உள்ளத்தின் காதல் நீங்காதடி-27
உள்ளத்தின் காதல் நீங்காதடி-27
காதல்-27
அவளின் கரம்பற்றியே நொடி, அவளின் மென்மையை உணர்ந்தேன்,அவளிடம் பழகிய நொடி அதை விட அவள் மனது மென்மையானது என்று அறிந்தேன்,அவளோடு வாழ தொடங்கிய நொடி அவள் மேனியின் மென்மையை உணர்ந்தேன்,அவள் என்னை தந்தையாக்கிய நொடி அவள் தேவதை என்று உணர்ந்தேன். தாயாய் அவள் மடி தாங்கும் என் பிள்ளையும்,நானும் பாக்கியவான் என்று உணர்ந்தேன்.
-பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்தில் ஒரு கணவனின் முதல் காதல் உருவான கதை.
***
சரியாக அரைமணியில் திரும்ப வந்தவனின் உஷ்ண பார்வையே மீராவை தொடர, அமைதியாய் கிளம்பி தயாராகி வந்தவள், லக்கேஜை தூக்க வேண்டி அதை பற்றினாள், அவளது கையை அழுத்தமாய் பற்றியவன், கண்களால் அவளது கையை எடுக்குமாறு கூற, அந்த ரணகலத்திலும் அவளுக்கு மனது குளிர்ந்து போனது என்னமோ உண்மை.
அவள் கைகளை விலக்கிக்கொண்டதும் அதை இழுத்து அவன் முன்னே செல்ல, அவனை தொடர்ந்தாள் அவனது சமதர்ம பத்தினி. கீழே அவர்கள் வர, உதய் மற்றும் மீராவின் மொத்தகுடும்பமும் அங்கே தயாராய் இவர்களை வழியனுப்ப நின்றது.
தாய் இருவரும் “பாத்து டா, நல்லா சாப்டுங்க, நல்லா தூங்கணும்,” என்று மீராவிற்கு அன்பு கட்டளைகள் விதிக்க, தந்தையோ “பார்த்து டா” என்று அவளது தலையை வருடி முடித்துக்கொண்டார்.
இது அத்தனை அழகான உறவு, தந்தை மகள் உறவு, அதிகபடியாக ஒரு தந்தை இதையே கூறுவார். ஆனால், அதில் அத்தனை பாசம் இருக்கும், தாய் பக்கம் பக்கமாய் அன்பு மழையை பொழிந்தாலும், தந்தையின் இந்த ஒற்றை வார்த்தைக்காகத் தானே மகளின் மனது ஏங்கும்…
“சரிப்பா…” அவள் மென்மையாய் தந்தையை அணைத்துக்கொண்டாள்.
பின், மித்ரன் மானஸா, என்று இருவரிடமும் கூறி அவள் சஞ்சயை நோக்க, அவனும் அவளைத்தான் பார்த்தான்.
முழுதாக ஒரு வாரம் ஆகியிருந்தது, ஆனால் அவனுடைய தயக்கத்தை விட்டு அவனால் வெளியே வரமுடியவே இல்லை, அதுதான் ஏன் என்று அவனுக்கு புரியவில்லை. அவனது தயக்கத்தை மீராவும் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறாள், ஆனால் அவனாகவே பேசட்டும் என்று தான் அமைதியாய் நின்றது.
ஒரு குடும்பத்தில் வாழ வந்த பிறகு சில விஷயத்தில் நாம் முதலில் பேசுவது நலம் தானே, அதுவும் மனதிற்கு பிடித்தவனின் இந்த வாழ்வும், அவனது குடும்பம் அவளது குடும்பம் அல்லவா, மீராவே இறங்கி வந்தாள்.
“போய்ட்டு வரேன்” என்றாள் புன்னகையுடன்.
அந்த நொடியே அவனது தயக்கம் உடைந்தது “சாரி அண்ணி” என்றான் சஞ்சய் உளமாற.
“என்ன சொன்ன?” மீராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை, அவள் சிரிக்க துவங்கிவிட்டாள்.
அவளது சிரிப்பை கண்ட உதய்யோ ‘ஏ சிரிப்பை தொலைக்கவச்சிட்டு, இவ மட்டும் கெக்கபெக்கேனு சிரிக்குறா’ என்று அவளை மனதில் வறுத்தெடுக்க அவனது முறைப்பு மற்றும் தாயின் முறைப்பை கண்டு தன்னை கட்டுப்படுத்தியவள்.
“அண்ணி, கிண்ணியெல்லாம் வேணாம் நார்மலா மீரான்னு கூப்பிடு” என்றாள்.
“அது எப்படி மா?” என்று மீனாட்சி ஆரம்பிக்கையிலேயே.
“அத்தை… இது நட்பு சம்பந்தப்பட்ட விஷ்யம், இவன் என் பிரண்ட், இது எங்க டீலிங் கண்டுக்காதீங்க” மீரா சற்றே மீண்டிருந்தாள் என்று தான் கூற வேண்டும்.
அவளது மனது உரைத்தது, உதய் எதையோ கண்டுப்பிடித்திருக்கிறான், கண்டிப்பாக அதற்கு நமக்கு டோஸ் உண்டு, ஆனால் நம்ம மேல காதல் இல்லாம இல்ல, அவளை அவன் பெட்டி தூக்க கூட அனுமதிக்கவில்லையே, அதானால் மனது நிம்மதிக்கொண்டதால் இப்படி வாயாடுகிறாள்.
“ஓகே மீர்…” அவன் அவளுக்கு ஹை ஃபை கொடுக்க அவளும் கொடுத்தாள்.
“தட்ஸ் குட் டா சஞ்சு”
“என்னைய அப்படி கூப்டாதான்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்” சஞ்சய் எச்சரிக்க.
“தோடா… சரி தான்டா… டால்டா மூக்கா”
“ஏய்… யூ… யூ”
“எஸ் மை செல்ஃப் மீரா குணசேகரன்” என்றவள் உதய்யின் உக்கிரமான முறைப்பில் ஈ என்று இளித்து வைத்தாள்.
அவர்களின் கூத்தில் அனைவரும் சிரிக்க, உதய்யிற்குத்தான் வயிறு எரிந்தது, அது எதுனாலன்னு நான் சொல்லனும்னு அவசியமில்ல.
அது தொடர, தொண்டையை கனைத்தவன் “போகலாம்” என்றான் அவளை பாராது.
‘நான் சந்தோஷமா இருந்தா இவனுக்குப்பொறுக்காதே’ மனதில்தான். அமைதியாய் அவனை அவள் பின்தொடர, காரில் ஏறி அவர்கள் அமர்ந்ததும் மொத்த குடும்பமும் அவர்களுக்கு டாட்டா காட்டி அனுப்பிவைக்க.
ஏதோ மாமியார் வீட்டிற்கு கடல் கடந்து செல்வது போல் அவள் வளைத்து வளைத்து டாட்டா சொல்ல தெரு முனையை கடந்து அவள் டாட்டா காட்டிக்கொண்டே இருக்க. கடுப்பானவன்.
“கொஞ்சம் திரும்பி நேரா உக்காரு…” அவன் அதட்ட.
“இப்ப மட்டும் என்ன கோணலாவா உக்காந்திருக்கேன்”
“ம்ப்ச்… ரோட்டை பாத்து உக்காரு”
“ஏன் அங்க எதுவும் டான்ஸ் ஆடுதா?”
அவன் அவளை முறைக்க.
“என் இஷ்டப்படித்தான் உக்காருவேன், இல்ல அப்படியே படித்துப்பேன் அது என் இஷ்டம்”
“எப்டியோ போ, எனக்கென்ன”
“விளக்கென்ன” என்றவள் அவசரமாய் நாக்கை கடிக்க. அவளது செயலில் மயங்கியவன், அதை அவளுக்கு காட்டாமல் அந்த பக்கம் பார்வையை பதித்தான்.
‘மானங்கெட்ட மனசே, எப்போ பாரு கவுண்டர் குடுத்து குடுத்து இப்போ கண்ட்ரோல் இல்லாமையே வரியே’ அவள் மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ள. ‘போச்சு போச்சு ஆல்ரெடி கொலவெறில இருக்கான் க்ரைம் ரேட் வேற ஏறுதே…’ அவள் அவன் முகத்தை காண முயற்சிக்க.
“உங்க வேலையை மட்டும் பாருங்க” என்றான் முகத்தில் அடித்தாற் போன்று.
அவனுக்கு பழிப்புகாட்டியவள். ‘சரிதான் போடா யாருக்கு லாஸ் இவன் பெரிய இவன், போடா வென்று, ஆளானப்பட்ட மீராவையே வேணாம்னு சொல்றியா, இதுக்கு உன்ன பழி வாங்குவா இந்த மீரா, இது என் க்ரஸ்ஸூ மேல சத்தியம்’
‘க்ரஸ்ஸா அது இவன் தானே உனக்கு’ அவளது மனசாட்சி.
‘ஆமா அவனை பழிவாங்க அவன் மேல தானே சத்தியம் பண்ணணும், அப்போதானே நம்ம அதை கரெக்டா பண்ணுவோம்’
‘சரிதான் இவளை பத்தி தெரிஞ்சும் கேட்டது என் தப்புத்தான்’ மனசாட்சி.
இவர்களின் வாழ்வின் துயரம் முடியும் காலம் வந்தது, வசந்தமும் வந்தது, இந்த பயணம் இனிய பயணமாய் அமையட்டுமே…
**************
மதுரையில் மீனா இல்லம்.
மீனா பயங்கர குழப்பத்திலிருந்தாள். அவளின் குழப்பத்தின் நாயகன் சஞ்சய்யே, அவளை அன்று காதலிப்பதாய் கூறியவன், அதன் பின் அவளை கண்டுக்கொள்ளவே இல்லை. அதுவே அவளின் குழப்பம்.
ஊருக்கு அவள் கிளம்பும்போது கூட அவள் கண்ணில் படவில்லை, அவளுக்கு கோபமா, வருத்தமா, சந்தோஷமா, என்று பிரித்தெடுக்க முடியாத ஒர் உணர்வில் இருந்தாள். அப்போது.
அவளது இல்லத்திற்க்கு அவளது பெயரில் ஒரு லெட்டர் வந்தது. அவள் அன்னை அதை அவளிடம் வழங்க அதை வாங்கியவள் அதை படித்தாள்.
ஃப்ரம் அட்ரஸில் ஏதோ புரியாத ஒரு பெயர், சென்னை. ‘ஒரு வேலை அவனா இருக்குமோ’ மனது ஒரு நிமிடம் யோசித்தது.
‘சென்னையில் தானே மீரா இருக்கா அதை விட்டுட்டு எதுக்கு நம்ம அவனை நினைக்குறோம்?’ என்று தன்னையே திட்டியவள் அமைதியாய் அதை பிரித்தாள்.
ஒரு வெள்ளை தாள் நான்காய் மடித்திருந்தது. அதை திறந்தாள்.
“SARANGHE” என்று எழுதியிருந்தது அவ்வளவே…
கொரியன் டிராமாக்களை பாரபட்சம் இல்லாமல் பார்ப்பவளுக்கா அதற்கான அர்த்தம் புரியாது.
‘யாரு பாத்த வேலை இது?’ அவள் யோசிக்க மனது எண்ணமோ அவனிடமே நிலைத்தது. ‘இருக்குமோ’
குழம்பி போய் இருந்தவளை குழப்ப நினைத்தவன் அதில் வெற்றியும் கண்டிருந்தான்.
மீனாவின் ஃபோன் அடித்தது, புது எண் அவனது நியாபகமே, அவசரமாய் ஆன் செய்து காதில் வைத்தாள் “ஹலோ”
“தென்றலோடு பேசிப்பார், உன்னை அது திருடிவிடும்”
அது அவனது வாய்ஸ் தான் “யார் நீங்க?”
இது பெண்களின் பிரத்யோக குணம், தெரிந்தவனை தெரியாததாய் காட்டிக்கொள்வது.
“அத நீ தான் சொல்லணும்”
“வாட்?”
“உன்ன பாத்து தானே நான் என்ன மறந்தேன், அப்போ நீ தான் சொல்லணும்”
“அதுக்கு நான் ஏன் சொல்லணும் நல்ல டாக்டரா போய் பாருங்க”
“பொண்ணுங்க நீங்க இப்படி பண்ணாம இருந்தாலே, நாட்டுல பல டாக்டருக்கு வேலை இருக்காது”
“என்ன உளறல் இது”
“காதல் உளறல்”
“வாயுல எதாவது வந்திடும், லூசா, இப்படி கேனத்தனமா எதாவது பண்றது, கிப்ட் அனுப்புறது, இதுலாம் பண்ணுணீங்க, அவ்ளோ தான்” அவள் மிரட்ட.
“என்ன கிப்ட்? என்ன சொல்ற?” அவன் உண்மையான கலவரத்துடன்.
“நடிக்காதீங்க, கிப்ட் அனுப்பிட்டு அது என் கைக்கு வரவும் கரெக்ட்டா போன் பண்றீங்க”
“சாரி… உனக்கு நா எந்த கிப்டும் அனுப்பலை” அவன் உண்மையான வருத்ததுடன் கூறவும் இவளும் ‘இருக்குமோ’ என்று யோசித்தவளாக.
“அப்டியா, அப்போ இது யாரு அனுப்பினா?”
“அது சரி அதுல என்ன இருக்கு”
“அது உங்களுக்கு எதுக்கு அது என் பர்சனல், நீங்க மொதல்ல வைங்க”
“ஹேய் இரு…” அவன் ஏதோ சொல்ல அவள் மொபலை அணைத்திருந்தாள்.
அவளது கையில் அந்த கிப்ட் பாவமாய் இருந்தது.
காதல் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு மாதிரி நுழையும் இவர்கள் வாழ்வில் எப்படி நுழையும்?
***********
மீரா மற்றும் உதய்யை சுமந்த கார் ஓரிடத்தில் நிற்க அது என்ன என்று மீரா வெளியே நோக்க அது ஒரு கஃபே, இங்க எதுக்கு நிக்குது. அவள் யோசிக்கும்போதே இந்த பக்கம் உதய் இறங்க. இப்போ நாம இறங்குறதா வேணாமான்னு அவள் யோசிக்க அவளது பக்கம் வந்து டோரை தட்டியவன்.
“இறங்க நல்ல நேரம் எதுவும் பாப்பியா?” என்று வார்த்தைகளை கடித்து துப்ப.
“ஏன் உனக்கு அதுலாம் தெரியுமா? தெரிஞ்சா பாத்து தான் சொல்லேன்” என்றாள் மிடுக்காக.
அவளது பதிலில் கடுப்பானவன் “மூடிட்டு இறங்கு டி, இருக்குற கோபத்துல கடிச்சு வச்சிடுவேன்” என்று மிரட்ட.
கொஞ்சம் அடங்கியவள் நல்லவளாய் காரிலிருந்து இறங்கி “சொல்லுங்க” என்றாள் குனிந்த தலை நிமிராது.
‘என்னா நடிப்பு’ மனதோடு நினைத்தவன் “வா” என்றான் சீறலுடன்.
வருவது எதுவானாலும் உன் புள்ளயை கூடவே இருந்து காபாத்து ப்பா என்று வழி நெடுக அவசர வேண்டுதலை போட்டுக்கொண்டே வந்தவள் அமைதியாய் அவனை தொடர. ஒரு டேபிலில் சென்று அமர்ந்தவர்கள்.
குடிக்க சூடான காஃபியை ஆடர் செய்து அமைதியாகவே இருக்க, காபி வந்ததும் பேச்சை துவங்கினான் உதய்.
“சொல்லு எதுக்கு என்ன அவாய்ட் பண்ணின?” என்று அதிரடியாய் இறங்க.
‘கேப்பான்னு தெரியும் இவ்ளோ சீக்கிரமா கேக்குறான்’ மனது திடுக்கிட்டாலும் அமைதியாகவே இருந்தாள்.
“உன்னத்தான் இப்பவாவது பேசு” அவன் அழுத்தமாய் உரைக்க.
“வந்து…” அவள் இழுக்க.
“மீரா…” என்று கர்ஜித்தவன் “என் பொறுமையை சோதிக்காத, இப்போவாவது மனச திறந்து பேசு, என் கோபத்தை கிளராம”
‘கிளருறதுக்கு அது என்ன பொறியலா’ அவள் மனம் கவுண்டர் அடிக்க , அவனது உக்கிர பார்வையை பார்த்து பயந்து.
“சொல்றேன்… பட் முழுசா கேக்கணும், அப்றம் நீங்க என்ன வேணும்னாலும் திட்டுங்க டீல்” அவள் சமாதானம் பேசினாள்.
“ம்” என்ற உறுமல் மட்டுமே அவனிடம்.
“உங்கள எனக்கு பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் உதய், ஆனா அது எப்போ காதலா மாறுச்சு தெரியுமா? என்னதான் பிறந்து, வளந்த வீட்டை விட்டு, ஊர விட்டு போனாலும் என் மனசு எப்பவும் உங்களத்தான் நினைக்கும், எனக்கு அந்த பாதிப்புக்கு அப்றம் எங்கையாவது நெறுப்ப பாத்தாலே ப்ரஸ்ஸர் ஆகி மயங்கி விழுந்திடுவேன், அதுல இருந்து வெளிய வர நீங்க தான் உதவுனீங்கனுத்தான் சொல்லணும்”
அவன் அவளை சுவாரஸ்யமாய் நோக்க, “நியாபகம் இருக்கா?
இந்த உலக வாழ்வு எல்லாத்துக்கும் கிடைச்சிடாது, குடுத்து வச்ச கொஞ்ச பேத்துக்குத்தான் கிடைக்கும், நாம தான் நமக்காக வாழனும், பிடிச்ச மாதிரி வாழனும் நியாபகம் இருக்கா.”
இது மீராவின் ஒரு பிறந்த நாளுக்கு உதய் கொடுத்த கிப்ஃடில் இருந்த வாக்கிய அட்டை அதை நினைவு கூர்ந்தான். அவளே தொடர்ந்தாள்.
“எங்க போனாலும் என்னோட கண்ணு உங்கள மட்டும் தான் தேடிட்டே இருக்கும், மதுரைல ஸ்கூள் சேர்ந்தப்ப கூட உங்கள அந்த கூட்டத்துல தேடுனேன், பட் யூ ஆர் யூனிக், உங்கள மாதிரி அங்க யாருமே இல்ல.
எங்க பாத்தாலும் உங்க நினைவுதான் அதோடத்தான் வளந்தேன்னு சொல்லணும், நான் ப்ளஸ் டூ முடிச்சதும் என் கைல போன் வந்திடுச்சு, அதுல பேஸ்புக் ஓபன் பண்ணி உங்க பேரை விதவிதமா தேடிபாத்தேன். தினம் தினம் தேடுனேன் கிடைக்கவேயில்ல.
அப்றம் ஒரு நாள் எதார்த்தமா தரண்னு போட்டு பாத்தேன் அதுல உங்கள கண்டும்பிடிச்சேன், எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? என்னோட அழைப்பு, நான் மட்டுமே உங்கள கூப்பிடுற அழைப்பு, அதை நீங்க பேரா வச்சதுமே நான் முழுசா காலி, மனசெல்லாம் பறக்குற ஒரு நிலை”
அவள் சொல்லசொல்ல இன்ப அவஸ்த்தையாய் உணர்ந்தான் உதய். அவளின் பார்வை பேசிய நயன மொழியில் அதற்கு முத்த அச்சாரங்கள் கொடுக்க மனது பரபரக்க அதை கடினப்பட்டு அடக்கியவன், அவளிடம் பார்வையை பதித்தான்.
“பட் உங்களோட பிரண்ட் ஆக பயமா இருந்துச்சு, டெய்லி டெய்லி உங்க ஐடில உங்கள சைட் அடிச்சு காலத்தை தள்ளினேன், உங்களோட அப்டேட்ஸ் அப்போலாம் அடிக்கடி போடுவீங்க ஐ லவ் சாக்லேட், ஐ லவ் பீட்சா, பானி பூரி லவ், இப்படி டெய்லி எதாவது போடுவீங்க, அதையெல்லாம் என் மனசு குறிப்பே எடுத்து வச்சிடுச்சு”
உதய்யின் மனது பறவையாய் சிறகடித்தது.
“Being loved by someone is the most beautiful feeling ever…”
எங்கோ காற்றிலிருந்து இந்த வாக்கியம் பறந்து வந்து அவனது மனதை குளிரவைத்தது.
“இப்படி முதல்ல மனசுக்கு பிடிச்சவரா இருந்த நீங்க, காதலனாய் அச்சாரம் போட்டு அமர்ந்துடீங்க, டெய்லி உங்களை சைட் அடிக்காட்டி ஏனோ தூக்கமே வராது, அதோட உங்க போட்டோவை பார்த்துட்டே அப்படியே தூங்கியும் போய்டுவேன், அது நடக்கும் வரை
பிப்ரவரி பதினாலு காதலர் தினம் எப்போதும் சரியாய் ஏழு மணிக்கு போஸ்ட் போடுறவரு அன்னைக்கு மட்டும் காணவேயில்ல, நானும் நிமிசத்துக்கு நிமிசம் பேஜ்ஜை ரீலோட் பண்ணி பாப்பேன் போஸ்ட்டே வரல, கொஞ்ச நேரம் கழிச்சு செக் பண்ணுணப்போ, என் தலைல இடியே விழுந்துடுச்சு உங்க போஸ்ட் பாத்து” மீராவின் கண்கள் கலங்கியது, எத்தனை மோசமான நாள் அது, அவளை மொத்தமாய் இன்னொரு முறை புரட்டிப்போட்ட சம்பவம் ஆகிற்றே.
அவள் பிப்ரவரி என்று கூறியதுமே அவனுக்கு புரிந்துவிட்டது அவள் எதை பார்த்தாள் என்பது, எத்தனை துடித்திருப்பாள். அவளது அன்றைய வேதனை இவனை இன்றளவும் வலிக்க செய்தது.
“நீங்க போட்ட ஹார்ட்டின் பாளூனும், கண்ணாடி தாஜ் மகால் கிப்டும், அதோட என்ன கேப்ஷன் போட்டிங்க”
“Love is always something special, on this lovers day my love presented me the symbol of love- i said why this wonder my love, you are my wonder , let’s make our own wonder” அந்த வார்த்தைகளை கூட அவள் அச்சு பிசராமல் கூறுகிறாள் என்றாள் அத்தனை பாதிப்படைந்தாளா? அவளது மனது ரணப்பட்டிருக்கும் அல்லவா?
அதற்கு மேல் மீராவால் பேச முடியவில்லை அவள் அழதுவங்கினாள் அவளது கைகளை மென்மையாய் அவன் பற்றிக்கொண்டு மேல சொல், என்று உந்த.
சற்று நிதானமானவள்… மேல தொடர்ந்தாள்.
“அதுல உடஞ்சவத்தான், மொத்தமா உடஞ்சு எனக்கு காய்ச்சல் வந்திடுச்சு, நைட்லாம் ஏதேதோ உளறுனதா அம்மா மறுநாள் சொன்னாங்க.
ஆனா அந்த சம்பவம் தான் உங்க மேல எனக்கு எவ்ளோ காதல் இருக்குனு உணர்த்துச்சு. உங்கள யாருக்கும் விட்டுகுடுக்க முடியாம என் மனசு பட்ட வேதனை?” அவள் முகம் சுறுங்கியது அதுவே அவளது மனதை உரைக்க சரியாய் இருந்தது.
தன் மேல் இவளுக்கு இத்தனை காதலா? வேறென்ன வேணும் ஒரு ஆணுக்கு, இவளின் காதல் எப்படிப்பட்டது, அவளுடன் நான் கொஞ்சியதில்லை, ஒரு காதலனாய் நடந்தே இருக்கவில்லை பின் ஏன் இந்த காதல் என்மீது.
“மீரா…” அவன் அவளை மென்மையாய் அழைக்க.
“நான் சொல்றதை பொறுமையா கேக்குறியா ப்ளீஸ்” அவன் இறைஞ்சினான். இப்போ அவன் கூற போவது நிச்சயம் அவளை வருத்தும் என்பது திண்ணம் ஆனால் கூறாமல் விட்டதால்தானே இப்போது இந்த மனகசப்பு. முடிவெடுத்துவிட்டான் கூற போகிறான்.
“நான் லவ் பண்ணினது உன்ன தான் மீரா”
அவள் திடிக்கிட்டாள்.
_தொடரும்_