காதலின் விதியம்மா 10

KV -5732f270

காதலின் விதியம்மா 10

அவளை காப்பாற்றவே தொடங்கிய இதழ் முத்தமோ முடிவே இல்லாமல் செல்ல, தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் அவளின் இதழை சுவைத்து கொண்டு இருந்தான் பைரவ்.

 

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த தேஜு அவள் இருக்கும் நிலையை கண்டு அதிர்ந்து என்ன செய்வது என்றே தெரியாமல் அவனது முத்தத்தில் கிறங்கி கண்களை அழுத்த முடி கொண்டாள். மூச்சு விட சிரமப்பட்டாலும் இன்றே உலகம் அழிந்து விடுவது போல அவளுள் இன்னும் இன்னும் புதைந்து போனான்.

 

எதற்கு மேல் முடியாததால் தன் முழுபலம் கொண்டு அவனை தள்ள, அதன் பிறகே தான் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்றே தெரிந்து அதிர்ந்தான். தன்னையே திட்டி கொண்டு அவளை பார்க்க,  அவளோ இப்பொழுது தான் முதல் முறை சுவாசிப்பது போல் மூச்சு விட்டு கொண்டு இருக்க சிவந்த இதழ்களோ இவனின் கைவண்ணத்தால் இன்னும் சிவந்து அவனை மேலும் சோதிக்க,

 

‘என்ன காரியம் பண்ணிருக்க டா அவ கிட்ட என்ன சொல்லுவ’ என்று யோசித்து கொண்டே “தேஜ்” என்று அழைக்க அவளோ ஓ என்று அழுக தொடங்கினாள். 

 

 

 

“ஒருவனுக்கும் பொறுப்பே இல்லை வாய் தான் சொல்கிறதே தவிர கையோ ஒன்றும் செய்வது இல்லை. அவனை கொல்ல இரு வாய்ப்பு வந்தும் நீங்கள் அதை தவற விட்டு விட்டீர். உங்களை நம்பி தானே இந்த வேலையை கொடுத்தேன். இனி நானே தான் இறங்க வேண்டும் யாரையும் நம்ப முடியவில்லை. அவனை காப்பாற்றிய பெண்ணை தான் முதலில் கொல்ல வேண்டும். அவள் எங்கே தங்கி உள்ளாள் என்றாவது விசாரித்து சொல்லுங்கள்” என்று கோபமாக கத்தி விட்டு வெளியே சென்றான் சண்டி.

 

“ஏன்டா அண்ணா திட்டுறா மாதிரியே பண்றீங்க உன்னோட முகத்தை அவன் பார்த்துட்டானா” என்று கேட்டான் சண்டியின் தம்பி.

 

“இல்ல தல பார்க்கல தான் நினைக்கிறேன்” என்னும் போதே,

 

 

காரில் “மதி லோக்கல் ரவுடி போட்டோ எல்லாம் எடுத்து ரெடி ஆ வை நான் வந்து பார்க்கிறேன்” என்று போனில் சொல்லி விட்டு பக்கத்தில் இன்னும் அதே பதட்டத்தில் கண்ணில் இருக்கும் கண்ணீர் எப்போ விழுவேன் என்று எதிர் பார்த்து இருக்கும் தேஜுவை கவலையுடன் பார்த்தான்.

 

பார்க்கிங் ஏரியாவில் அழுது கொண்டு இருந்தவளை மிரட்டி காரில் உட்கார வைக்க முடியாமல் திணறினான்.

 

“தேஜ் உன்னை காப்பாற்ற தான் அப்படி பண்ணேன் ஆனா என்னையும் மீறி” என்று மேலே சொல்ல முடியாமல் நிறுத்த 

 

அவளோ கண்ணை துடைத்து கொண்டே “நீங்க வெளிநாட்டில் படிச்சிட்டு அங்கே இருந்திங்க உங்களுக்கு இது வேணா ரொம்ப சாதாரணமா இருக்கலாம் ஏன் நீங்க கூட அங்க இருந்ததுனால அங்க யாருக்காவது கிஸ் பண்ணி…. ப்ச்…..எனக்கு…. நான் இந்த ஊருலே பிறந்தவ இங்கவே தான் வளர்ந்தேன் என்னோட காதல் கூட என்னோட கணவனுக்கு தான்னு நான் இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணல இப்ப நீங்க” என்று மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்க

 

அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் கண்களை பார்த்து கொண்டே “நீ சொல்றது எல்லாம் ஒகே தான். நான் அங்க தான் பத்து வருசமா இருக்கேன் அந்த நாட்டோட கலாச்சாரம் என்னோட எண்ணத்தில் இருக்குமே தவிர செயலில் எப்போதுமே இருக்காது. என்ன சொன்ன நான்…. யாரையாவது கிஸ்” என்று என்று கோபமாக கத்தி வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, 

 

அவளின் இதழை சுண்டி விட்டு “நான் கிஸ் பண்ணற முதல் பொண்ணு நீ தாண்டி இன்னும் ஏன் நான் இது மாதிரி கோபப்படாமல் பொறுமையா பேச நினைக்கிற பொண்ணு கூட நீ தான் இனிமே கிஸ் பண்ண தோணுச்சுனா கிஸ் பண்ற பொண்ணும் நீ தான்” என்று கத்தியவனை புரியாமல் பார்த்தால் தேஜு.

 

‘அய்யோ கோபத்தில் கொஞ்சம் அதிகமாவே பேசிட்டோமே இவ முகத்தை பார்த்தாலே தெரியுது நான் பேசினது இன்னும் புரியல பைரவ் பேச்ச மாத்து பேச்ச மாத்து’ என்று அவனுக்கே சொல்லி கொண்டு அவளிடம் “விடு கோபத்தில் கத்திட்டேன் ஆபீஸ் போறியா இல்ல வீட்டுக்கு போறியா” என 

 

குழப்பமாக அவனை பார்த்து கொண்டே “நான் ஹாஸ்டல்ல இருக்கேன்” என்று மேலே பேசுவதற்குள் அவனின் பேசி அழைக்க,

 

தந்தையின் நம்பரை பார்த்து “சொல்லுங்க டேட்” என்றதும், ‘அடடா என் மகன் பேச்சிலே தெரியுது அவன் நல்ல மூடில் இருக்கான் இப்பவே பேசி சம்மதம் வாங்கணும்’ என்று எண்ணி விட்டு,

 

“தம்பி அம்மா ஊருக்கு போய் முன்னோர்கள் பூஜை பண்ணனும்னு நினைக்கிறாங்க நீ வந்தா நல்லா இருக்கும்” என்று இழுக்க,

 

“வரேன் டேட் எப்போன்னு மட்டும் சொல்லுங்க” என 

 

“என்னடா அதிசயமா இவ்வளவு இனிமையா பேசுற” என்றுதும் “அதுவா டேட் இப்ப தான் ஒரு சூப்பரான ஸ்வீட் சாப்பிட்டேன் அதோட எபெக்ட்” என்று தேஜுவின் இதழை பார்த்து கொண்டே சொல்ல,

 

“எதோ ஒன்று எனக்கு நீ ஒகே சொன்னதே சந்தோசம். சீக்கிரமா வீட்டுக்கு வாடா” என்று அவர் போனை வைக்க,

 

தேஜு “என் கூட தானே இருந்திங்க எப்போ என்னை விட்டு ஸ்வீட் சாப்டிங்க” என்று பாவமாக கேட்க,

 

அவளின் கேள்வியில் சிரித்தவன் “ஏன் நீ கூட தான் சாப்பிட்ட நீ தான் பயத்தில் இருந்தியே சரியா கவனிச்சு இருக்க மாட்ட” என்றவனை புரியாமல் பார்த்து கொண்டே “ஓ… அப்படியா நெஸ்ட் டைம் சரியா கவனிக்கிறேன்” என்று ஸ்வீட் மேல் இருந்த ஆசையில் சொல்ல,

 

“அதுக்கு என்ன நெஸ்ட் டைம் கொடுக்கும் போது பீல் பண்ணிக்கோ” என்று உள் அர்த்தத்துடன் சொல்ல 

 

அதை அறியாமல் சரி என்று தலையை ஆட்டி விட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினாள். அவளை பார்த்து சிரித்து கொண்டே அவனும் வண்டியை ஓட்டினான்.       

 

சிறிது நேரத்தில் தேஜுவின் போன் அலற ‘இது என்ன புது நம்பரா இருக்கு’ என்று எடுக்காமல் அதையே பார்க்க ஒரு முறை முழு ரிங் சென்று கட் ஆகி மறுபடியும் அலற, இதை பார்த்த பைரவ்

 

“போன் தானே பேசறதுக்கு என்ன” என்று கேள்வியாக கேட்க,  “இல்ல எதோ புது நம்பர் அதான் யாருனு யோசிச்சிட்டு இருக்கேன்” என்று தன் படபடக்கும் மனதை மறைத்து கூற 

 

அவளை பார்த்து மனதில் ‘அட லூசே போன் பேச எல்லாம் பயப்பட வேண்டியது’ என்று அவள் கையில் இருந்த போனை பறித்து “ஹலோ யார் இது” என்று அழுத்தமான குரலில் பைரவ் கேட்க,

 

“ஹலோ இது அஸ்வினி போன் தானே” என்று எதிர்முனையில் கேட்க “அட ஆமா நீங்க யாரு” என்றவனுக்கு “நான் ஆர்யா” என்றதை கேட்டு 

 

“தேஜ் உனக்கு ஆர்யா னு யாரையாவது தெரியுமா” என்றதும் இல்லை என்று தலையை ஆட்ட,

 

“நீங்க வேற யாரோ நினைச்சு கால் பண்ணிட்டீங்க அவங்களுக்கு உங்களை தெரியாது” என்று எதிரே பேசும் முன்னே வைத்து விட்டான்.

 

“தேஜ் எனக்கு உங்க வீட்டுல இருக்கிறவங்க எல்லாரையும் பார்க்கணும்” என்று சம்மந்தமே இல்லாமல் சொல்ல “எதுக்கு” என்று கேட்டு விழித்தவளை பார்த்து சிரித்து கொண்டே “உன்னை மாதிரி ஒரு… பயந்தாங்கொலியை எப்படி சமாளிச்சாங்க அதை கேட்க தான்”   என்றவனை முறைக்க முயன்றாள் ஆனால் முடியாமல் திரும்பி கொள்ள,

 

திரும்பவும் தேஜுவின் போன் அலற பைரவ் “இந்த முறை யாரு” எண்றதுக்கு புன்னகையுடன் “அண்ணா தான்” என்று காதில் வைத்து “அண்ணா எப்படி இருக்க இன்றைக்கு ஏன் காலையில் கால் பண்ணவே இல்ல. என்னை மறந்துட்டுல” என்று சினுங்கி கொண்டே கேட்க, பைரவின் பார்வை ரோட்டில் இருந்ததை விட இவள் மேல் தான் இருந்தது.

 

தேவேஷ் “கொஞ்சம் வேலை டா குட்டி சரி இதுக்கு முன்ன ஆர்யா கால் பண்ணும் போது யாருமா போன் எடுத்து பேசினது” என்றதும் அவளுக்கு திக் என்று இருந்தது.

 

‘அய்யோ அவங்க அண்ணாக்கு தெரிஞ்சவங்க போல’ என்று எச்சிலை விழுங்கி கொண்டு என்றும் இல்லாத  பொய்யை முதல் முறையாக அவனிடம் “அண்ணா அந்த ஆர்யா உனக்கு தெரிஞ்சவங்களா நான் யாரோ புது நம்பர் னு பார்த்த்துட்டு இருந்தேன் ஆ எங்க ஆபீஸ் பியூன் அங்கிள் அதை பார்த்துட்டு எடுத்து பேசினாங்க” என்று கூற

 

அதை கேட்டு பைரவ் அவளை கடுமையாக முறைக்க அவளோ கண்ணிலே ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டு அவளை சமாளிச்சு தேவேஷிடன் பேச தொடங்கினாள்.

 

“சரி டா குட்டி அவன் என்னோட பார்ட்னர் தான் இப்ப சென்னைல இருக்கான் உன்னை பார்க்கணும்னு சொன்னான் பார்த்துக்கோ டா” என்று விட்டு சிறிது நேரம் விசாரிப்புக்கு பிறகு போனை வைக்க,

 

பைரவ் “நான் உனக்கு பியூனா” என “சாரி சார் வேற என்ன சொல்றது என்னோட எம்.டி லூசு தான் பேசுச்சுனுனா சொல்ல முடியும்” என்று ஒரு பிலோவில் சொல்லி விட்டு கீழ் உதட்டை கடித்து கொண்டே அவனை பார்க்க   

 

“சாரி அது தெரியாம சொல்லிட்டேன்” என்றவளை பார்த்து முறைத்து வைத்தான். அதே நம்பரில் இருந்து கால் வர அவனோ திரும்பவும் பிடுங்கி போனை ஸ்பிக்கரில் போட்டு பேசு என்றான்.

 

அவனை மனதில் திட்டி கொண்டே “ஹலோ” என 

 

“ஹாய் சுவீட்டி எப்படி இருக்க” என்றதும் பைரவ் அவளை முறைக்க அதில் பயந்து “யாரு நீங்க” என்றாள்.  

 

  “ஓ… நான் ஆர்யா உங்க அண்ணா வோட பிரென்ட். இன்றைக்கு சென்னை ல தான் இருக்கேன் அப்படியே உன்னை மீட் பண்ணலாம் தான் ஈவினிங் நீங்க பிரீயா” என அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் எல்லா பக்கமும் தலையை ஆட்ட 

 

பைரவ் போனை மறைத்து கொண்டு “லூசே போன்ல பேசுற அவனுக்கு நீ இங்க தலை ஆட்டினா எப்படி தெரியும் ஒழுங்கா உனக்கு வேலை இருக்குனு சொல்லு” என்றது 

 

“சாரிங்க எனக்கு வேலை இருக்கு” என “அப்ப நைட் டின்னர் டேட் போகலாமா” என்றதும் பைரவ் பல்லை கடித்து கொண்டு “தேஜஸ்வினி” என 

 

“எம்.டி கூப்பிடுறாங்க அப்புறம் பேசுறேன்” என்று வைத்ததும் “அப்புறமா பேசுவியா” என்று கடித்து துப்பும் ரீதியில் கேட்க,

 

“தெ…தெரியாமல் சொல்லிட்டேன்” என்று கூறும் நேரம் சரியாக ஆபீஸ் வர இறங்கி வேகமாக உள்ளே ஓடிவிட்டாள்.

 

இரவு எட்டு மணி வர்மா ரெஸிடென்ஸ்,

 

மதி “எப்படி டா அவனை கண்டுபிடிக்கிறது” என “பிடிக்கலாம் டா சின்ன கிளு கண்டிப்பா அவனுக்கே தெரியாமல் விட்டு இருப்பான் அதை முதல கண்டு பிடிக்கணும்” எனும் போது வாட்ச்மன் “சார் இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க” என்று ஒரு லெட்டரை கொடுக்க,

 

அதை படித்தவன் “ச்சை…. மதி சீக்கிரம் வாடா பெரியா ஆபத்து” என்று அவனை இழுத்தது சென்றான்.

 

விதிகள் தொடரும்

நிலா

Leave a Reply

error: Content is protected !!