காதல் சாமுராய்-1

காதல் சாமுராய்-1

கிழமை-திங்கள், மதியம் இரண்டு மணி

கோவை வ.ஊ.சி உயிரியல் பூங்கா.

“தள்ளுங்க…” ஒருத்தி கத்தியபடி ஓடி வர, அங்கிருந்த அந்த  சிலர் மட்டுமே அவளை திரும்பி பார்க்க. அவளோ, யாரையும் கண்டுக்கொள்ளாமல் அவசரமாய் ஓடியிருந்தாள்.

அவளை பின்தொடர்ந்து வந்த அவளது தோழி வானதியோ, “ஏய்…எருமை கத்தாம போடி” என்று கத்தியபடி அவளை பின்தொடர்ந்தாள்.

இவ்ளோ ஆர்ப்பாட்டமாய் ஓடிவந்தவள், நேராய் சென்று நின்ற இடம் ஐஸ்க்ரீம் வண்டிக்கு.

“ண்ணா…”என்று அவளுக்கு மூச்சு வாங்க, அதற்குள் அவள் பின் வந்த வானதி அவள் முதுகிலே ஒன்னு வைத்தாள்.

“அறிவுக்கெட்டவளே,உனக்கு ஏதாச்சும் மசாலா இருக்கா?”

“எங்கடி இருக்கு மசாலா, அவள் அக்கம், பக்கம் தேட”

தலையிலே அடித்துக்கொண்டவள் “எருமை, எதுக்கு இப்போ இப்டி ஓடி வந்த?” என்று அவள் கேட்க.

“ஐஸ்க்ரீம் வாங்கத்தான்”

“அதுக்கு எதுக்குடி இப்டி ஓடி வந்த?”

“ஐஸ்க்ரீம் தீந்து போய்ட்டா, பாரு எவ்ளோ கூட்டம்?” அவள் பாவம்போல் முகத்தை வைத்து கேட்க.

அவளை முறைத்தவள், “கூட்டமா இங்கையா..?ஏன்டி பங்குனி வெயிலு பல்லை காட்டுது, இந்த க்ளைமேட்க்கு முதல்ல இங்க கூட்டமே வராது, எப்பவும் கூட்டம் நாலு மணிக்கு மேல தான் வரும் இந்த உருட்டு உருட்டாத டி”அவள் தலையிலே அடித்துக்கொள்ள.

“ஓ அப்படியா, சொல்லவே இல்ல” அவள் இழுக்க.

“எடு செருப்பை நாயே” வானதி திட்ட துவங்க.அவள் இழிக்க.

ஐஸ்க்ரீம் கடைக்காரர் அவர்களை பார்ப்பதை அறிந்தவர்கள் “ண்ணா…ரெண்டு பட்டர் ஸ்காட்ச் “என்று ஆர்டர் கொடுக்க, அவர் அதை வழங்கவும் பெற்றுக்கொண்டு உயரியல் பூங்காவிற்க்குள் நுழைந்தனர்.

வ.ஊ.சிதம்பரனார் பூங்கா என்பதே வ.ஊ.சி யின் விரிவாக்கம், அவரின் நினைவாக இந்த பூங்காவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த பூங்கா 1965ல் அமைக்கப்பட்டது. இது உயிரியல் மற்றும் போழுதுப்போக்கு பூங்காவாக நிறுவப்பட்டது. கோவையின் மத்தியில் காந்திபுரத்தில் இந்த பூங்கா உள்ளது. இது சுற்றுலா பயணிகள் பலரையும் கவர்ந்திழுக்க கூடிய ஒரு பூங்காவாக இருக்கின்றது.

நமது கதையின் நாயகியும், அவளது தோழியும் இன்று மதியத்திற்கு மேல் கல்லூரியை கட் அடித்துவிட்டு இங்கு வந்திருக்கின்றனர். 

தோழிகள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.ஸி பைனல் இயர் மேக்ஸ் படிக்கின்றனர், இன்று மதியம் உள்ள இரண்டு ஹவரும் படு மொக்கையான கிளாஸ் என்பதால் ஓடிவந்துவிட்டனர்.

நம் கதையின் நாயகி மகிழினி, பெயர்க்கு ஏற்றார்போல் அனைவரையும் மகிழ வைக்கும் குணம் கொண்டவள்.இடுப்பை தொடும் அடர்ந்த கூந்தலும்,ஏர் நெற்றியும்,வில்லென புருவமும், முகத்தின் மொத்த அழகையும் எடுத்துக்காட்டும் நயனவிழிகளும்,கூர் நாசியும்,கோவப்பழ சிவப்மிதழும், சற்றே பூசினாற் போன்ற உடல்வாகுவுடன் மாநிறத்தில் இருந்தவளை,நிச்சியம் ஒரு முறையேனும் திரும்பி பார்க்க வைப்பவள்த்தான்.

அவள் ‘காலேஜ் கட் அடிப்போம்’ என்று வானதியிடம் கூறியதும்,அவள் ஒத்துக்கொண்டாள்த்தான், ஆனால் அவள் கூறியது ‘புரூக் பீல்ட்ஸ் மால் போலாம்’ என்று. அதை தடாலடியாக மறுத்த நம் நாயகியோ “நோ…நோ…நம்ம பார்க் போறோம், நிறைய சம்பவம் பண்றோம்”அவள் முடிக்க.

வானதிக்கு அபாய மணி அடித்தது “ஏய் நீ சொல்றதே சரியில்ல வேணாம்,வேணாம்” அவள் தயங்க.

“ஏய்…நீ வாடி நான் தான் இருக்கேன்ல” மகிழின் நம்பிக்கை வழங்க.

“நீ இருப்ப டி நானு” வானதி போலியாய் வருந்த.

“வாடி செல்லம் நான் ஃபாடியை உங்க அப்பா,அம்மா கிட்ட கொடுத்திடுறேன்” என்று அவளை அழைத்துவந்திருக்கிறாள்.

மகிழினி தன்னால் முடிந்தவரை அனைவரையும் அன்பாய், பாசமாய், குணமாய் பார்த்துக்கொள்வாள், கோபமும் சற்று அதிகபடியாகவே வரும், முன்கோபியும் கூட, அதை அடுத்த நிமிடமே மறந்துவிட்டு சண்டை போட்டவரிடமே சமாதானம் பேசுபவள். இவளின் வாழ்வு அடுத்த கட்டத்தை எடுக்கும்போது அவள் எப்படி இருப்பாள்..?

***

இன்று மனது ஏதோ போல் இருக்க, தனிமையை நாடி எங்காவது செல்ல மனம் துடித்தது அவனிற்கு.

ஒரு இளம் தொழிலதிபன் அவன், இளம் வயதிலே நிறைய பிரஷரை ஏற்றிக்கொண்டவனுக்கு, ‘எங்காவது வெளியே சென்றால் தேவலாம்’ என்று தோன்ற, யோசிக்காது காரை எடுத்தவன்,அதை ஏதேதோ சிந்தித்த படி செலுத்தினான்.

அவன் எழில் வேந்தன், இருபத்தி ஆறு வயது இளைஞன், பி.ஈ சிவில் இன்ஞ்சினியரிங் முடித்த கையோடு அவனது தந்தை மாணிக்கத்தின் கன்ஸ்ட்ர்க்ஷனை கையில் எடுத்திருந்தான், அதற்கு இன்னொரு காரணம், அவனது தந்தையின் உடல்நிலை.

எழிலின் தந்தை மாணிக்கத்திற்கு இரண்டாவது அட்டாக் வரவே, இனி ஒரு அட்டாக் வந்தால் எங்கள் கையில் இல்லை என்று டாக்டர்ஸ் எச்சரிக்க , அவருக்கு முழு ஓய்வு வழங்கியவன், அவரது கடல் கடந்த கன்ஸ்ட்ர்க்ஷனை திறம்பட நிறுவகித்துவருகிறான்.

முதலில் மிகவும் தடுமாறினான் தான், படித்த முடித்ததும் ஒரு சிறிய கம்பெனியை பார்ப்பதே சவால் என்னும் பட்சத்தில்,இது உலகம் முழுக்க கிளை வைத்திருக்கும் ஒரு கம்பெனி ஆதலால் அவன் மிகவும் சிரம்மப்பட்டான்.

அதன் பின், படிப்பறிவை முதலில் ஓரமாய் வைத்தவன், தினமும் தந்தையிடம் அனுபவ அறிவை பயின்றான். ‘எதை எப்படி சமாளிக்கனும், எப்படி போட்டிப்போட்டு டென்டரை வெல்ல வேண்டும், தொழிலாளிகளை நடத்தும் முறை”இப்படி பல அவரிடம் கேட்டும், பழகியும் தெரிந்தக்கொண்டவனுக்கு, அதன் பின் தொடர் வெற்றிதான்.

இன்று கொடிகட்டி பறப்பவனுக்கு எல்லாம் உள்ளது, ஏதோ ஒன்று அவன் வாழ்வில் இல்லை, அது என்ன என்றே தெரியாத ஒரு விடை தெரியா கேள்வியுடன்தான் அவனும் பயணித்துக்கொண்டிருக்கின்றான்.

மனதில் ஒரு வெறுமை, அவன் வீட்டிற்கு ஒரே வாரிசு, வீட்டில் இருந்தால் அவனது முழு நாளும் தனிமையிலே கழியும், தந்தைக்கு இப்படி ஆனது முதல், தாய் தந்தையை விட்டு இம்மியும் நகர மறுக்கிறார், இல்லையென்றாலும் அவரிடமிருந்து அவன் பெரிய பாசம் எதையும் உணர்ந்ததில்லை. வெறுப்பை உமிழ்பவர் இல்லைத்தான்.அதே போல் அவர் பாசத்தையும் பொழிந்ததில்லை.ஒரு வாய் சாப்பாட்டை கூட இவனுக்கு அவர் ஊட்டியதில்லை.அது ஏன் என்றே தெரியாத கேள்வியுடன்த்தான் அவனும் பயணிக்கிறான்.

அந்த காலத்திலே காதல் திருமணம் செய்தவர்கள், எழிலின் தாயும்,தந்தையும். எழிலின் தாய் செல்வி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்,தந்தையோ செல்வந்தர்.

இவர்களின் காதல் இரு குடும்பங்களிலும் பிரச்சனையை கொடுக்க, ஒரு நாள் வீட்டைவிட்டே இருவரும் வெளியேறியிருந்தனர்.

எழிலின் பதினைந்து வயதுவரை வருமானத்தில் பின்தங்கி வாழ்ந்த குடும்பம் இவர்களுடையது, சிறுக சிறுக சேமித்து ஒரு கம்பெனியை தொடங்கினார் மாணிக்கம். முதலில் சிறு சிறு ஆர்டரில் துவங்கி, ஒரு கவர்மென்ட் ஆர்டரில் அவர்கள் தொழில் உச்சத்தை தொட்டது.

இவர்களின் புதுமையான பிளான்களும்,நேர்மையான விலையும், தொழில் சுத்தமும்,அவர்கள் வளர உதவியது, ஒரு சைட் முடிந்தது அதற்கான மொத்த தொகையையும் சரியான முறையில் கணக்கு காட்டியதில் அவர்களின் தொழில் தெளிந்த நீரோடயாய் சென்றது.

அவன் தனிமையை நாடி இப்படி செல்கையில் பெரும்பான்மையான நேரம்,அவனது சொந்த கெஸ்ட் ஹவுசின் நீச்சில் குளத்தில்த்தான் நிறைவடியும். அங்கு பல மணி நேரங்கள் செலவிட்டதும், சிறிது நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியே அவனுக்கு பெரிதாய் தெரிய அதில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்துவான்.

கார் போன போக்கில் நகர்ந்தவனுக்கு, பார்க்கை பார்த்ததும் இன்று இங்கு செலவிட மனது உந்தியது. காரைவிட்டு இறங்கியவன் நேராய் உயிரியல் பூங்காவிற்கு அருகே உள்ள கார்டனிற்க்குள் நுழைந்தான்.

***

உயிரியல் பூங்காவில் சுமார் நாலு முறை நடந்தவளை கண்டு கடுப்பான அவளது தோழியோ, “ஏய் ஏன்டி சாவடிக்கிற எத்தனை தடவை இதையே பாக்க”அவள் புலம்ப.

“இரு மச்சான் இங்க யாருமே சிக்கலை” அவள் அங்குமிங்கும் தேட.

“அடியேய் இங்க பாம்பு,மான்,யானை,குதிரைத்தான் டி இருக்கும், நீ கேக்குறது இருக்காது” வானதி திட்ட துவங்க.

“ஆமால யூ ஆர் ரைட், வா பக்கத்துல கார்டனிற்கு போவோம்” மகிழினி முன் நடக்க.

“வந்து தொலை” வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது, தனது துப்பாட்டாவை எடுத்து அவள் தலையில் முக்காடு இட்டப்படி அவளை பின்த்தொடர்ந்தாள்.

உள்ளே வந்ததும் தன் கண்களை மகிழினி சுழற்ற, அடுத்த நிமிடமே “ஹூர்ரே…யெஸ்”என்று அவள் கத்த.

அவள் பின்னோடு வந்த வானதியோ “எருமை, இனி இவளை கையிலே பிடிக்கவே முடியாதே, கடவுளே இவ கிட்டயிருந்து எல்லாத்தையும் காப்பாத்துப்பா”என்று சத்தமாய் வேண்டினாள்.

பூங்காக்கள் குழந்தைகளுக்காக, பொழுதுப்போக்கிற்காக கட்டபடுபவை, ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஞாயிறு தவிர்த்து பிற நாள்களில் காதலர்கள் சிலர் கண் கூசும் அளவிற்கு கேவலமாய் நடந்துக்கொள்வதை பலமுறை பார்த்திருக்கிறாள்.இதை தெரிந்தே பெற்றோர்கள் வார நாட்களில் வ.ஊ.சி வருவதை முழுதாய் தவிர்த்துவிடுவர்.

மனதில் ஒரு கோபம் எழும் மகிழினிக்கு ‘காதலர்கள் பூங்காவிற்கு வரக்கூடாது’என்று அவள் நினைக்கவில்லை, குறைந்தபட்ச நாகரிகம் வேண்டும்’ என்று தான் அவள் நினைத்தது.அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இப்படி ஏதாவது செய்வாள், என்ன செய்தால் வாங்க பாக்கலாம்.

இடது புறத்தில் புதரில் பாதி தெரிந்தப்படி அமர்ந்திருந்த அந்த பெண்ணின் மடியில் அந்த ஆண் படுத்திருக்க, முதலில் அந்த ஜோடியை தேர்ந்தெடுத்தவள், அந்த  ஜோடியிடம் விரைந்தவள். மொபல்லை கையில் எடுத்து அவர்களை நெறுங்கி நின்றுக்கொண்டவள்.பின், சத்தமாய் பேச துவங்கினாள்.

“ஆமா அங்கிள், உங்க பொண்ணேத்தான், எனக்கு தெரியாதா நான் தான் நிறைய தடவை பாத்திருக்கேனே” அவள் முடிக்க.

அந்த பெண்ணின் முகத்தில் ஒரு பயம் தோன்றியது, அதை கண்டவள் மென்னகை புரிந்து தொடர்ந்தாள்.

“இங்கத்தான் அங்கிள், பக்கத்துல வ.ஊ.சி கார்டன்லத்தான்” அவள் நிறுத்த.

அந்த  பெண் அவசரமாய் எழுந்துக்கொண்டாள்.

“ஓஹோ பக்கத்துலத்தான் இருக்கீங்களா”

அந்த பெண் அரக்க,பரக்க உடையை சரி செய்ய.

“ஓ…வந்துடீங்களா?” அவள் முடிக்கும் முன்னே அந்த பெண் காற்றாய் பறந்திருந்தாள், அவள் காதலனோடு.

அவளிடம் வந்த வானதி “என்னடி அதுக்குள்ள முடிச்சிட்ட” அவள் அவளுக்கு ஹை-பை கொடுக்க.

“பாரு பாரு துண்டை காணோம், துணியை காணோம்னு ஓடுறா” அவள் சத்தமாய் நகைத்து, அவளுக்கு ஹை பை கொடுக்க அவளுடன் வானதியும் சேர்ந்துக்கொண்டாள்.

“அடுத்து எங்க மச்சி” வானதி கேட்க.

“அடுத்து ரைட் சைட்” அவள் எதிர்திசைக்கு திரும்பி நடக்க.அவளுடன் வானதியும் சேர்ந்துக்கொண்டாள்.

இவர்கள் உள்ளே நுழைந்தது முதல் அவளை கவனித்த நம் எழில்லிற்கு அவளது அலப்பாறையிலே மனது லேசாகியிருந்தது.

உள்ளே நுழைந்தது முதல் அந்த காதலர்களின் சேட்டையை இவனும் பார்த்துக்கொண்டேத்தான் இருந்தான். ஆனால், அவர்களை மனதில் வசைபாடியதோடு சரி, அமைதியாய் வந்து நுழைவு வாயிலின் அருகே   இருந்த இரும்பு பெஞ்சில் கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.

அவன் விழித்தது மகிழினியின் “ஹூர்ரே” என்ற அழைப்பில்த்தான்.அதன் பின் அவள் செய்தது அனைத்தையும் ரசித்தவனாக அவளின் அசைவுகளில் இவன் அசந்தான்.

அவள் எதிர்ப்புறம் செல்வதை பார்த்தவனின் மனம் அவளோடு போக துடிக்க, சிறிது நேரம் தன்னை கட்டுப்படுத்தியவன், அவள் சென்ற திசையிலே அவளை தேடிச் சென்றான்.

அவளை தேடி அழைந்தவனின் கண்களுக்கு சிறிது நேரம் அவள் கண்ணாம்பூச்சி ஆட. பத்து நிமிட தேடலுக்கு பின் அவள் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தான்.

அங்கு அவளோ ஐந்தாவது ஜோடியை ஓட வைக்கும் முயற்சியில் இருந்தாள். அந்த ஜோடி ஒருபடி மேல் போய் நடந்ததை கண்டவள் ‘இரு இரு, உனக்கு புதுசா ஒன்னு வைக்குறேன்’ அவள் மனம் சூளுரைக்க.

அவளது தோழி வானதியை தள்ளி நிற்க சொன்னவள், அந்த ஜோடிக்கு பின்னே திரும்பி நின்றபடி வானதிக்கு அழைத்து பேச துவங்கினாள்.

“ண்ணா” அவள் பேச.

“சொல்லுமா தொங்கச்சி” வானதி வார.

“உன் மனசை தேத்திக்கோ…”அவள் போலியாய் வருந்த.

“ஏன் டா டார்லிங்” வானதி பதிலுரைக்க.

“அண்ணி உனக்கு துரோகம் பண்றா ண்ணா” அவள் கண்களை போலியாய் துடைக்க.

“என்ன துரோகம் டா, பச்ச துரோகமா? சிவப்பு துரோகமா?” வானதி.

“செருப்பு…சாரி சாரி பச்ச துரோகம் ண்ணா, இங்க பார்க்குல அண்ணி இருக்காங்க” மகிழினி உரைக்க.

அமைதியாய் இவளது உரையாடலை கேட்ட அந்த பெண்ணிற்கு பயம் சூழ்ந்துக்கொள்ள.

“அவளை எல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க டா” வானதி கூற

“பாத்துட்டாங்க ண்ணா, பாத்துடாங்க ண்ணா, உன்ன விட பெட்டரா ஒன்னை பாத்துட்டாங்களே” அவள் ஒப்பாறி வைக்க.

“அழாத தொங்கச்சி, இதோ வரேன்”வானதி உரைக்க.

“வேணாம் ண்ணா வேணாம், இந்த காட்சியை உன்னால பாக்க முடியாது ண்ணா” அவள் வசனமாய் படிக்க.

“இல்ல நானும் பாப்பேன்”வானதி கண்ணடிக்க.

“நீ என்னை நம்பலை அதானே, இரு ஃபோட்டோ எடுத்து அனுப்புறேன்”அவள் ஃபோனை கட் செய்து அவர்களை நோக்கி முன்னே வர.

இவள் வருவதை பார்த்ததுமே பயந்த அந்த பெண், துப்பட்டாவைக் கொண்டு தன் முகத்தை மூடியவளாக அவனது கையை இழுத்துக்கொண்டு சென்று விட்டாள்.

அவள் சென்றது கைகளை தூசி போல் தட்டியவள் “ஏதோ நம்மலால முடிஞ்சது “என்று கூறிக்கொண்டு தன் தலையை கோதிக்கொண்டாள்.

இவளது இந்த அலப்பறையில் மனதை தொலைத்தவன் என்னமோ எழில் தான். சரியாக ஒரு மணிக்கும் குறைவான நேரத்திலே ஒரு பெண் தன்னை ஆட்க்கொண்டதை அவனால் நம்பவே முடியவில்லை.

மகிழினி வானதியை தேடி செல்ல, அவளை இவன் பின்தொடர “அந்த பக்கம் போகலாம்” என்று அடுத்த ரவுண்டிற்கு தயாரானவளை அடக்கியது வானதி தான்.

“வேணாம் டி, ஒரு நாளைக்கு ஐஞ்சு தான், இன்னைக்கு கோட்டா ஓவர், சொன்னா கேளு” அவளை மிரட்டி, கெஞ்சி இவள் கூப்பிட.

முடியாது என்று அடம்பிடித்தவளை சமாளிக்க “பானி பூரி வாங்கி தரேன் வாயேன் டி” வானதி அவளது மைனசில் அடிக்க.

“சரி” என்று முப்பதிரண்டு பல்லையும் உடனே காட்ட.

“ச்செய்…வந்து தொலை”என்று அவளை இழுத்துக்கொண்டு பானி பூரி கடைக்கு விரைந்தாள்.

அவள் தூரம் விலகும்வரை பார்த்தவனின் மனம் ‘எதிர்காலத்தில் அவளோடு சண்டை போட நேர்ந்தால்,பானி பூரி கொண்டு சமாதானம் செய்யலாம்’ என்று அவனது மனது கணக்கு போட்டது.

அவனது என்ன ஓட்டம் அவனை தகிக்க ‘ இதென்ன இவ்ளோ தூரம் என் மனசு யோசிக்குது, அதுவும் கொஞ்ச நேரம் பார்த்த பொண்ணோட’ அவன் மனது அவனை கடிந்துக்கொள்ள.

இந்த மனது டபுள் ஆக்ட் அல்லவா செய்கிறது, அவளை ரசிப்பதும் அதுவே, அவளை ரசிக்காதே என்று திட்டுவதும் அதுவே…

இவனது வாழ்வின் வெறுமையை போக்க வருவாளா மகிழினி…

தொடரும்-2

Leave a Reply

error: Content is protected !!