என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா

திங்களிலிருந்து தொடங்க இருக்கும் தேர்வுக்காக… சித்தை அமர்த்தி முதல் பாடமான தமிழைப் படித்து ஒப்பிக்க வைப்பதென்பது எருமைமாட்டை மழையிலிருந்து ஓரங்கட்டுவதும் ஒண்ணுதான்…. முழுபாடத்தையும் முடிக்கும் வரை ஜானுவிற்கு போதும் போதும் என்றானது….. ஆங்கில வழி கல்வியை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்   என்றுமே எதிரியை போலத்தான் ஒவ்வொரு முறை தேர்வில் அதை கொன்றுவிடுவிட்டு வருவது வழக்கம். முதலில் வாசிக்க தடுமாறி பின் அதை பிழையோடு கொன்று  பேப்பரில் தூக்கிலிட்டு வரும் நிலையானது.. தமிழ்நாட்டில் இருந்தும் தமிழ் வழி கற்காத மாணவர்களின் நிலை இதுவே… அவனை படிக்கவைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்து தோசை வார்த்தாள் இருவருக்கும்

இருவரும் தொலைகாட்சியைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர்… ரகு எதார்த்தமாக சேனலை மாத்தும் போது கண்ணில் சிக்கியது அந்த விளம்பரம்.. அவர் மாத்த, ” ரகு இதுக்கு முன்னாடி வந்த சேனலை போடு  ” என்றான்.
அவரும் மாத்தினார்..
அதில்…

நீங்களும் ஆகலாம் லீட்டில் டான்சர் என்றொருவள் கூறி விரைவில் என்று அந்த விளம்பாரம் பாதியாக முடிந்து போனது… சித் கண்கள் பளிச்சிட்டது.  அவனை கண்டுகொண்ட ரகுவோ தன் பேரனின் எண்ணத்தை யூகித்தார்.

” ரகு.. நான் இந்த டான்ஸ் ஷோ ல கலந்து கட்டுமா ? “

கிட்சனில் தன் மகளுக்கு கேட்டு விட்டதோ என  பதறி எட்டிபார்க்க, அவள் தோசை ஊற்றுவதில் குறியாக இருந்தாள்..

” சித்… என்ன பேசுற நீ ? உன் அம்மாவுக்கு நீ டான்ஸ் ஆடுறதே பிடிக்காது. இதுல காம்படிசன் கலந்துகட்டுமான்னு கேட்கிற… ?ஏற்கனவே நீ படுத்துனதுல ஃபுல் பார்ம்ல இருக்காள். இப்ப இத நீ கேட்ட, அவளோதான் அவ ஆடிடுவா… நோ சித்..”

” ரகு…. இன்னும் டேட் சொல்லலை அதுக்குள்ள நாம ஜானுவ பேசி கன்வீயன்ஸ் பண்ணலாம்”

” எனக்கு என் மக இதுக்கு ஒத்துக்குவான்னு, பாய்ண்ட் ஃபைவ் ப்ர்சண்ட் கூட நம்பிக்கையில்லை… இந்த டாபிக் இப்படியே விட்டுட்டு இல்லைன்னா, அல்ரெடி நீ படுத்தியெடுத்த கோபத்தையெல்லாம் நீ கேட்டதும் காட்டிடுவா… நோ சித்…”

” ஆனா, ரகு…. எனக்கு டான்ஸ் பிடிக்கும் உனக்கு தெரியும்ல. இந்த மாதிரி ஷோ கலந்துகணும் ஆசை … ப்ளீஸ் ஹேல்ப் மீ ரகு…!”

” சாரி டா பேரா… இதுல உனக்கு ஹேல்ப் பண்ணி… உங்க அம்மாகிட்ட, உன்னோட சேர்த்து என்னையும் திட்டுவாங்க வைத்திடாதே! “

” ரகு…..” என இழுக்க, ஜானு வந்து அமர்ந்தாள்.

” என்ன ரகு ?… உங்க பேரன் என்ன கேட்கிறான்ப்பா…?”

” ஒன்னும் கேட்கலம்மா… நாளைக்கு ஸ்கூலுக்கு போகிறப்ப எக்ஜாம்க்கு பென் வாங்கி கொடுன்னு கேட்டான்ம்மா..”

” ஏன் ஏன்…. எங்க உன்கிட்ட பென் இல்லையா ? “

” இருக்குமா, இருந்தாலும் இன்னொன்னு வச்சிக்கிறது நல்லது தானே.. நான் போகும் போதும் வாங்கிகொடுக்கிறேன் சித்… ” என்றார் கண்ணால கெஞ்சி விட்டு, ஆனால் அவனோ முறைத்துகொண்டிருந்தான்.

தன் அன்னையை புரிந்து வைத்த மகனென்றாலும் ஆசையென்று வரும் போது, மனம் ஏங்கத்தான் செய்யும்.. இதுவரை அதுவேண்டும் இதுவேண்டும் கேட்காதவன்… அடம் பண்ணியது இல்லை தான்.. ஆனால் டான்ஸ் என்று வரும்  போது அடம் பண்ண தான் துடிக்கிறது. ரகுவிற்கோ  தன் மகளை பற்றி தெரியும் ஒன்று பிடிக்கவில்லை அதை திரும்பி  கூட பார்த்திடமாட்டாள். அதை பற்றி வேறொருவர் பேச்சை எடுத்தாலும் அதை கேட்கவோ அதை வற்புறுத்துவதையே அவள் விரும்ப மாட்டாள்… அப்படி தான் மகனின் இந்த டான்ஸ்ஸூம்… அவளுக்கு டான்ஸ் பிடிக்காது, அவனுக்கு டான்ஸ என்றால் உயிர்… இதில் மற்றும் நேர்மாறாக இருவரும் இருக்கின்றனர்.

எங்கே டான்ஸ் என்று மகனின் கவனம் சென்றால். கொஞ்சம் நஞ்சம்  படிப்பிலிருக்கும் கவனம் கூட சென்றுவிடும்  என்பது அவளது எண்ணம். அதனால் அவனை ஆடக்கூடாது என்பாள்… அவ்வப்போது அவள் இல்லாத நேரம் ஆடி மகிழ்வதோடு சரி அதன் பின் ஆடவே மாட்டான். ஜானு இருந்தால் ம்க்கும் அமைதியாக இருப்பான்…. பள்ளியில் கூட ஆறாம் வகுப்பிற்கு மேல் டான்ஸ் க்ளாஸ் நடக்கும் அதை பார்த்தவாறு நிற்பவனுக்கு க்ளாஸ் கட்டடித்திருப்பது மறந்து போய் விடும்…பின் சூர்யா தான் வந்து அவனை அழைத்து செல்வான்… சைன்ஸ் மிஸ்ஸோ மேத்ஸ் மிஸ்ஸோ அவனிடம் காரணத்தை கேட்டாள்.. யாரோ பாத்திரூமில் அடைத்துவிட்டார்கள் சூர்யா திறந்ததும் தான் வந்தேன் என்று பொய்யுறைக்க சூர்யாவும் ஆமாமென்பான் தோழமைகள் அல்லவா.. இப்படியே ஏதாவது பொய் கூற அதற்கு அவனும் உடந்தை தான்… இவ்வாறு ஆடல் என்றால் அவனின் கவனம் அதை தவிர எதுவும் நினைவில் இல்லாது போலாகிடும்…. இவ்வாறு இருக்க எப்படி ஒத்துக்கொள்வாள்… அவளுக்கு கோபம் வந்து சித்துவை அடித்துவிடுவாள், இவனும் ஏதோ ஏதோ கேட்டுவைப்பான் இருவருக்கும் மனக்கஷ்டம்,தான்  இருவரும் கஷ்டபடுவத்தை தன்னாலும் பார்க்க முடியாத எண்ணம்  அவருக்கு அதனால் தான் வேண்டாம் என்று மறுக்கிறார், இவனோ அடம் பிடிக்கிறான்…

” சரி சரி…. இங்க பாரு டீ.வி ஆப் பண்ணிட்டு, சீக்கிரமா தூங்கி எழுந்திருக்கணும், நாளைக்கு எக்ஜாம் இருக்கு காலை இயர்லியரா எழுந்து உட்கார்ந்து படிக்கிற. நான் தாத்தாகிட்ட வீடியோ கால் போட்டு கேட்பேன்.. நீ தூங்கிறேன்னு தெரிஞ்சது அவ்வளவு தான் சித்…” என்று மிரட்டினாள்.

” அதான் எல்லாத்தையும் கம்ப்ளீட்டா ப்னீஸ் பண்ணிடேனே.. அப்புறம் ஏன் இயர்லியரா வேக் அப் பண்ணணும்…?”

” சித்… நீ எந்த கேட்டகிரின்னா, ஒரு க்வ்ஸ்டின் கேட்டுட்டு அடுத்த க்வ்ஸ்டின் படிச்சு ஒப்பிச்சதும் முதல் க்வ்ஸ்டினோட ஆன்ஸ்ரை மறக்கிற கேட்டகிரி.  இப்ப புக் எடுத்து கேள்வி கேட்டா.. நீ அன்ஸ்ர் பண்ணுவீயா? முழிக்கிறத தவிர உனக்கு ஒன்னுமே தெரியாது சித்… !அதுக்கு தான் திரும்ப வாசிச்சா தான் உனக்கு கொஞ்சமாதும் மண்டையில நிக்கும் அதுக்குதான் ஒ.கேவா.. ” என்றவள் வேலைக்குச் செல்ல தயரானாள். இருவரும் அமைதி மானாநாடாய் அமர்ந்திருந்தனர்.

” ஒ.கேப்பா பார்த்தக்கோங்க, சித் சீக்கிரமா தூங்கு “

” சரிம்மா, நான் பார்த்துக்கிறேன் நீ பார்த்து கார் ஓட்டிட்டு போமா. அங்க ரீச் ஆனதும் போன் பண்ணு ” என்றார்.

” ஒ. கே பாய்ப்பா பாய் சித்.. ” என்றவள் கிளம்பிட, அவர் கதவைத் தாழிட்டார்.

இருவரும் படுக்க மெத்தையை சரி செய்தவர், பக்கத்தில் தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு சித்துவைத் தேடிச்செல்ல, அவன் அமர்ந்த இடத்திலே அமர்ந்திருந்தான்… ‘ எல்லா நாளும்  நல்லத்தான் இருக்கான், இந்த டான்ஸ் வரும்போதும் மட்டும் இவனுக்கு என்னதான் ஆகுமோ..’

” சித் வா தூங்க போலாம்… ”
என்றவரை ஏக்கமாய் பார்க்க… ‘ இப்படி பார்த்தா மட்டும் இறங்கிடுவோமா.. இந்த முகத்தை உங்க அம்மாகிட்ட  காட்டுறது.. அங்கெல்லாம் விட்டுட்டு, என்கிட்டையே முகத்தை காட்டிறது முழிய காட்டிறது ‘ தனக்குள்ளே நொடித்துகொண்டவர். அவனை அள்ளிக்கொண்டு பெட்டில் கிடத்தி அருகினில் படுத்துகொண்டார்.

அமைதியாக விட்டத்தை வெறித்தான். அதே விளம்பரம்  மனதிற்குள் ஓடியது ” ரகு…” அவரது தோளை சுரண்டினான்.

” சொல்லு சித்…”

” நீ உன் பொண்ணுகிட்ட பேசேன். என்னைய அந்தக் காம்பெடிசன் கலந்துக்க ப்ரமிசன் கொடுக்க சொல்லேன்…”

” அடிமடியிலே கைவைக்கிற டா நீ…! ஒழுங்க திங்க சோறுகூட கிடைக்காம பண்ணிருவ போலையே! என்னால உன் அம்மாகிட்ட பேச முடியாது சித்…”

” உன் பொண்ணுகிட்ட உன்னால பேசமுடியாதா…? ஏதோ ஆர்மில நீ ஸ்ட்ரிட் ஆஃபிசர்.. வீட்டுலையும் கண்டிப்பா தான் இருப்பன்னு உன் பொண்ணு  சொன்னதெல்லாம் பொய்யா…? அப்ப நீ சிரிப்பு ஆஃபிசர்ன்னு ஒத்துக்கோ ரகு”

” ஏய்…!”

” பின்ன என்ன உன் பொண்ணு கிட்ட பேச ஏன் இவ்வளவு பயப்பிடுற…?”

” சொல்றவங்க தைரியமா கேட்க வேண்டியது தானே! என்னையே கேட்க சொல்லுற…”

” வீட்டுல மூத்தவர் நீ…  இப்படி பயப்பிடுறீயே ரகு. நீ சொன்னா உன் பொண்ணு கேட்பா…!”

” அதெல்லாம் அந்த காலம் சித்.. ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும் தான் பசங்க ப்ரேண்ட்ஸ்  பேச்சைக் கேட்பாங்க… அதுக்கு அப்புறம் பசங்களை நம்பி இருக்கிற என்னை போல ப்ரேண்ட்ஸ்  பசங்க பேச்சை கேட்டு தான் ஆகணும். இப்ப இது புரியாது நீ என் நிலமைக்கு வரும்போது தான் உனக்கு புரியும் சித்து.

” ஆனா, ரகு அந்த காம்பெடிசன்ல நான் கலந்தக்கணும் ஹேல்ப் பண்ணு ரகு…”

” சித், நான் ஒண்ணு சொல்லுறேன். இன்னும் அதுக்கு டேட் சொல்லலை. விரைவில் தானே போட்டிருக்காங்க. அதுக்குள்ள அடுத்தவாரத்தில நடக்க போற மிட்டெர்ம் எக்ஜாம்ல நல்ல படிச்சு மார்க் எடுத்துட்டேனா, உன் அம்மா ஹாப்பீயா இருப்பாள். அத வச்சு நாம காம்பெடிசன் ப்ரமிசன் கேட்போம். எப்படி என் ஜடியா…?”

இதெல்லாம் நடக்கிற விசயமா என்றது அவன் பார்வை… இதெல்லாம் நடக்காதுன்னு தானே நானும் சொல்லுறேன் என்றது அவர் பார்வை.

” ரகு…! “

” தூங்கு சித்… காலைல நீ படிக்கிறதை லைவ்வா உங்கம்மா கிட்ட காட்ட, சொல்லிருக்காள். எதையும் நினைக்காம தூங்கு…” என்றவர் வழக்கமாய் வம்படியாய் விழியினை மூடிக்கொண்டார்.

விசிறியைக் கண்டவனுக்கு எப்போது உறக்கத்தைத் தழுவினான் என்று அறியாதுபோனான். அவன் உறங்கியதை உறுதி செய்தவர் போர்வை போர்த்தி விட்டு உறங்க ஆரம்பித்தார்..

இதோ இதோ இம்சை நாளான மண்டே மார்னிங் மலர்ந்து.

” டேய்… சித் உங்க அம்மா வீடியோ கால் பண்றது குள்ள எழுந்து படி கண்ணா” என்றே எழுந்தார்.

” ரகு… இதுக்கு எதிர்த்த வீட்டுல சுப்ரபாதம் போடுற பாட்டி பரவாயில்லை தோணுது. ஒய் ரகு உன் பொண்ணு என்னை இம்சைபண்றா…?”

” ஹாஹா…. அவளுக்கு இருக்கிறது நீ தான் கண்ணா… நீ நல்ல படிக்கணும் நல்ல நிலமைக்கு வரணும் நினைக்கிறா… “

” மை ப்யூசர் ப்ரைட்டாக, என் ப்ரசண்ட் பிடிங்கி டல்லாக்குறா உன் டாட்டர்…!”

‘ அடப்பாவி…. ‘ என பார்த்தவரை முகத்தை திருப்பிக்கொண்டு குளியலறைகுள் புகுந்து காலைகடன்களை  முடித்தவன். புத்தகத்தைத் தத்தி தடவி எடுத்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்…. புத்தகத்தின்நிலையறியாது கையூண்டி உறங்கி விழுபவனைக் காண எண்ணத்தை சொல்லி திட்ட,

” சித் கண்ணா…. !”  என்றவர் புத்தக்கத்தை ஒழுங்கு படுத்தி, தனது டி ஷ்டர்டால் முகத்தை துடைத்தவர் பாலைக்கொடுக்க..  அதையும் வாங்கி குடித்தவன். புத்தகத்தில் கண்ணைப் பதித்தான்.. நேற்றுஇரவில் இதையெல்லாம் படித்தோமா ? புதிதாக இருக்க தலையைச் சொறிந்தான்.

”  இதெல்லாம் புதுசா இருக்கு ரகு…! நேத்து படிச்சேனா நியாபகமே இல்லை… !”

” அடேய்.. இத உன் அம்மாகிட்ட சொல்லி வைக்காதடா…! அங்கே அவளுக்கு பி.பி எகிரிட போது.. ” நெஞ்சை தடவிக்கொள்ள, போன் அடிக்கப்பட்டது.

அவனை வீடியோவில் காட்ட, ” குட்மார்னிங்  ஜானு…!” இளித்து வைத்தான்.

” குட்மார்னிங்…..  ” என்றவள் நேத்து என்ன எல்லாம் படித்தீயோ அதையும் சொல்லி படிக்காதாதையும் சொன்னாள்.

” ஜானு… நிறுத்து. இதுக்கு நீ எல்லாத்தையுமே படின்னு சொல்லிருக்கலாம்…!”

” சரிசரி நல்ல படி, நல்ல மார்க்கு,…” என இழுக்க அவளைப் பார்த்த பார்வையில். ” பாஸ்ஸாகிற அளவுக்கு மார்க்கை எடுடா…!” என்றாள்.

” ம்ம்.. போ போ… போய் வேலைப் பாரு ஜானு…” எனத் திரும்பிகொள்ள போனை வைத்தாள்.

அதன் பின் கஷ்டபட்டு கிளம்பினான்.. அவனை பள்ளியில் விட்டு வந்தார் ரகு. பரிட்சை அங்கே ஆரம்பித்தது.

இங்கோ அதிகாலையில் சூட்டிங் ஸ்பார்ட்டில் வேலைச் செய்துகொண்டிருந்தான் ஆர்.ஜே.

தனது அசிட்டென்ட்டிடம் ஸ்டேப்பைச் சொல்ல அவர்களுக்கு அவன் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தான். ப்ரேக் விடவே டயர்டாகி வந்தமர்ந்தான்..

அவனுடன் வந்தமர்ந்தார் அந்த படத்தின் தயாராப்பாளர்.

” என்னடா… நேத்து டேடிங் போயிட்டு, காலைல இவ்வளவு எனர்ஜெடிக் இருக்க. ஒருவேள அதுனால தான் என்ர்ஜெடிக் இருக்கிறீயா…? “

தனது காலை அகற்றி சேரில் கீழ் இறங்கி அமர்ந்து, வியர்வையைத் துடைத்தவன். அவர் சொன்னதும் நேராக அமர்ந்தான்… ” என்ன ஜீ சொல்லுறீங்க… உங்களுக்கு  எப்படி தெரியும் இது…? ”

” அடப்பாவி நெசமாதான் போயிருக்கீயா நீ…. “

” ப்ச்… சொல்லுங்க ஜீ, எப்படி தெரியும் நாங்க டேடிங்… இல்ல எங்க மீட்டிங்… ?”

“டேய் டேடிங்கா ? மீட்டிங்கா டா ? “

” மீட்டிங் தான் ஜீ… இப்ப சொல்லுங்க  எப்படி தெரியும்…?”

” டேய் அவ தான்… அப்ப அப்ப அப்டேட்டா  போடுறாளே டா சோசியல் மீடியால. உங்களுக்குள்ள கிசுகிசுன்னு பேசறானுங்க நீ வேற..”

” ச்ச… இப்படியுமா ஜீ, இருப்பாங்க. எனக்கு அவங்கமேல எந்த அஃபேரும் இல்ல…”

” டேய் இப்ப என்ன, தானா வழிய வருது மடக்கிப்போட வேண்டியது தானே…! உனக்கும் பொண்ணு கிடைக்கிற, மாதிரி தெரியல கட்டிக்கிட்டு செட்டில் ஆகிடுயா…!”

” ஜீ, என்ன பேசுறீங்க ? இதெல்லாம்  க்ரெண்டி இல்லாத ஆள். எப்ப இன்னொருத்தன தேடி போவா தெரியாது.. இவளை நம்பி நான் என் மொத்த வாழ்க்கையையும் கொடுக்க சொல்லுறீங்களா ? இந்த இன்டர்ஸ்டீரில இருந்தாலும் ஒழுக்காம குடும்பமா இருக்க ஆட்களும் உண்டு. அதேபோல இந்த மாதிரி ஆட்களும் உண்டு… என்ன சொல்லு எங்க குடும்பத்துக்கு இவ ஒத்துவர மாட்டா…”

” அப்ப, நீ சீக்கிரமா,.. மேரேஜ் போஸ்ட் போட்டு அதெல்லாம் பொய்யின்னு  நிருப்பீக்க பாருடா…!” என அவ்விடத்தை காலிச் செய்தார்.

மேரேஜ் போஸ்ட் என்று யோசித்தவனுக்கு மூளையில் பல்ப் எரிந்தது.

பீட்டரை அழைத்து அவனிடம் ஐடியாவை கூற… அவனோ  திகைத்து அவனையே கண்டான்.

குறும்பு தொடரும்….

மக்களே… உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்திங்களிலிருந்து தொடங்க இருக்கும் தேர்வுக்காக… சித்தை அமர்த்தி முதல் பாடமான தமிழைப் படித்து ஒப்பிக்க வைப்பதென்பது எருமைமாட்டை மழையிலிருந்து ஓரங்கட்டுவதும் ஒண்ணுதான்…. முழுபாடத்தையும் முடிக்கும் வரை ஜானுவிற்கு போதும் போதும் என்றானது….. ஆங்கில வழி கல்வியை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்   என்றுமே எதிரியை போலத்தான் ஒவ்வொரு முறை தேர்வில் அதை கொன்றுவிடுவிட்டு வருவது வழக்கம். முதலில் வாசிக்க தடுமாறி பின் அதை பிழையோடு கொன்று  பேப்பரில் தூக்கிலிட்டு வரும் நிலையானது.. தமிழ்நாட்டில் இருந்தும் தமிழ் வழி கற்காத மாணவர்களின் நிலை இதுவே… அவனை படிக்கவைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்து தோசை வார்த்தாள் இருவருக்கும்

மக்களே… உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்

Leave a Reply

error: Content is protected !!