காதலின் விதியம்மா 16

காதலின் விதியம்மா 16
தன் அறையில் இருந்து வெளியே வந்த பைரவின் கண்ணில் பட்டது தேஜூ ஆர்யா பேசியதை கேட்டு சிரித்தது தான். ‘என் கிட்ட இது மாதிரி சிரிச்சு நான் பார்த்ததே இல்லையே அவன் கிட்ட மட்டும் அப்படி என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு’ பூஸ் பூஸ் என்று மூக்கில் புகை வர வேகமாக அவர்களை நெருங்கி,
“தேஜ் கம் வித் மீ ஐ’ம் வெயிட்டிங் ஃபார் யூ இடியட்……” என்று அவளை இழுத்து கொண்டு வெளியே செல்ல, இவளோ அனைவரின் முன்பும் கையை இழுத்ததில் சங்கடத்தில் நெளிந்து கொண்டே திருதிருவென முழித்தாள்.
ஆர்யா பக்கத்தில் இருந்த கௌசியிடம் “அவங்க இரண்டு பேரும் கமிட்டடா?” என்று இருவரையும் சுட்டி காட்ட, கௌசி “தெரியலை…. பட் அந்த சாரை பார்த்தா அப்படி தான் தெரியுது. நீங்க தேஜூவை லவ் எதாவது பண்றீங்களா….. தேஜூ வீட்டில் கூட உங்க இரண்டு பேருக்கும்” என்று இழுக்க,
மெல்லிய புன்னகையுடன் “அஸ்வினி மேல நிறைய அன்பு இருக்கு பாசம் இருக்கு அதை விட நிறைய மரியாதையும் இருக்கு பட் லவ் எல்லாம் இல்ல தேவ் கேட்ட உடன் வேண்டாம் சொல்ல முடியலை அம்மாவும் கொஞ்ச ஆர்வமா இருந்தாங்க….. இப்ப அம்மா கிட்ட சொல்லிட்டேன் அச்சு கிட்ட வர ஒரு ஃபீல் உன் கூட இருக்கும் போது இருக்கிற மாதிரியே இருக்குனு சொல்லிட்டேன்….. அம்மாவும் புரிஞ்சிகிட்டாங்க…… இன்னும் தேவ் கிட்ட சொல்லலை… சொல்லனும்” என ‘அப்பாடா’ என்று பெருமூச்சு வி்ட்டாள் கௌசி. அவ பிரச்சினை அவளுக்கு இனி அவள் ரூட் கிளியர்.
நாராயணன் “தப்பா நினைக்காதீங்க…. இவன் ஏன் இப்படி பிகேவ் பண்றானு தெரியலை” என்று கவலையாக சொன்னார்.
ஊர்வசி “அட விடுங்க…. தம்பிக்கு எதாவது முக்கியமான வேலை இருக்கலாம் அதை முடிக்க கூட அஸ்வினியை கூப்பிட்டு போய் இருக்கலாம்… வாங்க அண்ணா கிளம்பலாம் நேரமாகுது” என அனைவரும் அந்த அடர்ந்த காட்டை நோக்கி சென்றனர்.
மாளவிகா, பூமகள், ஊர்வசி, கௌசி, ஆர்யா இவர்கள் ஒரு காரில் வர, பைரவ், தேஜூ, நாராயணன், பார்த்திபன், சூர்யா மற்றொரு காரில் வந்தனர்.
மாளவிகா பைரவின் நடவடிக்கையை பார்த்து அவனுக்கு தேஜூவின் மேல் விருப்பம் இருப்பது போல் தோன்றுவதாக கூற, அந்த காரில் இந்த பேச்சே பிரதானமாக இருந்தது. ஊர்வசி கூட “ரொம்ப நல்ல பொன்னுங்க நான் கூட அவளை இவனுக்கு பார்க்கலாம்னு இருந்தேன் இவன் தான் விருப்பம் இல்லைனு சொல்லிட்டான். கொஞ்ச பயந்த சுபாவம் அவ்வளவு தான்” என பூமகள் அவளை இப்போழுதே பைரவின் மனைவியாக தன் மருமகளாக பார்க்க தொடங்கி விட்டார்.
இரு கார் நின்றதும் அனைவரும் இறங்கி நடக்க தொடங்கினர். சில நொடி நடக்கு பின் அவர்கள் நின்ற இடம் அவர்கள் பிரம்மிக்க வைத்தது.
ஆர்யா “இந்த இடம் ஏன் இவ்வளவு சேதம் அடைந்து இருக்கு….. ” என
பார்த்திபன் “இந்த பக்கம் மனித நடமாட்டமே இருக்காது. நம்ம குடும்பத்தை தவிர யாருக்குமே இங்க ஒரு கோவில் இருக்கிறது தெரியாது. நம்மலும் பல வருசமா இங்க வரலை அதான் இப்படி இருக்கு” என்று
“வாங்க ஐயா உங்களுக்காக தான் இவ்வளவு நேரமா காத்திருந்தேன். வெளியே எல்லாம் சுத்தம் செய்ய முடியலை ஐயா. உள்ள மட்டும் கொஞ்சமா சுத்தம் பண்ணி இருக்கேன்” என்று சொல்ல, அனைவரும் அந்த நுழைவுவாயிலை தாண்டி உள்ளே சென்றனர்.
கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் நான்கு பக்கமும் தூண் இருக்க, அந்த நான்கு தூண்களிலும் அழகிய சிற்பங்கள் செதுக்கி இருந்தது. நடுவில் ஆறடி மனிதன் தவத்தில் இருப்பது போல் ஒரு பைரவரின் சிலை எல்லாரையும் ஈர்த்தது.
மாளவிகா “என்னோட அம்மா சொல்லிருக்காங்க இங்க ஒரு காளி சிலை இருக்குமாம். அதை யாருமே இதுவரை பார்த்ததே இல்லையாம். ரொம்ப வருடத்திற்கு முன்னாடியே காளி சிலையை யாரே கடத்திட்டாங்கனு சொல்லுவாங்க. இங்க இருந்த காளி சிலை ரொம்ப அபூர்வமானது அதே மாதிரி ரொம்ப சக்தி வாய்ந்தது” என அனைவரது கவனமும் மாளவிகா பேசுவதில் இருக்க,
தேஜஸ்வினி மட்டும் எதையோ இங்கே இழந்த வலியுடன் ஒவ்வொரு இடத்தையும் தொட்டு பார்த்து கொண்டு இருந்தவள் கடைசியாக அங்கே குத்தி வைத்திருந்த திரிசூலத்தில் கையை வைத்ததும் சொல்ல முடியாத வலி ஒன்று உடல் எங்கும் பரவ, வயிற்றை இறுக்கி பற்றி, “அம்மா!!!” என்று கத்த,
மாளவிகா சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்த அனைவரும் இவள் கத்தியதும் அதிர்ந்து திரும்ப, வயிற்றை பிடித்து கொண்டு சுருங்கி அமர்ந்து இருந்து இருந்தவளின் அருகே சென்று கௌசல்யா, “தேஜூ என்ன ஆச்சு இங்க பாரு” என்று அவளின் கன்னத்தை தட்ட,
“இரத்தம்….. எவ்வளவு இரத்தம் கொன்றுவிட்டேனே நானே கொன்றுவிட்டேனே” என்று சமந்தமே இல்லாமல் புலம்ப,
அவள் பக்கத்தில் இருந்த கௌசல்யா, ஆர்யா மற்றும் அவளை நெருங்கி வந்த பைரவ் இவர்களை தாண்டி யாருக்கும் இவள் சொன்னது கேட்கவில்லை.
பைரவ் கௌசல்யா அவள் கன்னத்தை வலிக்க அடித்து அந்த இடமே சிவப்பாக மாறியும் இவள் என்ன கனவில் இருப்பது போல பேசறா என்று அடிக்கும் கௌசியை தடுத்து விட்டு, அமர்ந்து இருந்தவளை அவனும் அமர்ந்த நிலையிலே அவளை அணைத்து கொள்ள, சிறிது நேரத்திலே அவளின் புலம்பல் நின்றுவிட்டது.
பைரவ் “லிசன் தேஜ் ஐ’ம் தேர் ஃபார் யூ…. ஒன்றும் இல்லை” என அவளின் தலையை தடவிக் கொடுக்க, “ம்ம்ம்” என்று முனகினாலே தவிர, முழுதாக தெளியவில்லை.
அதன் பின் நடந்த எதுவுமே அவள் மனதில் பதிய வில்லை. பெரியவர்களிடம் ‘எதோ பூச்சி’ என்று சமாளித்து தேஜூவை தன் பக்கத்தில் வைத்து கொண்டான் பைரவ்.
பூஜை ஆரம்பித்தது, அனைவரும் ஆரத்தி எடுக்க கௌசி மட்டும் ஒதுங்கி கொண்டாள். ஆரத்தி அந்த குடும்பத்தில் இருக்கும் நபர்களால் மட்டுமே தொட முடியும். வெளியாட்கள் இக்குடும்பத்தில் வாழ வந்தால், அவர்களால் ஆரத்தி எடுக்க முடியும். ஆகையால் நாராயணன் பூமகள், பார்த்திபன் மாளவிகா, ஆர்யா சூர்யா எடுத்து முடித்து பக்கத்தில் இருந்த கௌசியிடம் ஆர்யா ஆரத்தி தட்டை கொடுக்க,
அவளால் ஆரத்தி தட்டை தொட முடிய வில்லை. அவளின் கையை அந்த தீபம் சுட்டு விட அவள் ஆரத்தி எடுக்காமல் ஒதுங்கி கொண்டாள். ஆர்யா எடுத்து “அண்ணா இந்தாங்க” என்று பைரவிடம் கொடுத்தான். இருவரிடமும் இன்னும் சுமுகமான பேச்சுவார்த்தை இல்லை.
பைரவ் ஆரத்தி காட்ட தொடங்கிய போது அவன் காலில் எலி ஓட, சற்று தடுமாறி ஆரத்தி தட்டை கீழே போட இருந்தவனை பற்றினாள் தேஜஸ்வினி. இருவரும் ஒன்றாக ஆரத்தி எடுக்க நாராயணன் மனதில் ‘கடவுளே என் மகனை காக்க ஒரு பொண்ணு வருவா…. அவளை நீயே எனக்கு காட்டுவனு சாமிஜி சொன்னார். அந்த பொண்ணு அவள் தானா…’ என்று தன் மகனை கண்டத்தில் இருந்து காக்க வந்த தேவதை போல் தெரிந்தால் தேஜஸ்வினி.
“இந்த காட்டுக்கு நான் ஏற்கனவே வந்தா மாதிரி இருக்கு” என்று பக்கத்தில் இருந்த கௌசியிடம் தேஜூ சொல்ல, “மனசாட்சியை தொட்டு சொல்லு மனித நடமாட்டமே இல்லாம கிடக்கு இந்த இடம்…. இவ வந்தாளாம்” என்று நொடித்து கொண்டே ஊர்வசி கொடுத்த பிரசாதத்தை வாயில் அடைக்க,
‘அவ ஒருத்தி சொல்றதை நம்பாமல்’ என்று தலையில் அடித்து கொண்டே கண்களை சுழல விட, அவள் கண்களுக்கு தெரிந்தார் ஒரு மனிதர். யார் ஒருவரை தன் பிம்பம் பதிலாக கண்ணாடியில் முன்பு ஒரு முறை பார்த்தாலோ அவரையே இங்கே காண்பதை கண்டு அதிர்ந்து எழுந்தவள் பைரவின் அருகே சென்று,
“சார் சார் அங்க பாருங்க ஒருத்தர் நிற்கிறார். நான் சொன்னனே ஒரு நாள் காவி கலர் டிரஸ் போட்டு உடம்பு முழுக்க திருநீறு இருக்க கையில் ருத்திராட்சத்தை வெச்சிட்டு ஒருத்தரை பார்த்தேன்னு சொன்னனே நீங்க கூட நம்பலை தானே அங்க பாருங்க நம்மை பார்த்து சிரிச்சிட்டு நிற்கிறாங்க” என்று அந்த திசையை காட்ட, யாருமே அங்கே இல்லை.
பூமகள் “அங்க யாருமே இல்லமா…. வா நீ ரொம்ப பயந்து போய் இருக்க இந்த இடத்தை எல்லாம் பார்த்து” என்று கூற,
அங்கே இருந்த பூசாரி “இந்த பொண்ணு முன் ஜென்மத்தில் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கா” என
பார்த்திபன் “என்னங்க சொல்றீங்க” என்று புரியாமல் கேட்க,
புகாரி “இந்த பொண்ணு கண்களுக்கு தெரிந்தது சித்தர். பல நூற்றாண்டுகளாக இங்கவே வாழறதா சொல்லப்படுகிற சக்தி வாய்ந்த கோரக்கர் சித்தர். முக்காலமும் அறிந்து, சித்த மருத்துவத்தில் சிறந்த சித்தர் எப்படி எல்லாம் சொல்லுவாங்க. இந்த பெண்ணிற்கு அம்மாள் அருள் நிறையவே இருக்கு அதான் சித்தர் கண்ணுக்கு தெரிந்து இருக்கார்” என்று சொல்லி விட்டு தனக்கு நேரம் ஆவதாக கிளம்பி விட்டார்.
சில நிமிடத்தில் சித்தரின் சிரிப்பு ஓலி அங்கே நிறைந்து இருக்க, அனைவரது கண்களும் சுற்றி தேட, தனது கோலை நிலத்தில் ஊன்றி சிரித்த முகமாக இவர்களை நெருங்க வந்தார்.
என்ன செய்வது என்று யாருக்கும் புரியாமல் முழிக்க, சித்தரே “அடடே….. மொத்த குடும்பத்தையும் காண பல நாட்களாக காத்திருந்தேன். என் ஈசன் அனைவரையும் சரியான இடத்துக்கு அழைத்து வந்துவிட்டார். மிக்க மகிழ்ச்சி. நாராயண மகனது இன்னுயிரை காக்க உன் உயிரையும் கொடுக்க நினைப்பது தவறல்ல. வளரும் கொடியை பற்றி படர வைக்க உண்றுகொல் மிக முக்கியம்” என்று தன் கையில் இருந்த திருநீறை அவரது நெற்றியில் வைத்து விட்டு, அடுத்தாக பூமகளை அருகே வர சொல்ல,
அவரும் தயக்கத்துடன் அவரின் முன் நிற்க “உன் விடுப்பட்ட உறவில் உன் வம்சத்தின் எமன் இருக்கிறான். நம்பாதே நலலவர்கள் போல் உன்னிடம் உறவை புதுப்பிக்க வருகிறது பேராபத்து. கவனம் தேவை நம்பி உன் வம்சத்தை இழக்காதே” என்று அவரது நெற்றியில் திருநீற்றை வைத்து அனுப்பினார்.
அடுத்ததாக பார்த்திபன் மாளவிகா இருவரும் முன் வந்து நிற்க, “பல வருட தவத்தால் நீங்கள் கேட்ட பொருள் உங்களிடம் வர போகிறது. முன்பு செய்த தவறை திரும்ப செய்யாதீர். நீங்கள் கிடைக்க துடிக்கும் பொருள் அருகிலே உள்ளது. தேடுங்க உங்கள் புற கண்களால் அல்ல அக கண்களால்” என்று இருவருக்கும் திருநீற்றை பூசி விட்டு, அடுத்தாக ஊர்வசி வர,
“அருமையான இரு புதல்வர்களை ஈன்றெடுத்த உமக்கு என் ஈசனின் பரிபூரண அருள் உண்டு. உன் பணி முடிய ஈசனிடம் சென்றுவிடுவாய்” என்று அடுத்ததாக ஆர்யா சூர்யா இருவரும் வர,
“தமையனுக்கு தக்க பலமாக இரு தூணாக அரனாக இருப்பது சந்தோசமே…. ஆனால் காலம் அறிந்து செயல்படு…. தமையனா அல்லது தன் மனதுக்கு இனியவளா என்ற நிலை வந்தால் சிந்தித்து செயல் படு தமையனையும் தம்பியும் உன் கண் பார்வை விடு அகற்றாதே” என்று இருவரையும் வாழ்த்தி விட்டு கௌசியை அழைக்க,
காண்பது எல்லாம் உண்மையா என்று ஆச்சரியத்தில் இருப்பவளை பார்த்து சித்தர் “கொண்டவனை மறக்க நினைக்காதே காலம் சேர்க்கும் வரை நம்பிக்கையுடன் காத்திரு எண்ணியது கனியும்” என ஒருவித சந்தோஷத்துடன் ஓரமாக செல்ல, அடுத்ததாக தேஜூவை அழைக்க, அவளோ அதிகப்படியான பயத்தில் மாட்டேன் என்று தலையை அசைக்க, அதை கண்டதும் சித்தரின் முகத்தில் மென் புன்னகை தோன்றியது.
‘இவளை’ என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்ட பைரவ் அவளின் கையை தன் கையில் கோர்த்து கொண்டு சித்தரின் முன் நிற்க,
இருவரது பற்றிய கையை பார்த்த சித்தர் சிரித்து கொண்டே “முற்பிறவியில் பற்றிய கரத்தின் வலிமையை விட இப்பிறவியில் சற்று வலிமையாக இருப்பது சால சிறந்தது வேந்தரே. இந்நொடி முதல் முடிந்த விதியை மாற்றி அமைக்கும் பணி தொடங்கி விட்டது. பல அழிவுகள் வர காத்திருக்கிறது. கவனம் தேவை. உன் உயிரை காக்க உன்னவள் தன் இன்னுயிரை தர உள்ளாள். உன்னவளை காக்க வேண்டிய பொறுப்பு உமது. நினைவில் கொள் உன் உயிர் மிக முக்கியம். அதை இழந்தால் உன்னுடன் சேர்ந்து உன் குலமும் உன் வாரிசும் அழியும். தன் உரிமைகாக உன் வாரிசு இன்னும் இங்கவே சுற்றி கொண்டு இருக்கிறது. கவலை வேண்டாம் தோள் கொடுக்க தோழன் இருக்கிறான் வருவான் சீக்கிரமாக” என்று விட்டு தேஜய்வினியை நோக்கி,
“அசட்டு தைரியமும் அடாவடி கோபமும் கொண்டு நீ இழந்ததை திரும்பி பிற அதே அசட்டு தைரியமும் அடாவடி கோபமும் வேண்டும் தேவியே….. உன் சுபாவத்தை நீவிர் மாற்றிய காரணத்தை அடைந்து விட்டாய். உன் உண்மையான சுபாவம் வர உள்ளது. உன் சபதத்தை நிறைவேற்ற காலம் வந்து விட்டது. போன முறை நடந்த தவறை திரும்ப நிகழாமல் பார்த்து கொள். இந்த இடம் இழந்த பொக்கிஷத்தை இம்முறை காப்பது உன் கடமை” என்று அவளின் அருகே நெற்றில் திருநீறு வைக்கும் போது பைரவ் அவள் கழுத்தில் போட்டு இருந்த செயினை பார்த்து மெல்லிய முறுவலுடன் பைரவின் தோளை தட்டி “இந்த முறை தங்கள் அவசரத்தால் நன்மையே நடந்து இருக்கு” என்று அனைவரும் கண் முடி திறக்கும் போது அந்த சித்தர் மறைந்து இருந்தார்.
யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எதோ ஆபத்து வர இருப்பது மட்டும் புரிந்தது. பைரவிற்கு போன் கால் வர, அதில் சொல்லப்பட்ட விசயத்தை கேட்டு யாரிடமும் பகிராமல் அனைவரையும் தன் இல்லம் நோக்கி அழைத்து சென்றான்.
பௌர்ணமி நிலவின் அழகை கொட்டும் அருவியின் நடுவே உள்ள குகையின் ஒரத்தில் அமர்ந்து அதன் அழகில் லயித்து கொண்டு இருந்த மங்கையின் கண்கள் மூடப்பட்ட,
“எப்பொழுதும் போல் தான்…. தாங்கள் கூறிய நேரத்தில் வரவில்லை இளவரசே” என்ற குரலில் கோபத்தின் சாரல் அடிக்க,
“ஏன் செய்வது தங்களை போல் நான் வேலைகள் அற்று இல்லையே…. மிக முக்கியமான வேலை அதை முடித்து விட்டு வரவே இந்த தாமதம்” என்று எள்ளலுடன் உரைக்க,
“இந்த எள்ளல் பேச்சேல்லாம் என்னிடம் வேண்டாம் தங்களை காண பல மையில் தொலைவில் இருந்து வந்தால், தாங்களோ ஆர அமர மெதுவாக வருகீறிர். நான் சென்றுருப்பேன்” என்று மேலே உரைக்கும் முன் அவள் கண் முன்னால் ஒரு சங்கிலி நிட்டப்பட்டது.
“எம் தேவியின் கழுத்தில் நீவிர் எம்முடையவள் என்ற உரிமையை கொடுக்க போகும் இந்த மங்கள நானை என் இரு கரத்தால் செய்ய வேண்டும் என்ற ஆசையால் நானே செய்தேன். இதை இந்த பேரரசே பேராசை படும் அளவு பெரு விழா கொண்டு எம் தந்தையார் தாய் எம் சுற்றம் மட்டுமல்லாமல் உம் சுற்றத்தையும் அழைத்து, அனைவரின் நல்லாசையுடன் உம் சங்கு கழுத்தில் அனிவிக்க வேண்டும். சரி தேவியே இதில் ஒர் சிறப்பு உள்ளது என்னவென்று கூறு” என்று அவளை பின்னிருந்து அணைக்க,
“தங்கள் கரத்தை எடுங்கள் இளவரசே!!!” என்று நெளிந்து கொண்டே சொல்ல, “தேவியே இவ்விடம் எனக்குரியது” என்று அவளின் கழுத்தில் மென்மையாக முத்தம் வைக்க, “இளவரசே!!!!” என “தேவியே நெளிந்தது போதும் தாங்கள் நான் கூறிய சிறப்பை கண்டறியுங்கள்” என்று மொழிய,
சில பல ஆராய்ச்சிகள் பின் “இளவரசே….. இதில் இதில் நம்…. நம் வரலாறு மட்டுமில்லாமல் நம் இருவர் மட்டுமே அறிந்த ரகசியமும் உள்ளதே” என்று தான் அறிந்ததை கூற,
“ஆம் தேவி இந்த நுன்னிய சங்கிலி நம் காதலை காலம் கடந்தும் கூற வேண்டும் என்பதால் தான் நானே செதுக்கினேன். நாளை காளி முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு மண்டலம் பூஜை நிறைவடைந்த பின் இந்த மங்கள நானை உன் கழுற்றில் கட்டினால், நம் இருவரை பிரிக்க யாராலும் முடியாது பல ஜென்மம் கடந்தாலும் நானே என் தேவியின் அடிமை” என்று சிரிக்க,
“காத்திருக்கிறேன் இளவரசே… இளவரசரின் கரம் பற்றி நகர் வலம் வர காத்திருப்பேன். உம்மை காண கடல் கடந்து வந்துள்ளேன் இளவரசே என் வாழ்வு தங்கள் மூச்சுடன் கலந்து உள்ளது” என்றவளின் காதல் எப்பொழுதும் போல் இப்பவும் அவனை சிலிர்க்க வைத்தது. பௌர்ணமி நிலவின் ஒளியில் பேரழகியாக தெரியும் தன்னவளை அணைக்க,
அவளோ “போதும் இளவரசே…. இப்படி தான் அணைப்பிர் பின் எம்மை முழுதாக உம்முடையவளாக மாற்றி பின்னே விடுவீர்….. நான் வர வில்லை இந்த விளையாட்டுக்கு” என்று சினுங்க,
“ஹா ஹா ஹா காதலில் களவு இல்லாமல் இனித்காதே தேவியே” என்று அங்கே பேச்சு வார்த்தை முடிந்து அவனோ அவளை இசைக்க இவளும் இசைந்து கொடுத்தாள்.
படார் என்று தன் படுக்கையில் இருந்து எழுந்த தேஜூ தன் கனவில் தோன்றிய காட்சியின் தாக்கத்தில் வியர்வை குளித்து இருக்க, நேரத்தை பார்க்க மணி நள்ளிரவை தாண்டி சென்றது. வேகமாக கண்ணாடி அருகே சென்றவள் தன் கழுத்தை பார்க்க ‘இதை சார் போட்டதுனால தான் இப்படி ஒரு கனவு வந்திருக்கும். நான் ஒரு லூசு இதை அப்பவே கிழட்டி இருக்க வேண்டும்’ என்று கிழட்ட போகும் போது அவளது போன் ரீங்கானது.
இந்த நேரத்தில் யாரது என்று பார்த்தவள் அதில் பைரவ் என்று வர, என்னவா இருக்கும் என்ற யோசனையில் எடுக்க அதில் அவன் கூறிய செய்தி கேட்டு அடித்து பிடித்து வெளியே வந்தாள். என்னவாக இருக்கும்???
விதிகள் தொடரும்
நிலா