தேன் பாண்டி தென்றல் _ 11

தேன் பாண்டி தென்றல் _ 11

 
11
 
 
ஜூஸரில் ஆரஞ்சுப் பழம் பிழிந்து கொண்டு இருந்தான் பாண்டியன்.  தென்றலை மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் ஆகிறது. முதல் இரண்டு நாட்களில் அவள் ஓரளவு தேறி விட்டாள். ஆனால் அவளை எங்கே வைத்து பராமரிப்பது? யார் அதைச் செய்வது என்ற குழப்பத்தில் அங்கேயே வைத்து வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தான் பாண்டியன். 
 
தென்றல் அவன் காலனியில் இருக்கும் பெண்களுள் ஒருத்திதான். ஆனால் அவளை இந்த நிலையில பார்த்த பிறகு அவனால் அவளை அப்படியே விட முடியுமா?  காலனிவாசிகளும் தங்களால் முடிந்தவரை உதவினார்கள்தான். 
 
இந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்துவிடலாம் என்றும் நன்கு குணமானதும் ஏதாவது மகளிர் விடுதியில் சேர்த்து விடலாம் என்றும் சொன்ன சங்க உறுப்பினர்கள் அதற்கான செலவை காலனி மக்களிடம் வசூலித்துத் தருவதாகச் சொன்னார்கள்.
 
“அந்தப் பொண்ணுக்கு நிறைய வசதி இருக்கு. ஆனா இப்போதைக்குக் கையில காசு இல்ல. அந்தப் பொண்ணு சுய நினைவு இல்லாம இருக்கும் போது நம்மால இதைத்தான் செய்ய முடியும். எல்லாம் சரியானா அந்தப் பொண்ணு எந்த உதவி கேட்டாலும் நாம கண்டிப்பா செய்யலாம்”  என்று சொல்லி இருந்தார் காளிமுத்து – சங்கத்தின் மூத்த உறுப்பினர்.
 
 
தென்றலுக்கு ஓரளவு நினைவு வரத்தான் செய்தது. வந்ததும் அவள் சொன்ன ஒரே பெயர் ‘பாண்டி’ என்பதுதான். 
 
அதில் பாண்டி ஆச்சர்யப்பட  தேன்மொழி உறைந்து விட்டாள். அப்படி என்றால் தென்றல் காதலித்தது இந்தப் பாண்டியைத்தானா? 
 
யாருமில்லாமல் கிட்டத்தட்ட நடைப் பிணமாக இருக்கும் தென்றலிடம் என்ன சொல்ல முடியும்?  
 
அதற்காக சும்மா போனவளை இழுத்து வைத்து அன்பை வளர்த்து வைத்திருக்கும் அழகிய வீர பாண்டியனை எப்படி அவளால் விட்டுக் கொடுகக முடியும்?
 
ஆனால் அவள் மனிதாபிமானம் அவளை வழிநடத்தியதில் தென்றலுக்கு அவள் துணையாகவே மருத்துவமனையில் இருந்தாள்.
 
பாக்கியம் தென்றலை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறிவிட்டார். 
 
தனது வருங்கால மருமகனுக்கு உதவும் பொருட்டு அப்படி நினைத்தார் போலும். ஆனால் அதுவே பிரச்சனை என்று அவரிடம் எப்படிச் சொல்ல? என தேன்மொழிக்குத் தெரியவில்லை.
 
தனி மனுசியாக மகளை வளர்த்த அவர் பெண்களின் துயர் திறம்பட அறிந்திருந்தார். அதனால் பாண்டிக்காக இல்லை என்றாலும் தென்றலை தனது வீட்டிற்குத் தான் அழைத்துச் சென்று இருப்பார் பாக்கியம்.
 
 
பாண்டி சாத்துக்குடி பழ ஜூஸை கண்ணாடி டம்பளரில் ஊற்றி தென்றலுக்குக் கொடுத்தான். அதுவரை இவன் பழச்சாறு பிழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த தென்றல் அதை ஆசையாக வாங்கிக் கொண்டாள்.
 
இவன் ‘அப்பாடா’ என நிம்மதி அடைய அதற்கு ஆயுள் குறைவு.
 
தென்றல் பழச்சாற்றை வாயில் வைத்துப் பார்த்து விட்டு ‘உவ்வே’ என்றாள். 
 
இத்தனை மருந்து மாத்திரை சாப்பிடுவதற்கு வயிறு புண்ணாகிவிடும். இது மாதிரி பழச்சாறுகள் குடித்தால்தான் ஓரளவு வயிற்றுப் புண் வாய்ப்புண் வராது. கூடவே பலம் தரும் என்று இவன் முந்தைய நாட்களில் எவ்வளவோ எடுத்துச் சொல்லி இருந்தாலும் அவள் ஒவ்வொரு முறையும் புதிதாகக் கேட்டுக் கொண்டு ‘உவ்வே’ என்பாள். 
 
இவன்தான் அவளுக்கு மெது மெதுவாகப் புகட்டி விடுவான். ஓரிரு சயங்களில் தேன்மொழி அதைச் செய்வாள். 
 
தேன்மொழியின் மனம் துடிப்பதை யாருமே அறியவில்லை. பாண்டியைப் பொறுத்தவரை தென்றல் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி உளறுகிறாள். மற்றவர்களும் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. 
 
ஆனால் தேன்மொழிக்குத் தெரியாதா?  
 
எல்லாம் மறந்த நிலையிலும் ஒருவன் பெயர் மட்டும் நினைவிருந்தால் அந்த ஒருவனுடன் அவளுக்கு இருப்பது சாதாரண பந்தமாக எப்படி இருக்க முடியும்?
 
இது எதையும் இப்போது அவளால் பேச முடியாது. அதற்கு தென்றலின் உடல் நிலை மற்றும் மனநிலையே காரணம்.
 
மல்லிகா இறந்த பின் உடற்கூறு பரிசோதனை முடிவு அவர் உணவில் விஷம் கலந்து உண்டிருப்பார் என்றது.
 
தென்றலுக்கு வழங்கப்பட்டு இருந்த உணவிலும் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  
 
அன்று வீட்டில் இருந்து கிளம்பும் போது நாச்சிமுத்து தென்றலுக்கு மல்லிகா  கொடுத்திருந்த உணவை மணிக்குப் போட மௌனமாக அதைச் சாப்பிட்டு உயிரை விட்டிருந்தது அந்த ஜீவன்.
 
வீட்டை இவர்கள் ஒரு வார காலமாக கண்காணிப்பதை மல்லிகா உணர்ந்திருக்க வேண்டும். வீட்டின் கண்ணாடி ஜன்னல் உடைபட்ட போது இதற்கு மேல் காலம் கடத்தக் கூடாது என்று தன்னை அழித்துக் கொள்ள முடிவு செய்ததுடன் தன் மகளை இந்த உலகில் விட்டுச் செல்லக் கூடாது என அவளுக்கும் விஷம் வைத்திருக்கிறார்.
 
ஒழுக்கம் தவறிவிட்டாள் என்று மகளைச் சொன்ன அவர் எத்தனையோ பிழைகளைச் செய்திருக்கிறார். இதற்கு அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பதே காரணமாக இருந்திருக்கக் கூடும்.
 
ஏன் காதலித்தால் என்ன? என்று கேட்கலாம்.  ஆனால் அவர் ஆசியராகப் பணியாற்றிய காலத்தில் தனது வகுப்பு மாணவ மாணவிகளிடம் தனது மகளைப் பற்றி அத்தனை உயர்வாகச் சொல்லி இருந்தார். அதை அழகிய வீர பாண்டியனும் அறிவான். 
 
ஒவ்வொரு சமயம் பிள்ளைகளை கண்டிக்கும் போது “ என் பொண்ணு வேலம்மா எத்தனை பொறுப்பா படிப்பா தெரியமா? சொன்ன பேச்சு மீற மாட்டா.  அவளை நம்பி என்ன வேலைனாலும் கொடுக்கலாம். எங்கனாலும் அனுப்பலாம் . எப்பவும் அவ செய்றது சரியாத்தான் இருக்கும்” என்று சொல்ல ஆரம்பித்து ஒரு தாய் தன் பிள்ளைகளைப் பற்றி எப்போதும் பேசும் பெருமைகளை பேசி விடுவார். 
 
அது ஏற்படுத்திய தாக்கம்தான் தனது மகள் தனது பேச்சுக்களை பொய்யாக்கி விட்டாள் என்ற ஆற்றாமைதான் அவரைக் கொன்றது. இப்போது தென்றலை மட்டுமல்லாது தேன்மொழியையும் அது தான் நடை பிணமாக்கி வைத்திருக்கிறது. 
 
 
 
தென்றல் ஜூஸைக் குடித்து விட்டு புறங்கையால் வாயைத் துடைத்துக் கொண்டாள். 
 
பாண்டியன் அந்தக் கையைப் பிடித்து ஈரமான கைத்துண்டால் துடைத்து விட்டான்.
 
 
“பாப்பா” மெல்ல அழைத்தான் .
 
 
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “ஐ! நானா?” என புன்னகைத்தாள் தென்றல்.
 
 
பாக்கியம் இரவு வரை தென்றலுடன் மருத்துவமனையில்  இருந்து விட்டு காலையில்தான் போனார் 
 
இவன் காலையில் பால் தினகரிடம் பால் பாக்கெட் வாங்கி வைத்து விட்டு கடைக்கு வந்த பணியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பத்து மணி அளவில் மருத்துவமனைக்கு வந்திருந்தான்.
 
 
 “  இந்தப் பாப்பாவுக்கு மதியத்துக்கு பத்தியமா  ரசம் சாதமும் காரமில்லாம சாம்பார் சாதமும்  சமைச்சு எடுத்துட்டு வர்றேன் தம்பி. கேண்டீன்ல குடுக்கற சாப்பாடடை சரியா சாப்பிட மாட்டேங்கிறா. காலையில கேண்டீன்ல இட்லியும் பாலும் வாங்கிக் குடுத்திட்டேன். மாத்திரையும் குடுத்திட்டேன்”  எனச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்.
 
மாத்திரை சும்மா சத்து மாத்திரைதான்.
 
இவன் தென்றலின் கையை துடைத்த சமயம் தேன்மொழி வந்து விட இவன் பதறிவிட்டான். 
 
அவன் பாட்டில் ;தான் உண்டு தன் வேலை உண்டு; ‘என இருந்தால் – இந்தத் தேனு இவனை தென்றலுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? எனக் கண்களால் கேள்வி கேட்டுத் துளைக்கிறாhள்.
 
தென்றல் முதன் முதலில் பாண்டி என்ற சொன்னதில்  இருந்தே இவனை முறைத்துக் கொண்டுதான் சுற்றுகிறாள் அந்த அரைக் கிறுக்கி.
 
வந்தவள் கொண்டு வந்திருந்த மதிய உணவை அங்கிருந்த வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட மர மேஜை மீது வைத்தாள். 
 
“ வா தேனும்மா. சாப்பிட்டியாடா?’ என்ற இவன் ஆசையாகக் கேட்க அவள் இவனின் தென்றலைத் தொட்ட  கைகளைப் பார்த்து கண்களை உருட்டினாள்.
 
 
“ப்ச்! என்னம்மா இது? அவ குழந்தை மாதிரி. நீதானே எப்பவும் அவளைப் பாத்துக்குவ? நீ இன்னிக்கு வர லேட்டகும்னு சொல்லவும் நாhன் வந்தேன். உனக்காகத்தானேடா வந்தேன்?” எனக் கெஞ்ச –
 
“ நான் யாருக்காக வந்தேன்?” என்றாள்.
 
 
“ தென்றலுக்காக” புரியாமல் பார்த்தான.; 
 
“ தென்றலை நான் ஏன் பாக்கனும்?”
 
பாண்டியன் விழித்தான் . அவள் ஏன் தென்றலைக் கவனித்துக் கொள்ள வேண்டும்?
 
இவனுக்காகத் தானே அவள் தென்றலை இரவும் பகலுமாக இந்த ஒரு வாரமாகப் பராமரிக்கிறாள்? இவளுடன் பாக்கியம் அத்தை கூட இவனுக்காகத்தானே தென்றலை அப்படித் தாங்குகிறார்;?
 
ஆனால் பாண்டியன்; ஏன் தென்றல் விசயத்தில் இத்தனை மும்மூரமாக இருக்கிறான்?
 
தேன்மொழி பார்த்துச் சொன்ன ஒரே காரணத்திற்காகத்தான் இந்த விசயத்தை அவன் கையில் எடுத்தான். இல்லை என்றால் சங்கத்தில் சொல்லிவிட்டு ஒதுங்கி இருப்பான். 
 
இது இவளுக்குப் புரியவில்லையா? நடை முறை வாழ்வில்; ஹீரோத்தனம் எல்லாம் யாரும் காட்டிக் கொண்டு இருக்க முடியாது. ஆனால் நாம் எதிர் பார்க்காத நேரத்தில் எதிர் பார்க்காத இடத்தில் நம்பவே முடியாத நபரோ நபர்களோ ஹீரோ ஹரோயின் ஆகி விடுவதும் தவிர்க்க முடியாதது.
 
 
“விடு செல்லம். உன் சந்தேகத்தை இப்ப தீர்த்திடலாம். உடம்பு சரியில்லாம பாப்பா ஏதோ சொன்னா நீ அதை நம்பிக்கிட்டு மூஞ்சைத் துக்கி வச்சிருக்கிறது எனக்கு எத்தனை கஷ்டா இருக்கு தெரியுமா? உன்னை பாக்கவும் முடியிறதில்லை. போன்ல பேசினா சட்டு சட்டுனு கட் பண்ணிடறே?”
 
“அதுல்லாம் ஒன்னும் வேண்டாம். அவளுக்கு உடம்பு சரியாகட்டும். அப்புறம் பாக்கலாம்” அசட்டையாகச் சொன்னாள் தேன் மொழி.
 
ஆனால் மீண்டும் தென்றல் ‘பாண்டி பாண்டி’ என்று புலம்புவதை இவளால் காது கொடுத்துக் கேட்க முடியுமா? அதுவும் அவன் முன்னால்?
 
இத்தனை நாட்கள் தென்றலின் அருகில் இருந்து அவள் தூக்கத்தில் கூடப் பிதற்றும் ‘பாண்டி’ யைக் கேட்டவள் வேறு என்னதான் செய்ய முடியும்?  
 
இவள் பண்டியன் மீது கொண்ட காதலுக்காக அவனுக்கும் தென்றலுக்கும் உதவுவதைத் தவிர? 
 
“இல்லை . இப்ப இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். இங்கே இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சைக்காலஜிஸ்ட் 
கண்டிப்பா பாக்கப் போறோம். ஆனா நீ படுத்துற பாட்டுல நானும் பைத்தியமாகி எனக்கும் சைக்காலஜிஸ்ட் பாக்க வேண்டியதாகிடும் போல இருக்கு” என  அவன் புலம்ப –
 
தேன்மொழிக்கு மெல்ல சிரிப்பு வந்தது.  
 
“பேசாம ஏர்வாடிக்குப் போயிடுங்க” என்றாள் சிரித்துக் கொண்டே.
 
“அதுல உனக்கு எவ்ளோ சந்தோசம்?”  என்று கேட்டவன்  நிம்மதியாகச் சிரித்தான். 
 
‘ஏதோ இந்த அளவாவது பேசிச் சிரித்தாளே?;’
 
‘சரி. இதை இப்டியே விடாமல தென்றலை கேட்டுப் பார்ப்போம்’;  என முடிவு செய்தவன் –
 
 
“ பாப்பா. வந்து.. உன் மனசுக்குப் பிடிச்சவங்க.. வந்து நீ யாரைக் கல்யாணம் செயயனும்னு நினைச்சிருக்;கே?’ மென்மையாகக் கேட்க அவள் கொடுத்த பதில் அதிரடியாக இருந்தது. 
 
“ பாண்டியன்! பாண்டியன் வேணும்” என்றாள் இது வரை இவர்கள் பேசியதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த தென்றல்.
 
 
“எதே !  பாண்டியனா?” என்று இவன் குழப்பமாக அதிர – தேன்மொழி இவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள்.
 
 
 

Leave a Reply

error: Content is protected !!