உள்ளத்தின் காதல் நீங்காதடி -பைனல்
உள்ளத்தின் காதல் நீங்காதடி -பைனல்
காதல்-பைனல்
ஊடல் இல்லா காதல் உப்பில்லா பண்டம் போல், ஊடல் அழகானது, இல்லற வாழ்விற்க்கு ஸ்வாரஸ்யம் தரக்கூடியது, காதலை பல மடங்காகுவது.
காதல்-பைனல்
அவனது வார்த்தைகளை அவளை உயிருடன் வதைக்க பொறுத்துக்கொண்டாள். இதில் இவள் மீது தவறு உள்ளது, ஆனால் அதற்கு காரணமும் இருந்தது அதை கூற அவள் எவ்வளவோ முயற்சித்தும் பயன் என்னவோ பூஜ்யம்த்தான்.
அவளை அறையில் விட்டவன், ஒன்றும் கூறாது வெளியில் செல்லவே. ‘வந்துருவான்’ என்று ஒருவித தைரியத்தில் இருந்தவளுக்கு நேரம் ஆக ஆக பயம் பிடித்துக்கொண்டது.
மணி ஆறை தொட அவளது கண்கள் கலங்கிட துவங்கியது.
ஒரு மனம் அவளுக்கு ஆருதல் உரைக்க, இன்னொன்றோ சில கோர தாண்டவத்தை கண்முன் நிறுத்த பயந்து போனவளாய் அவனது அழைப்பேசிக்கு அழைத்தாள்.
அது அணைத்துவைக்கப்பட்டிருக்க கண்மணியின் நீர்துளிகள் அருவியாய் சீறி பாய சிறிது நேரம் உலகம் மறந்தவளாக அமர்ந்திருந்தவள். அவனை தேடிச்செல்ல நினைத்தாள்.
கண்களை நன்றாக துடைத்தவள், ‘உதய் உன்னை கண்டுப்பிடிக்க முடியாட்டி என்ன நீ உயிரோடவே பாக்கமாட்டே’ அவளது மனது சூளுரைத்தது.
குளிரும் அதன் கோரதாண்டவத்தை துவங்கியிருந்ததாள். ஸ்வெட்டரை அணிந்துக்கொண்டவளாக கதவை நோக்கி முன்னேர, அது திறந்தது.
ஒரு வினாடி உயிரை கையில் தேக்கிவைத்து அவள் பார்க்க. அவளது நாயகனோ எந்த வித அரவமும் இல்லாமல் உள்நுழைந்துக்கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் அவனிடம் விரைந்தவள் “உதய்” என்ற கோவலுடன் அவனை அணைக்க துடிக்க அதை கைநீட்டி தடுத்தவனோ.
“பக்கத்துல வராத” என்று அவளை உஷ்ணபார்வையுடன் எச்சரித்தான்.
அதில் வெகுண்டவள் அவனை முறைத்து மறுநிமிடமே இறுக அணைத்திருந்தாள்.அவனது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அதை மறைத்தவனாக.
அவளை தன்னிடமிருந்து விலக்கநினைக்க, அவளோ மேலும் மேலும் அவனுள் புதைய. ‘இது சரியல்ல’ மூளை எச்சரிக்கை விடுக்க.
“நீ கொடுத்த வாக்கை மறந்துட்டியா” அவன் அவளுக்கு நியாபகப்படுத்த.
“எந்த வாக்கு” அவள் அவனை அணைத்தப்படியே கூற.
‘அடிப்பாவி’ மனதில் சபாஷ் போட்டவன் “அதை நீங்கத்தானே சொல்லணும்?” அவன் அவளை மடக்க.
“நான் யாருக்கும் எந்த வாக்கும் கொடுக்கலை” அவள் அவன் மார்போடு ஒன்ற.
“பார்ரா, கொஞ்ச நேரத்துல மண்டைல அடிப்பட்டு எல்லாத்தையும் மறந்துட்டியா?” அவன் அவளை சீண்ட.
“ம்ப்ச், அதைபத்தி பேசாதீங்க, நா செம்ம கடுப்பாகிடுவேன்”
“அடிங்க…”அவளை வலுகட்டாயமாக பிரித்தவன். “என்ன நினைச்சுட்டு இருக்க நீ”
“ஏன் உங்களைத்தான்” அவள் அழுத்திக்கூற.
“ஒன்னும் தேவையில்லை, வேலையை பாத்திட்டு போடி” அவன் முறுக்கிக்கொள்ள.
“அப்டிலாம் போக முடியாது, நீ என் சொத்து”
“அதுலாம் உனக்கு இப்பத்தான் நியாபகம் வருதோ…?” அவன் வார்த்தையில் குத்தல்.
மீராவிற்கு கோபம் வந்தது அவ்வளவுத்தான் புயல் மையக்கொள்ள துவங்கியது.
“டேய்” அவள் அதிரடியாய் துவங்க. உதய் ஸ்தம்பித்தான் ஆனால் ஒரு நிமிடமே, அதை உடனே மறைத்தவன் .
“தப்பு பண்ணீட்டு என்னடி என்னையே திட்டுற”அவன் அவளை மிரட்ட.
“தோடா… என்ன தப்பு பண்ணினதை பாத்த, மண்டையை உடைச்சிடுவேன், செத்த நேரம் உன் திருவாயை மூடிகிட்டு இரு நான் சொல்லி முடிக்கிறவரை வாயை திறந்த…” அவள் இடுப்பில் கை ஊன்றி மிரட்ட.
“என்னடி பண்ணுவ?” அவனும் சரிக்கு சரியாய்.
அவனை முறைத்தவள் மேல தொடர்ந்தாள்.
“அதுங்க என்னை பார்த்துட்டு போனதும், ரொம்ப குழப்பமா இருந்துச்சு கொஞ்ச நாள் மூளையே வேலை செய்யலை. அதுக்கு அப்றம் தான் மூளை வேலை செஞ்சது, என் மேல உங்களுக்கு உண்மையான காதல் இருக்கு அது உங்க கண்ணுல நல்லாவே தெரியும். அப்படியிருக்க எங்க தப்பு நடந்துச்சுனு எனக்கு புரியவே இல்ல, அப்றம் நம்ம கல்யாணத்துக்கு முதல் நாள் உங்க பிரண்ட் சதீஷை பாத்தேன்” அவள் நிறுத்த.
அவன் அவளை மேலே சொல் என்பதாய் செய்கை செய்ய, அவளே தொடர்ந்தாள். “அவரு எல்லாம் சொன்னாரு, அப்போவே முடிவு பண்ணிட்டேன், அவுங்களை சும்மா விடக்கூடாதுன்னு” அவளை இடைமறித்தவன்.
“அப்போ, உனக்கு என் மேல சந்தேகம் இல்லன்னு சொல்றியா, அப்றம் “
அவன் கேட்க வருவது புரிய அவனை தடுத்தவள் “நிச்சயமா இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன் அவங்க எனட்ட நேசிப்போம் வந்தது, உங்க பழைய வாழ்க்கை பத்தி எனக்கு தெரியாததும் அதுக்கு ஒரு காரணம், சதீஸ் அண்ணா எனக்கு முழுசா தெரியாது மா ஆனா அதுல அவன் மேல எந்த தப்பும் இல்லம்மா அதுக்கு நான் கியாரண்டி ன்னு சொல்லவும், அவர் உங்க மேல வச்சிருந்த நட்பும் எனக்கு புரிஞ்சுது, உங்க காதலை மட்டும் நான் முழுசா நம்ம ஆரம்பிச்சுட்டேன், வேற என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன்.
ஆனாலும் உண்மையை தெரிஞ்சுக்கணுமே, அவங்க ரெண்டு பேரையும் சும்மா விடவே கூடாதுன்னு நினைச்சேன், நம்ம கல்யாணத்துல அவங்களை நான் பாத்தேன் எனக்கு பயங்கர யோசனை இதை எப்படி சரிசெய்ய, இவங்களை ஏதாவது பண்ணணும்னு ஒரே யோசனை அதுனால தான் அன்னைக்கு நான் ஒரு மாதிரி இருந்தேன்”அவள் முடிக்க
அவளை நேராய் பார்த்தவன் “சரி, இதை ஏன் நீ எனட்ட சொல்லலை”
“சொன்னா, நான் உங்களை சந்தேகப்படுறதா ஆகிடாதா? எனக்குத்தான் உங்கமேல சந்தேகமே இல்லையே அப்றம் ஏன் கேக்கணும்? அதோட சுபா விஷயத்தை நீங்க சொல்லணும்னு நினைச்சிருந்தா எப்பவோ சொல்லியிருப்பீங்க , அதை நீங்க நினைக்க கூட ஆசைபடலைன்னு எனக்கு புரிஞ்சது,அதைக்கேட்டு உங்கள் கஷ்டப்படுத்த நான் நினைக்கலை, நினைக்கவும் மாட்டேன்”
அவளது அன்பில் அவனது காதல் மனது நெகிழ்ந்தது உண்மை ” அப்றம் எதுக்கு இந்த விலகல்?” அவன் கேட்க நினைத்த கேள்வி கேட்டுவிட்டார்.
“அதுக்கு மூனு வேற முக்கியமான காரணம் இருக்கு,” அவள் தயங்க.
அவளை முறைத்தவன் “சொல்லு இப்போ” என்றான்.
“முதலாவது நாற்பது நாளைக்கு நான் விரதம்”அவள் முடிக்க.
“எதேய், நீ எதுக்குடி விரதம் இருந்த?”அவன் கடுப்புடன் கேட்க.
“உங்களுக்கு எனக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்தா இருக்குறதா வேண்டிக்கிட்டேன்”அவள் தயங்க.
“இதுலாம் ஒரு ரீசனா? எந்த காலத்துல இருக்க நீ, உன்ன மாடர்ன் பொண்ணுன்னு நினைச்சேன்” அவன் கோபமாய் துவங்க.
“இது தெரிஞ்சா திட்டுவீங்கன்னுத்தான் நானும் சொல்லலை”
அவன் அவளை தாருமாறாய் முறைக்க “அடுத்து” என்றான் அதீத கடுப்பில்.
“உன்னை பத்தின் எல்லா விஷயமும் எனக்கு தெரியலை, சதீஸ் ண்ணா சொன்னது அவன் மேல எந்த தப்பும் இல்லம்மா, தப்புதான் அந்த பொண்ணு மேலத்தான் அவன் ரொம்ப நல்லவன் மா, அப்படினு ண்ணா சொன்னதுமே, எனக்கிருந்த கொஞ்ச தயக்கமும் சரியாபோச்சு, ஆனாலும் அவங்களுக்கு நான் ப்ரூஃப் பண்ண நினைச்சேன் எங்க காதல் உடல் தேவைக்கானது மட்டுமில்லன்னு, அவங்க திரும்ப வரும்போது இது தான் காதல்ன்னு சொல்லணும்னு நினைச்சேன்”. அவள் காத்திருக்க.
“இதுலாம் முட்டாள்தனமா உனக்கு தெரியவே இல்லையா?, நம்ம காதலை எதுக்கு நாம் கண்டவங்ககிட்ட நிரூபிங்கணும்? அவசியம் என்ன?அவன் வினா எழுப்ப
“அவங்தளுக்கு காதல்னாவே என்னன்னு தெரியலைங்க, அதுவும் நான் உங்களோடு சேர்ந்தா உங்களுக்கு என் மேல் காதல் வந்துரும்னு சொன்னதை கேட்டதும், இதுங்களுக்கு காதலுக்கு அர்த்தமே தெரிலன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு, அதான்…”
“அவங்கள திருத்தறது தான் உன் வேலையா?” அவன் முறைக்க.
“அதில்லை, தெரிஞ்சோ தெரியாமலோ சுபியோட வாழ்க்கை இப்படியிருக்கு, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னா அவ காதலை பற்றி முழுமையாக தெரிஞ்சுகணேம்ல, ஏமாத்தி காதலை பெறமுடியாதுனும் அவளுக்கு புரியனும்ல” அவள் உண்மையான அக்கறையில் கூற
“அப்போ அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையட்டும் அதை வரை தள்ளியிருக்கலாம்னு நினைச்சிட்ட அதானே உண்மை”
“ம்…”அவள் ஒப்புக்கொண்டாள்.
சிறிது நேர அமைதிக்கு பின் “யாரையும் வயிரு எரிய வச்சு நம்ம சேரணும்னு நான் நினைக்கலை, ஏற்கனவே உங்கள ஒருதடவை பிரிஞ்சதே என் வாழ்வு முழுமைக்கு போதும், என் அத்தை எதாவது பண்ணுவாங்களோன்னு பயம், சுபிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமஞ்சுட்டா அவங்களும் சும்மா இருப்பாங்களே”
“சோ…மொத்தத்துல எல்லாரோட நலனையும் யோசிச்சு என்ன மட்டும் விட்டுக்கொடுத்துட்ட” அவன் உண்மையாய் வருந்த.
“இல்லங்க,சத்தியமா இல்ல இது எல்லாதுக்குமான வேர் நீங்கதான், உங்க கூட நூறு வருஷம் வாழணும், எந்த இடையூரும் இல்லாம, யாரும் உங்கள் என்கிட்ட இருந்து பறிச்சிட கூடாது அதுக்குத்தான் இத்தனையும்” அவள் கண்ணீருடன் கூற.
அந்த கண்ணீர் அவனையும் சிறிது நேரம் நினைக்க மௌனமே அங்கே ஆட்சி செய்தது.
நிலைமையை இயல்பாக்க நினைத்தவன் “இன்னொன்னு என்ன?” என பேச்சை துவக்கி வைத்தார்.
“அது வந்து” அவள் ரொம்ப தயங்க.
“இதுக்கு மேல பெருசா எதாவது வச்சிருக்கியா? எனக்கு தெம்பில்லைடி தயவுசெஞ்சு சொல்லு” அவன் உந்த
அவன் அவளையே பாக்க “எனக்கு அதுலாம் பயமா இருந்துச்சு” அவள் முடிக்க.
“ஏதுவாய்” சிறிது நேரம் யோசித்தேன்,சிரிக்க துவங்கினான்.
“பாத்தியா பாத்தியா அதான் நான் சொல்லலை” அவள் அழுவதைப்போல் சொல்ல.
அதற்கும் சிரித்தவன் ” மக்கு மக்கு “என்று அவள் தலையிலே குட்டினான்.
“ஸ்…” அவள் தலையை தேய்த்துக்கொண்டாள். ஒரு அறைமணி நேரம் விதவிதமாய் சிரித்தவன்.
“நீ பயப்படுற அளவு எதை பாத்த?” அவன் குறும்பாய் ஆரம்பிக்க.
வெட்கம் அவளை பிடிங்கியது முகம் செவ்வானமாய் சிவக்க தலை குனிந்தவளின் அழகில் சொக்கி விழநினைத்தான் அவளின் ஆசை நாயகன், இருந்தும் அவளை வம்பளக்க நினைத்தவன்.
“அப்போ விவகாரமா ஏதோ பாத்திருக்க” அவன் விடுவதாய் இல்லை.
மேலும் முகத்தை புதைத்துக்கொண்டவளின் தாடையை பற்றி மேலே தூக்கியவன். அவளது கண்களை காண துடிக்க அவள் நிமிர்ந்தால் அல்லவா?
“ஜிலேபி…” உலகின் ஓட்டுமொத்த காதலையும் இன்று ஒருநாள் வாடகைக்கு எடுத்திருப்பானோ.
அவள் அவன் விழி நோக்க “சொல்லு” அவன் உந்த.
“என்னோட பிரண்ட்ஸ்” அவள் தயங்கி நிறுத்த.
“முழுசா நினைஞ்சதுக்கு அப்றம் முக்காடு எதுக்கு?”
“அவங்க ஏதேதோ சொன்னாங்க” அவள் முடிக்க.
“என்ன சொன்னாங்க” அவன் அவளை மேலும் சிவக்க வைக்க. உலகின் மொத்த சிவப்பையும் இவள் இன்று ஒரு நாள் வாடகைக்கு எடுத்திருப்பாள் போல்.
“அது…பெயின்”
அவன் மறுபடியும் சிரிக்க நறுக்கென்று அவனை கிள்ளியவள் “என்ன கெக்க பெக்கே, அப்போ வலிக்காதா?”அவள் வினா எழுப்ப.
“யாருக்கு தெரியும் வேணுனா வா ட்ரை பண்ணிப்பாப்போம்”
“ச்சீய்… நான்லாம் வரமாட்டேன்”அவள் சினுங்க.
“அதுகாக வேற பொண்டாட்டியா நான் கல்யாணம் பண்ண முடியும்?” அவன் அவளை சீண்ட.
“கொன்னுடுவேன் உன்ன…” அவள் உடனே மிரட்ட.
“பின்ன என்னடி, நீயும் வரமாட்ற, நான் என்னத்தான் பண்ணுவேன், நான் பாவம் இல்லையா?”அவன் அப்பாவியாய் கேட்க.
“இல்ல எனக்கு பயமா இருக்கு” அவள் அழுவது போல் கூற. அவளை நெருங்கி அமர்ந்தவன்.
“உனக்கு என்னடி அப்படி ஒரு அவசரம், நான்லாம் எதுக்கு இருக்கேன், ஒன்னொன்னா நான் சொல்லிக்கொடுத்திருப்பேன்ல, அதை விட்டுட்டு கதை கேட்டுட்டு பயந்துட்டு இருக்கா” அவன் போலியாய் வருத்தப்பட.
அவள் ரோஷம் வந்தவளாக ” ஹா, இதுலாம் தெரிஞ்சுக்கனும்னு அத்தை கூட சொன்னாங்க” அவள் அழுதுவிடுபவள் போல் கூற. அல்ல வளை அணைத்துக்கொண்டார் அவன்.
அவளது திருமணத்திற்கு முன் நாள் இரவில் அவள் தூரத்து உறவு அத்தை ஒருவர் நிறைய அறிவுரைகளை வழங்கிச்சென்றிருந்தார் அதன் தாக்கமே இது. அதில் நிறைய இவளுக்கு புரியாததே இருந்தது. அதற்கு முன் தோழிகளுடன் இதை பற்றி நிறைய விவாதம் ஏற்ப்பட்டிருந்தது அதில் பாதி இவளுக்கு புரியாததே .
மொத்ததில் எல்லாவற்றையும் குழப்பிக்கோண்டவள் பயந்துபோனாள்.சில கேள்விகளின் பதிலும், அவளது கற்பனையும் அவளை படுங்க செய்தது. அதீத பயத்தின் காரணமும் அவள் அவனை நெறுங்கவிடாததின் ஒரு காரணம்.
அவளின் முதுகை அவன் வருட, அந்த ஏகாந்தத்தில் அமைதியாய் கண்மூடினாள் மீரா.
சிறிது நேரத்தில் அவளை அணைத்தபடியே கட்டிலிற்கு அழைத்துச்சென்றவன் அதில் அவளை படுக்க வைத்து அழகாய் தலை கோதினான்.
அது தந்த சுகத்தில் அவள் உறங்கியும் போனாள். அவள் உறங்கியது தெரிந்ததும் அவனது அழைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.
அதிகாலை குளிரில் உடல் லேசாய் நடுங்க, போர்வையை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டவள். அந்த மெத்தை அவளை தன்னுள் மூழ்கடிக்க சுகமாய் சற்று நேரம் கண்ணயர்ந்தாள்.
பறவைகளின் கீச் கீச் ஒலி அவளது செவிகளை அழகாய் உரசிச் செல்ல, எங்கிருந்தோ வந்த அந்த வருந்த காப்பியில் நறுமணமும் அவளை கனவுலகத்திற்கு இழுத்துச் செல்ல, அவசரமாய் கண்விழித்து வெளியில் பார்த்தவளுக்கு, விடிந்து சில மணி நேரங்கள் இருக்கலாம் என்று யூகிக்கமுடிந்தது.
அது மலைப்பகுதி ஆதலால் வெயிலின் தாக்கம் சுத்தமாய் இல்லாததால் துள்ளியமாக மணி கணக்கிடுதல் நடக்காத காரியமாயிற்றே.
எழுந்து சோம்பல் முறித்தவள்,டீ பாயின் மேலிருந்த அவளது செல்போனை எடுத்து நேரம் பார்த்தாள் அது காலை பத்து என்பதாய் காட்ட.தன்னையே நொந்துக்கொண்டவள்.
உதய்யை தேட அவன் அங்கில்லை, ‘எங்கே போனான்?’ அவளது மனது வினா எழுப்ப அவசரமாய் கிளம்பியவள் ப்ளாக் ஜீன்ஸ்,ரெட் ஸ்லீவ்லெஸ் வெல்வெட் டாப்ஸை அணிந்து வெளியே சென்றாள்.
அன்று பூத்த புதுமலராய் அவளுக்கு இணையான அழகோடு தோட்டத்தில் பூத்திருந்த Ixora, dendrobium, rueilla, catharanthes மற்றும் ஆர்க்கிட் தாவரங்கள் மின் பல வண்ண மலர்களின் அணிவகுப்புகள் , அவள் அதை ரசித்து பார்க்க, அந்த மலரோ தலை சாய்த்து இவளது அழகை ரசிப்பதாய்.
உதய்யை தேடி வந்தவள் பூக்களின் எளிமையான, இயற்கை அழகில் மயங்கி அங்கேயே தேங்கிவிட்டாள்.
அத்தனை பூக்களையும் பார்வையிட்டவள், சற்று தள்ளி சென்று பார்க்க அங்கே இரு பக்கமும் Durantum வளர்க்கப்பட்டு பனி போர்த்தியே புல்வெளிகள் காணப்பட்டது. அங்கு ஒரு செல்ஃபியாவது எடுப்போம் என்று மனது உரைத்ததில் போனை ரூமில் விட்டது ஞாபகம் வரவே, அதை எடுத்துவர விரைந்தாள்.
அப்பொழுதுதான் கவனித்தாள் அவளுக்கு குறுஞ்செய்தி வந்திருப்பதை. “அதில் நான் வர லேட் ஆகும் பார்த்து இரு, நேரத்திற்கு சாப்பிடு” என்று.
“எல்லாம் எங்களுக்கு தெரியும்” அவள் முறுக்கிக்கொண்டவளாக அமைதியாய் தோட்டத்தை வலம் வந்தாள்.
அவளின் மனதின் அவன் மீது அத்தனை கோபத்தில் இருந்த போதிலும் இந்த இயற்க்கை அழகு அதை தற்சமயம் மறக்கவைத்திருந்தது.உணவு உண்ணவும் பிடிக்கவில்லை ஆதலால் அமைதியாய் புல்வெளியில் அமர்ந்துவிட்டாள்.
ஒரு மணி நேரத்திற்கு பின் இன்னொரு மெசேஜ் அவனிடமிருந்து ‘சாப்டியா?’
அதை படித்தவளுக்கு கோபம் தன் அளவை கடக்க “அதை பத்தி உனக்கென்ன அக்கறை, அவளது பதில் காட்டமாய் போனது.
அதை பார்த்தவன் ‘ஓகே பாய்’ என்று ஆப்லைன் சென்றுவிட.
‘மகனே செத்தடா’ அவள் சூளுரைத்தாள்.
சூரியன் மறைந்து நிலவு தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கிய நேரம் குளிரும் தன் ஆதிக்கத்தை அதிகமாய் துவங்கியது.அவனின் உச்சகட்ட கோபத்தில் இருந்தவளுக்கு அதன்பின் எந்த உணர்வும் இல்லாமல் போனது.
சரியாக பதினொரு மணிக்கு உள்நுழைந்தான் உதய். அவள் தன் மேல் கோபமாய் உள்ளாள் என்பது புரிந்தும் அவளிடம் வம்பளக்க நினைத்தவன்.
“நீ இன்னும் தூங்கலையா?”
“…”
“என்ன, நான் சாப்டேன் வா தூங்கலாம்”
“என்ன பார்த்த எப்படி தெரியுது உங்களுக்கு”
“இன்னும் கொஞ்சம் சதை போட்டா இன்னும் கொஞ்சம் நல்ல்ல்ல்லா இருக்கும்”
வந்த கோபத்தில் அங்கிருந்த தலையணையை எடுத்து அவள் வீச “இதென்னடா, கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதுக்கா அடிக்கிற”
“உன்னை…” அவன் தலைமுடியை கொத்தாக பற்றியும் “என்னடா நினைச்சுட்டு இருக்க, சொல்லாம கொல்லாம போனதும் இல்லாம, நக்கல் பண்றியா? என்ன எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்து, இதுக்கு நான் வீட்டையே இருந்திருப்பேன்ல, இந்த இலட்சணத்துல இது ஹனிமூன் எல்லாம் தலை எழுத்து” அவள் தலையிலே அடித்துக்கொள்ள.
“அடிங்க…கொய்யால நேத்து நைட் பக்கம் பக்கமா வசனம் பேசினது நீ, என்னமோ நான் கோப்ரேட் பண்ணாத மாதிரி பேசுற?”
“அடிங்க அந்த நினைப்பு வேறயா? நீ இன்னைக்கு பண்ணினதுக்கு பக்கத்துல வா ஒரு உதைத்தான்”
“அடியேய்…இப்ப என்னதான் டி பண்ணணும்ங்கிற”
“ஒன்னும் பண்ண வேணாம் எனக்கு நீயே வேணாம் போ”
“நெசமாத்தான் சொல்றியா?”
“நெசம்த்தான்”
“அப்ப அதை எழுதிக்கொண்டு, சுபா வெளில வெய்ட்டிங் நான் போறேன்”
“என்னாது” அவள் ஷாக் அடித்தாற்போல் அதிர்ந்து நின்றாள்.
_எப்பிலாக் தொடரும்_