என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா 31
தன்னை மறைத்து கொண்டு, இருளிற்கு வழிகொடுத்த ஆதவனின் மறைவு நேரம் செவ்வானம் சிவந்திருக்க ஆங்காங்கே பறவைகள் தன்னித்தோடு கூட்டை நோக்கி பறந்து கொண்டிருக்க மாலை நேரம் வந்தது..
சுற்றித்திருந்தவர்கள் வீட்டை வந்து அடைந்தனர்.. சிறு நேரம் ஓய்வெடுத்துக்கொண்டனர்..
சித்துவை புத்தகத்தை எடுத்து அமரச்சொன்னதும் தான் நினைவு வந்தது நாளைக்கு பள்ளி செல்ல வேண்டும் இரண்டு நாள் விடுமுறை மகிழ்ச்சியாய் கழிந்தது.
நாளைக்கு பள்ளிக்கு செல்ல வேண்டுமென்பதே கசக்க, அதுவும் இன்று புத்தக்கத்தோடு அமர சொல்லவது ரொம்ப குஷ்டமப்பா, ரகுவையும் ஆர்.ஜேவை மாறி மாறி பார்த்தவனை பாவமாக பார்த்தனர் ஒழிய ஏதுவும் சொல்லவில்லை.
அவன் அமர்ந்து படித்துக்கொண்டிருக்க, ஆர்.ஜே தனது அறையில் இன்றைய நாளில் எடுத்த போட்டோக்களை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.
சித் மட்டும் தனியாக ஸ்டைலாக நிற்பது போல் எடுத்தவன், ஜானு அறியா வண்ணம் பல போட்டோக்கள் எடுத்திருந்தான் அனைத்தையும் பொன்சிரிப்போடு பார்த்து கொண்டிருந்தான்..
சிவாளி மூலம் தெரிந்து கொண்ட வீட்டு பாடத்தை படிக்கவைத்த பின்னே அவனை விடுவித்தாள்..
” ஜானு,. திஸ் இஸ் டூ மச்..”
” எது டூ மச் மை சன்… “
” இரண்டு நாள் நான் லீவ், ஸ்கூல் டெஸ்ட் வைத்தால் மிஸ் கிட்ட லீவுன்னு சொன்னா வெளிய போய் உட்கார்ந்து படிக்க சொல்லுவாங்க டெஸ்ட் அட்டன்ட் பண்ணனும் அவசியமே இல்லை. நீ தான் என்னை தேவையில்லாம படிக்கிற சொல்லுற, அதுவும் சிவாளிக்கிட்ட, ஹோம்வொர்க் கேட்டு, இது டூ மச் இல்லையா.. “
” மை சன், எனக்கு நீ ப்ராமிஸ் பண்ணிருக்க நல்ல படிக்கிறேன். உனக்கு டூடேஸ் லீவ் ஓவர் பாவம் பார்த்து விட்டேன்… என்ஜாய் பண்ணில, இப்ப படிக்க சொன்ன உனக்கு டூ மச்சா தான் இருக்கும்… நாளைக்கு டெஸ்ட் அட்டன் பண்ற, இல்ல நீ ஸ்கிப் பண்ண, அப்புறம் பார்த்துக்க.. ” என ஒற்றை விரலை காட்டி மிரட்ட,
உதட்டை பிதுக்கி காட்டியவன், ” ஓ.கே ஜானு அட்டன்ட் பண்றேன்… ” என்றவன் சிவாளி வீட்டிற்கு செல்ல,நேரத்தை பார்த்தவள், ” அப்பா, நான் வேலைக்கு கிளம்புறேன் பா.. “
” என்னம்மா பேசுற, வேலைக்கு போறீயா ? நீ முன்னா போல இல்லைஇப்ப மாப்பிள்ளை இருக்கார். நீ ஹாஸ்பிட்டல்ல கேட்டு உன் ட்யூட் மார்னிங் மட்டும் மாத்திடேன்மா.. மாப்பிள்ளை என்ன நினைப்பார்,.”
” ஆனாப்பா அப்படி தர மாட்டாங்க, ரூல்ஸ் ரூல்ஸ் தான்பா, நான் என்ன செய்ய… நான் வேணா அவர்கிட்ட கேட்கவாப்பா… “
” சரிடா, அவர் ஒத்துக்கிட்டா, போமா, அவர் என்ன சொல்றாரோ அதையே கேளுமா… ” என்றவரும் சமையலறைக்குள் செல்ல. இவள் தயக்கத்தோடு அறைக்கு சென்றாள்…
” ஆர்.ஜே…. ” என தயங்கி நின்றாள்.,
” சொல்லு ஜானு…. “
” அது…. எனக்கு இந்த வீக் நைட் டூயூட்டி . இரண்டு நாள் லீவ் போட்டேன். இன்னைக்கு போனும் போகட்டுமா ? “
அவள் தயங்குவது காண வியப்பாய் இருக்க, ” ஏன் ஜானு, இதுக்கு முன்னாடி வேலைக்கு போகும் போதும் தயக்கப்படுவீயா ? “
” இல்லை ஆர்.ஜே..”
” அப்புறம் ஏன் இன்னைக்கு தயக்கம்…? “
” இல்ல, உங்க கிட்ட கேட்கணும்ல… “
” ஒ… நான் புருசன், என்கிட்ட கேட்கணும், நான் ப்ர்மிசன் கொடுத்தால் தான் போகனும்ன்றனால தான் இந்த தயக்கமா…?” என்றதும் தலையாட்டினாள்..
” நான் போக வேணான்னு சொன்ன, வேலையை விட்டுவீயா ஜானு ?” அவன் கேட்க அமைதியாக அவன் முகம் பார்த்தாள்.. ” இங்க வா..” தன் பக்கத்தில் அமர சொன்னவன்..
” இங்க பாரு, நீ எனக்கு மதிப்பு கொடுத்து என்கிட்ட கேட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் வேலைக்கு போறேன் கிளம்பிட்டு சொல்லாம போகட்டுமா கேட்டது, என் வார்த்தைக்கு நீ மதிப்பும், உன் ப்ரசனல் எனக்கு இடம் கொடுத்ததுக்கு தாங்கிஸ் பட், என்கிட்ட தயக்கம் வேணாம், நீ உன் அப்பாகிட்ட எப்படி இருக்கீயோ அப்படியே என்கிட்ட இருக்கலாம்,. தாராளமாக போ, அதுவும் நைட் ட்யூட்டி இருந்தாலும் பரவாயில்லை போயிட்டுவா,.. எப்பையும் போல இரு புதிதா நான் வந்தாலும் உன் கேரியரை என்னால மாத்திக்கனும் அவசியமில்லை ஜானு, நீ போயிட்டு வா.. ஆனால் ப்ரீ இருந்தா மெசேஜ் பண்ணு இல்ல கால் பண்ணு அது எந்த டைம் இருந்தாலும் பரவாயில்லை ப்ளீஸ்… ” என முகத்தை சுருக்கி கெஞ்ச, அவனது கெஞ்சளில் சிரிப்பே வர வாய் திறக்க,
” உனக்கு தாங்க்ஸ் சொல்லனும்ன்னா தாராளமா சொல்லலாம், சித்து ஸ்டைலில் ” என்றதும் மேலும் அவள் அமைதியாக சிரிப்பை அடக்கிகொண்டு அவனை பார்த்தாள்.
” அதான் சொல்லிட்டேனே, உன் கிட்ட, வெட்கம், மானம், சூடு… ” எல்லாம் போனதாய் கைசையில் சொல்ல சிரித்துவிட்டாள்.
” ஆர்.ஜே… “
” சொல்லு ஜானு ” ஆர்வமாய் நெருங்க, ” ட்ரஸ் மாத்தனும் வெளிய போறீங்களா ? “
” இது சொல்ல கூப்பிட்டியாக்கும்.. ” என உதட்டை சுளித்தவன் வெளியே வர கதவை சாத்தி உடையை மாற்றி கிளம்பி வந்தாள்.
அதற்குள் சித்தும் வந்தான்,.. ” ஜானு, வேலைக்கு போறீயா ? “
” ஆமா, சித், உன் அப்பா, ரகு கூட சேர்த்து ஆட்டம் போட்டு லேட்டா தூங்கி காலை ஸ்கூல் போக அடம் பண்ண அவ்வளவு தான்.. சமத்தா சாப்பிட்டு தூங்கனும் சீக்கிரமா ஓ.கேவா ” என்றதும் தலையாட்டினான்… அவன் கன்னத்தில் இதழ் பதிக்க அவனும், பாய் ஜானு இதழ் பதித்தான்.
அவர்களை ஏக்கமாய் பார்த்தான் ஆர்.ஜே அவனது பார்வை உணர்ந்தவள், ” சித், செல்ப்ல என் கர்சீப் இருக்கு மறந்துடேன் எடுத்துட்டு வரீயா ? ” என்றவனை அனுப்பியவள், ” ஆர்.ஜே பார்த்துக்கோங்க நான் வரேன்.. ” என்றதும் சோகமாய் தலையாட்டா அவன் எதிர்பாரா நேரம் முத்தம் கொடுத்து வெளியே சென்றிருந்தாள்.
தன் கன்னத்தை தடவியவாறே சந்தோசத்தில் அமர்ந்துவிட்டான்… ” ஜானு…. ” அவள் இல்லாததை பார்த்து ஆர்.ஜேவிடம் வந்தான். ” ஜானு எங்க ? ” என்றது காதில் விழவில்லை அவனை தன் மடியில் வைத்து முத்தங்களிட்டான்…
பின் மூவருமாக சமைத்து சாப்பிட, சித்தை ஆர்.ஜேவுடன் தூங்க அனுப்பிவைத்தார் ரகு… தன் மகனை தன் மேல் போட்டுகொண்டு கதையளந்து பேசி அவனுறங்க, தனது மொபைலை பார்த்தவாறே அமர்ந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. காலை விடிய, மொபையில் பார்க்க, மெசேஜ்களும் மிஸ்ட் கால்களும் இருந்தது.
‘ அடேய் !! ஆர்.ஜே அவ சரியாத்தான் டா இருக்கா.. நீ ஒழுங்க இருக்காம, மிஸ்ட் கால் மிஸ் பண்ணிட்டீயே !!! ‘ என்றவன் தலையில் அடித்துகொண்டு எழுந்தவன், காலை கடன்களை முடித்து வர. அங்கே ரகு சமைத்துக்கொண்டிருந்தார்..
” மாமா… என்ன பண்றீங்க இங்க ? “
” அதுவா மாப்பிள்ளை துணி துவைக்கலாம் வந்தேன்.. ”
என்றதும் அவரை முறைக்க.. ” பின்ன எதுக்கு மாப்பிள்ளை இங்க வருவாங்க சமைக்கத்தான்.. “
” சரிதான், ஜானுக்கு சமைக்க தெரியாதா ? இங்க உங்க சமையல் தானா ? “
” ஹாஹா.. அவ வந்து சமைக்க நேரமாகும், சித்துக்கு சாப்பாட்டு கொடுக்கனுமே அதான் மாப்பிள்ளை அவனுக்கு சேர்த்து மார்னிங்கே சமைச்சிடுவேன்… அப்புறம் அவளை விட நான் நல்ல சமைப்பேன். தைரியமா சாப்பிடலாம்.. ” என்றார்.
ஆர்.ஜேவிடம் காபியை கொடுத்தார்.. ” தேங்க்ஸ் மாமா… “
” சித்தை யாரு ரெடி பண்ணுவா ஸ்கூலுக்கு… “
” அதுவும் நான் தான் மாப்பிள்ளை “
” அப்ப ஜானுக்கு என்ன வேலை மாமா… ?”
” அவ பாவம் டயர்டா வந்ததும் தூங்கிடுவா, அப்புறம் எங்க துணிகளை துவைத்து காயபோடுவா, மதியம் சாப்பிட்டு தூங்குவா, நான் சித்தை அழைத்து வந்ததும் எங்களுக்கு ஸ்நாக்ஸ் டீ போட்டு தருவா, அப்புறம் சித்தை அமர்த்தி படிக்கவைக்கிறதே பெரும் பாடு அந்த வேலை அவதான் பார்ப்பா, ஒருவாரம் இப்படின்னா ஒருவாரம் அப்படி அவ பார்ப்பா பேசிக்கொண்டே சமையலை பார்த்தவர்.. ” நான் போய் சித்தை ரெடி,பண்றேன் ” என்றவரை, தடுத்தவன், ” நான் போறேன், நீங்க இங்க பாருங்க மாமா.. ” என்றவன்,
சித்தை எழுப்பினான்.. சித்தை அவனே தயார் செய்தான், அவன் கிளம்பி வர, அவனை அழைத்துகொண்டு பள்ளிக்கு சென்றார் ரகு.
அவன் பீட்டரிடம் இன்றைக்கு என்ன என்ன ஸ்கேடுலை கேட்டுகொண்டிருக்க, ஜானுவும் உள்ளே நுழைந்தாள். அவன் மீது கோபம் கொண்டவளாய் முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.
‘ ஐயோ!! மிளகாய் கோபமா இருக்காளே, எப்படி சமாளிக்க போறீயோ ஆர்.ஜே ‘ என அவள் பின்னே நுழைந்தான் ஆர்.ஜே
அவள் குளியலறைக்குள் புகுந்திருக்க, அவளுக்காக காத்திருந்தான்..
அவள் ரெப்ரஷ் ஆகி வந்தவள், அவனை தான்டி சமையலறைக்குள் நுழைந்தாள்..
” ஜானு.. ஜானு…. அது நான் ரொம்ப ரொம்ப நேரமா தூக்கமாத்தான் இருந்தேன்.எப்படி தூங்கினேன் தெரியல சாரி சாரி மிளகாய்…. ” என்றதும்…
” மிளகாயா ? “
தன் நாக்கை கடித்தவன், ” அது உன்னை முதல் முறையா பார்த்ததில நீ என் கூட சண்டை போட்டேல. அப்புறம் என்னை பார்க்கும் போதெல்லாம் முறைச்சுட்டு எரிஞ்சு எரிஞ்சு விழுவ அதான் உனக்கு மிளகாய் பெயர் வச்சேன்.. ” என திருட்டு முழியோடு..
அவனை இடித்தவள் சோபாவில் அமர்ந்தாள்.. அவள் அருகில் அமர்ந்தவன் “சாரி “என்றான் ” சித் சேட்டை பண்ணானா உங்களை டிஸ்சர்ப் பண்ணான்னா, நல்ல தூங்கினீங்களா.. “
” ம்ம்… சமத்தா ஸ்கூல் கிளம்பிட்டான், ம்ம், அழைந்ததுனால தூங்கிடேன். ஆனாலும் நேத்து போல இல்லை… ” என்றான்.
” ஏன் என்னாச்சு.. “
” அது நேத்து நீ இருந்த அதான்…. ” இழுக்க, செல்லமாய் அடித்தாள்.
இங்கோ சித் எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்தான், தன் அன்னைக்கு திருமணம் ஆன காரணத்தால் தனக்கு தந்தை கிடைத்த சந்தோசத்தை பகிற, எல்லாருக்கும் வழங்க, ஸ்ரவனிடம் வந்தவன்.
” சாக்லேட் ” என்றுநீட்டினான். அவனும் ஒன்றை எடுக்க, ” ஷ்ரவன் இன்னொன்னு எடுத்துக்கோ.. ” என்றதும் அவனை பார்க்க..
” உன்னால தான் எனக்கு அப்பா கிடைச்சிருக்கார், நீ அன்னைக்கு பேசாம இருந்து நான் உன்னை அடிக்காம இருந்திருந்தா, எனக்கு அப்பா கிடைச்சிருக்க மாட்டார். அதுனால தான் உனக்கு இரண்டு சாக்லேட் என்றான். என்னுடைய அப்பா பெயர் ராஜேஷ், அவர் ஒரு டான்ஸ் ஹோரீயோகிராபர்,. என்னுடைய பெயர் ஆர்.ஜே சித்தார்த் ஜானவிராஜேஷ். தாங்கியூ ப்ரண்ட்… ” என்று நகர்ந்தான்.
” சூப்பர் பட்டீ… இப்பையும் நீ ஸ்ரவன் மூக்கை உடைத்துட்ட பட்டீ.. ” என்றதும் ஹைபை போட்டுகொண்டனர்.
இங்கோ ஆர்.ஜே அவளுக்கு உதவி செய்தவாறே அவளோடு பேசி அரட்டை அடித்து அந்நாளை கழித்தான். அவர்களுக்கு தனிமை கொடுக்கவே, ரகு, தன் மகன் வீட்டிற்கு சென்று அங்கையே மதிய உணவை முடித்து உறக்கம் போட்டவர், மாலையில் சித்தை அழைக்க சென்றார்.
இன்று நடந்தை சொல்லிக்கொண்டே வந்தான்.. இருவரும் பேசிக்கொண்டே வந்தனர்..” ரகு, ஏன் ஆர்.ஜே வோட அப்பா, அம்மா வரலை மேரேஜ்க்கு… “
” அவங்களுக்கு வேலை சித், அதான் வர முடியலை… ” என்றதும் அவரை முறைத்தவன், “ரகு, உண்மை சொல்லு, ஏன் வரலை அவங்க…?”
” அவங்களுக்கு பிடிக்கலை சித், அதான் வரலை…”
” என்னையும் ஜானுவையும் பிடிக்கலையா ரகு ? ” அவர் பதிலுக்கு பேசாது தலையசைத்தார்..
” ஆனா, ஏன் ரகு, ஆர்.ஜேக்கு பிடிக்கும் போதும், ஏன் அவங்களுக்கு பிடிக்கலை? “
” உனக்கு எப்படி சொல்ல சித், முதல் ஜானுக்கு நீ டான்ஸ் ஆடுறது பிடிக்காது, அதை வேணா வேணா சொன்னால, அப்புறம் உனக்கு பிடிச்சதும் ஏத்துக்கிட்டாளே அதுபோல தான் முதல் அவங்களுக்கு பிடிக்காம இருக்கும் அப்புறம் ஆர்.ஜேவுக்காக உங்களை ஏத்துப்பாங்க சித்…”
“ரகு நாம ஏன் தாத்தா பாட்டிகிட்ட போய் பேச கூடாது… ” என்று பீடிகை போட்டான் சித்…
” எது நாமலா ? நாம போய் எப்படிபேச ? என்ன பேச ? சித்.. அவங்க கோபப்பட்டா என்ன பண்ண ? “
” ரகு,. போறப்போ ! எத்தனை முறை ஜானுகிட்ட திட்டு வாங்கிருக்கோம்… இப்ப புதுசா இந்த தாத்தா பாட்டிகிட்ட வாங்கவோம்…”
” நீ வாங்குடா நான் ஏன் டா திட்டு வாங்கனும்… “
” ரகு… நீ ஜானுவ பெத்தவர், நான் ஜானு பெத்தவன் இரண்டும் பெரும் திட்டு வாங்கி தான் ஆகனும்.. “
” எப்படி சித் இப்படியெல்லாம் பேசுற, இப்ப ஏன் அவங்களை போய் நாம பார்க்கனும்… எதுக்கு ? “
” நீ மட்டும் உன் பொண்ணுகூட இருக்க, நான் அப்பா அம்மா கூட இருக்கேன்.. ஆனா ஆர்.ஜே பாவம் அப்பா அம்மா இல்லாம இருக்கார்.. நாம தானே பேசி சமாதானம் பண்ணனும் இப்ப நீ வருவீயா ? மாட்டீயா ? “
” அடேய் பெரிய மனுசா, வரலைன்ன விடவா போற வா போலாம். எனக்கு இன்னைக்கு என்ன நேரமோ என்ன எழுதிருக்கோ அதானே நடக்கும்.. சரி உன் அப்பா, அங்க டான்ஸ் க்ளாஸ் உனக்காக வெய்ட் பண்ணுவாறே என்ன பண்ணுவ… என்ன சொல்ல போற… “
” அதை நான் பார்த்துக்கிறேன். நீ என்னை அந்த தாத்தா பாட்டிவீட்டுக்கு கூட்டிட்டு போ.. ” என்றவனை போனை வாங்கினான்…
ஆர்.ஜேவை அழைத்தவன், ” ஆர்,ஜே எனக்கும் ரகுவுக்கும் முக்கியமான வேலை இருக்கு அதுனால இன்னைக்கு நாங்க க்ளாஸ்க்கு வர மாட்டோம்.. நாளைக்கு கண்டீனு பண்ணலாம்… ” என்றவன் போனை வைத்தான் அங்கு அவன் பேச வருவதை கூட கேட்காமல்..
” லெட்ஸ் கோ ரகு… ” என்றான்..
‘ இறைவா !!! என்ன நடக்க போகுதோ,. ‘ என்றெண்ணியவாறே அவனோடு நடந்தார்.
குறும்பு தொடரும்…