பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 35

 

ஆட்கள் அங்கும் இங்கும் நடந்து செல்வதும் கதவைத் திறந்து உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர் அந்தக் குளம்பிக் கடையில்.

பெரும் இரைச்சல் இருந்தாலும், அந்த மூவரின் இடத்தில் பெரும் அமைதியே. மனதிற்குள் ஆர்ப்பறிக்கும் துன்பக் கடல் பௌர்ணமி நாளைப் போல் பொங்கிச் சீற்றம் கொண்டது  இருந்தது..

விஷ்ணுவின் விழிகளில் நீர், கசிந்து இருந்தது.. துடைக்க மனமில்லை  என் வாழ்கை நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்று பேச்சளவு சொல்லிக்கொள்ள முடியுமே தவிர, நாம் பிறந்த முதல் நாளிலிருந்தே சமூகத்துதோடு இணைந்து விட்டோம். தனக்காக ஒவ்வொன்றையும் செய்ய, எண்ணினாலும் சமூகத்தை நினைக்காமல் இல்லை. சமூகத்தைச் சாரா வாழ்வுமில்லை.

ஒருவன் தவறு செய்யும் போது திருத்தாத இந்தச் சமூகம் அவன் திருந்தி வாழும் போதுதான் அவனது குற்றங்களைப் பேசி வாழ விடுவதே இல்லை.

அதுவே போதுமே சமூகத்தில் நாம்  எவ்வாறு ஊறி போயிருக்கின்றோம் என்று.
எத்தனை முறை ஊர்காரர்களோடு சேர்ந்து பரிகாசித்து இருக்கிறாள். ஆனால் ஒரு நாளும் அவளைத் திருத்த முயலவில்லை..

பெண் ஒரு சுகம் அளிக்கும் போதை, ஆண்களைப் பொறுத்தவரை.. அவை எடுத்துக்க கொள்ளும் அளவினைப் பொறுத்தே நல்லதும் கெட்டதும் ஆகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற வகையில் நல்லது.. அதிகம் என்றால் கேடு தான். அமிர்தமும் நஞ்சே  அளவுக்கு மீறினால்.

அப்படி அளவுக்கு மீறி அமிர்தத்தை சுவைக்கு  உண்டாலும் சொரணை இன்றி அதைப் பரிகாசமும் செய்கிறார்கள்..
தேவைப் படும் போது அமிர்தம்.. வேண்டாம் என்றால் நஞ்சு என்பது போல தான் விஷ்ணுவின் ஊரில் வாழ்ந்த வினோதினியையும் எண்ணினார்கள்.

அவளை வேண்டா வெறுப்பாக பார்த்த சில அவ்வூர் ஆண்கள், இரவில் மட்டும் ஆராதணைச் செய்தனர்.. பெண்களும் அவளைப் பெண்ணாகப் பார்ப்பதே இல்லை..ஒருவர் கூட மணமிறங்கி அவள் வாழ்க்கையைச் சீராக்கவில்லை. இதுவே நம் சமூகம்.

அச்சமூகத்தில் ஒருவளானா விஷ்ணு, வினோதினியைப் புளுவாய் பார்த்த நாட்களும் உண்டு.. அன்று , அவளைப் போல வாழும் பெண்கள் தான் விஷ்ணுவிற்குக் கடவுள் ஆனார்கள்.

அன்று தான் அவள் அகக்கண்ணும் திறந்தது.. வினோதினியிடம் மன்னிப்புக் கேட்க எண்ணினாள். அதற்கு இன்றே சந்தர்ப்பம் அமைந்தது போல் ஆனது..

 அக்கேடு கேட்ட தொழிலைச் செய்ய உடலும் மனமும் ஒத்துழைக்க வில்லை வினோதினிக்கு.. மனம் வந்து விட்டாலும் சூழ் நிலை நிந்தித்தது… பசிக் கொடுமை  வாட்டியது.. அவ்வூர்காரர்கள் யாரும் அவளுக்கு வேலைத் தரமாட்டார்கள்.. என்பதால் மதுரைக்கு வந்தாள்.

அங்கு ஒரு ஹோட்டலில் பாத்திரம் தேய்த்து தன் வயிற்றுக்குத் தீனிப் போட்டாள்..அவளை நிம்மதியாக வாழவில்லை அவளது பழைய வாழ்க்கை..

அந்த ஹோட்டல் மேனஜர் அவளைப் பற்றித் தெரிந்துக் கொண்டு, அவளை அதற்க்காக அழைத்தான்.

அவள் மறுத்துவிட, முதலில் ஆசைக் காட்டினான் அதற்கும் அவள் மசியவில்லை.. பின் மிரட்டினான் அதற்கும் அவள் அஞ்சவில்லை.. கோபம் கொண்டவன், அவள்
 மேல் திருட்டுப் பழியைச் சுமத்தி வெளியே அனுப்ப திட்டம் போட்டவன் அவள் பர்சில் பணத்தைக் வைத்து ‘திருடி’என்று சொல்லி அடித்துத் துரத்தும் போது தான் விஷ்ணு வந்து வினோதினியை இழுத்து அவனைத் தள்ளி விட்டுத் திரும்பும் போது தான்..  விஷ்ணு வினோதினியைக் கண்டாள்.

” அக்கா… நீங்களா? நீங்க இங்க என்ன பண்றீங்க?” அதிர்ச்சி மாறாமல்  கேட்டாள்.

” விஷ்ணுமா.. நான் யார் பணத்தையும் திருடல. இவங்க நான் திருட்டிட்டேன் என்னை அடிக்கிறாங்க மா. நான்… நான் திருடல, யாரும் என்னை நம்ப மாட்டிக்கிறாங்க…” என்று கதறினாள்.

” அக்கா , நீங்க பயப்படாதீங்க. நான் இருக்கேன் … ” என்று ஆறுதல் உரைத்து திரும்பவும் அங்கு மயூவும் வந்தான்.

” இவங்க தான் திருடினாங்க உங்களுக்கு எப்படி தெரியும்? ” 

” அவ பர்சில், தான் அவ்வளவு பணம் இருந்துச்சே போதாதா…”  கீழே விழுந்தவன் எழுந்தவாறு சொன்னான்.

விஷ்ணு பேச முற்பட, அவளைத் தடுத்தவன், ” நீங்க தான் ஹோட்டலோட முதலாளியா? ” எனவும்.

”  இல்லை… நான் இங்க மேனஜராக வேலைப்பார்க்கிறேன். இவர் தான் ஓனர்..”என்றான்.

அந்த ஹோட்டல் முதலாளியின் பக்கம் திரும்பியவன், ” அவங்க திருடுனதை நீங்க நேர்ல பார்த்தீங்களா? ” என்றதும் இல்லை என்று மறுத்தார்..

“இது போல திருட்டு இதுக்கு முன்னாடி நடந்திருக்கா?” மீண்டும் இல்லை என்றார்.. ” அப்றம்  எப்படி அவங்க தான் திருடினாங்கன்னு சொன்னீங்க? “…
உடனே அந்த மேனேஜர் முந்திக்கொண்டு, ” அவ, பர்சில தான் அந்தப் பணம் இருந்தது…” என்றவன் அவன் முறைப்பில் கப்சிப் என்று ஆனான்.

நீங்க சொல்லுங்க என்பது போல முதலாளியைப் பார்க்க, அவரோ, ” பணம் காணாம போயிருச்சின்னு இவன் கிட்ட சொன்னேன். இவன் தான்   எல்லாரையும் செக் பண்ணனும் சொல்லி, எல்லாரையும் வரச் சொல்லி செக் பண்ணினான். அப்படி செக் பண்ணும் போது இந்தப் பொண்ணு பர்சில தான் பணம் இருந்துச்சு” என்றார்.

” எல்லாரையும் செக் பண்ணிங்களா? இல்ல இவங்கள மட்டும் செக் பண்ணிங்களா? ” என்றதும்

” இல்ல, இவன் தான் செக் பண்றேன் சொன்னான். முதல் இந்தப் பொண்ணைத் தான் செக் பண்ணினோம். பணம், அவ கிட்ட தான் இருந்தது. ” என்று முடித்தார்.

” அப்ப, வேற யாரையும் செக் பண்ணல.. இவங்க கிட்ட பணம் இருந்ததுனால இவங்க தான் திருடின்னு ஒத்துகிட்டீங்க. பணம் காணாம போனதும் ஏன் போலீஸ் கூப்பிடல?”

” ஹலோ, யாரு நீங்க? என்ன போலீஸ் மாதிரி கேள்விக் கேட்டு இருக்கீங்க? இவ தான் திருட்டிருக்கா, அவளை விட்டுட்டு எங்க கிட்ட கேள்விக் கேட்டுட்டு இருக்கீங்க? ” என அவன் எகிறி வரவும், ப்ளார் என்று அறைந்தான்.

“நான்  ஒரு ரிப்போர்ட்டர், நான் கேட்பேன்.. அமைதியா இரு… இல்ல போலீஸ கூப்பிடுவேன்..” அவன் வாயை அடைக்க, முதலாளியும் பயந்து போனார்..

” சார், இவன் தான் போலீஸ் கிட்ட போனால், நம்ம கடைப் பெயர் கெட்டுப் போயிடும். நானே இத பார்க்கிறேன் சொன்னான். எனக்கும் அதான் சரின்னு பட்டுச்சு, நான் எதுவும் சொல்லல “என்றார்.

” நீங்க தான் எடுத்தீங்களா இந்தப் பணத்தை? “

” இல்ல, நான் எடுக்கல… இவன் என் பழய கதையைத் தெரிஞ்சு கிட்டு, என்னை வா ன்னு கூப்பிட்டான். நான்… மறுத்துட்டேன். அதுனால் என் மேல திருட்டுப் பழியைப் போட்டு வெளிய அனுப்ப பார்க்கிறான்” என திக்கி திணறி உண்மையைக் கூறி அழுதாள்… இப்போது மீண்டும் இரண்டு அடி விழுந்தது அவன் கன்னத்தில்.

” உங்க கடைசியில சிசிடிவி கேமிரா இருக்கும்ல, அதுல பாருங்க யாரு குற்றவாளின் தெரியும்… நான் போலீஸ கூப்பிடுறேன்.” தனது பேண்ட் பாக்கெட்டில் போனை எடுத்தான். அதைக் கண்டு பயந்தவன், உண்மையை ஒத்துக்கொள்ள, மேலும் கடையில் வேலைச் செய்பவர்கள் அவனை அடித்தனர். அவனை வேலையிலுருந்து நீக்கினார் அந்தக் கடை முதலாளி.

வினோதினியை அழைத்துப் பக்கத்தில் இருக்கும் க்ளினிக்கில்  மருந்துட்டு, அங்கே அருகில் ஒரு குளம்பிக் கடைக்கு மூவரும் வந்தனர்..

வினோதினிக்கு மருந்திடும் நேரத்தில், விஷ்ணு மயூரனுக்கு வினோதினியைப் பற்றிக் கூறியிருந்தாள்..

மூவருக்கும் காபி சொல்லிருக்க, காபிக்காக, காத்திருந்தார்கள்.

வினோதினியின் நடுக்கம் குறையவில்லை, பயத்தில் கைகால்கள் நடுங்க, அதைக் கவனித்த மயூரன்,விஷ்ணுவிடம் கண்ணைக் காட்டினான்.

அதைக் கவனித்த அவளும் வினோத்தினியின் கையைப்பற்றினாள். ” அக்கா, பயப்படாத… இனி உனக்கு நாங்க இருக்கோம். உனக்கு யாருமில்லை நினைக்காத…” என்றவள் அவள் கையை அழுத்த, வினோத்தினியின் பார்வையில் தலை கவிழ்ந்தாள்… இன்று நான் கஷ்டப்பட, நீயும் ஒரு காரணம் என்பது போலவே இருந்தது.

” என்னை மன்னிச்சுடுங்க அக்கா, நானும் உங்களை நிறைய தடவை அவமானம் படுத்திருக்கேன்… உங்க வலி , வேதனை சமூகத்தோட பார்வை எதைப் பத்தியும் யோசிக்காம, நானும் அந்தச் சமூகத்தில் ஓரு ஆளா, இருந்து உங்களைத் தவறா நடத்திருக்கேன்… ஆனா, அது தப்புன்னு செருப்பாளா அடிச்ச மாதிரி புரிய வச்சுட்டாங்க…. ” அவள் நடந்ததைக் கூறினாள் விஷ்ணு… அவள் கூறியத்தைக் கேட்டு பதறினாள்..

” விஷ்ணுமா, நீ என்னை புரிஞ்சுகிட்டதே போதும் … உன்மேல எந்த தப்பும் இல்லை, நான் பண்ண வேலை அப்படித்தான். அழுக்கா ஊறி இருந்த என்னை, எப்படி சுத்தமானவன்னு சொல்லுவாங்க சொல்லு…  அதுனால உன்மேல எனக்கு கோபம் இல்ல, என் என்னைப் பழிச்சொல் சொன்னவங்க மேலயும் கோபம் இல்லை… ஆனா, நான் திருந்தனும் நினைக்கும் போது தான், பழையதைப் சொல்லிக்காட்டுறாங்க  அது தான் வேதனையா இருக்கு.. அதுனால தான் இங்க வந்தேன்.. ஆனா,.. இங்கயும் நிம்மதியா இருக்க விடுறது இல்லை…” என்றழுத்தாள்.

இப்போது அவள் கையைப் பற்றியது மயூரன் தான்… ” அக்கா, நான் உங்க ஆறுதலுக்காகச் சொல்லுறேன் நினைக்காதீங்க. ஆனால் இதன் உண்மை இந்தச்  சமூகத்துக்குப் பேச மட்டும் தான் தெரியும். நம்முடைய உணர்ச்சியோ,கஷ்டத்தையோ கேட்க, உணர, காதுகளும், உணர்ச்சிகளும் இல்லை.. அப்படி பேசுறவங்க, கிட்ட நாமளும் அப்படியே இருக்கிறதுல தவறும் இல்லை…
புரிஞ்சுகோங்கா அக்கா, இது உங்க வாழ்க்கையை நீங்க தான் வாழணும், இதையெல்லாம் போட்டு குழப்பிக்காதீங்க… நாளைக்கு இந்த அட்ட்ரஸ்ல இருக்க இடத்துக்கு வாங்க, உங்களுக்கு நான் வேலை வாங்கித் தரேன். அப்றம் இந்தாங்க இதை இந்த மாதம் செலவுக்கு வச்சுக்கோங்க …” கையில் பணத்தை வைத்தான்..

” ஐயோ, தம்பி… நீங்க வேலை வாங்கி தரேன் சொன்னதே பெரிய விஷயம். எனக்கு அதுவே போதும். இதெல்லாம் வேணாம் நான் சமாளிச்சுகிறேன்..” என்றாள் வணங்கிவாறு..

அதைக் கண்டு முறுவலித்தவன், ” உங்க தம்பி கிட்ட வாங்க மாட்டீங்களா? ” எனவும் அவள் விஷ்ணுவைப் பார்க்க, கண்ணை அசைத்து வாங்கச் சொன்னாள். அவளும் பணத்தை வாங்கிக்க, விஷ்ணுவின் கண்கள் மயூவின் மேல் நிலைக்கு குத்தி இருந்தது.

” ரொம்ப நன்றி தம்பி, கடவுள் போல நீங்க வந்திங்க… இல்லேன்னா என்னை நானே நிரூபிக்க முடியாமல், எல்லார் முன்னாடியும் திருடியா நின்றிருப்பேன். ஆமா,விஷ்ணு தம்பி யாரு? ” என்றதும்

‘ப்ரண்ட் ‘ என அவளும், ‘ஹஸ்பெண்ட்’ என அவனும் கூற,இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்ள,.. வினோதினி, அவர்களை விசித்திரமாய் பார்த்தாள்.

“புருசன்னா? ” என விழிக்க, ” இல்லை… இல்லை… இவன் என்…” அவள் இழுக்க, அதற்குள் அவன், ” இப்ப லவ்வர்… அப்றம் புருஷன். என்ன விஷ்ணு?” என்றதும், அவன் காலை ‘நங்’ என்றம் மிதித்தாள்.. ” ஷ்….” என சத்தம் போடாமல் அவளை முறைத்தான்.

” அக்கா, இவன் என் அத்தை பையன், மும்பையில் இருந்து எங்க பக்கத்து வீட்டுல தங்கிருக்கான் அவ்வளவு தான். நாம இன்னோரு நாள் தனியா பேசலாம் இங்க கொஞ்சம் டிஸ்டுர்பன்ஸ் அதிகமா இருக்கு…. நீங்க எங்க போகணும் அக்கா, நான் வேணா ட்ராப் பண்ணவா? ” அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கேட்டாள்…

அவன் முறைப்பையும் பொருட்படுத்தாது, உதட்டின்  விளிம்பில், சிரிப்பை அடைக்கி, வினோதினியைப் பார்த்தாள்… அவளோ. குழம்பிப் போய் இருந்தாள்..

” இல்ல விஷ்ணு, நானே போய்கிறேன்… நீங்க பார்த்து போங்க…” என்று அவள் கிளம்ப, அவர்களும் கிளம்பினார்கள்..

வினோதினி சென்றதை உறுதிப் படுத்தியவள். அவன் முதுகில் ஒண்ணு வைத்தாள்..

” ஸ்ஸ்….. ஆஆஆ… ஏன்டி அடிச்ச? வர வர நீ பொண்டாட்டியா,  இந்த வேலையைக் கரெட்டா பார்க்கிற டி நீ”  முதுகைத் தடவிக் கொண்டு கூறியவனை மேலும் முறைத்தவள்

” ஏன் அடிச்சேனா, உனக்கு அறிவு இருக்கா? அவங்க கிட்ட உன்னை என் புருஷன் சொல்லுற… அவங்க,  அப்படி தானே நம்ம இரண்டு பேரையும் நினைப்பாங்க…” அவன் முன் இடையில்  கைவைத்து கேட்க,

” நான் கட்டுன தாலி உன் கழுத்துல இருக்கிற வரைக்கும் நீ என் பொண்டாட்டி தானடி… அதைத் தான் அவங்க கிட்ட சொன்னேன்… அதுல என்ன தப்பு இருக்கு?”
அவனும் அவளைப் போல இடையில் கையை வைத்துக் கொண்டு கூறினான்..

” ஒரு தாலியை வைச்சு எத்தனை ரீஸின்னுக்குடா யூஸ் பண்ணுவீங்க? “

” நீ என் கிட்ட மயூ மாமா,நான் உங்களைத் தான் காதலிக்கிறேன் சொல்லுற வரைக்கும்… அந்த தாலி தான் எங்களுக்குக் கிடைச்ச பகடை. யூஸ் பண்ணிட்டே தான் இருப்போம் இந்தக் கேம் ஓவராகிற வரைக்கும் ” என்றான்..

அவனை முறைக்க கண்கள் அவளுக்குப் போதவில்லை,நல்ல வேலை மூன்றாம் கண்ணை மனிதர்களுக்குப் படைக்கவில்லை… அது  மட்டும் இருந்திருந்தால் இநேரம் அவன் பஸ்பம் தான்…

” ஓகே ஓகே கூல் கூல்…  கொஞ்சம்  மலை இறங்கு தாயே… முடியல ரொம்ப ஹிட்டா இருக்கு…” என்றான் கேலியாக,

அவள் வண்டியில் அமர, அவனும் பின்னே அமர்ந்தான்… இருவரும்  வீட்டை அடைந்தனர். பின் தங்களைப் புதிப்பித்துக் கொண்டு சசி கொடுத்த காபியைப் பருகிவாறு நடந்ததைக் கூறினாள். அவர்களோ வினோதினிக்காக வருந்தினார்கள்.

சாரதி அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்… அதனால் அவளும் ஏதேனும் புத்தகத்தை எடுத்துப் படிக்க எண்ணித் தேட, வருணின் நாட்குறிப்பு அவள் கைக்கு கிடைத்தது.. அதை எடுக்குத் கொண்டு
மாடிக்குச் சென்றாள்..

அவனது நாட்குறிப்பின் பக்கங்களைத் திரும்பும்  போதெல்லாம்  கண்ணீர் துளிகள், தாளில் விழுந்து மரியாதைத் தந்தது…

‘ ஏன்டா, என்னை விட்டுட்டுப் போன,  உன்னைக் கட்டிட்டுச் சந்தோசமா வாழணும், நான் காணாத கனவே இல்லை.. அதெல்லாம் கனவாகட்டும் சாபம் கொடுத்துட்டுப் போயிட்டியே டா! நீ செத்து நிம்மதியாகிட்ட, ஆனா, நான் உன்னை மறக்கவும் முடியாமல், மயூரனை ஏத்துக்கவும் முடியாமல் கஷ்டபடுறேன். இரண்டு மனசா இருந்துக் கொல்லுதுடா என்னை.

நான் நானா இல்லை… எனக்கு ஒரு வழி சொல்லு வருண்… என்னை வழிநடத்துடா… என்னால முடியல, நானும் உன்கூட வந்திடவா?” மார்போடு அந்த நாட்குறிப்பை அணைத்து கண்ணீர் வடித்தாள்..

சசியிடம் கேட்டு விஷ்ணுவைத் தேடி  மாடிக்கு வந்தான்… அங்கே அவள் அந்த நாட்குறிப்பை அணைத்து அழுவதை எண்ணி ஒரு புறம் கோபமும் மறு புறம் வலியும் ஒரு சேர வந்தது அவனுக்கு.

அவள் அருகில் வந்து அமர்ந்தான்… ” விஷ்ணு….” அவளைத் தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான்..

” என்னால வருணை மறக்க முடியல மயூ, ” என்பவளை எதுவும் சொல்ல முடிய வில்லை…. “ஆனா, நீ மறந்து தான் ஆகணும் விஷ்ணு… நான் எனக்காக சொல்லல, உனக்காக தான் சொல்லுறேன்..

அவனையும்  நினைச்ச என்னையும் நினைச்சு உன்னை நீயே இழந்துட்டு இருக்க,  நான் சொல்லுறத்தைக் கேளு… வருண் நினைப்பில இருந்து உன்னை விடுவித்துக் கொள்ளு… என்னால  உன்னை வருண் போல  இழக்க முடியாது. ப்ளீஸ்… விஷ்ணு.  ” என்றான்..

அவள் அவன் முகத்தைப் பார்க்க,” வருணுக்கு நான் வாக்குக் கொடுத்துருக்கேன் தான் . ஆனா அதுக்கு முன்னாடியே உன்னைக் காதலிச்சவன் டி நான். எனக்கும் பீலிங்ஸ் இருக்கு… நீ என்னை ஏத்துக்கணும்,நாம் சேர்ந்து வாழணும், உன்  கூட சண்டை போடணும், அப்றம் உன்னை அணைச்சு சமாதானம் பண்ணனும். திட்டு வாங்கணும்,  இன்னும் இன்னும் நிறைய கனவுகள் ஆசைகள் இருக்கு.  உன்னைப் பார்க்கிற ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு ஆசை,  எனக்குள் தோணுது. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லணும்.ஆனா, நீ  வருணை நான் இன்னும் மறக்கலன்னு சொல்ற. அப்படி நீ சொல்லும் போது, நாலு அறை  அறைஞ்சு நீ  என்னைத் தான் காதலிக்கணும் சொல்லணும் தோணுது. ஆனா… அப்படி செஞ்சா, நான் ஆம்பளையே இல்ல… ஆனாலும் ஒரு தலைக் காதலனா வேண்டி நிக்கிறேன் என் காதலைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு… செத்த ஒருவனை நினைச்சுட்டே உன்னை நினைச்சுட்டு இருக்கிற என்னை சாகடிக்கிற விஷ்ணு நீ” தன் மனதில் உள்ளதைக் கொட்டி விட்டுச் சென்றுவிட்டான் கோபமாக..

 

Leave a Reply

error: Content is protected !!