பூவை வண்டு கொள்ளையடித்தால்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 28
எங்கும் இருட்டு தான். விஷ்ணுவால் தனது கைகால்களைக் கூட அசைக்க முடியவில்லை. அவற்றை எல்லாம் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. காப்பாற்றுங்கள் என்று கூட அவளால் கத்தி அழைக்க முடியவில்லை, வாயும் கட்டப்பட்டிருந்தது. எங்கு இருக்கிறோம் என்பதைக் கூட அவளால் அறிய முடியவில்லை கண்களும் கட்டப்பட்டிருந்தது.
கண்கள் கட்டப்பட்டிருப்பதால் அவளோ இருட்டறையில் இருப்பதாக எண்ணிக்கொண்டாள். கண்ணீரும் கரித்துக் கொண்டு வந்தது. வியர்வையில் அவள் முகம் முழுதும் நனைந்திருந்தது. ‘நான் யாருக்கும் என்ன தீங்கும செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்னை ஏன்டா கடத்துனீங்க? அடேய்! பரதேசி பக்கிங்களா, என்னைய வாய் விட்டுக் கூட புலம்ப முடியாம கட்டிப் போட்டிருக்கீங்களேடா… தடியனுகளா எங்கடா இருக்கீங்க? என்ன இடம் டா இது? யாரிடா நீங்க?’ எண்ணிக்கொண்டவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது…
அந்தப் பேட் இமாஜினருக்குச் சொல்லவா வேண்டும். தனது கற்பனைகுதிரையைத் தட்டிவிட, அதுக்கு உள்ளுக்குள் எக்குத்தப்பாக ஓட்டம் எடுத்தது.
‘ என்னை வேற ஊருக்கு விக்கப் போரானுங்களா? என்னை வச்சு மயூரனை மிரட்டிப் பணம் பறிக்கப் போரானுங்களா? இல்ல என் இதயம், கிட்னி, சட்னி எல்லாத்தையும் எடுத்து விக்கப் போரானுங்களா? ஐயோ என்னைய தனியாகப் பொலம்ப விட்டானுங்களே! தடி மாடுகளா இருக்கீங்களாடா? ஒருத்தனும் பேசமாட்டிகிறானே! ஒரு வேல காதையும் கட்டிருப்பானுங்களோ? இறைவா என்னை எப்படியாவது காப்பாத்து, என் கூட திரிஞ்சுட்டு இருந்த அந்த மயூரனுக்கு மொட்டை போடுறேன். என்னைக் காப்பாதுப்பா…” தன்னைக் காக்க வேண்டுதலை வைத்தாள் விஷ்ணு..
சிறையில், நிசாப், சின்னாவிடம் ” மயூரனோட மனைவியைக் கடத்து. அவளைத் தேடி அவன் அலைஞ்சு ஒவ்வொரு நொடியும் அவளுக்கு என்னாச்சுன்னு நெனச்சு நெனச்சு நொந்துச் சாகணும். ஷப்னா மாதிரி அவளையும் நம்ம பசங்கள விட்டு கற்பழிக்கச் சொல்லு. மயூரன், அவளைப் பார்த்து கதறி அழுது, அவளை விடு விடுன்னு சொல்லிக் கெஞ்சனும். அதுவும் என்கிட்ட அவன் கெஞ்சனும். அப்ப தான் நான் அவனை கொல்லனும்.. அவன் கண்ணுல வேதனையைப் பார்த்ததுக்கு அப்புறமா தான் நான் அவனை கொல்லுவேன். இங்க இருந்து நான் தப்பிக்க உதவிச் செய். நான் வெளிய வரணும் சீக்கிரமா ஏற்பாடுப் பண்ணு…” என்றான் அடிப்பட்ட வஞ்சகம் பிடித்த நரிப் போல் திட்டம் போட்டான்.
அவன் சொன்னது போலவே, சின்னாவின் ஆட்கள் மயூரனைத் தொடர்ந்தார்கள்.மயூரனும் விஷ்ணுவும் அந்தப் பெரிய ஹோட்டலுக்குள் நுழைவதைக் கண்காணித்தனர். பின் அவன் மட்டும் செல்வதைக் கண்டவர்கள். விஷ்ணு வெளியே வருவதற்காகக் காத்திருந்தனர். பலராமனும் விஷ்ணுவும் வெளிய வர, அவர்களைத் தொடர்ந்துக் கொண்டே தன்னுடைய ஆட்களை வரவழைத்தனர்.
அந்தச் சாலையில் இருவரும் நடக்க, எதிரே மகிழுந்தில் வந்தவர்கள் அவளருகில் நிறுத்தி, அவளை உள்ளே இழுத்து உள்ளே போட்டு விட்டுச் சென்றனர்..
மேத்தாவே காரை ஓட்ட, மயூரனோ தன் விழிகளைச் சாளரத்தின் வழியே சுழல விட்டவாறே அவளைத் தேடிக்கொண்டு வந்தான்.. மூளைக்குத் தெரியும் அவளை யாரோ கடத்திருப்பது.. ஆனால் மனமோ அவள் அவர்களிடம் இருந்து தப்பி இவ்வழியாக வரமாட்டாளா என்றே எண்ணித் துடித்துக் கொண்டிருந்து.
“மயூ, கன்ட்ரோல் யூர்செல்ப்… கண்டிப்பா விஷ்ணு நமக்குக் கிடைச்சுருவா. நாம தான் கம்பளைன்ட் கொடுக்கப் போறோமே. விஷ்ணுவைக் கண்டு பிடிச்சுடுவங்க. அவளுக்கு ஒண்ணும் ஆகாது.. நிஷான் சார் எல்லாத்தையும் பார்த்துப்பார். நாமளும் விஷ்ணுவைத் தேடலாம். நீ ரிலாக்ஸ் இரு மயூ..” அவர் சொல்லுவது காதில் விழுந்தாலும் மனதில் எதும் பதியவில்லை. விஷ்ணு.. விஷ்ணு… மட்டுமே அவன் எண்ணத்தில் இருந்தாள்.
‘ கடவுளே அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. அவளை என்கிட்ட திருப்பிக் கொடுத்திடு.. அவளைக் கஷ்டபடித்திடாத கடவுளே! ‘ கண்ணீர் வழியப் பிராத்தனை வைத்தான்..
கமிஷனர் அலுவலகத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தனர்..
“அவர்கள் வந்தத் தகவலை நிஷானிடம் கூற, அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்னான் , அவர்களும் அவன் அறைக்குள் நுழைந்தனர்..
” வாங்க மிஸ்டர். மேத்தா, வாங்க மயூரன்” அவர்களை வரவேற்றவன், இருவரையும் ஆராய, மயூரனின் முகவாட்டத்தைக் கண்டவன் புருவத்தைச் சுருக்கி, ” வாட் ஹாப்பேன் மயூரன், ஏன் ரொம்ப நெர்வஸ் இருக்கீங்க? என்னாச்சு உங்களுக்கு?”எனவும்…
” என் மனைவி விஷ்ணுவைக் கடத்திட்டாங்க. என் மாமனார் கூட வெளியப் போகும் போது அவளைக் கடத்திருக்கங்கா. வண்டி நம்பர் ********.. ப்ளீஸ் சார் எப்படியாவது என் மனைவியைக் கண்டு பிடிச்சுத் தாங்க. அவ என் உயிர் சார்… அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்கிக்க முடியாது … ப்ளீஸ் கண்டு பிடிச்சுக் கொடுங்க சார்…” அவர் முன் கைக் கூப்பிக் கதறினான்..
அவன் அழுததும் பதறி அவன் கையைப் பற்றியவன் ” மயூ, ரிலாக்ஸ்.. சீக்கிரமா உங்க மனைவியைக் நான் கண்டுப் பிடிக்கிறேன். அவங்களைப் பத்திரமா உங்க கிட்ட ஒப்படைகிறது என் பொறுப்பு.. நீங்க தைரியமா இருங்க. உங்க மனைவியோட போட்டோவைக் கொடுத்துட்டுப் போங்க. அவங்க கிடைத்ததும் உங்களுக்குக் கால் பண்றேன் மயூரன்.. ” நம்பிக்கை அளித்தான் நிஷான்.
” நான் உங்களை நம்புறேன் சார்.. கொஞ்சம் சீக்கிரமா கண்டுப் பிடிச்சு கொடுங்க சார்…” அவன் கையை அழுத்திச் சொன்னான்.
” கண்டிப்பா மயூரன்… நீங்க தைரியமா போங்க” அவனை அனுப்பி வைத்தவன்.. சுவாமிநாதனை அழைத்தான். அவரும் அவன் முன் சலூட் அடித்து விட்டு நின்றார்..
” அண்ணா, ஒரு கடத்தல் கேஸ். இந்தப் பொண்ணோட போட்டோவ எல்லா ஸ்டேஷனுக்கும் அனுப்பி வைக்கங்க. கான்ஸ்டபிள்ஸ் விட்டுத் தேட சொல்லுங்க .. செக் போஸ்ட்ல
சொல்லி எல்லாத்தையும் அலர்ட் பண்ண சொல்லுங்க.. அந்தப் பெண்ணுக்கு ஒன்னும் ஆகக் கூடாது. சீக்கிரமா கண்டு பிடுக்கணும் அண்ணா” தனது தொப்பி மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.
இங்கே மயூரனும் தேட ஆரம்பித்தான். விஷ்ணு இன்றி வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று முடிவை எடுத்தவன் யார் அழைப்பையும் ஏற்காது கவனத்ததைச் சாலையில் செலுத்தியவாறே காரை ஓடிட்டான்..
அவனது பயம், பதற்றம் கார் செல்லும் வேகத்தில் தெரிந்தது… நிதானத்தை இழந்தான். கடைசியாக அவள் சிரித்த முகமே கண்ணுக்குள் நின்றது.
இங்கோ நிஷான் ஸ்பாட்டுக்கு வந்தவன். அந்த இடத்தையே சுற்றி சுற்றிப் பார்த்தான். அங்கே சிசிடிவி கேமராவைக் கண்டதும், அண்ணா எனக்கு அந்த வீடியோ புட்டேஜ் வேணும் ” என்றவன் அக்கம் பக்கத்தில் விசாரிக்க, யாரும் முகத்தைப் பார்க்கவே இல்லை என்றனர். அங்கிருந்து கிளம்பினான்..
ஒப்பாரி வைக்காத குறையாக அனைவரும் அழுதுக் கொண்டிருந்தனர். பலராமனை தேற்ற வழித் தெரியவில்லை ராமனுக்கு. முத்துவோ அழுது கரைந்தார் லட்சுமணன் நெஞ்சில் சாய்ந்து..
வைகுண்டத்திற்கும் சகுந்தலாவிற்க்கும் யாரைச் சமாதானம் செய்ய, என்ன பேசுவதென்றே குழப்பத்தில் இருந்தனர்..
மயூரன், முத்து, லட்சுமணனன் மூவரும் தன்னை ஏமாற்றியது பெரும் கோபத்தைத் தந்தாலும், அதனைக் காட்டும் நிலைமையில் அவரும் இல்லை.. பாதிக்கப் பட்ட பலராமனிடம் சண்டைப் போட்டு மேலும் நோக்கடிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தார்…
” முத்து, இப்படியே அழுதுட்டே இருந்தா எப்படி? மயூக்குப் போன் பண்ணி விஷ்ணுவ பத்தி தகவல் தெரிஞ்சுதான்னு கேளு..” தனா கேட்க, ” இல்ல தனா, அவன் போனை எடுக்க மாட்டிக்கிறான். அப்போ இருந்து முயற்சிப் பண்ணிட்டே இருக்கேன் எடுக்க மாற்றான். அவனும் எங்க இருக்கான் தெரியல. ” கண்ணைத் துடைத்தவாறு..
ஒருத்தருக்கொருத்தார் ஆறுதலாக இருந்தனர்.விஷ்ணு கிடைத்திடுவாள் என்ற நம்பிக்கையிலே இருந்தனர்.
வீடியோ புட்டேஜ் கைக்கு வந்ததும் முழுவதையும் ஓட விட்டுப் பார்த்தான். அதில் ஒருவன் அவளை உள்ளே இழுப்பது தெளிவாகத் தெரிந்தது.. அவன் முகத்தைக் கைகுட்டையால் மறைத்திருந்தான். அவள் செய்த ஆர்ப்பாட்டத்தில் கைக்குட்டை அவிழ , அவனை முகம் தெளிவாகத் தெரிந்தது…
” சார், இவன் சின்னாவோட ஆளு. ” அருகில் இருந்த சுவாமிநாதன் கூற” சின்னா யாருண்ணா?”
“அவனும் பெரிய ரவுடி தான் சார்.. நிசாப்வோட பிரின்ட். ஆனா அவன் மும்பையில இல்ல, டெல்லில தான் சார் இருக்கான். இங்க நிசாப் போல அவனும் அங்க. எல்லா தொழிலையும் செய்வான். அவன் எதுக்கு சார் இந்தப் பொண்ணை கடத்தனும்?” அவன் கொண்ட சந்தேகத்தை அவர் வாய்வழியே கேட்க,
“உங்களுக்குப் புரியலையா அண்ணா! நிசாப் உள்ளுக்குள்ள இருந்தே இவனை வைத்து மயூரனைப் பழி வாங்க திட்டம் போட்டுருக்கான். அவனுடைய முதல் டார்கெட் விஷ்ணு ”
வாங்க அண்ணா அந்த நிசாப்பை பார்க்க போலாம்..” சிறையிலிருக்கும் அவனைப் பார்க்கச் சென்றான்…
மயூரன் அலைந்து கலைத்து இல்லம் திரும்பிருந்தான்… அவன் வந்ததும் அவனிடம் வந்த முத்து, வாசலை ஆவலாகப் பார்த்தார்.
“மயூ, எங்கடா விஷ்ணு? நீ மட்டும் வர.. அவ எங்க? என் விஷ்ணு எங்க டா… அவளை ஏன்டா கூட்டிட்டு வரல? அவளோட வராம நீ ஏன் வந்த? போடா போ… அவளோட வா” அவன் சட்டையைப் பிடித்து அழுதவர், அவன் நெஞ்சிலே அடித்தார்.
” முத்து என்ன பண்ற? பாவம் மயூ, அவனே நொந்துப் போயிருக்கான்.. அவனைப்
நோக்கடிக்காத.. மயூ, விஷ்ணுவ பத்தி ஏதாவது தெரிஞ்சதா? போலீஸ் கிட்ட கம்பலைன்ட் கொடுத்தியா பா…”
” கொடுத்துருக்கேன் ப்பா, கண்டுபிடிச்சுருவேன் சொல்லிருக்காங்க.. சீக்கிரமா தேடிக் கண்டுபிடிச்சுடுவாங்க.. விஷ்ணு, நம்மகிட்ட வந்திடுவா..” எனச் சொல்லியவன் யாரிடமும் பேச முடியாமல் தன்னறைக்கு விரைந்தான்..
அவள் இல்லாமல் வெற்று அறையே, அவனை வரவேற்றது… தரையில் மண்டி இட்டு அழுதான்..
” விஷ்ணு… முடியல டி நான் உனக்கு அடிக்ட் ஆயிட்டேன்.. நீ இல்லா இந்த நிமிஷம் சாகமாலே நரகத்தைக் காட்டினது போல இருக்கு டி. கடவுளே என் விஷ்ணுவ என்கிட்ட சேர்த்திடு. எனக்கு வேற எதுவும் வேணாம். ஐ நீட் ஹேர்.ப்ளீஸ் காட் சேவ் ஹேர்…” மனதில் உள்ளதை வெளியே கொட்டிக் கதறி வேண்டுனான். மணமிறங்குமா அக்கடவுள்..
சிறையில் நிசாப்பைக் காண நிஷான் வந்திருந்தான். வார்டன் உள்ளே அனுமதிக்க, அவன் இங்கு வருவான் என்று அறிந்தது தானே.
” என்ன சாப் என்ன பார்க்க வந்துருக்கீங்க? என் ஞாபகம் இப்ப தான் வந்துச்சா? போங்க சாப் உங்களை எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா? நீங்க லேட்டா வந்துருக்கிங்கலே! ” அவன் பேச்சில் இனி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற வெற்றிக் களிப்பு இருந்தது..
” எப்பயும் போலீஸ் லேட்டா தானே வரும் நிசாப்… லேட்டா வந்தாலும் பாஸ்ட் எங்க வேலைய முடிஞ்சுடுவோம்” என்றதும் கேலியாக சிரிக்க, ” விஷ்ணு எங்க நிசாப்? அந்தப் பொண்ணை எங்க மறைச்சு வச்சுருக்க? பதில் சொல்லு” குரலில் கடுமையைக் காட்டினான்..
” சார், ஒரு பொண்ணு கேஸ்ல தானே என்னைத் தூக்கி உள்ள வச்சிருக்கீங்க.. இப்ப என்ன இன்னொரு பொண்ணைக் காணோம் சொல்லுறீங்க? மும்பையில எந்தப் பொண்ணு காணாம போனாலும் நான் தான் காரணம்ன்னு சொல்லுவீங்க போல.. எனக்கு அந்தப் பொண்ணு யாருனே தெரியாது சாப்…” அமர்த்தலாகக் கூறினான்.
கடுப்பானான் நிஷான்,” என் பொறுமைய சோதிக்காத உண்மை சொல்லு… அந்தப் பொண்ணை எங்க கடத்தி வைக்க சொல்லிருக்க! அந்தச் சின்னா எங்க கடத்தி வச்சுருக்கான்?” என்றதும் சின்னாவின் பெயரைச் சொன்னதும் கொஞ்சம் பயந்தவன் முகத்தில் காட்டிக் கொள்ளாது நின்றான்..
” யாரு சின்னா எனக்கு அப்படியாரும் தெரியாது? “நடுங்கும் குரலில்.
” அவனை நான் பார்க்கவே இல்லேன்னு சொல்லிருந்தா கூட நம்பி இருப்பேன். ஆனா, அவனை யாருன்னு தெரியாது சொல்லும் போதே நீ தான் அவனைக் கடத்த சொல்லிருக்க கான்போர்ம் ஆயிருச்சு. உண்மையா சொல்லு எங்க வச்சிருக்க அந்தப் பொண்ணை? ” சற்று குரலை உயர்த்த… அதிர்ந்தான் நிசாப். “சா..சாப்..என.. எனக்கு எது.. எதுவும் தெறி தெறியாது” வார்த்தைகளை மென்று முழுங்கினான்..
” அவன் பதில் சொல்ற வரைக்கும் அவனுக்குச் சாப்பாடு, குடிக்கத் தண்ணீர் எதுவும் கொடுக்காதீங்க, பதிலை வரவழைக்க என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுங்க ” அவன் கூறிவிட்டுச் செல்ல அவன் அலறும் சத்தம் காதில் விழுந்தது.
‘எங்கு இருக்கிறோம்? எதற்கு என்னைக் கடத்தினார்கள்? யார் அவர்கள்? ‘ என பலமுறை மூளை இடம் கேட்க, பதிலன்றி போனது. சோர்ந்து தான் போனாள். யரோ வரும ஆர்வம் கேட்க, எச்சில் விழுங்கி அச்சம் கொண்டு அமர்ந்து இருந்தாள்…
கொள்ளை தொடரும்
.