உள்ளத்தின் காதல் நீங்காதடி-15
உள்ளத்தின் காதல் நீங்காதடி-15
காதல்-15
பெண்ணின் வெட்கத்தில் ஆண் கர்வம் கொள்கிறான், ஆணின் வெட்கத்தில் பெண் உரிமை கொள்கிறாள், வெட்கம் அனைவரிடத்திலும் வெளிப்பட்டுவிடாது, அது தன்னவன், தன்னவளுக்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
முதலிலே உதய் மெதுவாகத்தான் நடப்பான், மீராவை ஏந்திக்கொண்டபின் அடி மேல் அடி வைத்து அவன் நடந்த அழகில் மீராவிற்கு தான் ‘இன்னைக்குள்ள போய்டுவோமா?’ என்று யோசனை வந்தது.
அந்த நிமிடத்தை அனுபவித்து வாழ்வது என்பது இதுவே, ஆர்வத்தில் சீக்கிரம் முடிக்காமல், பயத்தில் முடிந்து விடுமோ என்று முடிக்காமல், அனுபவித்து முடிக்க வேண்டும், அதையே உதய்யும் செய்தான். அவளோடான ஒவ்வொரு அடியும் அவனுக்கு ஆனந்தத்தை கொடுத்தது.
ஒரு வழியாக காரின் பக்கத்தில் நெறுங்கியவன் அவளை இறக்கிவிட கண்களை கழுவிவிட்டு சல்லடை போட்டு தேடியவள் அங்கு எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னே தன் பாதங்களை தரையில் பதித்தாள். அவளது செய்கையை கூர்ந்து கவனித்தவன்.
“கேடி” என்றான் அர்த்ததுடன்.
அவனை முறைத்தவள் “என்ன நக்கலா? நாலா பக்கமும் அலசி ஆராய்வது தப்பேயில்லை” என்று அவள் முடிக்க.
அவனோ “ஆஹான்” என்றான்.
“அது ஒன்னுமில்ல, சின்ன வயசு, பட்டுனு போய்ட்டன்னா, யூ சீ எனக்கு இன்னும் ஒரு கல்யாணம் கூட ஆகலை” என்றாள் பாவமாக.
இம்முறை பலமாக சிரித்துவிட்டான் உதய் “ஒரு கல்யாணம் கூடவா? அச்சோ மேடம் எத்தனை கல்யாணத்துக்கு ப்ளான் வச்சிருகீங்க” என்றான்.
அவனை முறைத்தவள் “ஏன்? ஏன்? ஏன்? ஒருத்தரையே பல முறைகள்ல மேரேஜ் பண்ணிப்பேன்” என்றாள்.
“பார்ரா இன்ட்ரஸ்டிங்” என்றான் உதய்.
“தாங்க் யூ” என்று சலித்துக்கொண்டவள், “கார் எங்க?” என்றாள்.
“இன்னும் கொஞ்சம் தூரம் வா” என்றான்.
இருவரும் காரை அடைந்தது முன்னே ஓடினாள் மீரா. கதவை திறந்து அவள் ஃபோனை எடுக்க சரியாக ஒரு கத்தி அவளை நோக்கி வருவதை கண்ட உதய் அவளை நொடி பொழுதில் தன்னிடத்தில் இழுத்துக்கொண்டான்.
நடந்ததை யூகிக்கமுடியாது அவள் விழிக்க அவன் இழுத்த வேகத்தில் அவளது தொலைப்பேசி வேறு எங்கோ விழுந்திருந்தது.
அவளது கையை இறுக பற்றியவனும் அவளை இழுத்துக்கொண்டு ஓடினான். தன்னை சுதாரித்து அவள் ஃபோனை தேட குனிகையில் அவன் அவளை இழுத்து செல்ல என்ன ஏதும் புரியாமல் அவனோடு ஓடினாள்.
இம்முறை அவர்கள் துப்பாக்கியால் சுட, அதில் இலாவகமாக எப்படியோ தப்பித்து ஒரு புதரின் பின் மறைந்துக்கொண்டனர்.
தன்னை மீட்டு கொண்ட மீரா “ஏய், நீ போலீஸ் தானே, போய் சண்டை போடு” என்றாள்.
“ஸ்…வாய மூட்றீ பிசாசே, சண்டை போடவா? அவனுக கையில பாத்தல்ல” என்றான்.
“என்ன துப்பாக்கி தானே” என்றாள் அசால்டடாக.
“ஏதேய், துப்பாக்கி தானே வா? சுட்டா நான் காலி” என்றான்.
“ஏன் நீயும் சுடேன், உன்கிட்டையும் துப்பாக்கி இருக்கும்ல” என்றாள்.
அவளை ஏக கடுப்பில் முறைத்தவன் “அடியேய், கொஞ்ச நேரம் சும்மா இருடி” என்றான் கடுப்புடன்.
“ம்ஹீம்” என்று அவள் திரும்பிக்கொள்ள. சில காலடி ஓசைகள் கேட்கவும் மீராவின் மீது நம்பிக்கை இல்லாது அவளை தன் பக்கம் திருப்பி அவளது வாயை மூடியிருந்தான்.
தன் கண்களை அகல விரித்தவளின் அழகிய கண்களுக்குள் மூழ்கி முத்தெடுக்க நினைத்தவனின் மனது அதற்குள் மூழ்க தயாரான நேரம் மூளையோ, ‘சாரி இட்ஸ் நாட் அ ரைட் டைம் பாஸ்’ என்று அதற்கு தடா போட்டது, தன்னையே சபித்து கொண்டான்.
ஹா…ஹா…காதல்
இந்த காதல் சில நேரங்களில் தன்னையே சபித்துக்கொள்ள வைக்கிறதே, இது காதலின் முட்டாள் தனமன்றோ?
அதிர்ச்சியில் இருந்தாள் மீரா முதலில் தன்னையே நம்ப முடியவில்லை அவளால், ‘தானா அவன் அணைத்ததும் அவனுள் அடங்கியது, இனி அவனிடத்தில் நெருங்ககூடாது என்று முடிவெடுத்தவளால் அதை சில மணிதுளிகள் கூட காப்பாற்ற முடியவில்லையே.
அதற்குள் அவர்கள் இவர்களை நெருங்கி விட அமைதியாய் இருந்தனர். இருட்டில் அவர்கள் இருந்தது சரியாக தெரியாமல் போகவே அதிலிருந்த ஒருவன் “தேடுங்க நாலு பக்கமும் தேடுங்க, இங்க தான் இருப்பாங்க” என்று உரக்க சொல்ல திசைக்கு இருவராக அனைவரும் நகர்ந்ததும் அவன் ஒருவன் மட்டும் எஞ்சியிருக்க.
அவன் அசந்த நேரம் அவனது வாயை பொத்தி இழுத்தவன் அடி வெளுத்திருந்தான், அவன் வாங்கிய அடியில் கீழே விழுந்துவிட, மீராவின் கைகளை பற்றி மெயின் ரோட் இருக்கும் பக்கமாக ஓட்டத்தை தொடர்ந்தனர்.
ஒருமணி நேர ஓட்டத்திற்கு பின் ஒரு ஹைவே யை கண்டவர்களுக்கு வண்டி ஏதும் கிடைக்கவில்லை.
பொதுவாகவே இரவில் ஹைவேயில் வண்டிகள் கம்மியாகத்தான் இருக்கும் அதிலும் லிஃப்ட் கேட்டாலும் நிறுத்தமாட்டார்கள், கொள்ளை அதிகமாக நடக்க வாய்புள்ளது, சில நேரங்களில் கொலையும், அதை அறிந்த உதய் என்ன செய்யவென்று யோசித்துக்கொண்டிருக்க.
அவனிடம் வந்த மீரா “உதய்…” என்று அழைத்தாள்.
அவள் முதல் முறையாக தன்னை உதய் என்று அழைக்கிறாள். ஆனால், அவன் ஏங்குவது அவளது தரண் என்னும் அழைப்பிற்கே, தன் சிந்தனையை கலைந்தவன் அவளை கேள்வியாய் நோக்க.
“பசிக்குது” என்றாள்.
“சே…கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்கலாம்ல புலி பிரியாணி பண்ணிக்கொடுத்திருப்பேன்ல” என்றான்.
அதில் அவனை ஏகத்திற்க்கும் முறைத்தவள் “என்ன நக்கலா?” என்றாள்.
“பின்ன என்னன்றேன், நம்ம என்ன ஹனிமூனா வந்திருக்கோம்” என்றான் கடுப்புடன்.
“ஏதேய் ஹனிமூன்னா? நினைப்புத்தான், உனக்கு வேற உதாரணமே கிடைக்கலையா? ஆனாலும் நீ ஒரு மார்கமாகத்தான் இருக்கே” என்றாள்.
“இதோ பார்ரா, எனக்கு வர்றதுதான் நான். சொல்ல முடியும், நீ தான் மார்க்கமா இருக்க, பச்ச தண்ணி கூட கிடைக்காம தானே ஓடிகிட்டு இருக்கோம், இதுல சோறு கேக்குதோ” என்றான் கடுப்பில்.
“அது நான் கேக்கல, என் மனசுக்கும், அறிவுக்கும் தெரியுறது வயித்துக்கு புரிய மாட்டிங்குதே” என்றாள் பாவமாக.
அவனிற்கும் அவளை பார்க்க பாவமாகதான் இருந்தது ஆனால் என்ன செய்ய அவனது யோசனையை கண்டவள்.
“உதய், என் வயித்துல எலி டான்ஸ் பிராக்டீஸ் பண்ணீட்டு இருக்கு, ப்ளீஸ் எதாச்சும் வாங்கி குடு” என்று கெஞ்சினாள்.
அவளின் கெஞ்சல் மொழி அவளை போல் க்யூட்டாக இருக்க, உதட்டில் உறைந்த சிரிப்பை அடக்கியவன் அவளை போலியாக முறைத்தான்
“என்ன கேட்டாலும் முறைப்பியா, முறைப்புக்கு பிறந்த முட்டை போண்டா” என்றாள் மெதுவாக.
அது அவனுக்கு கேட்டுவிட முறுவலை சிரம்மப்பட்டு அடக்கியவன் “எதேய் நான் முட்டை போண்டா வா?” என்றான் உக்கிரமாக.
அதில் பயந்தவள் “அது வந்து பசியா இருக்கும்போது நான் நானா இருக்கமாட்டேன்” என்றாள்.
சிரித்துவிட்டான் உதய் அவனோட சிரிக்க வேண்டுமே என்று கடமைக்காக முப்பதிரெண்டு பற்களையும் காட்டி வைத்தாள் அவள்.
***************
நேரம் செல்ல செல்ல மித்ரனின் நிலை மிகவும் மோசமாக இருந்தது, பயம், அதிர்ச்சி, கவலை, கோபம் போன்ற உணர்வுகளின் பிடியில் சிக்கிதவித்தான்.
விடாது அழைத்துக்கொண்டிருந்த தாயிற்கு என்ன சொல்ல, முடிந்த மட்டும் தொடர்பை துண்டித்தான், ஏனோ மனது ‘அந்த எண்ணிற்கு கூப்பிட்டு பார்’ என்று திரும்ப திரும்ப உரைக்க, “சரி அழைத்து பார்ப்போம்.” என்று முடிவெடுத்து அதே எண்ணிற்கு அழைத்தான்.
அந்த பக்கம் எடுக்கப்பட்டது.
“ஹலோ” ஒரு அதிகார குரல்.
“யா…ர் நீங்க?” மித்ரன்.
“ஹா…ஹா…சொல்றேன், நேருல பாக்கலாமா?”
“இல்ல…ஃபோன்லையே சொல்லுங்க” என்றான் எச்சரிக்கையுடன்.
“உங்க விருப்பம், உங்க தங்கசிக்கு கல்யாணம் ஆகிடுச்சு”
“வாஆஆஆஆட் நான்சென்ஸ், என் தங்கச்சிய பத்தி தேவையில்லாம பேச நீங்க யாரு, அவளை பத்தி எங்களுக்கு தெரியும்” என்று கத்தினான் மித்ரன்.
“கோப படாத தம்பி, யோசிச்சு பேசு, உன் தங்கச்சிய காணோம் தானே, அதானே நீயும் எனக்கு கூப்பிட்டே”
“ஆமாம், அவள் காணோம்தான் அதுக்காக அவளை சந்தேகபட மாட்டோம், அவ மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.
“தம்பி, நம்பிக்கை தும்பிக்கைலாம் இருக்க வேண்டியது தான், ஆனா இவ்ளோ தேவையில்லை”
“சார், உங்களுக்கு கூப்டது என் தப்பு தான் தயவு செய்து வைங்க” என்றான்.
“ஒரு நிமிசம் தம்பி, நான் உன் நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணியிருக்குறத பாரு”
“ஏன் பார்க்கணும்? தேவையில்லை” என்றான் மித்ரன்.
“தம்பி அவசரபடாம ஒருதடவை பாரு”
வாட்ஸ் ஆப் ஓபன் செய்து பார்த்தான் மித்ரன். ஷாக் அடித்தது மித்ரனுக்கு மேரேஜ் சர்டிபிகேட், மணமகள் மீரா அது அவளுடைய கையெழுத்துதான் எப்படி இது, அதிர்ந்தான் மித்ரன்.
மணமகன்-உதய்
எதுவும் புரியவில்லை மித்ரனுக்கு தலையை சுத்தியது, கை தானாக அழைப்பேசியை காதிற்கு கொடுத்தது.
“பாத்தியா தம்பி, உன்னை ஏமாத்தி நான் என்ன பண்ண போறேன்”
“……”
“தம்பி, நான் யாருனு கேட்டியே, நான் உன் தங்கை சுபியின் தந்தை இன்று என் மகளும் என்னிடம் சொல்லாமல் திருமணம் செய்துக்கொண்டாள்” என்று அந்த குரல் வருத்ததுடன் ஒலித்தது.
“……….”
“எனக்கே அதிர்ச்சிதான் பா, என் பொண்ணு என்கிட்ட சொல்லியிருந்தா, நானே அவளுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிருப்பேன், ஆனால் அவள் தான் என்னிடம் மறைத்து தேவையில்லாம அவசர கல்யாணம் பண்ணிகிட்ட” என்றார் வருத்ததுடன்.
“………..”
“எந்த தகப்பனாவது பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்ககூடாதுனு நினைப்பாங்காளாப்பா?இந்த காலத்து பசங்களுக்கு பெரியவங்கள்ட்ட சொல்ற தைரியமே இருக்க மாட்டிக்குது.
என் ஒரே பொண்ணுப்பா அவ, அவ வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தினமும் கோயிலுக்கு போய்ட்டு இருக்கேன், அவ இப்படி செய்வான்னு நான் நினச்சு கூட பார்க்கல.
சரி ஆனது ஆச்சு, அவளை கூட்டிட்டு வந்து கூடவே வச்சுக்கிலாம்னு தேடுறேன் கிடைக்கவேயில்லை பா” , என்றார் வருத்ததுடன் பின், “இந்த விஷயம் தெரிஞ்சதும் நமக்கு விஸ்வாசமான பசங்க அவசரப்பட்டு காலேஜ்ல போய் கலாட்டா பண்ணிடாங்க, அதுல பிள்ளைங்க பயந்துடுசுங்க பாவம்.
உங்களுக்கு எதாவது தகவல் தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுங்க தம்பி” என்று முடித்து அழைப்பை துண்டித்திருந்தார் அவர்.
(இவர்களின் மொத்த உரையாடலும் ரெக்கார்ட் செய்யபட்டிருந்தது)
மித்ரனுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது அழைப்பேசியை காதில் வைத்தவாரே உறைந்து போய் நின்றான்.
இந்த செய்தியை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.
ஃபோனில் மேசேஜ் வந்ததிற்கான அறிகுறி வர இயத்திரதன்மையாக அதை அவன் ஓபன் செய்ய சிரித்த முகமாக மீரா பக்கத்தில் உதய்.
போன் தரையில் விழுந்திருந்தது,
உறைந்து நின்றான் மித்ரன்.
************
சிரித்து முடித்ததும் அப்படியே நடக்க துவங்கினான் உதய் அவனோடு நடந்தாள் மீரா.
கொஞ்ச தூரம் சென்றது, மீராவால் தான் பேசாமல் இருக்க முடியாதே, “உத…ய்” என்றாள் மெதுவாக.
“இப்போ என்ன” என்றான் உதய்.
“இல்…ல மணி என்ன” என்றாள்.
“பதினொன்னு” என்றான்.
“கடைசியா மதியம் ஒரு மணிக்கு சாப்டது” என்றாள் பெரு மூச்சுடன்.
“ஆரம்பிச்சுடியா” என்றான் உதய்.
“ம்ப்ச், உங்களுக்கு தெரியாது உதய், நான்லாம் நாலு வேலை சோறு திண்ணாலும் மேற்கொண்டு நொறுக்கு தீனி வேற தின்னு வளர்ந்த பொண்ணு தெரியுமா?” என்றாள் அப்பாவியாக.
சிரிப்பை அடக்க படாதபாடுப்பட்ட உதய் “அதுக்கு என்ன பண்ணணுங்கிற” என்றான்.
‘கல்நெஞ்சகாரன் கறையுறானா’ என்று மனதோடு நினைத்தவள் “ஒன்னுமில்ல நீங்க நடங்க” என்றாள் அதீத கடுப்போடு.
சிறிதி தூரம் சென்றதும் ஒரு டீக்கடை கண்ணில் பட அதை முதலில் பார்த்த மீரா “ஹூர்ரே” என்று கத்தினாள்.
அவளது மகிழ்வை கண்டவன் அழகாக முறுவழித்தான் இங்கு டீ கடை இருக்கு என்று தெரிந்துதானே வந்தான்.
குடுகுடுவென அங்கே ஓடியவள் “அண்ணா டீ இருக்கா” என்று கேட்டாள்.
“இருக்கு மா” என்றார் அவர்.
“சூப்பர், சீக்கிரம் போட்டு தாங்க” என்றாள்.
“எத்தனை மா?” என்றார் அவர்.
அதற்குள் மொத்த கடையையும் ஆராய்ந்தவள் “ரெண்டு பன்னு, ரெண்டு உப்பு பிஸ்கெட், ரெண்டு குட் டே, அப்றம் ரெண்டு டீ” என்று அவள் ஆர்டர் செய்தததில் தனக்கு சொல்கிறாள் என்று உதய் தப்பு கணக்கு போட அவளோ,
“எனக்கு இது போதும் அண்ணா, அவருக்கு கேட்டுக்கோங்க” என்க.
தலையிலே அடித்துக்கொண்டவன் ‘தேவைதான்’ என்று முனகிவிட்டு, “ஒரு டீ” என்றான்.
பின் மீரா “அண்ணே, இந்த ஹை வேல கூட டீ கடை போட்டிருகீங்க, நைட் டைம்மா இருக்கு” என்றாள்.
“ஆமாமா, இந்த பக்கம் ஹை வே ரொம்ப பெருசு மா ரொம்ப நேரம் டிராவல் பண்றவங்க ரிலாக்ஸ் பண்ண கூட ஒரு கடை கிடையாது, அதான் இங்க கடையை வெச்சுட்டேன், அப்றம் பொதுவா இவ்ளோ நேரம் இருக்க மாட்டேன், இன்னைக்கு புதன் கிழமை இல்லையா, நிறைய சரக்கு லாரிகள் இன்னைக்கு போகும், அதுல வர்ற டிரைவர்ஸ் எனக்கு நல்ல பழக்கம் அவங்களுக்காக இன்னைக்கு மட்டும் பண்ணிரெண்டு வரை இருப்பேன்” என்று அவர் விளக்கினார்.
“ஓஹோ, பயமா இருக்காதா அண்ணா” என்றாள்.
“கூட நாலு பசங்க இருக்காங்க மா, நான் தான் போய் ரெஸ்ட் எடுங்கனு அனுப்பினேன் உள்ளே ஒரு அறை இருக்கு பண்ணிரெண்டு மணி ஆனதும் சேர்ந்து போய்டுவோம்” என்றார் அவர் பேசிக்கோண்டே டீயும் ரெடி.
சுட சுட டீ உள்ளே போக புத்துணர்வு கிடைத்தது, பொதுவாகவே இரவில் ரோட்டு கடையில் டீ குடிப்பது சுகமோ சுகம்.
ஈரதென்றல் முழு உடலையும் தழுவ, அதன் தழுவல் உள்ளத்தில் இனித்தாலும், சூடான ஏதாவது ஒரு பானத்தை தேடும் உள்ளம்.
பெரும்பாலும் சுடசுட இஞ்சி டீ, காற்றோடு போட்டி போட்டுக்கொண்டு வரும் இஞ்சியின் சுவை நேராக நாசியில் நுழைந்து நாவை அவசரப்படுத்தி உள்ளத்தில் குடிபெயரும்.
நாசியின் தூண்டுதல் நாவை உசுப்பேற்ற, அழகாய் உதட்டை குவித்து சூடான மூச்சு காற்றை குவளைக்குள் ஊதி முதல் முடறு குடிக்கையில் ஆஹா தேவாமிர்தம்.
டீயை ரசித்து ருசித்து இருவரும் குடிக்க, பசி சற்றே அடங்கியதும்.
சற்றே தெளிந்த மீரா, “அண்ணா உங்க கிட்ட அழைப்பேசி இருக்கா?” என்றாள்.
“இருக்கு மா, டவர்தான் கிடைக்குறது கஷ்டம்” என்றார்.
“பரவால அண்ணா குடுங்க நான் ட்ரை பண்றேன்” என்றாள்.
அவரிடமிருந்து அழைப்பேசியை வாங்கி அவளது அண்ணணிற்கு அடிக்க, கால் செல்லாமலே சதி செய்ய மிகுந்த பேராட்டதிற்கு பின் போன அழைப்பிற்கு பதிலாக.
“தி நம்பர் யூ ஆர் ட்ரையிங் டூ ஸ்பீக் இஸ் ஸ்விட்சுடு ஆப் ரைட் நவ்” என்ற செய்தி கிடைக்க குழம்பினாள் மீரா.
பயணங்கள் தொடரும்…