என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
உள்ளே சிகிச்சை பெற்றுகொண்டிருந்தான் சித்தார்த் வெளியே மூவரும் பதற்றமாக இருந்தனர்.
தன் மகனை எண்ணி அழுதுகொண்டிருந்தாள் ஜானு. எதற்காக அவள் வேணாம் என்றாள் சித்துவிற்காக தானே, அவனை இழந்துவிடுவோம் என்று தானே வேணாமென்றாள். இன்று தன்னால் தான் அவன் இக்கதியில் இருக்கிறான் என்ற குற்ற உணர்வு ஒரு புறம்… அவனுக்கு எதுவும் நேர்ந்திட கூடாது துடிக்கும் உணர்வென ஒரு புறம் சிக்கித்தவிக்கிறாள்.
ஓயாது,வழியும் கண்ணீரை துடைக்க மறந்து அமர்ந்திருந்தாள்..
” அங்கிள், போய் ஜானுக்கு ஆறுதல் சொல்லுங்க,.. நீங்களே இப்படி இருந்தால் எப்படி போங்க அங்கிள்… “
” என்னால முடியாது தம்பி, சித் இந்த நிலமைக்கு காரணம் இவ தான், இவ மட்டும் தான்… என்னால ஜானுவ மன்னிக்க முடியாது… தன் பெத்த குழந்தை எப்படி தம்பி எல்லாரும் முன்னாடியும் அடிக்க தோணும் என்னால முடியாது தம்பி… ” ரகு ஓரமாக ஒதுங்கி கொண்டார்.
அவளை எப்படி சமாதானம் செய்தவது ஆறுதல் கூற.. தான் சென்று பேசினால் மீண்டும் கோபம் கொள்வாளா ? தயக்கமாக இருக்க, வேறு வழியின்றி அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் ஒரு நாற்காலி விட்டு அமர்ந்தவன்..
” ஜானு, சித்துக்கு ஒன்னும் ஆகாது. ப்ளீஸ் நீ தைரியமா இரு… நீ ஒரு டாக்டர்மா உனக்கு தெரியாதது இல்லை… “
” ஆனால் நான் இப்ப நான் டாக்டர் இல்லை, ஒரு அம்மா.. என் பையனுக்காக துடிக்கத்தான் செய்யும்.. அவனுக்கு ஒன்னும் ஆகாது தான், ஆனா அவனோட இந்த நிலமைக்குநான் காரணம் முழுக்க முழுக்க நான் மட்டுமே… நான் சித்தை அடிச்சிருக்க கூடாது… சித்தை நான் புருஞ்சகல, அவன் என்னை மன்னிக்கவே மாட்டான்…” என முகத்தை மூடி கதறி அழுதாள்.
” சித்துக்கு… நீன்னா ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா சித் உன்னை மன்னிப்பான் ஜானு, அழுகிறதுனால எந்த உபயோகமும் இல்லை… கொஞ்சம் ரிலாக்ஸ் இரு ” என அவள் கைகளை பற்ற, அவளும் பற்றினாள், ஆறுதல் மட்டுமே இருகைகள் கொடுக்க பெற இருந்தது.
டாக்டர் வர மூவரும் அவரை வளைத்தனர்… ” அதிர்ச்சி தாங்க முடியாம மயங்கிருக்கான்.. பயத்தினால காயிச்சல் வந்திருக்கு… இன்ஜங்கசன் போட்டிருக்கோம் ரெஸ்ட் எடுக்கட்டும். கொஞ்சநேரம் கழிச்சு கூட்டிட்டு போலாம்” என்றார்..
மூவருக்கும் கொஞ்சம் திருப்தி பரவ தெளிவாயினர்.. ” தம்பி, நீங்க வேணா போங்க நான் பார்த்துகிறேன்…”
” இல்ல அங்கிள் சித் கண்விழித்ததும் நான் போய்கிறேன்… ” என்றவன் ஜானுவை காண இன்னும் அழுதவாறே கைகள் நடுங்க உதடுகள் துடிக்க அமர்ந்திருந்தாள்.
அவளுக்கென்று தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தான்.. முதலில் மறுத்தவள் பின் குடித்தாள்… இதெல்லாம் கண்டும் காணாது போல இருந்தார் ரகு.
நேரம் செல்ல சித்தார்த் கண்விழித்தான். நர்ஸ்ஸின் மூலம் தெரிய, மூவரும் உள்ளே சென்றனர்.
சித்தின் அருகில் அமர்ந்தவள்” இப்ப எப்படி இருக்கு சித்… ?” அவன் கன்னத்தை வருடி ” சாரி சித் ஜானு அடிச்சிருக்க கூடாது, சாரி சாரி சித்.., ” என்றாள், ஆனால் அவனது பார்வை ரகுமேலும் ஆர்.ஜே மேலும் தான் இருந்தது..
” சித்.. அம்மாவ பாருடா, என் கோபமிருந்தால் திட்டு பேசாம இருக்காத சித்… சாரிடா.. ” என்றவள் கெஞ்ச அவனது பார்வை மாற்றவே இல்லை.
” ஆர்.ஜே ” என அழைத்தான்… அவன் அருகில் கைப்பற்றி அமர்ந்தான்.
” சொல்லு சித்.. உனக்கு இப்ப எப்படி இருக்கு…? “
” பைன் ஆர்.ஜே….”
என்றவன்.. ” ஆர்.ஜே நீங்க தான் என் அப்பான்னு ஏன் சொல்லல ? நீங்க ஏன் என்னைவிட்டு போனீங்க ? ஏன் என்கூட இல்லை?” என்றதும் மூவரும் அதிர்ந்தனர்.. கோபத்தில் ஆர்.ஜே விட்ட வார்த்தைகளுக்கு தான் இத்தனை கேள்விகள்… ” அவன் எனக்கும் புள்ளை தான்.. ” என்றதும், ஆழமாக சித் நெஞ்சில் பதிய, அது இவ்வாறாகி வெளிப்பட்டது.
” அது…” என முதலில் தயங்கியவன், அவன் உடல் நலம் கருதி, ” சாரி சித்… நான் உன் அப்பா தான்.. உன்கூட இனி,எப்பையும் இருப்பேன்… இனி உன்னைவிட்டு,போகமாட்டேன்.. ” என்றான்..,
” சித்து கண்ணா…. ” என ரகுவும் அருகில் வர.. ” ரகு.. எனக்கு ஒன்னுமில்லை நான் நல்லா இருக்கேன்.. நீ கூட என்கிட்ட இருந்து மறச்சுட்டேல ஆர்.ஜே தான் என் அப்பான்னு ” என்றதும் அமைதியாக நின்றார்.
“சித்… விடு இனி நீ நல்ல ரெஸ்ட் எதையும் யோசிக்காத.. நான் சொல்லிருக்கேன்ல ஐ யம் ஆல்வேஸ் வித் யூ ன்னு… ” என்றவன் கைகளில் மெல்லமாய் முத்தமிட, புன்னகை அரும்பினான். ஆனால் ஜானுக்கு தான் இதயம் கனத்தது தன் மகன் காட்டும் பாராமுகம்… இதில் ஆர்.ஜே வை தன் தந்தை என்று கூறுவும் அவளால் எதுவும் பேச முடியவில்லை, அங்கிருந்து அவள் வெளியே வந்துவிட்டாள்..
சித் தன்னை தவிர்க்கிறான், என்றதும் தாயின் மனம் வெதும்ப. அவன் சரியானதே போதுமென்று தேற்றிகொண்டு வெளிவந்தாள்.
” சித்.. நீ ஏன் ஜானுகிட்ட பேசலை.. ”
அமைதியாக இருந்தான்..
” சொல்லு சித்… ஏன் பேசலை ? “
” ரகு… அவ என்னை புருஞ்சுகல, என்னை எல்லார் முன்னாடியும் அடிச்சுட்டா… நான் அவளை மன்னிக்க மாட்டேன்… “
” சித்… இது தப்பு , ஜானு இடத்தில இருந்தா பார்த்தா கோபம் வரத்தான் செய்யும்.. நாம அவங்களை ஏமாத்திருக்கோம்..”
” ஆர்.ஜே.. ஆனா அவ என் இடந்திலிருந்து யோசிக்கலை , அவ என்னை புருஞ்சிக்க முயற்சி பண்ணலை.. “
” ஆனா… சித்.. “
” எனக்கு தூக்கம் வருது ஆர்.ஜே ” என இதற்குமேலும் பேசவேணாம் என்று கண்களை மூடிக்கொண்டான்.
அவன் பேசியதெல்லாம் அவள் காதில் விழுகத்தான் செய்தது.. அவள் மனம் வலித்தது… அவன் கூறுவது சரியென, அவளுக்கு பட்டது, இதற்குமேலும் இங்கே இருக்க வேண்டாம் எண்ணி எழ சரியாக ரகுவும் ஆர்.ஜேவும் வந்தனர்.
” அப்பா… உங்களுக்கு உங்க பேரனுக்கும் என் மேல கோபம் வெறுப்பு அதிகமாவே இருக்கு. என்னை மன்னிக்க மாட்டிங்கன்னு தெரியும்.. நான் செய்தது தப்பு தான் விளக்கம் சொல்லி நியாயப்படுத்த விரும்பல, அதுக்கான தண்டனை அனுப்பிவிச்சு தான் ஆகனும். இதை நான் தண்டனையா ஏத்துகிறேன்.. என்னால இங்க இருக்க முடியல நான் போறேன், நீ உங்க பேரனை பார்த்து கூட்டிட்டு வாங்க.. ” என்றவள் வெளிய சென்றுவிட்டாள்.
” ஜானு.. ஜானு… ” என அவன் கத்த அதில் காற்றில் கரைந்திருந்தது..
” என்ன அங்கிள் நீங்களாவது சித்து கிட்ட சொல்லி பேச சொல்ல கூடாதா.. நாம தானே தப்பு பண்ணோம்.. ஜானுக்கு தெரியாம டான்ஸ் ஆட வைச்சது தப்பு.. என் சித்தை அவ அடிச்சிருக்க கூடாது. ஆனா அவ கோபம் நியாயமானது தானே,.. “
” என்ன தம்பி செய்ய சொல்லுறீங்க. இரண்டு பக்கமும் இருக்க, நான் யார் சார்பா பேச, சித்தை அடித்தது தப்பு தான், ஆனா நாங்க சொல்லாம ஆடுனது தப்புதான்… சித்தை புருஞ்சுகாம விட்டது ஜானு தப்புத்தான்.. அவளுக்கு புரியவைக்காம இருந்தது தப்பு தான்… இரண்டு பக்கமும் தப்பிருக்கு தம்பி.. இப்ப இருக்க சூழ்நிலையில எதுவும் பேச வேணாம் தம்பி.. சித்துவால ஜானுகூட பேசாம இருக்க முடியாது, சீக்கிரமா பேசிடுவான்… காலம் பார்த்துகிடும் தம்பி.. ” என்று அமர்ந்தார்..
ஆர்.ஜேவிற்கும் அப்படிதான் யாருக்காக பேசுவது. இவன் வளராத குழந்தை அவள் வளர்ந்த குழந்தைதான்.. இருவரது பிடித்தமைக்காக தான் இத்தனையும்…
வீடுவந்தவள்… அழுது கரைந்தாள், சவர் கடியில் நின்று முழுதாய் அழுதாள்.., சித் தன்னை திரும்பி கூட பார்க்காதது அவளுக்கு பெரிய வலிதான்.. இது போன்று நிறைய முறை சண்டையிட்டிருந்தனர், ஆனால் ஜானுதான் பேசாது செல்வாள், சித் தான் சமாதானம் செய்வான்.. ஆனால் இன்று மாறாக இருக்க அவளுக்கு பெரும் வலிதான்… வெளியவந்து ஆடை மாற்றி அவனுக்காக சமைத்தாள்.
சித்தை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு ஆர்.ஜேவும் ரகுவும் இல்லம் திரும்பினர். அவனுக்காக தேவையானதை அனைத்தும் செய்துவைத்திருந்தாள்.
” வாங்க தம்பி.. ” என சித்தை தூக்கிகொண்டு வந்த ஆர்.ஜேவை உள்ளே அழைத்தார் ரகு..
உள்ளே சித்துவை மடியில் வைத்து அமர்ந்துகொண்டான்… ஜானுவோ சுவரோடு சுவராக பல்லியை போல் நின்றுகொண்டாள்..
அங்கே பெரும் அமைதி நிலவியது…. ” சித்.. வா வந்து ரெஸ்ட் எடு. ” என்றார்..
” வேண்டாம்…” என்று ஆர்.ஜேவை கட்டிகொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டான்.. அதனை பார்க்க, ஜானுவிற்கு சங்கடமாகவும், வலிக்கவும் செய்ய, சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்..
மீண்டும் ஒரு அமைதி அங்கே நிலவ. இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தாள்.. சித்துவைத்துகொண்டே பருகினான்.
” நான் போய் சித்துக்கு சமைக்கிறேன்.. ” என்று இருவருக்கும் தனிமையை கொடுக்க,எழுந்தார் ரகு..
” நான் அவனுக்கு சமைச்சுட்டேன்… நீங்களே ஊட்டிவிடுங்க.. ” என்று டைடீனிங் டேபிளில் வைத்து ரசம் சாதத்தை அவரிடம் கொடுத்தாள்.. முதலில் மறுக்க. பின் ஆர்.ஜேவே பேசி ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தான் மாத்திரையும் விழுங்கினான்..
” சித் வா தூங்கலாம்.. ” என்று அவனை தூக்கி கொண்டு அறைக்குள் நுழைந்தான் ஆர்.ஜே.. அவனை படுக்கவைத்து அருகினில் அமர்ந்து கொண்டான்..
அவனிடம் வேறு கதைகள் பேசியாவாறே,தட்டி கொடுத்து தூங்க வைக்க முயன்றான்.
வெளிய இதையேல்லாம் கண்டும் ஒன்றும் செய்ய முடியாமல் நின்றாள் ஜானு…
இருவரும் பேசாது ஹாலில் அமர்ந்திருக்க, காலிங் பெல் அடிக்க ரகுவே திறந்தார்.
“உள்ள வாங்க சார்.. ” என்றார்,
அவள் புரியாமல் விழிக்க, ” மேடம் நாங்க **** சேனல் இருந்து வந்திருக்கோம்,… “
” சூட்டிங் பாதிலே சித்தார்த்தை கூட்டிட்டு வந்துடீங்க… சாரும் வந்துட்டாரு.. நாங்க அதை எடிட்டீங் பண்ணிடுவோம்… அடுத்த ஷோக்கு சித்தார்த் டான்ஸ் ஆட வருவானா கேட்க தான் வந்தோம்… அவன் நல்லா டான்சர் மேம்.. உங்க பேமிலி ப்ரச்சனை நாங்க தலையிட விரும்பல ஆனா,சித்தார்த், ஆடுவருவானா,மாடானா,கேட்க வந்திருக்கோம்… ”
ரகுவும் அவளையே பார்க்க, ஆர்.ஜேவும் அவளை தான் பார்த்தான்.. உள்ளே சித் படுத்திருந்தாலும் தன் அன்னை எப்படியும் மறுக்க தான் போகிறாள்.. என்று எண்ணி எந்த ஆர்வமின்றி கிடந்தான்..
” சித்தார்த்… கண்டிப்பா ஆட வருவான். நெக்ஸ்ட் எப்ப சூட்டிங் சொல்லுங்க நானே அவனை கூட்டிட்டு வருவேன்… ” என்றதும் இருவரும் ஆச்சரியமாக அவளையே காண உள்ளே இருந்த சித்தார்த் ஜானுவா இதை கூறியது என்று எழுந்து அமர்ந்தான்…
” அடுத்த சனிகிழமை தான் மேடம்… இன்னைக்கும் நாளைக்கும் ஷோ டெலிகேஸ்ட்,ஆகும்… நெக்ஸ் சட்டர்டே சூட்டிங் இருக்கு… நன்றி மேம்.. ” என்றவர்கள் செல்ல…
அமைதியாக வெளியே சென்று விட்டாள்… ” சித்… உங்கம்மா ஆட ஒத்துகிட்டா.. ” என்றவனை நெற்றியில் இதழ் பதித்தார்..
” சித்… இனி எதற்கும் பயப்பிடவேண்டாம்.., இன்னைக்கும் நாளைக்கும் ரெஸ்ட் எடுத்துட்டு மண்டே க்ளாஸ் வந்திடு… அப்புறம் ஜானுக்கு இருக்கிறது நீங்க மட்டும் தான், நீங்களே பேசாம இருக்காதீங்க… பேசுங்க அங்கிள் நீயும் பேசனும் சித்.. டேக் கேர் ஆல் தி பெஸ்ட்…” என்றான்..
” ஆர்.ஜே.. “என்றழைக்க… அவனை தன்னருகே இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்… அவனும் முத்தம் கொடுத்து விட்டு சென்றான்…
தன் தோழியின் வீட்டிற்கு சென்றவள், இரவில் தான் வந்தாள்… ரகு சித்திற்கு சாப்பாட்டை ஊட்டுவதை கண்டவள், தன்னறையில் நுழைந்து கொண்டாள்…. இருவரும் ஏதுவும் பேசவில்லை….
மறுநாளும் இருவரும் தாமதமாகவே எழுதிருக்க. அவர்களுக்கென்று சமைத்து வைத்துவிட்டு இன்று வேலை கேட்டு சென்றுவிட்டாள்..
” இருவரும் துயிலெழுந்து வர அங்கே ஜானு இல்லை… ஒதுக்கம் என்பது எத்தனை பெரிய தண்டனை.. அதுவும் தன் அன்பானவர்கள் தரும் பொழுதில் இதயத்தை இறுக்க பற்றியது போல் வரும் வலியது… சித்தார்த், ரகுவும் பேசாது இருக்க, அவளே அவர்களிடம் ஒதுக்கம் கொண்டாள்….
” ஜானு எங்க ரகு ? “
” ம்ம்… வேலைக்கு போயிருப்ப சித்… “
” இன்னைக்கு வேலை இருக்காதுல ரகு… ஏன் போனா.. “
” நீயும் நானும் தான் காரணம் சித்.. நாம தான் பேசாம இருக்கோமே.. இங்க இருந்தா தனியா இருக்கனும் வேலைக்கு போயிருக்கா.. “
” ரகு… ஜானு பாவம்ல அவளுக்கு நம்மலை விட்டா யாரு இருக்கா.. நான் பேசாம இருந்தது தப்பு தானே.. நான் ப்ராமிஸ் பண்ணிட்டு நானே மீறுன்னா,அது என் தப்பு தான் ரகு.. அவ எல்லாரும் முன்னாடி அடிச்சது எனக்கு சேம் இருந்தது,நான் அவகிட்ட பேசலை.. நான் ப்ராமிஸ் மீறினதுனால தான் அடிச்சா… எனக்கு ஜானு வேணும் ரகு… எனக்காக தான் இப்ப டான்ஸ் ஒத்துகிட்டா. நான் பேசாம இருக்கிறது தப்பு ரகு.. “
” தப்பு தான் சித்… என்ன இருந்தாலும் அவ என் பொண்ணு, அவ பக்கம் இருந்து நாம பார்க்காமா விட்டுடோம்.. ப்ராமிஸ் பண்ணிட்டு மீறுன்னா யாரா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்… அவ வரட்டும் சித் நாம பேசலாம்…. ” என்றார்.
அன்றைய நாளில் வெங்கி சக்தி சிவாளி மூவரும் அவனை பார்த்துகொண்டனர்.. ஜகதீஸ், வைஷூ வந்தும் பார்த்துவிட்டு விளையாடி சென்றனர்.. இரவாக தாமதமாகவே வந்தாள்.
அங்கே சித் ஆடுவது ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது இருவரும் டீ.வியை பார்த்தவாறு,அமர்ந்திருந்தனர்.. உடை மாற்றி வந்தவள்.. சமையலறைக்கு புகுந்து கொண்டாள்..
தனது ஆட்டத்தை பார்ப்பாள் என்றவனுக்கு ஏமாற்றமே.. சமைத்து டைனிங் டேபிளில் வைத்தவள், கீழே பூங்காவிற்கு சென்று அமர்ந்து கொண்டாள்..
ஏனோ அவள் மனம் தனிமைத் தான் தேடியது… யாரும் வேண்டாம் என்ற மனநிலைமை கொண்டிருந்தாள்.. அமைதியாக தனது போனில் சித்தார்த்தின் ஆடலை பார்த்தாள்..
அதுவும் முதல் முதலாக பார்க்க, விழிகளில் ஆச்சரியமும் அதே சமயம் குற்றவுணர்வும் தோன்றியது..
இத்தனை நாள் அவனது திறமையை தனது பயத்தால் முடக்கிவைத்ததை எண்ணி நொந்து கொண்டாள்.. அவன் ஆடி முடிக்க அனைவரது கைத்தட்டலையும் காண தாயாய் பூரித்து பெருமை கொள்ள.. மனதில் புது மகிழ்ச்சி பிறந்தது.. இந்த சந்தோசத்தை இத்தனை நாள் இழந்துவிட்டோமே என்றிருந்தது…
அமைதியாக வானை வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள்…. சித்துவும் அவளை தேடி வந்தான்….
அவள் அருகில் அமர்ந்தான்.,. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… யார் முதலில் பேசுவதென்ற தயக்கம் இருந்தது இருவரிடையே…
” சித்… உன் டான்ஸை பார்த்தேன்… கூஸ்பம்ஸ் டா மகனே… ” என்றாள் ஆனந்த கண்ணீரோடு. இதை கேட்டவன், மகிழ்ச்சியில் தாவி தன் தாயை அணைத்து கட்டிக்கொண்டான்…
” சாரி.. ஜானு… ” என்றவன் முகம்முழுதும் முத்தமிட, அவளும் தான் இருவரும் கட்டிணைத்து அமர்ந்திருந்தனர்..
குறும்பு தொடரும்…