இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 24.2

Screenshot_2021-06-21-17-30-01-1-875a2a58

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 24.2

Epi24.2

விஜயின் வீட்டிலிருந்து 

இருபத்தைந்து பேருக்கு மேலாக

வந்திருக்க நான்கைந்து வாகனங்கள்‌…

 

” என்னடா இவ்வளவு பெரிய பட்டாளமே வந்திருக்கு. ஹ்ம்ம்‌ ஹீரோ சார்‌ வண்டியை மட்டும்‌ காணோமே…”

 

ஆம்‌ அவன்‌ அதையும்‌ வைத்துவிட்டு பிரபாவுடன்‌

வேறொரு வண்டியில்‌ வந்திருந்தான்‌.

 

அனைவரும்‌ உள்ளே வந்து அமர்ந்திருக்க பெண்கள்‌ முன்‌ வாயிலோடு அமைத்திருந்த இன்னொரு உள் அறையில்‌ முழுவதுமாக அமர்ந்திருந்தனர்‌. அவர்கள்‌ அமர்ந்திருந்த

இடம்‌ தவிர்த்து மற்றைய இடங்கள்‌ முழுதும்‌ ஒவ்வொரு வகையில்‌ அலங்காரம்‌ பண்ணப்பட்ட தட்டுக்கள்‌ பரப்பப்பட்டிருந்தன.என்னடா இது என்பதை போல அதை பார்த்துக்கொண்டே புன்யாவுடன்‌ இறங்கி வந்தாள்‌ தாரா.

 

பெண்‌ பார்க்க வர அவளை தோழி அழைத்து வருவது போலவே இருந்தது.ஆனால்‌ உயர்ரக காட்டன்‌ லோங்‌ ஸ்கர்ட்‌ ப்ளெளஸ்‌ ஒரு தோளில்‌ வலிந்த அவள்‌ மஞ்சள்‌ நிற ஷோல்‌ உயர்த்தி கட்டிய போனிடைல்‌ அவ்வளவுதான்.

 

வந்தவள்‌ பாட்டி காலில்‌ விழுந்து எழ,

“நல்லா இருடா’ என்றவர்‌, ‘எல்லோர்‌ கால்லயும்‌ விழணும்னா கஷ்டம்‌ டா எலோருக்குமா சேர்ந்து வணக்கம்‌ வச்சுக்கோ.” எனவும்‌ அப்படியே செய்தாள்‌. அதன்‌ பின்னர்‌ அருணா அவளை

அருகே அமர வைத்து அவள்‌ உடல்‌ நலம்‌ விசாரித்தவர்‌ அவர்களது குடும்பத்தினரையும்‌ அறிமுகப்படுத்தினார்‌. மாதவியும்‌ நிவியின்‌ அன்னையை விசேடமாக கவனிக்க தவரவும்‌ இல்லை. அனைவரும்‌ சிற்றுணவுகள்‌ பலதும்‌

உண்டு தேநீர்‌ பருகி முடிய அருணா அவளை அருகில்‌ அழைத்தவர்‌ அவள்‌ கைகளில்‌ ஒரு தட்டினை எடுத்துக் கொடுத்தவர்‌ “போய்‌ பார்த்துட்டு பிடிச்சிருந்தா போட்டுக்கோ. “எனவும்‌ எதுவோ புரிந்தவள்‌ போல தலை ஆட்டிவிட்டு புன்யாவுடன்‌ தனதறைக்கு வந்தவள்‌

அதனை பிரித்து பார்க்க அதில்‌ சேலை இருகந்தது .அதனை பார்த்திருக்க, போனில்‌ மெசேஜ்‌ ஒலி ஒலிக்க பார்த்தவள்‌. விஜய்‌ தான்‌.

“நானே என்‌ பொண்டாட்டிக்கு வாங்குனது. பிடிச்சிருக்கா? ‘ 

‘என்ன ஒன்னு முதல்‌ முதலா என்னால மட்டும்‌ பார்க்க முடியல.” என்று அனுப்பியிருந்தான்‌.

 

இவரு வராம என்ன நிச்சயம்‌. நான்‌ கேட்டெனா?’ என மனதில்‌ அவனை திட்டி மெசேஜில்‌, “எனக்கொன்னுமே பிடிக்கல.. “என அனுப்பியவள்‌ அதனை புன்யாவின்‌ உதவியுடன்‌ கட்டி முடித்தாள்‌.

 

“வாவ்‌ பேபி சூப்பரா இருக்க. செம சிலேக்ஷன். ஜூவெல்ஸ்‌ ஒன்னும்‌ போடல்லையா? ‘ எனவும்‌ அதான்‌ ஒன்னும்‌ இல்லையே. பிடிக்காதுன்னு அனுப்பி இருக்க மாட்டாங்க என்றவள்‌ அவளிடம்‌ இருந்த பெரிய ஜமிக்கி இரண்டை மட்டும்‌ போட்டவள்‌ கூந்தலை உயர்த்தி கட்டப்போக ‘பேபி இதோ இருக்கு, சாமிங்கா இருக்கு போட்டுக்கோ என அன்று விஜயின் அன்னை எடுத்திருந்த நகைகளை அணிவித்து விட்டவள்,’ஹேரை லூசா விடேன்‌ என்று இரு பக்கமாக எடுத்து கிளிப்‌செய்து விட்டாள்‌. இப்போ ஓகே வா போகலாம்‌ என்றிட, எனக்கு என்னமோ படபடங்குது.அப்போ இரு என்று விட்டு அவளும்‌ அருகே அமர்ந்துகொள்ள.

“அச்சோ புன்யா எல்லாருமா உட்கார்ந்து இருக்கப்ப எப்பிடி கீழ போக. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. “

 

“பேபி,இப்போதான்‌ கல்யாண பொண்ணாட்டம்‌ இருக்க. இப்போ போனா கரெக்டா இருக்கும்‌. முகமெல்லாம்‌ ரெட்டிஷா.” என எழுந்துக்கொள்ள “என்னை ஒரு போட்டோ எடேன்‌” என்றவள்‌ அதனை விஜய்க்கு அனுப்பினாள்‌. அடுத்த வினாடியே பல முத்தங்களுடனான மெசேஜ்‌ வர.

‘எனக்கொண்ணும்‌ தேவையில்லை.” என்று மட்டும்‌ அனுப்பியவள்‌ அப்படியே படியிறங்கி கீழே வர இவள்‌ இறங்கி வருவதற்கு நேராக முன்னறையில்‌ அவன்‌ நின்றிருக்க அவனை கண்டவள்‌ முகம்‌ இளஞ்சிவப்பு நிற ரோஜாவென சிவந்துவிட உள்ளங்‌ கைகள்‌ வேர்த்து புன்யாவின்‌ கரங்களை பற்றிக்கொண்டாள்‌.

 

“ஹே பேபி! எப்படி சர்ப்ரைஸ்‌, நம்ம ஹீரோ சார்‌ சும்மா கலக்குறார்‌ இல்லை.”

அவனோ இவளை ஆசைத்‌ தீர பார்த்தவன்‌ அப்படியே அவன்‌ அன்னை அருகே வந்து அமர்ந்துக் கொண்டான்‌. அப்போது தான்‌ கவனித்தாள்‌, தனித்த ஓரிடத்தில்‌ ப்ரோகிதர்‌ ஒருவர்‌ அமர்ந்திருக்க ராஜ்‌ மற்றும்‌ அருணா ஒருபக்கத்திலும்‌ அவரருகே விஜய்‌. மற்றொரு பக்கத்தில்‌ குமார்‌, மாதவி ஏனையோர்‌ ஒன்றாக

இன்னோர்‌ பக்கத்திலும்‌ அமர்ந்திருந்தனர்‌. அவர்களுடன்‌ தருண்‌ பிரபா என அமர்ந்திருக்க

 

“டேய்‌ இவன்‌ ஏன்டா  என்கிட்ட ஒன்னுமே சொல்லல. என்‌ தங்கச்சியையே கரெக்ட்‌ பண்ணிருக்கான்‌. எனக்கே தெரில பாரேன்‌. “

 

“தெரிஞ்சு என்ன பண்ண போற ராசா…அதான்‌ அவங்களே எல்லாமே பண்ணிகிட்டாங்களே.”

 

“முடியட்டும்‌ இருக்கு அவனுக்கு… என்று விஜயை பார்த்து தருண்‌ முறைக்க.

“என்ன முறைக்கிற மச்சான்‌? நான்‌ தான்‌ அப்போவே சொன்னனே, நானெல்லாம்‌ லவ்‌ பண்ணினா பிரெண்டு, பிரேண்டு சிஸ்டர்ன்னு எல்லாம்‌ பார்க்க மாட்டேன்னு.”

 

“ஆமால்ல…” தருண்‌ கூற,

“டேய்‌ அப்போவே சொல்டியா” பிரபா இடையில்‌ கேட்க.

“ஆமாண்டா ஆனா இவன்தான்‌ நம்பவே இல்லை. ” என்றான்‌ விஜய்‌ சிரித்தபடியே…

 

“இருடா வச்சுக்கிறேன்‌ உன்னை… “

தாராவும்‌ அவள் பெற்றோர்‌ அருகே அமர நிச்சய ஏடு வாசிக்கப்‌ பட்டது.இன்னும்‌ சரியாக முற்பத்தைந்து நாட்களில்‌ இரட்டை திருமணம்‌ நடைபெற சுபநேரம்‌ குறித்து அனைவர் முன்னிலையிலும்‌ வாசித்தவர்‌ தாம்பூலம்‌ மாற்றிக்கொண்டனர்‌. அனைவரது உள்ளத்திலும்‌ நிறைந்த மகிழ்வுடன்‌…

 

அதன்‌ பின்னர்‌ தாரா மற்றும்‌ விஜயை மட்டும்‌ ஒரிடத்தில்‌ அமர வைத்தவர்கள்‌ அருணா அவளுக்கு கொண்டு வந்த நகைகளை அணிவித்து விட்டார்‌.கை நிறைய வளையல்களை போட்டு விட்டவர்‌ எப்போதும்‌ கை நிறைஞ்சு இருக்கணும்‌ என்றவர்‌ தலையில்‌ மல்லிகை சூடி விட்டவர்‌ பின்‌ இருவருக்குமான நிச்சய மோதிரத்தை கொடுக்க விஜய்‌ அவள்‌ முன்னே அவளது கை விரலுக்காக நீட்ட அவனை பார்த்தவள்‌ அப்படியே கை நீட்ட மோதிரம்‌ அணிவித்து அவளை அவனின்‌ பாதியாக்கினான்‌. இவளும்‌ அணிவிக்க அனைவரும்‌ பூ தூவி வாழ்த்து தெரிவித்தனர்‌. 

 

ஒன்றாக மகிழ்ச்சியை பகிர்துகொண்டவர்கள்‌

புகைப்படங்கள்‌ எடுத்துக் கொள்ளவும்‌ தவரவில்லை. இரவு உணவு ஏற்பாடாகி இருக்க கூட்டம்‌ சற்று கலைந்து ஒவ்வொரு இடத்திலும்‌ அமர்ந்து அரட்டை அடிக்க, குமாரிடம்‌ வந்தவன்‌

 

” மாமா தாராக்கூட கொஞ்சம்‌ பேசிக்கட்டுமா? ” எனவும்‌,

” என்ன மாப்பிளை இப்படி கேக்குறிங்க நீங்க மேல போங்க நா ஸ்ரீயை அனுப்பி விடறேன்‌. ” எனவும்‌ இவர்களை பார்த்திருந்த தருண்‌ மற்றும்‌ பிரபா வாயை பிளந்துக்கொண்டு,

 

“பாவிப்பய பார்டா மாமனார்‌ கிட்டயே கேக்குறான்‌.அவரும்‌ தலையை ஆற்றார். நம்மளோட இருக்கப்ப இவன்‌ நல்லா

தானே டா இருந்தான்‌ “

 

“ஆமாடா நான்‌ இப்போவும்‌ நல்ல பையன்‌ தான்‌. ஆனா உன்னை போல தயிர்‌ சாதம்‌ இல்லடா. ” என்று விட்டு மாடியேறினான்‌. இப்போ முழிப்பது பிரபாவின்‌ முறையானது.அவனை அனுப்பியவர்‌ ஸ்ரீயை மேலறைக்கு அனுப்பினார்‌.

மேலே தனதறைக்கு வந்தவள்‌ யாருமில்லாது இருக்கு,’அப்போ யாருக்கு அப்பா டீ கொடுக்க சொன்னாங்க’ என கையில்‌ டீ

கப்பினை வைத்துக்கொண்டு தேடியவள்‌ அதனை அருகே இருந்த ட்ரெஸிங்‌ டேபல்‌ மேலே வைக்க,அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான்‌ விஜய்‌.

 

“நீங்க எப்போ வந்திங்க?”

 

” உனக்கு முன்னமே வந்துட்டேன்‌.அவளை அனைத்தவாறே முன்‌ கண்ணாடியை பார்த்தவன்‌

 

“ரொம்ப அழகா இருக்க ஸ்ரீ,பிடிச்சிருக்கா? ” எனவும்‌

“ஹ்ம்ம்‌ ” என்றாள்‌. “அப்போ முன்ன பிடிக்கலைன்ன?”

 

“அது நீங்க வரலைன்னு கோவமா இருந்தேன்‌ “.

 

“இப்போ இல்லையா??”

 

“நேற்று சொல்றதுக்ககென்ன?

.

“சொல்லிருந்தா இன்னக்கி இந்த கண்கள்‌ ரெண்டும்‌ விரிய கன்னங்கள்‌ ரெண்டும்‌ சிவக்க உடம்பெல்லாம்‌ படபடக்க அப்படியே என்னை பார்த்த பார்வையை மிஸ்‌ பண்ணியிருப்பேனே.”

ஸ்ரீ என அவள்‌ மோதிர விரலை எடுத்து தன்‌ விரலோடு வைத்து காட்டியவன்‌

 

“நல்லாருக்கா?”எனவும்‌,

 

“ஹ்ம்ம்‌ ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றாள்‌.

 

“என்னோட சின்ன கிப்ட்‌ என்றவன்‌ நீண்ட செயின்‌ ஒன்று வட்ட வடிவ பேண்டன்ட்‌ உடன்‌ அவள்‌ கழுத்தில்‌ அணிவித்தான்‌. இது இனி எப்பயும்‌ உன்‌ கழுத்துலயே இருக்கணும்‌ என்றான்‌… “

 

“ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீப்பா “

 

அதோட அவள்‌ இடையில்‌ கை விட்டவன்‌ அவளை தன்‌ பக்கம்‌ திருப்பி இடையில்‌ இருந்த செயினை வெளி தெரிய எடுத்து விட்டவன்‌ இது போல.எப்பயும்‌ உன்கூடவே இறுக்கனும்‌ என்றான்‌.

 

புன்யா தாராவை அழைப்பது தெரிய “போகட்டுமா? “எனவும்‌,

 

“இவ்வளவு சர்ப்ரைஸ்‌ கொடுத்திருக்கேன்‌. எனக்கொன்னும் இல்லையா?” எனவும்‌

 

‘நா என்ன? ‘ என அவனை பார்க்க அவளை தன்னை நோக்கி இழுத்தவன்‌ இதழ்‌ கொண்டு அவள் கண்களை முத்தமிட்டு மூடினான். அன்றைய நாள்‌ அழுந்த முத்தமிட்ட கன்ன முத்தத்தை இன்றும் சுவைத்து பருகினான்‌. அவள்‌ விட்டு பிரிய அவள்‌ கண்‌ மூடி உதடுகள்‌ துடிக்க நின்றிருந்தாள்‌. அவள்‌ நெற்றி மையிட்ட கண்கள்‌, கன்னம்‌ இரண்டு அவனுக்கு பிடித்த

வைரக்கல்‌ மின்னும்‌ மூக்கு என இதழ்‌ பதித்தான்‌.

 

“தேங்க்ஸ்‌ ஸ்ரீம்மா.லவ்யூ சோ மச்‌ டா.” என்று அவளை நெற்றி முட்டி நனவுக்கு கொண்டு வந்தவன், உங்கண்ணா என்கூட செம கடுப்புல இருக்கான், மாட்டுனேன் இன்னிக்கு திட்டியே ஒரு வழிப்பண்ணிருவான். ” இப்படியாக இருவரும் பேசிக்கொண்டு அவள் சகஜமாகிட இருவரும்‌ அறையை விட்டு வெளிவந்தனர்‌.

 

தாரா அவள்‌ வீடு சென்ற பத்து நாட்களும்‌ புன்யா மாடியிலும்‌, பிரபா கீழே அவன்‌ வீட்டில்‌ இருந்தாலும்‌ இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ பார்த்துக்‌ கொண்டாலும்‌ பேசிக்கொள்ள

வில்லை. விஜய்‌ அன்று அருணாவோடு தாராவை பார்க்க வந்த நாள்‌ மாலை, புன்யா ஷாப்பிங்‌ சென்று வந்தவள்‌ பிரபாவுக்கும்‌ சேர்த்து இரவு உணவு வாங்கி வந்திருக்க

அதனை கொடுப்பதற்காக கீழே சென்றவள்‌ அவனை காணாது மேசையில்‌ உணவை வைத்து விட்டு படிகளில்‌ ஏற,பிரபா அறையில்‌ இருந்து அப்போது தான்‌ வெளியே வந்தான்‌. வந்தவன்‌ அவளை பார்த்து,

“என்ன சத்தம்‌ போடாம ஒரு பையன்‌ தனியா இருக்க வீட்டுக்குள்ள வந்துட்டு போற, என்ன விஷயம்‌” என்றவாறு அவள்‌ அருகே வர அப்போது தான்‌ வெளியில்‌ சென்று வந்தவள்‌ குளித்திருந்தாள்‌. தலை முடியை முழுதும்‌ தூக்கி உயர்த்தி கிளிப்‌ பண்ணி இருக்க ஓரிரு முடிகள்‌ அதிலிருந்து விடுபட்டு தொங்கிக்கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ்‌ டாப்‌ போட்டம்‌ அணிந்திருந்தாள்‌.

 

“இல்ல சாப்‌… என்று அவள்‌ கூற வர அவன்‌ அவளை சீண்ட வேண்டி அவள் அருகே சென்று உரசாது நின்றவன்,

 

“அன்னக்கி எதுவோ தயிர்‌ சாதம்னு சொன்ன உனக்கிட்ட அப்படித்தானே நடந்துக்கணும்‌. நான்‌ லவ்‌ பண்ற பொண்ணுன்னா, நான்‌ கல்யாணம்‌ பண்ணிக்கப்போற எனக்கு சொந்தமான பொண்ணுன்னா பிரயாணியே ட்ரை பண்ணலாம்‌. நீ தான்‌ எனக்கு யாருமில்லையே.”

 

அதற்கு புன்யா, “இல்லை நீங்க தான்‌ அன்னக்கி கீழ வந்த எல்லாமே உங்களுக்கு சொந்தம்னு, எதுவோ நானும்‌ உங்களை… “என்று அவள்‌ கூற

அவளை இடை நிறுத்தியவன்‌,

 “அச்சோ நான்‌ உன்கிட்ட ஜோக்கா பேசினதை நீ தப்பா புரிஞ்சிட்டியோ.அதான்‌ இப்போ அடிக்கடி கீழ வரியா? சாரி நான்‌ அப்டில்லாம்‌ உன்னை நினைக்கவே இல்லை. இப்படி யெல்லாம்‌ டிரஸ்‌ பண்ணிக்கிட்டு இந்த முடிய இப்படி தூக்கி கட்டிக்கிட்டு என்னை இம்ப்ரெஸ்‌ பண்ணலாம்னு நினைக்காத.” என அவள்‌ தோள்‌ வளைவில்‌ வழிந்த முடிக்கற்றைகளை ஒதுக்கியவன்‌,

“போ ” என்று அவளை விட்டு விலகி நின்றான்‌. கண்களோ வழிய காத்திருக்க, மனதை ‘அழாதே’ என கெஞ்சியவள்‌,

 

“சாரி நான்‌ தான்‌ தப்பா புரிஞ்சிக்கிட்டேன்‌…

அவள்‌ கூறி முடிக்கவுமே ஒருகண்ணோ அவளை கேளாது கண்ணீரை வெளி விட பட்டென அவனை தாண்டி மேசை அருகே சென்றவள்‌ அவள்‌ வைத்த உணவுப்பையினை எடுத்துக்கொண்டு திரும்பினாள்‌.

“இது நான்‌ உங்களுக்கு கொண்டு வந்தது தான்‌,ஆனா இப்போ தந்தேன்னா உங்களை இம்ப்ரெஸ்‌ பண்றதுக்காகன்னு நினச்சுப்பீங்க அதுனால வேணாம்‌.’ என்றாள்‌.

 

“ஹேய்‌ நான்‌ ஜஸ்ட்‌ உன்னை டீஸ்‌ பண்ணலாம்னுதான்‌ கேகே. இங்க பாரேன்‌…”

என அவன்‌ அவளருகே வர, மாடிப்படியை தடதடவென ஏறிவிட்டாள்‌ புன்யா. தனதறைக்கு வந்தவள்‌ அப்படியே கட்டிலில்‌ விழுந்து ஒரு

மூச்சு அழுது தீர்த்தாள்‌.

 

புன்யா எல்லோருடன்‌ சட்டென

பேசிவிடுவாள்‌. அவர்களது பேச்சு, நடவடிக்கைகள்‌ பிடித்து விட நன்றாக பழகும்‌ ரகம்‌ அவள்‌. விஜயுடனும்‌ அவ்வாறே பட்டென பார்த்த நாளே பேசியது. எவரும்‌ அவளை சீண்டினால்‌ இவளும்‌ அவ்வாறே அவர்களுடன்‌ பேசி சிரித்துக் கொண்டு இருப்பாள்‌. ஆனால்‌ ஏனோ பிரபாவுடன்‌ அவளுக்கு அப்படி தோன்றவில்லை. அவன்‌ அவளை அப்படி சீண்டுவதை விரும்பினாள்‌. அது அவளுக்கு பிடித்திருந்தது. அவனுக்கும்‌ தன்‌ மேல்‌ ஏதோ ஓர்‌ ஈர்ப்பு காதலோ என தோன்ற வைத்தது..

 

ஆனால்‌ இன்று, தான்‌ அவனை வளைய சென்று பேசுவதாகவும்‌. நானே. சே! தயிர்‌ சாதம்னு சொல்லி. சீ சீ என்னை எவ்வளவு மட்டமா நினைச்சிருப்பான்‌. நான்‌ அவன்கிட்ட எதிர்‌ பார்க்குறேன்னு இல்ல நினைச்சிருப்பான்‌. எவ்வளவு சீப்பா நடந்திருக்கேன்‌.’ என மனதால்‌ தன்னையே நொந்துக்‌ கொண்டவள்‌

அன்றிலிருக்குது அவன்‌ திசை பார்ப்பதையும்‌ மறந்துவிட்டாள்‌. அவன்‌ எத்தனையோ முறை அவளுடன்‌ பேச முயற்சி எடுத்தும்‌ பேச வில்லை.

 

தாராவின்‌ நிச்சயம்‌ முடிந்து கிளம்பும்‌ நேரம்‌ பிரபாவுடன்‌ போகுமாறு கூறவும்‌ இவள்‌ தன்‌ வீட்டுக்கு செல்வதாகக்கூறி அவனுடன்‌ செல்வதை தவிர்த்தவள்‌ பிரபா அவன்‌ வீடு வந்து இரண்டு மணிநேரத்தில்‌ அவள்‌ வந்திறங்கினாள்‌. பார்க்க டையர்டாக தெரிந்தாள்‌. இவன்‌ பார்த்திருப்பதை உணர்ந்தவள்‌ அவனை பார்க்காது

மடியேறிவிட்டாள்‌. ‘அவ்வளவுக்கு மேடத்துக்கு ரோஷமோ போடி.’ என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே செல்ல. விஜய்‌ அவனை தொலை பேசியில்‌ அழைத்தான்‌.

 

“என்னடா மாப்ள நம்மளை நினச்சு கால் பண்ற…” இருவரும்‌ வேளை விடயமாக பேசிவிட்டு,

“பிரபா, தாரா கல்யாணம்‌ முடியிற வரைக்கும்‌ வேலைக்கு வரமாட்டா. சோ புன்யா அங்க

தனியா இருக்க சங்கடப்படறா போல .”

 

“ஓஹ்‌! நான்‌ என்ன அவளை கடிச்சு திங்க போறேன்‌. அவ, அவ பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும்‌ எனக்கு அதெல்லாம்‌ ஒரு ப்ராப்ளமும்‌ இல்லடா. நான்‌ காலையில போனா நைட்‌ தான்‌ வருவேன்‌.” என்றான்‌.

 

“நீ இவ்வளவு விளக்கம்‌ தர தேவையில்லை. அன்னைக்கும்‌ என்‌ முன்னாடி அவளை வம்பிழுத்த அதான்‌ அவகூட எதுவும்‌ சண்டையான்னு கேட்கத்தான்‌ போன்‌

பண்ணினேன்‌. தாராவும்‌ அவ முகமே சரிலன்னா.எப்பயும்‌ சிரிச்சுகிட்டே இருக்கவ இன்னக்கி வரும்‌ போது அழுந்தான்னு பில்‌ பண்ணினா. சும்மா சீண்டாம லவ்வ

சொல்வியா கல்யாணத்த பண்ணியான்னு இருக்காம சும்மா உன்‌ வாழுதனத்தை எல்லாம்‌ காட்டாதடா…”

 

“டேய்‌ எப்படிடா?”  பிரபா கேட்க… 

 

“நான்‌ என்ன உன்னை மாதிரி தயிர்‌ சாதம்னு நினைச்சியா? வை போனை ” என்று விஜய்‌ வைக்கவும்‌.

 

‘டேய்‌ பிரபா உன்‌ வாய்த்தான்‌ உனக்கு எமன்டா.’ என திட்டிக்கொண்டே சென்று மாடிப்படியருகே இருந்து மேலே பார்க்க அவளிருப்பதற்கான சத்தம்‌ எதுவும்‌ இல்லை. இரவு உணவை இருவருக்குமாக வாங்கி வந்தவன்‌. முதல்‌

முறையாக மாடியேறி சென்றான்‌. ஹால்‌ சோபாவிலேயே உடைகூட மாற்றாது படுத்திருந்தாள்‌. பையும்‌ அப்படியே கிடந்தது. யாரோ வருவது போல இருக்கவும்‌ பட்டென எழுந்து பார்க்கவும்‌ இவனை எதிர்‌ பார்க்கவில்லை.கையில்‌ பையொன்று இருக்க,

“நைட்‌ சாப்பிட டின்னெர்‌ கொண்டு வந்திருக்கேன்‌ சாப்பிட்டு தூங்கு “என்றான்‌.

 

‘ரொம்பதான்‌ அக்கறை’ என முணுமுணுக்க “என்ன?” என்றான்‌…

 

பதிலுக்கு “தேங்க்ஸ்‌.”என்றாள்‌.

 

“ஓஹ்‌! என்றவன்‌,

 ‘இங்கயே நீ தங்கிக்கலாம்‌.. வேறிடம்‌ பார்குறதுன்னா இப்போதைக்கு கஷ்டம்‌ தானே?”

 

“இல்லை வேணாம்‌.நான்‌ வேலையை விட்ரலாம்னு இருக்கேன்‌. ” என்றாள்‌ புன்யா.

 

“இப்போ வேலை விட்டு போரளவுக்கு என்னாச்சு.இந்த ஒரு வாரமா உன்கூட பேச ட்ரை பண்றேன. நீ என்னை அவொய்ட்‌ பண்ணிகிட்டே இருக்க. இன்னக்கி வண்டில வரும்‌ போது பேசலாம்னு கூப்ட்டா ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு இப்போ தனியா வந்து இறங்குற. என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல ? அன்னக்கி எப்பயும்‌ போலத்தானே பேசினேன்‌. நீ கோவிச்சுக்கிட்டு அதை சீரியசா நினைச்சுகிட்டு வந்தா நான்‌ என்ன பண்ணட்டும்‌? “

 

“உங்க விளையாட்டு பேச்செல்லாம்‌ எனக்கு தெரில. நான்‌ தான்‌ உங்களை இம்ப்ரெஸ்‌ பண்ண தப்பா நடந்துக்கிட்டேன்‌ போல. எல்லோர்‌ கூடவும்‌ சகஜமா பேசுவேன்‌ தான்‌. அதுக்காக அப்படி எல்லோர்கிட்டையும்‌ போய்‌ உங்ககிட்ட எதிர்‌ பார்த்ததெல்லாம்‌ எதிர்‌ பார்த்ததில்லை. கேட்டதும்‌ இல்லை.நான்‌ ஒரு பொண்ணா ஒப்பனா பேசினது தப்புதான்‌ போல அதான்‌ ஏன்னு எனக்கு புரியல.நானா இவ்வளவு… ரொம்ப அசிங்கமா இருக்கு எனக்கு” என்று கூறியவள் அழுந்துவிட்டாள்‌.

 

“ஹேய்‌! ஏன்‌ இவ்வளவு டீப்பா திங்க்‌ பண்ற? நான்‌ இப்படி யெல்லாம்‌ நினச்சு பேசல சத்தியசமா. நீயும்‌ என்னை சீண்டணும்‌ சண்டை பிடிக்கணும்னு தான்‌ பேசினேன்‌. ரொம்ப சாரி. என அவள்‌ முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன்‌ அவள்‌ கைகள்‌ இரண்டையும்‌

பற்றிக்கொண்டு கூறினான்‌.

 

“நீ என்னை இம்ப்ரெஸ்‌ பண்ணல நாந்தான்‌ இம்ப்ரெஸ்‌ஆகிட்டேன்‌. இந்த முறைக்குற கண்களை பார்த்து, இந்த குருவி கூண்டை பார்த்து. என ஒவ்வொன்றாக பிரபா கூற. அவன்‌ வாயை முடியவள்‌ “ஒன்னும்‌ வேணாம்‌ போ” என்று முறுக்கிக் கொண்டாள்‌.

 

“இங்க தங்க முடியாதுன்னா என்கூட கீழ வந்து தங்குறியா?’ என்றவன்‌, ‘விஜய்‌ போனை போட்டு திட்டறான்‌.இரு அவனக்கு முதல்ல சொல்லனும்‌ என்கூடயே, என்‌ அறையிலேயே தங்குறாளாம்னு.”

 

“நா எப்போ சொன்னேன்‌?” 

 

“அதான்‌ இப்போ சைலன்டா இருந்தியே. ‘மெளனம்‌ சம்பந்தம்னு’ சொல்லிருக்காங்க தெரியும்‌ இல்ல.”

 

“அதெல்லாம்‌ ஒன்னும்‌ வேணாம்‌ நா இங்கயே இருந்துக்கிறேன்‌.” என்றாள்‌. “குட்‌” என்றவன்‌ எழுந்து அவளையும்‌ எழுப்பியவன்‌..

 

“அவள்‌ கன்னங்களை தாங்கி அவள்‌ கண்களை பார்த்து உன்னை பார்த்த முதல்‌ நாளே என்னை என்னமோ பண்ணிட்ட. “ஐ லவ்‌ யூ கேகே ” என்றான்‌. அவள்‌ அவனை முறைக்க அது எனக்கு இந்த சுருள்‌ சுருளா

இருக்க இந்த கூந்தலை ரொம்ப பிடிச்சிருக்கு. நானும்‌ உனக்குள்ளேயே இப்படி சுருண்டுக்கணும்னு தோணுது.

 

அவள்‌ இடையில்‌ கை விட்டு தன்னருகே இழுத்துக் கொண்டவன்‌ அவள்‌ கழுதினூடே பின்‌ பிடரியில்‌ பிடித்தவன்‌ அவளை அழுந்த முத்தமிட்டான்‌.நீண்ட முத்தம்‌ அவன்‌ காதலை உணர்த்த. அவளை மெதுவாக விடு வித்தவன்,

“நா இப்போ தயிர்‌ சாதம்‌ இல்லனு புரிஞ்சுதா…?” மீண்டும்‌ ஒருமுறை ஒற்றி எடுத்தவன்‌,

 

” ட்ரெஸ்‌ சேன்ஜ்‌ பண்ணிட்டு சாப்பிட்டு தூங்கு. குட்நைட்‌’ என்று விட்டு.’சாரி.அன்னக்கி உன்னை ஹர்ட்‌ பண்ணனும்னு நினைக்கல டா.தப்பா புரிஞ்சிப்பன்னும்‌ கண்டிப்பா நினைக்கல.” என்று அவள்‌ நெற்றி முட்டி கூறினான்‌.’

 

‘கோவமா? ” என்றான்‌.

 

இல்லை என புன்யா தலையாட்ட. குட்‌ நைட்‌ கூறி விட்டு சென்றான்‌.

 

இருவரும்‌ அவர்கள்‌ காதல்‌ சொல்லி மகிழ்வுடன்‌ அதை தொடர்ந்து வந்த நாட்களையும்‌ நகர்த்தினர்‌…

 

Leave a Reply

error: Content is protected !!