பூவை வண்டு கொள்ளையடித்தால்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 40
சாய்வு நாற்காலியில் ஒற்றைக் காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை நாற்காலியில் வைத்து அழுத்தி முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தார் வாசுதேவ்கிருஷ்ணன்.. அவரது பாதங்கள், அந்த வேலையைச் செய்ய, மூளையோ மயூரனை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது.
பெரிய மனுசனாய், முன்னின்று இருக் குடும்பத்திடமும் பேசி , அவர்களின் கோரிக்கையை எல்லாம் விசாரித்து, நல்ல முடிவினைக் கூறிச் சமாதானம் செய்து வைத்திருக்க வேண்டும் . ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், கெளரவம் தான் முக்கியம் என்று. தன் பேத்தியின் நலனைக் கூடக் கருதாமல், அவளைச் சாடி விட்டுச் சென்றார்..
ஆனால் மயூரன், அப்படிச் செய்யவில்லை… இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும், மகாவின் நிலையையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றெண்ணியே செயல் பட்டவன், அதில் வெற்றியும் கண்டான்.
மயூரனின் இச்செயல், அவனை உயர்த்திக் காட்ட, வாசுவின் செயலோ, அவரைத் தாழ்த்திக் காட்டியது.
குடும்பம் மொத்தமும் இன்று அவனைத் தான் காணச் சென்றிருக்கிறது.
” யாரவன்? என் கெளரவத்தைக் கொன்று சென்ற, என் மகளின் மகன்… எதற்காக அவன் இப்படிச் செய்ய வேண்டும். மீண்டும் இந்தக் குடும்பத்தோடு இணையத்தான் இச்செயலோ.
இல்லை, வேறெதற்காக, இப்படியெல்லாம் செய்து, எல்லாரையும் அவன் புறம் சாய வைக்கிறான்… இன்று என்னை மதிக்காமல், ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் அவனைப் பார்க்கச் சென்று விட்டனர்.
என் வார்த்தைக்கு மறுவார்த்தைப் பேசாத, என் மகன்களும் பேரனும், இன்று எதிர்த்து நிக்கிறார்கள். ஒரு வார்த்தை, தன்னை அழைக்காது… அவன் தான் முக்கியம் என்று சென்று விட்டார்கள்.
இவர்கள் மத்தியில், தன் கெளரமும் மரியாதையும் சிதைந்து விட்டதை எண்ணி வேதனைக் கொண்டவர். மேலும் கோபம் கொண்டார். இதற்கு முதல் காரணம் பலராமனும், மயுரனும் தான்… தன் தவரை, உணராமல். அவர்கள் மேல் சிறுபிள்ளைப் போல் பழிச் சுமத்தினார்.
மயூரனின், இச்செயல் அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதும் இல்லாமல், குடும்பத்தின் மத்தியில், தன் மதிப்பை இழந்தும் நிக்கிறார்.. அதற்கு காரணம் மயூரன் தான் எனச் சாடியது அவரது மூளை.
சுந்தரனை மிரட்டி , எழுதி வாங்கிச் சென்ற பின், சுந்தரனை அழைத்து மீண்டும் எச்சரிக்கைச் செய்ய, அவனும் சரோஜாவும் அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தனர் வாசுவின் இல்லத்திற்கு.
அவர்களின் வருகையைக் கண்டு அர்ஜுனும் ஜெயராமனும் கோபம் கொண்டி இருக்க, இன்னும் என்னவெல்லாம் பேசிவிட்டுப் போகப் போகிறார்களோ என்ற கலக்கம் வேறு.
வாசுதேவ் கிருஷ்ணன் முன் சரோஜா அமர்ந்திருக்க, சுந்தரன் நின்றிருந்தான்.
“எனக்கு பேர பிள்ளையே வேணாம் அண்ணா, என் மருமகளே எங்களுக்குப் போதும். என் ரெண்டு பேத்தி, இருக்கையில பேரன் எதுக்கு? அவங்க, ரெண்டு பேரையும் நான் வேலு நாச்சியார் , ராணி மங்கம்மாள் மாதிரி வளர்ப்பேனாக்கும்… நான் இங்க வந்ததே என் மருமகள கூட்டிட்டுப் போகத்தான் அண்ணா .. மருமகளே, போய் சட்டு புட்டுன்னு துணியெல்லாம் எடுத்து வச்சுட்டு என் பேத்திகள, ரெடி பண்ணிக் கூட்டிட்டு வா, நாம, நேரமா கிளம்பணும் ல… என்னடா என் முகத்தைப் பார்க்கிற, ஏதோ கேக்கணும் சொன்னியே கேளு அதை…” என அப்ரூவான கைதியாய் மாறிப்போனார் சரோஜா.
“என்னை மன்னிச்சிடுங்க மாமா, மத்தவங்க பேச்சைக் கேட்டு, மகாவுக்கு கொடுமைச் செய்துட்டேன். சொந்தப் புத்தி இருந்தும், சொல் புத்தியோட நடத்துக்கிட்டேன் . இனி எனக்கு மகா தான் முக்கியம் . ஆண் வாரிசைக் கேட்டு, அவளை டாரசர் செய்ய மாட்டேன்.. எனக்கு மகா, என் குழந்தைங்க போதும். இனி இது போல நடக்காது மாமா. மகா, நீயும் என்னை மன்னிச்சுடு மா. வா நம்ம வீட்டுக்குப் போலாம்..” என்று மெய்யாய் வருந்தி மன்னிப்புக் கேட்டான்.
குடும்பம் மொத்தமும்,அவர்களது இந்த மாற்றதினால் ஸ்தம்பித்து போய் நின்றது.
” சித்தப்பு, என் கைய கிள்ளேன்…” அவனது வலது கரத்தை அவர் புறம் நீட்ட, “ஏன் டா மவனே! கிள்ளச் சொல்லுற? “
” என்னால இதை நம்பமுடியல சித்தப்பு அதான் கனவா, இல்ல நிஜமான்னு கிள்ளச் சொல்லுறேன்…” என்றான் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.
” எனக்கும் அதே சந்தேகம் தான் மவனே…” நறுக்கென்று கிள்ளினார்.. வலித்தாலும் ,அதை தேய்த்துக் கொண்டே, நிஜம் தான் என்று நம்பினான்.
“மேகலா , ஏன் அப்படியே நிக்கிற? போய் மகாவோட துணிமணியேல்லாம் எடுத்து வச்சு அனுப்பி வை டி…” என்றதும் அவருக்குத் தலைக்கால் புரியவில்லை, மகாவை அழைத்துக்குக் கொண்டு. அறைக்குச் சென்றார்..
” மாப்ள மனசு மாறினதே பெரிய விஷயம்… இனி அவர் மனசு கோணாத படி நடந்துக்கோ.. அவர் பேச்சை மீறாமல் நடத்துக்கோ…” என்று முதல் முறையாக தன் மகள் புகுந்த வீட்டுக்குப் போவதாய் எண்ணி அறிவுரை வழங்கினார்..
” மா, நீ திருந்தவே மாட்டீயா? இப்படி அட்வைஸ் பண்றதுக்கு அவர் சொல்லுறத்தைப் போல பிள்ளை பெத்து செத்து போடினு சொல்லிருக்கலாம். ஏன் மா இன்னும் புருஷன் பேச்சைக் கேளு மனசு கோணாத படி நடன்னு சொல்லிட்டே இருக்க? இப்படி சொல்லிச்சொல்லித் தான் புருஷங்காரன் எவ்வளவு தப்பு பண்ணாலும், அதைச் சரின்னு சொல்லிட்டுப் போற பொண்டாட்டியா பொண்ணுங்கள மாத்துறீங்க..
இங்க பாரு மகா, இனி புருஷன் எது பண்ணாலும் அழுதுட்டு , தலையாட்டிட்டு போயிடலாம் நினைச்சிடாத, அதே போல, அப்பா இருக்கார், தம்பி இருக்கான்.. அழுதுட்டு வீட்டுக்கும் வராதா, சண்டைப் போடு, தப்ப சுட்டிக்காட்டு, எதிர்த்து நில்லு… அதுக்காக வீட்டுக்கே வராதன்னு சொல்லல குடும்பத்தோட வா, சந்தோசம் இரு… ஆனா, அங்க பிரச்சனைன்னா, அழுதுட்டு இருக்காத, நீயா பிரச்சினை தீர்க்க பாரு, புரியுதா” அக்காக்கு அறிவுரை வழங்கினான் தம்பிகாரன்.
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்… அவள் நெஞ்சில் சாய, அவனுக்கு ஏதோ போலானது… இத்தனை நாளாகத் தங்கை ,அக்காவின் பாசத்தை அனுபவிக்காமல் போய்விட்டோமே என்ற வருத்தமும் வந்தது.
சாரதி, எப்பொழுதும் மகா, விஷ்ணு, பவ, ஜெயா என அவர்கள் கூடவே இருப்பான்.. அன்பான தம்பியாய், பாசமான தமயனாய் இருப்பான்.. அர்ஜுன் கூட அவனைக் கேலி செய்வான், “ஏன்டா, எப்ப பாரு பொம்பல புள்ள கூடவே சுத்திக்கிட்டு இருக்க? ” என்று. ஆனால் இன்று தான் அவர்களின் அன்பு ,பாசத்தின் அருமைப் புரிந்தது…
” என்னை மன்னிச்சிடு அக்கா, என்னைக்கும் நான் உனக்கு தம்பியா இருந்தது இல்ல, உன் பொண்ணுங்களுக்கு மாமனா நான் இருந்ததே இல்லை, ஆண்ன்னு ஒரு தலைகணத்தில சுத்திட்டு இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா, நான் என்ன இழந்திருக்கேன்னு புரிஞ்சுகிட்டேன்.இனி உனக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் சரியா செய்வேன்.. எப்பயும் சந்தோசமா இருக்கா…” உண்மையை உணர்ந்து மன்னிப்புக்கேட்டான்.. உணர்வு பூர்வமான காட்சியைக் காண, நெகிழிந்து போனார் மேகலா…
அனைவரிடமும் சொல்லிக் கொண்டு மகா, தன் குடும்பத்தோடு சென்று விட்டாள். அந்தக் குடும்பம் மொத்தமும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
” மகனே, திடீர்ன்னு இந்த மாப்பிள்ளை எப்படி மாறினான்? நாம போய் பேசும்போது கூட அப்படி பிகு பண்ணினான். இப்ப என்னடான்னா, மாமா மாமான்னு பம்மிக் கிட்டு வந்து மன்னிப்புக் கேட்டுட்டு போறான்.. என்னடா பண்ணின அவனை? ” அனைவரின் எண்ணத்தில் உதித்த கேள்வியே இது.
” அதுவா சித்தப்பு… எல்லாம் உங்க அக்கா மகன் செஞ்ச வேலை அப்படி..” என்று முடிக்க, அனைவரின் முகமும் ஒரு சேர அதிர்ச்சியில் நின்றது.
” அக்கா மகனா?? “
” ஆமா சித்தப்பு, உங்க அக்கா, அதான் என் அத்தை, முத்து அத்தையோட பையன், மயூரன் மாமா தான், இந்த வேலையெல்லாம் செய்தார்.. ” என்று நடந்ததைக் கூறினான்.
மறந்துவிட்டதாய், எண்ணிக் கவனிக்கத்தவறிய, சொந்தமொன்று, மனதின் அடியில் வேர் விட்டிருந்த அந்த உறவு, இன்று மரமாய், கிளைகள் விட்டு நின்றிருந்து. அந்த மரத்தைக் காணும் போது வேரைத் தான் நினைவூட்டியது.
வாசு தேவ் கிருஷ்ணனால் இதை ஏத்துக்கொள்ள முடியவில்லை. வேண்டாம் என்று வெட்டி விட்ட உறவோடு, உறவாடி விட்டு வந்தவனை, எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியவில்லை. அவர் செய்த காரியம் இன்று குத்த செய்தது… தனது துண்டை உதறி, அவர்களைக் கடந்து சென்றுவிட்டார்…
அவர் சென்றதை உறுதி செய்த, ருக்கு, அர்ஜுனின் அருகில் வந்தவர், ” டேய் என் பேரனா, இதெல்லாம் பண்ணினான்?எப்படிடா இருந்தான், என் பொண்ணு மாதிரி இருந்தானா? ” ஆசையாய் கேட்டார்..
” உன் பொண்ணை நான் எப்போ பார்த்தேன்? அவர் யாரு மாதிரி எல்லாம் எனக்கு தெரியாது… ஆனா, செம அழகு… நம்மூர் பசங்க போல இல்ல.. விஷ்ணுவுக்கு ஏத்தவர்…” கண்களால் பொருத்திப் பார்த்துக் கூறினான்.
“டேய், நாம போய் பார்ப்போம்மாடா…” என கெஞ்சுவது போல் கேட்க, அவன் தன் தந்தைமார்களைப் பார்க்க, அவர்களும் ஆமோதித்தனர்..
அடுத்த நாளே, வாசுதேவ்கிருஷ்ணனை விட்டு விட்டு இவர்கள் மட்டும் மதுரைக்குச் சென்று மயூரனுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தனர்…
தன் காலில் விழுந்து எழுந்த பேரனை, முகத்தை வழித்தவர். உச்சி முகர்ந்தார்.. அவன் கைகளைப் பற்றி நன்றி கூறினார் ஜெயராமன்… அங்கு ஒரு பாசப் போராட்டமே நிகழ்ந்தது. அர்ஜுனின் மாமா என்ற அழைப்பில் தன் வெற்றியைக் கண்டான் மயூரன்.
நாட்கள் தொய்வுன்றிச் சென்றது. அன்று
ஞாயிறாக இருக்க, பலராமனும் சசியும் கல்யாணத்திற்குச் சென்றவிட்டனர்.
சாரதியும், தன் தோழர்களோடு வெளிய சென்றுவிட்டான், மயூரனும் விஷ்ணு மட்டுமே அங்கு இருக்க, அவளது சமையல் தான் இன்று…
அவன் சமையற்கட்டின் மேடையில் அமர்ந்து அவள் செய்வதை வேடிக்கைப் பார்த்த்திருந்தான்.. கோழிக் குழம்புக்காக, மசாலா அரைக்க, அம்மியில் அனைத்தையும் போட்டு வைதத்தாள். தான் அரைப்பதாக முன் வந்தான். மயூரன். ” உனக்கு அரைக்கத் தெரியுமா? ” சந்தேகமாக, அவள் கேட்க,
” அதெல்லாம், எனக்கு அத்துப்படி….” என்றதும் அவள் விலக, அம்மிக் கல்லைத் தூக்கிய கனநேரத்தில் தோன்றியது அந்தத் திட்டம்.
” ஆங்… விஷ்ணு நீ ஒருவாட்டி ட்ரையல் காட்டேன்… அப்றம் நான் பிக்கப் பண்ணிக்கிறேன்…”என்றான் விஷம சிரிப்போடு..
அதை அறியாதவள், அவனுக்குச் சொல்லிக் காமித்தாள்.. சமையற்கட்டு மேடையில் பொறுத்திருந்த அந்தச் சின்ன அம்மிக் கல்லில், நின்றுக்கொண்டு அரைக்க ஆரம்பித்தாள்.
அவள் பின்னே அவளது இரு கைகளையும் பற்றி முன் பின்னுமாக அரைக்க, அவளோடு அவனும் இசைந்தான்..
மேலும் அவன் அமைதியாய் இருக்காது, தன் அதரங்களை அவள் சங்கு கழுத்தில் பதித்தான்… அவனது செயலில் நெளிந்து விலக எண்ண, அவளைச் சிறைச் செய்தவன், முத்தங்களை அடிக்கிக் கொண்டே சென்றான்.
அவனது முத்தங்கள் வலுப்பெற, அவனைப் பட்டென விலகினாள்.. ” அப்படியே அம்மிக் கல்லைத் தூக்கி மண்டையில போற்றுவேன்… ஆளப்பாரு ஆள… ” என்றவள் அவனை மிரட்டி விட்டு, மீண்டும் அரைக்க, “சர்த்தான் போடி… ரொம்ப தான் பண்ற, நீ வேணா பாரு… நீயா வந்து, என்னை கிஸ் பண்ணுவ, உன்னை நான் பண்ண வைப்பேன்” என்று சவால் விட்டவன், மீண்டும் மேடையில் அமர்ந்தான். அவளோ பழிப்புக் காட்டி விட்டு சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.
மணக்க மணக்க, கோழிக் குழம்பு கொதிக்க, கொஞ்சமாக எடுத்து, அவனை ருசிப் பார்க்கச் சொல்லி, கையில் ஊற்றினாள்.. தன் கையில் வாங்கியதை, சுவைத்து பார்த்தவன், கண்களை மூடி , நாவில் நின்ற சுவையைத் தொண்டை வழியே இதயத்தில் நிரப்பினான்.
அவள் வலது கரத்தினைப் பற்றியவன்,” விஷ்ணு… அருமை டி… நான் ரொம்ப கொடுத்து வச்சவன் தான்.. சமைச்சுப் போடுற பொண்டாட்டி கிடைக்கிறதே அபூர்வம் அதுல ருசியா சமைச்சுப் போடுற பொண்டாட்டி கிடைச்சா, நான் தான், தி லக்கியஸ்ட்ப் பெர்சென் இந்த வோர்ல்டு ” என்று அவன் பற்றி இருந்த கையில் முத்தங்களிட்டான்.
அவன் தலையைத் தட்டி குழம்பை இறக்கி வைத்தாள்.. தட்டில் சோறு போட்டு அவன் காத்திருக்க, தனியாக சின்ன பாத்திரத்தில் குழம்பைச் சோமாறியவள், சட்டென அவளுக்கும், அந்த எண்ணம்தோன்ற, கொஞ்சம் அதிகமாகவே மிளகாய் பொடியைப் போட்டு கலக்கிக் கொண்டு வந்து வைத்தாள்.
தட்டில் குழம்பை ஊற்றியவன், பிசைந்து வாயில் வைக்க, காரமெறித் துடித்து விட்டான்.
” அடியே! எவளோ ருசியா இருந்துச்சன்னு ஒரு பிடி பிடிக்கலாம் நினைச்சேன்… அதுல மிளகாய் பொடி போட்டியே. நீ நல்லா இருப்பீயா? “என்றவன் தண்ணீரை மடக்கென்று குடித்து முடித்தான்.
” என்ன சொன்ன லக்கிஸ்ட் பெர்சன்னா நீ? சாப்டு மகனே சாப்டு…” என்றவள் திமிராய் கூறிச் சிரிக்க, அவனும் குறையாத அதே திமிரோடு குழம்போடு சோற்றைப் பிசைந்து வாயில் வைத்த வண்ணமே இருக்க, பதறிப் போனாள்.
” ஹேய் மயூ… வேணாம் மயூ வேணாம்…. டேய் சாப்பிடாதா…” அவள் தடுத்தும் சாப்டுக் கொண்டு இருக்க, அவனை தடுத்து நிறுத்த, அவனது இதழைச் சிறை செய்தாள்..
அவன் சுவைத்த அந்தக் காரம், இப்போது அவளும் சுவைத்தாள்.. வெகும் நேரம் இருவருமே முத்தத்தில் லயித்து இருந்தனர்..
பின் அவள் மூச்சு விட சிரமப்பட, அவளை விடுவித்தான்… ” சொன்னேல… நீயே எனக்கு முத்தம் கொடுப்பேன்ன்னு… கொடுக்க வச்சேன்னா!” என்று நினைத்ததைச் சாதித்த சந்தோஷத்தில் புருவத்ததை உயர்த்த, அவன் செய்த காரியத்தில் பயந்து போனவள், அவன் நெஞ்சில் குத்தி, சாய்ந்து கொண்டாள்.
” இப்படி ஒரு கிஸ் கிடைக்கணும்ன்னா, எவ்வளவு காரம்னாலும் சாப்பிடலாம் விஷ்ணு… ” என்றவனை முறைத்தவள், ” கொன்னுடுவேன்… இனி இது போல செய்தேன்னா..” மீண்டும் சாய்ந்துக் கொள்ள, அவளை இறுக்கி அணைத்தான்.
நாட்கள் நடைபோட,
அன்று மொத்த குடும்பமும் மண்டபத்தில் சிரித்து மகிழந்து இருந்தது. இங்கே தனித்து விடப் பட்ட, வாசுதேவ கிருஷ்ணனோ, தன் மகன், மருமகளும் மதிக்காமல் சென்றதும், அவர்களித்தில் தோற்று போனதை எண்ணி வெகுண்டவர்
தற்கொலைக்கு முயன்றார்…
கொள்ளை தொடரும்