காதல்போதை 19?

காதல்போதை 19?

காதல்போதை 19?

பாஸ்கெட்போல் கோர்ட்டில் பாபி தனியா பென்ச்சில் அமர்ந்து கண்களை மூடி ஏதோ யோசித்தவாறு இருக்க சட்டென்று “ஹாய் தருண்…” என்ற குரலில் கண்விழித்தவன்  எதிரே கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு நின்றிருந்த மாயாவை பார்த்து அதிர்ந்தேவிட்டான்.

அவள் தன்னை அழைத்த விதத்தில் அவளை முறைத்தவன்,
       “என்னை அப்படி கூப்பிடாத.. எனக்கு பிடிக்காது..” என்று பல்லைகடித்துக் கொண்டு சொல்ல,

     “தேங்க்ஸ் ஃபோர் த இன்ஃபோர்மேஷன் தருண்.. தருண்.. தருண்..” என்று மாயா வெறுப்பேற்ற “ஏய்ய்..” என்று கர்ஜித்தவாறு எழுந்து நின்றான் பாபி..

அவளோ அப்போதும் அசால்ட்டாக அவளை பார்க்க ‘உஃப்ப்..’ என்று பெருமூச்சுவிட்டவன்,
     “எல்லாம் தெரிஞ்சிருச்சி போல.. யாரு உன் பாசமலர் சொன்னானா..” என்று கடுப்பாக கேட்க,

வாய்விட்டு சிரித்தவள் அவன் அமர்ந்திருந்த பென்ச்சில் கைகளை ஊன்றியவாறு அமர்ந்து,
        “அன்னைக்கு உன்னை கம்படீஷன்ல பார்த்தப்போ சந்தேகம் இருந்திச்சு.. இன்னைக்கு கன்ஃபோர்ம் ஆகிறுச்சி.. தட்ஸ் இட்..” என்று சொன்ன மாயாவுக்கோ அன்று டான்ஸ் காம்படீஷனில் தான் மேடையிலிருக்கும் போது கூட்டத்திற்கு நடுவில் மறைந்து நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்த பாபி தான் மனக்கண்ணில் தோன்றினான்.

‘ச்சு.. ச்சு.. ச்சு..’ என்று உச்சு கொட்டியவள்,
      “அவ்வளவு பாசமா பாபி.. ஆனா அன்னைக்கு வந்த ஓகே.. ஏன் முடிவ தெரிஞ்சிக்குற வரைக்கும் வெயிட் பன்னல்ல..” என்று சந்தேகமாக கேட்க,

     “ஐ க்னோ அபௌட் ஹிம்..” என்று இறுகிய முகத்துடன் சொன்னவன் வார்த்தையில் இருந்த உறுதியில் மாயாவே வியந்தாலும் மறுபுறம் ‘இந்த ஈகோவுக்கு இரண்டுபேருக்கும் குறைச்சல் இல்ல..’ என்று நினைத்துக் கொண்டாள்.

    “இவ்வளவு பேசுறியே..போயும் போயும் பொண்ணுங்களுக்காக அடிச்சிக்கிட்டிருக்கீங்க.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல..” என்று மாயா முறைத்தவாறு கேட்க,

   “எல்லாம் அந்த சஞ்சய் தான் காரணம்.. என்ட் என் பெஸ்ட் ஃப்ரென்ட் அ எங்கிட்ட இருந்து பிரிச்சவனும் அவன் தான்.. நா காதலிச்ச பொண்ண கூட.. அந்த சஞ்சய் இடியட்காக இத்தனை வருஷமா அவன்கூட இருந்த என்னையே அடிச்சிட்டான் அந்த *****..” என்று ரோஹனை திட்டி கண்கள் சிவக்க கோபத்தில் பாபி கத்த,

    “பேசி தீர்த்துக்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை தருண்.. அதுக்கப்றம் ஒருதடவை கூட உங்க ஃப்ரென்ஷிப்காக நீங்க பேசிக்கல.. அதான் உங்க பிரச்சினைய உங்களாலேயே தீர்த்துக்க முடியல..” என்று மாயா சொல்ல,

அவளை அலட்சியமாக பார்த்தவன்,
      “தட்ஸ் இம்ப்போஸிபள்.. இனி அவனுக்கும் எனக்கும் நடுவுல எதுவும் இல்ல.. என்ட் யூ.. டோன்ட் இர்ரிடேட் மீ ஓகே..” என்று கடுப்பாக சொல்ல,

முகத்தை சுருக்கியவள்,
     “நா உன் பேபியில்லையா பாபி.. வேணா நாம ஃப்ரென்ட்ஸ்ஸா இருக்கலாமா..” என்று கண்கள் மின்ன கேட்க, அவளை முறைத்து பார்த்தவன் அவள் கையை தட்டிவிட்டு “இடியட்..” என்று கத்திவிட்டு செல்ல,

மாயா தான் ‘இவன் ரோக்கியோட ஃப்ரென்டுன்னு சொல்றதுக்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு..’ என்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

கொலேஜ் கென்ட்டீனில்,

   “போன்டா உனக்கு தான் அதுங்க இரண்டும் ஃப்ரென்டுன்னு தெரியும்ல.. அப்றம் ஏன்டி என்கிட்ட மறைச்ச..” என்று மாயா கோபமாக கேட்க,

    “நா எங்க மறைச்சேன்.. நீதான் என்கிட்ட கேக்கவே இல்லையா..” என்று அலட்சியமாக சொன்னவளை பார்த்து மாயா பொய்யாக முறைக்க,

   “கூல் செல்லகுட்டி எனக்கு நிஜமாவே சரியா தெரியல.. நா பாபி வீட்டுக்கு டூ ஆர் த்ரீ டைம்ஸ் தான் போயிருக்கேன்.. அப்போ பாபி கூட ஒரு பையன அடிக்கடி பார்த்திருக்கேன்.. பட் அது யாருன்னு தெரியாது என்ட் நா அப்போ ரொம்ப சின்ன பொண்ணு.. அப்றம் நா ஸ்கூல் லைஃப் ஹோஸ்ட்டல் தங்கி தான் படிச்சேன்.. லீவ்ல வீட்டுக்கு வந்த அப்போ ஒருதடவை தான் அப்பா கூட்டிட்டு போனாரு.. அப்போ ரோக்கி அண்ணாவ பார்க்கல..

அதுக்கப்றம் இந்த கொலேஜ்க்கு நா செகன்ட் இயர் தான் சேர்ந்தேன்.. பாபியோட அப்பா தான் என்னோட மொத்த படிப்பு செலவை ஏத்துகிட்டு இந்த கொலேஜ்ல சேர்த்துவிட்டாரு.. நா இங்க வந்த முதல்நாளே அவங்க ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிறதை தான் பார்த்தேன்.. என்ட் இப்போ சஞ்சய் அண்ணா சொல்லி தான் ரோக்கியண்ணா தான் அந்த பையன இருக்குமோன்னு எனக்கு தோணுது..” என்று கீர்த்தி சொல்ல இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிக்கொண்டாள் மாயா.

    “நா எத்தனையோ தடவை ட்ரை பன்னிட்டேன்.. அவங்கள சேர்த்து வைக்க சத்தியமா என்னால முடியல.. இன்ஃபேக்ட் ஐ ஃபீல் கில்ட்டி என்னால தானோ..” என்று சஞ்சய் இழுக்க,

   “உன்னெல்லாம் குத்தம் சொல்ல முடியாது அண்ணாத்த.. காலக்கொடுமைன்னு சொல்லலாம்.. ஃப்ரீயா விடு.. அவங்கள சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு..” என்று மாயா சொல்ல சஞ்சய்யோ நக்கலாக ஒரு பார்வை பார்த்தான்.

     “இந்த மாயா பத்தி உனக்கு சரியா தெரியல அண்ணாத்த.. என்ன பன்னனும்னு எனக்கு தெரியும்.. அதுக்கு முன்னாடி எனக்கு அவங்க இரண்டு பேர் பத்தியும் நல்லா தெரியனும்.. அவங்களுக்குள்ள ஒத்துபோற விஷயம் ஏதாவது இருக்கா..” மாயா தீவிரமாக கேட்க,

     “ஒருத்தனுக்கு ஒன்னுன்னா இன்னொருத்தனால தாங்கவே முடியாது.. அவங்களுக்குள்ள அடிச்சிப்பாங்க.. ஆனா வேற யாரும் அவங்க மேல கைவக்க விட மாட்டாங்க.. என்ட் யூ க்னோ வட் மாயா இரண்டு பேரும் ஒரே மாதிரி நெஞ்சில ட்ராகன் டாட்டூ கூட குத்தியிருக்காங்க.. என்ட் இன்னொரு விஷயம் ஒவ்வொரு தடவையும் பாபிக்கும் எனக்கும் சண்டை ஆச்சின்னா நா பாபிய அடிக்கிறதை கூட ரோக்கியால பார்க்க முடியாது.. ரோக்கியோட ஒவ்வொரு கம்படீஷன்க்கும்  பாபி வருவான்.. அது ரோஹனுக்கும் தெரியும்.. ரோஹனுக்கு தெரியும்னு பாபிக்கு கூட தெரியும்..” என்று சன்ஜய் சொல்ல உறவுகளுக்கிடையே வரக் கூடாதா ஒன்று ஈகோ அதுதான் இங்கு பிரச்சினை என்று சரியாக யூகித்துக்கொண்டாள் மாயா.

    “ஓகே அண்ணாத்த மொதல்ல அவங்களுக்குள்ள புதைஞ்சிருக்க ஃப்ரென்ட்ஷிப்ப கிளறி வெளில எடுக்கனும்..” மாயா தீவிரமாக சொல்ல,
     “எப்படி..” என்று ஒருசேர கேட்டனர் கீர்த்தியும் சன்ஜய்யும்.

    “அதுக்கு தான் ஆபரேஷன் ஏ(A).. சினிமாவுல வர்ற மாதிரி தான் ரூஹிய பத்தி தருண்கிட்ட  தருண பத்தி ரூஹிக்கிட்ட  நல்லவிதமா பேச போறோம்..” என்று மாயா சொல்ல,

     “ஆத்தீ நா இல்ல..  இதை இதுக்கு முன்னாடி ட்ரை பன்னி ரோக்கி கிட்ட நல்லா வாங்கி கட்டிருக்கேன்.. என்னால இதுக்கு மேல தாங்கிக்க உடம்புல தெம்பு இல்லை தாயே..”  என்று சன்ஜய் அலற,

   “நீயெல்லாம் ஆம்பிள பையனாடா.. நானே பார்த்துக்குறேன்.. ” என்று விரைப்பாக மாயா சொல்லியவாறு “ஆண்டவா நீதான்பா காப்பாத்தனும்..” என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு வேண்டுதல் வைக்க, கீர்த்தியோ,
   “ஆண்டவா அதுங்ககிட்ட அடி வாங்காம நீதான்பா ஜிலேபிய சேஃபா பாத்துக்கனும்..” என்று வேண்டுதல் வைத்துக்கொண்டாள்.

அடுத்தநாள்,

   ரோஹன் தன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்த அவன் இறங்கியதும் தான் தாமதம் அவன் முன் குதித்து வந்து நின்றவளை பார்த்து உள்ளுக்குள் பதறினாலும் அடுத்தநொடி அவன் அவளை முறைத்து பார்க்க,  
    “ரூஹி ஆர் யூ ஓகே பேபி..” என்று மாயா கேட்டதில்,
    “இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன்.. இனிமே தான் சனி..” என்றுவிட்டு அவன் முன்னே நடக்க,

அவன் பின்னாலேயே குடுகுடுவென ஓடியவள்,
      “என்ன ரூஹிபேபி ஒரே நாள்ல கொஞ்ச இளைச்சாப்ல தெரியுற.. எல்லா ஃப்ரென்ட்ஷிப் படுத்துறபாடு..” என்றவளை ஒரு மார்கமாக பார்த்தவன்,
       “இப்போ உனக்கு என்ன வேணும்..” என்று அழுத்தமாக கேட்டான்.

     “நீ தருண பத்தி என்ன நினைக்குற ரூஹி..” என்று மாயா பட்டென்று கேட்க, அவளின் பாபி மீதான அழைப்பில் ஏதோ யூகித்தவன் அவளை கூர்மையாக பார்க்க,

மாயாவோ,
      “அது இல்ல பேபி அந்த தருண் இருக்கான்ல.. நா கூட அவன தப்பா புரிஞ்சிக்கிட்டேன் ஆனா அவன் ப்ளட் டொனேட் பன்றான்.. கண்ணு தெரியாதவங்களுக்கு ரோடு க்ரோஸ் பன்னி விடுறான்.. மரத்து மேல இருந்த பூனையை சேஃபா கீழ இறக்கி விட்டான்.. பொண்ணுங்களுக்கு ஒரு ஆபத்துன்னா ஒத்த ஆளா முன்னாடி  போய் நிக்கிறான்.. அவன் க்ரேட்ல..” என்று வாய்க்கு வந்ததை மாயா பேச இங்கு ரோஹனோ கண்கள் சிவந்து கோபத்தில் கை முஷ்டியை இறுக்கிக் கொண்டான்..

    “ஷட் அப் இடியட்..” என்று கத்தியவன் அவளை மிரட்டும் பார்வை பார்த்து,
     “அந்த சைக்கோ சஞ்சய் உளறினது வச்சு பிரிஞ்சிருக்க நட்ப சேர்த்து வைக்க போறேன்னு கிறுக்குத்தனமா ஏதாவது பன்ன.. எனக்கு பொறுமை ரொம்ப கம்மி.. இப்படி பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்.. புரியுதா..” என்று கத்திவிட்டு விறுவிறுவென செல்ல இப்போது எச்சிலை விழுங்கிக்கொண்டு அதிர்ந்து நின்றது என்னவோ மாயா தான்..

விடா முயற்சி விஷ்வரூப வெற்றி என்ற ரீதியில் அடுத்து பாபியை தேடி சென்ற மாயா அங்கு தன் ஜீப்பில் உட்கார்ந்தவாறு தன் பக்கத்தில் அமர்ந்து ஒரு பெண்ணுடன் பாபி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு விரைந்தாள்.

     “ஏய் மேனாமினிக்கி உன் பாய் ஃப்ரென்ட் அங்க உன்ன தேடிக்கிட்டு இருக்கான் நீ இங்க இவன்கூட கடல போட்டுகிட்டு இருக்கியா.. இரு உன்ன போட்டு கொடுக்குறேன்..” என்று மாயா மிரட்ட அந்த பெண்ணோ ‘அய்யோ..’ என்றவாறு அங்கிருந்து ஓட மாயாவோ போகும் அவளை பார்த்து சிரித்தாள் என்றால் பாபியோ அந்த பெண்ணை முறைத்துவிட்டு மாயாவை தான் உக்கிரமாக பார்த்தான்.

அவன் அனுமதியின்றி ஜீப்பில் ஏறி அவனருகில் அமர்ந்தவள்,
        “ஹாய் தருண்..” என்று உற்சாகமாக அழைக்க,

அவளை சலிப்பாக பாபி பார்க்க,
       “தருண் நீயும் ரோக்கியும் ஒருமாதிரி டாட்டு குத்தியிருக்கீங்களாமே.. சூப்பர்ல.. நிஜமாவே ஐ அம் ஜெலஸ்(jealous) ஆஃப் யூ காய்ஸ்..” என்று மாயா பொய்யாக சொல்ல, அவனோ அவள் பேசுவதை கண்டுக்காது ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான்.

     “தருண் ரோஹன் இருக்கான்ல அவனுக்கு உன் மேல எம்புட்டு பாசம் தெரியுமா.. அவனுக்கு சஞ்சய்ய விட உன்ன தான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. இது எனக்கு என் ரூஹியே சொன்னான்..” என்று மாயா சொல்ல,

அவளை நக்கல் பொதிந்த பார்வை பார்த்தவன்,
       “ஓஹோ பேபி ஐ கொட் இட்.. நீ என்னை ரோக்கி கூட சேர்த்து வைக்க ட்ரை பன்ற.. பட் என்னன்னா அது தான் ஜோக் ஆஃப் த இயர்..” என்று சொல்லி பாபி சிரிக்க,

ஏதோ யோசித்தவள்,
     “பாபி உனக்கு ஒன்னுமே தெரியல.. நீ எவ்வளவோ அழகு தெரியுமா.. உனக்கு அந்த ரோஷினி பொருத்தமே இல்ல.. கடவுள் உனக்குன்னு ரொம்ப க்யூட்டா கொழுக்கு மொழுக்குன்னு டெட்டி பெயார் மாதிரி ஒரு பொண்ண படைச்சிருப்பான்.. பட் நீ போயும் போயும் ஒரு பொண்ணுக்காக சஞ்சய் கூட அடிச்சிக்கிறதும் சஞ்சய் மேல இருக்க கோபத்துல ரோஹன்கூட சண்டை பிடிக்கிறதும் தட்ஸ் நொட் ஃபெயார்(Fair)..” என்று சொல்ல,

     “தட்ஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்..” என்று  பாபி வெடுக்கென சொல்ல,

அவனை அழுத்தமாக பார்த்தவள்,
      “தருண் நீ ரூஹிய மிஸ் பன்னல்லையா..” என்று கேட்டதில்
      “இல்லை..” என்றவாறு முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான் பாபி.

அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள் மிண்டும் தன் கையை நீட்டி,
   “ஃப்ரென்ட்ஸ்..” என்று கேட்க, அளை இரு புருவங்களையும் உயர்த்தி பார்த்த பாபி,
     “இதுக்கு வாய்ப்பேயில்லை..” என்றுவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கி செல்ல அவனையே உதட்டிய பிதுக்கிய வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

அடுத்தநாள்,

      “இன்னைக்கு என்ன ப்ளான் தங்கச்சிமா..” என்று சஞ்சய் சலிப்பாக கேட்க,

“ப்ளான் பீ(B).. லவ்ல தான் கெமிஸ்ட்ரி வர்க் அவுட் ஆகனுமா.. ஏன் ஃப்ரென்ட்ஸ்குள்ள வர்க் அவுட் ஆக கூடாதா.. நீங்க சினிமால பார்த்ததில்ல ஹீரோ ஹீரோயின் நேருக்கு நேரா வரும் போது யாராச்சும் போய் இடிச்சி அந்த ஹீரோ ஹீரோயின் ஒருத்தர் மேல ஒருத்தர் மோதி கெமிஸ்ட்ரி வர்க் அவுட் ஆகும்.. அதைதான் நாம ரூஹிக்கும் தருண்க்கும் பன்ன போறோம்..” என்று மாயா சொல்ல,

    “ஜிலேபி இதெல்லாம் உன் விஷயத்துல நடந்திருந்தா இந்நேரம் நீ சிங்கிளா சுத்திகிட்டு இருக்க மாட்ட.. எனக்கு அதுதான் ஃபீலிங் ஆ இருக்கு..” என்று சொல்லி கீர்த்தி சிரிக்க,

அவளை முறைத்தவள் சஞ்சய்யிடம்
       “ப்ளான எக்ஸ்ஸிக்யூட்(Execute) பன்னு அண்ணாத்த..” என்று சொல்ல, ‘இது எங்க போய் முடிய போகுதோ..’ என்று தலையிலேயே வெளிப்படையாக அடித்துக்கொண்டான் சஞ்சய்.

கொலேஜ் காரிடாரில் பாபி ஃபோனை நோண்டியவாறு வர சரியாக சஞ்சய்யை தேடி அவன் வர சொல்லியிருந்தான் என்று ரோஹனும் பாபியின் எதிரில் சஞ்சய் இருக்கும் இடத்தை கேட்டு ஃபோனில் சஞ்சய்க்கு மெசேஜ் டைப் செய்தவாறு வர இருவருமே ஒருவரையொருவர் கவனிக்கவில்லை.

இதை தூணுக்கு பின்னால் மறைந்து இருந்தவாறு பாபியும் சஞ்ய்யும் கீர்த்தியும் எட்டி பார்த்துக் கொண்டிருக்க சரியாக இருவரும் நெருங்கும் சமயம்,
      “போ அண்ணாத்த..”என்று மாயா சஞ்சய்யை பிடித்து தள்ளிவிட,

அவனும் ஓடிவந்து தெரியாமல் இடிப்பது போல் பாபியை இடித்தவாறு செல்ல இதை எதிர்ப்பார்க்காததில் பாபி ரோஹன் மீது மோதிவிட்டான். இருவரும் தடுமாற சுதாகரித்து காலை ஊன்றி நின்றுக்கொண்டவர்கள் ஒருவரையொருவர் பார்க்க அடுத்து என்ன நடக்கும் என்று மாயாவும் கீர்த்தியும் ஆர்வமாக பார்க்க சஞ்சய் கூட இருவரின் முகபாவனைகளை தான் கூர்ந்து கவனித்தான்.

அடுத்தநொடி இருவரும் கொத்தாக ஒருவர்  மற்றொருவரின் சட்டை கோலரை பிடித்துக்கொள்ள அடுத்து நடக்க போகும் சம்பவத்தை உணர்ந்த மாயா,
     “அய்யய்யோ சண்டை.. நா இல்ல..” என்றவாறு அங்கிருந்து ஓட, கீர்த்தியும்,
     “அடிப்பாவி என்னை விட்டுட்டு ஓடுறியே துரோகி..” என்றவாறு அவள் பின்னால் ஓட,
அங்கு நடந்த சண்டையை தடுக்க சென்ற சஞ்சய்க்கு தான் சேதாரம் அதிகமாகிப்போனது.

அடுத்து வந்த நாட்கள் மாயாவும் ஏதேதோ முயற்சி செய்ய அவள் ரூஹியும் தருணும் அதை காது கொடுத்து கேட்டால் தானே.. இதையே யோசித்தவாறு ஹோஸ்ட்டலில் ஜன்னல் வழியே வெளியே வெறித்தவாறு நின்றிருந்த மாயா தன் பக்கத்திலிருந்த கீர்த்தியை பார்த்து கேட்ட கேள்வியில் அதிர்ந்துவிட்டாள் கீர்த்தி.

காதல்போதை?
—————————————————————-
  
    நெக்ஸ் யூடி நாளைக்கு நட்பூஸ்..  AWAITING FOR UR COMMENTS..❤

-ZAKI?
     

 

Leave a Reply

error: Content is protected !!