பூவை வண்டு கொள்ளையடித்தால்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 29
காலடிச் சத்தம் அதிகம் கேட்க, தன்னை யாரோ நெருங்குவதை அறிந்துக் கொண்டாள் விஷ்ணு.
சத்தம் அதிகரிக்க, நெஞ்சாங் கூட்டில் இருக்கும் இதயம் வேகமாகத் துடித்தது.
‘யாரா இருக்கும்? ஃபாண்டு ஷர்ட்டும் போட்ட எமனா இருப்பானோ? விஷ்ணு, மீசைக்காரர் என்னக்கி உனக்குக் கருமாதி பண்ணாரோ, அன்னையிலிருந்தே உனக்கு நேரமே சரியில்ல… எந்த நேரத்துல உன்னையே தல முழுகுனாரோ! விஷ்ணு இப்படி அல்பாய்ஸ்ல போகப் போறியே!
கடவுளே உனக்குக் கண்ணு இல்லையா? இங்க அனாவசியமா ஒரு நல்ல உயிர் போகப் போதே காப்பாத்த மாட்டியா? ” யோவ், விநாயகா, எதுக்குயா தும்பிக்கை வச்சிருக்க? அத வச்சு என்னை காப்பாத்துயா.யோவ் வேலா, உன் வேல வச்சு காப்பாத்துயா? சுதர்சன சக்கரம், திரிசூலம், அரிவாள், ஈட்டி வெப்போன்ஸ் வச்சு இந்த பிளடி இடியட்ஸ் கிட்ட இருந்து காப்பாத்துங்கயா… ஐயோ யாருன்னு தெரில கிட்ட வர்றானே. என்னை என்ன பண்ண போறானோ! அடேய் மயூரா, உன்னைத் தான் ஹீரோ சொல்லிட்டு இருக்கானுங்க வந்து காப்பாத்து டா… ‘பயத்தில் புலம்பித் தவித்தாள்.
கண்ணில் கட்டி இருந்த துணியினை அவிழ்க்க, மங்கலாகத் தெரிந்தது.. கண்ணைத் திறந்து திறந்து மூடியவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது..
அவள் முன்னே ஒருவன் நின்றிருக்க, தோள் பட்டை வரை முடி வளர்ந்து இருந்தது, வாய் முழுவதும் பற்கள் கரைப்படிந்து இருந்தது.. பீடாவை மென்று கொண்டிருந்தான். தனது தாடியைத் தடவியவாறு அவளை அளவெடுக்க, அவளோ முகத்தைத் சுளித்தாள்.
” சின்னா, டெல்லி சின்னா…” என்றான்.
‘ சிப்பான்ஸி மாதிரி இருந்துட்டு, சின்னாவாம்.. நீ சின்னதா இரு , இல்ல பெருசா இரு, ஆனா, என்னை விட்டுரு டா… மீ பாவம் நார்மல் கேர்ள் ஃபரம் தமிழ் நாடு ‘ அத்தருவாயிலும் அவ்வாறு புலம்பிக் கொண்டு இருந்தாள் விஷ்ணு.
பக்கத்தில் இருப்பவனிடம் கண்ணைக் காட்ட, அவளைக் கட்டிப் போட்டிற்கும் கயிறை எல்லாம் அவிழ்த்தான்.
அவன் கட்டை அவிழ்க்க, இரும்பியவள் மூச்சு வாங்கினாள். அவள் முன் அமர்ந்தவன்…. ” உன் புருஷனைப் பழிவாங்க தான் உன்னைக் கடத்திருக்கோம். எதுக்கு உன் புருஷன் தேவை இல்லாம எங்களைப் போல ரவுடி கிட்ட மோதணும்.. பாரு, இதுனால உனக்கு தான் கஷ்டம்.. புருஷன் கிட்ட இதெல்லாம் சொல்ல மாட்டியா? அடுத்தவங்க பிரச்சனையில நீ ஏன் தலையிடுறன்னு கேட்க மாட்டியா? ” அவன் ஹிந்தி மொழியில் பேச, பாவை அவளுக்கோ பாஷை புரியவே இல்லை… ஹிந்தி படம் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்…
அவன் முகத்தில் பயம் பின் சென்று, அவன் என்ன பேசுகிறான் தெரிந்து கொள்ள, முகத்தில் ஆர்வத்தைக் காட்ட, அதைக் கண்டவன். முக வாட்டம் மாறியது..
” என்ன? “
” ஹிந்தி பேச தெரிஞ்ச உனக்கு யார்கிட்ட பேசணும் தெரியலையே ராசா…” என்றாள்.
” என்ன? ”
” என்னய்யா கியா க்யா கத்துற? எனக்கு ஹிந்தி தெரியாது யா” என்றாள் அழுப்பாக,
“ஓ… தமிழ் நாடூ….” எனவும் தலையை அசைத்தாள். எல்லாரும் சிரிக்க,
” கொன்னியால, தமிழ்நாடு அவ்வளவு கேவலமாடா உங்களுக்கு.. நான் மட்டும் நல்ல கண்டிஷன்ல இருந்தா, இந்நேரம், உங்க எழும்ப எண்ணிருப்பேன்..” என்றாள் கோபமாக..
மீண்டும் அவன் ” என்ன?” எனக் கூறி சிரிக்க, ” முடிவச்ச கொரில்லாவே, என்னைக் கடத்தி வச்சு, கரையான் பல் காட்டி உசுர வாங்குறானே! ” அவனைக் கண்டு பயம் இல்லாம இல்லை… இருந்தும் அவன் முன் அப்பயத்தை மறைத்தாள்.
அவன் மறுபடியும் கண்ணைக் காட்ட, மற்றவர்கள், அனைவரும் வெளியே சென்றனர்.
அவர்கள் அனைவரும் செல்வதைக் கண்டவளுக்கு, பயபந்து உருள ஆரம்பித்தது.. அவர்கள் கதவைத் தாழிட்டு செல்ல, பயபந்து எகிற ஆரம்பித்தது.
” உன்னைக் பார்க்கிற வரைக்கும் நண்பனுக்கு விசுவாசமா இருக்கணும் நெனச்சேன்.. ஆனா உன்னைப் பாரத்ததும் அந்த எண்ணம் போச்சு… எங்க ஊர் பொண்ணுங்க போல நீ இல்ல… நீ வேற மாதிரி… நீ எனக்கு வேணும்..” அவளிடம் பேசிக்கொண்டே நெருங்கி அவள் கைப் பிடிக்க, “சீ…” வெடுக்கென்று கையை இழுத்தாள்..
அவன் பேசுவது புரியாமல் போனாலும்… காமம் கொண்ட ஆண்களின் பார்வை, எண்ணம், தொடுகையை அப்பட்டமாக அந்தச் சிப்பான்ஸி முகத்தில் வழிந்தது.
“சீ யா…” தன் ஒற்றை விரலை ஆட்டியவன்.” என்கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது…” அவளைத் துரத்த. அவன் கையில் சிக்காமல் ஓடினாள் அறைக்குள்ளே. அந்த அறையில் இன்னொரு கதவிருக்க, அதைத் திறந்துக் கொண்டு வெளியே வர… அங்கு இருப்பவர்களைக் கண்டு அதிர்ந்தாள் விஷ்ணு.
இங்க மயூரன், அழுதுக் கொண்டிருந்தான்… அவனது அலைபேசி ஒலிக்க, வேகமாக எடுத்து பார்க்க நிஷான் தான்.. அதை இணைத்து காதில் வைத்தவனுக்கு ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, ‘ அவர் வாயால், விஷ்ணு கிடைத்து விட்டாள் என்று சொல்லிட மாட்டாரா ‘என்ற ஏக்கத்தோடு காதில் வைத்தவன், ” ஹலோ, சொல்லுங்க நிஷான் விஷ்ணு கிடைச்சுட்டாளா?” அவனது கேள்வியில் அத்தனை ஆவல் இருந்தது.
” மயூரன், ரிலாக்ஸா இருங்க.. நான் சொல்லுறத பொறுமையா கேளுங்க. விஷ்ணு இன்னமும் கிடைக்கல, நாங்க தேடிட்டு தான் இருக்கோம். ஆனா, விஷ்ணுவ கடத்தினது யாருன்னு கண்டு பிடிச்சுட்டோம். அவனைத் தான் தேடுறோம்.” அவன் நடந்தவற்றை முழுதாய் கூறினான்.
” சார், எனக்கு ஒரு ஐடியா தோணுது சொல்லுட்டுமா? ” எனவும், ” சொல்லுங்க மயூரன்… ”
” நீங்க ஏன் நிசாப்பை தப்பிக்க விடக் கூடாது…” என்றதும் ” வாட்? என்ன சொல்லுறீங்க மயூரன்? அவனைத் தப்பிக்க விட்டா, விஷ்ணு வா எப்படி காப்பாத்த முடியும்? ”
” சார் எனக்கு அவன் உண்மையைச் சொல்லுவான் நம்பிக்கை இல்லை.என்னைப் பழிவாங்கணும் முடிவு பண்ணிட்டான்.. அவன் சிறையில் இருந்தாலும் என்னைப் பழிவாங்குவான். தன்னுடைய நண்பனை வைத்தே காரியம் நிறைவேத்தணும் நினைக்கிறவன், பதில் சொல்லவே மாட்டான். தன்னால முடியாமா போனாலும். காரியத்தை நடத்தனும் முடிவு பண்ணவன் எவ்வளவு அடிச்சாலும் சொல்ல மாட்டான்.. அப்படியே சொன்னாலும் யூஸ்லெஸ் சார்.. அதுக்குள்ள அவன் பிளான் எஸ்க்யூட் ஆயிருக்கும் சார்.. அவனைத் தப்பிக்க விட்டு அவனைப் போலோவ் பண்ணுவோம். எப்படியும் தன் நண்பனை தேடித்தான் போவான். அப்ப அவனை நாம கூண்டோடு பிடிக்கலாம் சார்.. ”
” சரி மயூரன், சப்பொஸ் அவன், சின்னாவைத் தேடிப் போகாம, வேற எங்கயாவது போன்னா என்ன பண்றது மயூரன்?” தனது சந்தேகத்தை முன் வைத்தான்..
” சார், கண்டிப்பா அவன் அவனைத் தேடி தான் போகணும்.. இப்ப அவனுக்குச் சின்னாவைத் தவிர வேற ஆதரவு இல்லை நான் கெஸ் பண்றேன் சார். அப்படியே அவன் எங்க போறான் ட்ராக் பண்ணலாம் சார்.. அவனைப் போலோவ் பண்ணுவோம் சப்பொஸ் அவன் சின்னாவைத் தேடிப் போனா, நமக்கு ஈசி தானே சார். அப்றம் காமத்திபுரா தான், அவங்க ஏரியா அங்க சின்னா இருக்க வாய்ப்பிருக்கும் அங்க உங்க ஆட்களை அனுப்பித் தேட சொல்லுங்க சார்.. எப்படியும் நீங்க செக் போஸ்ட் அலர்ட் பண்ணிருப்பிங்க, மும்பை விட்டு வெளியே போக வாய்ப்பில்லை.. எனக்கு காமத்திபுரால தான் இருப்பாங்க தோணுது சார்..” தனது ரிப்போர்ட்டர் மூளையை வைத்து யோசித்து சொல்ல, நிஷானுக்கும் அது சரியென பட,
” ஓ.கே மிஸ்டர் மயூரன், நீங்க சொன்னது போலவே செய்றேன். எங்க ஆட்களை அனுப்புறேன்… நிஷாப் போலோவ் பண்ண சொல்லுறேன்.. கண்டிப்பா மோர்னிங்குள்ள நாங்க விஷ்ணுவ கண்டுபிடிச்சிடுவோம் மயூரன்..” என்றான்.
” சார், நானும் உங்க கூட வரேன் சார். என்னால் இங்க இருக்க முடியல.. உங்க கூட வந்து தேடுறேன் ப்ளீஸ் சார்… ” அவன் துடிப்பு, நிஷானுக்குப் புரியாமல் இல்லை… கொஞ்சம் யோசித்தவன்., ” வாங்க , மயூரன்…” போனை வைத்தான்..
அவனும் யாரிடமும் சொல்லாமல்… வேகமாக வெளியே சென்றான்…
இங்கோ, அதிர்ந்து நின்றவளுக்கு என்ன இடம் என்றே புரிந்தது… அது ஒரு விடுதி போன்று இருந்தது.. அரைகுறை ஆடை அணிந்து தன்னை அலங்காரம் செய்து கொண்டு அங்கும் இங்குமாகப் பெண்கள் உலாவ, அது ஒரு விபச்சாரத் தொழில் செய்யும் இடமாக இருந்தது.
எங்கும் பெண்களாகவே இருக்க, அவள் ஓடிவருவதைப் எல்லாரும் பார்த்து நின்றனர்… அங்கே இருக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் கெஞ்சினாள்… பெண் என்றால் பேய் இறங்குமாம்… பெண்ணுக்காகப் பெண் இறங்க கூடாதா? இங்கு பல பெண்கள் வாழ்க்கையைத் தொலைத்து வயிற்று பிழைப்புக்காக, வாழ்க்கையே அடகு வைத்து வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலரைத் தவிர்தே, குடும்ப சூழ்நிலையிலையே இத்தொழிலிக்கு வரக் காரணம்.
அவள் ஒவ்வொரு பெண்ணிடமும் கெஞ்சினாள்… யாருக்கும் அவளது பாஷை புரியவே இல்ல… அவளது கதறலைக் காண , மனம் கரைந்தாலும் எதையும் செய்ய முடியாமல் நின்றனர்..
“என்னை, அவன் கிட்ட இருந்து காப்பாத்துங்க அக்கா, அம்மா. ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க,..” ஒவ்வொரு பெண்ணிடம் சென்று அழுதாள்..
அங்கு வந்த சின்னாவோ கோரமாய் சிரித்தான். ” இங்க இருக்கிறவளுகளா உன்னை காப்பாத்த போறாளுக, அவளுங்களாலே அவளுகள காப்பாத்திக்க தெரியாது.. உன்னைத் காப்பாத்த போராளுகளா? கேலிப் பேசியவாறே அவளது முடியைப் பற்றியவாறு இழுத்தான்..
காவல் அதிகாரிகள் கொடுத்த அடியில், இரத்தம் வழிந்து மயங்கி இருந்தான் நிசாப்.
ஒரு அதிகாரி உள்ளே வந்து, அவன் முகத்தில் தண்ணீரை ஊற்றினான். அடித்து பிடித்து எழுந்தான்.. அவன் முகத்தில் அவன் அணிந்த துணியை எறிந்தான்.
அவனை சந்தேகமாகப் பார்க்க, ” சின்னா, தான் சொன்னான். இங்க இருந்து தப்பிச்சு போ.” அவனை அங்கிருந்து செல்ல உதவினான்.. அவனும் அதை நம்பி, அங்கிருந்து தப்பி, மயூரன் சொல்லுவது போலவே சின்னாவைத் தேடி தான் சென்றான்.
அவனைத் தொடர்ந்து, இருவரும் சென்றனர்.. அங்கு அதிகாரிகள் மஃப்டியில் காமத்திப்புராவில் சின்னாவைத் தேடினார்கள்.
இங்கோ அவளை இழுக்க, ஒரு பெண் விஷ்ணுவின் கையைப் பற்றினாள். அங்கிருபவர்கள் அனைவரும் பயந்தனர். சின்னாவும் நின்றான்.
அந்தப் பெண், அவளை இழுக்க, அவள் புறம் வந்து சேர்ந்தாள்.
” ஹேய், என்ன பண்ற நீ? விடு அவளை… ” விஷ்ணுவின் கையைப் பற்ற வர, அவனைத் தள்ளி விட கீழே விழுந்தான்.
” நாம தான் இந்தச் சேத்துக்குள்ள கெடக்குறோம் இந்தப் பொண்ணும் விழுகணுமா? நாம இந்த நிலைமையில் இருக்க காரணம் இவன மாதிரி ஆட்கள்னால தான். போதும் இந்தப் பொண்ணும் இந்தப் பாழுங்கிணத்துல விழுக
வேணாம். இவன்கிட்ட இருந்து இந்தப் பொண்ண காப்பாத்துவோம்.” அவர்களுக்குப் புரியும் படி கத்தினார்..
தெரிந்ததும் தெரியாமலும் இந்தச் சேற்றில் விழுந்து கிடைந்தவர்களுக்கு மட்டுமே அந்த நாற்றமும், வலியும் தெரியும். அந்தச் சேற்றின் வ(லி)ழியில் பிறந்த தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைக் கிடைக்க, இந்தச் சேற்றில் ஊரியே உயிர் இழந்தோர் பலர்… நோய்வாய் பட்டு இறந்தோர் பலர் இருக்க,மேலும் கண்ணெதிரே ஒரு பெண்ணின் வாழ்வு அழிய போவதைப் பார்த்து நிற்க, அவர்கள் ஒன்றும் கல்லால் ஆனா கடவுள் இல்லை… மனம் கொண்ட மனிதம் கொண்ட மனுசி.. அவனோடு சேர்ந்து அவனது அடி ஆட்களையும் அடி வெளுத்து விட்டனர்..
உடல் வலிமையை விட, மன வலிமையை அதிகம் கொண்டவர்கள் தான் பெண்கள், மன வலிமைக் கொண்டவர்களுக்கு, எந்த வலியும் தூசு தான்.. அவர்களைத் துவம்சம் செய்தனர்.
அங்கிருந்த பெண் ஒருவள், போலீஸ்க்கு தகவல் அளிக்க, அவர்களோ அந்த விடுதியை வளைத்தனர்… தகவல், நிஷானின் காதில் எட்ட, அதை மயூரனிடம் பகிர்ந்தான். தொலைந்தது போன உயிர் தன்னை அடைய போகும் உவகையில் திழைத்தான்.
சட்டென, நிஷாப்பைக் காவல் அதிகாரியிடம் அவனைக் கைது செய்யும்மாறு உத்தரவு விட்டான்..
அங்கு வந்து சேர்ந்தனர், இருவரும் ” விஷ்ணு” என மயூரனின் அழைப்பில், நடப்பிற்கு வந்தாள். அவர்களும் சுயநலமாக இருந்திருந்தால் என் நிலமை எண்ணியவளுக்கு, பட்டென ஞாபகம் வந்தது வினோதினி அக்கா, விபச்சாரம் செய்பவள்.. ஆனா யாருக்காவது எது என்றாலும் முன் வந்து நிற்பாள்.. அவளைப் பார்த்தாலே தீட்டு என்பார்கள் ஆண்கள் உட்பட, ஆனா இரவில் மட்டும் ஆண்களுக்கு சுகமளிக்கும் தேவதை.
அவளைக் கண்டதும் இவளும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போவாள்.. சில நேரம், அவளை நோகும் படி பேசிவிட்டு செல்வாள்.. ஆனாலும் சிரித்த முகத்துடன் செல்வாள் அவள்… ஊருக்கு அத்தனை உதவிகளைச் செய்வாள். அவள் ஞாபகம் வந்தது வெட்கிப் போனாள். தானும் ஒரு
மற்றவர்களைப் போல் நடந்துக் கொண்டேன்..
ஆனா, இவர்கள் இல்லை என்றால், என் உடல் மனித மிருகத்திற்கு இரையாகி என் உயிர் காற்றோடு கரைந்து போயிருக்கும்…
“விஷ்ணு…” அவன் அருகில் வந்து அணைத்தும் உயிர்ப்புடன் வந்தாள்.. அவனை மேலும் இறுக்கி அவனுள் புதைந்தாள்.. அவள் பயப்படுகிறாள் என அவளின் உடல் நடுக்கத்தை வைத்தே கணித்தான்…
” விஷ்ணு ஒண்ணுமில்லை, நான் இருக்கேன்… டோன்ட் பனிக்” அவள் முதுகை ஆதுரத்துடன் தேய்த்தான்..
” மயூரன், நீங்க அவங்கள கூட்டிட்டு கார்ல வெய்ட் பண்ணுங்க, நாங்க வந்துறோம்… “என்றவன் தன் வேலையைக் கவனிக்கலனான்..
அவளை வெளியே, அழைத்து மகிழுந்தில் அமரச் சொன்னான். அவள் பயத்தில் அவனை விடாது கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். பசுவை அகலாத கன்று போல அவனை விட்டு அகலாது, அவனையும் செல்ல விடாமல் பிடித்த வைத்துக் கொண்டாள்.. அவனும் அவளின் இசைவுக்கு இணைத்தான்..
” விஷ்ணு மா உனக்கு ஒண்ணில, நான் உன் கூட இருக்கேன் பயப்படாத.. ” அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான், அவளை அந்த நிகழ்விலிருந்து மீட்டெடுக்கும் பணியினைச் செய்தான்.. நிஷானும் அங்கு வர, அவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்..
கொஞ்சம் தூரம் செல்லவே,சிறிது சிறிதாய் பயம் மட்டுபட்டது… ” விஷ்ணு, உங்களை அவன் கொடுமை செய்தானா? ” அங்கு அவளுக்கு எதுவும் நடந்ததா இலைமறைக்காயாகக் கேட்டான்.
அவளும் அங்கு நடந்ததைச் சொன்னதும் இருவருக்குள்ளும் சிறு பயம் அகன்றது.
” விஷ்ணு, ரொம்ப பயந்தியா? நாங்க வர்லேன என்ன பண்ணி இருப்ப?” அவனிடத்தில் கேலி எட்டிப்பார்க்க, ” நாலாம் பயப்படலே, மீசைக்காரர் கிட்ட இருந்தே தப்பிச்சுட்டேன். இவன் என்ன சுண்டக்க பயன், நீ வந்ததால தப்பிச்சான் இல்லேன்னா என் கையலே செத்துருப்பான்.. ” பயம் தெளிந்த விஷ்ணுவாய் ஆனாள்..
” சார், இவ்வளவு தைரியமான பொண்ணைத் தான் விடிய விடிய தேட சொன்னிங்களா, சின்னாவைப் பிடிச்சு கொடுத்துட்டு, அவங்க என் வேலையை ஈசி ஆக்கிருப்பாங்க சார்,” நிஷான், அவளை வம்பிழுக்க, ” சார் , நான் தான் கொஞ்சம் பயந்துடேன். வாசுதேவ் கிருஷ்ணன் பேத்தி தெரிஞ்சும் நான் கொஞ்சம் அவசர பட்டேன்.. நாம தூங்கி எழுந்து. காலையில வந்திருக்கணும் சார் இந்த நைட் வேஸ்ட் பண்ணிட்டோம்…” உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கூற, அதை நினைத்து பார்க்க மீண்டும் விக்கித்துப் போனாள்.
“கொய்யால, நைட் வேஸ்ட் பண்ணிட்டியா, நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? நீங்க மட்டும் வரல அந்தச் சிப்பானஸி குரங்குக்கு நையிட் டின்னர் ஆகிருப்பேன்…” என அழுக, அடக்க முடியாமல் அவன் சிரிக்க, அவனை வெறித்தவள், அடிக்க ஆரம்பித்தாள்… அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்..