காதல்போதை 36?
காதல்போதை 36?
அடுத்தநாள் காலை,
திடீரென கேட்ட அழைப்பு மணி சத்தத்தில் கதவை திறந்த பாபி, எதிரே நின்றிருந்த மாயாவை பார்த்து விழிவிரித்து, “மாயா, நீ இங்க… தனியாவா வந்த?!” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
அவளோ வீட்டினுள் சாதரணமாக நுழைந்து, “நோ தருண், அலைஸ் என் சேஃப்டிக்கு சில ஆளுங்கள கூட அனுப்பியிருக்கா, வெளில வெயிட் பண்றாங்க. என்ட், தனியா வந்தா தான் உங்க ஃப்ரென்ட் என்னை முறைச்சே மர்டர் பண்ணிருவாரே…” என்று சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே கேலியாக மாயா சொல்ல,
“ஆர் யூ ஆல்ரைட் மாயா?” என்று கேட்ட பாபியின் குரலை அவள் கவனிக்கவேயில்லை. அவள் பார்வையின் தேடலை புரிந்து, சிரித்துக் கொண்ட பாபி, “மாயா, அந்த ரூம்” என்று ஒரு அறையை காட்ட, “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு, அந்த அறைக்குள் குடுகுடுவென ஓடினாள்.
அங்கு ரோஹன் வலது தோள்பட்டையில் கட்டுடன் ஜன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருக்க, “ரோஹன்” என்ற குரலில் சட்டென திரும்பியவன் இதழ்களோ தன்னவளை கண்டதும் மென்மையாக புன்னகைத்து கொண்டன.
அவளோ அடுத்தநொடி ஓடி சென்று அவனை தாவி அணைத்திருக்க, “ஸ்ஸ்… ஆஆ…” என்ற முணங்கலில் அவனை விட்டு விலகியவள் அப்போது தான் அவன் காயத்தை பார்த்து உதட்டை பிதுக்க, ரோஹனோ தன்னவளையே இமைக்காது பார்த்திருந்தான்.
“என்னால தானே…” என்று தழுதழுத்த குரலில் ஏதோ பேச வந்தவளின் கண்களிலிருந்து இருசொட்டு கண்ணீர் துளிகள் விழுந்தன.
மற்ற கையால் அவளை அணைத்துக் கொண்ட ரோஹன், “அப்படி எல்லாம் எதுவும் இல்லைமா, அவங்க என்னை தான் டார்கெட் பண்ணிருக்காங்க. தேங்க் கோட்! உனக்கு எதுவும் ஆகல” என்று சொன்னாலும், அவனுக்கு நன்றாகவே தெரியும், இது சர்வேந்திரனின் வேலை தான் என்று.
“இல்லை ரோஹன், அது…” என்று மாயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரோஹனின் தொலைப்பேசிக்கு ஒரு செய்தி வர, அதை புருவத்தை சுருக்கி பார்த்தவன், நிமிர்ந்து மாயாவை முறைப்புடன் பார்த்தான்.
“இது உன் வேலை தானா…?” என்று ரோஹன் காட்டமாக கேட்க, தன்னவனை சுட்ட அந்த இத்தாலியன் இறந்த செய்தியே அவனுக்கு வந்திருப்பதை சரியாக யூகித்த மாயா விரைப்பாகவே, “ஆமா, என்னால தான்” என்று தெனாவெட்டாக சொன்னாள்.
“உன்னையெல்லாம்…” என்றவாறு சலிப்பாக தலையாட்டிய ரோஹன் கட்டிலில் அமர்ந்துக் கொள்ள, அவனருகில் அமர்ந்தவள் தயக்கமாக, “உன்ன காயப்படுத்தினவங்கள நான் எப்படி விட்டு வைப்பேன்?” என்று கேட்க, அவனுக்கோ அன்று கல்லூரியில் நடந்தது தான் நியாபகம் வந்தது.
அன்று, தான் பேசிய பேச்சில் கோபமடைந்து அவளுக்காக தன்னை அறைந்த பாபியையே அடித்தவள் இதை சும்மா விடுவாளா என்ன…? அதை நினைத்து மென்மையாக சிரித்துக் கொண்டவனுக்கு, அவள் மேல் காதல் பல்கி பெருகியது.
கதவை தட்டி உள்ளே நுழைந்த பாபி, தொலைக்காட்சியை போட்டுவிட்டு, கபோர்டில் முக்கிய கோப்பு ஒன்றை தேடியவாறு, “அப்போ மாயா, நான் கிளம்பவா? என் ஃப்ரென்ட் அ நீ பார்த்துப்பல்ல?” என்று நமட்டு சிரிப்புடன் கேட்க,
“ஷுவர் தருண்” என்றவளை குறும்பாக பார்த்த பாபி வேண்டுமென்றே, “பட் மாயா, இது லியோக்கு தெரிஞ்சா உன்னை தப்பா எடுத்துக்க மாட்டாரா? ஏன் கேக்குறேன்னா, உங்களுக்கு என்கேஜ்மென்ட் ஆகிறுச்சி, நீ ரோஹனை பார்க்க வீடு தேடி வந்திருக்க, அதான்…” என்று இழுக்க, ரோஹனும் உள்ளுக்குள் சிரித்தவாறு தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பாபியின் பேச்சில் முகம் இறுகியவள், “ஐ டோன்ட் க்யார் தருண், எனக்கு என்ன தோணுதோ, அதை தான் நான் பண்ணுவேன். தட் இஸ் மாயா” என்று சமாளித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள, ‘ஆஹான்’ என்று ஒருசேர இருவரும் ஒருவரையொருவர் சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர்.
சரியாக அதேநேரம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியை பார்த்த மாயா, ‘இதுங்களுக்கு வேற வேலையே இல்லை’ என்று சலிப்பாக தலையாட்டியவாறு, “ஐரா கம்பனீஸ் உரிமையாளர் மீது துப்பாக்கி தாக்குதல், ஆர்.டீ.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி மிஸ்டர்.ரோஹனுக்கும் மிஸ்.மாயா மஹேஷ்வரிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு, நிச்சயமானவரை ஏமாற்றி காதலனுடன் சுற்றி திரியும் தொழிலதிபர் மாயா” என்று அதில் ஒளிபரப்பாகும் செய்தியை மாயா கேலித் தொனியில் சொல்லிக் காட்ட, மற்ற இருவரும் சிரித்தே விட்டனர்.
“இதெல்லாம் பார்க்கும் போது உனக்கு கஷ்டமா இருக்காதா மாயா?” என்று ரோஹன் சிரித்தவாறே கேட்க,
“நோ ரோஹன், மீடியால நாம முகத்தை காட்டும் முன்னமே எல்லா விமர்சனங்களுக்கும் தயாரா இருக்கனும். என்ட், பொய்யான வதந்திகளுக்கும் கூட… என்ன தான் நாம மிஸ்டர் ஓர் மிஸஸ்.பர்ஃபெக்ட் ஆ இருந்தாலும், இந்த மீடியா ஆளுங்க பொய்யா கூட எழுத தான் செய்வாங்க.
பட், நான் அவங்கள தப்பு சொல்ல மாட்டேன். அவங்க துறையில போட்டி இருக்கும். சோ, அவங்க டீஆர்பீ(TRP)க்காக அப்படி பண்றாங்க. ஆனா, அவங்க பண்ற விதம் தான் தப்பு. சோ, நாம தான் டோன்ட் க்யார், டேக் இட் ஈஸின்னு இருக்கனும்” என்று மாயா சொல்லி முடிக்க, மாறாத மாயாவின் இந்த குணத்தில் இருவரும் அவளை மெச்சுதலாக பார்த்தனர்.
ஏதோ யோசித்த ரோஹன், “இஃப் யூ டோன்ட் மைன்ட் நான் ஒன்னு கேக்கவா, ஏன் உன் கோஸ்மெடிக் ப்ரொடெக்ஸ்ஸோட ஃபோர்ம்யூலாவ அக்வா டொஃபேனாவோட ஃபோர்மியூலா கூட சம்மந்தப்படுத்தி பேசுறாங்க? அதுவும் முந்நூற்றைம்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த அந்த மேக்கப் பொய்ஸன் கூட…” என்று சந்தேகமாக கேட்க,
அவன் இப்படி கேட்பான் என்பதை எதிர்பார்க்காத மாயா முதலில் அதிர்ந்தாலும், அடுத்தகணம் தன்து முகபாவனையை மாற்றி, “ஐரா கம்பனீஸ் இருக்குற உயரத்துக்கு இந்த மாதிரி செய்திகள் வர்றது சகஜம் தான் மிஸ்டர்” என்று தன் தடுமாற்றத்தை மறைத்தபடி சொல்ல,
“பட் மாயா, எப்போ அக்வா டொஃபேனாவோட சீக்ரெட் கண்டுபிடிச்சாங்களோ, அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் இட்டாலி மட்டுமில்ல நிறைய நாடுகள்ல சமூகத்துல பெரிய ஆளுங்க மர்மமான முறையில இறக்குறாங்க. அதுவும், இந்த மொத்த கேஸ்லையும் பொதுவான விஷயம் என்னன்னா, இறந்தவங்க வீட்ல உங்க கம்பனியோட காம்பெக்ட் பவுடர் பாதி தோண்டி சிதைச்ச நிலையில இருந்திருக்கு” என்று ரோஹன் அவளை ஆழ்ந்து நோக்கியவாறு சொன்னான்.
“ஆமா, நான் கூட இதை பத்தி கேள்விப்பட்டேன். உங்க தாத்தா கூட அந்த ஃபோர்மியூலா பத்தி ரிசேர்ச் பண்ணியிருக்காருல பட், அவரால அதை பத்தி கண்டுபிடிக்க முடியலன்னு சொன்னாராமே… அதுக்கப்றம் தான் அவர் கோஸ்மெடிக் கம்பனி ஆரம்பிச்சதே, அதுக்கப்றம் பல வருஷம் கழிச்சி மெட்ரிசன் அந்த ஃபோர்மியூலாவ கண்டுபிடிச்சிருக்காரு.
அதுவும் இந்த பொய்ஸன் உடல்ல கலந்தாலும் கண்டுபிடிக்கவே முடியாதாம், போஸ்மாட்டம் ரிபோர்ட்ல கூட உடம்புல விஷம் இருக்குறதுக்கான அடையாளமே இருக்காதாம். அதனால தான் என்னவோ இந்த கேஸ்ஸ முடிக்க முடியாம இருக்கு” என்று பாபி சொல்ல,
“எக்ஸ்ஸேக்ட்லி பாபி, மிஸ்டர்.ஆதி நாராயணண் இதை பத்தி ரிசேர்ச் பண்ணிருக்காரு பட், அதை கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லி இப்படி ஒரு கம்பனி ஆரம்பிச்சிருக்காரு. ரிசேர்ச்சர் மெட்ரிசன் கண்டுபிடிச்சதுக்கு அப்றம் தொடர்ந்து கொலைகள். அதுவும் இறக்குறவங்க எப்படி இறந்தாங்கன்னு கூட கண்டுபிடிக்க முடியல. அதனால தான் அந்த சந்தேகம் அக்வா டொஃபேனா மேல வந்திருக்கு” என்றான் ரோஹன்.
“போத் ஆஃப் யூ ஆர் கரெக்ட். பட், அதுக்காக அந்த பொய்ஸன நாங்க தான் மெனுஃபெக்ச்சர் பண்றோம்னு, எங்க மேல இருக்குற வதந்தி எப்படி உண்மையாகும்? ஐரா இஸ் த மல்டி நஷ்ஷினல் கம்பனி. ஏகப்பட்ட நாடுகள்ல எங்களோட ப்ரோடெக்ஸ் இருக்கு, இறந்தங்க எல்லாருமே சாதாரண ஆளுங்க இல்லை, அவங்க வீட்ல பொதுவாவே எங்க ப்ரோடெக்ஸ் அ தான் ப்ரிஃபெர்(Prefer) பண்ணுவாங்க. சோ, இறந்தங்க வீட்ல எங்க ப்ரோடெக்ட்ஸ் இருக்குறது ஆச்சரியம் இல்லை, அதெல்லாம் ஒரு எவிடென்ஸ்ஸா எடுத்துக்க முடியாது” என்று சமாளித்தாள் மாயா.
ஒருவரையொருவர் முகத்தை பார்த்துக் கொண்ட பாபியும், ரோஹனும் ஒருசேர, “இருக்கலாம்” என்று சொல்ல, இந்த பேச்சை மாற்ற எண்ணியவள், “லீவ் தட் டோபிக் தருண், கீர்த்தி பத்தி என்ன நினைக்கிறீங்க? நிஜமாவே உங்களுக்கு அவ மேல இன்ட்ரஸ்ட் இல்லையா?” என்று கேட்டாள்.
“ஓ கோட்! மாயா, நீயுமா? அவ தான் என்னை காதலிக்கிறேன்னு நினைச்சிக்கிட்டு இருக்கான்னா, நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாத” என்று பாபி சொல்ல,
“சோஷியல் மீடியால எல்லாமே உண்மைன்னு கிடையாது தருண், யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப முடியாது. இப்போ நீ காதலிக்கிறன்னு சொல்ற பொண்ணு உன்ன ஏமாத்துறதா கூட இருக்கலாம்ல?” என்று புரிய வைக்க முயன்றாள் மாயா.
அன்று தான் காதலிப்பதாக சொன்ன போது மாயா தன்னை திட்டியது பாபிக்கு நினைவு வர, மெல்லிதாக சிரித்துக் கொண்டவன், “ஐ க்னோ மாயா, பட் என் ஸ்வீட்டி என்னை என்னைக்கும் ஏமாத்த மாட்டா, என்ட்…” என்று இழுத்தவன் ஏதோ சொல்லிவிட்டு வெளியேற, ரோஹனோ, ‘என் நண்பனை நான் அறிவேன்’ என்ற ரீதியில் புன்னகைக்க, மாயா தான் இருபுருவங்களை உயர்த்தி ஆச்சரியமாக பார்த்தாள்.
பாபி சென்றதும் மாயா, ரோஹனை ஒருவித சங்கடத்துடன் ஏறிட்டு பார்க்க, அவனுக்கு கூட இந்த தனிமை புதுவிதமான உணர்வுகளை தோற்றுவித்ததில் தன்னவளையே விழி அகலாது பார்த்தான்.
“கோஃபி குடிக்கலாமா?” என்று மாயா சூழ்நிலையை மாற்றும் பொருட்டு கேட்க, அவனும் புன்னகை முகமாக தலையசைத்தான்.
அறை கதவு வரை சென்றவள், நின்று உதட்டை பிதுக்கிய வண்ணம் ரோஹனை திரும்பி பார்க்க, அவனோ வாய்விட்டு சிரித்தவாறு, “கோஃபி குடிக்கனும். ஆனா, உனக்கு கோஃபி கூட போட தெரியாது, ரைட்?” என்று கேட்க,
“ஹிஹிஹி… ஆமா ரோஹன்” என்று மாயா அசடுவழிய, ரோஹனோ எழுந்து சமையலறை நோக்கி செல்லவும், தலையிலடித்துக் கொண்டு அவன் பின்னாலே ஓடினாள் மாயா.
அவன் பின்னால் சென்றவள், சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த ரோஹனின் நடன போட்டிகளின் போது எடுத்த புகைப்படங்களை புருவத்தை சுருக்கி பார்த்துக் கொண்டிருக்க, சரியாக சமையலறையில் ஏதோ பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டதில், ரோஹனை தேடி சென்றாள்.
அங்கு, ரோஹன் ஏதோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்து, தண்ணீர் குடிக்க குளிர்சாதனப் பெட்டியை திறந்தவள், அதிலிருந்த மது போத்தல்களை பார்த்து தன்னவனை தீயாய் முறைத்தாள்.
அவள் வந்ததை உணர்ந்து, திரும்பி பார்த்த ரோஹன், தன்னை நோக்கிய அவளின் கோபமான முறைப்பை புரியாமல் பார்த்தவாறு அவளருகில் வந்து உள்ளே எட்டி பார்க்க, அப்போது தான் அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தது அவனுக்கு.
“ஹிஹிஹி… சும்மா தாகத்துக்கு…” என்று ரோஹன் அசடுவழிந்தவாறு இழுக்க, “ஓஹோ! தாகம் வந்தா தண்ணீர் குடிக்க மாட்டீங்க, சரக்கு தான் தேவைப்படும்ல?” என்று முறைப்பாக கேட்டாள் மாயா.
“ஆ… அது வந்து… சில நினைவுகளை மறக்க எனக்கு வேற வழி தெரியல… அதான்…” என்றவன் குறும்பாக, “நீ கூட எடுத்துக்கலாம், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்று சொல்ல,
“மிஸ்டர், இட்டாலில பிறந்து வளர்ந்தாலும், நானும் தமிழ் பொண்ணு தான்” என்று மாயா சொன்னதில் கிளுக்கி சிரித்து விட்டான் ரோஹன்.
அன்று அவன் பிறந்தநாளின் போது, அவள் மது அருந்திவிட்டு செய்த அட்டுழியங்கள் ரோஹனுக்கு நியாபகம் வரவே, அடக்க முடியாது ரோஹன் சிரித்து விட, “எதுக்கு சிரிக்கிறீங்க?” என்று புரியாமல் கேட்டாள் அவனவள்.
‘இல்லை’ என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் தலையாட்டியவன் சமையலறை மேடையில் தேவையான பொருட்களை எடுத்து வைக்க, அதில் பதறியவள், “அய்யோ ரோஹன்! உங்களுக்கு அடிபட்டிருக்கு, வேணாம் நான் பார்த்துக்குறேன்” என்று அவசரமாக சொன்னாள்.
அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்தவன், “இப்போ நான் என்ன பண்ண போறேன்னு நீ இப்படி பதட்டப்படுற? நீதான் செய்ய போற, நான் உனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க போறேன். வா வா சீக்கிரம்” என்று சாதாரணமாக சொல்ல, “வாட் நானா?!” என்று அதிர்ந்துவிட்டாள் அவள்.
“நீதான்” என்று அழுத்தமாக ரோஹன் சொன்னதில், மலங்க மலங்க விழித்துக் கொண்டு சென்றவளுக்கு அடுப்பை பற்ற வைப்பதே பெரும் பாடாகி போக, அதற்கே பத்து நிமிடங்களாக ரோஹனை அவள் பாடாய்படுத்தினாள். பின், தன்னவன் சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக செய்தவள், பொருட்களை மாற்றி மாற்றி எடுத்தே அவனை கடுப்பேற்றி விட்டாள்.
எப்படியோ செய்து முடித்தவள், “ஹப்பாடா!” என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு துள்ளிக் கொண்டு திரும்பவும், அவள் பின்னால் நெருக்கமாக நின்றவாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரோஹன் அவள் இப்படி திரும்புவாள் என்று எதிர்ப்பார்க்காது அவளை நோக்கி குனியவும் சரியாக இருந்தது.
இருவரின் இதழ்களும் மோதிக்கொள்ள, முதலில் அதிர்ந்தவள் பின் கண்களை மூடி, தானே அவன் இதழ் தேனை பருகினாள் என்றால், ரோஹனோ தொலைந்த தன்னவளின் ஸ்பரிசத்தை மீண்டும் அனுபவிப்பதில் தன்னிலை மறந்து தன்னவளுக்கு இசைந்து கொடுத்தான்.
ஒரு வாரம் கழித்து,
தனது மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தவளுக்கு அதில் கவனம் செலுத்த முடிந்தால் தானே! அன்று ரோஹனுடனான இதழ் முத்தம் அவளை இம்சிக்க, மடிக்கணினியை மூடியவள், இதழ்களோ தானாக விரிந்துக் கொண்டன.
‘ச்சே! அவன் நம்மள என்ன நினைச்சிருப்பான்? வேற ஒரு பையன் கூட நிச்சயம் பண்ணிட்டு இவன கிஸ் பண்ணேன்னு தப்பா நினைச்சிருக்க மாட்டானா? அதுவும் கிஸ் பண்ணிட்டு அப்படியா மாயா அங்கிருந்து ஓடி வருவ!? நம்மள ரொம்ப அசிங்கமா நினைச்சிருப்பானோ…?’ என்று மாயா தனக்குள்ளே புலம்பிய வண்ணம் இருக்க, திடீரென தன் தொலைப்பேசிக்கு வந்த செய்தியை பார்த்து யோசனையில் புருவத்தை நெறித்தாள்.
மாயா ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க, அதேநேரம் உள்ளே வந்த அலைஸ், “மாயா, நான் அவங்கள இன்டர்வியூ பண்ணிட்டேன், நீயும் ஒரு தடவை பார்த்துட்டேன்னா, நாளைல இருந்து உன் பாதுகாப்புக்கு அவங்களையே கார்ட்ஸ்ஸா அஸ்ஸைன் பண்ணிரலாம்” என்று சொல்ல,
“தேவையில்லை அலைஸ், நாம இப்போ இட்டாலி கிளம்புறதுக்கான நேரம் வந்தாச்சு” என்று மாயா சொல்லவும், அலைஸ்ஸோ அவளை கேள்வியாக பார்த்தாள்.
“நம்ம கம்பனியோட நிவ் ப்ரோடெக்ட் லான்ச்க்கு சில ஃபோர்மலிட்டீஸ் கம்ப்ளீட் பண்ண வேண்டியிருக்கு, என்ட், ஐரா கம்பனீஸ் சேஃப்டிக்கும் நான் அங்க இருக்கனும். இன்னும் த்ரீ டேய்ஸ்ல கிளம்புறதுக்கான ஏற்பாடு பண்ணு” என்றுவிட்டு மாயா நகர, அலைஸ்ஸோ எதையோ நினைத்து கண் கலங்க, அதை வெளிக்காட்டாது முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
முன்னே சென்ற மாயா, சற்று நின்று திரும்பி பார்த்து, “அலைஸ் நெக்ஸ் த்ரீ டேய்ஸ் இங்க நான் முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு. சோ, இன்னைக்கு நைட் டின்னர்க்கு அர்ரேன்ஜ் பண்ணிரு” என்று சொல்ல,
“எதுக்கு மாயா?” என்று புரியாமல் கேட்டாள் அலைஸ்.
“வேற எதுக்கு, இட்டாலி கிளம்புற விஷயத்தை என் ஃப்ரென்ட்ஸ்க்கு சொல்ல வேணாமா? ரோஹன் என்ட் கோ” என்று சொன்னவாறு மாயா அறை சோஃபாவில் தொப்பென்று அமர, “ஓ கோட்! இவள…” என்று பொறுமியவாறு அவளருகில் அமர்ந்த அலைஸ், “ஐ ஜஸ்ட் வோன்ட் டூ டோக் டூ யூ” என்று சொல்லவும், மாயாவோ “வாட்?” என்று சலிப்பாக கேட்டாள்.
“மாயா, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ, நீ யாருன்னு உனக்கு தெரியும், நீ இப்படி அவங்க கூட க்ளோஸ் ஆ இருக்குறது அவங்களுக்கு சேஃப் இல்லை. அன்னைக்கு ரோஹன ஷூட் பண்ணது நம்ம நாட்டு ஆள் தான். அவங்களுக்கும் ரோஹனுக்கும் என்ன பிரச்சினை இருந்துட போகுது? உன்னால தான் அவனுக்கு ஆபத்து, அவங்கள விட்டு நீ விலகியிருக்குறது தான் அவங்களுக்கு சேஃப்டி” என்று அலைஸ் பேச பேச தீவிரமான முக பாவனையுடன் கேட்டுக் கொண்டிருந்த மாயா, தொலைப்பேசியில் வந்த அழைப்புக்கு ஒலித்த பிரத்யேக பாடல் ஒலியில் அடித்து பிடித்து ஓடினாள்.
தொலைப்பேசியை எடுத்தவள் அதில் தெரிந்த பெயரை பார்த்து, வேகமாக அழைப்பை ஏற்று, “ஹெலோ ரோஹன்” என்று உற்சாகமாக பேச, “சுத்த வேஸ்ட்” என்று தலையிலடித்துக் கொண்டாள் அலைஸ்.
மறுமுனையில் ரோஹனோ, “மிஸ்.மஹேஷ்வரிய வன் வீக்கா கான்டேக் பண்ணவே முடியல, அவ்வளவு பிஸியோ…?” என்று கேலியாக கேட்க,
“ஆங்… ஆமா ஆமா, பின்ன இல்லையா?” என்று சமாளித்தவளுக்கு மட்டும் தானே தெரியும், அன்று அவனை முத்தமிட்டதிலிருந்து எங்கு தன் உணர்வுகள் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து ஒரு வாரமாக வேலையில் மூழ்கி தன்னை திசைதிருப்ப முயற்சித்தாள் என்று…
“ஓகே மாயா, அப்போ நான் அப்றம் பேசுறேன்” என்று ரோஹன் அழைப்பை துண்டிக்க போக, “நோ… நோ… ரோஹன்” என்ற மாயாவின் பதட்டமான குரலில் புன்னகைத்தவன், “சொல்லுங்க மஹேஷ்வரி” என்றான் சிரிப்புடன்.
“அது வந்து… அது இன்னைக்கு நைட் உங்களுக்காக டின்னர் அர்ரேன்ஜ் பண்ணிருக்கேன். அண்ணா, தருண், கீர்த்தி மூனு பேரையும் அழைச்சிட்டு வாங்க, ஐ திங் தட் யூ க்னோ பட், இருந்தாலும் சொல்றேன். ரூம் நம்பர் 301” என்று ரோஹனை விருந்துக்கு மாயா அழைக்க, “என்ன திடீர்னு…?” என்று புரியாமல் கேட்டான் ரோஹன்.
“மொதல்ல வாங்க, அப்றம் சொல்றேன்” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு மாயா அழைப்பை துண்டிக்க போக, “மாயா வன் மினிட்” என்ற ரோஹன், “மிஸ் யூ” என்று காதலாக சொன்னான்.
ஒருவித வெட்கத்தில் தலை குனிந்து புன்னகைத்தவள், “ஓகே” என்றுவிட்டு அழைப்பு துண்டித்து, புன்னகையுடன் அலைஸ்ஸை திரும்பி பார்த்தாள்.
அவளோ மாயாவையே ஒரு மார்கமாக பார்த்துக் கொண்டிருக்க, அதில் தன்னை அடக்கிக் கொண்டவள் அங்குமிங்கும் பார்வையை சுழலவிட்டவாறு விசிலடித்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
காதல்போதை?
-ZAKI?