உள்ளத்தின் காதல் நீங்காதடி-28
உள்ளத்தின் காதல் நீங்காதடி-28
காதல் -28
உள்ளத்தின் சத்தியம்- என் மனம் கவர்ந்தவளே, என் இறுதி மூச்சிருக்கும்வரை உன்னை காப்பது என் கடமை, உன்னை ராணியாய் வாழவைக்க முடியாட்டியும் என் இதய ராணியாய் வாழவைப்பேன், உன் கணவன் நான் என்னும் வார்த்தையின் அர்த்தம் அறிவேன் வண்ணமலரே…
மீரா அதிர்ந்ததும் ஒரு நிமிடமே, அவளுக்கு தெரியும் அவன் காதலித்தது தன்னை அல்ல. எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது, அவன் தொடர இவள் காத்திருக்க, அவளது கேள்வியான முகத்தை பார்த்து அவனே துவங்கினான்.
அவன் மூன்றாம் ஆண்டு கல்லூரி முடித்திருந்த நேரம் அது. அப்போது தான் அவளும், அவன் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தாள். அவள் சுபா, ஆம் அவளே தான்.
அவர்களது கல்லூரியில் ஒரு வழக்கமிருந்தது, NSS ஸ்கீமில் உள்ள தன்னார்வலர்கள் கல்லூரியின் அட்மிஷனின்போது அங்கு புதிதாய் சேர வரும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வண்ணம் கல்லூரியின் நுழைவு வாயிலருகே டேபிளோடும், சாரோடும் அமர்ந்திருப்பர்.
அவர்களிடம் டவுட்ஸ், ஃபீஸ் ஸ்டர்க்ச்சர் அதோடு யாரை அனுக வேண்டும், அப்லிகேஷன் ஃபில் அப் முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் பெறலாம்.
அப்படி உதய்யும் அந்த கூட்டத்தில் தன் துறையின் சார்பாக அமர்ந்திருக்க, அங்கே ஒருத்தி ஒருவளை ‘மீரா’ என்று கத்தி அழைக்க, இவன் அந்த பெண்ணை கவனித்து அவள் பார்வை செல்லும் திசையை நோக்கினான். அங்கொரு பெண் வெள்ளை சல்வார் கமிசில் திரும்பி நின்றிருந்த படியால், அவனால் அவளை சரியாக பார்க்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் அவள் நகர்ந்தும் விட்டாள், கொஞ்ச நேரம் கழித்து அவன் அதே இடத்தை நோக்க, அங்கே அவளில்லை. அவன் மனது ஏமாந்தது இத்தனை வருடங்களில் அவனால் அவளை சிறிதும் மறக்க முடியவில்லை.
அவளின் தாக்கம் அத்தகையது, கண் முன் அவள் வீடு, அவளோடு விளையாடிய இடம், அதை விட அவள் கொடுத்த அந்த கலிமண் கிளி, அத்தனையையும் உயிராய் பாதுக்காத்தானே அவளின் பிம்பத்தையும் தான்.
அவன் அவளின் நினைவில் உலகம் மறக்க, அவனது பக்கத்திலிருந்து ஒரு சத்தம் “எக்ஸ்கியூஸ்மீ ண்ணா” அவன் கண்களை திறந்து பார்த்தான்.
அவளை எங்கோ பார்த்த நியாபகம் அவனுக்கு இருந்தது உண்மை, ஆனால் யாரென்று பிடிப்படவில்லை. பின் நிதானித்து “யெஸ்” என்றான்.
“நான் மீரா குணசேகரன்…”
உதய்யிற்கு ஷாக் அடித்தாற் போன்ற பிரம்மை, ஏனெனில் அவளது பெயர், உண்மைதானா? தன் காதுகளை தன்னாலே நம்ப முடியவில்லை.
“என்ன இன்னொரு தடவை சொல்லுங்க?” அவன் மனது பதைபதைத்தது. எதுவும் தவறாய் சொல்லி விடாதே என்ற மன்றாடல் அவனது வார்த்தைகளில் தெளிவாய் தெரிந்தது.
“நான் மீரா குணசேகரன், பி.காம் சி. எஸ்ல ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”
உதய்யின் இந்த அதிர்ந்த நிலையை கண்டு மறைந்து நின்றிருந்த ராகினியின் மனது ஆனந்த கூத்தாடியது.
ஆம், இது அவரின் பழி வாங்கும் நேரம், உதய்யிடம் தான் அவமானப்பட்டத்தை அவரால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, சின்ன பையன் என்ன பேச்சு பேசினான், ‘சும்மா விடமாட்டேன் உன்ன’ அவரது மனது அன்றே சூளுரைத்திருந்தது, சரியான தருணம் இப்பொழுது வர அவரது மனது ஆனந்த கூத்தாடியது.
நான் ஏற்கனவே சொன்னது போல் சுபாவும், மீராவும் உருவத்தில் ஒத்திருந்தது அவரது சதி திட்டத்திற்கு வழிவகுத்தது.
ஆனால் என்ன தான் சிறு வயதில் இருவரும் ஒன்றுபோல் தெரிந்தாலும், இப்பொழுதும் இருவரின் தோற்றத்திலும் பெரிய மாற்றம் தெரிந்தது.
மீரா, கொஞ்சமும் சதை பிடிக்காத, செதுக்கி வைத்த அழகோடும் பால் வண்ண நிறமுமாக மெருகேறி, உதட்டில் உறைந்த சிரிப்போடு, அவள் அழகு பன்மடங்கு பல்கி பெருகியிருந்தது உண்மை.
மறுபக்கம் சுபாவோ சற்று பூசினார் போன்ற உடல்வாகு, கண்ணங்கள் உப்பி, அவள் அன்னையின் இம்சையால் சற்றே வெள்ளை நிறத்தை தொட்டிருந்தவள், மேக்கப்பின் உதவியால் அழகாய் ஜொலித்தாள் தான்.
ஆனால் இயற்கையான அழகின் முன் செயற்கை அழகை நிலைநாட்ட முடியாது என்பது தான் உண்மை. சுபாவிற்கு இதில் எதிலும் சுத்தமாய் விருப்பம் இருந்ததில்லை. அவள் தாயின் உருட்டல், மிரட்டலில் சிக்கி தவித்தது அவளது மனம்.
தாயின் பக்கா ப்ளானை கேட்டவளுக்கு இது எத்தனை பெரிய துரோகம் என்பதும் புரிந்தே இருந்தது. சிறிய வயதில் அவர்களுடன் அவ்வபோது சேர்ந்திருந்தவளுக்கு அவர்களின் நட்பின் ஆழமும், சில இனிப்பான சம்பவங்களும் தெரியும், இதை உபயோகித்தே விளையாட நினைத்தார் ராகினி.
உதய்யை பழிவாங்க வேண்டும், அதற்கு தன் மகளை உபயோகப்படுத்திய வக்கிர புத்தி அவருக்கு, இதில் கொஞ்சமும் தன் கணவனுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார் இந்த நயவஞ்சகி ராகினி.
உதய்யின் திக்பிரம்மயை கலைக்கவென அவனது தோளை தொட்டாள் சுபா என்கிற மீரா… உதய் சற்று தெளிந்தவனாக அவளை தலை முதல் கால் வரை அளவெடுத்தான்.
முதலிலே எங்கோ பார்த்த நியாபகம் தான் ஆனால் இப்பொழுது அவளது உடை, மேக் அப்பில் சற்று குழம்பினான். மீரா தானா ஒரு நிமிடம் மனது முரண்டது.
“சரி வாங்க, நான் ஹெல்ப் பண்றேன்” அவளை அழைத்து சென்று தன் இடத்தில் அமர்ந்தவன் எதிர் இருக்கையை அவளுக்கு காட்டினான்.
அதில் திக்கென்றது இருவருக்கும், ஏனென்றால் ராகினி அவள் தன் பெயரை சொன்னதுமே, உதய் அவளிடம் அவனை பற்றி உரைப்பான் என்றே அவர் நினைத்தார். அந்த எண்ணம் இப்பொழுது ஆட்டம் கண்டது, மறுபக்கம் சுபாவோ நெறுப்பின் மேல் அமர்ந்தது போல் நடுங்கினாள்.
“சொல்லுங்க… +2 எவ்ளோ மார்க்” உதய் ஆரம்பித்தான்
“820” என்றாள் சுபா.
‘மீரா நல்லா படிக்கிறவளாச்சே’ அவன் மனது நினைத்தது.
“ம்… உங்களுக்கு கிடைக்கும் தான் பட் முதல் நாள் கொஞ்சம் டவுட், நீங்க நாளைக்கு வந்து பாருங்க பெட்டர், இன்னைக்குனா எப்டியும் ஈவ்னிங் வர வெய்ட் பண்ணுங்கனு சொல்லுவாங்க அப்றம் நாளைக்கு வர சொல்லிடுவாங்க” என்றான்.
“ம்…சரி…ஃபீஸ்” அவள் இழுக்க.
“இது ப்ரைவைட் காலேஜ் இங்கலாம் கண்டிப்பா டோனேஷன் இருக்கும், குறிப்பா உங்க மார்க்கை பாத்துட்டு அதுக்கு தகுந்தாப்ல காசு வாங்கு வாங்க, இப்போ உதாரணமா உங்களுக்கு தர்ட்டி பைவ் தௌஸன்ட் வரை வரும் பர்ஸ்ட் செம்க்கு” என்றான்.
அவள் தலையை ஆட்டிவிட்டு எழ, “ஒரு நிமிசம்” என்றான் உதய்.
“உங்க அப்பா, அம்மா என்ன பண்றாங்க?”
“ஹம்…ப்பா மெக்கானிக், அம்மா ஹவ்ஸ் வைஃப்” என்றாள் அவள்.
“உங்களுக்கு சிப்ளிங்க்ஸ்?”
“ஒரு அண்ணா இருக்காங்க”
“ஓகே…போய்ட்டு வாங்க” என்று அவளை வழி அனுப்பி வைத்தவனுக்கு, ஏதோ முரண்டியது. எல்லாம் சரி தான் ஆனால், அவளிடம் ஏதோ மிஸ்ஸிங்.
இங்கு வீட்டுக்கு வந்ததும் தான் சுபாவிற்கு உயிரே வந்தது, ராகினியும் உடன் தான் வந்தார் ஆனால் எதுவும் பேசியிருக்கவில்லை. வீட்டின் உள்ளே நுழைந்ததுமே, அவளை பிடித்துக்கொண்டவர் அவளிடம் அவர்களின் உரையாடலை கேட்டு தெரிந்துக்கொண்டார்.
“அப்போ நான் நினைச்சது நடக்கும்” அவரது மனது குரோதத்தை கக்கியது.
“ம்மா இதுலாம் வேணுமா? எனக்கு பயமா இருக்கு”
“வாயை மூடு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உனக்கு, அவனை பார்த்தா பாவமா இருக்கா? இதுதான் எனக்கு அவனை பழிவாங்க ஒரே வழி”
“எனக்கு பிடிக்கலை மா, நான் வேற காலேஜ் ஜாயின் பண்ணப்போறேன்”
அவளை உக்கிரமாய் முறைத்தவர் “நீயெல்லாம் என் பொண்ணா ச்செய், அவன் என்னை அத்தனை பேர் முன்ன அசிங்கபடுத்தினான். அவனுக்கு நீ பாவம் பாக்குற, இங்க பாரு நீ இதை செஞ்சுதான் ஆகனும், இல்ல நீ என்ன உயிரோடவே பாக்கமுடியாது”
“ம்மா…”
“என்ன… நான் சொன்னா செய்வேன் உனக்கே அது தெரியும், கொஞ்ச நாள் அவனை லவ் பண்ற மாதிரி நடி, அப்றம் அவன்ட்ட உன்ன எனக்கு பிடிக்கலனு சொல்லிட்டு வந்துடு நம்ம வேற ஊருக்கு போய்டலாம் அவ்ளோ தான்” என்றார் அழுத்தத்துடன்.
சுபாவிற்கு தந்தையிடம் கூறலாம் என்றும் தோன்றியது. ஆனால், தந்தை வெளிநாடு அல்லவா சென்றிருக்கிறார் வருவதற்கு ஆறு மாதம் ஆகும். அதனால் தான் இந்த நேரத்தை பயன்படுத்த நினைத்தார் ராகினி.
ராகினியின் திட்டத்தின் முதல் படி வெற்றிதான், அடுத்தடுத்து என்ன செய்ய போகிறார் ராகினி.
********
மறுநாள் உதய் சொன்னது போல் கல்லூரிக்கு தனியாகவே வந்தாள் சுபா. அவன் நேற்றிருந்த இடத்திற்கே சென்று பார்த்தாள். அங்கு அவன் இருந்தான் அவனிடம் அவள் விரைந்தாள்.
அவள் வருவதை தூரத்திலிருந்து பார்த்துவிட்ட உதய் அவளை புதிதாய் பார்த்தான். ஏனென்றால், நேற்று போல் அல்லாது இன்று ப்ளைய்ன் ரெட் வெல்வெட் சுடியில், அதே வண்ணத்தில் பொட்டு வைத்து, முடியை ஒற்றை பின்னலிட்டு காதில் அதே நிறத்தில் ஜிமிக்கி கம்மலோடு, சுத்தமாய் ஒப்பனையின்றி வந்தவளை அவன் விழிவிரித்து பார்த்தான்.
நேற்று ராகினி தான் சுபாவிடம் மேக்கப் போட சொல்லி கட்டாயப்படுத்தினார், ஆனால் உதய் அவனை வெளிப்படுத்தாததால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தவர் மகளை இன்று இப்படி தயாராக பணிந்திருந்தார். மீராவின் குறும்பு, அவளது மேனரிசத்தை பழக சொல்லி அவளை இரவு முழுக்க படுத்தி எடுத்திருந்தார் ராகினி.
கைப்பாவையாய் அவளும் அமைதியாய் வந்து, அவனுக்கு எதிர்புறம் அமர்ந்தவள். “சாரி ண்ணா, உங்க பேரை கேக்க மறந்துட்டேன், உங்க பேரு என்ன?” என்றாள் புன்னகையுடன்.
அதில் சற்று தெளிந்தவன் “நான் உ… உன் சீனியர்” என்றான் அதே புன்னகையுடன்.
அவள் “ம்ப்ச்…அது தெரியும் உங்க பேரு?”
“அது எதுக்கு இப்போ தேவைப்படும்போது சொல்றேன்”
“உங்கள எப்டி கூப்பிட அப்போ”
“சீனியர்னு”
“சீனியர் ண்ணா”
“ஏய்… வெறும் சீனியர்னு தான் உன்ன கூப்பிட சொன்னேன்.
“சரிங்க வெறும் சீனியர்”
சிரித்துவிட்டனர் இருவரும். “மீரா…” அவன் மொத்த அன்பையும் அதில் தேக்கிவைத்து அவளை அழைக்க.
“ம்…சொல்லுங்க” என்றாள் அவளும்.
“உனக்கு என்ன தெரியுதா?”
“ஏன் எனக்கு ஐ ப்ராப்ளம் எல்லாம் இல்லையே”
“குட் ஜோக், பட் ஐ யம் நாட் ரெடி டூ ஸ்மைய்ல்”
“ஹம்…சிரிப்புக்கு கூட பஞ்சமா?”
“பஞ்சம் இல்ல, கொஞ்சம் பேசணும், மொதல்ல அட்மிஷன் போடுவோம், உன்னோட ஃபார்ம் நானே ஜென்ரல் இன்பர்மேஷன்லாம் ஃபில் பண்ணிட்டேன்” என்று அவளிடம் அவன் அந்த அட்மிஷன் ஃபார்மை கொடுக்க. அதிலிருந்தது பெயர் என்ற இடத்திலிருந்த “மீரா குணசேகரன்” பார்த்து அவள் அதிர்ந்தாள்.
இதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அதிர்வை முகத்தில் காட்டாது “தாங்க் யூ” என்று பெற்றுக்கொண்டாள்.
“சரி வா முதல்ல அட்மிஷன் போட்டுட்டு வரலாம்” அவன் எழ.
“இல்ல வேணாம், நானே போய் போட்டுகிறேன்” அவள் மறுக்க.
“ஏன்?” என்றான் உதய்.
“இல்ல அம்மா நீயே எல்லாம் கத்துக்கோன்னு சொல்லி அனுப்புனாங்க” என்றாள் அவனுக்கு சந்தேகம் வராமல் இருக்க.
“சரி…நான் கூட வரேன், நீ எல்லாம் பண்ணு”
“இல்ல இல்ல நானே போய்க்குவேன், நீங்க இங்க வெயிட் பண்ணுங்க. நான் போய் அட்மிஷன் போட்டுட்டு வந்துறேன்”
“ஷ்யூரா?”
“ம்…”
“அது சரி, அம்மா ஏன் வரலை?”
“அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான்”
“என்னாச்சு?”
“நத்திங் சீரியஸ்” என்றாள்.
“ஓகே…வா டிப்பார்ட்மெண்டாவது காட்டுறேன்”
“இல்ல… இல்ல எனக்கு தெரியும் நான் வந்துறேன்” என்று அவனிடமிருந்து தப்பித்து வேறு ஃபார்ம் வாங்கி அதை ஃபில் பண்ணி அவள் அட்மிஷன் போட்டுவிட்டு வர சரியாக ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
அவனை தேடி அவள் வர, அங்கு அவனில்லை, அவனது சேரின் எதிரே இருந்த சேரில் அமர்ந்தவள் அவனுகாக காத்திருக்க. அவள் முன் சூடாய் டீயை வைத்தவன் உடன் எக் பப்ஸையும் வைத்தான்.
“தாங்க்ஸ்” என்று அதை அவள் உண்ண.
“வேல முடிஞ்சா?”
“ஹம்…”
“நீ வந்து சேர்ந்த நேரம் நான் அவுட்கோயிங் ஸ்டுடெண்ட், என்ன சொல்ல”
அவள் புன்னகைக்க “பட் உன்ன பார்க்க இனிமே அடிக்கடி வருவேன்”
அதில் அவளுக்கு புறையேற, “ஹே மெதுவா?” என்றான்.
“இல்ல இங்க நாம மீட் பண்ண வேணாமே” என்றாள்.
“ஏன், என்னாச்சு?”
“இல்ல…யாராவது பாத்தா?”
“பாத்தா என்ன”
“இல்ல எனக்கு படிப்புல கான்சண்ட்ரேஷன் மிஸ் ஆகும்”
“ஹே…லூசு ஜஸ்ட் பாக்க வரேன்னு தானே சொன்னேன்”
“அதான் நாம வேற எங்காவது மீட் பண்ணலாம்”
“ஏன் நீ வித்தியாசமா நடந்துக்குற?”
“இல்ல உதய்”
அவள் அவனது பெரை சொல்லியிருக்கிறாள் அதில் உள்ளம் தொலைத்தவன். “மீரா…அப்போ உனக்கு…?”
“ம்…ம் தெரியும்” என்றாள் வெட்கத்துடன்.
“அப்போ நடிச்சியா”
“ம்…” அவள் தலையாட்ட.
“கேடி…”
“வீட்ல எல்லாருக்கும் உங்க எல்லார் மேலையும் கோபமிருக்கு முக்கியமா அண்ணாக்கு”
“ஓ மித்ரனுக்கா?”
“ஆமா…காலைல அண்ணாவோடத்தான் காலேஜ் வருவேன், நீ இங்க இருக்குறது தெரிஞ்சா அப்றம் வேற ஊருக்கு கூட்டிட்டு போய்டுவாங்க, உன்ன பாக்கத்தான் நான் திருச்சிலிருந்து அகைன் இங்க வந்தேன்” என்றாள் போலி கண்ணீருடன்.
அவளது கண்ணீர் அவனை நினைக்க “மீரா காம் டவுன், சரி விடு நாம வெளியவே மீட் பண்ணலாம் சரியா?” என்றான்.
“ம்…” என்று அவள் புன்னகைக்க.
“உன்கிட்ட நிறைய பேசணும்” அவன் ஆரம்பிக்கும்போதே அழைப்பேசி சினுங்க அதை எடுத்து பேசியவன் அந்த பக்கம் ஏதோ அவசரம் என்றதும். “மீரா சாரி” என்றவன் ஒரு பேப்பரை எடுத்து அதில் தனது அழைப்பேசி எண்ணை எழுதியவன் “நான் உடனே கிளம்பணும், இந்த நம்பருக்கு ஈவ்னிங் கூப்பிடு” என்று கூறி செல்ல.
‘எங்கே அவன் எதையாவது கேட்டு நாம் உளறி விடுவோமா’ என்று பயத்திலிருந்தவளுக்கு காலம் கைகொடுக்க “சரி” என்று அவனிடமிருந்து தப்பித்தாள்.
அன்று மாலை அவனுக்கு இவளே அழைத்தவள், அவனிடம் பேசியிருந்தாள். அவனின் தனது குடும்பத்தை பற்றிய கேள்விகள் வரும்போது “அம்மா வராங்க, அண்ணா, அப்பா” என்று சாக்கு சொல்லியும், சில நேரம் சமாளித்தும் வைத்தாள்.
அவர்களின் உரையாடல் இரவு எட்டு மணிவரை நீண்டு பின் எட்டு, ஒன்பதாகி, ஒன்பது பத்தாகி, பத்து பதினொன்றாகி நீள”
மாசத்தில் ஒரே ஒரு சந்திப்பு என்ற, கண்டிஷனுடன் அமைதியாய் கழிய, சரியாக நான்கு மாதங்கள் ஓடியிருந்த நிலையில்
சுபாவிற்கு உண்மையிலே உதய்யின் மீது காதல் வந்திருந்தது.
அப்பொழுது சதாரண பட்டன் போன் மாடலே தலைமை வகித்தது. இல்லையென்றால் ஃபேமிலி ஃபோட்டோ காட்ட சொல்லியிருக்கலாமே.
முதலில் வேண்டா வெறுப்பாய் துவங்கிய சுபாவிற்கு உதய் மீது காதல் பெருகியதால், அவனோடு அதிக நேரம் செலவழித்தாள்.
உதய் அவளிடம் என்ன எதிர்பார்த்தான் என்றே அவனுக்கு புரியாத நேரம், சுபாவே அவனிடம் தன் காதலை உரைக்க, மறுக்க காரணம் இல்லாததால் அவனும் அதை உளமார ஏற்றுக்கொண்டான்.
அப்படி கொண்டாடிய முதல் காதலர் தினத்தில் சுபா கொடுத்த பரிசைத்தான் உதய் முகநூலில் போட்டிருந்தான் ஆனால் அன்றேத்தான் அவளின் உண்மை முகமும் தெரிய வந்தது.
உண்மை தெரிந்தால் தாங்குவானா உதய்?
_தொடரும்_