கனலியின் கானல் அவன்(ள்)-21

கனலியின் கானல் அவன்(ள்)-21
அரசு அவரது வண்டியில் கயலின் பைகளை வைத்தவர், மீனாட்சியுடன் வீட்டு வாயிலில் நின்றிருந்த கயலை பார்த்து, “போகலாமா? “எனக் கேட்க அவர்களும் வந்து வண்டியில் ஏறினர்.வண்டி விமான நிலையம் நோக்கி செல்ல வண்டியில் மூவருக்கிடையே அமைதி.அதனை கழைக்கும் பொருட்டு,
“கயல் ஏதோ வழில வாங்கணும் சொன்னேல்ல,என்னன்னு சொன்னா இங்கயே ஏடுத்துறலாம்.இல்லன்னா இடைல டிராபிக் இருக்கும் வண்டி நிப்பாற்றது கஷ்டம் டா.” மீனாட்சி சொல்ல , “ஓகே.மீனாம்மா எடுத்துறலாம்” என ஒரு அங்காடியில் வண்டியை நிறுத்தி அவளே எடுத்து வருவதாகக் கூறி சென்றாள்.அது வரை அரசுவும் மீனாட்சியும் வண்டியில் இருந்தனர்.
“எனக்கு சொல்லிட்டு நீங்க இப்படி இருக்கீங்க தேனு.”என முகத்தில் யோசனையுடன் இருந்த அரசுவின் கைகளை பற்றிக்கொண்டார் மீனாட்சி.
“இவ தேவையில்லாமல் எதையோ மனசுல போட்டு குழப்பிக்கிறான்னு தோணுது மீனா.எதுன்னாலும் பேசினாத்தானே என்னன்னு புரியும்.காலைல இருந்து முகமே நல்லால்ல. “
“அவபேசல்லேன்னா என்ன நீங்க கேட்டிருக்கலாம் தேனு. “
“இல்ல மீனா,அவ என்கிட்ட எதுவுமே மறச்சதில்லை.இது அவளுக்கு எப்டி பேசணும்னு புரில.அதான் அமைதியா அவளுக்குள்ளேயே இப்டி குழம்பி போய் இருக்கா.அதோட ருத்ரா கயலோட அவரே பேசிக்கிறேன்னு சொல்லவும் தான் நான் இடைல பேசாம இருக்கேன். எனக்கென்னவோ அவருக்கு இவ சொல்லாமலே போராளோன்னு இருக்கு. “
“காலைல வரு கூட பேசுறப்ப நா சொன்னேங்க. “
“நீ சொன்ன.ஆனா இவ சொன்னாலான்னு தெரில.அதோட ருத்ரா அவகூட பேசினாரான்னும் தெரிலயே.”
“நா வருகூட பேசுறேன்.” எனக் கூறி அலைபேசியை எடுக்க கயல் வந்து வண்டியில் ஏறினாள்.
கண்களால் அவர் அலைபேசியை காட்டிவிட்டு கயலிடம்,
” வாங்கியாச்சா கயல்,கேட்டது எல்லாம் இருந்ததா? “என மீனாட்சி கேட்க,
“இருக்கு மீனாம்மா என்றவள் ‘என்னாச்சு ஹனி என அரசுவிடம் கேட்க ஒன்னில்லடா என்றவர் வண்டியை கிளப்பினார்…
மீனாட்சி கயலை வைத்திக்கொண்டு பேசமுடியாததால் ருத்ராவுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி,கயல் பற்றி கேட்க,
“நோத்திங் டு வொர்ரி அத்தம்மா, மாம்ஸ்கிட்ட சொல்லிருங்க.ஐ வில் ஹாண்டல் ஹேர் “அவனிடமிருந்து வந்த பதிலை அரசுவிடம் காட்ட சற்று நிம்மதியானார்.
வண்டி விட்டு இறங்கி நிலையத்தினுள் முற் பகுதி சரிபார்த்தலைகளை முடித்துக்கொண்டு உள்ளே செல்ல நேரம் சரியாக ஆறு முப்பது.இரண்டு மணிநேரத்துக்கு முன்னமே வந்திட வேண்டும்,அபோது தான் செக்கிங் முடிய நேரம் சரியாக இருக்கும் என கணித்து வந்தாலும் அரை மணிநேர தாமதம்.
இவளது டிக்கெட்டை பெற்றுக்கொண்ட அலுவலர்,
“மேம் யுவர் பிளைட் அட் 6.pm. யூ ஆர் மிஸ்ட் த பிளைட்” எனவும் ,
“வாட்…” என குழம்பிய கயல் டிக்கெட்டை எடுத்துப்பார்க்க,அதோ இவளை பார்த்து ஈ என இளித்து வைத்தது. அரசுவை திரும்பி பார்க்க அவரும் அவளருகே வந்து எட்டு மணிக்குன்னு தானே சொன்னான்.”
“அப்போ நீ பார்க்கலயா? “என கயல் கேட்க,
“நீயும் பார்க்கலயா என அரசுவும் கேட்க,
“பார்க்காததால தானே மிஸ் ஆகி இருக்கு.நல்ல அப்பா பொண்ணு “என்றவர் முன் வந்து அடுத்த பிளைட் எப்போ எனக் கேட்க,அலுவலரோ காலை ஒன்பது மணிக்கு என்றார்…
இடது புகுந்த கயலோ,
“அதுல எனக்கு புக் பண்ணிடுங்க” எனவும் அரசு அவளை தடுக்க, எப்படியோ அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு பிளைட் என முடிவாக திரும்ப வீட்டுக்கு சென்று வருவதென்றால் கஷ்டம் என்றவள்,அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை பதிவுசெய்து தங்குவதாகக் கூறினாள்.அரசு சற்று கோபம் கொள்ள மீனாட்சி அவரருகே சென்று ஏதோ சொல்லவும் சரியென்றுவிட்டார்.அவளை அறையில் விட்டுவிட்டு இவர்கள் வீடு திரும்பினர்.
கயலுக்கு ஏனோ மனம சரியில்லை.அளவுக்கதிகமாக அரசுவை நோகடிக்கிறோமோ என உறுத்த தொடங்கிவிட்டது. இதுவே அவர்கள் இருவருக்கிடையே பிரச்னையை உண்டு பண்ணுமோ என நினைக்க மனத்துக்கு மேலும்பாரம் ஏறிக்கொண்டது.
அதிகப்படியான டென்ஷன் தலைவலியை உண்டுபண்ண மாத்திரை இரண்டை குடித்தவள், பயணப்பொதியில் இருந்த அவன் டீ ஷர்ட்டை தான் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் டாப்பின் மேலாக அணிந்துக் கொண்டாள்.அவனே அவளை அணைத்திருப்பதைப் போன்ற பிரம்மை அவளுக்கு.அன்று அந்தக்கயவர்களிடம் மாட்டியவேளை அவள் உடை கிழிந்திருக்க அவன் அணிந்த்துக்கொள்ள தந்த டீ ஷர்ட் பல இரவுகளில் அவளின் அடையாகி போனது.இவள் காதலை அரசு கண்டுக்கொள்ள இதுவும் ஓர் காரணம்.
அவள் அறை ஜன்னலூடாக பாதைகளில் எறும்பென ஊர்ந்துசெல்லும் வாகனங்களை பார்த்திருந்தவள், அவ்வாகனங்களிடையே ஒலி எழுப்பிய போலீஸ் வாகனத்தைக் கண்டவள்,அவன் இருப்பானோ எனும் ஆர்வத்தில் எறும்பாய் தெரியும் மக்களிடையே அவனை துழாவினாள்.
ஹ்ம்ம்… பெருமூச்சொன்று வெளிவர.எங்கம்மா ரெண்டு மாதங்களாவது வாழ்ந்தார்.எனக்கு அந்த கொடுப்பனையும் இல்லை போல… இவ்வாறு அவள் சிந்தனைகள் செல்ல அறையின் அழைப்பு மணி ஒலித்தது…
கதவை திறந்தவளுக்கு ஆச்சர்யம் வாசலில் காத்திருந்தது.
அவனையே இமைக்காது பார்த்திருக்க அவனுமே அவளுக்கு சளைத்தவன் இல்லை என்பதாய் பார்க்க அவன் விழி தந்த பார்வை,அவளை குற்றம் சாட்டியது.அதை மீறி அவன் பார்வையில் தெரிந்த காதலில் மூழ்கிக்கொண்டிருந்தாள் பெண்ணவள்.
வாயிலை மறைத்து அவள் நின்றிருக்க அவள் தோள்களில் நில்லாது ஒரு பக்கம் வழிந்து கொண்டிருந்த அவன் ட்ஷர்டை கவனித்தவன்,மனதினுள்’இவளை நினைத்து இவளை என்ன செய்தால் தகும்’ என தலையில் அடித்துக்கொண்டான்.காதல் நிரம்ப இருந்தும் அதை எதற்காக மறைத்து இப்படி வருத்திக்கொள்கிறாள் என்ற எண்ணம் வேறு.
“வழி விட்டா உள்ளே வரேன் இல்லன்னா இப்டியே போகட்டுமா?” ருத்ரா கேட்க,ஏதோ மாயா உலகில் இருப்பவள் போலாகி அவன் வார்த்தைக்கு கட்டுண்டவள் அவன் உள்ளே வர வழிவிட்டாள்.
உள்ளே வந்தவன், “பிளைட் உன்னை விட்டுட்டு போய்ட்டாமே.இரும்பு பறவைக்கே புரிஞ்சிருக்கு நீ என்கிட்ட சொல்லாம வரப்போறான்னு அதான்.”
ஹ்ம்ம்…பெருமூச்சொன்றை வெளியிட்டவன்,
“காலைல பதினொரு மணிக்கு வண்டியை கிளப்பினது.இங்க வந்து தான் நிறுத்தினேன்.வழில எங்கயும் நிறுத்தல செம பசி.முதல்ல நல்லா குளிக்கணும்’ என்றவன்,
‘அச்சோ வர அவசரத்துல டிரஸ் ஒன்னும் கொண்டுவரல.எல்லாம் வண்டில இருக்கு. இது காலைல போட்டதுதான் இருந்தாலும்…’ என்றவன்
‘சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’ என்று விட்டு,
‘கவி நா குளிச்சிட்டு வரேன் சாப்பிட ஏதாச்சும் ஆர்டர் பண்ணேன்”என்றுவிட்டு குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டான் .
‘என்னாச்சு இவங்களுக்கு அவங்க பாட்டுக்கு வந்தாங்க பேசுறாங்க.இப்போ குளிக்க வேற போய்ட்டாங்க. நா இப்போ என்ன பண்ணட்டும்.. ‘ இன்னும் தன்னிலைக்கு வராதவள் அப்படியே நின்றிருக்க, சிறிதுநேரத்தில் அலைபேசி ஒலிக்கவும் சுயநினைவுக்கு வந்தாள். அரசுதான் அழைத்திருந்தார்.
“கண்ணம்மா என்ன பண்ற இன்னும் தூங்கலையா? காலைல எந்திரிக்கணுமேடா? ”
“ஹனி…” இவள் அழைக்க இடையில் குளியலறையில் இருந்து வெளிவந்தவனோ ‘யாரு கவி மாமா வா? ‘
கட்டின புருஷனாட்டம் மிக சாதாரமானமாய் தலையை துவட்டியைக்கொண்டே வெளியில் குளியலறையில் வந்தவன் கேட்க,
‘ஆங்… ‘ இவள் தடுமாற அழைப்பிலிருந்தவரோ
“கண்ணம்மா ருத்ரா வந்திருக்காறா?லேட்டாகும்னு சொன்னாரே.”
வார்த்தைகள் தேடியவள், “ஹ்ம்ம் இப்போதான் வந்தாங்க.”பதில் கொடுத்தாள்.
“சரிடா பேசிட்டு நேரமா தூங்கு … நான் காலைல பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தார்.
அழைப்பை வைத்தவள் அவன் பக்கம் திரும்ப அவன் அணிந்து வந்த அதே காட்சட்டையை அணிந்திருந்தவன் துவட்டிய டவலினால் தோளை சுற்றி போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். தலையில் நீர் துளிகள் இன்னும் வடிய, கைகளோ அவனை அப்படியே வயிற்றோடு சாய்த்துக்கொண்டு அவன் தலை முடிகளை உலர்திடத் துடிக்க,கண்களோ சுடச்சுட உணவை பரப்பி பசியோடு இருப்பவனை பார்வைக்கு வைத்ததை போல அவனை பார்த்திருந்தாள்.
“கவி சாப்பிட என்ன சொன்ன? இன்னும் வரல,என்னால பசி தாங்க முடில.எப்பவுமே நான் இப்டி இருந்ததில்லை.”அவன் கேட்கவும் தான் இன்னும் உணவு ஆர்டர் செய்யாததே அவள் நினைவுக்கு வந்தது.
“அச்சோ நான் இன்னும் ஆர்டர் பண்ணலை.”
அதன் பின் அவனே உணவை ஆர்டர் செய்ய,உணவு வந்ததும் அவளுடன் எதுவுமே பேசாது முதலில் உணவே முக்கியம் என உண்டு முடித்தான்.
அவளும் அவனுக்கெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு அவனை பார்ப்பதும் அறையை கண்களால் துழாவுவதுமாய் இருந்தாள்.சாப்பிட்டு முடித்தவன் அவளை ஒருமுறை உற்று நோக்க இவள்தான் தடுமாறிப்போனாள். மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே சென்றவள் வெளியே பார்ப்பது போல திரும்பி நின்றுக்கொள்ள அவனோ,
“கவி நீ போட்டிருக்க டீ ஷிர்ட்டை தந்தா, நான் போட்டுட்டு காலைல திருப்பி தரேன். இப்படியே எவ்வளவு நேரம் தான் இருப்பேனாம்.”
அப்போதுதான் அவள் அணிந்திருக்கும் உடையை பார்க்க, மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டவள்,பதில் கூறாது அவள் நின்றிருந்தவாக்கிலே திரும்பாது அதனை கழட்டி அவனுக்கு நீட்டினாள்.அதை அணிந்துக்கொண்டவனோ அவளுக்கு மிக அருகில் பின்நின்றான்.இவள் உடலில் மெல்லிய நடுக்கம்.கைகள் ஜன்னலின் கம்பிகளை இருகப்பற்றிக்கொண்டன. இவ்வளவுக்கும் அவனோ அவன் இரு கைகளையும் காட்சட்டை பாக்கெட்டினுள் விட்டிருந்தான்,
“கவி…” இவனிடம் இருந்து வெளிவந்த நொடி திரும்பி அவனை இறுக அணைத்திருந்தாள் பெண்ணவள்.
கட்டுப்படுத்த முடியாமல் கேவிக்கேவி அழ ஆரம்பித்து விட்டாள்.அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
“கவி… கவிம்மா… எதுக்கு இப்டி அழுற… ‘
கவி…. இங்க பாரேன்…” அவளை நிமிர்த்த முனைகிறான் ஹ்ம்… ஹ்ம்… அழட்டும் என விட்டுவிட்டான்.
அழுகை நின்ற பாடில்லை.கேவல் சற்று குறைய,அவன் நெஞ்சில் தன் முழுபாரத்தையும் இறக்கியிருந்தவள் மெல்ல நிமிர்ந்து அவனைப்பார்க்க, அவளையே பார்த்திருந்தான் காதல் நிறைந்த விழிகளுடன்.
“எதுக்கு என்ன லவ் பண்ண வரு? நான் பாக்குறப்ப எல்லாம் எதுக்கென்னை பார்த்த?”
அவன் நெஞ்சில் தன் பஞ்சுக் கைக்கொண்டு அடித்துக் கொண்டே கேட்க,அவள் மனதில் உருத்திக் கொண்டிருப்பது வெளிவரட்டும் என அமைதி காத்தான்.
“நான் மட்டும் லவ் பண்ணிட்டு போயிருப்பேன்.எதுக்கென்னை நீயும் லவ் பண்ண வரு.எதுக்கு மீனாம்மா அண்ணன் பையனா பொறந்த.வேற வீட்ல பிறந்திருக்கலாம்ல.பாரிப்போ எங்க அப்பாவோடது போல எனக்கும் என் காதல் கிடைக்காம போகுது… என்னால இங்க இருந்து உன்னை பக்கத்துல வெச்சிட்டு தூரமா இருக்க முடில வரு.அதான் நான் போறேன் உன்னை,ஹனிய விட்டுட்டு. இவ்வளவு நாளும் ஹனி என்னால அவங்க சந்தோஷ மெல்லாம் இழந்துட்டு வாழ்ந்தது போதும்.இனி நான் தனியா இருந்துப்பேன் “
கூறிமுடித்தவள் மீண்டும் அழ ஆரம்பிக்க,
“கவி அழுறது நிறுத்து.முடில என்னால. எவ்வளவு நேரம் தான் உன் ஒப்பாரியை கேப்பேன்… “
அவளை இலகுவாக்கும் பொருட்டு பேச, அவளை ஆறுதல் படுத்துவான் என்றெண்ணி இருக்க இவன் இப்படி கூறவும்,வெடுக்கென அவனை விட்டு பிரிந்து ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.திரும்பியவளோ,
“யாரிப்போ இங்க வர சொன்னா,என்னை என் பாட்டுக்கு போக விட்டிருக்க வேண்டியது தானே.இதுக்கும் மேல என்னால முடில.” கோபத்தில் கூற,
அப்போதே அவன் அலைப்பேசி வேறு ஒலித்தது.மீனாட்சிதான் எடுத்திருந்தார்.
“என்ன அத்தம்மா? “
“ஏதும் பேசினாளா வரு? “
“ஹ்ம் ரொம்ப… அதான் வாயை மூட என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் “
“மாமாவும் யோசிச்சிட்டு இருக்காங்க டா.. “
“அத்தம்மா மாமாக்கு நான் எப்பவோ பேசிட்டேன்.என் மேல நம்பிக்கை இருந்தா யோசிச்சுட்டு இருக்க மாட்டாங்க.போய் தூங்கு.காலைல பேசிக்கலாம்.நான் பார்த்துக்கிறேன். “
“சரிடா, அவளை பார்த்துக்கோ…”
அலைபேசியை அனைத்து பாக்கெட்டில் இட்டவன் அவள் அழுகை சற்று மட்டுப்பட்டிருக்க, அவள் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பிக்கொண்டான்.கன்னத்தை தாங்கியவன் கண்களை தன் இரு பெரும்விரல் கொண்டு அழுந்த துடைத்தவன்,முகத்தை அவனை பார்க்குமாறு தன் கைக்குள் வைத்துக்கொண்டே உயர்த்தினான்.சிவந்த கண்களுடன் அவனை ஏறிட அவள் கண்களில் கண்ட எதிர்பார்ப்பை தனதாக்கி சிவந்திருந்த ஆதரங்களை சுவை மிகுந்த ஆரஞ்சு சுளைகளை சுவைக்க ஆரம்பித்தான். அவளுக்கும் அதுவே தேவையாய் இருந்ததோடு,அவனுக்கும் நீண்ட நாளாய் எதிர் பார்த்தது என அனைத்தும் சேர்த்து அவளுக்கு கொடுத்திட,தன் உயிரையே அவனுக்குள் தன் இதழூடே கடத்திட நினைத்தவள் அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
அழுந்துக்கொண்டிருந்தவள் இதழ்களை அழுந்த முத்தமிட்டு பின் அதனை அணுஅணுவாய் ருசிக்க ஆரம்பித்தவனோ அதனை நீண்ட நேரம் தொடர முடியாது அவள் மூச்சுக்காக தவிக்க அவன் இதழ்களோ பிரியமாட்டேன் என எச்சில் கொண்டு ஒட்டிக்கொள்ள மெதுவாக பிரித்தெடுத்தான்.
தன் சுவாசத்தை சீர்படுத்திக்கொண்டே இன்னுமே அந்த ஏக்கம் நிறைந்த முகத்தோடு அவனை ஏறிட,பொருக்க முடியாதவனோ அவளை தன் இருகரம் கொண்டு,தாய் குருவி,குஞ்சுகளை தன் சிறகுக்குள் காத்துக்கொள்வதைப்போல அணைத்துக்கொண்டான்…
அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டவன் அப்படியே சில கணம் தாமதித்து பின் அவள் தலை மேல் தன் கண்ணம் வைத்துக் கொண்டவன்,
“கவி… இப்டி இருந்தேன்னா எப்டி… என்னை நீ பேச விட மாட்டேங்குற…
அம் லூஸிங் மை கண்ட்ரோல்… “
அவளை இன்னும் இறுக்கிக்கொண்டான். அவளுமே அவனுள் புதைத்திடும் எண்ணம் போல் அவனுக்கு ஈடாக அணைத்திருந்தாள்.
“கவிமா… அன்னைக்கு உன்னை பார்கவரேன்னு சொல்லிட்டு அப்றம் மாமாவை பார்க்க போனேன்ல.அப்போவும் அவங்க கல்யாணத்துக்கு முழுசா சம்மதிக்கல.அப்போ நா சொல்லிட்டேன். ‘உங்க பொண்ணு என்னை லவ்வோ லவ்வு பண்றா.அதைவிட நான் அவளை லவ் பண்றேன்.ஆனா நீங்க என் அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா தான் நீங்க ரெண்டுபேருமா நம்ம கல்யாணத்தை பண்ணிவைக்கலாம்னு.அப்போவே உங்கப்பாக்கு உனக்கு என் மேல எதுவோன்னு தோணிருக்கு.ஆனா நீ சொல்லாம கேட்க கூடாதுன்னு இருக்காங்க.நீயும் வாய தொரப்பனான்னு மூடிட்டு அப்படியே கிளம்ப ரெடியாகிட்ட. அவங்களை ஹர்ட் பண்ணகூடாதுன்னு எல்லாம் யோசிச்சு பண்ற.இதுல அவங்க ரெண்டு பேர் மனசும் நோகும்னு நீ நினைக்கல…’
“உங்கிட்ட இப்போ வரை என் லவ்வை சொல்லலயே… “
‘அட ஆமால்ல…எப்போ லவ் சொன்னாங்க.. நானுமே சொல்லலையே.’அவன் நெஞ்சில் இருந்து தலை தூக்கியவள் அவனை விழித்துப் பார்க்க,
“எதுக்கிப்போ இப்டி முழிக்கிற… அவள் நெற்றி முட்டியவன்,உன்கூட பேசின ஒவ்வொரு வார்த்தைலயும் உனக்கு அதை உணர்த்தினேன் தானே… நீயும் புரிஜிகிட்டல்ல கவி “
ஆம் எனும் விதமாய் அவன் நெஞ்சில் மீண்டுமாய் சாய்ந்துகொண்டாள்.
“எங்க வீட்ல பேசவேண்டியது என் பொறுப்பு. அதோட என் அத்தப் பொண்ணை கட்டிக்க போறேன்.யாரும் என்ன சொல்லிட போறாங்க.ஹ்ம்ம்.. “
“இல்லை.அது… ஹனிய ஏதும் தப்பா பேசி அதுனால மீனாம்மா ஹர்ட் ஆகி,அப்றம்… அவங்க அவங்க அண்ணாக் கூட மனஸ்தாபம் ஏதும் ஆகின்னு என்னால குடும்பத்துக்குள்ள கஷ்டமா போயிரும்ல. ஹனிக்கு இப்போ தான் குடும்பம்னு கிடைச்சிருக்கு.சந்தோஷமா இருக்காங்க.அவங்க சந்தோஷம் கெடவேணாமேன்னு தான்…”
ஒரு கையால் அவளை அணைத்தவன், மறுகையால் அவள் இதழ்களை மூடி
“ப்பா இவ்வளவு யோசிச்சிருக்க, உங்கப்பாவை மட்டும் நாம ஏத்துக்கல. உன்னையும் சேர்த்துதான்.இதை மனசுல நல்லா பத்திய வச்சுக்கோ.எங்க வீட்ல நான் சொல்லாததுக்கு என் மனசை புரிஞ்சு தான் இருக்காங்க.மாதவா உன்னை என்னனு கூப்பிட்றான்.அண்ணின்னு உரிமையா தானே.அது கூட புரில உனக்கு.எங்கக்கா பத்தி மைண்ட்ல ஏதிக்காத.சும்மாவே எனக்கும் அவளுக்கும் ஆகாது.அது என்னன்னே தெரில.சோ…சமத்து பொண்ணா இந்த மண்டைல இல்லாத மூளையை வெச்சு யோசிக்காம.. இப்போ கிளம்புன பயணத்தை போவியாம். “
அவனை நிமிர்ந்து மீண்டுமாய் விழித்து பார்க்க,
“இப்போ கண்டிப்பா உனக்கு ரிலாக்ஸ் வேணும்.அதுக்காக மூனுமாச விசாவை எஸ்ட்டெண்ட் பண்ண முடியாது.ஜஸ்ட் த்ரீ மந்த்ஸ் தான் உனக்கான டைம் ஓகே.இங்க வர அன்னைக்கு மறுநாள் என் பொண்டாட்டியா என் பக்கத்துல இருப்ப… ஒரு நாள் சரி நீ வர லேட் பண்ணினா அடுத்தநாள் அங்க இருப்பேன்.
“இல்லை அது… “
அவளுக்கு அவன் பேச இடம் கொடுக்கவில்லை…மீண்டுமோர் முத்தச்சத்தம்… ஒலி எழுப்ப முதலில் மூச்சுக்காய் திணறியவள் இப்போது அவனை மூச்சடைக்க வைத்ததாள்… புரிந்துக்கொண்ட இதழ்களோ தன் இணையை பிரிய முடியாது ஒன்றோடு ஒன்று சில கணம் உரசிக்கொண்டிருந்தன.
“கவி என்னால முடிலடி… இதுக்கும் மேல இருந்தேன்னா, தப்பாகிரும்.’அவள் இதழை மீண்டுமாய் அழுந்த முத்தமிட்டவன்,
‘நான் வண்டில என்ட்ரெஸ்ஸெல்லாம் இருக்கு எடுத்துட்டு,கால் ஒன்னு பேச இருக்கு,பேசிட்டு வரேன்.நான் வரமுன்ன தூங்கிரு…ப்ளீஸ் இதுக்கும் மேல ஒன்னும் யோசிக்காத.அவள் நெற்றியில் இதழ் ஒற்றியவன் அவன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்…
ஹ்ம்ம்… அவளும் சென்று இன்றோடு ஒரு வாரம் ஆகியிருந்தது.அன்று நடந்த இரவின் உரையாடலும் அதனுடன் அவள் இதழ் சுவையையும் நினைத்துக்கொண்டு, ருத்ராவோ மலைகளை இரசித்துக் கொண்டிருக்க,கயலோ அவனை ‘யேன்டா விட்டு வந்தோம்’ என்றெண்ணியவாறு மாலை வேளை கடலை முத்தமிடும் சூரியனை பார்த்திருந்தாள்.