ராகம் 6

ராகம் 6

ராகம் 6

வானத்து நிலவு அமைதியாக பவனி வரும் அழகான இரவு. அனைத்து ஜீவராசிகளும் தன் இணையை சேரும் நேரம். கவிஞர்களின் கற்பனைகளுக்கு உயிரோட்டம் அளிக்கும் ஏகாந்த பொழுது.

படபடக்கும் இதயத்துடன் அந்த அறை வாசலில் தேங்கி நின்றது அந்த பாவையின் பாதம். அதற்கு மேல் நகர மறுத்த கால்களை, உலகில் உள்ள அனைத்து தெய்வங்களையும் துணைக்கு அழைத்து, கடினப்பட்டு நகர்த்தினாள். ஆழ்ந்த மூச்சை இழுத்து மனதை திடப்படுத்தி கொண்டு, குனிந்த தலை நிமிராமல், அந்த அறையில் நுழைந்தாள். மலர்களின் நறுமணம் நாசியை நிறைத்தது. பாவையின் முகம் மெல்ல நிமிர்ந்து, கண்களால் அந்த அறையை ஆராய்ந்தது.

படுக்கையில் இருந்து திரைச்சீலை வரை அனைத்தும் மனதை மயக்கும் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தது. கண்ணை கவரும் மலர்களால் படுக்கை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேஜையில் பழங்கள் மற்றும் இனிப்புகளுடன் ஒரு ஃப்ளாஸ்க் இருந்தது. அந்த ஃபிளாஸ்கில் பால் இருக்கக்கூடும் என்பது யூகம். முக்கியமாக அங்கு இருக்க வேண்டிய மணாலனை காணவில்லை. அவன் இருக்க மாட்டான் என்று தெரியும், இருந்தும் அதை உறுதிப்படுத்தி கொண்டது பேதை உள்ளம்.

இவ்வளவு நேரம் இழுத்து பிடித்த மூச்சை நிம்மதியாக வெளியேற்றியவள், சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தாள். கிடைத்த இடைவெளியில் நுழைந்த குளிர் காற்று அவளது தேகம் தழுவி சிலிர்க்க வைத்தது. அந்த ஏகாந்தத்தை ரசித்தவாறு தோட்டத்தில் பார்வையை பதித்திருந்தாள் பாவை.

இன்றைய இரவை நினைத்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் பெண்ணிடம் இருந்த போதிலும், ஏதோ ஒரு இனம் புரியாத படபடப்பை உணர்ந்தாள். என்னதான் பழகிய மனிதர் என்றாலும், ஒரு ஆணுடன், அதுவும் கணவன் மனைவி என்ற உறவுடன், தனித்திருக்க போகும் முதல் இரவு. எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும் உள்ளுர ஒரு உதறலை கொடுக்கும் இரவு.

இயற்கையிலே அமைதியான குணமுடைய பிருந்தாவை, இச்சூழல் படபடக்க வைப்பதில் ஆச்சரியம் இல்லையே??? 

ஆம்! இன்று ரிஷி பிருந்தாவின் முதல் இரவு. இவர்களது திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்னரே முடிந்திருந்தாலும், அம்மு ருத்ரேஸ்வரனின் திருமண வேலைகள் தலைக்கு மேல் இருந்ததால், ரிஷி அதை தனது பொறுப்பில் ஏற்றிருந்தான். அதனால் இவர்களின் முதலிரவு தள்ளிப்போனது. இவர்களுக்கான நேரம் இன்று என்றானது.

அதில் பிருந்தாவின் மனம் சிறிது நிம்மதியடைந்தது. என்னதான் ரிஷியை மனதுக்கு பிடித்து, திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாலும், அவள் மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவனை புரிந்து கொள்ள முயல்கிறாள்.

முயற்சி திருவினையாக்க நாமும் வேண்டிக் கொள்வோம்.

பிருந்தாவை அலங்கரிக்கும் பொறுப்பை ரேகாவும் அம்முவும் ஏற்றுக் கொண்டனர். பிந்துவை கேலி செய்து, முகம் சிவக்க வைத்து, ஒரு வழியாக அலங்காரத்தை முடித்து, காந்திமதி பாட்டி வீட்டிலிருந்து அழைத்து வந்து மணமகள் வீட்டில் விட்டு சென்றிருந்தனர். இப்போது ரிஷியின் வரவுக்காக காத்திருந்தாள் பிருந்தா.

தன் தோட்டத்தில் பார்வை பதித்திருந்த பெண்ணின் மனதில், பழைய நினைவுகளின் ஊர்வலம். அதனுடன் தன் மணாளனின் நினைவும் அவளை ஆக்கிரமித்தது.

ஒரே வீட்டில் இரு பெண்களுடன் (அம்மு, பிந்து) தங்கி இருந்தாலும், கண்ணியமாக நடந்து கொண்ட அவன் நடத்தையிலும், அம்முவின் மேல் அவன் கொண்ட அளவு கடந்த அன்பிலும் கவரப்பட்ட பிந்து, அவன் திருமணத்திற்கு கேட்கவும் உடனே சம்மதித்தாள்.

அவள் சம்மதத்தில் மகிழ்ந்த ரிஷி, பெண்ணின் கன்னத்தில் இதழ் பதித்தான். அந்த முத்தத்தில் நிச்சயம் தவறான எண்ணம் எதுவும் இல்லை. தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் உணர்வு மட்டுமே அவனிடம். ஆனால் ஆண் வாடையே அறியாத பிருந்தா, அவனது இதழ் திண்டலில் திகைத்து நின்றாள். மகிழ்ச்சியில் அப்படி செய்தவன், பெண்ணின் நிலையை உணரவில்லை.

அவனை கண்டாலே நாணம் வர அவனிடமிருந்து விலகி ஓடி ஒளிந்தால். பாவையின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை உணர்ந்த காளையவன், அவளது உணர்வுக்கு மதிப்பளித்து, அதன் பிறகு அவள் விரலைக்கூட தீண்டியதில்லை, பார்வையால் மட்டும் தொடர்ந்தான்.

அன்று அவள் கன்னம் தீண்டிய, ஆணவனது இதழ் ஸ்பரிசத்தை இப்போதும் உணர முடிந்த பெண்ணின் முகம் சிவந்தது. அன்று அவன் இதழ் பட்ட கன்னம், இன்று குறுகுறுத்தது. அந்த குறுகுறுப்பை போக்க தன் உள்ளங்கை கொண்டு கன்னத்தை மறைத்தாள். அந்தோ பரிதாபம் குறுகுறுப்பு மறைவதற்கு பதில், உடல் முழுவதும் பரவி உஷ்ணத்தை ஏற்றியது. 

உணர்ச்சி பிடியில் சிக்கித் தவித்த பெண்ணின் உடல் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. நிற்க முடியாமல் கால்கள் நடுங்கியது. மணாளனும் வரும் வழியை காணோம். அந்த அறையினுள் நடைபயில தொடங்கினாள்.

★★★

பிருந்தாவை விட்டு திரும்பியதும், பசியால் அழுத தன் குழந்தையை தூக்கிக் கொண்டு ரேகா அவள் அறைக்கு சென்றாள். ரிஷி மொட்டை மாடியில் இருப்பதை தெரிந்துகொண்ட அம்மு, அவனை தேடி அங்கு சென்றாள்.

ரிஷியுடன் ருத்ராவும் கார்த்திக்கும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கிய அம்மு, “கிரியை எங்க? ரொம்ப நேரமா ஆளையே காணோம்?”

“கிரியை ரிசப்ஷன் வேலையை கவனிக்க சென்னை அனுப்பிட்டேன். நீ பிஸியா இருந்த. அதனால் உன்கிட்ட சொல்லல.” பதிலளித்தான் ரிஷி.

ஆம்! இன்னும் நான்கு நாட்களில், இரு ஜோடிகளுக்கும் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. அதை ஆடம்பரமாக நடத்த முடிவு செய்திருந்தனர். 

தமிழகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஈஸ்வர் புரொடக்ஷன்ஸனின் ஏகபோக வாரிசு ருத்ரேஷ்வரனின் திருமணம், தமிழ் திரையுலகில், முடி சூடா ராணியாக அனைவரின் மனம் கவர்ந்த நடிகை மித்ராலினியுடன் இன்று முடிந்தது.

அதேபோல் செல்வந்தர் வீட்டு கண்ணுக்குட்டி, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் நடிகர் ரிஷி வர்மா, நடிகை மித்ராலினியின் சகோதரி பிருந்தாவை இரண்டு நாட்களுக்கு முன் கரம்பிடித்தான்.

இரு திருமணமும் சொந்தங்களை மட்டும் அழைத்து, பசுஞ்சோலை கிராம மக்களின் முன், எளிய முறையில் நடந்து முடிந்தது. அதற்கான முக்கிய காரணம் அம்மு.

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த எங்க கல்யாணத்தை, ஏற்கனவே ருத்ரா செய்தியாளர்களிடம் சொல்லி அது பேப்பர்லயும் வந்தாச்சு. இப்போ மறுபடியும் திருமணம் என அறிவித்தால் அது கேலி கூத்தாகிடும். அதனால் எங்க கல்யாணம் நம்ம ஊர்ல சிம்பிளா நடந்தா போதும், ரிஷி பிருந்தாவோட கல்யாணத்தை நல்ல கிராண்டா பண்ணலாம்.” என்றாள். 

அனைவருக்கும் அம்மு சொல்வது சரியாக பட்டது. ஆனாலும் மனம் அதனை ஏற்க தயங்கியது. மனமே இல்லாமல் ரிஷி பிருந்தாவின் திருமணத்தை சிறப்பாக செய்ய முடிவெடுத்தனர்.

ஆனால் இப்போது ரிஷியும் பிருந்தாவும் ஏக மனதாக, ‘எங்களுக்கும் சிம்பிளா கல்யாணம் நடந்தால் போதும்.’ என முடித்தனர்.

இளையவர்களின் முடிவில் பெரியவர்களுக்கு விருப்பமில்லை. ‘இவ்வளவு சொத்துக்கும் ஒற்றை வாரிசு. அவன் கல்யாணத்தை எவ்வளவு கிராண்டா நடத்தணும்னு ஆசைப்பட்டேன்?’  ‘ரிஷி சம்பாதிக்கிறது யாருக்காக?’   ‘கஸ்தூரி அவ பொண்ணுங்களுக்கு எவ்வளவு நல்லா கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டா?’   ‘மூணு பிரபலமானவங்க கல்யாணம். இப்படி யாருக்கும் தெரியாம ரகசியமா பண்ண, நம்ம என்ன திருட்டு கல்யாணமா பண்றோம்?’ என பெரியவர்களின் முணுமுணுப்பு தொடங்கியது.

அவர்கள் ஆதங்கத்தில் இருந்த நியாயம் புறிபட, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது கார்த்திக். “ரெண்டு கல்யாணத்தையும் இங்கே சிம்பிளா முடிச்சுட்டு, ரிஷி பிருந்தா கல்யாணத்தை பேப்பர்ல அறிவிச்சிடலாம். அப்புறம் உங்க வசதியையும் செல்வாக்கையும் காட்டுறது போல் கிராண்டா ஒரு ரிசப்ஷன் சென்னையில வச்சுக்கலாம்.” 

“இல்லை எங்களுக்கு வேண்டாம்.” என்றாள் அம்மு பிடிவாதத்துடன். 

“அப்ப எங்களுக்கும் வேண்டாம்” என ரிஷியும் பிருந்தாவும் மறுத்தனர்.

அனைவரின் பார்வையும் ருத்ராவை அடைந்தது, ‘எதாவது செய்’ என்று. அவனோ “எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அம்முவின் விருப்பமே என் விருப்பம்.” என ஒரு தோள் குலுக்கலுடன் அமர்ந்து விட்டான். அவனை பொறுத்தவரை தன் காதல் தேவதை, தன் கை சேர்ந்தால் போதும். அது ஆடம்பரமாக இருந்தால் என்ன? எளிமையாக இருந்தால் என்ன? 

ரேகாவும் கார்த்திக்கும் அம்முவுடன் தனியே பேசி சம்மதம் வாங்குவதாக பெரியவர்களிடம் சொல்ல, அதை வலுவாக மறுத்தனர் ருத்ராவும் ரிஷியும்.

“அவளை கட்டாயப்படுத்த மாட்டோம். சூழ்நிலையை எடுத்து சொல்லி புரிய வைக்கிறோம். நீங்க ரெண்டு பேரும், அவளுக்கு செல்லம் குடுக்காம கம்முனு இருங்க.” என அம்முவை தனியாக அழைத்து சென்றனர். வேங்கைகள் இருவரும் செல்லும் அவர்களை முறைத்து நின்றனர்.

“அம்மு! அத்தை மாமாக்கு ருத்ரா மாமா ஒரே பையன். அவங்களும் அவங்க பையனோட கல்யாணத்தை கிராண்டா செய்ய ஆசை இருக்காதா?” என்றாள் ரேகா.

“நீ சொல்றது சரி ரேகா. ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிஞ்சதக்கு, இப்போ ரிசப்ஷன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?”

“உங்களுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிஞ்சதுன்னு சொன்னாலும், நீங்க பிரிஞ்சி இருந்தது எல்லாருக்கும் தெரியும். இப்போ ரிசப்ஷன்னா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்றான் கார்த்திக். 

அம்முவின் மனதில் குழப்பம் சூழ்ந்தது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கார்த்திக், “இங்க பாரு அம்மு. இத்தனை நாள் உன்னோட பேரும் ரிஷி பேரும் ஒன்னா பேப்பர்ல வந்துச்சு. இதுவரை நீங்க அதை பெருசா எடுத்துக்கிட்டதில்லை. அதுக்கு மறுப்பு சொன்னதுமில்ல.”

“இல்ல, நாங்க வெரும் பிரண்டுனு சொல்லி இருக்கோம்.” என்றாள் கம்மிய குரலில்.

“நீங்க பிரெண்டுனு சொன்னாலும் உங்களை காதலர்களா மட்டும் பார்த்தாங்க. திடீரென ருத்ரா உன்னை தன்னோட வைஃப்னு சொல்லி இருக்கான். இப்ப காதலர்களை பிரிக்க வந்த வில்லனா எல்லாரும் ருத்ராவை பார்ப்பாங்க. கல்யாணம், ரிசப்ஷன் எல்லாத்தையும் சிம்பிளா பண்ணுனா, ரிஷியும் வேற வழி இல்லாமல் பிருந்தாவ கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி பேசுவாங்க. அது நாளைக்கு ரிஷி பிருந்தாவின் வாழ்க்கையை பாதித்தால் என்ன பண்றது?” என ரிஷியை உள்ளே இழுத்து சரியாக அம்முவை கார்னர் செய்தான்.

ரிஷி பிருந்தாவின் வாழ்க்கையில் பிரச்சனை என்றால் அம்மு சும்மா இருப்பாளா? தன் பிடிவாதத்திலிருந்து இறங்கினாள்.

★★★

அந்த வரவேற்புக்கான ஏற்பாடுகளை கவனிக்க கிரிதரனை அங்கு அனுப்பிவிட்டனர். ருத்ராவின் பி ஏ மனோகர் சென்னையில் கிரியுடன் இணைந்து கொள்வார். 

“ஓ” என்றவள் பார்வையால் ருத்ராவை தழுவி, வழக்கம்போல் ரிஷியின் அருகே அமர்ந்தாள்.

அம்மு வந்ததிலிருந்து அவளை  பார்வையால் விழுங்கி கொண்டிருந்த ருத்ரா, அவள் ரிஷியின் அருகில் அமரவும், எந்த உணர்வையும் பிரதிபலிக்காத முகத்துடன் சற்று விலகி சென்று, அமைதியாக பவனி வந்த நிலவில் பார்வை பதித்தான்.

ருத்ராவை வெறுப்பேற்றவே ரிஷியின் அருகில் அமர்ந்தவள், அவன் விலகிச் செல்லவும், அவனை வெறுப்பேற்றிய மகிழ்ச்சியோடு பார்வையால் அவனை தொடர்ந்தாள். ரிஷி அதை உணர்ந்தாலும் காதலர்கள் விளையாட்டு என மௌனம் காத்தான்.

இந்த விளையாட்டு புரியாத கார்த்திக், ருத்ராவின் உணர்வுகளை படிக்க முயன்றான். ஆனால் விடா கண்டனான ருத்ரேஸ்வரனின் முகத்திலிருந்து ஒன்றும் படிக்க முடியாமல் தோற்றான்.

ருத்ராவின் பின்னோடு சென்ற கார்த்திக், அவன் தோள் தொட்டு, “ருத்ரா அவங்க சாதாரணமா…” என ஆரம்பித்தவனை, தொடர விடாமல் தடுத்த ருத்ரா, “நீ போ கார்த்திக். நான் பார்த்துக்கிறேன்.”

செல்லாமல் தயங்கியவனை, “அம்மு என் வைஃப். ரிஷி அவ பிரிண்ட். அவ பிரண்டு கூட பேசுறா. அதுல நான் தலையிடக்கூடாதுன்னு தனியா வந்தேன். வேற ஒண்ணுமில்லலை. நீ போகலாம்.” என அழுத்தி சொன்னான்.

‘இவ்வளவுதான் உன் எல்லை. அங்கேயே நில்.‌ அதை தாண்டி என்னிடம் வர அனுமதிக்க மாட்டேன்.’ என ஒரு இடைவெளியில் நிறுத்தினான்.

‘இவன் நல்லவனா? கெட்டவனா?’ என்ற குழப்பத்துடன் அந்த இடத்தை காலி செய்தான் கார்த்திக்.

அதானே ருத்ரா நல்லவனா? கெட்டவனா? என்ற சந்தேகம் அனைவருக்கும் வருவது இயல்பு. அவன் நிச்சயமாக நல்லவன் இல்லை, அதே சமயம் கெட்டவனும் இல்லை. நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கேடு கெட்டவன், துரோகிகளுக்கு எமன்.

இன்றும் தொழில் உலகில் ருத்ரா என்றால் அனைவருக்கும் சிம்ம சொப்பனம். அவன் பெயரை கேட்டாலே ஒரு பயம் கலந்த மரியாதை, இல்லை இல்லை நடுக்கம் இருக்கும். அவனை ஏமாற்றவே அஞ்சி நடுங்கினர். அப்படியும் ஏமாற்ற துணிபவர்களுக்கு, அவனே நீதிபதியாகி கடும் தண்டனைகளை வழங்குவான்.

அவனை வீழ்ச்சியிலிருந்து காத்துக் கொண்டிருப்பது அவனது கோபம். அந்த கோபம் என்ற முகமூடியை கழட்டினால் அவனை ஏறி மிதித்து சென்றுவிடும் உலகமிது. துரோகத்தாலும் வஞ்சத்தாலும் சூழ்ந்த நம் உலகத்திற்கு இந்த முகமூடி அவசியம் தேவை.

இதில் கொடுமை என்னவென்றால் அதுவே அவனது குணமாக மாறியது. அவனை பெற்றவர்கள் கூட, அவனது கோபத்தைக் கண்டு அவனிடம் பேச திணறியதுண்டு. அதைக் கண்டு ருத்ராவின் மனம் வலித்தாலும், இதுவும் நல்லதுக்கு என விலகி விடுவான். 

என்று தொழிலில் கால் பதித்து, பல துரோகத்தை சந்தித்தானோ அன்று முதல் மனம் இறுகி, கற்பாறையாக மாறி போனான். அந்த பாறையில் உயிரோட்ட சிற்ப்பமானால் அம்மு.

மணலில் வரைந்து வைய்த்த ஓவியம் கழஞ்சு போகும், பாறையில் செதுக்கிய சிற்பம்?

முதல் பார்வையில் அவனை வசீகரித்தாள். அடுத்தடுத்து சந்திப்புகளில் அவளது நேர்மையாலும் வெள்ளை உள்ளத்தாலும் அவன் மனதை கவர்ந்தாள். அவனை பேச வைத்து, சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து, தவிக்க வைத்து, மோகிக்க வைத்து, சுகிக்க வைத்து, ஏங்க வைத்து, கவலை பட வைத்து, கடைசியில் அவள் பிரிவில் கண்ணீரும் விட வைத்தாள். அம்மு தன்னையறியாமல் அவனது உணர்வுகள் அனைத்தையும், அவனுக்கு மீட்டு கொடுத்த அவன் தேவதை.

முதலில் இருந்தே அம்முவிடம் மட்டுமே அவன் அவனாக இருந்தான். அவனது உணர்வுகள் அனைத்தும் அந்த சிறுமலரிடம் மட்டுமே வெளிப்பட்டது. இனிமேலும் அவளிடம் மட்டுமே அது பிரதிபலிக்கும். 

‘அவளை பற்றி எனக்கு தெரியும். எனக்கும் அவளுக்கும் நடுவில் யாரையும் அனுமதிக்க மாட்டேன்.’ என்ற பிடிவாத குணம் இப்போது கார்த்திகிடம் எதிரொலித்தது.

ருத்ராவின் இந்த பிடிவாதத்தால் ரிஷி அம்முவின் நட்பு?

★★★

அம்பிகா, அம்முவை அழைத்துச் செல்ல, ரிஷி, தன் மனைவியை தேடி அவர்கள் இல்லம் சென்றான். வரவேற்பு அறை யாருமின்றி அமைதியாக இருந்தது.

அவன் வீட்டின் கதவை அடைத்து படுக்கை அறையில் நுழைந்தான். குளிர் காற்று முகத்தில் அறைந்தது. அவன் பார்வை ஆர்வமாக தன்னவளை தேடி மையம் கொண்டது. மையம் கொண்ட பார்வையில் மையல் கூடியது.

புத்தம் புது மலராக முழு அலங்காரத்தில் இருந்தவள், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள். அவன் வந்தது இன்னும் அவளுக்கு தெரியவில்லை.

சிறு பூச்சிகளின் ரீங்காரம் அழகான ராகமானது, அவள் கால் கொலுசின் ஓசை ராகத்துக்கு தாளம் சேர்த்தது, அந்த மோன நிலையை கலைக்க  விரும்பாதவன், அறை கதவை சத்தமில்லாமல் தாளிட்டு அந்த கதவில் சாய்ந்து, கையைக் கட்டி அவளை ரசித்திருந்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு உள்ளுணர்வு உணர்த்த, பிந்துவின் நடை தேங்கியது. பார்வை ரிஷியை அடைந்தது. அவன் விழுங்கும் பார்வையில் தடுமாறியவள் ஜன்னலின் அருகில் நின்றாள். 

பாவையின் மனதில் படபடப்பு அதிகரித்தது. அவளை போலவே அவள் வைத்திருந்த மல்லிகை சரமும் காற்றில் படபடத்தது. அந்த படபடப்பை ரசித்தவாறு, அவளை நெருங்கினான் காளையவன். 

அவன் மூச்சுக்காற்று அவள் தேகம் தொட நெருங்கி நின்றான். அவனது மூச்சுக்காற்றின் வெப்பம் பெண்மைக்குள் அனல் மூட்டியது. பெண்ணின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, கண்கள் அலைபாய்ந்தது. 

சில வினாடிகள் அவளது தவிப்பை ரசித்தவனின் கரங்கள், அவளின் இடையை சுற்றி வளைக்க, முகமோ, கூந்தல் காட்டில் மல்லிகை தோட்டத்தில் புதைந்து, மலரோடு மங்கையை வாசம்ப்பிடித்தது. இப்போது அனல் மூட்டிய பெண்ணின் உணர்வுக்குள் தீ பற்றியது.

அவளது சுவாசம் சீரற்று வந்தது. தன் இடையை வளைத்த கைகளில், பெண்ணின் கரம் பதிந்தது. அவளது இசைவு அவனது தாபத்தை அதிகரிக்க, கரத்தில் அழுத்தம் கூடியது. பெண்ணின் விழிகள் தாமாக மூடி அவன் நெருக்கத்தை உள்வாங்கியது.

அவளை தன்னை நோக்கி திருப்பினான். மலர் இதழ்கள் அவனுக்கு அழைப்பு விடுக்க, மூடிய இமைகள் அவனைப் பார்த்து சிரித்தது. 

இமைகளில் தன் அச்சாரத்தை பதித்தவன், கன்னத்திலும் இதழ் ஒற்றினான். பெண்மைக்குள் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. அடுத்த இலக்கான அவளது மலர் இதழில் அவன் பார்வை பதிந்தது. அவனை வரவேற்க தயாராக இருந்தது.

ஆனால் அவன் இலக்கை அடையவில்லை, விழி மூடி தன் முத்தத்தில் லயத்திறந்தவளின் அழகை ரசித்தான். அவன் தீண்டவில்லை என்று உணர்ந்தவள், மெல்ல விழி மலர்த்தினாள். அதற்காகவே காத்திருந்தவன் ஒற்றை புருவத்தை ஏற்றி, ‘என்ன?’ என சீண்டினான்.

முகம் தாழ்த்தி, ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்தவளின் முகம் ஏகத்துக்கும் சிவந்தது வெட்கத்தால். இப்போது இரு கரங்களால் அவள் முகத்தை ஏந்தியவன், ஆசையாக அவள் இதழை நெருங்க, அவனை தள்ளி விட்டு ஓடி சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

சிறு புன்னகையுடன் அவளை பின்தொடர்ந்து, அவளை உரசி கொண்டே அமர்ந்தவன், அவள் கழுத்தில் முகம் புதைந்தான். இன்னும் நெருங்கி அவள் காதில் தன் சூடான மூச்சு பட, “பிந்து உனக்கு சம்மதமா?” என்றான் தாபமேறிய குரலில்.

வேறு உலகில் சஞ்சரித்த பெண், அவன் கேள்வியில் பூலோகம் வந்தாள். திரும்பி அவன் முகத்தை கண்டவள், அங்கிருந்த ஆசையையும் தாபத்தையும் கண்டு, அவனை அனைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள். தன்னுள் எறிந்த மோகத்தீ, அவளது அச்சம், மடம், தயக்கம் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கியிருந்தது.

அவள் சம்மதத்தில் மகிழ்ந்தவன் இறுக்கி அணைத்தான். அவள் பெண்மையின் மென்மை அவனை வருட, மோகம் கரை புரண்டோடியது. இருவரும் கட்டிலில் சரிய,

இனியும் அங்கிருக்க நாம் என்ன வெட்கம், தயக்கம் இல்லாதவர்களா???

சொந்தம் கொண்ட புருஷன்
சுண்டுவிரல் புடிக்க
சுண்டுவிரல் தொட்டதும்
அந்த இடம் சிலிர்க்க

காமதேவன் மண்டபத்தில்
கச்சேரியும் நடக்க
கன்னிமகள் வளையலும்
வினைகள் இசைக்க

முத்தம் பந்தாடுது
உயிர் மொத்தம் திண்டாடுது
சித்தம் சூடேறுது
இந்த ஜென்மம் ஈடேறுது

ருக்குமணி ருக்குமணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டுபிடி என்ன சத்தம்

error: Content is protected !!