கனலியின் கானல் அவன்(ள்)-19.1

கனலியின் கானல் அவன்(ள்)-19.1

கோயில் மணி ஓசை ‘டாங்’ எனக் காதை வந்தடைய நிமிர்ந்த தேனரசுவின்  கண்களில் தெரிகிறார்,அவரை விட ஒரு இருபத்தைந்தடி தூரத்தில் ருத்ராவின் அன்னை அருகே நின்றிருந்த செம்மஞ்சளுமல்லாது சிவப்புமில்லா சூரியக்கதிரின் நிறத்தில் பட்டணிந்த மீனாட்சி.கைகளோ ஒன்றோடு ஒன்றுக் கோர்த்தவாறு குனிந்து தன் அண்ணி ஏதோ கூற அதனை தலையாட்டிக்  கேட்டுக்கொண்டிருந்தார். 

 

இவர் பார்த்தபடி அப்படியே தன் நடையை நிறுத்தியிருக்க இரண்டடி முன்னே நடந்திருந்த கயல் திரும்பி தன் தந்தை  பார்வை உணர்ந்தவள்,உள்ளம் குளிர்ந்து போனாள்.தன் ஆசை எதிர் பார்த்தபோது நிறைவேறும் நிலையில் உள்ளத்தின் இதத்தை வார்த்தைகளில் சொல்லத்தான்  முடியுமா?

 

“ஹனி எல்லோரும் உன்னையே  பார்க்குறாங்க. “

 

கயல் கூற,சட்டென தான் இருக்கும் இடம்,   தன் நிலை புரிந்து சுற்றும் ஒருமுறை பார்க்க யாரும் இன்னும் இவர்கள் உள் நுழைந்ததை கவனிக்கவில்லை.திரும்பி கயலை பார்க்க அவள் கண்களில் குறும்பு மின்ன, 

 

“அடக்கமா மாப்பிள்ளை தலை குனிஞ்சு  நடக்கவேணாமா? இப்படி பொண்ணை பார்த்து லுக்கு விட்டா பார்குறவங்க என்ன  நினைப்பாங்க. “

 

“அச்சோ கண்ணம்மா அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்றதை நாம நினைச்சா  சந்தோஷம் நம்மல அண்டாது டா.நாம நமக்காக தான் வாழனும்… என் பொண்ணு  அப்படித்தான் என்னை வளர்த்திருக்கா. இனி அதுபடி தான் வாழலாம்னு இருக்கேன்.”

 

“ரொம்ப தேறிட்ட மை பாய்… அப்போ இனி  நானா வா இங்க இருந்து போலாம்னு கூப்பிட்டாலும் வர மாட்டேன்ற…”

 

“ஆமாங்கறேன்… உன் மீனாம்மா  பாவமில்லை.நம்மளுக்காக ரொம்ப நேரமா  வெயிட்டிங்… போலாமா ? “

என அரசு கேட்க, அவரை முறைத்து  பார்தோக்கொண்டிருந்தாள் கயல்.  

 

யேனென ஒரு கனம் யோசித்த அரசு அவள் தோள்களை சுற்றி கை போட்டவாறு,  

 

“மை மீனா வெயிட்டிங்… ஷெல் வீ…” என்றவர் ‘இபோ ஓகேயா?’ எனும் விதமாய்  கேட்க, 

 

“லவ் யூ  ஹனி…” என்று அவரோடு சேர்ந்து நடந்தாள் சந்தோஷம் நிறைந்த மனதோடு . 

 

இவர்களை கண்ட  ஜனார்த்தனன் அவரே மண்டபத்தில் இருந்து இறங்கி வந்து அரசுவின் கை பிடித்து நலம் விசாரித்தவர், கயலின் தலை தடவி அவள் நலம் கேட்கவும் தவறவில்லை.

 

ஜனார்த்தனன் படிகளில இறங்கவுமே, அனைவரும் இவர்கள் வருகையை  கவனித்தனர். ஒரு புறம் ருத்ரா,அவன் மச்சினன்,இன்னும் ஓரிருவர் நின்று பேசிக்கொண்டிருக்க,மது,மாதவன் ரித்திகா,அவளின் குழந்தைகள் ஓரிடம் நின்றிருக்க ரிதிக்காவின் முகம் மட்டுமே  யாருக்கோ வந்த விருந்தென நின்றிருந்தாள்.மீனாட்சியோடு பார்வதி மற்றும் ரித்திகாவின் மாமியார் நாத்தனார் நின்றிருந்தனர். 

 

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே போதும் என கோயிலுக்கு வந்திருக்க அதுவே அரசுவுக்கும் மீனாட்சிக்கும் போதுமாய்.

“ஹேய் ! கயல்…” 

 

 என மதுமிதா மேடையிலிருந்தே சற்று சத்தமாக அழைத்து கை காட்ட  இவளும் திருமண தம்பதிகளின் மலர்மாலையை ஒருகையில் ஏந்திக்கொண்டு மறுகையில்  அவளின் அலைபேசி,தந்தையின் அலைபேசி இன்னும் சில பொருட்கள் அடங்கிய பையோடு தன் கண்களால்   கைகளைக் காட்ட ‘இதோ வரேன்’ என கூறியவள் ஓடிச்சென்று அவள் பையினை பெற்றுக்கொள்ள மறுபக்கம் வந்த மாதவன்  மாலையை எடுத்தவாரே,

 

 “அண்ணி நீங்க வர வேணாம்னு சொல்லவும் தான் நா வரல.இப்போ பாருங்க உங்களை விட பாரமான மாலையை தூக்கிட்டு நடக்க முடியாம நடக்குறீங்க “

 

“அச்சோ அதுக்கில்ல மாதவா சாரி தடுக்குது அதான்.”

என்றவள், இப்போது ஒரு கையால் சற்று சாரியை தூக்கியவாறு நடந்து மேடையேறினாள்.தன்னை துளைக்கும்  பார்வையை உணர்ந்தவள் அதைப் பார்க்கிவியலாது,மதுவுடன் பேசியவாறே மீனாட்சி அருகே சென்றாள். 

 

” ஹாய் ஆன்ட்டி” என பார்வதியிடம் பேசியவள்,மீனாட்சியின் கன்னத்தில்  முத்தமிட்டு, 

“ஹாப்பி போர் யூ மீனாம்மா “

எனக் கூற,முகத்தில் எவ்வித ஒப்பனையுமின்றி கூந்தலை  விரித்துவிட்டிருந்தவள் அழகு தேவதை யாகத்தான் இருந்தாள்.

 

“தலைக்கு கொஞ்சமாச்சும் பூ வெச்சா தானே அழகா இருக்கும்’ என்ற பார்வதி, இரு வரேன் ‘ என்று அவரே அவள்  தலையில் பூவும் வைத்துவிட்டார்.  

 

இதுவரையில் மீனாட்சிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பற்றி அறியாதிருந்த  ரித்திகாவுக்கு தேனரசுவை பார்த்ததும் ‘இவருக்கு வந்த வாழ்வை பாரேன்’என முகம் பொறாமையில் பொலிவிழந்திருக்க  இதைக் கண்டுகொண்ட ருத்ராவுக்கோ சிரிப்பு.ருத்ரா சிரிப்பதை கண்ட பார்வதி அவனருகே வந்து,

 

“டேய் வரு நீயே உங்க அக்காவை ஏத்தி  விடுவ போல… சும்மாயிருக்க மாட்டியா?’ என அவனை கடிந்து விட்டு, ‘அப்பாட்ட மாமாவை மாணவறைல உட்கார வைக்க சொல்லு.” என்று விட்டுப்போனார்.  

 

ரிதிக்காவுக்கு கயலை எங்கோ பார்த்த ஞாபகம்.எங்கு என யோசிக்க,ஒருமுறை மீனாட்சி வீட்டின் வாயிலில் கண்டது  நினைவுக்கு வருகிறது.’பொண்ணுகிட்ட பேசி பொண்ணனோட அப்பாவை கரெக்ட் பண்ணிட்டாங்களோ.. ஹ்ம்ம் இருக்கும் இருக்கும்’ என தன்னோடே பேசிக்கொண்ட  ரித்திகா ‘அப்பவும்,அப்பாவுக்கும் பொண்ணுக்கும் வயசு இடிக்குதே??? நம்ம அம்மாவும் ஏதோ நம்மட ஒழிச்சு மறச்சு பண்ணுறா.பார்க்கலாம் எவ்வளவு நாளைக்குன்னு’ மனதில் தாறுமாறான  சிந்தனையோடு உழன்றுக்கொண்டிருக்க, 

ஐயர் மந்திரம் ஓத அவர் அருகே அமர்ந்து  அவர் கூறும் முறைகளை செய்துக்கொண்டிருந்தார் தேனரசன். 

 

மனதில் புதுவித படபடப்பு.என்றுமே தேவையில்லாதது,தேவைப்படாது என நினைத்திருந்த நிகழ்வு தனக்கு நடைபெறுகிறது என நினைக்கவே தேனராசுவின் கண்கள் ஓர் நொடி கயலை  நிமிர்ந்து பார்க்க அவளுமே அவரைத்தான் பார்த்திருந்தாள். இதழ் பிரியா முகம் மலர்ந்த புன்னகை அவர் முகத்தில். அவளோ அவரை பார்த்து கண்சிமிட்டி கைகளால் சூப்பர் என கூறினாள்…

 

இவர்கள் இருவரையுமே பார்த்திருந்த ருத்ராவுக்கு அவள் மீதான காதல்  பெருக்கெடுக்க மெல்லமாய் அவளருகே சென்றான்.அன்று அவளோடு அலைபேசியில் கோபமாய் பேசிய பிறகு  மீண்டும் அழைக்கவில்லை.இன்றுதான் பார்க்கிறான்.சாதாரணமாய் அவள் அருகே நின்றிருந்தாலும் அவன் நெருக்கம் கயலுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது…

 

யாரும் தன்னைக்கொண்டு தன் தந்தையை  ஏதும் பேசிவிடக்கூடாதே எனும் எண்ணமே தவிர வேறில்லை. 

 

“ஜஸ்ட் பக்கத்துல வந்து நின்னதுக்கு   எதுக்கு இவ்வளவு டென்க்ஷன் ஆகுற…? ”  

 

அவள் அலைபேசியில் திருமணத்தை  வீடியோ செய்துகொண்டிருக்க கைகள் நடுங்குவதை பார்த்தவன் கேட்டான்.

 

“நீ அன்னைக்கு கேட்டது எடுத்து  வெச்சிருக்கேன்.வீட்டுக்கு போனதும்  தரேன். அதை சொல்லத்தான் வந்தேன் ” என்று விட்டு விலகி செல்லப் பார்த்தவன், மீண்டும் அவளருகே வந்து, 

 

“கண் முன்னாடி நிஜம் நடக்குறப்ப அதை விட்டுட்டு போன்ல பார்க்குற.போனை மாதவாகிட்ட கொடு அவன் எடுத்து தருவான்.” என்றவன் மாதவனிடமும் கூறிவிட்டு சென்றான்.இப்போது அலைபேசி மாதவன் கைக்கு சென்றிருக்க அவன் அந்த வேலையை தொடர கயல் தன் தந்தையிடம் பார்வையை செலுத்தினாள். ஆனால் மனமோ, 

 

‘ச்சே நார்மலா ஹாய்னு  பேசியிருக்கணுமோ.. ஏன் தான்  அவங்களை இப்படி கஷ்டப்படுதுறனோ’ தன்னையே கேட்க,’ அவங்களை விட்டு  விலகனும்னா இப்படி இருந்தாத் தான் என்னை அவங்களுக்கு பிடிக்காது போகும்’ என உழன்றுக் கொண்டிருக்க மனதை சமன் படுத்தி தந்தையின் திருமணத்தில் தன்னை நுழைத்துக்கொண்டாள். 

 

மீனாட்சி தேனராசுவின் அருகே வந்தமர இருவரையும் பார்த்து இனிதாய் உள்ளத்திலிருந்து சிரித்தவள் அதே  சிரிப்போடு ருத்ராவையும் நோக்கினாள். என்ன செய்தும் அடர் மஞ்சள் வண்ண சட்டையும் கடுங் கபில நிற கால்ச்சட்டையும் அணிந்திருந்தவன் அழகும் அதற்கேட்ப அவன் முகத்தில் மறையாதிருந்த சிரிப்பும்  அவன் உள்ளத்தின் மகிழ்வை காட்டுவதோடு அவளை ஊடுறும் கண்களில் காதலையும் காணத் தவறவில்லை.

 

அவனுமே அவளை பார்க்க சட்டென  அலைபேசியில் தன் பார்வையை பதித்தாள்.அதன் திரையில் ஒளிர்கிறது அவனது பெயரில் ஓர் தகவல்.

 

“நீ கொண்ட ஆசை நிறை வேறுகிறது… இதுபோல நாம் கொண்ட ஆசையும் நிறைவேறக்காத்திருக்கிறேன்… “

 

படித்தவளோ நிமிர்ந்து அவனைப்பார்க்க  கைகள் கட்டிக்கொண்டு பார்வையை மணாளர்கள் பக்கம் பதித்திருந்தான். தன் அலைபேசி திரையில் கண்டது மாயையோ என திரும்ப பார்க்க இன்னும் அது இவளை பார்த்து ஒளிர்ந்துக் கொண்டிருந்தது… 

 

கெட்டிமேளம் ஒலிக்க தேனராசுவின்  கைகள் மீனாட்சியை கழுத்தோடு உரசி பின்னோக்கி கொண்டுசெல்ல, அவர் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தியிருந்தவர்  தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சிட்டார்.

 

நெற்றியிலும் வகிட்டில் குங்குமம் வைக்க மீனாட்சி அவர் கண்கள் சந்தித்தார்.  “ஹாப்பியா? “என அவரிடம் கண்களால் கேட்க, ‘ஆம்’ என கலங்கிய கண்களோடு தலையசைத்தார் மீனாட்சி.  

 

 திருமணம் முடிய பெரியவர்களிடம்  ஆசிர்வாதம் பெறுமாறு ஐயர் கூற ஜனார்த்தனன் தம்பதிகளிடம் மனம்  நிறைந்த,ஆனந்த கண்ணீருடனான வாழ்த்தினை பெற்றனர். 

 

இன்னுமே கயல் இவர்கள் அருகில்  வரவில்லை.அவள் இருந்த இடத்திலிருந்தே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். மீனாட்சிதான் இவளை அருகே அழைக்க அப்போதுதான் அருகில் வந்தாள். வந்தவளை இடையோடு அவர் கைவளைவுக்குள் வைத்துக்கொண்டவர் அரசுவுக்கும் கயலுக்கும் நடுவே  நின்றுருந்தார்.பார்க்க இளம் தம்தியர்களின் குடுபம் அம்சமாய் இருந்தது.பார்ப்பவர் கண்களும் நிறைந்து போனது. 

 

அவர்களை அப்படியே இருக்கச்சொல்லி  மாதவன் ஒரு புகைப்படம் எடுக்கப்பார்க்க, ரித்திகாவின் வார்த்தைகள் சற்று நிதானம்  தவறி அவ்விடம் விழுந்தது.அனைவருமே அவளைத்தான் ஏதோ ஒன்றை பார்த்துவைப்பதை போல பார்த்துவைத்தனர். 

 

“இப்போவே அப்பாக்கும் பொண்ணுக்கும்  நடுவுல நின்னுட்டாங்க நம்ம அத்தை.” என்று ரித்திகா கூற,அவ் வார்த்தை சாதாரணம் தான்,இருந்தும் அதன் தாக்கம் ஒன்றாக நின்றிருக்கும் மூவருக்கும் தரும் வலியை உணர்ந்த ருத்ராவின் கோபத்துக்கு அரைந்து விடுபவனை போல ஓரடி முன் வைக்க,பார்வதி அவனை முந்திக்கொண்டு 

 

“ரித்தி என்ன பேச்சிது..”என அதட்டினார். 

 

அரசு நிலைமையை சகஜமாக்கும்  பொருட்டு , 

 

“அதானே…என்ன மீனு நடுவுல வந்துட்ட’  என்றவர் மீனாட்சியை இடப்பக்கமாய் நிறுத்திக் கொண்டு கயலை மறுபக்கம்  வரச்சொல்லி மனைவியை இடையோடு சேர்த்துக்கொண்டவர் மகளை தோளோடு அணைத்துக்கொண்டார். ‘இப்போ  கரெக்டா?” இனி ரெண்டு பேருக்கும் நான் தான் எனும் விதமாய் கேட்க, 

“பேர்பெக்ட்  மாம்ஸ் ” என ருத்ரா கூற,

 

“சூப்பர் மாம்ஸ்” என்ற மாதவன் புகைப்படம் எடுக்க மீனாட்சி,கயல் இருவருமே ஒரு சேர அரசுவை தலை தூக்கி பார்க்க மாதவன்  கையிலிருந்த அலைபேசி அதை உள்வாங்கிக்கொண்டது.

 

அவ்விடம் இறைவனின் அருளில் நிறைந்து, அனைவருக்குமே உள்ளத்தில் மகிழ்வு. 

 

அனைவரும் ஒன்றாக ஜனார்த்தனன்  வீட்டுக்கு கிளம்பினர்.பார்வதி ருத்ராவிடம்  தம்பதியரை அழைத்து வருமாறு கூறி முன்னால் செல்ல ருத்ரா மற்றவர்களை  அழைத்து வந்தான்.அனைவரும் இறங்கி முன்னே நடக்க கயலின் முழங்கையோடு பிடித்து நிறுத்தினான் ருத்ரா.’ஏன்? ‘எனும்  விதமாய் கயல் அவனை ஏறிட, அவள் அவனிடம் கேட்டிருந்ததை கொடுத்தான்.

தேங்ஸ் என சிரித்தமுகமாக  பெற்றுக் கொண்டவள், இன்னுமொரு சின்ன ஹெல்ப் பண்ணனும் என அவனை கேட்க, 

‘என்ன? ‘ எனும் விதமாய் இப்பொது இவன்  அவள் கண்களை கேட்டான். 

 

“வெய்ட்  அ மினிட் ” என்றவள், மாதவன்  ஓட்டிட்டு வந்த அரசுவின் வண்டியிலிருந்து இறங்க,அதன் பின் இருக்கையில் ருத்ரா  தந்ததை வைத்தவள், அவள் வைத்திருந்த பையினை எடுத்து வந்து ருத்ராவிடம் கொடுத்தாள்.

 

“ஹனி,இதை நான் எடுத்துட்டு வர்றப்ப  கண்டுட்டாங்க,சோ வேற பேக்ல வெச்சு இதை கொடுத்துறீங்களா? ” என கேட்டாள்.

 

“ஓகே” என்று பெற்றுக்கொண்டவன், முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.  

 

உள்ளே அரசு ஜனார்தனனோடு  அமர்ந்திருக்க மீனாட்சி உள்ளறையில் அமர்ந்திருந்தார்.ருத்ரா அவளை திரும்பி  பார்த்து “வா” என்றவன், அவளை மீனாட்சி அருகே அழைத்து சென்றான். 

 

அதன் பின்னர் இலகுவாக அவ்விடம்  பொருந்தியவள்,அனைவருடனும் சகஜமாக பேசினாள்.மது அவளை அவலறைக்கு  அழைத்து சென்று பேசிக்கிண்டிருந்தாள்.

 

பகலுணவு அனைவருமாக உண்டு முடிக்க  மீனாட்சி, அரசுவை அவர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு இருவரும் அங்கே சென்றனர்.அவர்கள் செல்லவும் கயல் பார்வதியிடம் வந்தவள்,மாலை இவர்களை வரவேற்பதற்காக தான் முன்னே செல்வதாக கூறிவிட்டு வெளியில் வந்தாள்.இவள் வண்டியில் ருத்ரா சாய்ந்து நின்று அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.அவனிடம் கூறிக் கொண்டு கிளம்பிப்பார்க்க அப்பாட்ட சொல்லிட்டு கிளம்பலாம் வா என தன் அத்தை வீட்டுக்கு அழைக்க, 

 

“வேணாம் அவங்க தனியா இருப்பாங்க நா  பேசிக்கிறேன் ” என்றவள் கிளம்பினாள்.  

 

“நானும் வரட்டுமா? ” என அவள் அமர்ந்திருந்த பக்கமாய் குனிந்தவன் கேட்க 

“வேண்டாம் ‘ என்றவள் ‘ அந்த பார்சலை  மட்டும் அவங்கள்ட கொடுத்து போட்டுக்க  சொல்றீங்களா பிலீஸ்? ” என்றாள். 

 

“சரி’ என்றவன் அவள் எதுவோ  அவர்களுக்காய் ஏற்பாடு செய்கிறாள்  என்பதை புரிந்துக்கொண்டவனாய்,’தனியா முடியலைன்னா என்னை கூப்பிடு” எனக்  கூறி விடைக்கொத்தான். 

மீனாட்சியோடு அவர் வீட்டிற்குள் நுழைந்த  அரசு,உள்ளறையில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவாறே ” எதுக்கு நீ மட்டுமா இந்த  வீட்ல இருந்த மீனா? அண்ணா வீட்லயே இருந்திருக்கலாமே? “

 

“அண்ணா கூடத்தான் இருந்தேன்.ரித்திக்கு கல்யாணம் பேசவும் இங்க வந்துட்டேன். இது வருக்காக அவன் பேர்ல அவன் ஆசை படி கட்டினது.அவன் கல்யாணம் முடியவும்  கொடுக்கலாம்னு இருந்தேன்.அவனுக்கே தெரியாது இன்னும். “

மீனாட்சி கூறினார். 

 

“அதுக்கப்றம் நீ என்ன பண்ணலாம்னு  இருந்த? ” அரசு கேட்க,

 

“அத நான் நினைக்கவே இல்லை”என சிரித்துக்கொண்டே அவரருகில் அமர்ந்தார். 

 

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க “அத்தம்மா” என சத்தமாகவே அழைத்து தன் வரவை கூறிக்கொண்டு உள்ளே வந்தான் ருத்ரா.  

அவர்கள் அமர்ந்திருந்த  இடம் வந்தவன், இருவருக்கும்பொதுவாய் தான் கொண்டு வந்த கயல் தந்த பையினை கொடுத்தவன்,

 

” ஈவினிங் போறப்ப இதை டிரஸ்

பண்ணுங்க.என்னோட சின்ன கிப்ட்”  எனக்கொடுத்தான். 

 

“இதுவே  நல்லாதானே இருக்கு இப்படியே  போயிரலாம்.இன்னொரு நாள் போடலாம்  வரு “

என அரசுவை முந்திக்கொண்டு மீனாட்சி கூற, 

 

“உங்க இஷ்டம் உடுத்திங்கன்னா ஹாப்பி  பீல் பண்ணுவேன்’என்றுவிட்டு ஈவினிங் பைவ்கெல்லாம் வந்துருகன்னு கயல்  சொல்லிட்டு போயிருக்கா.சோ ரெடியானதும் சொல்லுங்க கிளம்பலாம்” என்று விட்டு சென்றான்.  

 

மீனாட்சி அரசுவை என்ன செய்யலாம் எனப் பார்க்க,

“உன் பொண்ணு  குடுத்தனுப்பியிருக்கா.போட்டுட்டு போகலைன்னா வீட்டுக்குள்ள சேர்த்துக்க  மாட்டா.போட்டுக்கோ”

என்றவர்,அவரும் அவருக்கான உடையை எடுத்துக்கொண்டு இருவருமாக கிளம்பி வர அனைவரும் ஒன்றாக அரசுவின் வீட்டை அடைந்தனர். 

 

வெளியில் கல்யாண வீட்டுக்கான எவ்வித அறிகுறியும் இல்லாதிருக்க இவர்கள்  வாசலை அடைய வாசற் கதவை திறந்துக்கொண்டு தேவதையென வெளியே வந்த கயல் அனைவரையும்  வரவேற்றாள். 

 

அனைவரையும் இன்முகத்துடன் உள்ளே அழைக்க அவளின் ஏற்பாட்டில்  அனைவரும் அசந்து போனார்கள்.அவர்களின்  வரவேற்பறை சற்று பெரிதாக இருக்க ஒரு பக்க சுவர் முழுதும் மலர் அலங்காரத்தோடு இருவருக்குமாய் அமர அலங்கார இருக்கை வைக்கப்பட்டு,வருபவர்களுக்கு அமரும் வகையில் ஐந்து மேசைகள் அலங்காரத்தோடு போட்டிருந்தது. கண்களை கூசாத விளக்குகளின் ஒளி அவ்விடம் பரவ அவளது சந்தோஷம் வெளியிடப்பட்ட விதம் அனைவரின் உள்ளத்திலும் சந்தோஷத்தை தந்தது. வீட்டினில் நுழைந்ததும் அது ஓர் வரவேற்பு மண்டபத்தைப்போல வெட்டிங் ப்லேநர்ஸ் இன் உதவியோடு அலங்கரிந்திருந்தாள். அரசு திட்டுவார் என்பதை புரிந்து அவர் முகம் மட்டும் பார்க்காது அனைவரையும்  உபசரித்தாள். 

 

அடர் பச்சை வண்ண சாரி  அணிந்திருந்தாள்… கூந்தல் இருபக்கமும்  தோல்களில் பிறழ அவ்விடத்தின் ஒளியில் நிலவுப்பெண்ணிடம்  மயங்கித்தான் போனான் ருத்ரா.வந்தது முதல் அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளை அள்ளி  அனைத்துக்கொள்ளத்தான் கைகள் துடிக்க இடையோடு கை கோர்த்து அவள் கண்களினூடே தன் பார்வை நுழைத்து  இதழ்கள்களை சுவைக்க பித்தம் கொண்டவனாய் தோட்டத்தினை சுற்றித்திரியும் வண்டென அவளையே பார்வையால் சுற்றிக்கொண்டிருந்தான். 

 

தன்னால் இயன்றவரை அனைவரையும்  இன்முகத்துடன் உபசரித்தவள் அவன் பார்வை  தன்னை துளைப்பதை உணர்ந்து, அது தன்னுள் ஏற்படுத்தும் மாற்றத்தை  கடினப்பட்டு அடக்கியவளாக வளம் வந்துக்கொண்டிருந்தாள்.இறுதியாக அனைவரும் கூறிக்கொண்டு கிளம்ப,

 

ரித்திக்காவின் மாமியார் பார்வதியிடம் எதுவோ கூற அவர் கயலோடு  பேச தயங்குவதை கண்ட கயல் அவரிடம் சென்று என்ன வென்று கேட்டாள்.அவர் ஒன்றும் இல்லை என்று சமாளித்தாலும்,ரித்தியின் மாமியார்,

 

“அவ  சொன்னா புரிஞ்சிப்பா சம்பந்தி ‘ என்றுவிட்டு, ‘நீ இன்னைக்கு மது கூட வந்து தங்கிக்கோ மா.’என்றிட,ஏன் எனும் விதமாய் இவள் பார்க்க ‘அவங்களுக்கு இன்னைக்கு தானே கல்யாணம் ஆகியிருக்கு, வயசு பொண்ணு உன்னை தனியா இங்க வீட்ல… ” என்று அவர் முடிக்க வில்லை அவ்விடம் வந்த மீனாட்சி, 

 

“அண்ணி,நாளைக்கு என் பேக் ரெண்டு  பாக் பண்ணி வெச்சிருக்கேன்.வருகிட்ட  அனுப்பி விடுங்க என்று விட்டு கயலிடம்  திரிம்பியவர்,கயல் காலைல இருந்து ரொம்ப டையர்ட் ஆகிட்ட.போய் பிரெஷ்  பண்ணிகிட்டு தூங்கு.காலைல கிளீன் பண்ணிக்கலாம் என்றார். சரி என அப்போதைக்கு தலையாட்டி அவ்விடம் விட்டு கயல்நகர, 

 

“அண்ணி அவளை ஒன்னும் செய்ய  சொல்ல வேணாம் சின்னதா எதுன்னாலும் அவளை ரொம்ப ஹர்ட் பண்ணிரும்.நான் பார்த்துக்கிறேன்” என அவர்கள் இருவருக்கும் பொதுவாக கூறினார்.

 

கேட்டிருந்த அரசுவுக்கு மகிழ்வென்றால் 

‘ அட  இதை எப்படி  மறந்துட்டேன் என மனதில்தன் தலையில் தட்டிக்கொண்டவள் என்ன செய்யலாம் என யோசனையோடு வர, அவளை வழி மறித்த ருத்ரா, 

 

“என்னாச்சு கவி?முகம் ஏதோ போல இருக்கே.யாரும் எதாவது சொன்னாங்களா?”  எனவும்,

 

“ஒன்னில்லை கொஞ்சம் டையர்டா இருக்கு அதான் ” என்றாள்.  

 

“காலைல கிளீன் பண்ண யாரையாவது  அனுப்புறேன் பிரெஷ் பண்ணிட்டு தூங்கு.இப்போ ஒன்னும் பண்ண வேணாம்” என்றான். 

 

அவன் கூற அவன் வார்த்தைகளில் இருந்த மென்மையான,கரிசனம் மனதுக்கு தன்னவன் தந்த இதத்தில், அவன் தோள் சாய்ந்திட துடித்த மனதை அடக்கியவளாய் முகம் மலர சிரித்தவள்,

 

“அரேஞ் பண்ணவங்களே காலைல கிளீன் பண்ணிருவாங்க, தேங்க்ஸ்”  என்றாள். 

 

“குட் நைட் ” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க துடித்த மனதை அடக்கியவனாய் விடை பெற விரும்பாமலோ அவளை விட்டு சென்றான். அப்போதே அவள் அலைபேசி  ஒளித்திரையில் மின்னுகிறது இப்படியாய் ஓர் தகவல். 

 

“இந்நாள் என் வாழ்வில் ஓர் இனியநாள்.இவ் இனிய நாள் எrன்  வாழ்வில் வர,என் இனியவளுக்காக காத்திருக்கிறேன்… ” 

 

வாசித்தவள் நிமிர்ந்து அவனை தேட மீனாட்சியின் தோள்களில் கையிட்டு நெற்றியில் இதழ் பதித்தவன் இவளை பார்த்து தலையசைத்தவன் வண்டியில் கிளம்பினான். 

 

இவள் உள்ளே வர கைகளை கட்டியவாறு இவளை பார்த்துக்கொண்டிருந்த அரசு  அவள் அருகே வரவும் எதுவோ கூற வாயெடுக்க இவள் சட்டென்று அவரை அனைத்துக்கொண்டாள்.  

அவளுக்கு அது மிக தேவையாக  இருந்தது. 

“தேங்க்ஸ் ஹனி,ஹாப்பி போர் போத் ஒப்  யூ. ” 

இனி எங்கு தந்தை மகளை திட்ட, 

 

“எதுக்குடா கண்ணம்மா இப்படியெல்லாம். நான் ஒன்னும் வேணாம் சொன்னேன்  தானே.இப்போல்லாம் என் பேச்சை கேக்க மாட்டேன்ற… “

 

“என் சந்தோஷத்துக்காக ஹனி.ஆம்   ஹாப்பி வித் திஸ். “

 

“சரி போய் தூங்கு ரொம்ப டையர்ட் ஆகிட்ட. “

 

“ஹ்ம்ம் ரொம்ப’ என்றவள், அவலறைக்கு சென்று ஒரு பரிசினை எடுத்து வந்தவள் அதனை மீனாட்சியையும் அருகே அழைத்து இருவருக்குமாய் கொடுத்தாள். 

 

“ரெண்டு பேருக்கும் நம்மளோட பரிசு ரெண்டு பேரும் ஒன்னா பிரிச்சு பாருங்க… என்றவள்,

” குட் நைட் “என்றுவிட்டு அவர்களுக்கு  தனிமையை கொடுக்க அவலைறைக்குள் நுழைந்துக்கொண்டாள். 

 

ருத்ரனின் ‘நம்ம’ என்ற வார்த்தை  அவன் அறிந்தே கூறியிருந்தாலும் கயலின் ‘நம்ம’ எனும் வார்த்தை அவளே  அறியாது மனதின் வெளிப்பாடாய் வந்திருந்தது.

 

  

Leave a Reply

error: Content is protected !!