உள்ளத்தின் காதல் நீங்காதடி-30 (SEMI FINAL)
உள்ளத்தின் காதல் நீங்காதடி-30 (SEMI FINAL)
காதல்-30
காதல் சிறையில் அடைந்திருக்கும் என்னை மீட்க வருவாயா காதலா? நீ வருவாய் என்றே கண்களையும் மூடி அமர்ந்திருக்கிறேன், நீ வந்து வா போகலாம் என்று கூறு கண் திறந்திவள் வருவாள், உன்னை மட்டும் நம்பி…
***
மீரா கூற துவங்கினாள் “நம்ம கல்யாணத்துக்கு சரியா ஒன்றரை மாசத்துக்கு முன்னரே, எனக்கு ஒரு ஃபோன் வந்துச்சு”
அவன் அவளையே பார்க்க அவளே தொடர்ந்தாள் “அவங்க என்னை பாக்கணும்னு சொன்னாங்க, நான் முடியாதுன்னு சொல்லிட்டேன், அவங்க கம்பெல் பண்ணினாங்க, என் பொண்ணோட வாழ்க்கை ஒரே ஒரு தடவைன்னு கெஞ்சினாங்க”
“சரின்னு, நானும் கிளம்பி போய் பாத்தேன், அப்போதான் தெரிஞ்சது அவங்க ராகினி அத்தையும், சுபாவும்னு. ஒன்னுமே புரில ஒரு நிமிஷம், அதோட அத்தை தான் நல்லா இருக்கியா கண்ணு, அப்படினு பாசமா விசாரிச்சாங்க, நான் பதில் சொன்னேன்”
“இப்படியே பேசிட்டு இருக்கும்போது தான், சுபாவும், நீங்களும் லவ் பண்ணியதா சொன்னாங்க” அவள் தயங்கி நிறுத்த அவனோ மேல சொல் என்று செய்கை செய்தான்.
“நீங்க இதை நேரா வந்து அப்பாகிட்ட சொல்லாம,ஏன் என்னை மட்டும் தனியா கூப்பிட்டு சொல்றீங்கனு கேட்டேன்”
“அவங்க அதுக்கு அண்ணா முகத்தை பாக்குற தகுதி எனக்கில்லைன்னு சொன்னாங்க”
“எனக்கு உதய் மேல நம்பிக்கையிருக்கு அவர் அப்படி பண்ணவே மாட்டாருன்னு தெளிவா சொன்னேன்”
“அப்போத்தான் அந்த போட்டோவை காமிச்சாங்க, நீங்க வேலண்டைன்ஸ் டே அன்னிக்கு எடுத்துகிட்ட போட்டோ, அந்த போட்டோவை நானும் ஏற்கனவே பாத்திருக்கேனே”
“இருந்தாலும் இதையெல்லாம் நான் நம்புறதா இல்லைன்னு சொன்னதுக்கு அப்றமும் அவங்க ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க. கோபம் வந்துருச்சு எனக்கு. அதுனால உங்களை நம்புறதுக்கு நான் இன்னும் முட்டாள் இல்லை என்னை ஆளை விடுங்கனு கத்திட்டு திரும்பி நடந்தேன்.
“அப்போத்தான் சுபா, என் வாழ்க்கையே போய்டுச்சுன்னு, என் காலுல விழுந்து கெஞ்சுனா” அன்றைய நாளின் தாக்கம் அவளை மெல்ல மெல்ல ஆட்க்கொள்ள.
அன்று.
சுபா மீராவின் கால்களில் விழுந்து கெஞ்சினாள் ” மீரா, என் வாழ்க்கையே உன் கையிலத்தான் இருக்கு, உதய் இல்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லை” அவள் கதற.
அவளை தீப்பார்வை பார்த்தவள் “மொதல்ல எந்திரி, உண்மையிலையே உதய்யிற்கு உன் மேல காதல் இருந்திருந்தால்.அவன் நிச்சயம் உன்னை விட்டிருக்க மாட்டான், அவன் அப்படிபட்ட கேரக்டர் கிடையாது, நீ தேவையில்லாம இங்க டிராமா பண்ற, காதலை யாசகம் வாங்குறியா?” அவள் எதிர்த்துக்கேட்க.
“உண்மையா நடுவுல வந்தது நீதான் மீரா, என் வாழ்க்கையை கெடுத்தது நீதான், உன்னால் உன்னால் மட்டும்தான் உதய் இப்போ என்னை நிராகரிக்குறாரு” அவள் ஆணித்தரமாய் பேச.
மீரா ஸ்தம்பித்து நின்றாள். அவளின் அக்ரோஷம் அத்தகையது, ஆனால் அது ஒரு நிமிடமே உடனே அவளை நேராய் பார்த்தவள் “அதுக்கு என்க்கு எந்த அவசியமும் இல்லை, முதல்ல அதை நீ புரிஞ்சுக்கோ, உதய்க்கு என் மேல் உண்மையான காதல் இருக்கு, அதை நான் உணர்ந்திருக்கிறேன், அவனா வந்துத்தான் என்னை கல்யாணம் பண்றதா சொன்னான்”அவள் அழுத்தத்துடன் பேச.
“அவர் அதை மனசார சொல்லலை மீரா, அது ஒரு நிர்பந்தம்.சரி, அப்படினா என்னை பத்தி ஏன் உன்கிட்ட அவரு பேசல?” சுபா அவளை தூண்டிவிட.
‘இந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லையே’ சில விஷயங்களை தேவையில்லாதது என்று நாம் மறைப்பதே, பின் காலத்தில் நமது வாழ்வை கெடுக்கவல்லதாய் அமைகிறது. உதய் மீராவால் இதை தாங்க முடியாது என்று நினைத்த ஒரு விஷயத்தால், அவனது வாழ்வே இன்று கேள்விக்குறி ஆகிவிடுமோ…
“இங்க பாரு, அது அவரோட கடந்த காலம், அதை பற்றிய கவலை எனக்கில்லை” மீரா தடுமாற. அந்த தடுமாற்றத்தை கண்டுக்கொண்டவள்.அதை சரியாக உபயோகப்படுத்தினாள்.
“அங்க தான் விஷ்யம் இருக்கு மீரா” அவள் பீடிகைப்போட.
மீரா அதிர்ந்து அவளை நோக்கினாள். அவளே தொடர்ந்தாள்.
“நானும் உதய்யும் உயிருக்கு உயிராய் நேசிக்குறோம், சின்ன வயசுல உனக்கு நடந்த அநீதிக்கு தெரிந்தோ தெரியாமலோ அந்த குடும்பமும் காரணமானதால, உன்னை பார்த்த உன்னைத்தான் கல்யாணம் பண்ணணும்னு உங்க அத்தை சத்தியம் வாங்கியிருந்தாங்க, அதனால் உதய்யும் வெய்ட் பண்ணினாரு என்னை பார்க்கும் வரை” அவள் கண்ணீருடன் பேச.
தன்னை சரிசெய்துக்கொண்டவள் “திடீர்னு நீ வரவும், என்னை கூப்பிட்டு பேசினாரு, இந்த ஜன்மத்துல நாம சேர முடியாது சுபான்னு அழுதாரு தெரியுமா?” அவள் தேம்பி தேம்பி அழ.
ஒரு மாய சுழலில் சிக்கினாள் மீரா, ஏதேதோ மனதில் வந்து நெறுடியது, ‘மதுரையில் தன்னை பார்த்தப்போது அவனது ஒட்டா தன்மை, காதல் விஷ்யத்தை தன்னிடம் மறைத்தது’, அனைத்து பூதமாய் கிளம்ப பதைபதைத்தாள் பேதை.
‘உயிரை வேரோடு பிடிங்கி எரிய வேண்டிய நிலை வருமோ? உதய்யை தன்னால் விட்டுக்கொடுக்க இயலுமா? ‘ அந்த நினைவே அவளை வேர் அறுக்க கண்களில் ஆறாய் நீர் ஓட துவங்கியது. இந்த மாதிரி நிலையில் மூளை வசதியாய் நன்மைகளை மறந்துவிடும் மாறாக தீமைகளை அடிக்கி வைக்கும்.
முகநூலில் பதிவேற்றப்பட்ட படம் ஆனால் அதில் கூட உதய் மீராவிற்கான அழைப்பையே பேராக வைத்திருந்தான், அது ஏனென்று பித்து மனம் யோசிக்க மறந்ததேன். சிறு வயது முதலே உதய் பெரிதாய் சுபாவிடம் பேசியது கிடையாதே, அதை மறந்ததேன்.
வசதியாய் அனைத்தையும் மறந்தவள், தன்னவனை பறித்து விடுவார்களோ என்று பயந்து நின்றாள்.அதை உபயோகப்படுத்திய ராகினி “மீரா உனக்கே எல்லாம் புரியும், நீ வாழுறது சுபாவோட வாழ்க்கை, அதை திரும்ப அவகிட்டவே கொடுத்திடு” அவர் எச்சரிக்க.
கண்களை நன்றாக துடைத்தவள் “முடியாது” என்றால் ஆணித்தரமாக. அந்த பதிலை இருவரும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர்களின் ஸ்தம்பித்த நிலையே கூறியது.
இவள் பழைய மீரா அல்ல, சிறுவயதில் அத்தைக்கு பயந்தவள் அல்ல, இவள் துணிச்சலான மீரா. புதிய மீரா, பிடிவாதம் கொண்ட மீரா. மொத்ததில் இவள் புது மனிஷி.
ராகினி சற்று கடினமான வார்த்தைகளை உபயோகிக்க துவங்கினார் “ஏய், என்ன நினைச்சுட்டு இருக்க, இவ்ளோ தூரம் சொல்றோம் திமிரா பேசுற, உதய் மனசு முழுக்க சுபாத்தான் இருக்கா, அவளை நினைச்சுட்டு உதய் உன்னோட வாழ்ந்த நல்லா இருக்குமா? நீ அதை விரும்புறியா?” பாம்பாய் கொத்த துவங்கினார் ராகினி.
காதுகளை மூடிக்கொண்டவள் “இல்லை, எனக்கு தெரியும் உதய்க்கு என் மேல் உண்மையான காதல் இருக்கு” அவள் காளியாக அவதாரம் எடுத்து உச்ச ஸ்தானியில் கத்த துவங்க.
“சரி, எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடு, இது எல்லாத்தையும் ஆதராத்தோடு நிரூபிக்குறோம், அப்படி நாங்க நிரூபிச்சா நீ சுபாவுக்கு உதய்யை முழுசா விட்டுக்கொடுக்கணும்” ராகினி உரைக்க.
மீராவின் மனதிற்க்குள் வலி ‘இவர்கள் கூறுவது நிச்சயம் உண்மை இல்லை, உதய் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு’ அவள் மனது உரைத்தது.ஆனால், தற்சமயம் இந்த பிரச்சனையை முடிக்க நினைத்தவள் “சரி” என்றிருந்தால்
ராகினியின் உதட்டில் மர்ம புன்னகை “உனக்கு அடுத்த மாசம்தானே கல்யாணம்”
“அதுக்கு?”
“ஒருவேளை உனக்கு கல்யாணம் ஆனாலும் நாங்க நிரூபிக்கிற வரை நீ உதய்யோடு சேரக்கூடாது” வன்மம் பிடித்தவரின் வார்த்தையும் வன்மத்தைத்தானே கக்கும்.
“இது பைத்தியக்காரத்தனம், நான் ஏன் அப்படி இருக்கணும்? உங்க நாள முடிஞ்சா என்னோட கல்யாணதுக்கு முன்ன நிரூபிங்க, என் வாழ்க்கைய நான் பாத்துக்குவேன்” மீரா அழுத்தமாய் உரைக்க.
” உதய் எல்லா ஆதரத்தையும் அழிச்சுட்டான், எங்களுக்கு ஆதாரம் திரட்ட கொஞ்சம் டைம் வேணும், உனக்குத்தான் அவன் மேல நம்பிக்கை இருக்கே வெய்ட் பண்ணலாமே” ராகினி அவளை மடக்க.
இவர்கள் கூறுவதில் எத்தனை தூரம் உண்மை என்ற சுயசிந்தனையில் இருந்தாள் மீரா, உதய்யின் வாழ்வில் ஒரு பெண் இருந்தால் அது உண்மை, இது இவளாகவும் இருக்கலாம், ஆனால் இவர்கள் பிரிந்ததிற்கான காரணம் அறியாமல் எதுவும் செய்யமுடியாதே.அத்தோடு, உதய் மேல் இருந்த நம்பிக்கையில் “சரி, ஒத்துக்கிறேன்” என்றிருந்தாள்.
***
நடந்ததை அவள் விவரிக்க, விவரிக்க உதய்யின் கோபம் எல்லை கடந்து சென்றது.எதுவும் பேசாமல் அவன் எழுந்துக்கொள்ள, அவன் கையை அவள் பற்ற அதை உதறிதள்ளியவன்.
முன்னே நடக்க, அவள் பின்த்தொடர்ந்தாள். பில் பே பண்ணிவிட்டு நேராய் காரில் சென்று அமர்ந்தவன். அதை உயிர்பிக்க இவளும் அவனது அருகே சமத்தாய் அமர்ந்துக்கொண்டாள். அவனது கோபத்தில் உள்ள நியாயத்தை அவள் சரியாக நினைத்ததால் அவளும் எதுவும் பேசவில்லை.
நீண்ட நெடிய அந்த நான்கு மணி நேரமும் ஒரு வித அமைதியில் கழிய, அந்த நான்கு மணி நேரமும் நன்றாக அவள் தூங்கிவிட்டதால், கண் விழித்து பார்த்தவள். ” இப்போ எங்க இருக்கோம்” என்று கேட்டுவிட.
அதற்கு அவன் கொடுத்த உஷ்ண பார்வையில் வாயை மூடிக்கொண்டவள், சிறிது நேரம் வாயை மூடிக்கொண்டு வர அதற்கு மேல் முடியாதவள் எப்.எம் ஐ ஆன் செய்ய.
அதிலோ ” ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா”
இந்த வரிகள் ஓட அவனை திரும்பி அவள் பார்க்க, அவனோ மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த காரின் வேகத்தையே கூட்டியிருந்தான்.
வண்டி ஜெர்க் ஆனதில் நடுங்கிப்போனாள் பேதையவள் “ஹே நிறுத்து” அவள் கத்து. காரின் வேகசத்தத்தோடு அவளுடைய சத்தம் தோற்றுப்போனது.
அவசரமாய் அவள் எப்.எம் ஐ ஆப் செய்ய கார் நார்மல் ஸ்பீடை அடைந்தது.
‘அடப்பாவி, பாட்டு போடதுக்கா என்னை போட்டு தள்ள பாத்தா?’ அவள் மனதோடு நினைக்க. சடென் பிரேக் இட்டு அவன் வண்டியை நிறுத்த. ஒரு நிமிடம் முன்னே சென்று வந்தாள் மீரா. நல்லவேளை காயம் எதுவும் ஏற்படவில்லை.
“ராட்சஷா” அவள் திட்ட. அவளை முறைத்தவன் கீழே இறங்க. அப்பொழுது தான் வெளியே பார்த்தாள் அது ஒரு ரெசாட்.
“ஓ வந்துட்டோம் போல” அவள் காரைவிட்டு இறங்க.அவர்களை வரவேற்றது ஏலகிரி டூரிஸ்ட் ரெசார்ட்ஸ்.
சுற்றி இருந்த இயற்கையின் கொடையில் மனதை தொலைத்தவள். முதல் முறை கண் முன் தெரியும் அழகில் அதை பார்க்க, எதை விட என்று குழப்பமடைய, ஒவ்வொன்றாய் பார்த்தாள்.
அழகிய வண்ணமலர்கள் பூத்து குலுங்கிய அந்த இடத்தின் இதம் கண்களையும், இதயத்தையும் ஒரே நேரத்தில் குளிர வைக்க.
” மனிதன் இன்னும் மனிதனாய் வாழ இயற்கைத்தான் உதவுகிறது” என்று அவள் உணர்ந்துக்கூறினாள். அவளது மகிழ்வை கண்ட உதய் சிறிது நேரம் அவளை ரசித்தான்.
பிறகு அவனை அவனை கடிந்தும்க்கொண்டான். “ஹா ஹா காதல் அழகு, நீ மட்டுமா இப்படி நடந்துக்கொள்கிறாய்? காதலித்த அனைவரும்த்தான் அதனால் கூச்சபடாதே மகனே, என்ஜாய்” எங்கோ காற்றிலிருந்து பறந்து வந்தது இந்த வார்த்தைகள். முடிந்த மட்டும் தனது முகத்தை இறுக்கமாக வைத்தவன் ‘ இன்னைக்கு உன்னை பாத்துக்கிறேன் டி” என்று சூளுரைத்துக்கொண்டான்.
அவளிடம் விரைந்தவன் தொண்டையை செறும, அவனை பார்த்தவள் ” சூப்பர்ரா இருக்கு உதய், என்னை ஒரு போட்டோ எடுங்களேன் ப்ளீஸ்” என்க.
அவளது பெட்டியை வெளியே எடுத்தவன் அதை அவள் முன் வைத்துவிட்டு, நேராய் தனது பெட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு நகர்ந்தான். அதில் மனம் துவன்டவள் பின் ‘ இதென்ன பிரமாதம் இதைவிட ஸ்பெஷல் ஐட்டெம்லாம் இருக்கு, இன்னைக்கு முழுக்க எப்படியும் வெச்சு செய்வான் வாங்கிப்போம்’ அவள் வழக்கம்போல் தன்னை தேற்றிக்கொண்டவள் அவனை பின்த்தொடர்ந்தாள்.
ஏற்கனவே ரூம் புக் பண்ணியதால் அவன் சென்று ரூம் கீ பெற்றவன், இவள் வருவது தெரியவும் வேண்டுமென்றே அதை கேட்டேன்.
“இன்னொரு ரூம் கிடைக்குமா, வீ நீட் டூ ரூம்ஸ்” அவன் கேட்டு முடிக்கவுமே கோபம் வந்துவிட்டது மீராவிற்கு.
“யெஸ் சார்” அவன் கூற
இவளோ ” யோவ் நீ யாரு” அவள் ரிஷப்ஷனில் உள்ளவரிடம்ப் பாய.
அதிர்ந்தவரோ ” மேனேஜர் மேடம்” என்றார்.
“ஹனிமூன்க்கு வர்ற கப்பில்க்கு எந்த கேனை பயலாவது டூ ரூம்ஸ் கொடுப்பானா யா?” அவள் நேரடி தாக்குதலில் இறங்க.
அவரோ ” சாரி… மேடம்…சார்த்தான்”
“அவரு ஒரு லூசு, உனக்காவது மண்டைல மாசாலா வேணாம்” அவள் அவரை வாங்கு வாங்கு என்று வாங்க.
அவள் சந்தடி சாக்கில் தன்னையும் டேமேஜ் செய்வதை ரசித்தவன், அதற்கு மேல் முடியாமல் போக. அவளை இழுத்துக்கொண்டு லிப்டிற்கு சென்றான்.
அதில் சற்று தணிந்தவள். அவன் ரெண்டு ரூம் கேட்டதில் அவன் மேல் கடுப்பில் இருந்தவள் ” பெரிய இவன் ரெண்டு ரூம் கேக்குதோ உனக்கு” என்று வாய்விட்டே புலம்பினாள்.
“நீதான் என்னை வேண்டாம்னு சொன்னவள் ஆச்சே” அவன் அவளை துளைக்கும் பார்வையோடுப் பேச.
“அப்படி நான் சொன்னேனா?” அவள் அடுத்த சண்டைக்கு ரெடியாக.
அவர்கள் தளம் வரவும் அவன் முன்னே நடக்க அவள் பின் நடந்தாள்.
அவர்கள் ரூமை அடைந்தவன், டிஜிட்டல் கீயைக்கொண்டு அந்த அறையை திறக்க. அதுவோ, ஹனிமூன் சூட், வெள்ளை மெத்தையில் ஹார்ட்டினை ரெட் கலரில் ரோஜா இதழ்களைக்கொண்டு வடிவமைத்திருந்தவர்கள், அறை முழுமைக்கும் கேன்டில் லைட்டை எரியவிட்டிருந்தனர்.
அந்த அறையிலிருந்து வந்த வாசனை இருவரின் ஏகந்தத்தை தூண்டும் விதமாக அழகாய் அமைந்திருக்க. அந்த அறையின் நிலையைக் கண்டு புன்முறுவல் பூத்தாள் அவள்.
“வெளில தான் அவ்ளோ பில்டப்” அவள் அவனை குறைப்பட.அவனோ,
“இது மார்னிங்கே புக் பண்ணினது” என்றான், அவள்மீது அவனுக்கு உள்ள கோபத்தை எடுத்துரைக்கும் விதமாக.
அதில் முகம் கசிங்கி, கண்களில் சிறுதுளி கண்ணீர் கூட எட்டிப்பார்த்தது. அதை துடைத்துக்கொண்டவள் அமைதியாய் உள்ளே சென்று வாஷ் ரூமிற்க்குள் ஓடியிருந்தாள்.
உதய்யின் மனதோ அதைவிட வேதனைப்பட்டது.
“உன்னை வேதனைப்படுத்துவது என் நோக்கம் அல்ல என்னவளே…”
_தொடரும்_
(அடுத்த பதிவு பைனலில் சந்திப்போம்…நன்றி.)