என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
ஜகதீஸ்ஸூம் ரகுவும் வீட்டிற்குள் நுழைய, வீடே நிசப்தமாக இருந்தது. சித்துவை படுக்க வைத்துவிட்டு அறையிலிருந்து வந்தாள் ஜானு.
“வா ஜகா… என்ன அப்பா அண்ணன் வீட்டுக்கா போனீங்க…? ”
“ஆமாமா… அப்படியே காலாரா நடந்து போயிட்டு வந்தேன். சித் அதுக்குள்ளவா தூங்கிட்டான்?”
அவள் முகமாற,” என்ன ஜானும நீயும் சித்தை திட்டுனீயா? ”
” இல்ல ஜகா… சிவாளி வந்து அழுதாள். நாங்க ரெண்டு பேரும் சக்தி வீட்டுக்கு பேசுனோம் அப்ப… ” சித்துவின் ஏக்கத்தை கூற, வந்தவர்களும் கவலை கொண்டனர்.
“அப்சட் ஆயிட்டான் ஜகா, கொஞ்சம் நேரம் என் மடியிலே உட்காருந்து இருந்தான். எதாவது கேட்பான் நினைச்சேன் இல்ல எதுவுமே பேசலை. நான் அவ மைண்ட்டை மாத்த நிறைய சொன்னேன். திரும்ப ஒரு கேள்விகூட கேட்கல. அப்புறம் நான் தான் சாப்பாடு ஊட்டிவிட்டு தூங்க வச்சேன்…”
“குழந்தைடா அவன், தகப்பனில்லாத ஏக்கம் இருக்கும் தானே? சொல்லி அவனுக்குப் புரிய வைத்தாலும் ஏத்துக்கிற மனநிலை அவனுக்கு இல்ல ஜானு… ”
” தெரியும்பா, ஆனால் என்ன பண்றது அப்பான்னு ஒருத்தர் இல்லைன்னு ஏத்துக்கத்தானே வேணும்”
” ஏன் ஜானு ஏத்துக்கணும்…? நம்ம அம்மா இறந்த போது, அவங்க இல்லைன்னு ஏத்துக்க நாம எவ்வளவு கஷ்டபட்டோம். ஆனாலும் அப்ப நாம மெச்சூர்ட் தான். ஆனால் சித் குட்டி தெளிவா பேசினாலும் ஏத்துக்க மெச்சூர்ட்டி அவனுக்கு தேவை படுது. உனக்கு இன்னும் ஏஜ் ஆகல ஜானு, இன்னொரு முறை கன்சிடர் பண்ணு நாம சித்துக்கு ஒரு நல்ல அப்பா தேர்ந்தெடுக்கலாம்”
” என் சித்துக்கு என்னால புரியவைக்க முடியும் ஜகா. இன்னொரு மேரேஜ் லைஃப் இனியும் என்னால ஏத்துக்க முடியாது… என் மனசுலையும் தெம்புமில்லை, இனிய நல்ல லைஃப் அமையும் எனக்கு தோணலை ஐகா… ”
” ஒரு வாட்டி தப்பு நடந்தால், எப்பையும் அப்படியே வா நடக்கும் ஜானு? கண்டிப்பா இந்த முறை உனக்குன்னு சரியானவனா, சித்துக்கு ஒரு நல்ல தந்தையா தேர்ந்தெடு ஜானு…”
” போதும் ஜகா… ஐ காண்ட், ப்ளீஸ் இத பத்தி பேசாத… “என அமர்ந்து அழுதேவிட்டாள் ஜானு.
ஜகதீஸ் ஏதோ வாய் திறக்க, அவனை அடக்கினார் ரகு… ” சரிப்பா லேட் ஆச்சு நான் கிளம்பிறேன்.,”
” இருந்து சாப்பிட்டு போ ஜகா ” என கண்ணைத் துடைத்துக் கொண்டு கேட்க, ” இல்ல ஜானு, நான் வீட்டுல போய் சாப்பிட்டுகிறேன் டேக் கேர்.. ” என்று வெளியே சென்றுவிட்டான்.
” ஜானு…. போய் முகத்தைக் கழுவிட்டு வாம்மா… சாப்பிடலாம் ” என்று ரகு அழைக்க முகம் அலம்பி வந்தவள் அவரோடு சாப்பிட அமர்ந்தாள்.
தன் மகளை ஆராய்ந்தவாறே சாப்பிட்டார். தன் மகளின் கல்யாண வாழ்க்கை எந்தளவு அவளைப் பாதித்திருகிறது என்பதை அவள் கண்களில் வலியாய் கண்டார்.
இருவரும் உறங்கச்செல்ல, தன்மகனை அணைத்தவளுக்கு உறக்கம் கண்களை வந்தடையவில்லை..
மறந்துவிட்டோம் என்பது மேலான எண்ணம் மட்டுமே மறைத்து வைத்திருக்கோம் என்பதே சரி..
நடந்த நிகழ்வை மறப்பதென்பது இயலாத காரியம், அழ்மனதில் மறைந்திருக்குமே தவிர ஒருபோதும் மறந்திடாது. பாதித்த அந்த நிகழ்வை ஆழ்மனம் துளையிட கண்ணீர மேலே வழிந்தது. தன் மகனின் தலைகோதியவளுக்கு உறக்கம் எப்போது தழுவியது தெரியாது உறங்கிப் போனாள்.
ஆழ்மனதை துளையிட்ட அந்நிகழ்வை, புதைத்துவிட்டு, அதிகாலையில் தன் வேலையைச் செய்ய எழுந்தாள். ரகுவும் எழுந்து தன் வேலையைச் செய்தார். நேற்று இரவில் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்பது போலவே நடந்துகொள்ள, பள்ளிக்கு கிளம்பி வந்த சித்துவிற்கு இன்ப அதிர்ச்சி தான். ஜானு,பேப்பரில் கையெழுத்து போட்டிருந்தாள்.
அதை, தன் பேக்கில் திணித்து, காலை உணவை உண்டு விட்டு தன் அன்னைக்கொரு முத்தம் வழங்கியவன் சந்தோசமாக பள்ளிக்குச் சென்றான்.
ஜெர்ஸிக்கு, ஆர்.ஜேவின் திட்டத்தைக் கண்டு, கொதித்து போனாள். அவளும் எடுத்த இருமுயற்சியிலும் விழாது திமிரிக்கொண்டு நிற்கும் ஆர்.ஜேவை அடைய வேறு வழியை யோசித்தவள், அடுத்த திட்டம் உதிக்க, அதைச் செயல் படுத்தினாள்.
அடுத்து வந்த நாளில், அறைகுறை ஆடை அணியாமல் ஒரு லாங் சுடி ஒன்றை அணிந்து மிதமான ஒப்பனைகளிட்டு தனது துணையாளை அழைத்து கொண்டு ஆர்.ஜேவின் வீட்டிற்குச் சென்றாள்..
அந்த இரண்டு சென்டிமெண்ட் ப்ரெண்ட்ஸ்ஸிடம் தன் நடிப்பை காட்டி, அவர்களை மயக்கித் தன் பக்கம் இழுக வந்தாள்.
அழகாய் ஆடம்பரமின்றி அம்சமாய் கொஞ்சம் வசதிகள் கொண்டு அழகாய் அவனது வீடு இருந்தது. உள்ளே நுழைந்தது அவளது கார்.
அங்கே வழக்கமாய் பேப்பர் கையுமா ராமன் அமர்ந்திருந்தார்.
சீதாவோ, தன் வழக்கமாய் வேலையாளை வேலை ஏவும் வேலையில் இருந்தார் . என்ன தான் வேலையாட்களை திட்டிக் கொண்டே இருந்தாலும் வேலை முடிந்ததும் பாசமாய் விசாரிப்பதும் அவர்கள் ஏதுவும் என்றால் பணம் கொடுத்து உதவும் நல்லெண்ணம் கொண்டவர் சீதா…
” அங்கிள்… அங்கிள்… ”
பேப்பரை பார்த்துகொண்டிருந்த ராமன் . ‘ அங்கிளா ? என் பொண்டாட்டி அப்படி கூப்பிட மாட்டாளே ! யாரா இருக்கும்? ” என வாசலைப் பார்த்தார்.
ஹீரோயின் அல்லவா அழகாய் இருக்க, ” யாரும்மா நீ உனக்கு என்ன வேணும், எதுவும் டோனேசன் கினேசன் வேணுமா…? ” என்றதும்,
‘ வாட்… அப்படியா தெரியிறேன் ‘ என பக்கத்தில் இருந்த துணைக்கு வந்த ஆசிஸ்டென்ட் தன்யாவைப் பார்க்க அவளோ அச்சத்தில் கண்ணை உருட்டினாள்.
” இல்ல எதுவும் சோப்பு ஷாம்பு விக்க வந்தீயா…? ”
” ஓ.. காட்! இந்த மாதிரி கண்டிரிபூருட் கிட்ட தான் என் மார்னிங் விடியணுமா…? என் காரியம் நிறைவேற இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்…’ என அமைதியாக நின்றாள்..
” ஐயோ ! சார்… இது நடிகை ஜெர்ஸி, தெரியலையா உங்களுக்கு?”
” நடிகை ஜெர்ஷியா ! ” ஆ-வென வாயை பிளந்தவர்… ” ஏன்மா வர போதும் மேக்ஆப் போட்டு வர கூடாதா…? நான் ஏதோ பீனாயில், சோப்பு விக்கிறவ ன்னு நினைச்சேன். இருந்தாலும் ஒரு டவுட் இருந்துச்சு என்னடா இதவிக்கிறவ நல்ல ட்ரஸ் பண்ணிட்டு வராளேன்னு. உள்ளவாமா ”
பல்லைக் கடித்துகொண்டு உள்ளே நுழைந்தாள் ஜெர்ஸி.
” சீதா… சீதா. இங்க வந்து பாரு யாரு வந்திருக்கான்னு…” என ஏலமிட்டார்.
“நான் இங்கதானேங்க இருக்கேன்… எதுக்கு இந்தக் கத்துகத்துறீங்க உங்கம்மா மாதிரி எனக்கு காது கேட்காது நினைச்சீங்களா…? நல்லவே கேட்கிது, யாருங்க வந்திருக்கா…? “
” அந்தப்புள்ள ஜெர்ஸி, வந்திருக்குடி ” என்று தலையை தனது சட்டையும் சரிசெய்ய,
” இப்ப நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க? யாரு அந்த ஜெர்ஸி…?” இடையில் கைவைத்து கேட்க,
” நம்ம வீட்டுக்கு அழகான பொண்ணு வந்திருக்கு டீசன்டா இருக்க வேணாம் அதான்…. அப்புறம் அவ முன்னாடி கொஞ்சம் புருசன்னு ரெஸ்பெக்ட் கொடுமா சீதா…” என கெஞ்சியவரை பார்த்தவர்.. ” சரி போய் தொலை… ” என்பதுபோல் ஹாலுக்கு வந்தார் சீதா.
சீதாவைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்… ” ஆன்ட்டி நான் ஜெர்ஷி உங்களையும் அங்கிளை பார்த்துட்டு போலாம் வந்தேன். இந்தாங்க ஆன்ட்டி.. ” என அவர்களுக்காக வாங்கிவந்த பழங்களை கொடுத்தாள்.
” என்னையுமா ? ” ராமன் வாய்விட்டே கேட்க சீதாவை பார்த்து வாயை மூடினார்.
” எதுக்குமா இதெல்லாம்…”என கேட்க. ” இட்ஸ் ஓ.கே இது நம்ம வழக்கம் இல்லையா அதான்” என்றாள்..” ஏன் மா நிற்கிற உட்காரு. ” என்றவர் ” கௌரி ஜூஸ் எடுத்துட்டுவா “என கத்தி விட்டுஅவளை பார்த்து சிரித்தாள்
” ஏன்மா நீ நிசமாலுமே நடிகை தானா ? ” ராமன் கேட்க, உள்ளுக்குள் எழுந்த கடுப்பை சிரிப்பால் மறைத்தாள்… ” ஏன் அங்கிள் அப்படி கேட்கிறீங்க ? ”
” இல்லம்மா, இந்தகாலத்து ஹீரோயினுக்கு எங்கம்மா தமிழ் தெரியிது… இன்டர்வியூ கூட ஆங்கிலத்தில பேசுது அதான் கேட்டேன்…”
” அம்மா அப்பா சென்னை தான் அங்கிள் எனக்கு தமிழ் தெரியும்…”
” என்ன விசயமா வந்திருக்கம்மா… ” என ஆரம்பித்தார் சீதா.
” ஆன்ட்டி… உங்க பிள்ளைக்கு உண்மையாவே கல்யாணம் ஆகி ட்வோர்ஸ் ஆயிருச்சா…” என தன் முதல் சந்தேகத்தை கேட்க,
” ஆமாம்மா, என்ன பண்ண என் பிள்ளைய வேணாம்ன்னு சொல்லிட்டு போயிட்டா மகராசி என் பேரனையும் தூக்கிட்டு போயிட்டாள். வராத கண்ணீரை வம்படியாய் வரவழைத்து முந்தானையில் துடைக்க துணைக்கு எடுத்துகொண்டார்.
‘ ஆத்தி… இவ தானே நடிகை சொன்னாள். இவ ஏன் நடிக்கிறா… ?யம்மாடியோ ! சீதா குள்ளையும் ஓரு மாமியார் கேரடக்டர் இருந்திருக்கு பாரேன்’
” நீங்க பீல் பண்ணாதீங்க ஆன்ட்டி, உங்க பிள்ளைய இன்னொரு மேரேஜ் பண்ணிக்க சொல்லி கன்வீயன்ஸ் பண்ணலையா… ?”
” எங்கம்மா.. முறிச்சுவிட்டு போனவ நினைப்பாவே இருக்கான். பிள்ளை பிள்ளை அதுமேலையே ஆசை வச்சிட்டு சுத்திறான்.. உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கோடா சொன்னால் எங்க கேட்கிறான்… ?உன்ன மாதிரி பார்க்க அழகா இருக்க பொண்ணா கட்டிக்கோடான்னா எங்க கேட்கிறான் “
அவர் அவ்வாறு கூற தன் திட்டம் நிறைவேற போகும் சந்தோஷத்தில் மிதந்தாள். உள்ளாற சில்லென்று பரவ இதையே சாக்கா வைத்தவள், பேச ஆரம்பித்தாள்.
“ஆன்ட்டி, நீங்க பீல் பண்றதை பார்த்தால் கஷ்டமா இருக்கு ஆன்ட்டி ” முகத்தை சோகமாக மாற்றினாள் நடிகை அல்லவா ‘ அடியாத்தி… போட்டி போட்டு நடிக்கிறாளுங்களே எனக்கே சப்பாஷ் ! போட தோணுதே. ராமா வாயைக் கட்டி போட்டிருக்காளே இந்த சீதா’
” என் கஷ்டம் உனக்கு புரியுதுமா, ஆனால், என் புள்ளைக்கு புரியல பாரு… ஒரே புள்ள ஆசை ஆசையா வளர்த்தேன், இப்படி இருக்கவா நான் பார்க்கணும். ” என்று அழுக,
” நீங்க பீல் பண்ணதீங்க. நான் வேணா உங்க பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆன்ட்டி.. நான் ஆர்.ஜேவை காதலிக்கிறேன், அவர்கிட்ட கூட இத பத்தி சொல்லிருக்கேன். ஆனால் அவர் என்னைய ஏத்துக்க மாட்டிகிறார். நீங்க சொன்னீங்கன்னா, நான் உங்க வீட்டுக்கு மருமகளா வருவேன் ஆன்ட்டி. ” என்றாள் வெட்கத்தோடு
” ஐயோ, மகராசி… நிஜமாவ, உன்னை போய் ஏன் என் புள்ளை வேணாம் சொன்னான்…? இப்படி எந்த பொண்ணுமா வந்து கேட்டு நிற்பா, உங்க புள்ளைதான் வேணும்.. என் புள்ளைய தான் கட்டிக்கிறேன் வந்து கேட்கிறீயே மா… ” என நெற்றிமுறித்தார்.
‘ ஆடு தானா வந்து தலைய கொடுக்கிதே… இவளை குருமா வைக்க போறாளோ? ,இல்லை பாயா வைக்க போறாளோ? நமக்கு காலை ஷோ நல்லதான் இருக்கு..”
” ஏங்க இப்படி எந்தப் புள்ளையாவது உங்க பிள்ளைய கட்டிக்கிறேன் வருமாங்க, யாரு பெத்த பிள்ளையோ வந்திருக்கு, என்னங்க பண்ணலாம்… ” என ராமரிடம் கேட்க, ” என்னம்மா சொல்ல அந்த பிள்ளை நேரம் அப்படி.. ” என்றார்..
” என்னங்க, நான் முடிவு பண்ணிட்டேன், இவ தாங்க என்மருமக, நீ தான்மா மருமக…” என்றதும் சிறகின்றி மேலே பறந்தாள், ஜெர்ஷி…”
” ஆனா, எங்க வீட்டுக்கு மருமகளா வரனும்ன்னா சில கன்டிசன்ஸ் இருக்கே… அந்த கன்டிசன்ஸ் உனக்கு ஒ.கேன்னா உங்கம்மா, அப்பா வர சொல்லி பேசிடலாமா… ”
” என்ன கன்டிசன்ஸ் ஆன்ட்டி…?”
‘ இதோ எடுத்துட்டாளா ஆயுதத்தை… சிரிச்சேட்டே கழுத்தறுக்கிறதுல என் பொண்டாட்டிய மிச்சிட முடியுமா யா இவ கதி என்னாகுமோ ‘ என சிரித்துகொண்டார்..
” அது ஒன்னும் பெருசா இல்லைமா.. என் மருமகன்னு எங்க வீட்டுக்கு வந்துட்டா, காலைல வாசல் நீர் தெளிச்சு கோலம் போடுறதில இருந்து, நைட் கிச்சனுக்கு துடைக்கிற வரைக்கும் அவன தான் பார்க்கணும்… இந்த மாதிரி சுடியெல்லாம் போடக் கூடாது நல்ல சேலையா கட்டி தளதளன்னு பூவச்சு மகாலட்சுமியா இருக்கணும்.. அப்புறம் வேலைக்குப் போக கூடாதும்மா… எனக்கு சுத்தம்மா பிடிக்காது. இத்தான் பெரிய போனை கையில வச்சு எந்நேரமும் நோண்டிட்டே இருக்கக் கூடாது.. எனக்கு கால பிடிச்சி விடணும்.. என் பிள்ளைய சந்தோசமா பார்த்துக்கணும் அம்முட்டுதான்மா ” நச்சென்று சொல்லி முடித்தார்.
‘ ஒன்னுமில்லன்னு சொல்லிட்டு இத்தாம் பெரிய லிஸ்ட் போட்டீயே டி பாவம் அந்த பொண்ணு…’ பரிதாபம் பட்டார் ராமன்.
‘ வாட்.. நான் ஒரு எண்ணத்தில் இந்தம்மா புள்ளைய மடக்க கணக்கு போட்டா. இந்தம்மா வேற கணக்குல போடுது. இப்படி கன்டிசன் போட்டா, எவன் தான் உன் புள்ளைக்கூட வாழுவா… ‘ என்றவள் எண்ணிக்கொள்ள,
” இந்த கண்டிசனுக்கெல்லாம் ஒ.கேன்னா பெத்தவங்களை கூட்டிட்டு வா பேசலாம்…”
” இதெல்லாம் ஒரு கண்டிசனா… வீட்டுக்கு மருமகள தேடுறீங்களா, இல்லை வேலைகாரிய தேடுறீங்களா? எல்லாவேலையும் நான் செய்ய என்ன மிஷினா…?”
” ஒரு மருமக எதுக்கு வீட்டுக்கு வரா.. ஏன் நான் கூட மருமகளா வந்து எல்லாத்தையும் செஞ்சேனே.. இதோ இவர பெத்த புண்ணியவதிக்கு மருமகளா இருக்கத்தான் செய்தேன். அதே போல என்மருமக இப்படியெல்லாம் இருக்கணும் நான் எண்ண கூடாதா…?”
” என்னால என் வேலை விட முடியாது.. இந்த வீட்டுக்கு என்னால வேலைக்காரியாக ஆக முடியாது… ” எனக் கத்திவிட்டாள்.
” அட என்னம்மா. நாங்க ஏதோ உன்னை வற்புறுத்தினதுமாதிரி கத்துறா, நீயா வந்து என்புள்ளைய கட்டிகிறேன் சொன்ன… சரி பொண்ணு ஆசைபடுதேன்னு என்னுடைய சில கண்டிசன் சொன்னேன்.. உனக்கு பிடிக்கலைன்னு போயிட்டே இரும்மா யாருவேணா சொன்னது…”
” நீங்க என்ன ஏமாத்தீடீங்க… நல்ல சிரிச்சு பேசி கழுத்தறுத்துடீங்க… ”
‘ ஐயோ இப்பதான் உனக்கே தெரியுதா ? பாவம் அப்பாவி புள்ளையா இருக்கே…’
” என்னமா நீ.. நானா உன்னையா எப்போமா,..? அதான் என் கன்டிசன்ஸ் உனக்கு ஓ.கேன்னா கல்யாணம் பண்ணிவைக்கிறேன் சொல்லிட்டேன். இதுல நான் எங்க உன்னை ஏமாத்தினேன்… ? என் கன்டிசனுக்கு யாரு ஒத்திகிறாங்களோ அவங்க என் பையனுக்கு பொண்டாட்டி இந்த வீட்டு மருமக… ”
“அப்ப இந்த ஜென்மத்தில உங்க பிள்ளைக்கு கல்யாணமே நடக்காது… “
” என்னடிமா சாபமா.. ஐயோ வேணாடிமா. அப்புறம் நானும் எதாவது சொல்லிடபோறேன் பொம்பல பிள்ளை வேற. இங்க பாருடி, இனி என் புள்ளையையும் உன்னை சேர்த்துவச்சு நீ பேசிறத பார்த்தேன், உன்னைய உண்மையாவே என் மருமகளாக்கி கொடுமை பண்ணிடுவேன்,” அவளை மிரட்ட, அவள் கோபத்தில் விறுவிறுவென சென்றுவிட்டாள்.
” அப்பபபப… புயல் அடிச்சு ஓஞ்சது மாதிரி இருக்கு… ஏன் சீதா இப்படியுமா மிரட்டி ஓட வைப்ப?வந்தவதான் பெரிய நடிக்கைன்னா இது அதுக்குமேல நடிக்கிற சீதா… நானே நம்பிடேனா பார்த்துக்கோயேன்…”
” பின்ன, இந்த மாதிரி ஆளுங்க கிட்ட இப்படி தாங்க பேசணும்… என் புள்ளையவே என்னா படுத்து படுத்துறா சும்மா விடுவேனா”
” என் தெய்வமே ! ” என அவரை அணைத்துகொண்டான் ஆர்.ஜே..
” இவ்வளவு நேரம் எங்கடா இருந்த? எப்படா வந்த…?”
” நைனா, அம்மா முந்தானையைத் தூக்கும் போதே வந்துடேன். என்ன ஆக்டீங் பின்னிட்ட சீதா…? ”
” என் புள்ளைய கலங்க வைச்சவளை சும்மா விட்டுவேனா? இனி அவள் உன் வழிக்கு வரவேமாட்டா டா, நீ சந்தோசமா இரு… ” எனக் கொஞ்சினார்.
” தாங்க்ஸ் மா… ” என கட்டி முத்தமிட்டான்.
” ஏன் சீதா… உண்மையாவே வரப் போற மருமகளுக்கும் இந்தக் கன்டிசன்ஸ் தானா? ”
” பின்ன உங்கம்மாகிட்ட பட்ட பாட்டை நான் படுத்த வேணா… ” என சொல்லிவிட்டுச் சென்றவரை ஒரு சீரியல் மாமியாராகவே பார்த்தார்.
” இப்படி கன்டிசன்ஸ் போட்டாள், நீ
பிரம்மசாரி தான்டா. ஆமா அந்த ஜெர்ஸி பொண்ணுக்கு என்னடா நல்லதானே இருக்காள்…?”
” நல்லாருக்காளா…? ” அவரை ஒருமாதிரி பார்த்தவர்.. ” நல்லாருந்தா கட்டிக்கிறீங்களா ? ”
” ம்ம்… வாய்ப்பு கிடைச்சா நல்லாதான் இருக்கும்.. உங்கம்மா, அவளை என்ன பண்ண? இந்த மாதிரி பொண்ணுகிடக்கலைன்னு அவனவன் அழுத்துகிறான். நீயும் தான் இருக்கீயே என் புள்ளைன்னு. கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை” அழுத்துக் கொள்ள,
” யம்மா… நைனா, எனக்கு சித்தி கொண்டு வர அடிய போட்டுறாரு. நீ வேணா இரண்டு அடிய போடும்மா… ” என அங்கிருந்து ஜகவாகினான்.
அங்கிருந்து பாத்திரங்கள் விழுக, ‘ உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே ஆகாதுடா நல்லாருப்பானா…’ தன் மனைவியைத் தேடிச் சென்றார்.
குறும்பு தொடரும்….ஜகதீஸ்ஸூம் ரகுவும் வீட்டிற்குள் நுழைய, வீடே நிசப்தமாக இருந்தது. சித்துவை படுக்க வைத்துவிட்டு அறையிலிருந்து வந்தாள் ஜானு.

குறும்பு தொடரும்….