காதலின் விதியம்மா 15

காதலின் விதியம்மா 15
பல நாட்கள் கழித்து தன் வீட்டில் தன் அறையில் உறங்கும் போது வரும் தூக்கம் சொர்க்கத்திற்கு சமமானது. சொர்க்கத்தில் இருந்த தேஜூவை கலைத்தது தூரத்தில் கேட்ட பாடல்.
‘ச்சை… யாருடா அது நல்லா தூங்கும் போது’ என்று கடுப்பாக கண்ணை மூடிக்கொண்டே தன் போனை தேடி எடுத்து காதில் வைத்தால் பெயரை பார்க்காமல் “யாருடா அது இன்னும் கொஞ்ச நேரம் கழித்து பேசுங்க இப்ப எனக்கு தூக்க தூக்கமா வருது” என்று பல கொட்டாவிகளுக்கு நடுவே சொல்லி முடிக்க,
“ஓ….. ஒரே நாளில் மறந்துட்ட அளவுக்கு வந்துட்ட” என்று கோபமாக கத்தி விட்டு போனை அனைத்த பைரவ் ‘என்னை விட அவங்க தான் அவளுக்கு முக்கியமா போய்டுச்சு….. நான் யாராம் அவளுக்கு…. இடியட்’ என்று தன் மனதில் என்ன உள்ளது… அவளிடம் தனக்கு உள்ள எதிர்பார்ப்பு என்ன என்று புரியாமல் குழம்ப,
‘ஆய்யோ பைரவ் சாரா….. தப்பு பண்ணிட்டியே தேஜூ…. இப்ப காச் மூச்சுனு மனிசன் கத்த போறாரு….. ‘ என்று அவனுக்கு திரும்ப அழைக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போதே “மீட் மீ அட் சார்ப் டேன்” என்று வீட்டின் முகவரியுடன் மெசேஜ் வர, நேரத்தை பார்த்தவள் “அய்யோ இப்பவே மணி ஒன்பது…. லேட்டான அதுக்கும் கத்துவாரே” என்று வேக வேகமாக குளித்து, தனது தாய் தனக்காக ஆசையாக செய்த அப்பத்தை பாதி வாயிலும் மீதி கீழவும் போட்டு காலை உணவை முடித்து, தன்னை அழைத்து செல்வதாக சொன்ன தந்தையிடம் தனே செல்வதாக சொல்லி, தற்பொழுது அந்த மாளிகை முன் வேர்வை வழிய நின்று கொண்டு நேரத்தை பார்க்க அது பத்து பத்து என்று காட்டியது.
மாளிகையின் பொலிவு அவளை கவர, அதை ரசித்து கொண்டே உள்ளே வந்தவளை வரவேற்க ஹாலில் யாரும் இல்லை. ரசனையாக இருந்த ஹாலை ரசித்தவளை அங்கே ஆள் உயர இருந்த புகைப்படம் அவளை இழுத்து வர, தன் கை கொண்டு வருடி “வாவ்!!! சோ பியூட்டிஃபுல்” என,
“யாருமா நீ” என்ற பெண்ணின் குரலில் திரும்பியவள் எதோ தோன்ற “என்னை ப்ளஸ் பண்ணுங்க மா” என்று அவரின் காலில் விழ, “நல்லா இரும்மா” என்ற மாளவிகாவை காரணமே இல்லாமல் பிடித்து போனது தேஜஸ்வினிக்கு.
“என் பெயர் தேஜஸ்வினி மா…. பைரவ் சார் வர சொன்னாங்க……. இந்த போட்டோவில் இருக்கிறது யாருமா” என்று தயக்கமா கேட்க,
“ஓ…. நீ தான் பைரவ் சொன்ன பொண்ணா உனக்காக தான் அந்த சார் வெயிட் பண்ணிட்டு இருக்காரு…….. இந்த போட்டோவில் இருக்கிறதா….. இவ என்னோட பொண்ணு சதி” என
“ரொம்ப அழகா இருக்காங்க…. சரிங்க மா சார் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என பைரவின் அறையை காட்ட அந்த திசையை நோக்கி சென்றாள். “மே ஐ கம் இன் சார்” என்று விட்டு உள்ளே சென்றவள் அடுத்து நடந்த நிகழ்வில் வாய் அடைத்து போனாள்.
உள்ளே வந்த அடுத்த நொடி பைரவ் அவளை இழுத்து சுவற்றில் சாய்த்து இருந்தான். அதிர்ச்சியில் “சா… ர்.. என்ன பண்றீங்க” என்றவளின் செவிதழில் தன் கையால் மூடி “உஸ்ஸ்…… மேடம்க்கு வர சொன்ன நேரத்திற்கு வர தெரியாது இங்க வந்ததும் என்னை மறந்தாச்சு அப்பவுமே என்னோட நியாபகம் வரா மாதிரி என்ன செய்யலாம்” என
‘ஙே’ என்று அவனின் கேள்வி புரியாமல் முழிக்க, பைரவ் தன் பாக்கெட்டில் இருந்து செயினை எடுத்து அவள் உணரும் முன் தேஜூவின் சுங்கு கழுத்தில் அணிவித்தான். இந்த காலத்து செயின் அல்ல அது. அகழ்வாய்வு மூலம் மண்ணில் புதைந்து கிடந்த பொருளை காண சென்ற போது அவன் கண்ணில் பட, அதை விட்டு செல்ல மனம் வராததால் பல தில்லாலங்கடி செய்து அவனின் கைக்கு வந்தது.
ஆனால் அவன் அறியாத ஒன்று அந்த சங்கிலியை அவளின் கழுத்தில் கட்ட போன பிறவியில் அவர்கள் இருவரும் பட்ட துன்பம் இப்பொழுது இவன் அறியாதது. உயிர் துறக்கும் தருவாயில் கூட நிறைவேறாத ஆசை தன் தூய காதலுக்கு அங்கீகாரம் கிடைக்க போராடி தோற்ற துயரம். தன் வாரிசுக்கு உரிய உரிமையை கொடுக்க முடியாமல் துரோகத்தில் உயிரை இழுந்த துயர கதையை பற்றி எதுமே அறியாமல் இப்பிறவியில் சுலபமாக அவளின் கழுத்தில் அணிவித்து இருந்தான்.
“சார் என்ன இது…. எதுக்கு என் கழுத்தில் இதை போட்டிங்க” என்று சற்று கோபமாக கேட்க அவனோ சாவகாசமாக “இனி நான் இல்லாத போதும் என்னை மறக்க மாட்ட தானே” என ‘நான் எதுக்கு இவங்களை மறக்க கூடாது’ என்று கேள்வி தோன்றவும் பைரவ் அவளுக்கு பல வேலைகள் இடவும் சரியாக இருக்க வேலை அவளை இழுத்து கொண்டது.
மாலை வரை வேலை பளு சூழ்ந்த காரணத்தால் காலையில் நடந்ததை மறந்தாள். கிளம்பும் நேரம் வர தேஜூ பைரவை நெருங்கி “சார் நீ சொன்ன எல்லா வேலையும் முடிந்தது வேற ஏதாவது இருக்கா” என்று சோர்வாக கேட்க,
‘என்னோட செல்ல கண்ணம்மா ரொம்ப சோர்வா இருக்கா போல…. பாவம் என் கண்ணம்மா’ என்று முணுமுணுப்பாக சொல்ல, “என்ன சார் சொன்னீங்க கேட்கலை” என்று பாவமாக கேட்க,
“நாளைக்கு பிரேக் எடுத்துக்கோ… சீ யூ அட் ப்ரைடே” என ‘அப்பாடா இப்ப யாவது விட்டானே’ என்ற பெருமூச்சுடன் வேக வேகமாக தன் பையை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியே வர, அவளை கண்ட பூமகள்
“அடடே… அஸ்வினி இங்க வாடா எவ்வளவு நேரமா தான் வேலையை பார்ப்ப இங்க கொஞ்ச உட்காரு சாப்பிட ஸ்நாக்ஸ் கொண்டு வர சொல்றேன் சாப்பிட்டு போ…. பாரு எவ்வளவு சோர்வா இருக்க” என அங்கே இருந்த நாராயணன் மற்றும் மாளவிகா அவளை பார்த்து தலையை அசைக்க, புதிதாக இருந்த பார்த்திபனை பார்த்து நெளிந்து கொண்டே அவர்கள் அமர்ந்து இருந்த எதிர் பக்க சோபாவின் நுனியில் அமர, மாளவிகா அவளின் சங்கடத்தை உணர்ந்து அவளின் பக்கம் அமர்ந்து புன்னகைத்தார்.
அவர்களின் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாமல் அவர்கள் கொடுத்த இனிப்பு பணியாரத்தை ருசித்து கொண்டு இருந்தாள். அங்கே வந்த பைரவ் அனைவரையும் பார்த்து மெலிதாக சிரித்து கொண்டே தேஜூவின் பக்கத்தில் அமர்ந்தான்.
“என்ன எல்லார் முகத்திலும் ஒரே சிரிப்பா இருக்கு” என்ற அவனின் கேள்வியில் பார்த்திபன் “அதுவா மாப்பிள்ளை நம்ம எல்லாரும் ரொம்ப வருசம் கழித்து ஒன்றா இருக்கோம்ல அதான் எல்லார் முகமும் டால் அடிக்குது. அதை விடுங்க எங்க எல்லார் முகத்தையும் விட உங்க முகம் தான் ரொம்ப ஜொலிக்குதே என்ன மெட்டர்” என
நாராயணன் “மச்சான் இவன் கிட்ட இருந்து கேள்வி தான் வரும் நம்ம கேள்விக்கு பதில் எல்லாம் வராது….. நான் சொல்றது சரி தானே அஸ்வினி” என்று அமைதியாக இருந்த தேஜூவை கேட்க,
என்ன சொல்வது என்று தெரியாமல் எல்லா பக்கமும் தலையை ஆட்ட, பைரவ் முறைத்த முறைப்பில் “அப்படி எல்லாம் இல்ல…….. நான் கிளம்பறேன் வீட்டில எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என
அதை மறுத்து மாளவிகா எதோ சொல்ல வர அதற்குள் பைரவ் “இரு நான் உன்னை ட்ராப் பண்றேன் லேட் ஆயிடுச்சு தனியா போக வேண்டாம்” என்று மற்றவர்களை பார்க்க, அனைவரும் அதையே சொல்ல,
பூமகள் “இது எல்லாம் எனக்கு எதுக்கு…. அஸ்வினி மா…. வெள்ளிக்கிழமை காலையே வந்திடனும் மறக்காமல் அன்றைக்கு பார்த்த உன்னோட ப்ரெண்ட் அவளையும் கூப்பிட்டு வா சரியா” என “சரிங்க மா” என்று அனைவரிடமும் விடை பெற்று பைரவை தொடர்ந்து வெளியேறினாள்.
வெள்ளிக்கிழமை தேஜஸ்வினி வீட்டில்,
பொன்னி “அவங்க வீட்டுல பூஜை நடக்கிறதுக்கு நீ போறதே அதிகம் இதில இவளை வேற எதுக்கு டி கூட்டு சேர்க்கிற” என்று தூக்க கலக்கத்தில் அமர்ந்து இருக்கும் கௌசியை தேஜூ படுத்தி எடுத்து தயார் செய்த வருத்தத்தில் சொல்ல,
“ம்மா….. சும்மா சும்மா என்னை திட்டீட்டே இருக்காம இந்த சேலையோட பிளிட்ஸ்ஸை சரியா வை அவளே கிளம்பிட்டா” என்று கிளி பச்சை சேலையில் தேவதையாக தயாராக,
தூக்க கலக்கத்தில் எழுந்த தேவ் “இரண்டு பேரும் ஜோடி போட்டி இவ்வளவு காலையில் எங்க கிளம்பிட்டீங்க” என
கௌசி பாவமாக “அது இவ வேலை பார்க்கிற வீட்டில் பூஜை அதுக்கு என்னையும் கடத்திட்டு போற” என
தேவ் “அட பார்றேன் இங்க இருக்கிற கடைக்கே போக யோசிக்கிறவ இப்ப வெளியே ஜாலியா அதுவும் சேலையில் நல்ல மாற்றம் தான்…. நான் வேண்டுமானால் ட்ராப் பண்ணவா இவ்வளவு காலையில் பஸ் இருக்கானு தெரியலை ஆட்டோ எல்லாம் வேண்டாம்” என
தேஜூ “வேண்டாம் ண்ணா…. சாரே கார் அனுப்பி இருக்கார் வெளியே தான் இருக்கு….. பாய்” என்று கௌசியை இழுத்து கொண்டு செல்ல, அங்கே
மாளவிகா பார்த்திபனிடம் “அவங்க வந்திடுவாங்க தானே….” என்று கவலையாக கேட்க, “கண்டிப்பாக வருவாங்க மா நீ போய் கிளம்ப எல்லாம் தயாரானு பார்” என்று சொல்லும் போதே வெளியே கார் சத்தம் கேட்க இருவரும் நாராயணன் மற்றும் பூமகளை அழைத்து கொண்டு வெளியே வர,
காரில் இருந்து ஊர்வசி தன் இரு மகன்களுடன் உள்ளே வந்தார்.
ஆர்யாவின் நினைவுகள் காலையில் நடந்ததை நினைத்து பார்த்தது.
“அம்மா இப்ப எதுக்கு சூர்யாவை அவசர அவசரமா வர சொன்ன…. நம்ம எங்க தான் போக போறோம் நேற்றில் இருந்து எத்தனை முறை கேட்கிறேன் பதில் சொல்றியா நீ?” என்று ஊர்வசியிடம் கேட்க,
“நான் இதுவரைக்கும் அப்பா குடும்பத்தை பற்றி சொன்னதே கிடையாது…. இப்ப சொல்ல வேண்டிய கட்டாயம்….. உங்க அப்பா சாதாரண குடும்பத்தில் பிறந்தவங்க இல்லடா ஜமீன் பரம்பரை.
எனக்கு யாருமே கிடையாது டா…. என்னை வளர்த்து என்னோட ஆச்சி தான். ஒரு முறை ஒரு ரவுடி என்னை கல்யாணம் பண்ண விருப்பம் இருக்கிறதா என் ஆச்சி கிட்ட சொல்ல, அவனோட குணத்தை பார்த்து மறுத்துட்டாங்க. அவன் அடங்காமல் பின்னாடியே சுற்ற, என்னோட கல்லூரி படிப்பு பாதிக்க கூடாதுனு ரொம்ப பொறுத்து பார்த்தும் முடியலை போலிஸ் கிட்ட சொன்னாலும் ஒரு யூஸ் இல்ல.
அவன் கிட்ட இருந்து என்னை பாதுகாக்க அவனுக்கு தெரியாமல் நாங்க வேற ஊருக்கு போகலாம்னு பஸ் ஸ்டாண்ட் க்கு வந்தா எப்படியோ அதை தெரிஞ்சி அவன் அங்க வந்துட்டான்.
எல்லார் முன்னாடியும் என்னை இழுத்திட்டு போன போதும் யாருமே கிட்ட கூட வரலை. அப்ப தான் சாமி மாதிரி உன் அப்பாவை பார்த்தேன். அவன் மேல ஏற்கனவே கொலை கேஸ் இருந்தது.
எனக்காக உங்க அப்பா அவனை பல கேஸில் வெளியே வராத மாதிரி உள்ள போட்டார் டா. இதில் அவங்க வீட்டில் கொஞ்சம் பிரச்சனை. எனக்கு அவர் சாமியா தான் தெரிஞ்சார். ஒரு நாள் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டார் என்ன சொல்றதுனு தெரியாமல் சரினு தலையை ஆட்டினேன்.
அது தான் நான் பண்ண பெரிய தப்பு. அவங்க தகுதியை பார்த்தும் சரினு தலையை ஆட்டி இருக்க கூடாது. என்னை அவங்க அப்பா எத்துக்கலை. அஷோக் எவ்வளவோ பேசி பார்த்தார். உங்க அப்பாக்கு தன்மானம் ரொம்ப அதிகம் டா. அதான் இனி உங்க உறவே வேண்டாம்னு என்னை கல்யாணம் பண்ணிட்டு அவரின் திறமையை வைத்து முன்னுக்கு வந்தார்.
ஆனால் எனக்கு தான் குற்றவுணர்வு நாளுக்குநாள் அதிகமா ஆச்சே தவிர குறையலை. இப்ப கூட அவங்க வந்து கூப்பிட்டாங்க…. எனக்கு அவங்க உறவு தேவை இல்லை தான் ஆனா நாளைக்கே எனக்கு எதாவது நடந்தா என் இரண்டு பிள்ளையும் அனாதையா நிற்குமே அவங்களுக்கு வழி காட்ட பெரியவங்க வேண்டாமா….. அதான் உங்களை அங்க கூப்பிட்டு போகலாம் என்று இருக்கேன் ” என
தாயின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்த இருவரும் அவரை அணைத்து கொண்டனர். எந்த நேரத்தில் ஊர்வசி இறப்பை பற்றி பேசினாரோ சில தினத்தில் அதே நடக்க இருப்பது அவர் அறியாதது.
பார்த்திபன் “வாமா தங்கச்சி வா டா இரண்டு பேரும் அப்படியே மச்சானை உரித்து வெச்சிருக்கீங்க” என
தீடிரென வந்த உறவை எதிர்கொள்ள முடியாமல் இருவரும் தவிர்க்க பூமகள் “வாங்க பிள்ளைங்களா… வாங்க அக்கா…… பைரவ் இங்க வா உன்னோட இரண்டு தம்பி வந்து இருக்காங்க” என்று பைரவை அழைக்க,
“அம்மா!!!! லிட்டில் பிட் பிசி தேஜ் வந்ததும் சொல்லுங்க வரேன்” என்று முடிய கதவுக்கு அந்த பக்கம் இருந்து பதில் வந்தது.
மாளவிகா “வாங்க அண்ணி…. உங்களை பார்க்க எவ்வளவு தடவை இவர் கிட்ட கேட்டு இருப்பேன் தெரியுமா….. இவர் தான் எதுமே சொல்லலை… ” என்று கணவனை முறைத்து கொண்டே சொல்ல,
நாராயணன் “எல்லாரும் வந்தாச்சு….. இன்னும் அவங்க வந்ததும் கிளம்பிடலாம்…. அங்க பூசாரி வந்திட்டார் நமக்காக தான் காத்திட்டு இருக்கார்” என்று எல்லாருக்கும் பொதுவாக சொல்லி விட்டு அவர்களிடம் பொதுவான விசயத்தை பேசிக் கொண்டு இருந்தார்.
காரில் கௌசி “அவங்க பூஜை பண்றாங்க அதுக்கு நீ ஹெல்ப் பண்ண போற அது எல்லாம் சரி தான்….. அதுக்கு எதுக்கு நீ சேலை தான் கட்டிட்டு போகனும்…. உங்க அம்மா கிளம்பும் போது சொன்னாங்க இப்ப தான் நீ முதல் முறையா சேலை போடுறதா….. ” என “இப்ப சேலை கட்டனும் போல இருந்துச்சு டி….” என்ற தேஜூவிடம்,
“இல்லடி நேத்து நீ உன்னோட ரூமில் இருக்கும் போது உன்னோட அம்மா ஒரு விசயம் சொன்னாங்க டி….. அது வந்து…. வந்து உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க ஜாதகம் பொருத்தமா இருக்காம்” என்று மெதுவாக பைரவ் அனுப்பிய டிரைவருக்கு கேட்காமல் சொல்ல,
“வாட்!!!!! உண்மையாவே அம்மா சொன்னாங்களா…. என் கிட்ட எதுமே இது வரை சொல்லலை…. யாரை… யாரை பார்த்து இருக்காங்க” என்று நடுங்கும் குரலில் கேட்க,
கௌசி சோகமாக “அன்றைக்கு உங்க அண்ணா பார்க்க சொன்னாங்கனு போனியே அவரை தான்” என்றாள்.
‘என்னது ஆர்யாவா…. இல்ல இல்ல இருக்காது’ என்று தனது பதறும் மனதை அடக்கி தோழியை பார்த்தாள். கௌசல்யா விற்கு ஆர்யாவை பார்த்ததும் பிடித்து விட்டது. அதை அறிந்தே இருந்தால் தேஜூ.
“கௌசி எனக்கு அவங்களை பிடிக்கலை டி….. எனக்கு எனக்கு” என்றவளுக்கு பைரவின் அருகில் இருக்கும் போது தோன்றும் ஒரு வித பதற்றம், அவன் அருகில் இல்லாத போது தவிக்கும் இதயம் ஆயிரம் பேரை அடக்கும் அக்னி கண்கள் இவளிடம் மட்டுமே மழையின் சாரலை அடிப்பது எல்லாம் கண் முன்னே வர,
கௌசி “அப்ப உனக்கு உண்மையாவே ஆர்யா வேண்டாமா” என்று கேட்கும் போதே பைரவின் வீட்டில் கார் நின்றது.
சிறிது நேரம் முன்பு பைரவின் அறை, பக்காவாக தயாராகி தன் அலுவல் சம்மந்தமாக வந்த மின்னஞ்சல் களுக்கு பதில் அனுப்பி கொண்டு இருந்தவனை கலத்தது அவனது கைபேசி, எடுத்து காதில் வைக்க,
“வந்து விட்டாய் அநபாயா வந்து விட்டாய். தாயகம் மறந்து உன்னையும் உணராமல் உன் மனதில் இருக்கும் உன் துணைவி ப்ச்… இல்லை அநபாயன் இல்லை என் மனதுக்கு இனியவளை மறந்து கடல் கடந்து இருந்தாயே…. நீ ஆள நினைத்த பிரதேசம் வந்துவிட்டாய் போல். சென்ற முறை போல் இம்முறையும் உன் வீழ்த்த காத்திருக்கிறேன்… சென்ற முறை அனைத்திலும் வென்ற என்னால் நீர் காத்த பொக்கிஷத்தையும் உன்னவளையும் வெல்ல முடியவில்லை.
காத்திருக்கிறேன் இம்முறை இவ்விரண்டையும் வெல்ல, ஆர்கலி அடடே என்ன அழகு சங்க காலத்தை விட உன்னவள் இந்த நவீன காலத்தில் பேரழகியாகவே உள்ளாள். என்ன வளைவு என்ன நெளிவு நினைக்கும் போதே என்னை போதை கொள்ள வைக்க உன்னவளாள் மட்டுமே முடியும் ” என்று முடிக்க,
“டேய்…. உன்னை கண்டு பிடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது டா. தைரியம் இல்லாம போனில் பேசர முடிஞ்சா நேரில் வந்து பாருடா அப்ப தெரியும் இந்த பைரவ் யாருனு…. நீ பேசறது எதுமே எனக்கு புரியலை இருந்தாலும் சொல்றேன் என்னவள் மேல உன் நகம் பட்ட கூட உன்னோட சாவு ரொம்ப மோசமா இருக்கும்” என்று காரமாக பேச,
“ஹா ஹா ஹா…… பொறு அநபாயா இல்லை இல்லை பைரவ் வர்மா உன் கண் முன்னாளே அவனை என் கையடக்க அணைத்து உனக்கு வேடிக்கை காட்டுகிறேன்” என்று வைத்து விட,
பைரவ் ‘இந்த வாய்ஸ்…. இந்த வாய்ஸ் கண்டிப்பா நான் கேட்டு இருக்கேன் எங்கே எங்கே’ என்று யோசித்து கொண்டே ஹாலுக்கு வர,
அப்பொழுது தான் உள்ளே வந்த தேஜூவும் கௌசியும் அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தனர். ஆர்யா “அட அஸ்வினி நீங்க கூட வந்திருக்கிங்க போல… ஹாய் கௌசல்யா” என
தேஜூ “நீங்க எப்படி இங்க… ” என்றதும் “அது பெரிய கதைங்க அப்புறமா வீட்டுக்கு வந்து சொல்றேன் இப்ப சொன்னா உங்க கிட்ட சொல்லனும் அப்புறம் தேவ் கிட்ட தனியா சொல்லனும்… சப்பா…. நம்மால் முடியாது” என்று சிரிக்க அவனுடன் தேஜூவும் சிரிக்க, சிரிக்கும் அவனின் முகத்தையே ‘பே’ என்று பார்த்து கொண்டு இருந்தால் கௌசல்யா.
பைரவ் வேகமாக அவர்களை நெருங்கி பெரியவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கூட யோசிக்காமல் “தேஜ் கம் வித் மீ” என்று கையை பிடித்து இழுத்து சென்றான். அவன் பின்னே திருதிருவென விழித்து கொண்டே சென்றால் தேஜஸ்வினி.
அனைவரும் கோவிலை அடைந்தனர். பல அடர்ந்த மரங்கள் சில அரிய வகை ஜந்து பல காலமாக மனிதன் செல்லாத இடம் என அந்த அடர்ந்த காடே பிதியை கலப்பியது அனைவருக்கும். கோவிலை அடைந்ததும் அனைவரும் கண்டது தனியாக தவதில் இருக்கும் சாமி பைரவர் சிலையை தான். பூசாரி அடுத்து கூறிய விவரத்தில் மொத்தமாக சிலையாகி இருக்க தேஜஸ்வினி மட்டும் எதையோ இழந்த வலியுடன் வயிற்றை பிடித்து கொண்டு பக்கத்தில் இருந்த மரத்தில் சாய்ந்தாள். பல ஆச்சரியத்தை கொடுக்க காத்திருந்தது இந்த அடர்ந்த வனம். ஆச்சரியங்கள் என்னவோ???
விதிகள் தொடரும் நிலா