என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
சித்துவின் பெயரை அழைக்க, மேடையில் வந்து நின்றான்” ஸ்டாட் பண்ணுப்பா… ” ஜட்ஜாக வந்த மூவருள் ஒருவர் கூற. அவனுக்கு வியர்த்து கொட்ட, முழித்துக்கொண்டே இருந்தான்.தன் அன்னைக்கு கொடுத்த வாக்கு நினைக்கவே,
அவனால் ஆட முடியவில்லை.
” சித்தார்த்… ஆடுப்பா.. இப்படி நின்னா என்ன அர்த்தம்…? எங்களுக்கு டைம் ஆகுதுப்பா” என்றார்.
அவனுக்கு கண்ணீர் தாரைதாரையாக கொட்ட, அவனை அனுப்பி விட்டு அடுத்த ஒருவனை தேர்வு செய்ய வர சொன்னார்கள்.
” கண்ணீரோடு தன் தாத்தாவை கட்டிக்கொண்டான்…”
” சித்… ஏன் ஆடலை நீ? உனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு இது தெரியுமா…? ” என ப்ரின்சிபால் கத்த மேலும் ரகுவை இறுக்கி கட்டிகொண்டு அழுதான்.
” சார் ஒரு டூமினிட்ஸ்….” என்றவர். அவனை தனியாக அழைத்து சென்றார் ” சொல்லு சித் ஏன் ஆடுல நீ…?”
” என்னால முடியல ரகு. ஜானுவ ஏமாத்துறேன்னு தோணுது. எனக்கு டான்ஸ் வேணா ரகு நாம வீட்டுக்கு போலாம்…. ” என அழுக,
” அழாத சித்… சரி போலாம்.ஆனா இவ்வளவு தூரம் வந்து ஆடாம போனா நல்லாருக்குமா… உன்னால முடியும் சித் முயற்சி பண்ணுடா !…”
” இல்ல ரகு ஐ கான்ட்… ஜானுதான் வரா ஆட முடியல ரகு” என்றதும் அவருக்கும் கண்ணீர் வர…. ” சரி போலாம்… ” என்று அங்கே சரியாக க்ரேஸியும் வந்தாள் இவனுக்காக.
” என்னப்பா… ஆடிட்டானா சித்.. ” என்று கேட்டு சித்தை பார்க்க அழுதுகொண்டிருந்தான். ” சித் ஏன் அழுகிற என்னாச்சு ? டான்ஸ் ஆடுலையா ? ” என அமைதியாக தலைகுனிந்து நின்றான்.
அவர் உண்மையை கூற” ஏன்பா, இப்படி பண்ணீங்க ஜானுகிட்ட உண்மை சொல்லியே கூட்டிட்டு வந்திருக்கலாம். இப்ப அவன் தான் கஷ்ட படுறான்..”
” இல்லம்மா… அவ விடமாட்டா, இந்த ப்ர்ன்சியும் பாரு விடுறது மாதிரி தெரியல அதான்… ப்ரின்சி போர்ஸ் பண்ணா கண்டிப்பா சித் ஸ்கூலை மாத்திருவா. அவன் இப்படி மாற காரணமே நீதான்மா.. வேற ஸ்கூல் போனா யாரும் இவன புருஞ்சுக்க மாட்டாங்க இவனுக்கு ஏதாவது சொல்லுமா…”
சித்துவின் உயரத்திற்கு, அமர்ந்தவள்.
“சித் குட்டி, உன் மனசு எனக்கு புரியுது.. அம்மாக்கு நாம துரோகம் பண்றோம் நினைச்சு நீ ஆடாம வந்தது எனக்கு சந்தோசமா இருந்தாலும். கவலையா இருக்கு நீ ஆடாம வந்துடீயேன்னு. சித் குட்டி நான் உங்கம்மா கிட்ட பேசுறேன் உன்னை டான்ஸ் காம்பெடிசன்ல சேர்க்க சொல்லி. இப்ப நீ போய் ஆடு, உன் அம்மாகிட்ட சொல்லிக்கலாம் சித்.. உனக்கு ஆசை இருக்குல ஆடனும், ஆடிட்டு வா. கடவுள் உன் கூடவே இருப்பார், பெரியவங்க தப்பு பண்ணா மன்னிக்கிறவர்.. அவருக்கு செல்ல பிள்ளையான குழந்தைகளை மன்னிக்க மாட்டாரா மன்னிப்பார்… நீ போய் தைரியமா ஆடு சித் ” என்றவள் அவன் நெற்றியில் இதழ்பதிக்க,
அவளை கட்டிகொண்டான்… அவனது சீகை வருடியவள்” என்னால எப்படி மிஸ் ஆட முடியும் என்னை தான் அனுப்பிட்டாங்களே…”
” இன்னொரு முறை கேட்டு பார்க்கலாம் சித்… ”
அவனை அழைத்துகொண்டு, ப்ரீன்சியிடம் மன்னிப்பு கோர..
அவரும் அவர் சார்பாக பேசி மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்க மேடையில் வந்து நின்றான்… க்ரேஸி மிஸ்ஸும், ரகுவின் கை தட்டி உற்சாக படுத்தினார்கள்.
‘ இவனெல்லாம் என்ன ஆட போகிறான்.. ‘ என அலட்சியம் செய்தவர்களுக்கு முன் விருந்தாய் நன்கு ஆடி முடிக்க எழுந்து கைத்தட்டினார்கள், ஜட்ஜாக வந்தவர்கள்.
“வாவ் பாய் ! இப்படி ஆடுறவன், ஏன் நின்னீங்க? ” என்றதும் தயங்க. இங்கவா என்று அழைத்து அவனுக்கு ஸ்லெக்ட்டேட் என்று கையில் மாட்டிவிட்டனர்.
வேகமாக ரகுவிடம் ஓடி அடைகலம் கொண்டான் ஏதோ பாரம் இறங்கியது போல் ஆனது.
” இதுக்கா சித்.. இவ்வளவு டென்சன், ரிலாக்ஸ் மை பாய்… ” என மீண்டும் சீகை கலைத்தாள்.
” க்ரேஸிமா, நீ இல்லைன்னா இவ்வளவு தூரம் வந்ததே வீணா போயிருக்கும்… இவன் இப்படி நின்னதும் எனக்கு பக்குன்னு ஆயிருச்சு. அந்த ப்ரீன்சி வேற முகத்தை காட்ட ஆரம்பிச்சுட்டான். எனக்கு என்ன பண்ண ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு மா..”
” அப்பா… எனக்கு சித் டான்ஸ் பார்க்கணும் தான் வந்தேன்… ஆனா சித், அவங்க அம்மா மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு புருஞ்சது.. நான் வேணா ஜானு மேம் கிட்ட பேசவா, என்னால ஆன முயற்சி எடுத்து பார்க்கிறேன்ப்பா… கண்டிப்பா சித் காம்படிசன் ஸ்லெட் ஆவான் எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் பேசட்டுமாப்பா.. “
” நீ இவ்வளவு தூரம் கேட்கிறப்போ வேணான்னு சொல்லுவேணா மா தாராளமா பேசுமா.. அடுத்த வாரம் அவளுக்கு நைட் ட்யூட்டிதான் நீ வர சொன்னேன் சொல்லுறேன் மா.. “
” நன்றிப்பா….”
” நாங்க தான்மா சொல்லணும் அந்த நன்றியா…”
ஜட்ஜ்ஜாக இருந்த ஒருவர் சித்தை பார்த்துவிட்டு அவர்கள் அருகில் வந்தார்.
” இவன் உங்க பையனா மேம்… “
” இல்ல, சார்… என்னோட ஸ்டூடன்ட் சார். நான் இவனோட டீச்சர்…”
” டான்ஸ் டீச்சரா ? “
” இல்ல அவனுடைய க்ளாஸ் டீச்சர்… “
” சித்தோட, ப்ரேண்ட்ஸ் யாரும் வரலையா?”
” நான் சித்தோட தாத்தா தான் சார்.. என்ன சொல்லனுமோ சொல்லுங்க சார்…? “
” அது சித்… நல்லா ஆடுறான், இன்னும் அவனுக்கு சில விசயங்கள் டான்ஸ் கத்துக்க வேண்டியது இருக்கு. அவனுடைய ஆடல்கலையை வடிவமைக்க வேண்டும்… அதுனால நல்ல டான்ஸ் க்ளாஸ் சேர்த்துவிடுங்க, சப்போஷ் இவன் டான்ஸ் ஷோ ஸ்லேட்க்ட் ஆக வாய்ப்பிருக்கு. அந்த க்ளாஸ் மூலமா அவன் டான்ஸ் திறமை மேம்படும், நான் சொல்லறது புரியும் நினைக்கிறேன்.. ஹேய் பாய்.. வீ வில் சீ இன் டான்ஸ் ஷோ.. ” என்று செல்ல,
மூவரும் முழித்தனர். ” இந்த ஒரு நாளைக்கே டான்ஸ் ஆடினதை மறைக்கவே இவனும் நானும் கஷ்டபட்டோம்… இதுல க்ளாஸ் போகணும்ன்னா என்னமா பண்றது ?”
” நான் அதுக்குள்ள, ஜானுகிட்ட பேசுறேன்பா… ” என்றாள்.
” சரிமா நாங்க வரோம்… ” என இருவரும் கிளம்பினர்..
இருவரும் அப்பார்மென்ட் வாயிலில், நுழைய அங்கே சிவாளியும் சக்தியும் இருந்தனர். பெண்களோடு பேசிக்கொண்டு அவளும்… சிவாளி விளையாடிக்கொண்டுமிருந்தாள்.
” ஹேய்… சித், இன்னைக்கு அக்டிவிட்டி க்ளாஸே இல்லை, ஆன்ட்டிகிட்ட பொய் சொல்லிட்டு எங்க போன ? ”
அவள் கேட்க..
” ஓ… காட் சிவாளி நீ எதுவும் சொன்னீயா இன்னைக்கு ஆக்டிவிட்டீஸ் க்ளாஸ் இல்லைன்னு ஜானுகிட்ட… “
“நீ ஏன் போகலைன்னு கேட்டாங்க… பீவர் சொல்லி மழுப்பிட்டேன்.. “
“சொல்லுங்கப்பா ஏன் பொய் சொன்னீங்க…? பொய் சொல்லி போகிற அளவுக்கு என்ன முக்கியமான வேலைப்பா…?”
” இல்ல. சக்திமா.. இன்னைக்கு இவங்க ஸ்கூல் டான்ஸ் ஷோக்கு காம்பெடிசன் நடந்ததுச்சு… ” என அனைத்தையும் கூறினார்.
” ஏன்பா, ஜானுக்கு டான்ஸ்ன்னா பிடிக்கமாட்டிக்கிது.. நான் வேணா வெங்கி கிட்ட சொல்லி அவகிட்ட பேச சொல்லவா… சித் உயிரா நினைக்கிறத ஏன் அவ மறுக்கிறா…?”
பெருமூச்சு விட்டவர்.. ” இவங்க மிஸ் பேசுறேன் சொல்லிருக்காங்க சக்தி.. அவங்க பேசட்டும். அதுக்கு அப்புறம் யோசிப்போம் மா… ஜானுகிட்ட சொல்லாதமா… “
” சிவாளி நீயும்… ப்ளீஸ், க்ரேஸி மிஸ் பேசுறேன் சொல்லிருக்காங்க… அதுவரைக்கும் நீ சொல்லமாட்டேன் ப்ராமிஸ் பண்ணு… ” என கைகளை நீட்ட, ” சித்.. நான் உன் ஃப்ரண்ட் கண்டிப்பா சொல்லமாட்டேன். உன் டான்ஸ் எனக்கு பிடிக்கும், நான் ஆன்ட்டி கிட்ட சொல்ல மாட்டேன் சித்… “என்றவள் ப்ராமஸ் செய்ய, கையில் அவனை ஸ்லேட் பண்ணதுக்கான பேண்ட் இருக்க.. ” இது என்ன சித் ? “
” நான் ஸ்லேக்ட் ஆனதுக்கு… எனக்கு கையில கட்டி விட்டாங்க சிவாளி..” என்றான்.
” வாவ்.. சித் கலக்கிற நீ ” என்றாள், ” சித் டான்ஸ் ல ஸ்லேகட் ஆகலைன்னா தான் ஆச்சரியம் சித்துகுட்டிக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் “
” தாங்க்ஸ் சக்தி ஆன்ட்டி…. ” அவளிடம் சொல்லிக்கொண்டு இருவரும் தங்கள் வீட்டிற்குள் வர. வேகமாய் உள்ளே நுழைந்தவன், தனது பெட்டியை திறந்து அந்த ரெப்பர் பேண்டை உள்ளே வைத்தான். அதில் செய்திதாளில் வந்த ஆர்.ஜேவின் போட்டோவை கட் பண்ணிவைத்திருந்தவன், அதை எடுத்தான்.
” நானும் உங்களை போல, பெரிய டான்ஸ்ர் ஆகானும் ஆசை ஆர்.ஜே சார்.. என்னால முடியுமா ? ஜானு ஒத்துப்பாளா ? ” என அவரிடம் பேசியவன் ஒரு முத்தம் வைத்து விட்டு உள்ளே வைத்தான்.
தனது ஆடையை மாற்றி ரகுவிடம் அமர்ந்துகொண்டான். ” சித் கண்ணா… உன்னை நினைச்சா பெருமையா இருக்குடா, ஜானுக்காக ஆடமையா நின்ன, உனக்கு ஏன் அங்க போய் அப்படி தோணுச்சு…?”
” தெரியல ரகு நான் இதுமாதிரி பீல் பண்ணது இல்ல, ஆனா ஜானு என் அம்மா, எனக்காக தானே அவ கஷ்டபடுறா, அதான் அவளுக்காக டான்ஸ் வேணா சொல்லி ப்ராமிஸ் பண்ணேன். என் ப்ரண்ட்ஸ் ப்ராமிஸ் பண்ணதை மீறினா யாருகிட்ட ப்ராமிஸ் பண்ணமோ அவங்களுக்கு ஏதாவது ஆகிடும்ன்னு சொன்னாங்க.. அதான் ஜானுக்கு எதுவும் ஆகுமோன்னு பயம் வந்திருச்சு ரகு அதான் நின்னுடேன்..”
” அதெல்லாம் எதுவும் ஆகாது சித் கண்ணா… கடவுள் இருக்காரே, அவருக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமா.. அதுனால அவங்களுக்கு பிடிச்ச எதையும் அந்த குழந்தைகளை போல நல்ல பார்த்துப்பார், அதுபோல உன் ஜானுவையும் நல்ல பார்த்துப்பார். என் சித் கண்ணா நீயும் ஜானுக்காக ப்ரேயர் பண்ணிக்கோ ஜானு நல்லா இருப்பா… ” என்றதும் அவர் மடியில் அமைதியாக தஞ்சம் கொண்டான்.
இங்கோ சூட்டீங் ஸ்பார்ட்டீல் புதிய படத்திற்காக டான்ஸ் ஸூட்டீங் இருக்க அதற்கு கோரீயோகிராபராக ஆர்.ஜே தான் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தான்…. பரப்பரப்பாக இருந்தது அந்த இடமே அங்கே செட் எல்லாம் போட்டு ஆடிக்கொண்டிருந்தனர்.
தீடிரென்று காற்று பலமாக அடிக்க செட்டில் ஒரு பகுதி மட்டும் காற்றால் சாய அங்கு நின்று சொல்லிகொண்டிருந்த ஆர்.ஜே மேல் சாய் அதிலிருந்த சில பல இரும்பு கம்பிகள் அவனது கைகளை பதம் பார்த்தது… வேகமாக ஓடிவந்தனர் அவனை காப்பாற்ற கையில் இரத்தம் கொட்ட, மருத்தவமனைக்கு பீட்டருடன் விரைந்தான்.
“அண்ணா பக்கத்தில ஏதாவது ஹாஸ்பிட்டல் இருந்தா கூட்டிட்டு போங்க அண்ணா ” என்று பீட்டர் பதற” வேணா அண்ணா, **** ஹாஸ்பிட்டலுக்கு போங்க ” என்றான் ஆர்.ஜே
” பாஸ்.. அது ரொம்ப தூரம், பக்கத்துல பார்க்கலாமே… “
” ப்ளீஸ்டா… ” என்றவனின் கெஞ்சலை கண்டவனுக்கு புரிந்தது. கார் நேராக மருத்துவமனைக்கு விரைந்தது.
உள்ளே நுழைந்தவன் கண்கள் தேடியது ஜானுவை தான்.. ஒரு தடவையாவது பார்க்க மாட்டோமா என்றிருந்தது. அவனுக்கு வேறொரு டாக்டர் வந்து சிகிச்சை அளிக்க.. மனம் ஏனோ ஜானுவை நினைத்து ஏங்கியது, பீட்டருக்கும் அவனிலமை புரிய யோசித்தான்.
” மேம் இங்க ஜானவின்னு யாரவது வேலை பார்க்கிறாங்களா?
” என பீட்டர் மெதுவாக பேச்சுக்கொடுக்க,
” எஸ் கைனாகலஜீஸ்ட்டா இருக்காங்க… உங்களுக்கு தெரியுமா அவங்கள? “
“சாருக்கு நெருங்கிய சொந்தம்.. அவங்களை வர சொல்ல முடியாம டாக்டர்… ” சிகிச்சை முடித்தவள், ” ஓ… வர சொல்லுறேன் சார் ” என கையில் போனை எடுத்து அவளை அழைத்தாள்.
” டேய், பீட்டரு என்னடா பண்ற…? ஏன்டா நீ பாட்டுக்கு நெருங்கின சொந்தம் சொன்ன அவ வந்து யாருன்னே தெரியாதுன்னு சொன்னா நம்ம மொத்திருவானுங்கடா.. “
” பாஸ், நீங்க யாரு உங்களை அப்படி பண்ணுவானுங்களா…? இல்ல நான் தான் விட்டுருவேனா… இவ்வளவு தூரம் வந்துட்டு அவங்களை பார்க்காம போன சரியா இருங்க பாஸ் வரட்டும்…”
அவளோ நெருங்கிய சொந்தம் என்றதும் பயந்து கொண்டு ஓடிவந்தாள், டாக்டரென்று மறந்து. வேகமாக வந்தவள் கதவை திறந்து உள்ளே நுழைய இவர்கள் இருவரும் இருந்தனர். மீண்டும் ஒரு முறை ரூமை பார்த்துவிட்டு சந்தேகமாக ஆர்.ஜேவை பார்க்க, அவனோ அவளை கண்டு கண்களை வேறெதையும் காணாது அமர்ந்திருந்தான்.
உள்ளே வந்தவள், ” நீங்க தான் என்னை நெருங்கிய சொந்தம் சொன்னதா…” என அவளது கண்ணீல் சந்தேகம் கலந்து இருக்க, புருவம் சுருக்கி அவள் கேட்க, அவளை பார்த்து அமர்ந்திருந்தவனுக்கு அவளை தவிர எல்லாம் அவுட்டாப் போகஸ் தான்.
” உங்க பெயரும் ஜானவியா ? நான் எங்களுக்கு தெரிஞ்ச வேற ஜானவி ஒருந்தவங்க டாக்டரா இங்க தான் வேலை செய்றதா கேள்வி பட்டேன். அவங்களை தான் அப்படி சொன்னோம்..”
” இங்க என்னை தவிர ஜானவின்னு யாருமில்ல”
” ஒ… அப்ப அவங்க வேற ஹாஸ்பிட்டல் போல சாரிங்க.. “
” இட்ஸ் ஓ.கே ” என வெளியே செல்ல, ” டாக்டரே சொந்தகாரங்களை தான் விசாரிப்பீங்களா? நாமலும் இரண்டுதரம் மீட் பண்ணிருகோம் கையில் அடிப்பட்டிருக்கு என்னா ஏதுன்னு கேட்கமாட்டீங்களா ? “
தயங்கி அவன் அருகில் வந்தவர். ” சாரி, என்னாச்சு கைக்கு? ” என அவன் கைகளை பற்ற,.. வலிகள் நிறைந்த கைகளுக்கு இப்போது தான் மருந்திட்டது போல ஜில்லென்று இருந்தது.
” அது சாருக்கு… “என்று அனைத்தையும் கூற… ” ஏன் அங்கே பக்கத்தில ஹாஸ்பிட்டலுக்கு இருக்கே ஏன் இவ்வளவு தூரம் வரனும்…?”
‘ எல்லாம் உன்னை பார்க்க தான்டின்னு சொன்னா கன்னம் பழுத்திரும் ஆர்ஜே’
” இதுதாங்க எங்களுக்கு ராசியான ஹாஸ்பிட்டல்.. இங்க இருக்க டாக்டரால தான் நல்லது நடக்க போகுது…”
” என்ன நல்லது நடக்க போகுது… ? “
” அது காயம் சீக்கிரமா ஆர போகிற நல்லதை சொன்னேன்ங்க… “
” சரி நான் வரேன்… ” என்றவளை மீண்டும் கேள்வியால் தடுத்து நிறுத்தினான். ” ஓரு டவுட்ங்க…” என்றான் ஆர்.ஜே. என்ன என்பது போல பார்த்தாள்,
” இல்ல அன்னைக்கு நைட் டீயூட்டி தானே பார்த்தீங்க.. இன்னைக்கு காலைல ஏங்க ? “
” எனக்கு ட்யூட்டி மாறிமாறி வருங்க…” என்றவளை நகராவிடாது ” ஏங்க அப்ப அடுத்த வாரம் நைட் ட்யூட்டியா? நீங்க இங்க வந்துட்டா உங்க குழந்தைய யாரு பார்த்துப்பா… “
” என் பையன் ஸ்கூல் போறான், அப்பா இருக்கார் பார்த்துப்பார்.. இன்னும் எதாவது கேள்வி இருக்கா, நான் போய் பேசன்ட்டை பார்க்கணும்…” என்றாள்.
‘ இங்க ஒருந்தன் உனக்காக பேசன்ட்டா இருக்கேன், அவனெல்லாம் கண்ணுக்கு தெரியல..போடி.. ” என முணுமுணுத்தான்.
” என்ன சொல்லுறீங்க ?”
” ஆங்.. ஒன்னில்லங்க நீங்க போயிட்டுவாங்க… நன்றிங்க விசாரிச்சதுக்கு,. ” என்றான்.” ஒ.கே டேக் கேர்.. ” என்று செல்லபவளை ஏக்கமாய் பார்த்து அமர்ந்தான்.
” பரவாயில்லை பாஸ் லேட்டானாலும் நல்லவே கடலை போடுறீங்க,. ” என்றவனை தலையணையை வைத்து அடித்தவன். ” அடிங்கு… உன்னை…. ” என்றவனை அருகில் அமர்த்தி, “மறுபடியும் அவள வரவை டா.. ” என்று கிசுகிசுத்தவனை,
கண்டு எங்கு போய் முட்டிக்கொள்வதேன்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் பீட்டர்..
குறும்பு தொடரும்…சித்துவின் பெயரை அழைக்க, மேடையில் வந்து நின்றான்” ஸ்டாட் பண்ணுப்பா… ” ஜட்ஜாக வந்த மூவருள் ஒருவர் கூற. அவனுக்கு வியர்த்து கொட்ட, முழித்துக்கொண்டே இருந்தான்.தன் அன்னைக்கு கொடுத்த வாக்கு நினைக்கவே,

குறும்பு தொடரும்…