என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 28

மெல்ல தன்னை மறைத்து விளையாடுகிறாள் நிலவுமகள் மேகங்களிடையே…. அக்கொள்ளை அழகு கொண்ட காட்சி ஏனோ மனதில் நிற்கவில்லை அவனுக்கு, இன்னும் பதில் சொல்லாதுமறைத்து மறைத்து கொண்டு தன்னை கண்டதும் தலைகுனியும் தாமரை பெண்ணவளின் எண்ணமே முழுதாய் அவனுக்குள் ஓடியது..

‘ இத்தனை நடந்து,ஏன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல மறுக்கிறாள்… என்ன தான் பிரச்சனை இவளுக்கு. மனது விட்ட பேச கூட மாட்டாள், போலும்… எப்படி தான் அவள் மனதை அறிய.. ‘ என குழம்பித்தான் இருந்தான்..

” பாஸ் வீட்டுக்கு போகலையா அம்மா போன் பண்ணிட்டே இருக்காங்க… சீக்கிரமா போங்க பாஸ்… “

” என்ன வாழ்க்கைடா, இது எதையும் என்னால வாங்க முடியும், ஆனால் இந்த காதலை முடியலடா, மனசு இப்படி இருந்ததே இல்லை… “

” பாஸ்… எல்லாம் சரியாகிடும்,கண்டிப்பா அவங்க உங்களை புருஞ்சுப்பாங்க. ஏன் புருஞ்சுகிட்டு இருக்காங்க, இன்னைக்கு நடந்த விசயத்துக்கு அவங்க கோபப்படுவாங்கன்னு நினைச்சோம். ஆனா அவங்க நீங்க சொன்னதை புருஞ்சகிட்டாங்களே ! இனி கொஞ்சம் புருஞ்சு உங்களை அக்சப்ட், பண்ணுவாங்க பாஸ்… ”
வெற்று புன்னகை உதித்தவன், வீட்டை நோக்கி பயணப்பட்டான்…

வீடுவர, ஹாலில் இருவருமாய் அமர்ந்திருந்தனர்..

” அம்மா.. அப்பா… சாப்பிட்டீங்களா இரண்டு பேரும்.. ” என வந்து அமர்ந்தான்..

” சாப்பிட்டோம் பா… நீ ஏன் சோர்வா இருக்க ? சாப்டியா ? ” ராமன் கேட்க,

” பசிக்கலப்பா… நீங்க போய் தூங்குங்க, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நானும் தூங்க போறேன்… ” என்றவன் எழுந்து சென்றான்..

” டேய் நில்லுடா !!! “

” என்ன அம்மா… சொல்லு “

” என்னடா நடக்குது, அந்த பொண்ணை உன் பொண்டாட்டியும் , அந்த பையனை உன் மகன் சொல்லிட்டு இருக்காங்க, இதுல நீங்க இரண்டும் சண்ட வேற போட்டிருக்கீங்க… டீ.வி, பேப்பரலை  நம்ம சொந்தகாரங்க எல்லாரும் போன் பண்ணிகேட்கிறாங்க நான் என்னத்தை சொல்லி சமாளிக்க,”

” ம்ம்,.. அது என் மருமக தான். அது என் பேரன் தான் சொல்லு, இது எங்க குடும்ப விசயம் சொல்லு.. “

” ராஜேஷ், என்ன பேசுற நீ.. அவ என் மருமகளா அவன் எனக்கு பேரனா, என்னால இதை ஏத்துக்க முடியாது… “

” உன்னால ஏத்துக்க முடியலைன்னு விடுமா, ஸ்ட்ரைன் பண்ணிக்காத, வாழ போறவன் நான், எனக்கு பிடிச்சிருக்கு, ஜானு தான் என் மனைவி, சித்து தான் மகன். நான் இதோ எப்பையே மனசு ஃப்க்ஸ் பண்ணிடேன், அதை யாராலையும் மாத்த முடியாது..

” உனக்கென்னடா கொல்லை வந்தது அவளை கட்ட போறேன் சொல்லுற, யாரோ பெத்த பிள்ளை, உன் மகன் சொல்லுற, உனக்கு இன்னும் வயசிருக்கு அம்மா உனக்கு பொண்ணு பார்க்கிறேன் டா.. இவங்க வேணாம் டா… “

” இவ்வளவு நடந்தும் யாரு  எனக்கு பொண்ணு கொடுப்பாம்மா..?ஆனாலும்  அதிகமாத்தான் உன் பிள்ளை மேல பாசம் வச்சிருக்க, அதுக்காக நீ சொல்லற எல்லாத்தையும் செய்ய முடியாது மா.. எனக்கு ஜானு, சித்தார்த் வேணும்… ” என்றான் உறுதியாக,.

” அப்ப, நாங்க உனக்கு வேணாமா ? அவங்க மட்டும் போதுமா, அப்படி அவ என்ன வசியம் வைத்தான்னு அவ தான் வேணும் நிற்கிற நீ.. “

” அதென்னம்மா, எல்லா அம்மாவும் இந்த ஸ்டேன்டர் டயலாக் விட மாடீங்களா, ஒரு நல்ல அம்மாவ இருக்க நீங்க, ஏன் மா நல்ல மாமியாரா இருக்க முடியல, இன்னும் அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர அதுக்குள்ள அவளை பேச ஆரம்பிச்சுடீங்க, ஆனா, அவ இன்னும் சம்மதிக்கல, உங்களை போல என் வாழ்க்கையை நினைச்சுட்டு சம்மதிக்காம இருக்கா, அவளா எனக்கு வசியம் வைக்க போறா.. ஏன்மா உன் புத்தி இப்படி போகுது…?”

” அதான் அவ ஒத்துகலைல ஏன் அவ பின்னாடியே சுத்தி மானத்தை வாங்கிற..”

” எனக்கு அவ தான் வேணும், அவ கண்டிப்பா சம்மதிப்பா நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்… “

” சரிடா நீ கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டுவா, நாங்க வெளிய போறோம்… “

” அம்மா… இவ்வளவு சொல்லியும் மகனோட ஆசையயை புருஞ்சுக்க மாட்டீங்களா.. நீங்க போகவே வேணாம் நான் போகிறேன், நீங்க இருங்க,…. ”   என்றவன் வேகமாக படியேறியவன் தனது உடைமைகளை எடுத்துகொண்டு இறங்கினான்..

” ராஜூ, அவ தான் அப்படி பேசுறான்னா,. நீ என்னடான்னா, போறேன் நிக்கிற உள்ள போ. நான் சமாதானம் பண்றேன், இதுக்கு போய் வெளிய போறேன்னு நிக்கிற.. “

” இவனுக்கு நம்மலை விட அவங்க தான் முக்கியமா போயிட்டாங்க. போகட்டும் விடுங்க.. ” என்றதும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்..

” என்ன சீதா நீ… இருக்கிறது ஓரு மகன் அவன் ஆசையை நிறைவேத்தாம இப்படி வெளிய போக சொல்லிட்டீயை… என்ன தான் அந்த பொண்ணு பையன் மேல கோபமோ.,.. “

அவருக்கு பதிலளிக்காது தனதறைக்கு சென்றுவிட்டார்.. இவனோ, டான்ஸ் க்ளாஸில் இருந்து கொண்டான்..

மருத்துவமனையில்  இருந்து கொண்டே அவனை பத்தியோசனையிலே அன்றிரவை கழித்தாள் ஜானு..

மறுநாள் வழக்கம் போலவே சித்துவை ரகு பள்ளியில் விட்டு வந்தார்..
ஜானுவும் வேலை முடித்து வீட்டிற்குவந்தவள்  படுத்து உறங்கினாள்…

இங்கோ சித்து வகுப்புகள் நடந்து கடைசி வகுப்பு பி.டி வகுப்பாக ஆக இருந்தது..
குழந்தைகள் அனைவரும் அப்பெரும் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்…

” ஏய் !!! சித்,  உங்க அப்பா தான் ஆர்.ஜேவா… அப்புறம் ஏன் உங்க அப்பா பெயரை போடாம உங்க அம்மா பெயர் உன் பெயர் பின்னாடி போட்டிருக்க…? ” என ஒருவன் கேட்க..

” ரித்திக்,  ஆர்.ஜே என் அப்பா இல்லை. என் ஜானு, என் அம்மா பெயரை தான் என் பெயர் பின்னாடி போட்டிருக்கேன்.. ” என்றான் சித்.

” எல்லாரும் அப்பா பெயர் தானே போடுவாங்க… நீ ஏன் அம்மா பெயரை போட்டிருக்க…?  உங்க அப்பா பெயரு தெரியாத ? ” என சிரிக்க சித்திற்கு கோபம் வர… ” பட்டீ… அவங்க உன்னை டீச்ஸ் பண்றாங்க நீ வா  நாம வேற விளையாடலாம்…”

அமைதியாக சூர்யா பின்னே சென்றான் சித்… ” டேய் ரித்திக், சித்துக்கு அப்பாவே இல்லைடா, அதான் டா அவங்க அம்மா பெயரை போட்டிருக்கான் சித்தார்த்ஜானவி…. “

” நம்ம எல்லாருக்கும் அப்பா இருக்காங்க, சித்துக்கு மட்டும் ஏன்டா இல்லை… “

” அவங்க அப்பா, அவனை வேணான்னு சொல்லிட்டு போயிட்டாங்களாம் டா…, அதான் அவனுக்கு அப்பா இல்லை… “

” உனக்கு யாருடா சொன்னா ஸ்ரவன்… “

” எனக்கு எங்கம்மா தான்டா சொன்னாங்க.. அவங்க அப்பாக்கே அவனை பிடிக்கல பாருடா… ” என சொல்லி சிரிக்க… இதுவரை பேசியதை கேட்டவனுக்கு அழுகையும்  கோபம் வர… சூர்யாவின்  கையை உதறியவன், ஸ்ரவனின் வாயிலையும் மூக்குமேலையும் குத்தினான்…  இரத்தம் வடிய கீழே விழுந்தான்.. அவன் சட்டை பிடித்து சண்ட போட, இருவரையும் ப்ரின்சிபாலிடம் அழைத்து சென்றார் பி.டி டீச்சர்.. விசயம் தெரிந்து க்ரேஸியும் வந்தாள், அவள் தான் கேட்டாள்.”  ஏன் சித்து அவனை அடித்த,…?இது தப்பில்லையா…? “

” மிஸ்.. அவ.. அவ. அவன் தான் ” என அழுதுகொண்டே   அனைத்தையும் கூறி தெம்பி தெம்பி அழுதான்…

” அதுக்காக நீ அடிப்பீயா சித், எதுக்கு டீச்சர் இருக்காங்க அவங்கிட்ட சொல்ல வேண்டியது தான்.. க்ரேஸி இரண்டு ஸ்டூடன்ஸ்  பெரண்ட்ஸ் வர சொல்லுங்க…” என்றார்.

க்ரேஸி ஜானுக்கும், ஸ்ரவனின் தாயை அழைத்தவள், ஆர்.ஜேவிடம் தெரிவித்து விட்டாள் அவனும் அங்கே வந்தான்.

” சார்.. ” என ஜானுவும் ரகுவும் உள்ளே நுழைய.. சித் அங்கே அழுத்தவாறே நின்றிருந்தான். இங்க ஸ்ரவனின் மூக்கில் மருந்திட்ட பட்டிருந்தது…

“மேம்.. உங்க பையன் சித், இந்த பையனை அடிச்சிருக்கான், அதுனால அவன் மூக்கு உடைஞ்சு இரத்தம் வந்திருக்கு.. இப்ப அவன்பெரண்ட்ஸ் வந்தா நாங்க என்ன சொல்லுறது நீங்க சொல்லுங்க.. ?”

அதை கேட்டதும் அதிர்ச்சி தான்… ” சித் இங்க வா… ” என அழைக்க அவளை கட்டிக்கொண்டு அழுதான்.

” ஏன் சித் இப்படி பண்ண, ஏன் அவனை அடிச்ச… ” என கேட்க, அவனோ தன் அன்னையிடம் சொன்னால்  வருத்தபடுவளோ என்று அமைதியாக இருந்தான்..

சரியாக ஸ்ரவன் பெரண்ட்ஸும், ஆர்.ஜேவும் நுழைய அவனை வரவேற்றார் ப்ரின்சி… ஜானுவின் அருகில் வந்து நின்றான்.

” சொல்லு சித், ஏன் அவனை அடிச்ச… ” என கேட்க அழுது கொண்டு தான் இருந்தான்..

” என்ன பிள்ளைய வளர்த்திருக்க, ஜானு நீ… என் புள்ளைய போட்டு எப்படி அடிச்சிருக்கான் பாரு…. “

“மேம்… உங்க புள்ளை அடிச்சான்னா, உங்க புள்ளை என்ன தப்பு செய்தான் கேளுங்க. அவன் என்ன பண்ணான்னு தெரியுமா…. ” க்ரேஸி கூற..

” என் புள்ளை நல்ல படிக்கிறவன், அவன் உண்டு அவன் வேலை உண்டு இருப்பவன்… அவனை அவன் அடிச்சிருக்கான். அவனை எதுவும் சொல்லாம என் புள்ளைய தப்பு பண்ணிருக்கான்னு சொல்லிருக்கீங்க… “

” மேம்..” என க்ரேஸி ஆரம்பிக்க, ” க்ரேஸி அமைதியா இரு… சித் நீ சொல்லு அவன் என்ன சொன்னான்னு சொல்லு… “

அமைதியாக இருந்தான்.. ” சித்… அம்மா திட்டுவேன், அடிப்பேன் பயப்பிடாத, அம்மா உன் மேல நம்பிக்கை வச்சிருக்கேன்… என் சித்து குட்டி தப்பு செய்ய மாட்டான் சொல்லு அவன் என்ன சொன்னான்…? ”  அவளை கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுக, ” ஸ்ரவன் நீ சொல்லு என்ன சித்துகிட்ட சொன்னேன் சொல்லு.. “என்றதும்.

ஸ்ரவனும்  தன் நண்பன் பேசியதை சொல்ல… அவனது பெற்றோர்கள் அமைதியாகினர்.. ஆர்.ஜேவிற்கு கோபம் வர, சித்தை அணைத்தவள் அதைகேட்டு மேலும் அழுதாள். ரகுவோ சமாதானம் செய்ய திணறினார்.

” இதான் பையனை வளர்க்கிற லட்சணமா, என்னமோ நல்ல படிக்கிறவன் சொன்னீங்க, படிச்சா மட்டும் போதுமா.. மத்தவனை மதிக்காதவன் படிச்சு என்னங்க பண்ண போறான்… உங்க குடும்பத்தில  என்ன நடக்கது பாருங்கம்மா, அதவிட்டு அடுத்தவன் குடும்பத்தில என்ன நடக்குது பேசி குழந்தைங்க மனச கலைச்சு,ச்ச..இதுல நல்ல படிக்கிறான் பெருமை வேற… முதல் நல்ல செயலை சொல்லிகொடுங்க…

அப்புறம் சித்தார்த் அப்பா இல்லை யாரு சொன்னா… அவனுக்கு அப்பா நான் இருக்கேன், அவனோட அப்பா நான் தான்.. நான் இருக்கும் போது அவனை அப்பான்னு இல்லைன்னு சொல்லி பார்க்க சொல்லுங்க, நடக்கிறதே வேறையா இருக்கும்…
அவன் கோபத்தில் கத்த ஜானும், ரகுவும் பயந்தனர்..

சித்தை தூக்கி கொண்டவன்.. அவன் கண்ணீரை துடைத்துவிட்டான்.. ” நான் சொன்னேன் தான் நான் உன் அப்பா இல்லைன்னு, ஆனா இப்ப சொல்லுறேன், உனக்கு நான் தான் அப்பா, யாரும் உன் அப்பா யாருன்னு கேட்டா ஆர்.ஜே தான் சொல்லு.இனி  நீ சித்தார்த்ராஜேஷ் புரியுதா… ” என்றதும் தலையாட்டினான்.

” சார்.. சாரி இனி இது போல நடக்காது… இனி சித்தார்த் அப்படி பண்ண மாட்டான் அவனால எந்த ப்ராபலம் வராது சார்.. நாங்க அவனை கூட்டிட்டு போறோம் சார்…. வா… ” என்றவன் ஜானுவை பார்த்து அழைத்து சென்றான்.

ரகுவும் ஜானுவும் வெளியே வந்தனர்.. பீட்டர் நீ கார் எடுத்து ஜானு வீட்டுக்கு வா…. ” என்றவன் ஜானுவிடம் சித்தை கொடுத்தவன், சாவியை கேட்க கொடுத்தாள்… அவனை காரை ஓட்ட மூவரும் உள்ளே அமர்ந்தனர்..

கார் ஒட்டியதில் அவன் எவ்வளவு கோபமா இருக்கிறான் என்று புரிந்தது வீடுவர,.., சித்தை வாங்கி கொண்டு வேகமாக நடந்தான்.. கதவு திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தனர்.

” தம்பி… ” என அவர் திறக்க, ” அங்கிள், சாரி… ” என்றவன். கோபத்தில் ஜானுவை அடித்தான்.. அவன் கன்னத்தில் கைவைத்து அழுகவே,ரகுவும் அமைதியானார்.

” ஆர்.ஜே ஜானுவ ஏன் அடிச்ச, அவ என்ன பண்ணா பாவம் ஜானு… ” என அவள் அழுவதை கண்டு சித்துவும் அழுதான்.

” சித் நீ அமைதியா இரு.. ” சோபாவில் உட்கார வைத்தவன், திரும்பினான் ஜானுவிடம்…. ” சொன்னேன்ல டி, நான் சித்து மட்டும் அப்பா இருக்கேன். என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு அப்புறம் என்ன விராப்பு உனக்கு… இன்னைக்கு சித் இப்படி பண்ணதுக்கு யார் காரணம் நீதான் நீ மட்டும் தான்.. அவ குழந்தைடி இந்த வயசுல இப்படி வார்த்தை கேட்கனுமா? அவமானம் படனுமா…? உன்னோட பாஸ்ட் நான் கேட்கல எனக்கு அது தேவையில்ல, நான் சித்துக்கு அப்பாவ இருக்கணும்… ஏன் இந்த கல்யாணத்து ஒத்துக்க மாட்டிகிற? நான் தான் உன் புருசனா உன்கிட்ட  உரிமை எடுத்துக்க மாட்டேன்  சொல்லிட்டேனே. கான்டார்ட் மேரெஜ் பண்ணிக்கலாம் சொல்லிட்டேன், இன்னும் நீ யாரைத்தான் கஷ்டபடுத்தனும் நினைக்கிற…”

” ……….”

” சரி… நீ கல்யாணம் பண்ணிக்க வேணாம்.. ஆனா சித்துவை என்கிட்ட கொடுத்திடு, அவனை நான் வளர்த்துக்கிறேன்.. ஒரு குழந்தைக்கு அம்மா இல்லைன்னு யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க, அதுவே அப்பா இல்லை, அப்பா பெயர் தெரியலைன்னா அந்த குழந்தை எத்தனை பேச்சுகளை பார்க்க வேண்டிய இருக்கும் உனக்கு தெரியாத இந்த சின்ன வயசல அவனை அந்த பேச்சை கேட்கனுமா, நீ சித்தை என்கிட்ட கொடு அவன் நான் அம்மா இல்லாத குழந்தையா நான் வளர்த்துக்கிறேன்…. அப்பாவ நான் இருந்துகிறேன், இருப்பேன்… சித்து இனி என்கூடவே வளர்ந்துகட்டும்… “

” சித்து நீ என் கூட வா, அப்பாவ நான் உன்னை பார்த்துகிறேன், உன்னை வளர்க்கிறேன் வா… ” என்றதும்.. அவ வேகமாக ஜானுவை கட்டிக்கொண்டான்… ” நான் வரமாட்டேன் ஆர்.ஜே எனக்கு ஜானு தான் வேணும் நான் வரமாட்டேன்.. ” அவள் காலை கட்டிக்கொண்டு அழுதான்.

” பார்டி இன்னும் நீ தான் வேணும் நிக்கிறான், அவனுக்கு நல்ல ப்யூசர் கொடுக்கணும் ஏன் யோசிக்க மாட்டிகிற… நான் இந்த விசயத்தை வைத்து அட்வான்டேஜ் எடுத்துகிறேன் நினைக்காத… நான் உன்கிட்ட புருசனா  எப்பையும் இருக்க மாட்டேன், சித்துக்கு ஒரு நல்லா தந்தையா இருப்பேன்..  இதுக்கு மேல உன் இஷ்டம்  ” என்றான்..

தன் மகனை பார்த்து நின்றவள், அவனை தூக்கி முகத்தை துடைத்தவள், ” சித்து, நீ ஆர்.ஜேவ அப்பாவ ஏத்துக்கிறீயா ? அம்மா அவரை கல்யாணம் பண்ணிக்கட்டுமா ? ” என்று கேட்டாள்..

” அப்ப ஆர்.ஜே நம்ம கூட தான் இருப்பாரா ? சிவாளி,வைஷூ அப்பா மாதிரி. ஆர்.ஜேவும் என் கூடத்தான் இருப்பாரா ? என்ன விட்டு போக மாட்டார் தானே. “

” ஆமா… ” தலையாட்டா… ” ஜானு… நீ நான் ஆர்.ஜே ரகு இருப்போமா ? “

” ஆமா… ” தலையாட்டினாள்.. ” அப்ப, என்  அப்பா பெயர் கேட்டா ஆர்.ஜே தான் சொல்லனுமா… ” அதற்கும் தலையாட்டினான்…

” ஆர்.ஜே ” என்றழைக்க அவளருகில் வந்தான், அவனிடம் செல்ல.. ” சாரி… ஆர்.ஜே.. எனக்கு ஜானுவும் வேணும் நீ வேணும். இரண்டு பேரும் என் கூடவே இருப்பீங்களா ? ” என கேட்க..

” உங்க அம்மா ஒ.கே சொன்னா  கண்டிப்ப இருக்கலாம் சித்… இன்னும் உங்க அம்மா ஒ.கே சொல்லல.. ” என்றான்.

” அப்பா… எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம்ன்னு சொல்லுங்கப்பா… நான் அவரை கல்யாணம் பண்ணிகிறேன்… ஆனா கல்யாணம் க்ராண்டா வேணாம். சிம்பிளா ரிஜீஸ்டர் ஆபீஸ் வைச்சுகலாம்ப்பா… ” என்றதும் மூவருக்கும் சந்தோசம் தாளவில்லை..

” ஜானு… ” என அவள் முகமெந்தி முத்தமிட்டார்… இருவரும் அவர் காலில் விழுக, சித்துவும் விழுந்தான்.. ” சித்து கண்ணா.. உனக்கு இது வயசில்லைன்னாலும் என்னால முடியாததை நீ முடிக்க வச்சுட்ட,”

” ரகு.. அப்ப நான், ஜானு, ஆர்.ஜே, நீ கம்பிளீட் பேமிலி தானே… ” என்றான் கட்டைவிரலை காட்டி..

அவரும்  ” ஆமாடா பேரா  ” அதுபோல் காட்டினார்… அடுத்துவந்த நாட்களில் நல்ல நாளில் ஆர்.ஜே ஜானுவின் திருமண நாள் வந்தது,..

வெங்கி பேமலி, ஜகதீஸ் பேமலி, ரகு, க்ரேஸி, பீட்டர், விஷ்வா சூழ இருவரும் கையெழுத்து இட்டு மாலை மாத்திக்கொண்டனர்.. பிறகு தாலியை அவளது கழுத்தில் கட்டினான்..

காதல் கொண்ட மனதில் சிறு வலி இருந்தது, இந்த கல்யாணம் முழுக்க முழுக்க சித்துவிற்காக தான் என்ற எண்ணம் அவன் மனதில் நிலைத்திருக்க, தன் காதல் புதைந்ததை எண்ணி கவலை கொண்டான்.

எல்லாரும் வாழ்த்துக்கள் கூற, குடும்பமாக கோயில் சென்று வந்து மதிய உணவை முடித்து கொண்டு இரவு வரை ஜானுவீட்டிலே இருந்தனர்.. பின் அனைவரும் செல்ல. ரகுவும் சித்தார்த்தும் ஜகவீட்டிற்கு சென்றனர் சக்தி அவளை அலங்காரம் செய்தவள் விட்டு சென்று விட்டாள்.

அந்த வீட்டில் இருவரும் மட்டுமே  தயக்கமாக  இருந்தனர் இருவரும்..

” ஜானு…. இது.. அந்த காண்டாராட் பேப்பர்.. இது எல்லா டீடேய்ல்ஸ் இருக்கும், நீ படிச்சு பார்த்தே சைன் போடு  ” என்றான்

அதைவாங்கி பார்த்தவள், படிக்கவும் செய்தாள். அதை படித்தவளுக்கு அதிர்ச்சிதான்… அவன் முகம் பார்க்க உணர்ச்சி துடைத்து போட்டது போல் இருந்தது..

“இந்த கல்யாணம் சித்துக்காக தானே ஜானு…. உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா இல்லைன்னா தெரியல..அதுனால இத தவிர வேற செய்ய தெரியல… நீ சைன் பண்ணு… ” என்றான்.. எதுவும் கூறாது அழுதாள். அவளை நெருங்கியவன் பேப்பரை நீட்ட அதனை கிழித்து போட்டவள், அவனை அணைத்து அழுதாள்… அவனோ இது நிஜம் தானா கனவா என்று நின்றிருந்தான்..

குறும்பு தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!