என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
அலங்கரிக்கப்பட்ட அவ்விடத்தில் தனியாய் இரவை கழித்துகொண்டிருந்த நிலவுக்கு துணையென்றுமே இருந்ததில்லை,.. தனிதனித்தாய இரவை கழித்த இவர்களோ இன்று சேர்ந்து,இனி வரும் இரவுகளில் ஒன்றாய் கழிக்கவேஇன்றவர்களுக்கு முதலிரவானது…ள்
அலங்கரக்கபடவில்லை எப்போதும் போலவே இருக்கும் இவ்வறை, இன்றேனோ புதினாது அவளுக்கு.
பால்கனியில் வானை வெறித்து நின்றான் ஆர்.ஜே.. அவளை அழைக்க தயக்கத்திலே நின்றாள்… அவனோ திரும்பாது இருக்க, இருட்டில் நின்றிருந்தான், விளக்கை போட்டு அவனருகில் வந்தாள்.
” ஏன் இங்க நிக்கிறீங்க உள்ள வாங்க ஆர்.ஜே…”
” இல்ல, கொஞ்சம் புலுக்கமா இருந்தது , அதான் காத்து வாங்க…” என்றவன் உள்ளே செல்ல கதவை அடைத்தாள். அங்கே அமைதி நிலவ, அவன் நீட்டிய காண்ராக்ட்- ஐ, கிழித்து போட்டவள். அவனை அணைத்து அழுக அது நிஜமா கனவா என்ற நிலையை அறியாது அவளை அணைக்காது நின்றான்.
பின் அவள் விலக, பால்கனிக்கு சென்றுவிட்டான்.. ‘ தன்மேல் கோபமாக இருக்கின்றான் ‘ என்று நினைத்து கொண்டாள்… இருவரும் விலகி இருக்க அவனை அழைத்தாள். இருவரும் உள்ளே வர கதவை தாழிட்டாள்.
“என் மேல கோபமா ஆர்.ஜே… “
“இல்ல ஜானு… ஆனா, ஏன் காண்ட்ராகட் பேப்பரை கிழிச்சு போட்ட புரியலை எனக்கு… நீ சித்துக்காக தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச… அப்ப சைன் பண்ணிருக்கலாமே… “
“உட்காருங்க ஆர்.ஜே… ” என மெத்தையை காமித்தாள். அவனும் அமர, அருகே அமர்ந்தாள். ” நான் சித்துக்காக மட்டும் இந்த கல்யாணத்தை ஒத்துக்கலை, உங்களை எனக்கு பிடிக்கும் ஆர்.ஜே. ஆனால் எனக்குள்ள ஒரு தயக்கம், பயம் இதெல்லாம் சேர்ந்து தான் கல்யாணத்தை பத்தின பயமா என்னை யோசிக்க விடாம செய்தது… என்னை பத்தி எங்க அண்ணனோ, அப்பாவோ சொல்லிருப்பாங்க நினைக்கிறேன், என் பாஸ்ட்- ஜ தெரிஞ்சிருப்பீங்க.. ” என்று நிறுத்தினாள்.
” இல்ல ஜானு, எனக்கு தெரியாது, அவங்க சொல்லுறேன் சொன்னாங்க. நான் தான் மறுத்துடேன், அப்படி தெரிஞ்சக்கணும் அவசியம்ன்ன நீ சொல்லி தான் தெரிஞ்சுகணும் நான் சொல்லிட்டேன்… ” அவள் விழி ஆச்சரியத்தில் விரிந்து அவனை ஒரு நிமிடம் காதலாய் நோக்கியது.
“என்ன பத்தி சொல்லுறேன், ஆர்.ஜே… எல்லா பொண்ணுக்க போல எனக்கு கல்யாண வாழ்க்கை அன்பா, அக்கறை காட்ற மாப்பிள்ளை தான் வேணும்ன்னு எதிர்பார்த்தேன்.. ஆனால் அம்மா முன்னாடியே இறந்துடாங்க… அவங்க இருந்திருந்தா இந்த நிலமை இருந்திருக்குமான்னு தெரியல, அப்பா தான் பார்த்துகிட்டார்.. அப்பா அப்ப ரொம்ப ஸ்ட்ரீட், கொஞ்சம் பயம் இருந்தது அவர் மேல.. எம்.பி.பி.எஸ் படிச்சதுமே, மாப்பிள்ளை பார்த்தார்… தூரத்து சொந்தம்ன்னு சொன்னார்.. அவர் பெயர் சங்கர்… அப்பா பேச்சுக்கு மறுபேச்சு இல்லை ஒத்துகிட்டேன்.. கல்யாணம் முடிந்து அவங்க வீட்டுக்கு போனேன்.
முதல் நாள், எதிர்பார்ப்போடுதான் போனது… ஆனா அவர் ஏங்கிட்ட எதிர்பார்த்தது அது தான் அன்னைக்கே எனக்கு ஏதோ போல இருந்தது.
கல்யாணத்துக்கு முன்னாடி அப்ப, பேசவேணாம் சொல்லிட்டார்,… பேசி புரிந்துகொண்டு ஆரம்பிக்க வேண்டிய உறவு அன்னைக்கு ஆரம்பிக்க, அவர் மேல ஈர்ப்பு வரவே இல்லை, ஒரு டாக்டரா எனக்கு தெரியும் செக்ஸ் அது உணர்வுபூர்வமான விஷயங்களுள் ஒன்னு… அதை நான் உணர்ச்சி இல்லைமா அனுபவித்தேன்… இது இன்னைக்கு ஒருநாள் தான் நினைத்து அந்த வாழ்க்கை சந்தோசம் ஏத்துக்க முடிவெடுத்தேன்..
ஆனா அதெல்லாம் வெறும் கனவு தான் புரிய ஆரம்பித்தது, அவருக்கு எது இஷ்டமோ அதை அவர் செய்துட்டு போயிட்டே இருப்பார்,.. மனைவின்னு மதித்து பகிரவோ கலந்து விசயங்களை கேட்கனும் அவரிடம் இல்லை… கல்யாணம் பெண்களுக்கு புருசன் கூட வெளிய போறது புடிக்கும் அதுவும் தனியா… ஆனா அவர் ஹனி மூனுக்கு ஒத்துக்கலை, வேலை வேலை இருந்தார். அப்படியே வெளிய போகனாலும் ப்ரண்ட்ஸ் பேமிலின்னு வருவாங்க அவங்களோட ஒரு ஆளா போகனும். அது டூரா இருந்தாலும்.. ஒவ்வொரு நாளும் அவருக்காக காத்து இருப்பேன் பேச முயற்சிப்பேன், ஆனால் அவரோ கேம்ஸ், மூவின்னு பார்ப்பார்,நானும் எதாவது பேசுவேன் ஆனா அவரோட கவனம் முழுக்க அதுல இருக்கும்.. எனக்கு ms படிக்க ஆசை பெர்மிசன் கேட்டு படிச்சேன், அதுவும் அப்பா பணம் கட்டினார். சங்கர் கிட்ட கேட்டேன், என்கிட்ட பணமில்லைன்னு சொல்லிட்டார், என்னோட ஆசையை அவர் பொருட்டாவே மதிக்கல, அப்புறம் அப்பா படிக்கவைத்தார்….
ஏனோ தானோ வாழ்க்கை… அப்புறம் வீட்டுல விசேஷம் இருக்கான்னு கேட்க ஆரம்பிச்சாங்க, படிக்கிறதை வைத்து சமாளித்தேன்… இரண்டு வருசம் போச்சு, எனக்காக ஆசையா இதுவரை சப்ரைஸ் பண்ணது இல்லை, நான் பண்ணாலும் அது பொருளோடு பொருளா இருக்கும், ஆனால் அவருக்கு அந்த விசயத்துக்கும் நான் தேவைப்பட்டேன் பல்லை கடித்துகொண்டு இருப்பேன்.. நிறைய இரவுகள் அழுதிருக்கேன், யாருகிட்டையும் சேர் பண்ண முடியலை அப்படியே பண்ணாலும் அவங்க சொல்லுற ஒருவார்த்தை பொறுத்து போ ஏன்னா பொண்ணாச்சே… இரண்டு வருடம் படித்து முடித்து வேலைக்கு போனேன்… மூன்று வருசம் ஆச்சு, சரின்னு அவர்கிட்டையும் என்கிட்டையும் கேட்க ஆரம்பிச்சுடாங்க, அவங்க வீட்டுல எனக்கு தான் பிரச்சினை ஒரு மாதிரி மாமியார் பேச ஆரம்பிச்சாங்க. என் ப்ரண்டோட அம்மா எனக்கு எல்லா டெஸ்ட் எடுத்து பார்த்தாங்க எனக்கு எந்த பிரச்சனை இல்லை பாஸ்டிவ் வந்தது.. அதை அவங்க கிட்ட காமிச்சதும் வாயடைத்து போனாங்க. சங்கரை கூட்டு செக் பண்ண போனேன், அதுவும் அவங்க ப்ரண்ட்ஸ் வற்புறுத்தலில்,
ரிசல்ட் வந்தது, அவருடைய விந்தணுக்குள் குறைந்து இருந்தது, அதாவது குழந்தை பிறக்கிறது தேவையான விந்தணுக்கள் அவர்கிட்ட இல்லை. பொதுவா 15பில்லியன் இருக்கனும் விந்தணுக்கள், அப்படி இல்லைன்னாலும் ஐந்து பில்லியன் இருந்தால் கூட குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கு ஆனால், அவருக்கு ஒரு பில்லியன் தான், வாய்ப்பில்லை சொல்லிட்டாங்க..
அவருக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி பீல் பண்ண ஆரம்பித்தார், நான் துணையாக இருக்கனும், அவருக்கு ஆறுதலாக இருந்தேன், குழந்தையை தத்தெடுக்கலாம் கூட சொல்லி பார்த்தேன், ஆனா அவர் அப்பையும் ப்ரேண்ட்ஸ் சொல்லுறதே கண்ணாக இருந்தார்..
ஒரு குழந்தை தத்தெடுக்கிறது. எங்க குடும்பத்துக்கு அவமானம், என் புள்ளைக்கு அவமானம் பேசினாங்க,. அதற்கும் அமைதியாக கடந்து போனேன்.. யாரோ ஒரு ப்ரண்ட் அவரோட மனசை கலைத்துவிட்டார்.. இப்ப விந்தணுக்களை தானம் செய்றாங்க, அதன் மூலமாக குழந்தை பிறக்கிது,… ஆனால் அவருக்கும் குழந்தைக்கும் சம்பந்தமில்லைன்னு எழுதி வாங்கி தான் அந்தவிந்தணுவ செலுத்துவாங்க…
அந்த விந்தணுக்கள் செலுத்தி குழந்தை பிறக்கச்செய்லாம்ன்னு, வெளியுலகத்து நீ தான் அந்த குழந்தைக்கு அப்பா, உன்னால வந்த குழந்தைன்னு தான் சொல்லுவாங்க உனக்கு குறை இல்லைன்னு யாரும் சொல்ல மாட்டாங்கன்னு. அதை என்கிட்ட சொல்ல முதல்ல மறுத்தேன் இன்னொருத்தருடைய குழந்தையை உங்க பொண்டாட்டிய சுமக்க சொல்லுறீங்கன்னு கேட்டேன், அவருடைய முடிவுல அவங்க பெத்தவங்க அதுக்கு ஒத்துஊத. அதற்கும் சம்மதிச்சேன், IUI ட்ரீட்மென்ட், மூலமாக இன்னொருத்தர் விந்தணுவ, என்னோட கர்ப்பபையில் செலுத்துவாங்க, பதினைந்துநாள் ரெஸ்ட்ல இருந்தேன், எங்க அண்ணன் கல்யாணத்திற்கு கூட போகலை…
அப்புறம் நான் கற்பமானேன்…, அங்க இருந்தா தனிமையை பீல் பண்ணினேன் , அங்க என்னை யாருமே சரியாக கவனிக்கலை, என் கணவர் அன்பாக பேசலை. ஆறுதல் கூட இல்லை, வாந்தி எடுப்பேன் தலையை பிடிச்சு விட கூட ஆள் இல்லை, ரொம்ப கஷ்டபட்டேன், செக்கப் கூட அப்பாவ கூட்டிட்டு போனேன், டாக்டர் ஒரே திட்டு, குழந்தை சுமக்க சத்து இல்லை சொல்லிட்டாங்க…
அப்பா என்னைய வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டார்… ஒரு வீட்டுல இரண்டு கற்பினி பெண்கள் இருக்க கூடாதுன்னு சொல்லி அண்ணியோட அம்மா, அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க, அதுனாலே அண்ணிக்கு என்மேல கோபம், ஆனா , அண்ணாவும் அப்பாவும் அவங்களை பார்த்துக்காம இல்லை… போய் பார்த்துட்டு தான் வருவாங்க..
என்னை பார்க்க தான் அவர் வர மாட்டார்… நான் தான் போன் பண்ணி பேசுவேன்… பத்துநிமிசம் கூட இல்லை அவருடைய பேச்சு,.. அப்புறம் வலைகாப்பு போட்டாங்க, ஏதோ சொந்தகாரங்க வீட்டுக்கு வந்தவங்க போல தான் வந்து போனாங்க. எனக்கு வாழ்க்கையை வாழ பிடியாய் இருந்தது என் குழந்தை தான், அதுக்காக தான் வாழ நினைத்தேன்…
வலி வந்தது, அப்பா தான் சைன் பண்ணார்.. நார்மல் டெலிவரி,தான் அப்ப கூட அவர் வரலை, இரண்டு நாள் கழித்து தான் வந்தார் குழந்தையை தூக்கவே இல்லை..
குழந்தையோடு அப்பா வீட்டுக்கு வந்தேன், மூனு மாசம் இருந்தேன் குழந்தை பார்க்கவே வரலை, அப்பா தான் பேசிவிட்டு போனார்,, இரண்டு நாள் அங்க இருக்க எனக்கு அடுப்புல இருந்தது போல இருந்தது தனியாக தான் குழந்தை பார்த்தேன், பேரன்னு தூக்கவே இல்லை…
அதுக்கு அப்புறம் அவர்கிட்ட நானாவே கேட்டேன் என்ன பிரச்சினை ஏன் குழந்தை கொஞ்ச கூட மாட்டிகிறீங்க..
அது என் குழந்தையே இல்லை எப்படி தூக்கி கொஞ்ச மனசுவரும்ன்னு கூறி என் தலையில் இடியை இறக்கினார். நீங்க சொல்லி தான் குழந்தையை பெத்துகிட்டேன்.. ஆனா இப்ப என் குழந்தை இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம் சத்தம் போட்டேன்,.
எதுவும் பேசலை, இப்ப என்ன தான் பண்ண சொல்லுறீங்க கேட்டேன், குழந்தையை அனாதை இல்லத்தில் விட சொன்னார்.இந்த குழந்தை வேணாம் சொன்னார், இதுவரை பொறுத்துகிட்டேன். ஆனா பத்து மாசம் சுமந்த என் குழந்தையை எப்படி அனாதை சொல்ல, அதுக்கு அம்மா நான் இருக்கும் போது.. முடியாது சொன்னேன், வற்புறுத்துனாங்க, முடியாது நின்னேன்,. டிவோர்ஸ் பண்ணிக்கலாம் சொல்லிட்டார்..
இதுக்குமேல அவருக்கூட வாழந்து எந்த ப்ரோஜனம் இல்லைன்னு டிவோர்ஸ் பண்ணி அப்பா வீட்டிக்கு வந்துடேன்… ஆனா அண்ணியும் குழந்தையை வைத்து இருந்தாங்க, அவங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை… அப்பா என்னை கவனிக்கிறது பாசம் காட்டுறதுன்னு இருக்க, அவங்களுக்கு பொறாமை வந்தது. அவங்க வீட்டுல அவங்க அம்மா அப்பா ஏதோ சொல்லி சொல்லி கொடுக்க, சண்டை வர,நாம தனியாக போலாம் அப்பா அழைச்சுட்டு வந்துட்டார்.
கொஞ்சநாள் அப்பாவோட பென்சன்ல சாப்பிட்டோம், அப்புறம் சித்து வளர ஆரம்பித்ததும் வேலைக்கு போனேன், வாழ்க்கை அப்படியே நகர ஆரம்பிச்சது, நான் , அப்பா , சித், உலகமா இருந்தோம்… அண்ணா அப்ப அப்ப வருவான்…
எனக்கு அப்பா துணை இல்லைன்னா இந்நேரம் என் நிலைமை என்னாயிருக்கும் தெரியலை, அப்புறம் பிரச்சனை வந்தது, சித்தோட ப்ரத் சட்டிப்கேட் வாங்க அப்பா பெயர் என்ன கொடுக்க, அப்பாவே இல்லைன்னு சொல்லிட்டு போன அந்தாள் பெயரை கொடுக்க முடியாது, என் பெயர் கொடுத்தேன் அம்மா மட்டும் தான் சொல்லி என் பெயரை அவன் பெயர் பின்னாடி போட்டேன்… என் முதல் எழுத்தை இன்சியலா போட்டேன்…
அதுனால அப்பா என்னை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டார்.. மறுக்க இதான் காரணம். இரண்டாவது கல்யாணத்தினால, சித்தை ஏத்துபாங்கன்னு என்ன உறுதி.. சித்தை ஒதுக்கி வைத்து எனக்கொரு வாழ்க்கை வேணுமா ? அதான் வேண்டாம் மறுத்தேன்… அந்த ஈஷ்வர் கூட அவனை என்கிட்ட இருந்து பிரிக்க, அவன் சந்தோசமாக வாழ தான் கேட்டான்..
அப்படி எனக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கை வேணான்னு சொன்னேன்… ” என்றவள் ஆர்.ஜேவின் முகம் பார்க்க அழுதிருந்தான்.
” ஆர்.ஜே ? “
“இவ்வளவு கஷ்டபட்டிருக்கீயா ஜானு நீ… மனசளவிலும் உடளவிலும். “
அவள் உதடுகள் மெல்ல விரிந்தது” எல்லா பொண்ணுங்களுக்கு கடைசி வர துணைன்னா அது புருசன் தான், பிள்ளைகள் கூட இன்னொருத்தருக்கு துணையாக போயிடுவாங்க, அப்படி துணையா வர புருசன், எப்படி இருக்கனும் எல்லா பொண்ணுங்களுக்கு கனவு இருக்கு..
அந்த கனவு உடைந்து போகும் போது வர வலி, பிரசவ வலிய விட அதிகமா இருக்கும்., அவ சாகிற வரை உடன் வர துணை, சரியில்லாம இருந்தா,வெளிச்சமில்லாத காட்டு பாதையில போற மாதிரி தான். வழியில்ல நாம தவறாக தவறி விழுகலாம், வேற ஒரு தவறான பாதையில போகலாம்..
துணையிடம் கிடைக்காத அன்பு,சுகம், பாசம், இன்னொருத்தர் கிட்ட தேடி போறதும், தவறான உறவு அது இது. வாழ்க்கை அழிய காரணம் இருக்கு. ஒருசிலரே அதுலா இருந்து தப்பிக்கிறாங்க… பல பெண்கள் வாழ்க்கைவே இழந்து தவிக்கிறாங்க… “
அவன் எதுவும் பேசாமல் முகத்தையே பார்த்தான்.. ” இன்னும் நீங்க கேட்க கேள்விக்கு பதில் சொல்லைல.. ”
“முதல் நீங்க பேசிய போது கோபம் இருந்தது, அன்னைக்கு திடிர் முத்தம், சித்துக்காக நீங்க பேசினது அதிர்ச்சியாவும் அதே சமயம் இது தப்போன்னு பயம் வந்தது, மறுபடியும் ஒரு வாழ்க்கை என்னால ஏத்துகிட்டு வாழமுடியுமா ? எனக்குள்ள பயம் வர யோசிக்க நல்ல முடிவெடுக்க முடியாம செய்தது, அப்புறம் உங்க வாழ்க்கை பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். நான் இன்னொருத்தர் கூட வாழந்தவ, உங்க கூட எப்படி வாழ முடியுங்கற எண்ணம், நீங்க என்னை காதலிக்கிறேன் சொன்னாலும், சித்துக்காக பேசினாலும், நான் சுயநலமா யோசிக்கிறேன் தோணுச்சு..
அதான் உங்களை ஏத்துக்க தடையா இருந்தது, ஆனாலும் உங்களுடைய அந்த குறும்பத்தனும் பிடிக்கும்.., நீங்க சித்துக்காக விட்டுகொடுத்தது, அவனுக்காக கோபப்பட்டு என்னை அடிச்சது, எனக்கு நம்பிக்கை வந்தது.. இருந்தாலும் உங்க வாழ்க்கைக்கு நான் சரியானவளா எனக்குள்ள ஒரு கேள்வி தயக்கம் இருக்கு. சித்துகாக மட்டும் பார்த்து கல்யாணம் பண்ணிக்க நான் சுயநலவாதி இல்லை ஆர்.ஜே உங்களுக்கும் ஒரு நல்ல பொண்டாட்டியா இருக்கனும், இருப்பேன், எனக்கு கொஞ்சம் டைம் கொடுப்பீங்களா ஆர்.ஜே… ” என்றாள்.
சித்துக்கு மட்டும் அப்பாவ இருந்துவிடலாம் என்று தன் காதலை புதைத்தவனுக்கு, இந்த வார்த்தையை கேட்டதும் கூரையை பிரித்து விண்ணையும் தாண்டி இடமிருக்குமானால் அங்கேயும் சென்றிருப்பான் போலும்…
கண்ணீர் வடிய சிரித்தவன், அவள் கைகளை பற்றினான்… ” ஜானு, சித்துக்கு மட்டும் அப்பாவ இருந்திடலாம் இருந்த எனக்கு நீ சொன்னதும் சந்தோசம் தாங்க முடியலடி, என்னை புருஞ்சுகிட்டதே போதும். உன் இஷ்டமில்லாம விருப்பமில்லாம தொடமாட்டேன், நாம நல்ல ப்ரண்ட்ஸ் இருக்கலாம். எப்ப உனக்கு என்மேல முழு நம்பிக்கையும் காதலும் வருதோ, அப்ப நாம வாழ்க்கையை தொடங்கலாம் ஜானு… நிச்சயமா உன் ஆசை படி உனக்கு ஏத்த உனக்கு பிடித்த புருசனா இருப்பேன், ப்ராமிஸ் டி… ” என்றான்.
அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள், அதிர்ந்தவன் அவளையே பார்த்திருக்க, சிறு காதல் பார்வை அவளிடத்தில் கண்டான் அவன்..
குறும்பு தொடரும்..