என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
தயாரிப்பாளர் பேசிச் சென்றபின், ஆர்.ஜேவிற்கு ஐடியா ஒன்று உதித்தது. பீட்டரை அழைக்க, அவன் அருகில் வந்து நின்றான்.
” பீட்டர், எனக்கு ஒரு ஐடியா தோணுது, இந்த ஜெர்ஸிகிட்ட இருந்து தப்பிக்க, இதான் சரின்னு தோணுது…”
” என்ன ஐடியா பாஸ்… உங்க முகத்தில இருக்கிற பிராகசத்தை பார்த்தால், ஏதோ பலம்மா யோசிச்சு வச்சுருக்கீங்க போல….”
” ஆமாடா… ஆமா இந்த ஐடியா கண்டிப்பா வொர்க்அவுட் ஆகும் பீட்டர்…..”
என்றவன் முகத்தில் வெற்றியை கண்டவனை போல் உணர்வு ரேகை படர்ந்தது.
” அப்படி என்ன ஐடியா பாஸ் அது? உங்களுக்கு இத்தனை சந்தோசத்தை கொடுத்திருக்கு”
” ம்ம்… சூட்டிங் முடியட்டும் பீட்டர்.. நாம நிதானமா பேசலாம்.” என்றான்.
” ஓ.கே பாஸ் ” என்றவனும் செல்ல மீண்டும் தனது சூட்டிங்கைத் தொடர்ந்தான். அந்த பாடலுக்கான சூட்டிங்கை எடுத்து மொத்த டீமும் கிளம்பிடவே, தனது ஆஃபிஸிற்கு வந்தவன், பீட்டரை அமர்த்தி தன் திட்டத்தை தெளிவாகச் சொன்னான்.
” பீட்டர், எனக்கு கல்யாணம் ஆகலைன்னு, தெரிஞ்சு தானே, அவ அப்படி போஸ்ட் போடுறா… நானும் ஒரு போஸ்ட் போட்டு அவ வாய அடைக்கலாம் இருக்கேன்டா…”
” என்ன போஸ்ட் பாஸ் அது..?”
” எனக்கு மேரேஜ் ஆகி டிவோர்ஸ் ஆயிருச்சு… என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு, அதன் காரணமாக பிரிஞ்சு இருக்கோம். நாங்க டிவோர்ஸ் பண்ணிகிட்டாலும் என் மனைவியை தவிர யாரையும் காதலிக்கவோ, கல்யாணம் செய்துக்க மாட்டேன்.. எங்க காதலுக்கு பரிசா எனக்கு ஒரு பையன் இருக்கான்.. அவனை நான் அடிக்கடி சந்திச்சுட்டு தான் இருக்கேன். என் மனைவி என்கூட மீண்டும் சேருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு அவங்களுக்காக காத்திட்டு இருக்கேன். அவங்களை தவிர எல்லாரும் எனக்கு உடன்பிறந்த உறவுகள் தான்…. ஜெர்ஸி ஏதோ ஃபன்க்காக போஸ் போட்டிருக்காங்கன்னு போஸ்ட் போட்டா என்ன….?”
ப்ளானை கேட்டு பீட்டர் ஆவென வாயை பிளந்தான்… ” டேய் பீட்டர் எதாவது சொல்லுடா…!”
” பாஸ்…. இப்படி பண்ணா உங்களுக்கு பொண்ணே கிடைக்காது பாஸ். காலம் முழுக்க நீங்க பிரம்மசாரி தான்… என்ன ப்ளான் பாஸ் இது… ?அதுக்கு எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு போஸ்ட் போடுங்க… எனக்கு ஆல்ரெடி காதலி இருக்குன்னு போஸ்ட் போடுங்க அத விட்டுட்டு இப்படி போட்டா எந்தப் பொண்ணும் உங்களை கட்டிக்காது பாஸ்….”
” டேய், நீ சொன்ன மாதிரி போஸ்ட் போட்டா கூட தான் பொண்ணு தர மாட்டான்னுங்க.. ஆனா, இதுன்னா, டிவோர்ஸ் ஆயிருச்சு. அதுனால இரக்கப்பட்டு பொண்ணு கொடுக்க முன் வருவான் டா அவன் கிட்டா உண்மை சொல்லிக்கலாம் டா..”
” ஏன் பாஸ், பேசாம எங்க வீட்டுல சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன், யாரையும் நான் காதலிக்கலைன்னு போஸ்ட் போட்டா என்ன ? “
” அடேய்… இருக்க இமேஜ் நீ டேமேஜ் பண்ணிருவ போல.. இப்படியெல்லாம் போட்டா.. மீம்ஸ்க்கு கேலி, கிண்டலுக்கு ஆளாக வேண்டியது தான். அதுனால என் ஐடியா தான் பெஸ்ட் . இதான் சரின்னு தோணுது….”
” ஒ.கே பாஸ்…. இந்த போஸ்ட் நீங்க போட்டா, எல்லாருக்கும் தெரிய வரும் அம்மா அப்பாக்கு தெரிஞ்சா உங்க நிலமை பாஸ்…?”
” இதுக்கு மேல எனக்கு கல்யாணம் நடக்கும் தோணலைடா… அதுனால என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் இருக்கேன். ஆனால் இந்த ஜெர்ஸி வலையில் நான் விழுகவே கூடாது… நான் சொன்னதை அப்படியே போஸ்ட் போட்டுடு”
‘ கர்த்தரே ! கலங்கி நிற்கிற இந்தப் பிள்ளைக்கு கல்யாண பண்ற வழியை காட்டுப்பா…’ என்றவன் பிராத்தனை செய்து டூவிட்டரில் சோக போஸ்ட் ஒன்றைத் தட்டிவிட்டவன் வேறு வேலை காணச் சென்றான்…. அது என்ன வேலை செய்ய போகிறதென்று அறியாமல்.
” சித்…. ஷோ மீ.. சித்… ஷோ மீ..” என பின்னாடி அமர்ந்த ஒருவன் சித்துவின் முதுகைச் சுரண்டினான்…. ‘ ஓ.. காட் நானே அறைகுறை தான்டா என்கிட்ட போய் ஷோ மீங்கற…!”
” சித்.. நான் அந்த அறையிலும் நான் குறை தான்டா காட்டி தொலைடா…”
” ஐயோ… ” என நொந்தவன், அப்படியே அமர்ந்து விட்டான்…”
” சித்… என்னாச்சு ஏன் எழுதாம இருக்க ? ” கிரேஸி மிஸ் கேட்க. அவன் திரும்பி அவனை பார்த்தான்..” சொல்லாத சித் ப்ளீஸ்…. ” கெஞ்சினான்.
” மிஸ் இந்த இடம் எனக்கு கம்பர்டபிளா இல்லை …”
” ஓ.கே கம் கியர்… ” என்று தன் இருக்கைக்கு அருகே இருந்த பெஞ்சில் அமரச் சொல்ல, அவள் அருகில் அமர்ந்தான்..
” யாரும் யாரையும் பார்த்து எழுதாதீங்க, உங்களுக்கு தெரிஞ்சதை எழுதி கொடுங்க.உங்க வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்து நீங்க தப்பு பண்ணா… இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைகாவது ஒருநாள் மாட்டுவீங்க, அன்னைக்கு பெரிய தண்டனை கிடைக்கலாம்.. அதுனால திட்டு வாங்கினாலும் பரவாயில்லை நேர்மை எழுத முயற்சி பண்ணுங்க. உங்க நேர்மை கண்டு கடவுள் நிறைய ஆசிர்வதிப்பார்… ” என்றாள்.
சிவாளி, ஸ்ரவன் இருவரும் ரெங்க் ஹோல்டருக்காக போட்டி போடுபவர்கள். அதனால் தலை நிமரவே இல்லை பேப்பரை வாங்கும் பொழுதைத் தவிர.. வைஷ்ணவி, சூர்யாவெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு எழுதும் கேஸ்ஸூகள்…. பரிட்சையில் அந்த இரண்டு மணி அவர்களை ஒரே இடத்தில் உட்கார வைப்பதென்பது காற்றில் கல்லின்றி வைக்கும் தாளை போலத்தான்… ஓர் இருடத்தில் இருக்கும் என்பது சாத்தயமில்லை. இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு சீக்கிரமாக எழுதியோ கிறுக்கியோ முடித்துவிட்டு செய்யும் சேட்டைகளை கண்டு ஐய்யோ என்றாகிவிடும் ஆசிரியர்களுக்கு. அட்டையை அடித்தளமாக்கிப் பென்களை தூண்களாக்கி ஒரு மாளிகை கட்டி முடித்துவிடுவார்கள்… எதிலும் விளையாட்டு தனமே நிறைந்திருக்கும்.
ஏனோ தானோ என்று எழுதி கொடுத்து விட்டு லன்ஞ் பெல் அடிக்க எல்லாரும் சாப்பிட அமர்ந்தனர்.
சிவாளி மட்டும் தான் எழுதியவைகளெல்லாம் சரியாயென வினாத்தாளை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
” சிவாளி…. திஸ் இஸ் லன்ச் டைம், வா சாப்பிட போலாம் பசிக்கிது…”
” டூமினிட்ஸ்… சூர்யா, நான் செக் பண்ணிட்டு வரேன்”
” ஹேய் சிவாளி.. இப்ப இத செக் பண்றதால என்ன கிடைக்க போகுது.. ?நீ லேட் பண்றதால லன்ஞ் டைம் முடிஞ்சுடும் நாம சாப்பிட்டாம திட்டு வாங்கவா, வா கேர்ள் போலாம்”
சிவாளியிடம் பதிலே இல்லை… ” வைஷூ , சூர்யா நீங்க போங்க நான் சிவாளிய கூட்டிட்டு வரேன்…” சித் அவர்களிடம் இருவருது லன்ஞ்சை கொடுத்தனுப்பினான்.
சிவாளி அருகே அமர்ந்தவன், அவளையே பார்த்தான்… ” சித்… இதுல ஒன்மார்க் போச்சு… எனக்கு ஃபுல் மார்க் வராது.” என ஃபீல் பண்ணினாள்.
” இட்ஸ் ஒ.கே சிவாளி லீவ் இட், வா சாப்பிட போலாம்”
” எனக்கு லன்ஞ் வேணா சித்… நீ போய் சாப்பிடு ” என முகம் சுருங்கி அமர்ந்தவளை கண்டு சிரித்தான்… ‘ ஒரு மார்க் குறைந்ததற்கு சாப்பாட்டு வேண்டாம் என்று தன்னை வருந்துகிறாள்.அப்படியென்றால் இவனெல்லாம் எத்தனை மார்க் இழக்க போறானோ…! அதற்கெல்லாம் வாரம் முழுதும் அவன் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும். இப்படியும் சில குழந்தைகள் இருக்க தான் செய்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்கள் திணிப்பு தான்.
” சிவாளி…. ஒரு மார்க் தானே போச்சு. மீதி நைன்டிநைன் கிடைக்க போகுதே ஹாப்பீயா இரு!”
” இல்ல சித்…. அந்த ஒரு மார்க்ல ஸ்ரவன் முன்னாடி வந்துடா…?”
” சிவாளி…. அப்ப நீ உனக்காக படிக்கலையா ? ஸ்ரவனுக்காக தான் படிக்கிறீயா ?”
” இல்ல சித்… எனக்காக தான் படிக்கிறேன்”
” அப்ப நீ அவன் டாப்பர் ஆகிடுவான்னு ஏன் பீல் பண்ற…? லிசன் சிவாளி, இந்த மார்க்னால உனக்கு என்ன கிடைக்க போகுது… ?இந்த மார்க் வச்சு, உன்னால லன்ஞ் டைம் கெட் பண்ண முடியுமா…?” அவள் இல்லை என தலையாட்டினாள்.
” நீ சாப்பிடாம வெஸ்ட் பண்ண போற லன்ஞ்சை திரும்ப கெட் பண்ண முடியுமா…?” அதற்கும் அவ்வாறே செய்தாள்.
இந்த மார்க்கெல்லாம் உன்னோட ப்ரைன் லெவலுக்கான ஸ்கோர்ஸ் தான்… இந்த ஸ்கோர்ஸ் வச்சு உன்னால பார்ஸ்ட்டை திரும்ப கெட் பண்ண முடியாது சிவாளி. பட் நீ லன்ஞ் இக்நோர் பண்ணா ஃபுட் வெஸ்டாகிடும். அப்புறம் உனக்கு பசிக்கும் போது ஃபுட் இருக்காது.. அந்த ஃபுட்ட உன்னோட நைன்டிநைன் மார்க்கை வைத்து வாங்க முடியுமா..?”
” நோ சித்….”
” எஸ் சிவாளி… இந்த மார்க்கு உனக்கு ஹாப்பீயை தவிர, வேற எதுவும் உனக்கு கொடுக்காது சிவாளி. அதுக்காக லன்ஞ் இக்நோர் பண்றது உன் ஹேல்த்க்கு தான் பிரச்சினை வரும். அதைகூட உன்னோட மார்க்கால க்யூர் பண்ணமுடியாது சிவாளி. வா போய் சாப்பிடலாம்.., நல்ல சாப்பிட்டா அடுத்த எக்ஜாம் நல்ல படிக்கலாம் மார்க் ஸ்கோர் பண்ணலாம் கம் ஆன்….” என்றவளை அழைத்து சென்றான். நால்வருமாக உண்டனர்.
அடுத்த நாள் ஆங்கிலம்
மாலை சீக்கிரமாகவே வந்த ஜானு அவனை அமர்த்தி தமிழ் பாடத்தின் வினாத்தாளை வைத்து இதை எழுதினீயா ? அதை எழுதுனீயா ? ” கேள்வியாய் கேட்டுவைக்க, அவள் முகம் பார்த்து அமர்ந்திருந்தான்.
” ஜானு… இதுக்கெல்லாம் உனக்கு ஆன்ஸ்ர் வேணும்ன்னா, என் நோட்டை எடுத்து செக் பண்ணிக்கோ, என் கிட்ட ஏன் கேட்கிற…?”
” சித்… நீ எப்படி பண்ணிருப்பேன் தெரிஞ்சிக்க தான் கேட்டேன்… நீ அன்ஸர் பண்ணியான்னு நான் எப்படி தெரிஞ்சிக்க சொல்லு…?”
” அதான் என்னோட பேப்பரைத் திருத்தி கொடுப்பாங்களே! அப்ப தெரிஞ்சுக்கோ ஜானு… இப்ப கேட்டு என் டைத்தை வேஷ்ட் பண்ணாம அடுத்த சப்ஜட்டை படிக்க போலாம் ” என்றவனை முறைத்தவள், ஆங்கில பாடத்தை எடுத்தாள்… அவன் படிக்கவே இல்லை கடகட வென ஒப்பித்து முடித்து மூடிவைக்க ஆச்சரியமாய் பார்த்தாள்..
” ஜானு… நான் எல்லாத்தை முடிஞ்சுட்டேன்….”
” எப்படி சித் எல்லாத்தை பாஸ்ட்டா முடிச்சுட்ட,… !”
” எங்க கிரேஸிமிஸ் படிக்க வைச்சுட்டாங்க ஜானு…”என்றான்.
” இதோ போல அடுத்த வர சப்ஜட்டையும் நீ படிச்சுட்டு வந்த உனக்கு தான் சித் ஈசியா இருக்கும். என் சமத்து குட்டில செய்வீயா…” என தாடையைப் பிடித்து கொஞ்ச,
” நோ ஜானு… !நோ அதெல்லாம் எஸ்பெக்ட் பண்ணாத. ஐ ஹேட் சைன்ஸ் ஆண்ட் மேத்ஸ் ” என்று எழுந்தான்.
இந்த ஆங்கிலம் என்பது உண்ணும் ஆகாரத்தில் பிடித்த ஆகாரம் போலைத்தான்… குழந்தைகள் தனக்கு பிடித்ததை முதலாகவும் சரி வேகமாகவும் தின்றுவிடுவது போல தான்…. ஆங்கிலத்தை வேகமாகவும் எளிதிலும் படித்து முடித்துவிடுவார்கள்… ஆனால் இந்த மேத்ஸ், சைன்ஸ், சோசியல் என்பது பிடிக்காத கடினமான ஆகாரம்… நாம் தான் திணிக்க வேண்டும், முரண்டு பிடித்துதான் படிப்பார்கள். இருவரி ஒருவரியில் முடிந்திடும் ஆங்கில பாடத்தின் விடைகள், ஆனால் அறிவியலோ, சமூக அறிவியலோ அப்படி அல்ல, வினா மட்டுமே சிரிய அளவில் ஆனால் விடையோ நான்கு ஐந்து வரியில் இருக்கும்… இதில் சார்ட் ஆன்ஸர், பீக் க்வஸ்டின் என கூடுதலாக இருக்கும்.
சில குழந்தைகள் அதை அப்படியே மனப்பாடம் செய்து அப்படியே வார்த்தை மாறாமல் தேர்வில் எழுதுவதுண்டு.. சில குழந்தைகள் கேட்டத்தை வைத்து வார்த்தைகளை கோர்த்து எழுதுவார்கள். சில குழந்தைகளோ வினாவும் புரியாமல் விடையையும் புரியாமல் படித்துவிட்டு வந்து எதையோ கிறுக்கிவைப்பார்கள், சிலர் சுத்தம் கேள்வியை மீண்டும் எழுதிவைத்துவிடுவார்கள்.. இப்படி வகையாகப் பிரிக்கலாம்…
அதையெல்லாம் காண பி.பி வருவது என்னவோ ஆசிரியர்களுக்கு தான். திருத்தும் போது அவர்கள் படும் பாட்டை, மாணவர்களின் கற்பனையும், உபயோகித்திருக்கும் வார்த்தைகளையும் கண்டால் போய் முட்டிகொள்ளலாம். இத்தனை வருடமாய் கற்றப் பாடத்தையெல்லாம் மறக்கடித்துவிடுவார்கள். ஏ. பி. சி. டி..இருபத்தியாறு எழுத்துகளைமாற்றி மாற்றி போற்றுவிட்டு எங்களையே பித்து பிடிக்க வைத்துவிடுவார்கள்.
தேர்வு நாட்களை முடிந்து சனி, ஞாயிறு விடுமுறை விட, சிவாளியும், சித்துவும் வீக் என்டில் சந்தோசமாகக் கழித்தனர். ரகுவிற்கும் ரிலிஃப்பாக இருந்தது..
ஆர்.ஜேவின் சோக டூவிட் காட்டு தீ போல் பரவியது.அதாங்க ட்ரெண்ட் ஆனது. அவனது ஃபேன்ஸ் மற்றும் ஃபலோவ்வர்ஸ் அனைவரும் அந்த டூவிட்டை நம்பி, அவனை திருமணமானவர்கள் என்று நம்ப ஆரம்பித்தனர்.
இதை படித்த ஜெர்ஸிக்கோ, கோபம் வந்தது… அனைவரும் கவனம் இப்போது ஜெர்ஸியிடமிருந்து ஆர்.ஜே பக்கம் திரும்பியது… அவரது மனைவி யார் ? மகன் யார் ? ” என்று குறுகுறுப்பையே ஏற்படத்தியது.
இந்தச் செய்தி., சோசியல் மீடியாவை தான்டி பேப்பரில் சினிமா செய்திகளில் விளம்பரமாகவும் வந்து, அவனது தந்தை கண்ணில் மாட்டியது.
அதே சமயம் மீண்டும் திங்களன்று, பள்ளியில் சித்துவிற்கு பரிட்சை பேப்பர் கொடுக்க பட்டது. அவனது அனைத்து மார்க்கைக் கண்டதும் சோர்வாக அமர்ந்துவிட்டான். ‘ ஜானுவிடம் காட்டணுமே….’
இருவரின் நிலை என்ன ஆகுமோ!
குறும்பு தொடரும்….தயாரிப்பாளர் பேசிச் சென்றபின், ஆர்.ஜேவிற்கு ஐடியா ஒன்று உதித்தது. பீட்டரை அழைக்க, அவன் அருகில் வந்து நின்றான்.

குறும்பு தொடரும்….