‌ இன்ஜெக்ஷன்‌ போடணும்‌ ஷர்ட்‌ தூக்கி விடுங்க.” எனவும்‌,

புன்யாவை பார்த்து,

 “செஞ்சு விடுங்க” என்றவன்‌ வெளியில்‌

இருந்தான்‌.

 

அவள்‌ உள்ளே ஸ்கின்னி அணிந்திருக்க அவள்‌ ஷர்ட்‌ பட்டன்‌ இரண்டை கலட்டி ஒரு கை பக்கமாக மருந்து செலுத்தியவர்‌ ‘கொஞ்சம்‌ இவங்க ட்ரெஸ்‌ லூஸ்‌ பண்ணி பிரியா விடுங்க’ என்று விட்டு விஜயிடம்‌ சொல்லிக்கொண்டு கிளம்பினார்‌.

 

“புன்யா அந்த கபோர்ட்ல சீட்‌ இருக்கும்‌ போர்த்தி

விட்டுட்டு ஷர்ட்‌ பட்டன்‌ கட்டி விடுங்க. பிவர்னத்துக்கு பயத்துல வேர்த்திருக்கு. அவக்கு கஷ்டமா இருக்க போகுது.” எனவும்‌. சரிண்ணா என்றவள்‌ அவளை போர்த்தி விட்டு ‘ நா மீட்டிங்‌ அடென் பண்ணிட்டு வரேன்‌ அது வரைக்கும்‌… “

 

“நா இருக்கேன்‌.” எனவும்‌ ஓகே என்றுவிட்டு சென்றாள்‌.அவனும்‌ அவள்‌ அருகே அமர்ந்து இருக்க பிரபா மற்றும்‌ தருணுக்கு அழைத்து பேசியவன்‌ தருணை மாலை அவர்களது ஷோரூம்‌ வருமாறு கூறினான்‌.அவர்களுடன்‌

பேசி தொலைபேசியை வைக்க தாரா

முழித்துக்கொண்டாள். முதலில்‌ எங்கிருக்கோம்‌ என சுற்றும்‌ பார்க்க இதற்கு முன்‌ விஜய்‌ அறைக்கு வந்திராததால்‌ வேறெங்கோ இருக்கிறோம்‌ என பயந்து அவசரமாக எழுந்தவள்‌ அவள்‌ மேல்‌ போற்றியிருந்த சீட்‌

கிழே விழ அவள்‌ ஷர்ட்‌ பட்டன்‌ கலட்டி. கூந்தல்‌

கலைந்து தனக்கெதுவோ ஆகிவிட்டது என பதட்டமாக தன்னை பார்த்துக்கொண்டாள்‌.சீட்டை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டவள்‌ பின்‌ சுற்றும்‌ திரும்பி பார்க்க அவள்‌ அருகே சோபாவில்‌ அமர்த்திருப்பவனை பார்த்தவள்‌

பார்த்தபடி இருக்க அவளருகே எழுந்து வந்தவன்‌

அவளருகே அமர்ந்து “ஸ்ரீ…” எனவும்‌ அவன்‌

பேசுவதற்காகவே காத்திருந்தவள்‌

“ஸ்ரீப்பா… ” என அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்‌.அவளை தன்‌ இருகரம்‌

கொண்டு அணைவாய்‌ அணைத்துக்கொண்டு அவள்‌ தலையில்‌ தன்‌ கன்னம்‌ வைத்துக்கொண்டவன்‌,

“உனக்கு சர்ப்ரைஸ்‌ தரலாம்னு வந்தா நீ எனக்கு பிபி ஏதுற ஸ்ரீ.என்ன இது சின்ன பிள்ளையா நீ? இவ்வளவு பிவெர்‌ கூடுற வரைக்கும்‌ கவனமில்லாம இருக்க. லீவ்‌ போட்டிருக்கலாம்‌ல” என்றான்‌.

 

அவளோ எதிலிருந்தோ தப்பியவள்‌ போல அவனை இருக்கி அணைத்து பிடித்திருக்க, எதுவும்‌ பேசாது அவன்‌ அணைப்புக்குள்ளே கேவிக்கேவி அழுதவண்ணம்‌ இருந்தாள்‌…

 

ஸ்ரீம்மா ரிலாக்ஸ்‌.என்னாச்சு.இனிதான்‌ நா

இருக்கேன்ல.அழாத குட்டிமா. நான்‌ என்னாச்சுன்னு கேட்க போறதில்ல. ஆனா ஒன்னு ப்ரோமிஸ்‌ பண்றேன்‌.நாளைல இருந்து அந்த வினோத்‌ நம்ம ஆபிஸ்ல இருக்க

மாட்டான்‌.உனக்கிட்ட மட்டுமில்ல இனி யார்கிட்டயும்‌ அப்படி பேசமாட்டான்‌ சரியா? “

 

பட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள்‌,”நீங்க அவன்‌ பேசுறதை கேட்டிங்களா? யாரும்‌ நான்‌ சொன்னாகூட நம்ப மாட்டாங்க, ஆபிஸ்ல அவ்வளவு நல்லவன்‌ அவன்‌. எனக்கு என்ன பண்றதுன்னே தெரில. பயந்துட்டேன்‌.தப்பு

தப்பா பேசுறான்‌. உடம்பெல்லாம்‌ கூசிப்போச்சு.

பயந்துட்டேன்‌ ஸ்ரீப்பா. நானும்‌ அவனை போலவே இருபேங்குற மாதிரில்லாம்‌ பேசுறான்‌.” என மேலும்‌ அழுதாள்‌.

“சரிடா,இப்படி இருந்தன்னா எப்படி?”

 

“இல்ல இவ்வளவு சேபா இருக்க இங்கயே

பொண்ணுங்களுக்கு இப்படின்னா பஸ்ல போய்கிட்டு,பெரிய பெரிய பாக்டரில எல்லாம்‌ வேலைக்கு போர பொண்ணுங்க எல்லாம்‌ எவ்வளவு கஷடப்படுவாங்க.நைட்டெல்லாம்‌ கனவு வேறு இப்படியே வருது.”

 

“ஸ்ரீ… இப்படி பொண்ணுங்க பயந்தா வாழ கஷ்டம்டா.இப்படியானவங்க எல்லா இடத்துலயும்‌ இருப்பாங்க. நாங்க எப்படி அவங்களை கைய்யால்‌ரோம்குறதுல தான்‌ இருக்கு.அதோட எல்லாத்தையும்‌ நம்மளால சரிபண்ணவும்‌ முடியாது. நாங்க வாழுற சூழல நாம

பார்த்துக்கிட்டாலே போதும்‌. பாதிக்கு மேலே சரியாகிரும்‌.இப்படி எல்லாத்தையும்‌ யோசிச்சு தான்‌ பிவர்‌ வந்திருக்கு.சரி வா.” என அவன்‌ எழுந்து அவளையும்‌ எழுப்ப அப்போது

தான்‌ அவள்‌ இருந்த கோலம்‌ தெரிந்தது.

 

அவளை குனிந்து பார்த்தவள்‌ அவனை நிமிர்ந்து

பார்க்க.சிரித்தவன்‌,

“இவ்வளவு நேரம்‌ புன்யா இங்கதான்‌ இருந்தா. டாக்டருக்கு ஹெல்பா அவதான்‌ இருந்துட்டு

இப்போதான்‌ கிளம்புனா. நீ உள்ளே போய்‌ பிரெஷாகிட்டு வா.” என பாத்ரூமை காட்டியவன்‌ அவன்‌ கெபினில்‌ போய்‌ அமர்ந்துகொண்டான்‌. அவள்‌ ஆடையை சரிசெய்து கூந்தலை உயிர்த்திக்கட்டிக்கொண்டவள்‌ முகம்‌ கழுவி வர

அவளை அருகே அமர்த்திக்‌ கொண்டவன்‌.

“காலைல சாப்பிடலையா?எனவும்‌,

“ஹ்ம்ம்‌.டீ சாப்பிட்டு வந்தேன்‌. இங்க வந்து சாப்பிடலாம்னு”

 

“சரி இங்க வா என அவளை அமரவைத்தவன் சாப்பிடு, மாத்திரை போடணும்‌ என அவன்‌ வரவழைத்த உணவை கட்டாயமா உண்ண வைத்து மாத்திரையை கொடுத்தவன்‌,

“பெட்டரா இருக்கா?” எனவும்‌ தலையாட்டினாள்‌.

 

“இங்க வா,” என அவன்‌ அருகே ஒரு நாற்காலியை போட்டு அவன்‌ லேப்பினை ஒன்‌ செய்திருக்க நேற்று அவள்‌ அறையில்‌ வினோத்‌ பேசிக்கொண்டிருந்த வீடியோ ஓடிக்கொண்டு இருந்தது. அதோடு அவன்‌ பேசியது

தெளிவாக கேட்டது.அதனை இடை நிறுத்தியவன்‌,”இப்போ நானும் அவன்‌ பேசினதை கேட்டுட்டேன்‌.’ என்றவன்‌ லிப்ட்‌ கேமரா காட்சிகளையும்‌ காட்டியவன்‌,

 

‘இதெல்லாம்‌ கேக்கலைன்னாலும்‌ நீ சொல்லிருந்தா நம்பாம இருப்பேனா ஸ்ரீ?” என்றான்‌.

 

“அப்போ நீங்கதான்‌ லிப்ட்ல என்‌ பின்னாடி

நின்னிருந்திங்கலா?என அவனை பார்த்து கேட்டவள்‌, நான்‌ வேறுயாரோன்னு அதுக்கு வேற ரொம்ப நல்லா பயந்துட்டேன்‌. சொல்கிருக்கலாம்‌ல?”

 

“நானுமே லிப்ட்ல கேமரா இருக்குகிறதயும்‌ மறந்துட்டேன்டா நல்லவேளை, இல்லன்னா, உன்னை அப்டியே பின்னாடி இருந்து அணைச்சி சர்ப்ரைஸ்‌ கொடுக்க இருந்தேன்‌.” கடைசில அப்பாகிட்ட மாட்டிருப்பேன்‌ “

எனவும்‌.

 

“ஸ்ரீ இதை வச்சு இவனை மாட்டிவிடலாம்‌ உங்கப்பாகிட்ட. இதை காமிச்சு சொன்னா நம்புவாங்க.” என்றாள்‌ தாரா.

“நான்‌ அப்பாகிட்ட பேசிக்குறேன்‌. ஆடியோவோட இருக்க கேமரா பிக்ஸ்‌ பண்ணினது எனக்கு மட்டும்‌ தான்‌ தெரியும்‌. எதுக்கும்‌ யூசாகுமேன்னு தான்‌ வச்சேன்‌ கடைசில எனக்கேதான்‌ பயன்‌ பட்டிருக்கு. இதை இனியும்‌ யார்கிட்டயும்‌ சொல்லிக்க வேணாம்‌ ஓகே.” என்றான்‌.

 

சரி என தலையாட்டியவள்‌, “நாளைக்கு வாரதா தானே சொன்னிங்க. அம்மாக்கெல்லாம்‌ ரொம்ப ஹாப்பியா பீல்‌பண்ணி இருப்பாங்களே…” என்றாள்‌.

 

“ஹ்ம்ம்‌ ரொம்ப. அந்த ஹாப்பிய உன்கிட்ட பார்க்கலாம்னு தான்‌ இங்க வந்தேன்‌. அப்பாவை கூட இன்னும்‌ மீட்‌ பண்ணல.’என்றவன்‌ அவள்‌ எழுந்துகொள்ள அவளுடனே எழுந்தவன்‌ சட்டென அவளை பின்னிருந்து

அணைத்துக்கொண்டான்‌.

 

“மிஸ்‌ யூ சோ மச்‌ ஸ்ரீ… வந்ததுமே இப்படி கட்டிக்கணும்னு ஆசையா வந்தேன்‌.”எனவும்‌,

 

“ஹ்ம்ம்‌ இபோ நிறைவேறிச்சா? “என்றாள்‌.

 

” நான்‌ நல்ல பையனாட்டம்‌ பின்னால்‌

கட்டிக்கணும்னு தான்‌ நினச்சேன்‌. ஆனா யாரோ என்னை பார்த்ததும்‌ மின்னலா என்னை முன்னாலேயே இருக்கி கட்டிக்கிட்டாங்க.” என அவளை சீண்ட,

“அது ஏதோ நினைப்புல…’ என முகம்‌ சிவந்தவளாக கூற,

 

“அப்போ ஆசையா… கட்டிக்கலயா? நான்‌ நினச்சேன்‌ ஆறுவருஷ லவ்வை ஒரே அடியா காட்டப்‌ போறாங்களோன்னு,’என அவன்‌ இடை நிறுத்தி அவளை தன்‌ பக்கம்‌ திருப்ப, அவன்‌ அணைத்திருந்தவாரே அவனை அண்ணார்ந்து பார்த்தாள்‌.

 

‘அது இப்போதான்‌ கொஞ்சம்‌ முன்னாடி தெரிஞ்சது. என அவள்‌ இடையே குடிகொண்டிருந்த செயினில்‌ அழுத்தம்‌

கொடுத்தவாறு கூறி அதுவும்‌ இதை கண்டதினால்‌ கண்டுபிடிச்சேன்‌. மேடம்தான்‌ அதெல்லாம்‌ என்கிட்டே சொல்லவே இல்லையே.” என்றான்‌.

 

“அது சர்ப்ரைஸா ஸ்பெஸலா சொல்லலாம்னு

இருந்தேன்‌.” என்றாள்‌.

 

“‘அச்சோ அபோ நான்‌ சொல்லாம இருந்திருந்தா ஸ்பெஷல்‌ எதுவும்‌ கிடைச்சிருக்குமா? நான்‌ தான்‌ சொதப்பிட்டேன்‌ போல…” என இருவரும்‌ அப்படியே இருந்தவாறு பேசிக்கொண்டு இருந்தனர்‌.

 

“ஸ்ரீம்மா உடம்பு சூடுன்னா கொஞ்சம்‌ குறைஞ்சு இருக்கு.லீவ்‌ போட்டு வீட்டுக்கு போறியா இன்னக்கி?” எனவும்‌,

 

“அம்மாவும்‌ அப்பாவும்‌ மலேஸியா போயிருக்காங்க. ரெண்டு நாளாகும்‌ வர்றதுக்கு.”

என்றாள்‌,

“புன்யா இருக்கால்ல ரெண்டு நாள்‌ ரெஸ்டா

இரு.சரியாகிரும்.’

 

“ஹ்ம்ம்‌… என்றவள்‌ அவன்‌ மேலேயே சாய்ந்தவாறு நின்றுக்கொண்டு பேசிக்கொண்டு இருக்க கதவு தட்டும்‌ சத்தம்‌ கேட்க,

” கொஞ்சம்‌ நீ உள்ளே போய்‌ இரு வரேன்‌

என்று அவளை உள்‌ அறைக்கு அனுப்பி விட்டு அவன்‌ கேபின்‌ நாட்காலியில்‌ வந்து அமர்ந்தான்‌.

அமர்ந்தவன்‌. “யா கம்‌ இன்‌ எனவும்‌ உள்ளே ஒரு

பட்டாளமே வந்தது…

 

ரமேஷ்‌ சொல்லிருப்பான்‌ போல. அவனது ஸ்டாப்‌

அனைவரும்‌ வாழ்த்துக்கூறி அவன்‌ திரும்ப வந்ததுக்கு சந்தோஷம்‌ தெரிவித்தனர்‌. பேசிக்கொண்டிருக்க புன்யா மெதுவாக நழுவி உள்ளறைக்கு சென்றாள்‌. அவள்‌ செல்வகைக்கண்டவன்‌ கண்டும்‌ காணாது வந்தவர்களுடன்‌ பேசிவிட்டு அவர்களுக்கு விடை கொடுத்தவன்‌, ” வினோத்‌ கொஞ்சம்‌ இருங்களே சின்ன தேவை ஒன்று.’ என அவனை

இருத்திக்கொண்டான்‌. அவனும்‌ நோர்மலாகவே நின்றிருக்க அவன்‌ பக்கத்தில்‌

வந்தவன்‌ அவனை போலவே நிமிர்ந்து நின்றவன்‌ அவனை நேருக்கு நேராக பார்த்து,

 

“என்ன வினோத்‌ ரொம்ப தான்‌ கஷ்டப்படறீங்க போல…வீட்ல நீங்க மட்டும்‌ தான்‌ இப்படியா ? இல்ல உங்க அம்மா தங்கச்சி, தம்பி எல்லாருமே இதே வேலையைத்தான்‌ பார்க்குறீங்களா? ரொம்பதான்‌ பேசுறீங்க அது நல்லதுக்கில்லையே. நீங்க பேசினது நான்‌ மட்டும்‌ கேட்டா போதுமா மற்றவர்களுக்கும்‌ கேட்குற மாதிரி பண்ணலாமான்னுதான்‌ யோசிச்சுகிட்டு இருக்கேன்‌.’

 

‘ஆனா ஒன்னு, என்‌ மனசு கேட்காம இதோ இந்த

விடீயோவை என அவன்‌ லேப்பில்‌ ஓடிக்கொண்டிருந்த அவன்‌ பேசுவது தெளிவாக கேட்ட விடியோவை கையால்‌ காட்டியவன்‌ உங்க தங்கச்சிக்கும்‌ அம்மாக்கும்‌ அனுப்பிட்டேன்‌. தம்பிக்கு அனுப்பல. அவரும்‌ உங்களை

மாதிரியே நல்லவரா இருந்துட்டார்னா வெளில

கட்டமட்டார்ல.பூனை கண்ண மூடிட்டு இருந்தா உலகம்‌ இருட்டாகிருமா என்ன?’

 

‘வினோத்‌… நீங்க என்ன பண்றீங்க… இன்னைக்கே இப்போவே ரெண்டு நாளைக்கு லீவ போடறீங்க. அதோட வேலை விட்டு

நீங்களாகவே நிக்கிறதாக ஒரு லெட்டர்‌ எங்கப்பாக்கு அனுப்பிடறீங்க.எப்படியும்‌ மூனு மாசத்துக்கு முன்னாடி அறிவிக்கணும்‌ தானே நீங்க.ஆனா பாருங்க நீங்க அவ்வளவு நாள்‌ வெய்ட்‌ பண்ண தேவை இல்ல.நாளைக்கே

அதுக்கான பெர்மிஷன்‌ லெட்டர்‌ உங்க கைக்கு வாரது போல பண்ணிருவேன்‌. யேன்னா அதுக்காக மறுபடியும்‌ இந்த கம்பனிகுள்ள நீங்க நுழையக்கூடாதில்ல அதுக்காகதான்‌.’

 

‘ஆஹ்‌! இன்னும்‌ ஒன்னும்‌… உங்க லை.ப்‌ இன்னும்‌ அப்படியே இருக்கில்ல… அது ஸ்பாயில்‌ ஆகிட கூடாதுன்னுதான்‌ வேறெடத்துல உங்களுக்கு வேலைதேடுற வாய்ப்பு தந்திருக்கேன்‌. எப்படியும்‌ என்னை

மாதிரியே மத்தவங்களும்‌ இருக்க மட்டாங்கள்ல.சோ கவனமா இருங்க.என்றவன்‌ , அவனை முன்னோக்கி ஓரடி எடுத்து வைக்க விஜயின்‌ முகத்தை கண்டவன்‌

அவன்‌ மிரண்டு ஓரடி பின்‌ நகர்ந்தான்‌.

 

“இன்னக்கின்னு இல்ல இனி எப்பயுமே, ஏன்‌ உன்‌ பொண்டாட்டியையே நீ சாரி சாரி நீங்க இந்த கையால தொடும்‌ போதும்‌ என்‌ நினைவு உனக்கு… சாரி சாரி உங்களுக்கு வரணும்‌.

 

அதோட இதுக்கு முன்னாடி தொட்ட பொண்ணுங்க எல்லாமே அந்த நேரம்‌ உங்க நினைவுல வருவாங்க.அப்போ உனக்கு சாரி சாரி உங்களுக்கு வரும்‌ பாருங்க ஒரு வழி… அதை அனுபவிச்சு புரிஞ்சிப்பிங்க சார்‌.”

 

“என்‌ பொண்டாட்டியையே ஒரு நாளைக்கு

கூப்பிடுவீங்களா?எவ்வளவு நெஞ்சழுத்தம்‌

இருக்கனும்ங்க. உங்களுக்கு.அதென்ன உங்களுக்கு மட்டுமாங்க முடியும்‌.. எனக்கும்‌ தான்‌ முடியும்‌. என்னதுன்னு பார்க்குறீங்களா? என்னண்ணா சத்தமில்லாம, கத்தியில்லாம. யேன்‌ ரத்தமே வராம …. பாருங்க உங்க

கையை வெளில ஒன்னுமே அகல.. ஆனா உள்ளே சேதாரம்‌ அதிகம்‌ தான்‌ போல… “

 

அவன்‌ பிடித்திருந்த கையை விட்டவன்‌,

“இபோ நீங்க கிளம்பலாம்‌.”

என்றுவிட்டு அவன்‌ நாற்காலியில்‌ அமர்ந்துகொண்டான்‌.அவமானம்‌ என்றால்‌ வார்த்தையால்‌ அதை விவரிக்கத்தான்‌ முடியுமா… கை வழியோ உயிரை எடுக்க

அவன்‌ வார்த்தைகளோ முள்ளென இதயத்தில்‌

குத்திக்கிழிக்க தன்‌ வயதை ஒத்த ஒருவனிடம்‌, இவ்வளவு நாள்‌ தான்‌ கட்டி காத்த நல்லவன்‌ என்ற வேஷம்‌ கலைந்து அவன்‌ நல்ல பாம்பு என்பதை படம்‌ போட்டு காட்டியவனை

காணக்காண பொறுக்கவில்லை.இனி என்றும்‌ இவ்வாறானதொரு எண்ணம்‌ வருமா

என்பதே சந்தேகம்‌ தான்‌. ஆனால்‌ திருந்தி விடுவான்‌ என்பதும்‌ சந்தேகமே.

கதவை நோக்கி திரும்பியவனை பார்த்து விஜய்‌, “ஒரு நிமிடம்‌’ என்றுவிட்டு, ‘வினோத்‌,உங்க நடத்தை உங்க முகமோ, உடல்‌ மொழியோ காமிக்காம நீங்க நடந்திருக்கலாம்‌. ஆனா உங்களை எப்ப நான்‌ பார்த்தேனோ

அன்னைக்கே உங்க கேரக்டர்‌ பிடிக்கல்ல. அது எதுவோ தப்பா இருக்குன்னு எனக்கு விளங்கியது. சோ என்னை மாதிரி பலரும்‌ நம்ம சொசைட்டில இருப்பாங்க. அவங்க என்னை மாதிரி கோவப்படாம இப்படி பாசமா இருக்க

மாட்டாங்க. அதை நல்லா மனதுல பதிய வச்சுக்கோங்க.இப்போ நீங்க போகலாம்‌.கையை கொஞ்சம்‌ தூக்கி பிடிச்சுக்கிட்டே போனீங்கன்னா டாக்டரருக்கு வைத்தியம்‌

பார்க்க லேசா இருக்கும்‌…” என்றான்‌.

 

அவன்‌ வெளி செல்ல இவன்‌ பின்‌ இருக்கையில்‌ சாய்ந்து அமர்ந்தான்‌. உள்ளே இருந்த இருவரும்‌ உள்ளறையில் கேமராக்களின்‌ படம்‌ ஒடும்‌

ஸ்க்றீனில்‌ அவனை பார்த்துக்கொண்டு இருக்க தாராவோ அதன்‌ ஆடியோவை ஒன்‌ செய்ய, “அச்சோ! ஹீரோ சார்‌ சான்ஸ்சே இல்ல செம்ம. நீ ரொம்ப லுக்கி பேபி.” என அவள்‌ கன்னம்‌ இரண்டையும்‌ பிடித்து ஆட்டினாள்‌.

“வலிக்குது டி விடு.’ என அவள்‌ கை தட்டி விட்டவள்‌. ‘பாரு இப்போ ஒன்னுமே ஆகாத மாதிரி வந்து நிப்பாங்க.’ எனவும்‌,

 

அவனும்‌ உள்ளே வந்தவன்‌,”என்னாச்சு ரெண்டுபேரும்‌ உள்ளேயே இருக்கீங்க. கிளம்பல்லயா?” என்றான்‌.

ஆஹ் இதோ கிளம்ப போறோம்‌…” என்றாள்‌ புன்யா.

 

“நான்‌ இப்போ ஷோரூம்‌ தான்‌ போகணும்‌ ரெண்டு பேறுமா பார்கிங்ல வெய்ட்‌ பண்ணுங்க வரேன்‌.” என்றான்‌.

 

“ஓகே என எழுந்துகொண்ட புன்யா,’ பேபி நீ வா நான்‌ ரமேஷ்கிட்ட சொல்லிட்டு வரேன்‌” என வெளிச் சென்றாள்‌.

 

அவள்‌ போகவும்‌ அவனை பின்னிருந்து

அணைத்துக்கொண்டாள்‌ தாரா.

 

“என்ன ஸ்ரீப்பா இவ்வளவு கோவம்‌ வருது.” எனவும்‌

“எனக்கா? நான்‌ எப்போ கோவப்பட்டேன்‌…?”

 

இதுல தான்‌ என ஸ்கிறீனை காட்ட ” ஓஹ்‌! அதுவா என அவளை முன்‌ பாக்கமாக தன்‌ கைவளைவுக்குள்‌ கொண்டு வந்தவன்‌, ” நான்‌ கோவப்படவே இல்லையே ஸ்ரீ. “என்றான்‌.

 

“அதான்‌ இந்த முகத்துல நான்‌ பார்த்தேனே.” என்றவள்‌ அவன்‌ அடர்ந்த தாடியை வருடியவள்‌ “என்ன இது கோலம்‌?” எனவும்‌ “யேன்‌ பிடிக்கலையா?” என்றான்‌.

“பிடிச்சிருக்கு.”

 

“அப்றம்‌? “

 

“இல்ல, இதை பார்த்து யாராச்சும்‌

உங்க பின்னாடியே ஜெர்மன்ல இருந்து வந்துட்டாங்கன்னா அதுனால…”

 

“அதுனால…” என அவளை தன்னோடு மேலும்‌

இறுக்கியவன்‌.

 

“அதுனால பிடிக்கல. இதை இன்னும்‌ கொஞ்சம்‌

குறைச்சிகிட்டு, தலை முடியும்‌ இன்னும்‌ கொஞ்சமா ஷாட்‌ பண்ணிட்டு சமத்து பையனா இருந்தா தான்‌ ரொம்ப ரொம்ப பிடிக்கும்‌.” என்றாள்‌.

 

“சரி பண்ணிக்குறேன்‌. ஆனா அதை என்‌ முகத்தை பார்த்து சொல்லு. “

 

“ஹ்ம்ம்‌ ஹ்ம்ம்‌…” என அவன்‌ நெஞ்சிலேயே

சாய்ந்திருத்தவள்‌ “ஸ்ரீ… நான்‌ போகட்டுமா? ” என்றாள்‌ .சொன்னவள்‌ அவன்‌ நெஞ்சிலே அவன்‌ வாசத்தை அவள்‌ உடல்‌ உணர அவனை விட்டு போக மனம்‌ இல்லாது நின்றிருக்க.

 

“போகணுமா? ” என்றான்‌…

 

ஸ்ரீ…” என அவள்‌…

 

“ஓகே டா.. போலாம்‌. எனக்கும்‌ நிறையே வேலைகள்‌ இருக்கு. நீ வீட்டுக்கு போய்‌ ரெஸ்ட்ல இரு நான்‌ நைட்க்கு பேசுறேன்‌… ” என்று அவள்‌ தலை நிமிர்த்தியவன்‌ அவள்‌ நெற்றியில்‌ முதல்‌ முத்தம்‌ பதிந்து வைத்தான்‌.அவளும்‌

கண்மூடி அதனை ஏற்றுக்கொண்டவள்‌. தேங்க்ஸ்‌

என்றாள்‌. “எதுக்கு? ” எனவும்‌ சிரித்தவள்‌ ‘இல்ல நீங்க தயிர்சாதமோனு நினைச்சிருந்தேன்‌. இல்லனு ப்ரூப்‌ பண்ணினத்துக்கு.”என்று விட்டு அவள்‌ திரும்ப,தன்னை நோக்கி மீண்டும்‌ அவளை இழுத்தவன்‌ “யாரு தயிர்‌ சாதம்‌? பொண்ணு பாவமே காய்ச்சல்ல வேறு

இருக்கானு விட்டா நான்‌ உனக்கு தயிர்சாதம்‌.ஹ்ம்ம்‌… ‘என்றவன்‌

 

“நான்‌ நல்லா நாட்டுக்கோழி பிரியாணியே

சாப்பிடுவேன்‌.சோ அதுக்கு மேடம்‌ மயக்கம்‌ போடாம நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோங்க இப்போவே” என்றான்‌.

 

நாணியவள் அவனிடம்‌ இருந்து விலக.

“‘ஒகே கீழ வெய்ட்‌ பண்ணுடா வரேன்‌.”என அவள்‌ நெற்றியில்‌ மீண்டுமோர்‌ இதழொற்றி அனுப்பினான்‌.அவன்‌ கீழே வர தாராவிடம்‌ “ஹேய்‌ பேபி நம்ம டிரைவர்‌ சார்‌ வந்துட்டாரு எனவும்‌ சிரித்துக்கொண்டே அவர்கள்‌ அருகில்‌ வந்தவன்‌ இருவரையும்‌ ஏற்றிக்கொண்டு 

அவர்களை வீட்டில்‌ விட்டுவிட்டு ஷோரூம்‌ நோக்கி வண்டியை விட்டான்‌.

 

 

Leave a Reply

error: Content is protected !!