தேன் பாண்டி தென்றல் _ 17
தேன் பாண்டி தென்றல் _ 17
17
‘ என்னடா சொல்றே!’. என்பதாக சரவணன் விழிக்க
“ பின்னே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருப்பிங்க இல்ல?”
“ கூட்டிட்டு போயி?”. சரவணன் எச்சில் விழுங்கினார்.
“ உங்க கையால சமச்சு குடுதிருப்பிங்க இல்ல?”
“ என்ன சொல்ல வர்ற நீ?”
அவருக்கு பதட்டமாகி விட்டது. ஒருவேளை தான் கணித்தது தவறோ என்று.
அப்படி தப்பாக இருந்தால் இவனை அவரே நிராகரித்ததாக அல்லவா ஆகி விடும்?
அப்படி எல்லாம் அவர் நினைக்கவே இல்லயே?
“ என்னத்தை சொல்ல சொல்றிங்க? என்னை விட நீங்க நல்ல சமைப்பிங்க தானே? அதான் சொல்றேன்” என்றான் அசால்ட்டாக.
“ இப்போ என்ன? பாப்புவ கட்டிக்கிறியா?” என்று ஒரு அதட்டல் போடவும் அவன் அலறி விட்டான்.
“ அய்யோ சார். என்ன பேசுறீங்க?” என்று பதறியவனை நிதானமாக பார்த்து விட்டு “ தண்ணிய குடி. தண்ணிய குடி” என்று அவன் பக்கம் தண்ணீரை நகர்த்தினார்.
“சார் . நான் தான் சார் யூத்து. நான் தான் உங்களை கலாய்க்கணும். இங்க என்னடான்னா நீங்க என்னை ஓட ஓட ஒட்டுறேங்க”. பாவமாக மூக்கை சிந்துவதாக அவன் பாவனை செய்ய அவர் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தார்.
“ அடேய் என் பொண்ணு கல்யாணம் பத்தி சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம்டா”
“ போங்க பாஸ். சும்மா காமெடி பண்ணிகிட்டு. பாப்பு எனக்கு தங்கச்சி கூட இல்ல. எனக்கும் அவ பொண்ணு மாதிரி. இப்படி லூசுதனமா… சரி சரி…இப்படி வெவரமா மேடம் ஆரம்பிக்கும் போதே நீங்க கட் பண்ணிருப்பிங்க. நடுல என்னையும் நோட்டம் விட்டுறுக்கிங்க.
இப்போ பெரிய நாட்டாமை மாதிரி என்னா ஒரு பில்ட் அப்? கொஞ்சம் எங்களுக்கும் ஸ்கோப் குடுக்கணும் பாஸ்” என்றான்.
‘ஹப்பாட ‘என்று இடது நெஞ்சை நீவிவிட்டவர்
“ ஆனாலும் உனக்கு வாய் அதிகம் தான். கொஞ்சமாச்சும் மேனேஜர்னு எப்பவாசச்சும் என்னை மதிக்கிறியா?” என்று பெரிதாக ரோசம் வேறு பட்டார்.
“ சரி. நம்பிட்டேன். நீங்க கோவமா இருக்கிங்க. அதை விடுங்க சார். இதுல உங்களுக்கு ஒன்னும் வருத்தமில்லயே” என்று மெதுவாக கேட்டான் பூதப் பாண்டியன்.
“ அட நீ வேற ஏம்பா ? பொண்ணு கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? தவிர என் பொண்ணுக்கும் சரி பையனுக்கும் சரி( நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா) அவங்களுக்கு பிடிச்ச அவங்களை பிடிச்ச லைஃப் பார்ட்னர் தான் வரணும்ங்கிரது என் ஆசை. இதுல பிடிச்சன்ரதுக்கு சரியான டெர்ம் உன் மனசு போல போட்டுக்கோ”
அவனுக்கு அவரை பார்க்க அத்தனை ஆசையாக இருந்தது.
‘ நாமளும் சீக்கிரம் கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைங்க பெத்து இப்படி அருமையா கட்டி குடுக்க நினைக்கணும் _ சபதம் எடுத்துக் கொண்டான் மனதினுள்.
“ அதென்ன? மேடம்க்கு இருக்கிற நம்பிக்கை எனக்கு இல்லனு ஒரு வார்த்தை சொன்ன?”
“ சரியா தானே சொன்னேன்? மேடம்க்கு இருக்கற நம்பிக்கைதான் உங்களுக்கு இல்லையே? நான் வேற …வேற பொண்ணை விரும்புறதை சரியா கெஸ் பண்ணிருக்கிங்களே? அதை தான் சொன்னேன்” என்று நமுட்டாக சிரித்தான்.
“ ஒரு வயசானவன் _ இத்தனாம் பெரிய பேங்க் மேனேஜர் _ ரெண்டு பிள்ளைங்க அப்பா _ ஶ்ரீ ராமன் மாதிரி ஒரே பொண்டாட்டிகாரன் _ என்னை எப்டியெல்லாம் டேமேஜ் பண்ற?”
இருவரும் மனமார சிரித்துக் கொண்டே அந்த ரெஸ்டாரன்ட்டை விட்டு வெளியே வந்தனர்.
“ எல்லாம் சரி தான். நான் சொன்னது நினைவு இருக்கட்டும். கோயம்புத்தூரில் நம்ம வீட்டுக்கு வந்து அவளை பார்த்து சொல்லிடு” _ மீண்டும் அவனுக்கு நினைவு காட்டி தனது வீட்டை நோக்கி சென்றார்.
அதுவரை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்த தன் மொபைலை எடுத்துப் பார்த்தான் பூதப்பாண்டியன்.
என்னதான் சிரித்து பேசினாலும் அது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம். அந்த நேரத்தில் தொலைபேசியின் இடையூறு அவன் அவர் மீதுகொண்ட மரியாதையை குறைத்து காட்டி விடுமோ என்று அஞ்சியவன் அதை அணைத்துப் போட்டு இருந்தான்.
இப்போது ஏகப்பட்ட மெசேஜ், மிஸ்டு கால் என்று செல் ஜெகஜோதியாக இருந்தது.
எல்லாம் தென்றல் செய்ததுதான்.
இதோ இப்போதும் அவள் அழைக்கிறாள்.
தென்றல் வந்து என்னைத் தொடும்_ ஆஹா
சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரில் நீந்தி ஓய்வெடு
அந்த ரிங்டோன் அவள் ஃபோன் செய்யும் போது மட்டும் வரும். அப்படி செட் செய்திருந்தான்.
ஆனந்தமாக அழைப்பை ஏற்றவன் _
“என்னாடி? மாமனைத் தேடி தட்டழிஞ்சிருக்க போலவுமிருக்கு?”
அவ்வப்போது ஒருசில வட்டார பேச்சு வழக்குகளைப் பேசி அவளை ஜாலியாக வெறியேற்றுவான்.
அந்த நினைப்பில் அவன் இந்த முனையில் ஆரம்பிக்க அந்தப் பக்கம் அவள் அழுது விட்டாள்.
“ ஏய்! எதுக்குடி அழுகிற? சொல்லுடி.அழதேங்கிறேன்ல?எனக்கு பக்கு பக்குனு இருக்கு. தென்றல்…செல்லம் …பாப்பா..” என்று பலவாறாக அவன் பரிதவிக்க அவன் அக்கறையிலும் அவள் கூடுதலாக அழத்தான் செய்தாள்.
இவனுக்கு அருகே இருந்து அவளை தேற்ற முடியாத ஆற்றாமை வேறு வருத்தியது.
“ பாப்பா அழாதே செல்லம்மா. எனக்கு பயந்து வருதுடா” என்று சொல்லவும் ஃபோனை கட் செய்து விட்டாள்.
‘ போச்சா சோழமுத்தா… இன்னும் என்னென்ன ஏழரையை எல்லாம் கூட்டுவான்னு தெரியலியே? இப்பவே கண்ணை கட்டுதே’ என்று அவன் வெளிமனம் சலித்துக் கொள்ள உள்மனம் ரணமாக வலித்தது.
ஏதோ காதலிதோமா, காலா காலத்தில் கல்யாணத்தைப் பண்ணினோமா என்று இல்லாமல் அன்று ஒரு நாள் அவளை தன் பிளாட்டுக்கு கூட்டிப் போயிருந்தான்.
அங்குதான் அவன் எழுதிய கவிதைகளை அவள் படித்தாள்.
உன் விழியம்பு பட்டு
உருக்குலைந்த என் நெஞ்சை
ஓடிவந்து நீ
அணைத்துக் கொள்வது பிி
எப்போது?
கவிதை எழுதி இருந்த டயரியை அணைத்துக் கொண்டவள் அவனை முறைத்து தள்ளியே நிறுத்தி இருந்தாள்.
அதில் காண்டானவன் தனது தாயின் விருப்பத்தை சொல்லி ஆழம் பார்த்தான்.
அதாவது மதுரையில் இவனுக்கு பொண்ணு பார்க்கும் தாயின் திட்டத்தை.
அதை கேட்டதில் இருந்து ஒரே புலம்பல்.
“ அப்போ அத்தை சொன்னா வேற பொண்ணை கட்டிகிடுவிங்களா?” என்று கேட்ட அவளைப் பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.
இவன் பேசாமல் இருப்பதை பார்த்து அதற்கும் ‘நை நை ‘என்று பிடித்துக் கொண்டு _
“ உங்களை நம்ப மாட்டேன். என்னை அத்தைகிட்ட கூட்டிட்டு போங்க” என்று குதித்தாள்.
“ பாப்பா நீ மொதல்ல படிச்சு முடிடா. அம்மாவ கூட்டிட்டு வந்து பொண்ணு கேக்கிறேன்.” என்று சமாதானப் படுத்தி அவளுக்கு பிடித்த வெஜிடபிள் புலாவ் செய்து கொடுத்து அவள் ஹாஸ்டலுக்கு கூட்டி சென்று விடும் போது சாக்லேட் ஐஸ்கிரீமும் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்க்கு ₹ வந்த பூதப்பாண்டியனுக்கு மனது கனத்துப் போய் இருந்தது.
அவள் சின்னப் பெண். அவள் அறியாமல் ஏதோ செய்யப் போக அவள் மீது படிந்துவிட்ட அவன் மனம் அதுதான் சாக்கு என்று அவளை சுற்றி சுற்றி வந்து தன்னை காதலிக்க வைத்து விட்டான்.
இப்போதானால் அடுத்து அடுத்து கல்யாணம் குடும்ப வாழ்க்கை என்று இவன் மனம் போகும் போக்கு இவனுக்கே சற்று பயமாகத்தான் இருந்தது
அவள் அப்படி எதுவும் அதுவரை நினைத்திருக்கவில்லை என்பது தெரியும். நினைக்க கூடாது என்று இல்லை. அப்படி நினைக்க தெரியவில்லை .
வீட்டிற்கு அழைத்து வந்து இதுதான் உன் வீடு என்று சொன்னால் அப்போதாவது திருமணம் பற்றி நினைப்பாள் என்று ஒரு ஆசை. தவிர அவள் அவன் வீட்டிற்கு வரவேண்டும் என்றும் ஆசையாக இருந்தது.
வந்த இடத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டியாகிவிட்டது என நினைத்து தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டான்.
அதன்பிறகு அவள் நினைத்த நேரமெல்லாம் இவனுக்கு சங்குதான்.
“வேற பொண்ணு பாகக விட்டுவியா பாண்டி?” என்றுகண்ணீர் மல்க கேட்கும் போது ‘இதேதுடா வம்பா போச்சு’ என்று தன்னை நொந்தாலும் அவளை மறக்காமல் தேற்றி இதுதான் சாக்கு என்று கன்னங்களையும் வருடி விடுவான். அப்போது அவள் அதை உணாந்திருக்க மாட்டாள். அப்புறம் கண்டுபிடித்து அதற்கும் போனில் வாட்சப்பில் சண்டை போடுவாள். இவனது தனிப்பட்ட எண்ணுக்குத்தான் அவளது அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வரும்.
இத்தனை நாளில் ஒருவழியாக அவன் பேரைத் தெரிந்து கொண்டவள் ஆச்சரியமாக “இப்படி ஒரு பேரா?” என்றதோடு நில்லாமல் இவனுக்கு ஏகப்பட்ட பூ பாடல்களை அனுப்பி சோதிப்பாள்.
அவற்றில் அவனுக்குப் பிடித்த பாடல்
பூ பூ பூ
பூ பூத்த சோலை
பூ பூ பூ
பூ மாதுளை
பூ பூ பூ
புல்லாங்குழல்
பூ பூ பூ
பூவின் மடல்
பூ பூ பூ
பூங்காவனம்
பூ பூ பூ
பூவை மனம்
பூ பூ பூ
பூஜை தினம்
பூ பூ பூ
புதிய சுகம் வழங்கிடும்
அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தனது கல்யாணக் கனவுகளை சொல்ல ஆரம்பிக்க அவளோ இன்னும் முகம் வெளிறிப் போவாள். ஆனால் தனது புலம்பலை மட்டும் விடவில்லை.
இப்போதும் அதற்குத்தான் போனை போட்டதோடு இல்லாமல் அழவேறு செய்கிறாள் என்று நினைத்தவன் “இதப்பாரு உன்னைத் தவிர வேற பொண்ணை கட்டிக்கிட மாட்டேன்டி. சும்மா ஒரு வார்த்தை கிண்டலா சொன்னதுக்கு எத்தனை நாளா என்னை இம்சைபடுத்தற?” என்று சற்று கோபமாகக் கூறிவிட்டான். அவள் அழுகையை நிறுத்திவிட்டு_
“எங்க அம்மா வர்றாங்க பாண்டி. அவங்க இத்தனை வருஷம் புருஷன் இல்லாம தைரியா வாழ்நதிட்டாலும் ரொம்ப பயம் உண்டு. அடுத்தவங்க நம்மளை என்ன சொல்லுவாங்களோன்னுஅடிக்கடி பயப்படுவாங்க. இப்போ எங்க அப்பா வழி சொந்த்திலயே ஏதோ பையனைப் பாத்து எனக்கு கட்டி வைக்க நினைக்கிறாங்க. அப்படியாச்சும் அப்பாவழி சொந்தக்காரங்களுக்கு எங்க மேல ஒரு மதிப்பு வரும்னு நினைக்கிறாங்க போல. இதை உங்களுக்கு சொல்லலாம்னா நீங்க போனை எடுகக்கவே மாட்டீங்கிருங்க. எனக்கு எத்தவை பாடா போச்சு தெரியுமா?”
என்று படபடத்தாள்.
போராட்டமாகப் போராடி தென்றலை தன்னை பாண்டி என்று கூப்பிட வைத்து இருந்தான் இத்தனை நாட்களுக்குள்.
“உங்க வயசு என்ன? என் வயசு என்’ன? உங்க படிப்பு என்ன? என் படிப்பு என்ன? உங்க ஜாப் என்ன? என் ஜாப் என்ன?…” என சொல்லிக் கொண்டே போனவளை வாயைச் சட்டென பொத்தி “டோர் லாக்” என்றான்.
“இல்ல.. அப்புறம் என்னை மரியாதை தெரியாத பொண்ணுனு இந்த உலகம் பேசவா?”
“நீ டோர் லாக் பண்ணாட்டி லிப் லாக் ஆகும். ஓகேவா?” என்றதும் இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல வைத்து இருந்தான்.
“சரி.ம்ம்ம்ம்…”என்று யோசித்தவன் “இதப்பாரு எனக்கு கோயம்புத்தூர்ல ஒரு வேலை இருக்கு. அத்தை எப்ப வர்றாங்கனு சொல்லு. நான முடிஞ்சவரை அவங்களை கோயம்புத்தூர்ல மீட் பண்ணி பேச ட்ரை பண்றேன். இங்க வந்ததும் எங்க மானேஜர் சரவணன் சாரை வச்சுப் பேசிட்டு அப்புறம் ஊர்ல இருந்து வரவச்சிப்போம். நீ சும்மா புலம்புறதை நிறுத்து. அப்படியே அழறதையும் நிறுத்து. நல்ல விசயம் பேசும்போது எதுக்கு அழறே? அடுத்து பேசும் போது நீ சிரிச்சிட்டு பேசலைன்னாலும் பரவாயில்ல. சின்ன சிணுக்கம் கூட உன் பேச்சில வரக்கூடாது” என்று கண்டித்துச் சொல்ல அதன்பிறகு அவள் சாதாரணமாகப் பேசினாலும் ஒரு பரபரப்பும் படபடப்பும் அதில் இருக்கத்தான் செய்யும்.
பூதப்பாண்டியனால் கோவையில் மல்லிகா டீச்சர் வீட்டில் வைத்து அவரிடம் பேச முடியவில்லை. அதற்குள் அவனை சரவணன் வரச்சொல்லவிட ‘சரி அவங்களும் சென்னைக்குத் தானே வர்றாங்க.அதும் தென்றலைப் பார்க்ககத்தானே வர்றாங்க. அங்கே வச்சு சரவணன் சார்கிட்ட சொல்லி பேசச் சொல்லலலாம் என இவன் கிளம்ப மல்லிகா டீச்சர் கிளம்பும் பஸ் விபரத்தை சொல்லி இருந்தாள் தென்றல். பூதப்பாண்டியும் அதே பஸ்ஸில் ஏறிவிட்டான்.
இப்போது மல்லிகா டீச்சர் உறக்கத்தை தழுவி இருக்க சற்று முன்னர் “ எங்க அம்மாகிட்ட எப்படியாச்சம் நல்ல பேரு வாங்கிரு பாண்டி. அப்புறம் இங்க வச்சு உன் ஐடியாபடி உங்க மானேஜரை வசசுப்பேசிக்கலாம்.. ப்ளீஸ். எனக்கு பயமா இருக்கு. நீயே அடிக்கடி சொல்ற. நான்தான் உன்னை சுத்தி சுத்தி வந்து உன்னை லவ் பண்ண வச்சேன்னு. இப்ப வேற ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கவே முடியாது. என் அம்மா இவ்வளவு கண்டிப்புனு தெரிஞ்சும் நான் படிக்கிற வயசிலே உன்னை காதலிச்சது தப்புதான். காதலிச்சிட்டேன். இனி வேற ஏதாவதுன்னா நான் என்னவேன்நை எனக்கு தெரியலை பாண்டி. “என்று வாய் ஓயாமல் புலம்பி இருந்தாள்.
அது அவளது குற்ற உணர்ச்சி. அடுத்து அவனை கல்யாணம் செய்ய அவள் அம்மா சம்மதிக்கவில்லை என்றால் அவரை மீறுவது ஒரு கஷ்டம் என்றால் அப்படி மீறாமல் அவர் பேச்சை டே;டு இவனை மறுத்தால் அது அவனுக்கு செய்யம் பச்சைத் துரோகம்.
அவளும் காதலிக்க ஆரம்பித்த பின்பு அவள் மீது ஏதேதோ ஆசைகளை வளர்த்து வைத்திருக்கும் அவனை மறுக்க மறக்க எப்படி அவளால் முடியும்?
தென்றலின் தவிப்புகள் இப்படி இருக்க இங்கு பூதப்பாண்டியனும் மல்லிகா டீச்சரும் சென்ற பஸ் ஒரு ரோட்டோரக் கடைகள் நிறைந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.
“பத்து நிமிசம் டைம். அதுக்குள்ள பாத்ரூம் போறவங்க போயிட்டு வந்திருங்க. டீ காபி குடிச்சிக்கலாம்” சொல்லிவிட்டு கதவைத் திறந்து கொண்டு இறங்கினார் கண்டக்டர்.
இங்குதான் பூதப்பாண்டியனுக்கு சோதனை ஆரம்பித்தது.
இவன் ரெஸ்ட்ரூம் போய் வர எதிரே மல்லிகா டீச்சா வந்தார். வந்தவர் இவனை விட்டு பக்கத்தில் நின்ற கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் “லேடீஸ் ரெஸ்ட்ரூம் எங்க?” என்றார். அந்தப் பெண் அங்கே போட்டிருந்த பாட்டு சத்ததில் கவனிக்கவில்லை.
ஆனால் அதைக்கண்டு கொண்ட இவன் மல்லிகா டீச்சரிடம் லேடீஸ் ரெஸ்ட்ரூம் இருந்த இடத்தை கைகளால் சுட்டிக் காட்டினான். அவனுக்குத்தான் அவர் அத்தை என தெரியம். அவருக்கு அவனை இந்த பஸ் பயணம் தவிர்த்து முன்னே பின்னே தெரியாது. இது ஒரு பெரிய உதவி எனபதைத் தாண்டி அதைச் செய்தது ஒரு அன்னிய ஆண் என்றால் பல பெண்களுக்கு கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களில் மல்லிகாவும் ஒருவர்.
அதன்பிறகு அங்கே இருந்த டிபன் கடையில் ஏதாவது சாப்பிடலாம் என்ற இவன் போக அவரும் அங்கே வந்து சேர்ந்தார்.
இவன் ரெண்டு இட்லி எனச் சொல்ல அவரும் இரண்டு இட்லி என்றார். இவன் அவருக்கு முந்தைய வரிசையில் இருந்தான். மல்லிகாவுக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. ஒரு காபி குடிக்கலாம்’என்று பார்த்தால் அங்கே டீதான் இருந்தது. சரி இரண்டு இட்லியைப் பிட்டு போட்டு ஒரு டீயைக் குடிக்கலாம் என நினைத்தார். தனியாக பயணம் செய்வதில் இவருக்கு இது ஒரு தொல்லை. அடுத்தவரைப பேணும் அவருக்கு தன்னைப் பேண கொஞ்சம் மனம் முரண்டியது அப்போது.
இவர் பசியான பசியில் இருக்க சர்வர் அரவசர அவரசமாக இரண்டு இட்லிகளை கொண்டு வந்து முதலில் ஆர்டர் செய்து முன்னால் உட்கார்ந்திருந்த பாண்டிக்கு வைத்துவிட்டுப் போக இவர் கடுகடுத்தார்.
இவர் முகத்தைப் பாhத்துவிட்டு “ அத்..ஆண்டி நீங்க சாப்பிடுறீங்களா?” எனத் தனது தட்டை அவருக்குக் கொடுக்க வர அவர் வேகமாக மறுத்தார்.
இன்னொருவன் கொடுத்து தான் சாப்பிடுவதா? என்ற எண்ணம் அவருக்கு.
அவர் நேரமோ?அவன் நேரமோ? அடுத்த இரண்டு இட்லி அடுத்த ஈடு வெந்தபின்புதான் அவருக்கு வைத்ததார்கள். வேறு எதுவும் அவரால் அந்த நேரத்தில் சாப்பிடவும் முடியாது.
வேண்டாம் என்ற எழுந்து போகவும் ஒரு மாதிரி இருக்க- அப்படிப் போனாலும் இவர்கள் எல்லாம் வரும் அந்த பஸ்ஸில்தான் அவர் மீண்டும் பயணிக்க வேண்டும்? என்ற மிகவும் பொறுமை காத்தார்.
இவரை உட்கார வைத்து மற்றவர்களும் கொஞ்சம் குற்ற உணர்வுடன் சாப்பிட பாண்டியன் ‘இந்த இட்லியை நாம ஆர்டல் பண்ணலைனா அவர்களுக்கு குடுத்திருப்பாங்க. நாம ஏதாவது தோசை சாப்பிட்டு இருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு இருக்க அதை அப்படியே அவரிடம் சொல்லிச் சென்றார் சர்வர்.
மல்லிகாவிற்கே அப்போதே ஏனோ அவனைப் பிடிக்காமல் போனது. முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆனது.
அதன்பிறகும் சென்னை வந்து சேர்ந்தும் பூதப்பாண்டியனாலும் தென்றலாலும் அவரிடம் தங்களைப் பற்றி பேச முடியவில்லை.
இனி முடியாது என்று பூதப்பாண்டியன் சரவணனைத் தேட அவர் லீவில் போயிருந்தார்.அதற்காகத்தான் அவனை அவசர அவசரமாக வரச் சொல்லி இருந்தார்.
இவன் முதலிலேயே அவரிடம் சொல்லி வைத்திருந்தால் கண்டிப்பாக இருந்திருப்பார். அவருக்கு இவன் விசயம் தெரியாததால் தனது வேலையைப் பார்க்க சென்று இருந்தார்.
தென்றலை _ பூதப்பாண்டியனைப் பற்றி அதுவரை தேன்மொழிக்கு அழகிய வீர பாண்டியன் நடந்ததாக அவன் கேள்விப்பட்டவற்றை _ அவளிடம் சொல்லக் கூடியதை சொன்னான்.
கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி
“ அப்புறம்?” என்றாள் .
அதன்பிறகு நடந்தது அவனுக்கு ஒரு ஊகம்தான். அதை தேன்மொழியிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்தவன் _
“அதை தென்றல் தான் சொல்லணும்” என்றான்.
“ இதுவரை சொன்னது?”
“ அது எனக்கு பூதப்பாண்டியன் சார் சொன்னது”
“என்ன?” என்று விழிகளை விரித்தாள் தேன்மொழி.
ஆமாம் என்பதாகத் தலை அசைத்த அழகிய வீர பாண்டியன் ஊகித்ததை மனதில் ஓட்டிப் பார்த்தான்.
மல்லிகா அன்று திரும்ப கோவைக்கு கிளம்பும் போது தென்றலிடம் மெல்ல ஆரம்பித்து மகளின் திருமணம் குறித்து தனது முடிவைச் சொல்ல தென்றல் தன் தயக்கத்தை எல்லாம் விட்டு சொல்லிவிட்டாள்.
அவள் பேச்சை அதிர்சியாகக் கேட்டு கோபம் அடைந்தவர் “அவர் இங்கதான் பேங்க்ல ஒர்க் பண்றாரு. உங்க கூட பஸ்ல வந்தாரே … வந்து அவருதான்” என்ற சொல்லி முடிக்க தாயின் கரங்கள் அவள் கன்னத்தில் இடியாக இறங்கியது.
“நீ படிச்ச கிழிச்சது போதும் .பொட்டியக் கட்டிட்டு கிளம்பு என் கூட . இனி அவன் கிட்ட எந்த பேச்சு வார்தையும் வச்சுக்க கூடாது. கம்முனு எங்கூட கிளம்பு. மீறி எதாவது செய்த? அவன் மேல என் பொண்ணை கடத்தி வச்சிருக்கான்னு இல்லை வேற ஏதாவது வாய்ல சொல்ல முடியாத கேஸைப் போட்டு உள்ள தள்ளுவேன். கவர்மென்ட் வேலைதானே பாக்கான். என்ன நடந்தாலும் நடகலைனாலும் அவன் வேலை கண்டிப்பா போகும். அப்புறம் மானம் மரியாதை போகும்.” என்று நேரடியாக மிரட்டினார்.
அப்படியெல்லாம் யாரும் எடுத்தோம் கவிழ்த்தோம் என யார் மீதும் புகார் கொடுத்துவிட முடியாது. தகுந்த ஆதாரங்கள் வேண்டும். தவிர இவள் மேஜர் தன் விருப்பப்படிதான் அவனுடன் சென்றதாகச் சொன்னால் அவனை ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனால் இதெல்லாம் முடிவதற்குள் அவன் வேலை, மானம் ,மரியாதை பற்றி பயந்து போனாள் தென்றல். அவள் இதுவரை வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவள். அன்னை சொன்னதை அப்படியே நம்பி விட்டாள். மல்லிகாவுடன் கோவைக்கு கிளம்பிவிட்டாள் _ பூதப்பாண்டியனிடம் சொல்லாமல் எந்தத் தகவலும் யாருக்கும் கொடுக்காமல் தன் தாய் சொன்ன மாதிரியே.