மருத்துவமனைக்கு சென்றதும் முதலில் குழந்தைக்கு என்ன ஆகிற்று என செவிலியர் ஒருவர் வந்து விசாரிக்க,
“கீழ விழுந்துட்டா சிஸ்டர். இரத்த காயம் ஏதும் இல்லை. ஆனா பாப்பா அழுதுட்டே இருக்கா” ரோஷினி வேகமாய் பதில் கூறவும்,
சஷ்விக்கு வெயிட் மற்றும் காய்ச்சல் இருக்கிறதா என பார்த்தவர்கள், அவர்களை காத்திருக்கும் படி கூறிவிட்டு சென்றனர்.
சரியாக பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அவர்களை உள்ளே அனுப்பி வைக்க, அதுவரையிலும் கூட சஷ்வி அழுத மையமாகவே தான் இருந்தாள்.
அவளின் அழுகையில் அன்னைக்கும் அழுகை முட்டி கொண்டு வந்தது. ஆனாலும் கண்ணீரை வெளியேற்றாமல் இருக்க படாத பாடு பட்டு போனாள்.
உள்ளே வந்ததும், மருத்துவரை பார்த்து அவள் கீழே விழுந்ததை பற்றி சொல்ல, அவரோ அனைத்தையும் கேட்டுக்கொண்டவர் சஷ்வியை அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்தார்.
‘இங்கே வலிக்குதா… இங்கே வலிக்குதா…’ என ஒவ்வொரு இடமாய் கை வைத்து கேட்டவர், ஓரிடத்தில் கை வைக்கவும் குழந்தைக்கு வலி தாங்கவில்லை.
ஓவென அழுக, அவளுடன் சேர்ந்து ரோஷினிக்கு அது வலியாக இருக்க, அவளை கௌதம் தாங்கினான்.
“ஒன்னுமில்லை பாப்பு குட்டிக்கு சரியாகிடும்”என்ற வார்த்தைகள் எல்லாம் அவளின் செவிக்குள் சென்றடையவில்லை.
மருத்துவர் குழந்தையை செக் செய்ததில் எலும்பு முறிவாக இருக்கலாம் சொன்னவர், ” எதுக்கும் ஒரு எக்ஸ்-ரே எடுத்து பார்த்திடலாம்” சொல்லவும், அடக்கி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் வெளிவந்தது.
“டாக்டர்” பரிதவிப்போது அழைக்க,
“பெருசா ஏதும் இருக்காது மா, கவலைப்படாதீங்க. நீங்க உங்க ஒய்ஃபை சமாதான பண்ணுங்க சார். இப்போ இருக்கிற குழந்தைகளுக்கு விளையாடும் போது அடிபடுறது எல்லாம் சாதாரணம் தான்” அவர் பாட்டிற்கு பேச, கெளதம் அமைதையாய் ரோஷினியை தாங்கிய நிலையில் நின்றான்.
உடனே, சஷ்விதாவிற்கு எக்ஸ்-ரே எடுக்க பட, பயத்துடனே குழந்தையை மடியில் வைத்து அமர்ந்திருந்தாள் ரோஷினி.
அவளின் பயமுணர்ந்து ஆறுதலாய் பேசினான் கௌதம்.
“ரோஷினி! எதுக்கு இப்படி பயந்துட்டு இருக்க, நீ பயந்து குழந்தையையும் பயமுற்த்துற பாரு?”
“உங்களுக்கு என்னோட கவலை புரியாது. ஒரு அம்மாவா நான் பட்டுற கஷ்டம் எனக்கு தான் தெரியும்”எனும்போதே மறுத்து பேசினான்.
“நீங்க வெளிபடயா உங்களோட கவலை காட்டுறீங்கன்றதுக்காக, எங்களுக்கு கவலையோ அக்கறையோ இல்லன்ற மாதிரி பேசக்கூடாது. எனக்கும் பாப்பாக்கு இப்படியானதுல கவலை தான். அதுக்கு அப்படியே தொய்ந்து போய் உட்கார்ந்தா எல்லாமே நார்மலாகிடிகுமா என்ன?” மீண்டும் தொடர்ந்தவனாக,
“எங்களுக்கும் அதே பாசம் நேசம் எல்லாம் எல்லார் மேலையும் இருக்கு. நாங்க சோர்ந்து போய் உட்கார்ந்தா, அது மேலும் உங்களை தான் பாதிக்க செய்யும். அதான் எல்லாத்தையும் மனசுக்குள்ளே போட்டு அழுத்திக்கிறது”அவன் பேச, அவனையே விழியகளாது பார்த்திருந்தாள்.
கௌதமை தெரிந்த வரையில், அவன் இதுவரை இத்தனை தீவிரமாய் எல்லாம் பேசியதில்லை. அவன் பேச்சில் எப்போதும் ஒரு நகைச்சுவை பான்மையும் குறும்பும் கூத்தாடும்.
இப்போதோ கௌதம் வேறு விதமாய் தெரிந்தான். பார்த்தவள் பார்த்தப்படி இருக்க, அதற்குள் செவிலியர் வந்து அவர்கள் பெயர் அழைத்து உள்ளே செல்ல சொல்லவும், தன் சிந்தனைக்கு விடுதலை கொடுத்தவள் சஷ்வியை தூக்கி கொண்டு உள்ளே சென்றாள். அவள் பின்னே கௌதமும் நுழைந்தான்.
“உட்காருங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் கௌதம்”என்றவர், அந்த எக்ஸ்ரேவை காண்பித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் இருவரும் கவனத்தில் கொள்ளவே இல்லை. அவர்களின் கவனம் முழுதும் பாப்பு குட்டி தான் இருந்தாள்.
“இடது கையில இந்த இடத்துல கொஞ்சமா எழும்பு முறிஞ்சு இருக்கு. கீழ விழுந்ததுல கையை ஊன்னி இருப்பா, அதுல ஏற்பட்டதா தான் இருக்கும்” மருத்துவர் அந்த இடத்தை சுட்டி காட்டி சொல்ல, ரோஷினிக்கு கண்ணில் கண்ணீர் திரண்டது.
பெண்ணவளை கண்ட கௌதம் அவள் வலக்கரத்தை பிடித்து அதில் அழுத்தம் கொடுத்தான்.
“இப்போதைக்கு கட்டு போட்டுவிடுறேன். சீக்கிரமே சரியாகிடும் கவலைப்படாதீங்க. மூனு நாளைக்கு ஒருதடவை வந்து கட்டை மாத்திக்கோங்க. அப்புறம் நான் கொடுக்கிற மாத்திரையை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க” என்றவர் செவிலியரை அழைத்து குழந்தைக்கு கட்டு போட்டுவிடும் படி சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில் மூவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வரவும், ரோஷினிக்கு அவள் மேல் அதிகாரியிடமிருந்து அழைப்பு வரவும் சரியாய் இருந்தது.
இங்கே நடந்த களேபரத்தில் தான் இன்று வரமாட்டேன் என்று மேலதிகாரியிடம் சொல்ல மறந்த மடத்தடனத்தை எண்ணி தன்னையே திட்டி கொண்டவள், எடுத்து பேசலானாள்.
“சார்! சாரி சார்…” தொடங்கும்போதே இடைபுகுந்தவர் அவளை காச்மூச்சென கத்த தொடங்கிவிட்டார்.
இவள் சீரியசாக பேசவும் குழந்தையை தன்னிடம் வாங்கி கொண்ட கௌதம் மகளுடன் பேசியபடி இருந்தான்.
“சார் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. இங்க பாப்பாக்கு உடம்பு முடியலை”
“எனக்கு புரியுது. அதெல்லாம் வர ஹெட்க்கு புரியாது. நீ சீக்கிரமே கிளம்பி வா மா” சொல்லி பதிலை எதிர்பார்க்காது வைத்து விட்டார்.
ரோஷினியோ அடுத்து என்ன செய்வது குழந்தையை டேக்கேரிற்கு அனுப்ப இயலாதே, அவளின் முகம் யோசனையில் இருப்பதை பார்த்தான் கௌதம்.
“என்னாச்சி? ஏதும் பிரச்சனையா?” கேட்க,
“அது…”என சற்று தயங்க,
“பரவால்ல சொல்லு, என்னென்னு?”கேட்டதும் அனைத்தையும் சொன்னாள்.
“இப்போ பாப்புவை எங்க விடுறதுன்னு தெர்ல. டேக்கேர்ல விடவும் முடியாது. லீவ் போடலாம்னு பார்த்தா, அதுக்கும் வழியில்லாம போய்டுச்சி”என கைகளை பிசைய,
“இதுல எதுக்கு யோசனை எல்லாம் செய்துக்கிட்டு. குழந்தையை என்கிட்ட விட்டுட்டு போ, நான் பார்த்துக்கிறேன்” என்றான் உறுதியான குரலில்.
“என் பொண்ணை பார்த்துக்கிறதுல எனக்கு என்ன கஷ்டம் வரப்போகுது. நான் அவளை பார்த்துக்கிறேன் நீ வேலைக்கு போ” திண்ணமாக கூறினான்.
அவளும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அமைதியாய் நிற்க, அவனோ குழந்தையுடன் முன்னே சென்றான்.
அடுத்து இங்கிருந்து எப்படி போறது? என சிந்திக்கையிலே ராயல் என்ஃபீல்டை அவள் முன் நிறுத்தியவன், “வண்டில ஏறு” என்றான் இறுகிய குரலில்.
அவனின் இந்த கோபம் பெண்ணை மிரள செய்தது.
இன்றைய தினத்திலே கௌதமின் மற்றைய முகங்களை கண்டாள்.
பெண் அங்கேயே நிற்கவும் ஹாரன் அடித்து அவள் காதை வலிக்க செய்ய,நேரமாவதை உணர்ந்து வண்டியில் அவனை உரசாமல் சற்று இடைவெளி விட்டு ஒருபக்கமாய் அமர்ந்தவள், பிடிமானத்திற்காக வண்டியிலிருந்த கம்பியை பிடித்துக் கொண்டாள்.
அலுவலகத்திற்குள் நுழையும்போதே அவளை பிடித்து கொண்ட அவளின் மேலதிகாரி, “சரியான நேரத்துக்கு வந்த மா. சீக்கிரமா நீ ரெடி பண்ணி வச்சியிருந்த டேட்டாவை எடுத்து வை. இன்னும் கொஞ்ச நேரத்துல மெயின் ப்ரான்ச் ஹெட் வந்திடுவாரு” என அவசரப்படுத்த, அவளுமே நிற்க நேரமில்லாது வேலை பார்த்தாள்.
மதிய சாப்பாடு கூட சாப்பிட நேரமில்லாது வேலை இருந்து கொண்டே இருந்தது. மூன்று மணிக்கு மேல் தான் அவளால் மூச்சு விடவே முடிந்தது. அதன்பின் தான் அவர்களது அணியுடன் சாப்பிட சென்றாள்.
ரோஷினி பிஏ எக்கனாமிக்ஸ் எடுத்து படித்திருத்த, கடந்த இரண்டரை வருடங்களாய் திருவாண்மையூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை வாடிக்கையாளர் ஆதரவு ஆய்வாளராக ( Chief Customer support Analyst) பணி புரிகிறாள்.
புத்திசாலியான பெண் என்பதால் வேலைக்கு சேர்ந்த ஆரம்பத்திலே நன்கு வேலை செய்து மற்றவர்களிடம் நன்மதிப்பை பெற்று, இப்போது இந்த பொறுப்பிலும் உள்ளாள்.
இங்கே தான் இனியாவின் நட்பும் அதனுடன் இலவசமாக கௌதமுடனான தொல்லையும் கிட்டியது.
சாப்பிடும் நேரத்தில் அவளின் மேலதிகாரி நினைவு வந்தவராக, “ஆமா உங்க பேபிக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னீங்களே என்னாச்சு?” அக்கறையுடனே வினவ,
அந்த நேரத்தில் அவள் அப்பா என்று அழைத்ததில் அகக்களி கொண்டான்.
ஆசையாய் மகளின் கன்னத்தில் முத்தமிட, குழந்தையுமே “நானு… நானு…” என அவனின் இரு கன்னங்களிலும் பிஞ்சு இதழால் முத்தமிட்டது.
கௌதமும் சஷ்வியும் தனி உலகத்தில் இருக்க, அதை கலைக்கவென மீண்டும் வெற்றியின் குரல்.
“திருடனை பிடிச்சாச்சு…”மீண்டும் குரல் வரவும், மகளை சற்று தள்ளி நிறுத்திய கௌதம் கதவை பலமாய் தட்டினான்.
தட்டி தட்டி பார்த்தும் கதவு திறப்பதாய் தெரியவில்லை. சரி இனி இப்படியே நிற்க முடியாதென கதவை உடைக்க நான்கடி பின்னோக்கி செல்ல, அதற்குள் கதவு திறந்து கொண்டது அதனுடன் கூடிய அர்ஜூனனின் குரலும்.
“அப்பா பிச்சுட்டேன்(பிடிச்சுட்டேன்)” மழலை மொழியில் புன்னகை முகமாக சொன்ன அர்ஜூனன் சந்தோஷம் தாளாது குத்தித்தான்.
வெற்றி நண்பனை முறைக்க, “இங்க என்ன நடக்குது? திருடனை பிடிச்சுட்டேன்னு கத்தி சொல்லவும் நான் பயந்துட்டேன். நீ என்னமோ என்னைய முறைக்கிற?” அவன் கேள்வியாக வினவ,
“அப்புறம் முறைக்காம கொஞ்ச சொல்றீயா, உன்னால தான் டா நான் அவுட்டானேன்”சொல்ல, ஒன்றும் புரியாமல் முழித்தான்.
அதற்குள் பெரிய மனிசியாக சஷ்வித்தா முன்னே வந்து, ” ப்பா அவங்க தீஃப்வ் அண்ட் போலிஸ் கேம் விளையாடுறாங்க” மகளின் மிழலை கூற்றில்,
“அப்படியா தங்கம்?” என்றவன் இப்போது வெற்றியை அவன் முறைத்தான்.
அதற்குள் அர்ஜூனன்,”சஷ்சி…”என அகங்களிப்போடு அவளை நோக்கி இருவரையும் கடந்து ஓடி வர, கௌதம் அவனை அலேக்காக தூக்கி தோளில் போட்டான்.
“அக்காக்கு கைல அடி பட்டிருக்கு மருமகனே”கௌதம் இயம்ப, அப்போது தான் வெற்றி கூட சஷ்வித்தாவின் கையிலிருந்த கட்டினை கண்டான்.
“பாப்புக்கு என்ன டா ஆச்சி?” என்றவாறே குட்டியை தூக்கி கொண்டான்.
“எல்லாத்தையும் வெளிய நிக்க வச்சே பேசி அனுப்பிடலாம்னு இருக்கியா டா”
“அப்படியே செஞ்சாலும் போகவா போற, உள்ள வா”என வழிவிட்டவன் குட்டியுடன் கதவடைத்து விட்டு உள்ளே வந்தான்.
மீண்டும்,” பாப்புக்கு என்னாச்சி?” கேள்வியாய் வினவிய படி, அவளின் கையை ஆராய்ந்தான்.
அவனும் நடந்தவற்றை அப்படியே கூறி, “மூணு நாளைக்கு ஒருதடவை கட்டை மாத்த சொல்லியிருக்காங்க டா”என்று முடித்தான்.
உடனே மருமகளிடம் திரும்பி, “பாப்புக்கு இப்போ வலிக்குதா?” பாசத்துடன் கேட்கவும்,
“வலி இல்ல…” என இளநகை புரிந்தாள்.
பின் அர்ஜூனனும் சஷ்வியும் அவனின் ப்லே ஸ்டேஷனில் விளையாட ஆரம்பித்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து மதிய உணவை பிள்ளைகளுக்கு பிடித்தவாறு தயார் செய்தனர்.
இனியாவின் வருகைக்கு பின்னர் அவளுடன் சேர்ந்து சமைக்க ஆரம்பத்தில், இப்போது ஓரளவிற்கு நன்றாகவே சமைக்க கற்றுக் கொண்டான் வெற்றிமாறன்.
பின், இரண்டு மணிப்போல் இருவரும் சமையலை முடித்து அனைத்தையும் ஒதுக்கி வைத்தவர்கள், எல்லாவற்றையும் எடுத்து கொண்டு நடுகூடத்தில் வைத்தனர். பின் பிள்ளைகளை அழைக்க அவர்களோ ஓடி வந்தனர்.
வெற்றி அர்ஜூனனிற்கு உணவை ஊட்ட, அதனை ஒருவித ஏக்கம் கலந்த பார்வை பார்த்த சஷ்வியை கண்ட கௌதம், அவளின் ஏக்கம் புரிந்து மகளை மடியில் அமர்த்தி ஊட்டி விட ஆரம்பித்தான்.
புன்னகையோடே ஆக்காட்டி உணவை வாங்கி கொண்டவள், தானும் ஊட்டி விடுவேன் என ஊட்டிவிட்டாள்.
அதனை பார்த்து அர்ஜூனனும் அக்காளை பின்பற்றி வெற்றிக்கு ஊட்டினான்.
எப்படியோ நால்வரும் உணவை முடித்து விட, மகளுக்கு தேவையான மாத்திரைகளை கொடுத்து போட செய்தவன், அவளை சிறிது நேரம் உறங்க வைத்தான். அவளுடன் அர்ஜூவும் உறங்கினான்.
அடுத்த வந்த நேரங்களை நண்பர்கள் இருவரும் வேலையை பற்றி பேசியும் கதை அளந்தபடியும்
நேரத்தை போக்கினர்.
பிறகு, வெற்றி மனைவியையும் கௌதம் அவனின் வருங்கால காதலியையும் அழைக்க கிளம்பி விட்டனர் அவர்களது பொற்செல்வங்களுடன்.
இங்கே அப்போது தான் வேலை முடித்து வெளியே வந்த ரோஷினியை பிடித்து கொண்டாள் இனியா.
ரோஷினி காலையில் நடந்ததை பற்றி பேசி வருத்தப்பட,
“விடு பாப்புக்கு பெருசா எதுவும் ஆகாத வரைக்கும் சந்தோஷம்னு நினை. இனி கொஞ்சம் கவனமா பார்த்துக்கிட்டா போச்சி”என்று தோழியை தேற்றினாள்.
இனியா ரோஷினிக்கு நல்ல தோழி. அவளுடன் பேசுகையில் ஏனோ தன் அக்காளுடன் பேசுவது போல் தான் தோன்றும். அப்படியொரு பிணைப்பு அவர்கள் இருவருக்குள். தோழி என்று சொல்வதை விட அம்மா, அக்கா, அண்ணன், தந்தை என்று சொல்லலாம்.
தாயாய் இருக்க வேண்டிய நேரத்தில் தாயாகவும், தந்தையாய் இருக்க வேண்டிய நேரத்தில் தந்தையாகவும், ஒரு அக்காவாய், அண்ணாவாய், தோழியாய் இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களாகவும் இருந்து தன்னை தாங்கினாள்.
அவளின் பேச்சுக்கள் ஒரு ஆறுதலை கொடுத்தது.
தோழியை பார்த்து புன்னகையிலே, வெற்றியும் கௌதமும் வந்து நின்றனர்.
கௌதமை இங்கே கண்டதில் மனம் அதிர்வுற்றது.
கௌதம் எந்த ஒரு நிலையிலும் ஆஃபிஸ் அருகில் நின்று அவளை தொந்தரவு செய்ததில்லை. சற்று தொலைவில் தான் நிற்பான். இப்போது பக்கத்தில் நிற்கவும் மனம் சுணங்கியது.
‘இவன் இங்க எதுக்கு வந்தான்?’என நினைக்க, அதற்குள் அவளை நோக்கி குழந்தை ஓடி வந்தது.
அதில் மற்றதை மறந்து போனவள்,” பாப்பு” என குழந்தையை தூக்கி கொண்டவள் உச்சி முகர்ந்தாள்.
பின், அவளின் இடக்கரத்தை மென்மையாய் வருடியவள்,” இப்போ வலி எப்படி இருக்கு?”என்க,
அதற்குள் இனியாவும் பிள்ளையை பார்த்து பேசி விட்டு, வெற்றி மகனுடன் வீடு சென்றாள்.
இங்கே கௌதம் நிற்பதை பார்த்து,” பாப்புவை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி. சஷ்வி ஏதும் உங்களை தொந்தரவு செய்திருந்தா சாரி” சொல்ல, அவளை பார்வையிலே பொசுக்கி தள்ள முயன்றான்.
“காலையில தான் அவ என்னோட பொண்ணுன்னு சொன்னதா ஞாபகம். நீ என்னை கல்யாணம் செய்துகலைனாலும் பாப்புக்கும் எனக்குமான உறவு மாறாது. அவள் தான் என்னை முதல் முறை அப்பான்னு கூப்பிட்டு நான் வாழ்றதுக்கான ஒரு அர்த்தத்தை கொடுத்த என் ஏஞ்சல். எங்க ரெண்டு பேரையும் பிரிக்க நினைக்காத ரோஷினி” வந்த கோபத்தை கட்டுப்படுத்திய நிலையில் அழுத்தம் திருத்தமாய் சொல்லியவன்,
“வண்டில ஏறு. ரெண்டு பேரையும் வீட்ல விட்டுட்டு போறேன்” சொல்லவும், அமைதியாய் ஏறி அமர்ந்து கொண்டாள்.
ரோஷினியையும் குழந்தையையும் வீட்டில் விட்டுட்டு வேலைக்கு கிளம்பி சென்றிருந்தான்.
அவன் அங்கிருந்து சென்றிருந்தாலும் ரோஷினியின் சிந்தனையில் குடிக்கொண்டு விட்டான்.