நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் -29(ப்ரீ பைனல்)
நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் -29(ப்ரீ பைனல்)
தேவ் அவளை அழுத்தமாய் பார்க்க, அதில் வெறுப்பின் உச்சிக்கே சென்றவள், இரண்டாவது “இவன் மேல் கம்ப்ளைய்ண்ட் கொடுப்பது”என்றாள் ஒரு முடிவோடு.
அதற்கு அவன் எந்த உணர்ச்சிகளையும் காட்டாது நிற்கவே, அதில் அவனை உஷ்ணபார்வை பார்த்து வைத்தவள், மூன்றாவது, இவன் என் வீட்டுல இவனால் காயப்பட்டவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்”என்றாள்.
அசாத்திய அமைதி அங்கே, தன் மௌனத்தை கலைத்த சாரதா, “உன் முடிவை நான் மதிக்கிறேன், அதே சமயம் இதில் நான் எந்த கருத்தும் கூற போவதில்லை.ஒதுங்கிகொள்கிறேன்”
என்று சாரதா அதிரடியாய் அறிவிக்க. அவரது கைகளை பற்றிக்கொண்டவள்.
“நான் கிளம்புறேன் சாரதாம்மா”என்றாள் தழுதழுத்த குரலில், அவரும் சற்றே உணர்ச்சி வசப்பட்டவராக “சென்று வா, உனக்கு இங்கொரு தாய் இருக்கிறாள் , அதை மட்டும் மறந்து விடாதே”என்றார் அவளிடம்.
“சரி”என்று கிளம்பியவளை தடுத்தது தேவ்வின் “நில்லு ஆத்மி”என்ற அதிகார அழைப்பு.
“இப்போ என்ன? அதான் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேனே, மறுபடியும் சொல்லிட்டு இருக்க முடியாது, நான் உன் ஜெயில்ல இருந்து வெளியே வந்து ரொம்ப நேரம் ஆச்சு”என்றாள்.
“நீ இன்னும் முழுமையா வெளியே போகலை, போகவும் முடியாது”என்றான் அந்த அழுத்தக்காரன். ஆத்மியின் பீபீ ஹை ஸ்பீடில் ஏற
“என்ன உளறுர நீ?”என்றாள் ஆத்மி காரமாக.
“யூ ஆர் மை வைப் ஆபிஷியலி…, வீ ரெஜிஸ்டர்ட் அவர் மேரேஜ் இன் கவர்மென்ட்”என்றான்.
“சோ, வாட் அந்த திருமணமே ஒரு போலி, மிரட்டி தானே என்னை கல்யாணம் பண்ணின”என்றாள் ஆத்மி ரத்தமென சிவந்துபோனவளாக.
“நம்ம மெரேஜ் எல்லா சேனலிலும் வந்துச்சு, அவங்க எடுத்த பேட்டில நீயே ஒத்துக்கிட்ட, அது போக நான் எவ்ளோ கொடுமைக்காரன்னு நீ சொன்னாலும் ஒன் இயர் நம்ம சேர்ந்து இருந்துதான் ஆகனும், அப்போ தான் நம்ம பிரிய முடியும்”என்றான் அவளுக்கு புரியவைக்க.
“என்ன நிம்மதியா விடக்கூடாது அதானே உன் எண்ணம், உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? என் மேலே தப்பு இல்லாதப்பவும் என்னை பாடாய்ப்படுத்தின, இப்போ தப்பு இல்லைன்னு சொல்லியும் இப்படி டார்ச்சர் பண்ணீட்டு இருக்க, ஏன்டா என் உயிரை எடுக்கிற”என்று அவள் கத்த.
“ஆத்மி இருடா, தேவ் இது நல்லா இல்ல,அவளை போக விடு, நீ பண்றது ரொம்ப தப்பு, அந்த பொண்ணுக்கு நீ இதுவரைக்கும் பண்ணினதே போதும்,”என்றார் சாரதா.
“ம்மா, ப்ளீஸ் இது எனக்கும் அவளுக்குமான பேச்சு, நீங்க தானே சொன்னீங்க இதுல தலையிடலைன்னு, அதை மெயின்டெயின் பண்ணுங்க இவ கிட்ட நான் பேசிக்கிறேன்”என்று தேவ் திடமாக கூற.
“என்ன பேசணும்? எதுக்கு பேசணும்? எனக்கு உன்கூட பேச வேண்டாம், நீ சொல்றதை கேட்கவேண்டாம், ஐ ஜஸ்ட் வான்ட் டூ லீவ்…”என்று அவள் ஆற்றாமையில் வெடிக்க.
“அதுக்கு நானும் சம்மதிக்கணும், நான் நினைக்காம எதுவும் நடக்காது”என்றான் தேவ் அவளை பார்த்தப்படி.
ஆத்திரத்தில் அங்கிருந்த குவளை கீழே போட்டுடைத்தவள் “டேய்,ஏன்டா இப்படி சித்திரவதை பண்ற, பேசாம மொத்தமா என்னை கொன்னுடு… உன் கூட இருக்கிறதுக்கு நான் சாகிறதே மேல்”என்று அவள் கதற.
சாரதா மற்றும் தேவ் இருவரும் ஒரே நேரத்தில் “ஆத்மி”என்று கத்தியிருந்தனர்.
“டேய், உன் அம்மாவா இதை நான் சொல்லலை, ஒரு பொண்ணா சொல்றேன், அவளை விட்டுடு டா, அவ வேதனையை என்னால பார்க்க முடியலை…”என்றார்.
“சரி, விட்டுறேன், ஒரு வருடத்திற்கு அப்புறம்”என்றான்.
அவனை அனைவரும் வெட்டவா குத்தவா என்று பார்க்க, அதை தூசி போல் தள்ளியவன், “விவாகரத்து இரண்டு பேரும் சம்மதிச்சாத்தான் கொடுப்பாங்க, அதோட நமக்கு மேரேஜ் ஆகி ஒன் மன்த் கூட ஆகலை, நீ ஒரு வருடம் என் கூட இரு, ஒரு வருடத்திற்கு பின் உனக்கு விவாகரத்து தந்துறேன்”என்றான் தேவ்.
“எதுக்கு இருக்கணும், அப்படி ஒரு வருசம் இருந்தா மட்டும் என்ன மாற போகுது? இழந்ததை உன்னால கொடுக்க முடியுமா? இல்லை என் மனசை மாத்த ட்ரை பண்ணுவியா, இல்ல ஹராஸ் பண்ணுவியா? எதுக்காக இருக்கணும்?”என்று இவள் கேட்டுவிட தேவின் மனது காயப்பட்டது, அவள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்பதும் புரிய தன்னை தனக்கே பிடிக்கவில்லை.
“நான் உன்னை உன் அனுமதியில்லாம எதுவும் பண்ணமாட்டேன், என்னை நம்பு”என்றான் தேவ்.
“நம்பிக்கை “ஏளனமாய் உதட்டை சுளித்தவள்,” உன் மேல எனக்கு என்னைக்குமே நம்பிக்கையும் வராது, மதிப்பும் வராது, இறக்கமும் வராது, தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணாத”என்று உரைத்தவள், “என்னால உன் கூட இருக்க முடியாது”என்றாள் திட்டவட்டமாக.
“அப்போ என்னாலையும் உன்னை அனுப்பமுடியாது…”என்றான் திட்டவட்டமாக.
போர் முனையில் இரு அரசர்களும் மோதி கொள்ள தயாராய் நிற்பது போல் இருவரும் சிலிர்த்துக்கொண்டு நிற்க.
இருவரில் யாருடைய பிடிவாதம் ஜெயிக்கும்…?
**********
சிறிது நேரம் நன்றாக யோசித்த ஆத்மி, ஒரு முடிவு எடுத்தவளாக “சரி, ஒருவருடம் உன்னோட இருந்து தொலைக்கிறேன்”என்றாள் ஆத்மி ஆத்திரத்தோடு.
“தட்ஸ் குட்”என்றான் தேவ் அதில் கடுப்பானவள்.
“இன்னும் நான் முடிக்கலை, உன் வாயாலையே, என்னை உன்னை விட்டு போ ன்னு சொல்ல வைக்கிறேன், இனிமே தான் இந்த ஆத்மி ஓட ஆட்டத்தை நீ பார்க்க போற, உன்னை விடமாட்டேன்…”என்றாள் அக்னி பார்வையோடு.
“ஆல் தி பெஸ்ட்”என்றான் தேவ்.
“இனிமே இங்க மட்டும் தான் நான் இருப்பேன், வேற எங்கையும் வரமாட்டேன், எனக்கு தனியா ஒரு ரூம் வேண்டும், என் முன்னாடி வர்றதை நீ குறைச்சுக்கோ”என்று கூறியவள்.பின் நிறுத்தி “எக்காரணத்தை கொண்டும், இந்த வருடம் அப்புறம் என்னை நீ தொந்தரவு செய்ய கூடாது,என் வாழ்க்கையில் நுழைய கூடாது,என்று உரைத்தாள்.
“சரி”என்றவன் சென்று விட்டான்.
‘இவனை எதிர்த்து வெளியே நம்ம போனாலும் இவன் நம்மளை கண்டிப்பா டார்ச்சர் பண்ணுவான், ஒரு வருஷம் எப்படியாவது தாக்குபிடிச்சுட்டா, அவனே அனுப்பிவைக்கிறேன் சொல்றான், அது தான் நல்லது, இவனை எதிர்த்து நம்மால எதுவும் பண்ணமுடியாதுங்கிறது ஆணித்தரமான உண்மை, அவனது வழியில் செல்வதே இவளுக்கு சிறந்ததாய் பட்டதால் இந்த முடிவு, அத்தோடு அவன் தனக்கு செய்ததிற்கு திருப்பி அடிக்க கிடைத்த வாய்ப்பாய் இதை அவள் நினைத்தாள்’.
வெளியே சென்ற தேவ் திரும்ப வருகையில் சூட் கேஸூடன் வர, அதுவே உரைத்தது அவனும் இனி அவனுடைய மில்கி வாழும் வீட்டில் இருப்பான் என்று.
அரண்மனை போல் பெரிய வீடு இருக்க அதை விட்டுவிட்டு வாடகை வீட்டில் குடி பெயர்ந்த கூத்தும் அங்கே நடந்தது.
***********
‘தேவ் ஒரு அறையை தேர்வு செய்து அதில் தஞ்சம் புகுந்துக்கொண்டான், ‘என் காதலை உன்னிடத்தில் நான் உரைக்கபோவதில்லை, அதை உனக்கு உணர்த்தபோகிறேன்’என்று அவனது மனம் முடிவெடுத்துக்கொண்டது.
‘இந்த நேரத்தில் அவளிடம் அவன் காதலை உரைப்பது அவனக்கு சரியாக படவில்லை “உன் தவறை மறைப்பதற்காக இப்பொழுது காதல்னு ஒரு பெயர் அதுக்கு சூட்ட போகிறாயா?”என்று அவள் கேட்டுவிட்டால் அதை தாங்கிக்கொள்ள அவனது மனதில் இடம் இல்லை.
உண்மையில் அன்று அவன், ஆத்மி என்ற பொண்ணை மிரட்ட மட்டுமே சென்றான், அவள் மேலும் அவள் தகப்பன் மேலும் கொலைவெறியுடன் சென்றவன், அங்கு தன் மில்கியை சந்தித்ததில் உடனடியாக போட்டதிட்டமே, அவளை கவர்ந்தது.
உண்மையில் அவன்தான் தன் சொந்த முயற்சியில் ஆத்மியை கொல்கத்தாவிற்கு பணி மாற்றியது, அந்த வேலையை முடித்ததும் ஒரு வேலை விஷயமாக வெளி ஊர் சென்றிருந்தவன் அவனை பற்றிய செய்தி ஒளிப்பரப்பாகவும் அவசரமாய் வந்திருந்தான், அவனுடைய மில்கி எங்கு தங்கியிருக்கிறாள் என்பதை அவன் அறியான் அவனுடைய தாயின் நிலைமை, எல்லாம் அவனை யோசிக்கவிடவில்லை உடனே அந்த வீட்டை அடைந்தவன் அங்கு அவனது மில்கியை எதிர்ப்பார்க்கவில்லை.
வெளியூரிலிருந்து வந்து அவளிடம் அழகாக ப்ரோபோஸ் செய்ய திட்டமிட்டிருந்தவனின் கனவோ பலிக்கவேயில்லை…இடையில் இந்த நியூஸ் வந்து அவனது வாழ்க்கையையும் அல்லவா புரட்டிவிட்டது.
நடந்ததை நினைத்து பெருமூச்சு விட்டவனாக, இனி தன் காதலியிடம் அவள் தரும் அடி, கடி என்று எதுவாய் இருந்தாலும் வாங்க தயாராகிவிட்டான்…
**********
மறுநாள் காலை வெளியே சென்றவன் திரும்ப வருகையில் கிட்டியுடன் வீட்டை அடைந்தான்.
கிட்டியை கண்டவள், தன் கண்களையே நம்பாது, ஓடி செல்ல அதுவும் இவளிடம் பாய்ந்தது, கண்களில் கண்ணீரோடு அதை தழுவிக்கொண்டாள் ஆத்மி, முன்பை விட நன்றாக இருந்தது கிட்டி, அதன் தோற்றமே அதன் வளர்ப்பை பற்றி உரைத்தது.எனினும் இது எப்படி சாத்தியம் என்று அவளது மனது கேட்டது?
அவளது கேள்வியையும், சந்தேகத்தையும் புரிந்துக்கொண்டவன், “நீ சந்தேகப்பட வேண்டாம் இது உன் கிட்டியேதான், இதை நான் ஒன்றும் செய்யவில்லை, அன்று கொடுத்தது சினிமா சூட்டிங்கிற்காக உபயோகிக்கப்படும் பேக் பூனை, கிட்டி மாதிரியே ஒன்று பண்ண சொல்லி உன்னிடம் கொடுத்தேன்”என்றான்.
அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது, இத்தனை நாள் கிட்டியை நினைத்து எப்படி அழுதிருப்பாள், வேதனை கொண்டிருப்பாள்? இப்பொழுது வந்து அசால்ட்டாய் சொல்கிறான் என்று கடுப்பானாள் ஆத்மி.
“நானும் உன்னை கஷ்டப்படுத்தணும்னு எல்லாம் செய்வேன், ஆனால் உன் பிடித்தங்களை அழிக்க நான் நினைத்ததே இல்லை”என்றான் உட்பொருளோடு.
கை நீட்டி அவனை தடுத்தவள், “நான் உன் கிட்ட எதுவும் கேட்கலை ஆளை விடு”என்று கிட்டியோடு சென்றிருந்தாள்.
(அதன் பின் நடந்ததே ஆத்மியின் பழி வாங்கும் படலம், அவளுக்கு இரு வேலை இருந்தது, ஒன்று பழி வாங்குதல் இன்னொன்று அவனை தன்னை வெறுக்க செய்தல் இதற்காக அவள் மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டாள்)
*************
இன்றைய நாள்,
அன்று அவளை போக விடாமல் தடுத்தவன் இருவரும் சொல்லியும் மறுத்தவன் இன்று போ என்கிறான்.
ஆத்மிக்கோ ‘இவன் நினைத்து நினைத்து பேசுவான் நான் கேட்கணுமோ’என்று நினைத்தாள்.
தேவ்வின் மனநிலையோ, ‘ஆத்மி தன்னை தானே வருத்திக்கொள்கிறாள், அவள் தன்னால் நிறைய காயப்பட்டுவிட்டாள், இப்பொழுது தனக்காக காயப்படுகிறாள், அவளது இயல்பான குணத்தை இழந்துவிட்டாள், சந்தோஷத்தை இழந்துவிட்டாள், தன்னை விட்டு போவது தான் அவளுக்கு மகிழ்ச்சியென்றால் அதை கொடுக்க இவன் தயார்’.
‘ஆம், இவனேதான் அன்று அவளை இருக்கசொன்னான், அவளுக்கு எப்படியாவது புரியவைத்து விடலாம், தன் காதலை உணர்த்தலாம் என்று இவன் நினைத்தான், அது சுயநலமான முடிவும் கூட, இன்னொன்று அவளின் காயத்திற்கு மருந்து போடவும் நினைத்தான்.
ஆனால் அவளோ அவளது காயங்களை மேலும் மேலும் ஆழபாய் கீறிக்கொள்கிறாள், அதனால் போ என்றான், இப்பொழுது முடியாது என்று விட்டாள், இனி என்ன செய்ய.பேசாமல் தான் போய் விடுவது என்று முடிவெடுத்தவன், அமெரிக்க செல்ல முடிவெடுத்துவிட்டான்.
ஆம், அதற்கான வேலைகளில் துரிதமாய் செயல்ப்பட்டவன், ஒரு வாரத்திலேயே எப்படியோ செல்ல கிளம்பிவிட்டான்.
தான் சொல்வதில் யாரும் மகிழ போவதுமில்லை, அழுக போவதுமில்லை என்பதை அறிந்தவன் பொதுவாக “செல்கிறேன்”என்று அறிவித்துவிட்டு திரும்பியும் பாராது சென்று விட்டான்…
ஆயிற்று அவன் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது இன்றோடு.
ஆத்மி அவன் சென்ற பின்பு சந்தோஷமாய் இருந்தாளா? நிச்சயமாக இல்லை… எதையோ இழந்தது போல் தான் இருந்தாள், எனில், ‘நான் அவனை தேடுகிறேன்னா’என்று அவள் பதற.
அவளை இம்சிக்க பிறந்தவனோ இம்சை அரசனாய் அமெரிக்காவில் ஆத்மியின் கனவுக்காக உழைத்துக்கொண்டிருந்தான்.
_தொடரும்_…