இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 2

Screenshot_2021-06-21-17-30-01-1-25864ce6

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 2

 

Epi-2

“ஹலோ ஹாய் மா.”

“ஹே ஸ்ரீ… எப்படிப்பா இருக்க? சாப்டாச்சா? என்ன பண்ற? நிவி எப்படி இருக்கா? எப்ப வரீங்க? ப்ராஜெக்ட்  ஒர்க்கெலாம் எப்படி போகுது?”

 

“ஹையோ மா, என்ன பேச விட்டால் தானே பதில் சொல்ல முடியும்…

 

“ஆமால்ல…”

” ஹ்ம் ஆமா. என சிரித்தவன், நா நல்லா இருக்கேன் மா.

இப்போதான் சாப்பிட்டேன். நிவியையும் இப்போதான்  ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்தேன்.

அப்பா வந்துட்டாங்களா?”

” ஆமாடா இப்போ தான் வந்தாங்க,சாப்பிட்டு மாமா கூட பேசிட்டு இருகாங்க.பாட்டி உன்ன கேட்டுகிட்டே இருந்தாங்க, இரு பாட்டிக்கிட்ட தரேன்.”

 

“ஹாய் வள்ளிம்மா எப்டிருக்கீங்க?”

 

” இருக்கேன்டா ஸ்ரீ. நீதான் என்ன பார்க்க  வரவே இல்லை.”

“பாட்டிம்மா, நா நெஸ்ட் வீக் நம்ம பிரன்ஸ் கூட அங்க வரேன் ஓகே. இந்த வீக் நம்ம தருண்  ஊருக்கு போறோம்.

“அதுவும் இங்க தானேடா இருக்கு.”

“இல்ல பாட்டிம்மா, அவங்க தோட்ட வீட்டுக்கு  போறோம்.அவங்க பாமிலி கூட.”

 

” ஹ்ம் சரிடா கண்ணா பார்த்து கவனமா  இருந்துக்கோப்பா. நிவிதாவும் உன்கூடவே   வருவாளே.”

“ஆமா பாட்டி எங்க என்னை தனியா  விட்டிருக்கா.ஓகே பாட்டிம்மா மாத்திரையெல்லாம் நேரத்திற்கு சாப்பிடுங்க டேக் கேர் வள்ளிம்மா, அம்மாட்ட குடுங்க.’

‘அப்புறம், அத்தை என்ன பன்றாங்க ம்மா ? மாமாக்கு இப்போ எப்படிம்மா இருக்கு?”

 

“அத்த இப்போ தான் ஹரி கூட கோயில் போனா. மாமாக்கு நடக்க முடியலைன்னாலும் பேச்சு  விளங்க கதைக்குறாங்கப்பா. ஹ்ம் ஸ்ரீ,நம்ம ஹரியோட அத்தை வீட்ல இருந்து பேசி நாங்கப்பா,’

 

‘கல்யாண வேலை எல்லாம் இருக்கு ஹரிக்கு. நீ இருந்தா அவனுக்கு துணையாக இருக்கும்னு  பீல் பண்ரான். உன்கூட கதைக்குறதா சொன்னான். “

“ஹ்ம் பார்க்கலாம் மா அடுத்த வாரம் வரும்  போது அவனுடன் கதைக்கிறேன். சரிம்மா வெச்சுரவா, லவ் யூ மா.”

 

விஜயின் அத்தையும் நிவியின் தாயுமான மீனாவின் கணவர் பிரசாந்திற்கு ஒரு  வருடத்திற்கு முன் பக்கவாதம் ஏற்பட்டு சக்கரை நாட்காலியிலேயே அவர் காலம் செல்கிறது.அவர் இருந்த இடத்தில் ஹரி   இருந்து இன்று தன் மாமாவோடு

RP Industries இன்ஒரு பாகமான (RP showroom)வாகன ஷோரூமிற்கு பொறுப்பாக இருந்து நடத்தி வருகின்றான். 25வயது  நிரம்பிய வாலிபன்.இவனது திருமணமும் இன்னும் இரண்டு மாதங்களில் சந்தியாவுடன் நடை பெற இருக்குகிறது.

 

விஜயின் அப்பா ராஜ் பிரகாஷ், விஜய் அவனது   படிப்பை முடிக்கும் வரை காத்திருக்கிறார் அவரும் ஓய்வு பெற.விஜய் பேசிவிட்டு அறைக்கு வரும் போது தருண் கட்டிலில் சாய்ந்தவாறு இருக்க,

“தரு என்னடா யோசனை? “

 

“ஹ்ம்ம்ம்… ஒன்னும் இல்லடா சும்மாதான்.

” நீ இரண்டு நாளா இப்படித்தான் இருக்க, என்னாச்சு? “

“அப்டில்லாம் ஒன்னும் இல்லடா. “

 

“இல்லன்னா ஓகே தான். என அவனது  தொலைபேசியை கட்டிலில் போட்டு விட்டு  குளியலறைக்குள் நுழைந்தான்.அவனது தொலைபேசி ஒளிர அதில் விஜயின்  தோள்களில் தொங்கயவாறு நிவி இருக்கும் படமது. பார்த்த கனம் மனம் ரணமானது தருணுக்கு. குளியலறையில் இருந்து வெளி வந்தவன் தருண் தொலைபேசியை பார்த்தவாறு அமர்ந்து இருப்பதை பார்த்து,

 

“என்னடா அப்படி பாக்குற,ஓஹ்! இதுவா ‘

என தொலைபேசியை கைக்கு எடுத்து அதனை  பார்த்தவாரே,

‘நிவி அவ அண்ணனை விட என்னோடு தான்  அதிகம் இருப்பாள். என் கூட இருந்தா அவளுக்கு  கால் இல்லாதவள் போல தோளில் தான் தொங்குவாள், ஒன்னாவே வளர்ந்ததாலோ  என்னவோ இரண்டு பேருடைய தேவையும் ஒன்றாகவே இருக்கும், சரியான வாலு, ஜான்சி  ராணி.” என கூறிக்கொண்டே படுக்கையில் விழுந்தான்.நட்புக்கும் காதல் கொண்ட மனதுக்கும் நடுவே அல்லாடிக்கொண்டிருந்தான் தருண். யார் மனதில் யாரறிவார் விதி வலியது ….

 

அன்று சனிக்கிழமை காலை கதிரவன் ஒளி பரப்ப, விஜய்,அவனது வீட்டிலிருந்து  வரவழைத்த கருப்பு நிற (land crusier200) இல் தருண், பிரபா மற்றும் நிவி அவளது இரு  தோழிகளுடன் ஏற, தருணின் ஊர் நோக்கி அவர்களது பயணம் தொடங்கியது.

 

“நிவி வழியில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால்,இப்போதே வாங்கி விடுவோம், ஊருக்கு போன பிறகு நான் திரும்ப  காரில் கை வைக்க மாட்டேன் என விஜய் கூறினான்.”

“இல்ல அத்து எல்லாம் எடுத்துட்டேன்.”

“பின்னால கம்போட்டப்லா இருக்கா?”  என கேட்கவும்,

“ஓகே அத்தான் வீ செட்டில்ட். பீல் கம்போடபில் அத்து” என்றாள்.

 

நிவியின் நண்பிகளான மது, வர்ஷினி தருணிடம் “அண்ணா ஊர்ல ஆறெல்லாம்   இருக்கா?” என கேட்க, பிரபா தருணை முந்திக்கொண்டு,

“எதுக்கு ஆற நாசம் பண்ணவா? சுத்தமான  குடிநீரை நீ குளிச்சு கூவ நீரா மாற்றவா?” என கேட்டான்.

அவனை முறைத்தவர்கள் பின்னாலிருந்த பையினால் அவனை ஒரு வழி பண்ணி  விட்டனர். விஜேயுடன் தருண் முன்னால் அமர்ந்திருக்க பின் இருக்கையில் பிரபா  மட்டுமே வர அதற்கு பின்னே அமர்ந்திருந்த தோழிகளுக்கு வசதியாய் போனது.

 

“டேய் இவள்களுடன் என்னை கோர்த்து விட்ட, நீ எல்லாம்  நண்பனாட? பேச்சுக்கு ஒன்னு சொன்னா கொலை பண்ண பாக்குறாளுக.

என்னை இறக்கிவிடு நா பஸ்ல வரேன்,அய்யோ அப்பா ! வலி தாங்க முடியலடா.”

 

“எதுக்கு பக்கி அப்பாவை வரச் சொல்ர?”

நிவி கேட்க,

 

“நிவி அவனை எதுக்கு எப்போ பாரு 

கிண்டல் பண்ணுற இதோ என்கூட பக்கத்துல வரானே இவனுக்கு ஏதாச்சும் சொல்றது.”

விஜய் அதில் தருணையும் இழுத்து விட,

 

“யேன்டா உனக்கு இந்த வேண்டாத வேல’ தருண்  விஜயை முறைக்க,

‘ஹையோ முகத்தை பார்த்து பேசிட்டாலும்  முத்து பல்லெல்லாம் சிதறிரும்’ என முனங்கியவள்,

 

“போ அத்து,இவன் என்ன பண்ணாலும்  தாங்குகிறான் நண்பேன்டா.” என பின்னாலிருந்து நிவி பிரபாவின் கழுத்தை  இறுக்கிக்கொள்ள,

” ஐயோ காப்பாத்துங்க என்னை கொலை பண்ணுறா என கத்திக்கொண்டே அவளது  தலையில் குட்ட,

“டேய் பக்கி குட்டாதடா வலிக்குது ” எனவும்,

“அப்போ எனக்கு மட்டும் சுகமா இருக்கா, எனக்கும் தான் வலிக்குதுடி ராட்சசி”  என இருவரும் மாறி மாறி மாற்றவர்களை ஒரு வழிப்படுத்தி கலகலப்பாக, இடையில் காலை  உணவையும் எடுத்துக்கொண்டு தருண் ஊருக்கு வந்தனர்.

தாரா அவளுடைய பெற்றோருடன் தங்கள்  தோட்ட வீட்டுக்கு நேற்று இரவே வந்ததனால்  காலையே எழுந்த தாரா அனிதாவையும் எழுப்பி குளித்து கிளம்பினர்.மத்தியானம் சமையலுக்கு ஏற்பாடுகள் எல்லாம் வேலையால் உதவியுடன் மாதவி சமையலில் ஈடுபட்டிருக்க,

“ம்மா அண்ணா எத்தனை மணிக்கு வருவாங்க?”

தாரா கேட்கவும் பத்து மணிக்கெல்லாம்  வந்துருவாங்கடா குட்டி ” என மாதவி கூறினாள்.

 

“இப்போவே மணி ஒன்பது ஆச்சு, நீ நம்ம ரோஜா தோட்டம் பக்கமா அப்பா போனாங்க அனிதாவை  கூட்டிக்கொண்டு அங்கே போய் வாங்க.” என்று கூறினார்.

 

புதிதாக ரோஜா தோட்டம் அமைக்க வாங்கிய  நிலப்பகுதியில் ரோஜாச்செடிகளை நட்டு மூன்று  மாதங்களே. மொட்டுக்கள் நிறைந்து பூக்கள் மலர இன்னும் ஒரு 3, 4 நாட்கள் எனும் நிலை.

 

தாரா எதையோ தேடிக்கொண்டு இருப்பதை  கண்டு, ” என்ன வேணும் குட்டி? “என, ம்மா “மட்குடம் ஒன்னு இருந்தது அது வேணும்மா.”

 

“இதோ இங்கே இருக்குடா என அதனை எடுத்து  குடுத்தார். அப்பாடட்ட சொல்லி தண்ணி எடுங்க குட்டி  நீ கிணற்றுல அல்ல வேணாம் “என சொல்லியே அனுப்பினாள்.

 

தோட்டத்தோடு ஓரமாக மூன்று பக்கமாக சுவர்  கட்டி படிகளில் இறங்கி சென்று அள்ளி குளிக்கும் வகையில் நிலத்தோடு அமைந்த  கிணறு ஒன்று உள்ளது.தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச மோட்டார் போட்டும், குளிப்பதற்கு  வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

அனிதாவுடன் இருவரும் ஒவ்வொரு கூடைகள்  கையில் எடுத்துக்கொண்டு வழி முழுதும் உள்ள  பல வித பூக்களை பறித்து போட்ட வண்ணம் குமாரை தேடி சென்றனர்.

தூரத்திலே தாராவை கண்டவர் என்றும் போல  மகளின் அழகிய முகம் கண்டு நெகிழ்தவர்,

” ஸ்ரீ அப்பா இங்க இருக்கேன்.என  கூப்பிட்டார்.இருவரும் அவரிடம் சென்று சிறிது நேரம் அவருடன் செல்லம் கொஞ்சி விட்டு

 

ஒரு பக்கமாக மா மரம் ஒன்றின் கீழ்  இளைப்பாற வென அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துக்கொண்டு பறித்த பூக்களைதொடுத்து கழுத்துக்கு, கைக்கு, தலைக்கு கிரீடம்  என பூக்களால் செய்து தாரா அணிந்துகொண்டாள்.

இது எப்போதும் இங்கு வந்தால் தாராவின் வளமை.

அனிதாவுக்கு வரைவதில ஆர்வம் அவள் கொண்டு வந்த அவளது புத்தகத்தில்  வரைந்ததுக்கொண்டு இருந்தாள்.

 

நீல வண்ண பாவாடை, சட்டையும் வெள்ளை வண்ண தாவணியும் அணிந்து பூக்கள்  பலவண்ணத்தில் சூடி குட்டி தேவதையாக இருந்தாள்.

 

“அனி நல்லாயிருக்கா?”

” ஹேய் சூப்பரா இருக்குடி, இரு அப்பாகிட்ட  போன் வாங்கி போட்டோ எடுக்கலாம்.

இரு நானே எடுத்துட்டு வரேன்.”என அனிதா  குமாரிடம் போன் வாங்கி வந்து இருவரும் பூ  மாலைகளை போட்டு போட்டோ எடுத்து கொண்டனர்.

 

பின்னர்,”அனி கிணற்றுல இந்த குடத்துக்கு  தண்ணி எடுக்கலாம்டி எனக்கு தூக்கி இடுப்புல வெச்சுட்டு நடக்க ஆசையா இருக்குடி, ஒரே ஒரு வாட்டி வாயேன்டி.”

 அச்சோ வேணாம்டி அம்மா திட்டும் அப்பாகிட்ட  சொல்லு அள்ளி தருவாங்க.

 

“ஹையோ அனி அப்பா தூக்க விட மாட்டாங்கடீ. ப்ளீஸ் போலாமே.”

அனிதா முடியாது என கூறவும் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு உட்க்கார்ந்து இருந்தாள்.

 

“ஹையோ கோபித்துக்கொள்ளாதடீ. விழுந்துட்டேன்னா என்ன பண்றதுனு தானே வேணான்றேன்.”

அவள் முகம் பார்த்த அனிதா,” சரி நா இங்க இருந்து அப்பா வர்ராங்களான்னு பார்க்குறேன் நீ சீக்கிரமா எடுத்துட்டு வா ஓகேயா?”

 

“ஓகே ஓகே…” என துள்ளிய தாரா செல்ல  பார்க்கவும்

” தாரா கொஞ்சமா அள்ளிகோ பாரமா  இருக்கும்டி என்றாள். “

“அடி இது பெரியவங்க அள்ளுர குடம் இல்லடி  சின்னது,என்னால முடியும்.

ஆசையா இருக்குடி அப்பா அதுல குளிக்கவும்  விட மாட்டாங்க தண்ணியாவது அள்ளி பார்க்கிறேன். “

“ஹ்ம் ஓகே போசீக்கிரம் வந்துரு.” தாரா குடத்தை தூக்கி  இடுப்பில் வைத்துக்கொண்டு கிணற்றை நோக்கி போனாள்.

 

விஜய்யின் வண்டி வந்து தருணது அழகிய தோட்ட வீட்டின் முன் நின்றது.

 

“வாவ் !சூப்பரா இருக்கு.”

 என்று கூறிக்கொண்டே அனைவரும் வண்டி விட்டு இறங்கினர். அவ்வளவு அழகு.தருணது தோட்ட வீடோ மர வேலைப்பாடு மிகுந்த வீடு.

அவர்களை வரவேற்கும் விதமாக வெளியே வந்த மாதவி அனைவரையும் அழைக்க,

 

“ஹாய்  மா…” என தருண் அவரை அணைத்து  கொண்டான்.

 

மற்றவர்களும் ஹாய் கூறி உள்ளே செல்ல  “எங்கம்மா அப்பாவ காணும்? “

“தோட்டத்துல இருப்பாங்கடா இப்போ  வந்துருவாங்க. விஜய் எங்கடா காணும்?”  என அவனை மாதவி கேட்க,

“பின்னாடியே வந்தான் மா.”என்று பின்னே பார்க்க விஜயை காணவில்லை.

 

எங்கடா போனான் என்று வண்டி இருந்த இடம்  திரும்ப வந்து பார்த்து அவன் அங்கிருப்பதைக் கண்டு,”என்னாச்சுடா?” என அருகே வர,

 

“நிவி வோமிட் பண்ணிட்டாடா அதான் உள்ள  வரல்ல வெயிட் பண்ணு வரேன்.”

 

நிவி வண்டியில் பின் இருக்கையில் உட்கார்ந்து  தூரம் சென்றால் வாந்தி எடுத்து விடுவாள். இன்று தருண் முன்னால் உட்காரவும் அவளும்  பிரன்ட்ஸ் கூட வரும் போது ஒன்னும் வராது சமாளித்து கொள்ளலாம் என வந்தவள் இறங்கும் தருவாயில், இதற்கு மேல் தாங்காது கார் உள்ளேயே எடுத்துவிடுவேன் என மற்றவர்கள் ஒரு கதவு வழியாக இறங்க, நிவி  மற்றைய கதவை திறந்து அவசரமாக இறங்கும் போது அடக்கி வைத்திருந்த எல்லாம் எடுக்க,

விஜயும் வெளியால் அதே கதவை திறக்க  அப்படியே அவனது டெனிம் எல்லாமே வாந்தி எடுத்து  விட்டாள்.

“ராட்சசி, என்ன பண்ணின?”என அவன்  சுதாகரிக்கும் முன்னமே அவள் எடுத்து விட்டிருந்தாள்.

விஜய் எதிலும் சுத்தம் அதிகம் பார்ப்பான் அவனது விடயங்களில். அதை நன்கு  அறிந்தவளோ திட்டுவான் என பயந்து கலங்கிய கண்களுடன் அவனை பார்க்க பாவமாகி  போனது விஜய்க்கு.

 

“நிவிமா என்னாச்சு  டா?” என அவள் தலையை பிடித்தவாறு ஒரு ஓரமாக கூட்டி வந்து  வாந்தியெடுக்க விட்டான்.

அப்போது தான் தருணும் அம்மாவும் அவ்விடம் வர,

“என்னாச்சுப்பா?”

”  என்னாச்சுடா? ” என தருண் நிவி முகம் பார்க்க, பின்னாடி உக்கார்ந்து வந்தா அவளுக்கு  ஒத்துக்காதுடா அதான். இப்ப ஓகே டா.ஏதாவது குடித்தாலே சரியாகிவிடும்.

 

“நிவி, நீ ஆன்ட்டி கூட போய் டிரஸ் சேன்ஜ்  பண்ணிட்டு ஏதாவது குடி.” என அவளை உள்ளே அனுப்ப,

” தருண் அவளுக்கு முடியாதுன்னா நீ பின்னாடி  போக வேண்டியது தானே.பாரு இப்போ இவளுக்கு கஷ்டமா போச்சு. “மாதவி கூற,

 

“ஆமாண்டா என் தலையாவது கொஞ்சம் தப்பி  இருக்கும் என பிரபா கூற அவனை முறைத்த தருண்,

“எனக்கு தெரியதுமா இல்லனா நா பின்னாடி  போயிருப்பேன். ‘

‘சாரி நிவி.” என்றான்.

 

“அச்சோ இல்ல ஆன்ட்டி.நா தான் பிரன்ஸ் கூட ஒன்ன வரலாம்னு பின்னாடி உட்கார்ந்தேன்.”

 

“சரி சரி உங்க முன்னாடி பின்னாடி கதையை  முடிங்கப்பா நம்ம நாக்கெல்லாம் செத்து கெடக்கு பச்சை தண்ணியாச்சும் குடுக்கப்பா.” என பிரபா கத்த, 

 

“வழி முழுக்க வாய் மூடாமல்  சாப்பிட்டுக்கொண்டே தானே வந்த? ” என விஜய்  கேட்க்க,

“நிவி வோமிட் பண்ணுனதை பார்த்து நா டயர்ட்  ஆகிட்டேன் அதான் ” என்றான்.

 

“வாடா குட்டி உள்ளே போலாம்.பசங்களா இவ லக்கேஜ் எல்லாம் கொண்டு வந்து தாங்கப்பா.”மாதவி கூறிக்கொண்டு அவளை அழைத்து உள்ளே செல்ல.

“இதோ வரோம்மா.’

‘கடைசியில் இவ லக்கேஜ் தூக்க வெச்சுட்டா”  பிரபா அவளது பைகளை உள்ளே கொண்டு செல்ல பின்னால் திரும்பி பார்த்த நிவி பழிப்பு  காட்டிவிட்டு சென்றாள். ராட்சசி என திட்டிக்க்கொண்டே அவனும் உள்ளே சென்றான்.

 

“தருண் எனக்கு குளிக்கனும்டா ” எனக் கேட்க, “வா உள்ள போலாம்” என கூப்பிட.

 

“இப்படியே எப்படி போறது வெளில குளிக்க  இடம் ஒன்னும் இல்லையா?” என விஜய் கேட்க 

 

“தோட்டத்துக்கு பக்கத்துல தான் கிணறு இருக்கு.கொஞ்சம் நடக்கனும் டா முடியுமா  உன்னால?” என.

செமையா இருக்கும்டா அங்கேயே  குளிச்சுகிறேன். ” என அவனது உடைகளை  சிறிய பாக் ஒன்றில் போட்டுக்கொண்டு டீஷர்டினை கலட்டி உள்ளே அணிந்திருந்த பெனியனுடன் டவலை கழுத்தில்  போட்டுகொண்டு,

“எங்கன்னு காட்டுடா நா குளிச்சிட்டு வரேன்.” எனவும் இருவரும் கிணற்றை நோக்கி நடந்தனர்.

 

அவ்வழியே தருணின் அப்பாவும் வர,

“எங்க ரெண்டுபேரும் வந்த உடனே குளிக்க கிளம்பிட்டிங்க”.எனவும், அவரிடம் விடயத்தை  கூறி,”இருங்கப்பா இவனை விட்டுட்டு வரேன்’ என கூறி விட்டு

‘எங்கப்பா ஸ்ரீ?” என தங்கையை கேட்க

 

“அவ தோட்டத்துலதான் அனிதா கூட இருக்கா  நீங்க வாங்க, அவ இப்ப வந்துருவா.” எனவும் “ஓகேப்பா வீட்ல பசங்க எல்லாம் இருகாங்க போய் பாருங்கப்பா.” என கூறிக்கொண்டு சென்று கொஞ்ச தூரத்தில் இருந்த கிணற்றை விஜய்க்கு காட்டவும்,

“நீ போடா நா குளிச்சிட்டு சீக்கிரமா வரேன்.”  என்று தருணை அனுப்பி விட்டு அக் கிராமிய வாசனை நிறைந்த அழகை ரசித்தவாறே கிணற்றில் குளிக்க சென்றான்.

இவன் இடது பக்கத்தையே பார்த்துக்கொண்டு  வர மரத்தின் கீழ் இருந்த அனிதாவை கவனிக்க வில்லை.

 

இவர்கள் வர சில நிமிடங்கள் முன்னேதான்  தாரா கிணற்றுக்கு சென்றிருக்க இதை அறியாத விஜய் கிணற்று படிகளில் கால் வைக்க கீழே கிணற்றுக்கு அருகே ஒரு மட்குடம்  உடைந்திருக்க அதன் அருகே பூக்கள் சூடிய அழகிய பாவை ஒன்று கால்களை மடக்கி அமர்ந்தவாரு இருந்தாள்.

 

இதைக் கண்டவன் கண்கள் இமை மூட  மறந்ததுவோ!ஆமாம் 

 

“சோ கியூட் எனும் வகையில் ரசித்தவன் ஓர்  நொடிதான்.

“ஹாய்! யார் நீங்க இங்க என்ன பண்றிங்க?” என கேட்கவும், அவனை ஆவென பார்ப்பது அவள்  முறையானது. படத்துல ஹீரோ என்டர் ஆகும் போது கொடுக்கும் பார்வையாகத்தான் அவளது பார்வை ஓர் நொடி இருக்க, பின்னர் அவனது கேள்விக்கு விடை கூறாது முழிக்கவும், அப்போது தான அவனுக்கும் தருண் அப்பா  அவளது தங்கை தோட்டத்தில் இருப்பதாக கூறியது நினைவில் வர,

ஓஹ் தருண் சிஸ்டர் ராதா தானே நீ? “எனக் கேட்டான்,

 

“ஆமா.ஆனா நான் தாரா.” எனக் கூறினாள்.

“எனக்கு பார்க்க நீ ராதா போலதான் இருக்க. இங்க என்ன பண்ற தண்ணி எடுக்க வந்தியா?” 

அதற்கும் தலையை ஆட்ட,

“சோ ச்வீட்…” சொல்லத்தான் தோன்றியது.

 

அவன் படிகளில் கீழிறங்கி வர ,

“அம்மாட்ட போகணும் பக்கத்துல வராதீங்க.” என மெதுவாக கண்கள் கலங்க கூறினாள். அவளுக்கு மயக்கம் வரும் போல தோன்றவும் முகம் எல்லாம் சிவந்து விட,

 

” என்னாச்சுடா? விழுந்துட்டியா,எங்காச்சும் அடி பட்டுச்சா?என கேட்டுக்கொண்டே அவளிடம் வர.

 

“தூர போங்க அம்மாட்ட போகணும் அம்மா கூப்பிடுங்க.” என கூறிக்கொண்டே மயங்கி விழ அவள் சரிவது கிணற்றுப்பக்கமாக இருந்திட சட்டென குனிந்து அவள் விழாதவாறு தாங்கினான்.

“ஹேய் … என்னாச்சு என அவளை  தாங்கியவன் அவள் உடையும் நனைந்திருக்க. அவனது டவலால் அவளை போர்த்தி விட்டு  தருணுக்கு கால் செய்து சீக்கிரம் வருமாறும், அம்மாவை அழைத்து வருமாறும் கூறினான். அவளை அப்படியே தூக்கிக்கொண்டு வந்தவன்  அனிதா அமர்ந்து இருந்த இடத்தை அப்போதுதான் கண்டான். அவர்களை கண்ட அனிதாவும்,

“என்னாச்சு தாராவுக்கு, நீங்க யாரு, எதுக்கு  அவளை தூக்கிக்கொண்டு வரீங்க?” என கேட்டுக்கொண்டே இவனருகே ஓடி வந்தாள்.

 

அதில் உள்ள இருக்கையில் அமர்ந்து தாராவை படுக்க வைத்தவன்,

“இவ பிரன்டா நீ?இவ கால கொஞ்சம் தேச்சு  விடு.” எனவும் அவளும் பயத்தில் கால்களை தேய்த்து விட, விஜய் அவள் கன்னத்தை தட்டி எழுப்பவும் தருண் அம்மா அப்பா என  எல்லோருமே அவ்விடம் வந்து விட்டனர்.

“என்னாச்சுடா?” என தருண் வர.

 

“கிணற்றுக்கிட்ட இருந்தாடா நா போகவும் பயத்துல தூரமா போங்க அம்மாவ கூப்பிடுங்கனு சொல்லிகிட்டே மயங்கிட்டா டா?” என்னை கண்டு பயந்துட்டாளோ தெரிலடா.” விஜய்க்கு மனம் கஷ்டமாகி விட, அவ்விடத்தில்  இருந்து எழுந்தான் எழும் போது அவனது கையில் இருந்த செயின் டவலில் மாட்டு பட்டு தாராவின் கை பிடியில் இருக்கவும் அதனை கையிலிருந்து கலட்டி விட்டு நகர்ந்தான். 

 

அவன் மனம் உணர்ந்த தருண், “அவ  அப்டித்தாண்டா பயப்புடாத.” என அவனை  சமாளித்து விட்டு தாயை பார்க்க அவரோ  அப்பாவிடம் எதுவோ கூறிக்கொண்டு இருந்தார்.விஜய் கால் செய்யவும் அனைவரும் அவ்விடம் வந்திருக்க, “பசங்களா நீங்க வீட்டுக்கு போங்க நாம பின்னாடியே வரோம். வந்ததும் இங்க வந்துட்டீங்க, ரொம்ப களைப்பா இருக்கும்.” என கூறிவிட்டு சென்றார்.

 

நிவிதாவை அழைத்த  மாதவி, “குட்டி வாடா கொஞ்சம், இவளுக்கு பீரியட்ஸ் வந்திருக்கு  அதான் பயந்துட்டா.”

எனக் கூற, “அதுக்கு யேன் மயங்கி விழுந்து டா?

“இல்லடா பனிரெண்டு வயசுலே வயதிற்கு  வந்திருந்தாலும் இன்று வரை பீரியட்ஸ் வரவில்லை, டா க்டர்ஸும் பயப்படும் படி  ஒன்னும் இல்லன்னாங்க. ரொம்ப நாளைக்கி அப்புறம் இல்லையா, அதனால அவளும் இன்னக்கி பயந்திருப்பா.”என்றார்.

 

“அப்டியா ஆன்ட்டி நாம ரொம்ப பயந்துட்டோம்.

என கூறிவிட்டு தாராவுக்கு நீர் கொடுத்து  எழுப்பி அமர வைத்தனர். நன்றாக பயந்திருந்தவள் அவளை சூழ அண்ணனும்  அம்மாவும் இருக்க கொஞ்சம் விலகி விஜய் நிவியுடன் மற்றவர்களும் நின்றிருந்தனர்.

 

“ஹே! ஸ்ரீ குட்டி வந்ததுமே என்ன ரொம்ப  டென்ஷன் பண்ணிட்ட.” என அவள் தலையை கலைத்துவிட்டான் தருண்.உட்கார்ந்த வாரே அண்ணனின் கால்களை கட்டிக்கொண்டவள் அப்படியே விஜயை நோக்க அவனும்  இவளைத்தான் பார்த்திருந்தான்.மனதில் எவ்வித எண்ணங்களும் இன்றி அழகிய ஓவியத்தினை ரசிக்கும் பார்வை அது..

 

Leave a Reply

error: Content is protected !!