நிரல் மொழி – 8
நிரல் மொழி – 8
சென்னையின் புறநகர் பகுதி…
நல்ல விசாலமான தார் சாலை!
அந்தச் சாலையின் வழியாகத்தான் அனல் மின் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.
அதே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, ஷில்பா நின்றுகொண்டிருந்தாள்.
பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி!
யாருக்கோ காத்துக்கொண்டிருப்பது போல், அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சற்று நேரத்திற்குப் பின், தூரத்தில் பைக் வரும் சத்தம் கேட்டது.
‘வந்துவிட்டானா?’ என்பது போல், ஷில்பா சத்தம் வரும் வழியைப் பார்த்தாள்.
இல்லை! இன்னும் வரவில்லை!!
ஐந்து நிமிடங்களுக்குப் பின், பைக் சத்தம் பக்கத்தில் கேட்க ஆரம்பித்தது.
இப்பொழுது பைக் வருவதை, அவளால் பார்க்க முடிந்தது.
அடுத்த இரண்டு நிமிடத்தில், பைக் அவள் அருகில் வந்து நின்றது.
“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?” என்று கோபம் கொண்டாள்.
“டிராபிக் ஷில்பா” என்று சொல்லி, பைக்கிலிருந்து நிகில் இறங்கினான்.
“மூணு மணிக்கு ஆபரேட்டரைப் பார்க்கலாம்னு சொல்லிருக்காங்க. அதான், உனக்கு ஃபோன் பண்ணேன்” என்றாள்.
“ம்ம்ம்” என்றான், பைக்கை ஓரமாக நிறுத்தியபடியே!
“வாட்ஸ்அப்-லயே கொஸ்டின் சென்ட் பண்ணியிருக்கலாம். அதைப் பார்த்து, நானே அவர்கிட்ட கேட்டிருப்பேன். நீ எதுக்கு தேவையில்லாம வந்திருக்க?”
“ஷில்பா! ஃபர்ஸ்ட் கொஸ்டின்தான் எனக்குத் தெரியும். மத்த கொஸ்டின் எல்லாம், அவர் சொல்ற பதிலை வச்சிதான் கேட்கணும்” என்று, அவள் எதிரில் வந்து நின்றான்!
“புரியலை நிகில்”
“சொல்றேன்” என்றவன், தன் பேன்ட்டிலிருந்து ‘பிளூடூத் இயர்பீஸ்’ ஒன்றை எடுத்தான்.
“இது எதுக்கு நிகில்?”
“இரு” என்றவன், “இதை காதுல மாட்டிக்கோ” என்று ‘பிளூடூத் இயர்பீஸை’ அவளிடம் கொடுத்தான்.
“எதுக்கு?” என்று கேட்டாலும், அதை தன் காதில் மாட்டிக்கொண்டாள்.
அவள் கேட்பதைக் கவனிக்காமல், “ஓகே. உன்னோட ஃபோன்-ல ப்ளூடூத் ஆன் பண்ணி, இந்த டிவைஸ்-கூட கனெக்ட் பண்ணிக்கோ” என்றான்.
அவன் சொல்வதைச் செய்யாமல், “ஃபர்ஸ்ட் எதுக்குன்னு சொல்லு?” என்று கேள்வி கேட்டு நின்றாள்.
“ஷில்பா! இப்போ நான் உனக்கு கால் பண்ணுவேன். நீ அட்டன் பண்ணு! நீ உள்ளே போகிறப்பவும் கால் ஆன்-லேயே இருக்கட்டும்” என்று சொல்லி நிறுத்தி, அவளைப் பார்த்தான்.
‘முழுதாய் சொல்?’ என்பது போல் நின்று கொண்டிருந்தாள்.
“நீ ஆப்ரேட்டர்-கிட்ட என்னெல்லாம் பேசிறியோ… அது எனக்குக் கேட்கும்! அடுத்து அவர்கிட்ட என்ன கொஸ்டின் கேட்கணும்னு நான் சொல்லுவேன். அது இந்த ப்ளூடூத் வழியா உனக்கு கேட்கும். அன்ட் நீ அந்தக் கொஸ்டின, அவர்கிட்ட கேட்கனும்… பிளஸ்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
சட்டென ஷில்பா அந்த ‘ப்ளூடூத் இயர்பீஸை’ கழட்டி, அவனிடம் தந்துவிட்டு… தன் கார் கதவைத் திறந்தாள்.
“ஷில்பா, என்னாச்சு?” என்றான், காரின் கதவை மூடியபடியே!
“ப்ராஜெக்ட் பெயிலியர்-னா, நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் கிடைக்காம போகும். ஆனா, நீ சொல்ற வேலையைச் செஞ்சேன்னு வச்சிக்கோ… என் வேலையே போயிடும்” என்று கோபமாகப் பேசினாள்.
“அப்படியெல்லாம் நடக்காது ஷில்பா”
“நடந்திட்டா?? பெட்டர் எல்லா கொஸ்டினையும் என்கிட்ட ஃபர்ஸ்டே சொல்லிடலாமே நிகில்?”
“சொன்னேன்ல ஷில்பா! எனக்கு ஃபர்ஸ்ட் கொஸ்டின் மட்டும்தான் தெரியும்”
“இது வேண்டாமே நிகில்” என்று மறுத்துப் பார்த்தாள்.
“அப்புறம் எப்படி ப்ராப்ளம் என்னன்னு கண்டுபிடிப்ப?”
“ப்ராபளம் என்னன்னு தெரியும்! அது ஏன்னுதான் தெரியாது?”
“நான் சொல்ற மாதிரி செஞ்சா, ஏன்? எதனால இப்படி ஆகுது? எல்லாம் தெரியும்”
“உள்ளே பிளான்ட் மெயின்டெனன்ஸ் ஹெட்… டெக்னிக்கல் இன்ஜினீயர்ஸ் இருப்பாங்க நிகில்”
“யார்னாலும் இருக்கட்டும்!” என்று மீண்டும் அவளிடம், ‘ப்ளூடூத் இயர்பீஸை’ கொடுத்தான்.
“எங்க கம்பெனி-ல யாருக்காவது தெரிஞ்சா?” என்று கேட்டுக் கொண்டே, அதைக் காதில் மாட்டிக் கொண்டாள்.
“இங்க பாரு ஷில்பா! இங்க நீ பேசப் போறதை, கண்டிப்பா உங்க மேனேஜ்மென்ட்-ல சொல்லத்தான் போற. ஸோ, ஹெசிட்டேட் பண்ணாத” என்றான்!
“சரி” என்று அரைமனதாகச் சொல்லி, மீண்டும் காரின் கதவைத் திறந்தாள்.
“ஷில்பா இரு. ஃபர்ஸ்ட் கொஸ்டின் என்னன்னு சொல்றேன்” என்று, முதல் கேள்வியை அவளிடம் கூறினான்.
“இதுக்கு எனக்கே ஆன்சர் தெரியும். இதைப் போய் அவர்கிட்ட ஏன் கேட்கணும்?” என்று அலுத்துக் கொண்டாள்.
“எனக்கும் ஆன்சர் தெரியும். பட், இதுதான் ஃபர்ஸ்ட் கொஸ்டின்” என்று சொல்லி, தன் பைக்கை எடுத்தான்.
ஷில்பாவும் காரில் ஏறிக் கொண்டே, “நிகில், என்ட்ரன்ஸ்-ல ஒரு செக்கிங் இருக்கும். அதுக்கப்புறம், நானே கால் பண்றேன்” என்று சொல்லியபடியே காரைக் கிளப்பினாள்.
“ம்ம்ம், நானும் பைக்க எடுத்திட்டு, பிளான்ட்-க்கு கொஞ்சம் பக்கத்தில வந்து நிக்கிறேன்” என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“கேர்ஃபுல் நிகில்” என்று சொல்லி, விருட்டென்று காரைச் செலுத்தினாள்.
நிகிலும் காரைப் பின் தொடர்ந்து, பைக்கில் சென்றான்.
******
அனல் மின் நிலைய ஆலை
பரந்த வெளி! வெகு தூரத்தில் கடல்!
ராட்சஸ அளவிலான கொள்கலன்கள்!
அதிலிருந்து, வான் நோக்கி வெளியேற்றப்படுகின்ற புகை!
ஒருபுறம் நிலக்கரி கொண்டுவரப்பட்டு, எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது!
மறுபுறத்தில், நிலக்கரி எறிந்த சாம்பல் குமிக்கப் பட்டிருந்தது.
இது எல்லாம் ஆலையின் ஒரு பகுதி!
ஆனால், ஆலையின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பகுதி!!
ஷில்பா சென்றது ஆலையின் மற்றொரு பகுதியான, ‘கண்ட்ரோல் ரூம்’ இருக்கும் பகுதி!
ஒரு அலுவலகம் போல்தான் தோற்றம் இருக்கும்.
சில சோதனைகளுக்குப் பிறகு அந்தப் பகுதிக்குள் சென்றாள்.
எனினும் ஆப்ரேட்டர் அறைக்குள் செல்லவில்லை. மாறாக மற்றொரு அறைக்குள் செல்லச் சொன்னார்கள்.
அங்கே, பிளான்ட் மெயின்டெனன்ஸ் ஹெட்… மற்றும் ஒரு டெக்கனிகல் இன்ஜினீயர்… என்று இருவர் இருந்தார்கள்.
அந்த அறையானது, அவர்கள் வழக்கமாக நடத்தும் ‘ஃபார்மல் மீட்டிங்’ அறை போல் பெரியதாக இல்லை.
எனினும், ஒரு நீள்வட்ட வடிவ கண்ணாடி மேசை… சுற்றிலும் பத்து எண்ணிக்கையில் நாற்காலிகள்… இருந்தன!
அவள் உள்ளே நுழையும் போது, “குட் ஈவினிங் மேம்! வாங்க” என்று மரியாதை நிமித்தமாக அழைத்தனர்.
“குட் ஈவினிங் சார்” என்று சொல்லி, ஷில்பா ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.
அமர்ந்தவுடன், “மேம். நாங்க ஏற்கனவே அவர்கிட்ட பேசிட்டோம். நீங்க என்ன கேட்கப் போறீங்க? அன்ட் ஒன் மோர் திங்க்… எங்க சைடுல ப்ராடைக்ட் சேட்டிஸ்பிக்ஸன் இல்லை” என்று நேரடியாகத் தெளிவாகப் பேசினார்.
வேறு நேரமாயிருந்தால் ஷில்பா பதில் சொல்லியிருப்பாள்.
ஆனால், இப்பொழுது எதுவும் பதிலளிக்காமல் இருந்தாள்.
காரணம்?
இங்கே பேசுவதையெல்லாம், வெளியிலிருந்து நிகில் கேட்டுக் கொண்டு இருக்கிறானே!
அது! அவளுக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஏதோ தவறு செய்வது போல் ஓர் எண்ணம்!
அதனால் ஒரு அசமந்தத் தன்மை!!
மேலும், என்ன கேட்கப் போகிறாள் என்று அவளுக்குத் தெரியாதே? பின் எப்படிச் சொல்லுவாள்!??
இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அறையின் உள்ளே ஒருவர் நுழைந்தார்.
“மேம், இவர்தான் ஆப்ரேட்டர்” என்று அவரை ஷில்பாவிற்கு அறிமுகப்படுத்தினார், ஹெட்.
அந்த மனிதர், மேசையின் அருகே வந்து நின்றார்.
ஷில்பா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மேம்! நீங்க பேசுங்க. ஐ ஹேவ் சம் அதர் ஒர்க்” என்று ‘மெயின்டெனன்ஸ் ஹெட்’ எழுந்தார்.
“ஓகே சார்”
“உங்ககூட இந்த இன்ஜினீயர் இருப்பாரு” என்று அருகிலிருந்த ஒருவனைக் கைகாட்டினார்.
“இட்ஸ் ஓகே சார்” என்றாள் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்!
பின் அந்த இன்ஜினீயரைப் பார்த்து, “பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டுச் ‘ஹெட்’ சென்றார்.
அவர் சென்றதும்,
“உட்காருங்க” என்று அந்த ஆப்ரேட்டரைப் பார்த்துச் சொன்னாள்.
அமர்ந்து கொண்டே, “என்கிட்ட என்ன கேட்கணும் மேம்?” என்று கேட்டார்.
“ஆங்! இன்ஜினீயர்ஸ் பிளான்ட் பாராமீட்டர்(அளவுகள்) பத்தி டீடெயில்ஸ் கேட்டா… எப்படி எடுத்து தருவீங்க? அதாவது பிளான்ட் டேட்டா டீடெயில்ஸ்” என்று கேள்வி கேட்டாள்.
இதுதான், நிகில் ஆப்ரேட்டரிடம் கேட்கச் சொன்ன முதல் கேள்வி!
ஆலைக்கு உள்ளே இருந்து கொண்டு கேட்டுவிட்டாள்!
ஆலையிலிருந்து சற்று தூரத்தில் நின்றிருந்த நிகில், இதுவரை அங்கே நடந்த பேச்சுக்களில் பெரிதாக கவனம் இல்லாமல் இருந்தான்.
ஆனால் இப்போது, தன் காதைத் தீட்டி வைத்துக் கொண்டு நின்றான்.
ஏனென்றால்? ஆப்ரேட்டர் கூறுவதை வைத்துதான், அடுத்த கேள்வி கேட்க வேண்டும்!
“மேம்! பென் டிரைவ் யூஸ் பண்ணி… டேட்டாவைக் காப்பி பண்ணிட்டு போய், பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பேன்” என்றார்.
“ஓ!” என்றாள்.
“இங்க இது யூஸ்வல்தான் மேம்” என்று இன்ஜினீயர் சொன்னார்.
“ஓகே.. ஓகே” என்று காத்திருந்தாள்.
எதற்கு?
நிகிலடமிருந்து வரப் போகும் அடுத்தக் கேள்விக்கு!
ஆலையின் வெளியே நிற்கும் நிகில் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஆனால், அறையில் இருந்த இருவரும்… ஷில்பா பேசுவதற்காக அவளையே பார்த்திருந்தனர்.
“ஓகே நெக்ஸ்ட் என்னன்னா…” என்று இழுத்துப் பேசி, நேரத்தைக் கடத்தப் பார்த்தாள்.
அதற்குள் நிகில், “ஷில்பா… அவர், ஏதாவது… ம்ம்ம், மால், தியேட்டர்… இந்த மாதிரி பப்ளிக் பிளேஸ்ல, பப்ளிக் வொய்ஃபை யூஸ் பண்ணியிருக்காரா-ன்னு கேளு” என்றான் படபடவென்று!
இது அவரின் தனிப்பட்ட விடயம் பற்றிய கேள்வி அல்லவா? ஷில்பா தயங்கினாள்.
“ஷில்பா கேளு” என்ற நிகிலின் குரல் ஷில்பாவின் காதிற்குள், அழுத்தமாகக் கேட்டது.
கேட்டுவிட்டாள்! வேறு வழியில்லை என்று!
ஆப்ரேட்டர் யோசித்துப் பார்த்தார். பின், “இல்லை மேம். யூஸ் பண்ணதில்லை” என்றார்.
‘இல்லையா’ என்றொரு அதிர்ச்சி, வெளியிலிருந்து கேட்ட நிகிலிற்கு!
பின் எப்படி?.?
யோசித்தான்! மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தான்.
பைக்கைச் சுற்றி நடந்து கொண்டே யோசித்தான்.
சட்டென, “ரென்டடு கேப்-ல(rented cab) போகும் போது யூஸ் பண்ணியிருக்காரா-ன்னு கேளு? என்றான் நிகில்.
இங்கே அறையில், ‘இவன் ஏன் இப்படிக் கேட்கிறான்?’ என நினைத்தாலும்… ஷில்பா அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
ஆப்ரேட்டர் மீண்டும் யோசித்தார். பின், “ஆமா மேம்! யூஸ் பண்ணியிருக்கேன்” என்றார்.
ஆலையின் வெளியே இருந்து நிகில், “எப்போன்னு கேளு ஷில்பா?” என்று கேள்வி கேட்டான்.
நிகில் கேட்கச் சொன்ன கேள்வியை ஷில்பா கேட்டாள்.
இதற்கு முன் எப்படியோ, இப்போது இன்ஜினீயர் ஷில்பாவைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஆப்ரேட்டர், “ஒரு… ஒரு… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மேம். கேப்ல போகிறப்போ, கேப் வொய்ஃபை யூஸ் பண்ணேன்” என்று யோசித்துப் பதில் சொன்னார்.
அவர் பதிலைக் கேட்டான் நிகில்!
‘யோசி… யோசி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, வெளியே வெயிலில் நின்ற நிகில் யோசித்துக் கொண்டிருந்தான்.
அந்த குளிரூட்டப்பட்ட அறையின் உள்ளே இருந்த மூவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சட்டென ஷில்பா காதிற்குள் ஒரு குரல்! “ஷில்பா, அது ஷேரிங் கேப்-பான்னு கேளேன்” என்று நிகில் அடுத்த கேள்வி கேட்டான்!!
நிகில் கேட்கச் சொன்ன கேள்வியை ஷில்பா அப்படியே கேட்டாள்.
இன்ஜினீயர் இப்பொழுது, ஷில்பாவைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
“ஆமா மேம். ஷேரிங் கேப்-தான்” என நிகில் கேட்ட கேள்விக்கு, ஆப்ரேட்டர் பதில் சொன்னார்.
“கூட யாரும் இருந்தாங்களா-ன்னு கேளு?” என்று நிகில் ஷில்பாவிடம் சொன்னான்.
சற்றுத் தயக்கத்துடன், நிகிலின் கேள்வியை ஷில்பா கேட்டாள்.
இன்ஜினீயர் இப்போது, ‘ஏன் இந்தக் கேள்வியெல்லாம்?’ என்ற தோரணையில் ஷில்பாவைப் பார்த்தான்.
ஆப்ரேட்டர் யோசித்து, “ஆமா மேம்! ஒருத்தன் இருந்தான்” என்று நிகிலிற்காகப் பதில் சொன்னார்.
கொஞ்சமும் யோசிக்காமல், “அவனும் லேப்டாப் யூஸ் பண்ணான்-னானு கேளு” என்றான் நிகில்.
‘எதற்கு இதெல்லாம்?’ என்று யோசித்தாலும், ஷில்பா நிகிலிற்காகக் கேட்டாள்.
கூட இருந்த இன்ஜினீயருக்குப் புரியவில்லை. ஆலைக்குச் சம்பந்தம் இல்லாத கேள்விகள் எதற்கென்ற ரீதியில் இருந்தார்!
“யூஸ் பண்ணிக்கிட்டுதான் இருந்தான்” என்றார் ஆப்ரேட்டர்.
ஆப்ரேட்டர் பதில் சொன்ன அடுத்த நொடியில், “ஷில்பா! ஆப்ரேட்டரோட லேப்டாப்-ல யூஸ் பண்ண பென் டிரைவை, கன்ட்ரோல் ரூம்ல யூஸ் பண்ணியிருக்காரா-ன்னு கேளு” என்றான்.
இந்த நொடியில், ஷில்பா ஓரளவு விடயத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
எனவே, நிகில் சொன்ன கேள்வியைத் தயங்காமல் கேட்டாள்.
‘இப்படிப்பட்ட கேள்விகள் எதற்காக?’ என்று நினைத்த இன்ஜினீயர், எழுந்து, “மேம், நான் மெயின்டெனன்ஸ் ஹெட்-டை கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
இன்ஜினீயர் சென்றதும்,
“நீங்க சொல்லுங்க?” என்றாள் ஷில்பா.
“யூஸ் பண்ணுவேன் மேம். இங்க இருக்கிற பென் டிரைவ் வேற யாரும் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தா, என்னோட பென் டிரைவ் யூஸ் பண்ணிருக்கேன்” என்று ஆப்ரேட்டர் பதிலளித்தார்.
வெளியில் நின்று கொண்டு, “கேப்-ல கூட வந்தவன் யாருன்னு தெரியுமா?-ன்னு கேளு” என்று நிகில் கேட்கச் சொன்னதை, ஷில்பா கேட்டாள்.
“அது தெரியாது மேம்” என்று பதில் சொல்லியவருக்கு, நடப்பது ஏதும் விளங்கவில்லை.
அதற்குள் வெளியே இருந்து, “ஓகே ஷில்பா! அவர்கிட்ட, அந்த கேப் புக் பண்ண அன்னைக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருப்பாங்கள… ஓடிபி டீடெயில் இருக்கிற மெசேஜ். அதை உன்னோட மொபைலுக்கு ஃபார்வேர்ட் பண்ணச் சொல்லு” என்று நிகில் ஷில்பாவிடம் சொன்னான்.
ஷில்பா வாயே திறக்கவில்லை.
‘அந்த மெசேஜ்யை எதற்கு கேட்க வேண்டும்?
அப்படியே கேட்டாலும், எப்படித் தருவார்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
சட்டென ஷில்பா காதினுள் குரல்! “ஷில்பா! யோசிக்காத!! நான் சொன்னதை கேட்டுட்டு வா. நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று கூறி, நிகில் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
இப்போது ஆப்ரேட்டர், ‘ஏன் இந்த விவரங்கள் எல்லாம்?’… ‘இன்ஜினீயர் ஏன் வெளியில் சென்றார்?’ என்று நினைக்க ஆரம்பித்தார்.
இங்கே, ஷில்பா எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.
இந்தக்கணம்… இன்ஜினீயருடன், மெயின்டெனன்ஸ் ஹெட் உள்ளே நுழைந்தார்.
ஷில்பாவிற்குப் ஒரு பதற்றம்!
உள்ளே வந்த ‘மெயின்டெனன்ஸ் ஹெட்’, அவளின் எதிரே வந்து அமர்ந்தார்.
“இன்ட்ரெப்ட் பண்றதுக்கு சாரி மேம்!” என்றவர், “இன்ஜினீயர் சொன்னாரு. பிளான்ட் ரிலேட்டடா கொஸ்டின் இல்லைன்னு. அதான்… ” என்றார்.
“இட்ஸ் ஓகே சார். பட், இந்த இன்ஃபார்மேஷன் தேவைப்படுது” என்றாள் பதற்றத்தை மறைத்துக் கொண்டு!
“பட், எதுக்கு மேம்?”
“டெக்னிக்கல் எக்ஸ்பர்ட் ஒருத்தரை ஹயர் பண்ணி, ஃபுல் சாப்ட்வேர் அகைன் செக் பண்ணலாம்னு நினைக்கிறோம்”
“அகைன் டெஸ்ட்டிங்?? ஆல்ரெடி செக் பண்ணியாச்சே மேம்?” என்றார்.
“யெஸ்! பட், வீ டிசைடடு டு கோ ஃபார் ஒன் மோர் டெஸ்ட்டிங்” என்றாள் தெளிவாக.
“ஓகே மேம்! இட்ஸ் யுவர் டெசிஷன். பட், ப்ராபரா இன்பாஃர்ம் பண்ணீங்கன்னா, வி வில் அரேஞ் ஃபார் இட்”
“ஷூயர் சார்!” என்றவள், “எக்ஸ்பெர்ட் செக் பத்தி, ஃபார்மல் மெயில் சென்ட் பண்றேன்” என்று எழுந்து கொண்டாள்.
“ஓகே மேம்” என்று, அவரும் எழுந்தார்.
“ஓகே சார். நான் கிளம்புறேன். தேங்க் யூ ஸோ மச்” என்று கைகுலுக்க கை நீட்டினாள்.
“ஓகே மேம்” என்று அவரும் கை குலுக்கினார்.
பின், ஷில்பா ஆலையிலிருந்து வெளியே வந்தாள்.
ஆலையின் வெளியே சற்று தூரத்துல்…
தன் பைக்கின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தவன் முன்னே, ஷில்பா வந்து நின்றாள்.
அமைதியாக நின்றாள்!
எதுவுமே பேசவில்லை!!
அவள் வாய் திறப்பது போல் தெரியவில்லை என்பதால், “என்ன ஒண்ணுமே பேச மாட்டிக்க? புரிஞ்சிடுச்சோ?” என்று கேட்டான்.
“மால்வேர் அட்டாக்??” என்று மட்டும் கேட்டாள்.
“யெஸ்! அந்த கேப்-ல, ஆப்ரேட்டர் கூட வந்தவனோட லேப்டாப்-ல இருந்து, கேப் வொய்ஃபை வழியா… ஆப்ரேட்டர் லேப்டாப்-க்கு மால்வேர் வந்திருக்கும்.
அன்ட் ஆப்ரேட்டர், தன்னோட லேப்டாப்-ல பென் டிரைவ் யூஸ் பண்ணறப்போ… அந்த மால்வேர் பென் டிரைவ்-க்குப் போயிருக்கும். தென்…” என்று நிகில் தொடரப் போகும் போது,
“தென்… அந்த பென் டிரைவ கண்ட்ரோல் சிஸ்டம் ரூம்ல யூஸ் பண்ணறப்போ… சாப்ட்வேர்(SCADA) இன்பெஃக்ட் ஆகியிருக்கும். SCADA வழியா HMI-க்கு… அங்கிருந்து PLC… தென் பிளான்ட் அட்டாக் ஸ்டார்ட் ஆகியிருக்கும். கரெக்ட்-அ??” என்று முடித்து வைத்தாள்.
“யெஸ்! எப்போ மால்வேர் SCADA சாப்ட்வேர்-க்கு வருதோ, அப்போ அட்டாக் ஸ்டார்ட் பண்ற மாதிரி டிசைன் பண்ணியிருப்பான்”
“ச்சே?! அந்த ஆப்ரேட்டரோட கேர்லெஸ்-னால, எவ்வளவு பெரிய பிரச்சனை?” என்று எரிச்சல் அடைந்தாள்.
“ரிலாக்ஸ் ஷில்பா!!” என்றவன், “இந்த மாதிரி யூஸ் பண்றது, பொதுவா எல்லா இடத்திலயும் நடக்கிறதுதான்” என்றான் பொறுமையாக!
“ஓ! ரொம்ப ஈஸியா சொல்ற??!” என்றாள் கோபமாக!
“ஷில்பா! மால்வேர் அட்டாக்-ன்னு இன்னும் கன்பாஃர்ம் ஆகலை. ஸோ, நீ அடுத்து என்ன செய்யப் போற? அதை மட்டும் யோசி”
“அப்ப மால்வேர் அட்டாக் இல்லையா நிகில்??” என்று குழப்பத்தில் கேட்டாள்.
“நாட் லைக் தேட் ஷில்பா. பெட்டர் இதைப்பத்தி, உங்க மேனேஜ்மென்ட்-ல பேசு. அதுதான் சரியா இருக்கும்” என்றான்.
“ம்ம்ம், சரி” என்றாள்.
“அப்புறம் ஷில்பா! அந்த கேப் ஓடிபி மெஸேஜ் ஒன்னு கேட்டேனே, அதை அனுப்ப சொல்லிட்டியா?” என்று கேட்டான்.
“அந்த மாதிரி எந்த டீடெயில்ஸ்-ம் இன்பாஃர்மல் வேய்ல அனுப்ப மாட்டாங்க. ஸோ, நான் கேட்கலை நிகில்”
“ப்ச், என்ன ஷில்பா?” என்று சலித்துக் கொண்டான்.
“இங்க பாரு நிகில்! நான் ப்ராப்பர் மெயில் சென்ட் பண்ணப் போறேன், அபௌட் டெஸ்ட்டிங். அதுல, இந்த கேப் டீடெயில்ஸ் எல்லாம் மென்ஷன் பண்ணி, அந்த மெசேஜ் கேட்கிறேன். ஓகேவா?” என்று சமாதானமாகப் பேசினாள்.
“சரி! நான் கிளம்புறேன். நீயும் கிளம்பு” என்று பைக்கில் ஏறினான்.
‘சரி’ என்றவள்… கிளப்புவதற்கு முன், “நிகில்” என்று அழைத்தாள்.
“என்ன?” என்றான், பைக்கில் கார் சன்னலின் அருகே வந்து நின்று!
“ரூட் காஸ் அனாலிசிஸ் ரிசல்ட்…” என்று ஆரம்பிக்கும் போதே,
“வேண்டாம் ஷில்பா! பார்க்கிற வேலைக்கு நியாமா இரு” என்று சொல்லி, ‘கிளம்பு’ என்பது போல் தலை அசைத்ததான்.
சிரித்துக் கொண்டே, ஷில்பா கிளம்பி விட்டாள்.
ஒரு புறம்…
ஷில்பா காரில் செல்லும் போது,
‘ஆப்ரேட்டருடன் கேப்-ல் வந்தவன்தான் மால்வேர் அட்டாக் செய்தவனா?
யாரவன்?
அவன் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
நாளை நடக்கப் போகும் ‘வைஸ் பிரசிடென்டுடனான’ சந்திப்பில், இதையெல்லாம் தெளிவாகச் சொல்ல வேண்டும்’
இப்படி நினைத்துக் கொண்டே, ஷில்பா காரில் சென்று கொண்டிருந்தாள்.
மறுபுறம்…
நிகில் பைக்கில் செல்லும் போது,
‘ஆக! நச்சு நிரல் தாக்குதல்!
எல்லா இடங்களிலும்… இது போன்ற யுத்திகளைக் கையாண்டு, அந்த ✖️-ஆல் பிரச்சனை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கிடைத்த தகவல்களை வைத்து, அவன் யாரென்று எப்படிக் கண்டுபிடிக்க?’
இப்படி யோசித்துக் கொண்டே, நிகில் பைக்கில் சென்று கொண்டிருந்தான்.
ஆனால், நிகில் யோசிக்காத ஒன்று… அந்த ✖️-ம் யோசிப்பான் என்று!!