உள்ளத்தின் காதல் நீங்காதடி-18
உள்ளத்தின் காதல் நீங்காதடி-18
காதல்-18
காதல் உணர்வுகளின் குவியல்,இத்தனை நாளில் நாம் ரசிக்காத வற்றையும் அது ரசிக்க வைக்கும்,உலகம் மறக்க வைக்கும் காதலில் கள்ளம் வளரும்.
**********
அனுராதா கிளம்பிவிட்டார் தன் மகளை தேடி, இது ஒரு தாயின் தேடல், தன் உயிராய் வளர்த்த மகளை தேடும் பயணம், மித்ரனை போல் அவர் பொறுமை இழக்கவில்லை, நிதானமாக ஒவ்வொன்றாய் விசாரித்தார்.
மீராவின் கல்லூரி தோழிகள் வீட்டிற்கே சென்று நிதானமாய் விசாரித்தார் அதில் முதலில் அவருக்கு புரிந்தது, அன்று தான் சுபியிடம் அவள் சற்று அதிகமாய் பேசியதே, அவளுடைய காதல் விவகாரம் தான் இத்தனைக்கும் மூலக்காரணம் என்பதை உணர்ந்தவர்.
பின், இப்பொழுது ரெஜிஸ்டர் அலுவலகம் நிச்சயம் பூட்டியிருக்கும், இருந்தும் ஏதாவது முயற்சி செய்து தான் பார்ப்போமே, என்று கிளம்பிவிட்டார்.
அங்கே சென்று பார்த்தபோது அலுவலகம் அவர் எண்ணியது போலவே பூட்டித்தான் இருந்தது, அக்கம் பக்கத்தில் பார்த்தார் எதிரில் ஒரு போட்டோ ஸ்டூடியோ இருக்க, அங்கே விரைந்தார்.
அங்கிருந்தவன் ஒரு இளைஞனே, இவனுடைய கடை பக்கத்திலிருப்பதால்தான் இவனே இங்கு திருமணம் செய்துக்கொள்ளும் அனைவரையும் போட்டோ எடுக்க இவனை நிர்ணயித்திருந்தனர்.
அரசாங்கதிற்கு ஒரு காப்பியை கொடுத்து இன்னொன்றை அவர்கள் விருப்பப்பட்டால் போட்டோவாகவும் மாற்றிக்கொடுப்பான்.
ஆனால் இன்றைக்கு வந்த சிலர் சற்றே வித்தியாசமாய் சாட்சியாய் வந்த இருவரை இணைத்து போட்டோ எடுக்கச்சொல்லி, இவனை மிரட்டினர். முடியாது என்ற போதும் அவர்கள் அவனை விடாது தொல்லை செய்து, மிரட்டி வாங்கி சென்றார்கள்.
அவனிடம் இந்த உண்மையை கேட்டறிந்தவருக்கு மனம் மட்டுப்பட்டது, தன் மகள் என்ற கர்வமும் கூடியது, அடுத்த நிமிடமே ஒரு வேலை அவர்கள் தான் தன் மகளை கடத்திவிட்டார்களோ என்று பயந்தார்.
அடுத்து என்ன? என்ற விடை தெரியா உறுதியில்லாத கேள்வியுடன் கால் போன போக்கில் நடக்க துவங்கினார்.
வரும் வழியில் அம்மாவிற்கு அழைக்க வேண்டும் என்று மீரா கூற, வேண்டாம் நேரில் சென்றே பார்த்துவிடு என்று உதய் கூற அதுவும் சரி தான் என்று அமைதியாகிவிட்டாள்.
அவளது வீடு இருக்கும் தெருவிற்கு வந்தவுடன் காரை நிறுத்த சொல்லியவள் தானே போய் கொள்வதாக கூறினாள்.
அவன் எவ்வளவோ சொல்லியும் நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று சென்று விட்டாள். வீட்டை அடைந்தவள் வீடு நிசப்த்தமாய் இருக்க அமைதியாய் உள் நுழைத்தவள் “அம்மா” என்றாள் அமைதியாக.
அவளது குரலை கேட்டு விரைந்தான் மித்ரன் தங்கையை கண்டதும் கண்கள் களங்கிவிட, “மீராம்மா” என்று அவளது கைகளை பாசமாக பிடித்துக்கொண்டவன், “சாரி டா” என்றான் உளமாற.
அவள் அவனை புரியாது பார்க்க, “சாரி நான் அப்படி உன்ன…மன்னிச்சிரு, நானே உன்ன” அதற்கு மேல் வார்த்தை வராமல் தவித்தான் அவன் மனது குற்ற உணர்வில் தவித்தது.
அவனை அமைதிபடுத்தியவள் “ண்ணா தலையும் புரியல வாலும் புரியல… அத விடு அம்மா எங்க?” என்று அவள் கேட்டு கொண்டிருக்கும்போதே” திறந்திருந்த கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
திரும்பி பார்த்தவர்கள் அங்கு நின்ற வீட்டின் முதலாலியை அவசரமாய் வரவேற்றனர்.
“வாங்க…சார்” என்றனர் இருவரும்.
அவர்களை ஏளனமாய் பார்த்தவர் “இதெல்லாம் இருக்கட்டும் இன்னும் பத்து நாளில் வீட்டை காலி செய்ங்க” என்றார் தடாலடியாக.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மித்ரன் தான் “என்னாச்சு சார்?” என்று.
“என்ன என்ன ஆச்சு, நல்ல குடும்பம்னு நினைச்சேன், இவளோ கேவலமானவங்கனு தெர்ஞ்சா வீடே கொடுத்திருக்க மாட்டேன்” என்றான் அவர்களை கேவலமாக பார்த்து.
மித்ரனுக்கு கோபம் வந்துவிட்டது “சார் போதும், என்ன பேசுறீங்க, உங்க வீட்டுல இருக்கோம்னு ஓவரா பேச வேண்டாம், அதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்றான் காரம் தெறிக்க.
“ஓ…நான் வந்ததும் அதான் வீட்டை காலி பண்ணுனு சொன்னேன் நீதானே காரணம் கேட்ட?” என்றார் எள்ளலாக.
“ஆமா அப்றம் காரணமே சொல்லாம காலி பண்ண சொன்னா கேட்க மாட்டாங்களா? அதுக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்” என்றான்.
“என்ன சம்பந்தம் இல்லன்னு சொல்ற, உன் தங்கச்சி எவனோ ஒருத்தன் கூட காருல வரா, நேத்து நைட் வீட்டுக்கு வரலன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க, நானும் நம்பாம தான் உங்கள பாக்கலாம்னு வந்தேன் பார்த்தா என் கண்ணு முன்னாடியே ஒருத்தன் வந்து இறக்கிவிடுறான்” என்றார் மீராவை கேவலமாய் பார்த்து.
“லூசா சார் நீங்க, அறிவு கெட்ட தனமா பேசுறீங்க காருல வந்தா அவ ஃப்ரெண்டா இருப்பான், அதுகாக என் தங்கச்சியை என்ன வேணும்னா பேசுவீங்களா, நல்லா இருக்காது சொல்லிட்டேன் இன்னொரு வார்த்தை பேசுனீங்கனா” என்றான் கடுப்பில்.
மீரா அதிர்ந்து நின்றாள்.
“நீயே ஃபரெண்டா இருக்கும்னு சொல்ற, உனக்கே தெரியல, அத விடு அப்படினா வீட்டு வாசலுக்கு வந்து இறக்கி விட வேண்டியது தானே,” என்று அவர் கேட்க.
விடையில்லை மித்ரனிடம் அவன் மீராவை பார்க்க கண்கள் குலம் கட்ட செய்வதறியாது அவனை அவள் பார்க்க அவளை ஆதரவாய் அணைத்துக்கொண்டவன்.
“சார், போதும் எங்களுக்கு இவளை தெரியும், இவ மேல முழு நம்பிக்கை இருக்கு” என்றான்.
“உங்க நம்பிக்கை பத்தி எனக்கு என்ன இருக்கு அது எனக்கு தேவையில்லை, இவளோ பேசுறீயே, நேத்து நைட் அவ ஏன் வரலைன்னு இன்னும் நீ சொல்லலியே…உனக்கே தெரியாதோ…இல்லன்னா…”
கோபம் தலைக்கேற கண்கள் சிவக்க “யோவ்” என்று அவரது காலரை ஆக்ரோஷமாக பற்றி அவரை அவன் அடிக்க கை ஓங்க.
அவனை தடுத்தது ஒரு கரம். அவனை இவன் பார்க்க அவனுடன் நின்ற தன் அன்னையை பார்த்ததும், அவர் கண்களிலிருந்த கண்டிப்பை பார்த்து தன் கைகளை விளக்கியவன் அமைதியாய் இருந்தான்.
அந்த புதியவன் உதய், அவனை கண்டதும் மீரா அவனை கலங்கிய கண்களோடு பார்க்க அவளுக்கு கண்களாலே ஆறுதல் சொன்னவன், வீட்டின் ஓனரை பார்த்து புன்னகைத்தான், உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன் “நான் உதய், மீராவோட அத்தை பையன், அதாவது மொற பையன், கூடிய சீக்கிரம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆக போகுது நேத்து எங்க மேரேஜ்க்கு ட்ரெஸ் வாங்க பேமிலியோட சூரட் போனோம், இங்க மச்சானுக்கும், அத்தைக்கும் வேலை இருந்ததால் அவங்க வரமுடியல நான், மீரா, எங்க அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாரும் போய்ட்டு கொஞ்ச நேரம் முன்னாடி வந்தோம், இவ உடனே அம்மாவை பார்க்கணும்னு சொன்னதால் வந்தோம், உங்க ஏரியாகுள்ள வந்ததும் ஒரு பிராப்ளம் கார் ஸ்டார்ட் ஆகலை அதான் நீ போ, நான் என்னன்னு பார்த்துட்டு வரேன் சொல்லி அனுப்பினேன்” என்று அவன் முடிக்க.
அவனை நம்பாத பார்வை பார்த்தவர் “எங்க துணிகளை காணோம்?” என்றார்.
“அது எங்க வீட்டுல இருக்கு நான் இவங்களை இப்போ கூடிட்டு போகத்தான் வந்தேன்” என்றான் உரக்க.
“கார் ரிப்பேர்ன்னு சொல்லிட்டு பின்னாடியே வந்து நிக்குற, அது எப்படி” என்றார்.
“நானே இறங்கி பார்த்தேன், இன்ஜின் ஜேம் ஆகியிருந்தது, அதை சரி பண்ண எனக்கு தெரியும் சோ ஸ்டார்ட் ஆனதும் அங்க அத்தையை பார்த்தேன், அவங்களையும் கூட்டிட்டு வந்தேன்” என்றான் தெளிவாக.
“அத்த பையன்னு சொல்ற, உன்ன நான் பார்த்ததே இல்லையே” என்றார் மறுபடியும் கேள்வியாக.
“இது என்ன கேள்வி, இவங்க இங்க வந்து கொஞ்ச நாள் தானே ஆகுது, நானும் வெளியூர் போயிருந்தேன், இப்போ தான் வந்தான், முன்னாடி இவங்க ஊருல இருக்கும்போது அடிக்கடி போய் பார்ப்பேன், இப்போ இங்க இனிமே வருவேன்” என்றான்.
மித்ரனுக்கு கோபம், இவனை தன் தங்கையுடன் போனில் பார்த்தது நினைவிருந்தது, எரிச்சலாகவும் இருந்தது அவன் கூறும் கதையை கேட்க, தன் அன்னை அவனை ஒன்றும் சொல்லாமல் நிற்பது அவனை பேசவிடவில்லை. மீராவிற்கோ தலை வலித்தது இவன் அளந்து விடும் கதையை கேட்க.
அதற்கு மேல் என்ன கேட்க என்று அவர் யோசிக்க அதை பயன்படுத்தியவன் “கொஞ்சம் கிளம்புறீங்களா, நாங்க கொஞ்சம் பர்சனல்லா பேசனும்” என்றான் வாசலை காட்டி சற்றே அழுத்தமாக.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவர் கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும் அனுராதா தான்.”உட்கார் ப்பா” என்றார் உதய்யை.
அவனும் அங்கிருந்த சோபாவில் அமர, மித்ரன் தன் தாயை பார்த்தான், மீரா அமைதியாய் தலை தாழ்த்தி நின்றுக்கொண்டிருந்தாள். மித்ரனின் பார்வைக்கு அவனது தாயிடமிருந்து எந்த பதிலும் இல்லை தன் மௌனத்தை கைவிட்டவனாக.
“ம்மா” என்றான்.
“சொல்லு” என்றார் அனுராதா.
“இங்க என்ன நடக்குது”
“அதான் தெளிவா சொன்னாரே” என்றார் அமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும்.
மீராவிற்கு உடலெல்லாம் மின்சாரம் தாக்கிய உணர்வு, சட்டென கண்களை உயர்த்தி அவனை பார்த்தாள், அவனும் நோக்கினான்.
அவள் கண்களில் இதை நிறுத்து என்ற கோரிக்கை!
அவன் கண்களில் இது நடந்தே தீரும் என்ற உறுதி!
“ம்மா, என்ன விளையாடுறீங்களா? ஏதோ சும்மா சொல்றீங்கனு பார்த்தா?” என்றான்
“இங்க பாரு, இனிமேலும் என் பொண்ணை யாரும் பாரமா நினைக்க வேண்டாம், எனக்கு அப்றம் அவளுக்கு ஒருத்தன் வேணும் அவர் இவன் தான்” என்றார் மித்ரனை குற்றம் சாட்டும் பார்வை பார்தது.
“ம்மா…ப்ளீஸ், அதையே சொல்லி என்ன கொல்லாதீங்க, தப்பு தான் தப்பு தான் நான் அப்படி பேசியிருக்க கூடாது” என்றான் தொய்வான குரலில்.
“இங்க பாரு பா, எப்படியும் அவளுக்கு நம்ம கல்யாணம் பண்ணனும், அது இவரா இருந்திட்டு போகட்டும், இனி இதை பத்தி பேசாதே, இப்ப உடனே உங்க அப்பாக்கு போன் போட்டு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் வர சொல்லு, மொத்தமா வர சொல்லு, இதையாவது செய்வியா?” என்றார் கேள்வியுடன்.
தலையை ஆட்டுவது தவிர்த்து வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.
திரும்பி உதய்யை பார்த்தவர், “காப்பி எடுத்திட்டு வரேன் இருங்க” என்றவர் கிட்சனிற்குள் புகுந்துக்கொண்டார்.
மித்ரன் தன் தந்தையை அழைக்க சென்று விட, தாய் காப்பி போட சென்று விட, தனித்து விடப்பட்டனர் மீராவும், உதய்யும்.
“இது என்ன?” என்றாள் மீரா அமைதியாகவும் அழுத்தமாகவும்.
“இவ்ளோ நேரம் இங்க தானே இருந்த”
“ம்ப்ச், அதை கேட்கலை”
“வேற என்ன கேட்ட”
“நமக்கு எப்படி கல்யாணம் நடக்க முடியும்?”
“எல்லாருக்கும் எப்படி நடக்குமோ, அப்படித்தான்”
“ஏதாவது சொல்லிட போறேன்”
“சொல்லேன், அதையும் மச்சான் ஆசையாக கேட்பேன்”
“அடேய், இங்க பாரு, இந்த கல்யாணம் நடக்ககூடாது”
“ஏன்?” என்றான் ஒற்றை புருவத்தை ஏற்றி.
“ஏன்னா, எனக்கு பிடிக்கலை”
“யாரை பிடிக்கலை”
“உன்னைத்தான்”
“இஸ் இட், வெரி ஃபன்னி”
“இது ஃபன் என்ன இருக்கு?”
“உன் மனசுகிட்ட கேளு அது உண்மையை சொல்லும் என்னை பிடிக்குமா? பிடிக்காதான்னு”
“…”
“நல்லா யோசிச்சு எடுத்த முடிவு இது, உன்னையும் உன் மனசையும் தெரிஞ்ச அப்றம் எடுத்த முடிவு, உனக்கு என்ன பிரச்சனை அது மட்டும் தான் இப்போ என் கேள்வி, அதை சொல்லு”
“…”
“நீ சொன்னாலும் நான் உன்னை விட்டிட்டு போய்ட மாட்டேன் என்று அதை சரி பண்ண முயற்சி செய்வேன், அவ்ளோ தான் மித்தபடி இந்த கல்யாணம் மட்டும் எந்த காரணத்திற்காகவும் நிற்காது.
“…”
அனுராதா காப்பியுடன் வந்தார், காப்பியை வாங்கி பருகியவன், மீராவை பார்த்துக்கொண்டே அதை மிடரு மிடராய் குடிக்க.
கடுப்பானவள் பத்திரம் காட்டினாள் அவனுக்கு.
காப்பியை குடித்துவிட்டு எழுந்தவன் “சரி நான் கிளம்புறேன்”
“சரிப்பா, உங்க வீட்டுல…”
“நான் அது எல்லாம் பாத்துக்குறேன் அத்தை, மாமா வந்ததும் சொல்லுங்க மித்தது போசுவோம்”
“சரிப்பா, கூடிய சீக்கிரம் சொல்றேன்”
அவன் வெளியேர, மீராவும் அவன் பின் சென்றாள்.
“நீ வருவன்னு தெரியும், உன்ன பார்க்காம போனால் மனசு வலிக்குமே” என்றான்.
“ம்ப்ச், எதுக்கு இப்போ இந்த புது டிராமா?
“வெல், உனக்கு இது என்னவா வேணும்னாலும் இருந்திட்டு போகட்டும் என்ன பொருத்த வரை இது உண்மையான கல்யாணம்”
“போதும், எதுக்கு இந்த நடிப்பு”
“நடிக்குறேனா, உன் லெவலுக்கு வராது, எனக்கு மனசுல ஒன்ன வச்சிட்டு, வெளில ஒன்னை பேச தெரியாது, என் மனசுலையும் நீ தான், என் காதலும் நீ மட்டும் தான், ஐ லவ் யூ மீரா”
“நான்சென்ஸ், இது நடக்கவே நடக்காது, ஓவரா கனவு காணாத”
“ஹா…ஹா…லெட்ஸ் சீ, பாய் டார்லிங்” அவன் தன் காரில் ஏறி புறப்படும் வரை பார்த்தவள், மனதிற்க்குள் ஏதோ திட்டம் வகுத்தாள்.
இருவரும் பிடிவாதத்தில் ஒருவரில் ஒருவர் சலைத்தவர் அல்லர், யாரின் பிடிவாதம் ஜெய்க்கும். நீயா? நானா? என்று போட்டி போட போகிறார்களா இவர்கள்? ஆனால் வெற்றி ஒருவருக்குத்தானே, காதலில் வெற்றி என்பது ஒருவன் தன் காதலிகாக அல்லது ஒருத்தி தன் காதலனுகாக விட்டுக்கொடுத்து அவர்களை ஜெய்க்க வைத்து மகிழ்வதே, இங்கே யார் யாருக்கு விட்டுக்கொடுக்க போகிறார்கள்.
காதல் ஜெய்க்குமா? தோற்க்குமா?
காதல் தொடரும்