என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா 33
ஜானு, சித்தை படிக்க வைத்துக்கொண்டிருந்தாள். சித்தும் அமைதியாக அவள் சொல்வதை கேட்டவாறே படித்து கொண்டிருந்தான்.. ஆர்.ஜேவோ தவறு செய்த குழந்தையாய், முகத்தை பாவமாக வைத்திருந்தான்.
அதை கண்டுகாணாதது போல் சித்தை மட்டுமே கவனித்தவாறு ஜானு இருந்தாள்.. தன் தந்தையின் முகத்தையும் தாயின் முகத்தை அவ்வபோது பார்த்து கொண்டு தான் இருந்தான் சித்.
” ஜானு, ஆர்.ஜே வை திட்டுனியா நீ ? ” அவள் காதுக்குள் கிசுகிசுத்தான் சித்.
” இல்லை சித், நான் ஏன் அவரை திட்ட போறேன்…?”
” பின்ன ஏன், சோகமாக முகத்தை வைத்திருக்கார்.. ” அவன் கேட்டதும் தோலை குலுக்கியவள், அவனை படிக்க சொல்லிவிட்டு ஆர்.ஜேவின் முகத்தை பார்த்தாள், அவனோ சோகமாக முகத்தை தொங்க போட்டுகொண்டு செல்லின் திரையை பார்த்தவாறு அமர்ந்தான்.
விளையாடிக்கொண்டிருந்த, இருவரும், வாதம் செய்ய, அவனது இழுப்பில் அவன் மேல் சரிந்தாள். இருவரது இதழும் நூலளவு இடைவேலை கொண்டிருந்தது, அதை குறைக்க அவன் முன்னேற, அவனது எண்ணம் புரிந்தவள், விழிகளை மூடினாள்… அவளிதழை நெருங்கியவன், என்ன நினைத்தானோ அவளை விட்டு விலகிநின்றான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.. ” சாரி, ஜானு நான் தான் ஓவரா அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன். சாரி இனி இப்படி நடக்காது ” என்றவன், சிதறிய முத்துக்களை எடுக்கலானான். அவளும் எதுவும் கூறாது முத்தினை பொறுக்கினாள்..
திடிரென்ற அவனது விலகல், செடியில் மென்மையாய் படர்ந்திருந்த பூக்களை வன்மையாய் பறித்ததை போல தான் இருந்தது. அவனிடம் இணைய நினைப்பவளுக்கு ஏனோ அவனது விலகல், தனது தவறை அவளுக்கு உணர்த்தியே செல்கிறது…
அவனிடம் கேட்ட அந்த நேரங்கள்
அவள் மறக்கலானாள், அவனோ நினைவுட்டலானான்.. இவ்வாறே இருவரிடையே ஓடிக்கொண்டிருக்க, அவளோ முகத்தை திருப்பிக்கொண்டாள்.
‘ இப்ப நான் என்ன பண்ணிட்டேன் இவ முகத்தை திரும்பிட்டே போறா, இவ தானே டைம் வேணும் கேட்டா, அதுக்கு தானே விலகினேன்.. ஒருவேளை, விலகுனதுக்கு கோச்சுட்டு போறாளா, நெருங்கினதுக்கு கோச்சுட்டு போறாளா, அடியே மிளகாய் ! உன்னை என்னால புருஞ்சுக்கவே முடியலை டி..’ என நினைத்துகொண்டான்.
அதன் பின் அவன் பார்க்கும் பொழுதெல்லாம் இதழை சுளித்துகொண்டும் முகத்தை திருப்பிக்கொண்டும் தான் செல்வாள்.. உணவு அருந்தும் போதும். சிறு குழந்தை போல வேடிக்கையாக இருக்க வெகுவாய் அதை ரசிக்கவும் செய்தான். உறங்கச்செல்ல அவளருகில் படுத்துகொண்டவன், கைகூப்பி மன்னிப்பை வேண்டினான்..
இம்மியளவு இல்லாத கோபத்தை இருப்பது போல் காட்டுவது பெண்களில் கைவித்தைகளில் ஒன்று தான். திரும்பி படுத்துகொண்டாள், அவளுறங்க நினைத்தவன் ஏதும் சொல்லாது உறங்கவிட்டான். எழுந்த பின்னும் அவ்வாறு இருக்க அவனுக்கு தான் பெரும்பாடாய் ஆனாது.
டான்ஸ் க்ளாஸ் சென்று சித்திற்கு சொல்லித்தவன் அவனோடு வீடு வந்தான். அவளை சமாதானம் செய்ய, மனமிறங்கினாலும் மூளை அவனை வைத்து செய் என்று அவளை அதிகாரம் செய்து கொண்டே இருந்தது.
” சித்து, டெர்ம் எக்ஜாம் வருது அதுலையும் கான்சன்டெரசன் இருக்கணும் நல்ல மார்க் எடுக்கிறேன் சொல்லிருக்க… ” என்றாள்
” சரி ஜானு… நான் நல்ல மார்க் தான் எடுப்பேன் ” என்றவன் வழக்கம் போல வெளியே செல்ல, அவன் செல்ல காத்திருந்தவன்… அவள் கிளம்ப அறைக்குள் செல்ல உள்ளே சென்றான்..
“ஜானு, என்னடி கோபம் என்மேல, எனக்கு புரியவே இல்லை… நான் விலகினது தப்பா, இல்லை நான் நெருங்கினது தப்பா… ஏன்டி முகத்தை திருப்பிட்டே போற. கஷ்டமா இருக்கு ஜானு, என்ன தப்பு பண்ணினேன் புரியலடி சொல்லு ஜானு, நான் திருத்திக்கிறேன் என்கிட்ட இப்படி பேசாம இருக்காத ? ” என்றதும் அவளால் தாங்கிட முடியாமல் அவன் நெஞ்சில் முகத்தை மறைத்து சாய்ந்துகொண்டவள் விசும்பினாள்.
” என்மேல தான் தப்பு ஆர்.ஜே. உங்ககிட்ட நான் டைம் கேட்டது தான் தப்பு.. உங்க நெருக்கம், உங்க பேச்சு, உங்க அருகாமைக்கு நான் பழக்கிக்க ஆரம்பிச்சுடேன். நீங்க விலகினது எனக்கு என் தவறை உணர்த்துச்சு, எனக்கு நீங்க வேணும் மூளையும் மனதும் ஒருசேர கேட்கிது ஆனாலும் ஒரு பக்கம் பயமாருக்கு ஆர்.ஜே என்னால முடியல, சாரி ஆர்.ஜே… ” என அவள் அழுதாலும் அவள் பேசிய வார்த்தைகள், இதுவரை இருந்த தவிப்பை போக்கி ஏ.சி போட்டதை போல் உள்ளே சில்லென்று இருந்தது… அவள் அழுவது கஷ்டமாகவும் இருந்தது.
” ஜானு ஜானு… என்னை பார் டி.. ஜானு, ” என அவள் முகத்தை கையில் ஏந்தியவன்.. ” உன் நிலமை புரியுது டி, இன்னும் உன் மனசு மாறினாலும் உனக்கு நடந்த சம்பவங்கள் உன்னை மாறாமல் தடுக்க இழுத்து பிடிச்சிருக்கு, அந்த தயக்கமெல்லாம் சீக்கிரமா காணாம போகும்… அந்த தயக்கம் மட்டுமே உன்னையும் என்னையும் சேரவிடமாட்டிக்கிது.. கண்டிப்பா உனக்காக காத்திருப்பேன். ஆனால் ப்ளீஸ் டி இந்த முகத்தை திருப்பிட்டு போற வேலை வேணாம்.. நான் எங்க அம்மா அப்பாவிட்டு வந்தாலும் இன்னும் சந்தோசமா இருக்கேனா அதுக்கு இந்த முகம் தான் காரணம் ப்ளீஸ் இப்படி திருப்பிட்டு போகாதடி.. ”
என்றான்.
” எனக்கு உங்க மேல கோபம் இல்ல ஆர்.ஜே, நீ கெஞ்சுறது பிடிச்சிருக்கு, அதான்,.. ” என்றாள் அவனது வெட்டும் பார்வையில் பெண்ணவள் வழிந்தாள்,.
” சாரி… ஆர்.ஜே ” என மீண்டும் அவனது நெஞ்சில் புதைந்து கொள்ள, ” மிளகாய் மொத்தமா நீ பண்றதுக்கெல்லாம் கணக்கு இருக்கு, நீ என்கிட்ட மாட்டாமலை போவ ” என்றவனுக்கு பழிப்பு காமித்தவள், ” சரி சரி நான் கிளம்பனும் வெளிய போங்க… ” என்றாள்.
” சரி சரி… போறேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சின்ன தாங்க்ஸ் கிடைக்குமா ? “
” அதெல்லாம் சொல்ல முடியாது கிளம்புங்க… ” என அவனை தள்ளிக்கொண்டு வாசலில் நிறுத்தியவள் மீண்டும் இதழை சுளித்துகாட்டி கதவை சாத்தினாள்..
” அடியே ! அந்த சுளிக்கிற உதடுக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் இருக்குடி பாரு என்ன பண்றேன்னு.. ” கதவருகே நின்றுகொண்டு கத்தினான், அவளோ சாய்ந்துகொண்டு சிரிக்கலானாள்.
இவன் இங்கு கத்த சித் வந்து நின்று அதை கேட்டுகொண்டுருந்தான்..
” எதுக்கு ஜானுவோட லிப்ஸ்க்கு நீ பனிஷ்மெண்ட் தர போற ஆர்.ஜே.. ” என கேட்டவனிடம் என்ன சொல்லி சமாளிக்க என விழித்தவன்.. ” சித் உன்னை படிக்க சொல்லிட்டே இருக்குல அது, அதான் தண்டனை தரலாம்ன்னு… “
” எஸ் ஆர்.ஜே கண்டிப்பா கொடுக்கணும், நானும் கொடுக்கிறேன்.. “
” ஐயோ !! நீ கன்னத்தில கொடு… நான் லிப்ஸ்ஸை பார்த்துகிறேன்… ” என்று சமாளித்தான்…
” படிக்க சொன்ன இரண்டு பேரும் தண்டனை கொடுப்பீங்களா ? ” என்று கேட்டு வந்து ஜானுவிடம் இருவரும் ஒருசேர இளித்து வைத்தனர்.. வழக்கம் போல அட்வைஸ் முத்தம் சித்திற்கு கிடைக்க பாவம் அந்த பெரிய குழந்தைக்கு அட்வைஸ் மட்டுமே கிடைத்தது… கன்னத்தை தடவிக்கொண்டே நின்றான், அவள் விழி சித்தை காட்ட.
” சித்து குட்டி… ” என்றதும், ” என்ன கர்சீப் எடுத்து வரனும் அதானே, நான் எடுத்துட்டு வரதுக்குள்ள ஜானு போயிடுற நான் எடுக்கமாட்டேன்.. ” என்றான் வீம்பாய்..
‘ ஐயோ சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்குதே.. அடேய் இப்ப தான் இறங்கி வந்தா நோக்கு பொறுக்கலையா ? ‘ என்றவன் எப்படி சமாளிக்க என யோசிக்க அவளுக்கோ நேரமானது..
” இல்ல சித்து கண்ணா உள்ள போய் எதாவது கேம்ஸ் எடுத்துட்டு வாயேன் விளையாடலாம்.. ” என்றான் ஆர்.ஜே அவனது முகத்தையும் ஜானுவின் முகத்தை பார்த்தவன் என்ன நினைத்தானோ உள்ளே சென்றான். அவன் சென்றதும் வேக எட்டில் நெருங்கி இருந்தான்.. அவளிடம் தேங்க்ஸ் பெற்று கொண்டான்.
“உங்களுக்கு தூக்கம் வந்தால் தூங்குங்க ஆர்.ஜே, எனக்காக நீங்க முழிச்சிருக்க வேணாம். “
” எனக்கு தூக்கத்தைவிட என் ஜானுகூட பேசுறது தான் முக்கியம்.. அதெல்லாம் நீ வொரி பண்ணிக்காத நான் பார்த்துக்கிறேன்.. “
” இப்படிசொல்லிட்டு தூங்குங்க அப்ப இருக்கு… “
” ஆர்.ஜே ஒருவாட்டி தான் அந்த தப்ப பண்ணுவான்… ஓராயிரம் தடவை இல்ல, அதையே சொல்லிகாட்டாம மேடம் போன் பண்றதை மறக்காதீங்க.. ” என்று அவளை அனுப்பிவைக்க, சித் செஸ்ஸோடு வந்து நின்றான்..
‘ இவனை வச்சுக்கிட்டு ஒரு ரொமான்ஸ் பண்ண முடியுதா ? ‘ என நொந்தவன் அவனோடு விளையாட்டில் சேர்ந்தான்.. ” என்ன செய்ய, நாகரிகம் கருதியோ குழந்தைகள் இருப்பதால் சில முத்தங்களும் கொஞ்சகளும் தலைமறைவானது…
அடுத்து வந்த நாட்களெல்லாம் வழமை போலவே செல்ல, சித்துவிற்கு அடுத்த லெவல் காம்பெடிசனும் வந்தது.
எவ்வளவு அழைத்தும் வர மறுத்தான் ஆர்.ஜே, தன்னால் சித்துவின் ஆட்டத்திற்கு எந்த இடையூறு வரக்கூடாது என்று மிகத்தெளிவாக இருந்தான்..
விஷ்வாவை மட்டுமே உடன் அனுப்பிவைத்தான்.. சித்துவிற்கும் அவனது சூழலை தெளிவாக புரியவைத்தான்.. இது தன்னால் தானோ என்ற குற்ற உணர்வையும் அழகாய் எடுத்து சொல்லி ஜானு மனதிலிருந்து போக்கினான்.
அன்றைய ஆட்டப்போட்டியில் ஒருவரை எலிமினேட் செய்திருந்தனர். சித்துவின் ஆட்டத்தால் டி.ஆர்.பி உயர்ந்தது அந்த சேனலுக்கு, சித்துவின் ஆட்டம் பலரையும் கவர அவனுக்கு வீட்டு இல்லத்தரசிகள் எல்லாரும் ஃபேன் ஆனார்கள்.
அன்றைய நாள் முடிய மறுநாள் அங்கே அந்த அப்பார்ட்மெண்ட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடினர்.
சிறு சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணன் இராதை வேடமிட்டிருந்தனர்.
அந்த அப்பார்மென்ட் வளாகத்தில் பெரியதாய் கிருஷ்ணன் சிலை இருக்க அதற்கு அலங்காரம் செய்திருந்தனர். கிருஷ்ணன் பாட்டே எங்கும் ஒலித்துகொண்டே இருந்தது.
வீடுகளில் விதவிதமாக செய்த பலகாரங்களை கிருஷ்ணன் முன் வைத்து வேண்டினர். மொத்த அப்பார்மெண்ட் மக்களும் ஒன்னு கூடி சிறப்பாக கொண்டாடினர்.
பின் சாமி கும்பிட்டு முடித்து அனைவருக்கும் பிரசாதம் தந்தனர். மேடை அமைத்து சிறு சிறு குழந்தைகளை ஆடவிட்டு மகிழ்ந்தனர். அவர்களின் கவனம் சித்தின் மேல் திரும்பியது அவனை ஆட அழைத்திருந்தனர்..
வெங்கி ஜானுவையும் இதில் மாட்டிவிட்டான்.. அவளுக்கு பரதம் தெரியும் என்று சிறு தீயை கொழுதி போட அவளையும் சித்தையும் கிருஷ்ணன் பாட்டிற்கு ஆட சொல்லி வற்புறுத்தினர் அம்மக்கள்.
முதலில் தயங்கியவள் ஆர்.ஜேவுக்கும் அவளது பரதநாட்டியத்தை பார்க்க பெரும் ஆசை எழவே அவனும் வற்புறுத்திட இருவருமாக மேடையெறினர்..
ஜீன்ஸ் அணிந்திருந்த கிருஷ்ணனான் சித்தார்த்.. தலையில் துண்டை கண்டியவன் மயிலறை சொறுக்கிகொள்ள லேட்டஸ் கிருஷ்ணனாய் நின்றான். புடவையில் யசோதாவானாள் ஜானு…
வெளியே ஊர் சுத்திட, தன் தாயிடம் வேண்டி நிற்க, அதற்கு யசோதா வெளியில் நடப்பதை கூறி தடுக்க, பதில் நம் கிருஷ்ணனும் வெளியே செல்ல அடம்பிடிப்பதாக இப்பாடல் இருக்கும்..
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னே
போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே
காச்சின பாலுதரேன் கல்கண்டு சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன் வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம்)
காச்சின பாலும் வேண்டாம் கல்கண்டு சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)
யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உன்னை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னே)
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மே
கள்வர் வந்து என்னை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)
கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

காட்டு மிருகங்கள் எல்லாம் என்னை கண்டால் ஓடி வரும்
குட்டம் குட்டமாக வந்தால் வேட்டை அடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)
பாசமுள்ள நந்த கோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே)
பலருடன் விதியிலே பந்துஅடுரன் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)
அழகாய் இருவரும் ஆடிட அசந்தே போய் விட்டனர் அம்மக்கள். அந்த அப்பார்மெண்ட்டே பிருந்தாவனமாக, அதில் யசோதையாக ஜானுவும், கிருஷ்ணனாக சித்துவுமே மனதில் பதிந்தனர்.
தனக்கு ஈடாய் ஆடிய மகனை கண்டு பூரித்து போனவள், அவனை அள்ளிக்கொண்டு முத்தங்களிட்டு தனது சந்தோசத்தை காட்டினாள்..
இருவரது ஆடலை கண்ட ஆர்.ஜேவோ ஒருகண்ணில் காதலும் மறுக்கண்ணில் அன்பு பணிக்க, அவர்கள் அருகினில் வந்தான்.. கிருஷ்ஷை அவளிடமிருந்து தூக்கி கொண்டு கொஞ்சினாலும் பார்வை முழுதும் ஜானுவிடமே இருந்தது, அவளை பாராட்ட வில்லை என்றாலும் காதல் பார்வையில் கூறிவிட்டான். அவளும் அதனை புரிந்துகொண்டாள்..
வெகு விமர்சியாக கொண்டாடினர் அன்றைய தினத்தை..
அடுத்து நாட்கள் செல்ல, சித்திற்கு பள்ளியில் டெர்ம் எக்ஜாம் நடக்க இருந்தது. பாவம் ஜானு நொந்து போனாள்.. இருப்பினும் ஷ்ரவனின் கேலி பேச்சுகள் வர தன்னால் முடிந்தளவு படிக்க ஆரம்பித்தான்…
அன்றைய நாள் ஆசிரியர் தினம் என்பதால் தனக்கு பிடித்த ஆசிரியை க்ரேஸிக்காக வழக்கம் போல அவனது கைவரிசையால் அழகாய் க்ரிட்டிங் கார்ட்டையும் மிக நேர்த்தியாக செய்தவன், ரகுவோடு பள்ளிக்கு வரும் வழியில் ரோஸ் ஒன்றையும் வாங்கி வந்தான்.
அவன் வருகிற நேரம் சரியாக பீட்டர், க்ரேஸியை இறக்கிவிட்டான் பள்ளியில்..
” ஹாய் பீட்டர் அங்கிள், குட்மார்னீங் க்ரேஸி மிஸ் ” என்றான்.
இருவரும் ஒருசேர வரவேற்றனர்.. ” மிஸ், ஹாப்பி டீச்சர்ஸ் டே ” என்று ரோஸ்ஸையும் அட்டையும் கொடுக்க அகமகிழ்ந்தாள் க்ரேஸி..
” வாவ் !! தாங்கியூ சித்.. ரொம்ப அழகா செய்திருக்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சித், தாங்கியூ சோ மச்.. ” என நெற்றியில் இதழ் பதித்தாள்..
பீட்டருக்கோ ஏக போக கடுப்பு பொறாமை.
” இன்னைக்கு டீச்சர்ஸ் டேக்கு விஷ் பண்ணியா நீ… பாரு அவன் எவ்வளவு அழகா க்ரிட்டிங் கார்ட் கொடுத்து விஷ் பண்றான்..”
” அவன் ஸ்டூடன்ட் உனக்கு விஷ் பண்றான், நான் உன் ஸ்டூடன்ட் இல்லை மா… ” என்றான் பீட்டர்.
” இருந்தாலும் நான் டீச்சர் தானே விஷ் பண்ணாதான் என்னவாம்.. ”
” சரி , ஹாப்பி டீச்சர்ஸ்டே ” என கைக்கொடுக்க,
அவனை முறைத்துவிட்டு சித்தை அழைத்துகொண்டு சென்றாள். சித்தோ, பீட்டரை திரும்பி பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான்..
‘ அடபாவி சித்.. நீ இந்த கதைக்கு ஹீரோ தான் அதுக்காக, என் ரோலையும் நீயே பண்றீயே டா உனக்கு அடக்குமா, என் ஆளுக்கு ரோஸ் கொடுக்கிறான். அவ அவனுக்கு முத்தும் கொடுக்கிறா, இதெல்லாம் லவ்வாரா என்னை பார்க்க வைக்கிறீயே கர்த்தரே !!! …. ‘ என புலம்பிக்கொண்டே அங்கிருந்து சென்றான்…
குறும்பு தொடரும்..