வஞ்சம் நிறை நஞ்ச(ல்ல)வள் – 02

வஞ்சம் நிறை நஞ்ச(ல்ல)வள் – 02
VNN-02
தெருவின் வாயிலில் அவினாஷ் அவன் வண்டியை குறுக்காக நிறுத்தி அதில் அமர்ந்துக் கொண்டு அலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தான்.
ஆக அவன் வண்டியை தாண்டி தெருவுக்குள் வண்டிகள் நுழையாது.
ஞாயிற்றுக் கிழமை ஆனதும் அந்நாள் முழுக்க பிள்ளைகள் எல்லோரும் விளையாடுவது அந்த தெருவின் பாதையில் தான். சிலநேரங்களில் அவினாஷ், அவன் நண்பர்கள் வர அவர்களோடு ஹரி, ஹரியின் சகோதரன் ஹரீஷ் என இவர்களும் விளையாடுவதும் உண்டு.இன்று சிறுவாண்டுகள் மட்டும் விளையாட, அவர்களின் கூச்சல் மட்டுமே தெருவெங்கும் எதிரொலித்தது.
இவர்கள் விளையாடிக்கொண்டிருக்க நித்திலாவின் மடியில் கவி அமர்ந்துக்கொண்டு மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அம்மா பாப்பாவும் போகட்டுமா?”
“பாப்பா அங்க போனீங்கன்னா அண்ணாங்க விளையாடற பந்து உங்க மேல வந்து பட்டுட்டா பாப்பா அழுவீங்கல்ல.”
“பாப்பா ஓரமா விளையாடுவேன் ம்மா. போட்டுமா? “
நித்திலாவிற்கு சற்று பயமாக இருந்தது, அவர்கள் ஓடும் ஓட்டத்திற்கும் பந்து வீசி விளையாடும் வேகத்திற்கும் கவி தாங்கமாட்டாள் என அஞ்சி மறுத்தார்.
கண்கள் கலங்க கெஞ்சலாய் கேட்க, நித்திலாவிற்குமே பாவமாய் இருந்திட, தூர நின்று பார்த்த அனு இவர்கள் அருகே ஓடி வந்தாள்.
“ஆன்ட்டி, கவிய நான் கூட்டி போகட்டுமா? “
“இவ வந்தா உங்களுக்கு கஷ்டமா இருக்கும் அனு. நீ விளையாடு நா பார்த்துக்கிறேன்.”
“கொஞ்ச நேரம் வச்சுக்குறேன் ஆன்ட்டி.”
“வரியா?”என அனு அழைக்கவுமே அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அன்னையை பார்த்து,
” போகவா?” என்று கேட்க, சரியென்றதும் அனுவின் கைகளை இருகப்பற்றிக் கொண்டு உச்சியில் கட்டிய தென்னை மரக்குழல் ஆட துள்ளலாய் சென்றாள். இவர்கள் வரவுமே கணேஷ் கவியோடு நட்புக்கரம் நீட்ட, கணேஷோடு நித்தமும் முட்டிக்கொள்ளும் அனு,
“அவளை நாந்தான் விளையாட கூட்டி வந்தேன், அவ எனக்கு தான் பிரெண்ட். நீ பேசாத.”
“அனு சும்மா பட்டாசு மாதிரி வெடிக்காம ஓரமாப்போ.”
“ஹாய் கவி குட்டி,பிரெண்ட்ஸ்”
என கணேஷ் கை நீட்ட, கவியோ அவன் கொலு கொலு கன்னம் சிரிக்கும் முகமும் அத்தனை பிடித்துப்போக சிரித்துக்கொண்டே அவன் கன்னம் கிள்ளினாள்.
“ஹேய்! அவனை டச் பண்ணாத, யூ ஆர் மை பிரெண்ட். டோன்ட் டாக் டு ஹிம் ரைட்.”
கவியின் கையை தட்டி விட்டு தன் பக்கம் இழுத்துக்கொண்டவள், ஏற்கனவே கண்ணனோடு ஒட்டிக்கொண்டிப்பதால் கணேஷை பிடிப்பதே இல்லை. இன்று இன்னும் பிடிக்காமல் போனது.
கண்ணன் அவன் வயதிற்கு சற்று உயரமாகவும்,ஏழுவயதாக இருந்தாலும் ஒரு பத்து வயது சிறுவனின் தோற்றத்தை கொடுக்கவும் கவி அவனை பார்க்க அனுவின் பின்னோடு மறைந்துக்கொண்டாள்.
இதைக் கண்ட கண்ணன் அவளை கிண்டல் செய்யும் நோக்கில் அவளை எட்டி எட்டிப் பார்க்க, அவளோ அனுவோடு ஒன்றிக்கொண்டாள்.
“கண்ணா சும்மா இரு. அவளுக்கு உன்னைக் கண்டா பயம்.
பாரு பயந்துட்டா.”
பெரியப்பெண்ணாகி அவனைக் கண்டித்தாள். அவனும் சிரித்து விட்டு நகர்ந்தான். அவ்வப்போது அவன் பார்ப்பதும், இவள் ஒழிவதுமாக இருந்தனர். கணேஷோடு பேசும் ஆர்வம் கவியிடம் இருக்க, அனுவும் அவளும் விளையாடச் செல்லாது அவளுடனேயே இருத்திக்கொண்டாள்.
“கவி வா போதும் இன்னிக்கு.” என நித்திலா அழைக்கவும்,
“ஓகே கவி, இனி நாம விளையாட வர்றப்ப நீயும் நம்ம கூட விளையாட வா ஓகேவா? “அனு கூறிட அவளைத்தாண்டி கணேஷை ஆர்வமாக பார்த்தவள் கண்ணன் இவளைப் பார்க்கவும் அனு பின்னே ஓழிந்துக்கொண்டாள்.
இவர்கள் பாதை ஓரத்தில் இருந்த திட்டில் ஆமர்ந்திருக்க, கவி இறங்கி அனுவைத்தாண்டவும் கால் தடுக்கி விழ,
“ஹேய், பார்த்து பார்த்து.” கண்ணன் அவளை தூக்கி விடப்பார்க்க, அவன் கைகளை தட்டிவிட்ட அனு,
“பாரு உன்ன பார்த்து பயத்துல விழுந்துட்டா. இப்டி பண்ணுனா திரும்ப நம்ம கூட விளையாட வர மாட்டா. “
“அவ உன் காலுக்கு இடரி தானே விழுந்தா, அதுக்கு ஏன் அவனை திட்ற?”கணேஷ் கேட்க,
“அவ என் காலு இருக்கத கவனிக்கல கண்ணாவை பார்த்துட்டே கால் வச்சு விழுந்துட்டா.”
இவர்கள் சண்டையில் கவி அழ ஆர்ம்பிக்க, அனு அவளை அணைத்துக் கொண்டு,
“வா நாம அம்மாகிட்ட போலாம்.’ என்றவள்,
‘கண்ணா ஹோம் ஒர்க் இருக்கு நைட் வரேன்.இவன் வர்றதுன்னா சொல்லு நா வரல.” கணேஷை பார்த்து முகத்தை திருப்பியவள், கவியை அழைத்துக்கொண்டு சென்றாள்.
கவியின் முட்டியில் நன்றாக காயமாகியிருக்க, அன்னையைக் காணவுமே அழுகை கூடிவிட்டது.
அனு அவள் அழுகையில் பயந்து, “ஆன்ட்டி, கண்ணாவ பார்த்து பயந்துட்டா.அதான் பயத்துல அப்படியே விழுந்துட்டா.” எனக் கூற,
“சரிடா விளையாடறப்ப அப்டி தானே,இதுக்கெல்லாம் அழுவாங்களா என்ன? “
நித்திலா அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
இப்படியாக இவர்களின் இளமைப்பருவம் வளர ஐந்து வருடங்கள் கழிந்து கண்ணனின் உடன்பிறப்புக்களின் திருமண நாளில் வந்து நின்றது.
கண்ணனின் அப்பா விடுமுறையில் வந்திருக்க அவினாஷ் மற்றும் வைஷ்ணவி இருவருக்குமே திருமணம் கைக்கூடி வர இருவரது திருமணத்தையும் ஒரேநாளில் ஏற்பாடு செய்திருந்தார்.அந்த தெருவுக்கே கொண்டாட்டம். அனைவரும் மாறி மாறி கண்ணன் வீட்டில் தான் இருந்தனர்.
பிள்ளைகள் சற்று பெரியவர்களாகி இருந்தாலும் அவர்களின் சுட்டித்தனத்தில் குறைவிருக்கவில்லை.
இடையே ஹரியின் தம்பி திருமணமாகியிருக்க அன்றிலிருந்து அவர்களது வீட்டில் சிறுசிறு சண்டைகள், மனக்கஷ்டங்கள் என தினம் ஒன்றை அனுபவித்துக்கொண்டிருந்தாள் நித்திலா. கண்ணனின் அன்னையோடு சற்று ஒன்றியிருந்த நித்திலாவுக்கு அவர் வார்த்தைகள் மட்டுமே ஆறுதலைத் தந்தது. அமைதியாக இருப்பதால் மிகவும் பொறுமையோடு காலம் கடத்திக்கொண்டிருந்தார்.
அனைவருமாக திருமண வீட்டுக்கு குடும்பங்களாடு வந்திருக்க, கண்ணனின் உறவினர் பிள்ளைகளும் சேர, சொல்லவும் வேண்டுமா? மண்டபமே அவர்கள் ஆட்சிதான். கவியும் இப்போதெல்லாம் அனு, கணேஷ், மற்றும் ஹரியுடன் சேர்ந்துக்கொள்கின்றாள். இருந்தும் கண்ணாமூச்சியாட்டம் தொடர்ந்துகொண்டிருக்க, அனு அறியாது கணேஷோடு பேசக்கற்றுக்கொண்டாள் கவி. இதை அறியாத அனுவோ,கவி தன்னோடு தன் பேச்சுக் கேட்டு தன்னுடன் மட்டும் நட்பாய் இருக்கும் தோழி என்று நினைத்துக்கொண்டாள்.
இவர்கள் மண்டபம் முழுதும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்க, கவிக்கு பிடிக்கும் என்று கை நிறைய பூந்தி அள்ளிக்கொண்டு வந்தவனோ கவியை அழைத்து மேல் மாடிப் படிகளில் அமர்ந்து உண்ணக்கொடுக்க அவளும் அவனுடன் அமர்ந்து உண்டாள். இதை தூரமிருந்து அனு பார்ப்பதை கண்டுவிட்ட கணேஷ் “கவி அந்த ரூம்குள்ள போய் சாப்பிடு. யாராவது பார்த்தா திட்டுவாங்க “
என்றிட,கவியும் கைநிறைய இருந்த பூந்தியை சாப்பிட்டவாறே அறையில் சென்று அமந்துகொண்டாள். வெளியே சற்று கதவை சாற்றிக்கொண்டு நின்றிருந்தான் இவனும். கண்ணன் அவனை அழைக்கவும் அந்நொடி கவியை மறந்தவனோ அவனோடு ஓடிவிட்டான்.
மணமகளின் அறை என்பதால், அங்கே வந்த கண்ணனின் உறவுப் பெண்மணி ஒருவர், கதவு சற்றே திறந்திருப்பதைப் பார்த்து மூடி விட்டு வர,அதனுள் இருந்த கவியைக் காணவில்லை அவர்.
முருகன் வேலை பார்க்கும் இடத்தில் தான் அவிநாஷும் வேலைப்பார்க்க, பலரும் இவருக்கு தெரிந்தவர்களாக இருந்தனர்.
கவியை தேட ஆரம்பித்த நித்திலா அவளில்லாது போக, பவித்ராவோடு அமர்ந்திருந்த அனுவைக் கண்டவள்,
“அனு, கவி எங்கம்மா காணோம்?உன்கூடத்தானே இருந்தா?”
“இல்லையே ஆன்ட்டி, நா ரொம்ப நேரமா அம்மா கூடத்தான் இருக்கேன்” என்றிட,
“ஓஹ்! உன்கூட இருப்பாண்ணு நான் கவனிக்கலடா, சரி நான் பார்க்கிறேன். “
“உங்க பொண்ண பார்த்துக்கிற வயசா என் பொண்ணுக்கு. என் பொண்ணை வந்து கேட்குறீங்க? “
தன் கணவனோடு இருந்த கோபத்தில் நித்திலாவோடு சற்று கடினமாகப் பேச இருவருக்குள்ளும் வாய்வார்த்தை அதிகரித்தது.
“அம்மா நீ இங்க சண்டை போட்டுட்டு இருக்க அங்க கவி மாடிப்படில விழுந்துட்டா”
“அச்சோ என்னாச்சு?”
படியில் கால் இடரி விழுந்தவள் கடைசி படிவரை உருண்டு வந்திட மயக்கமாகி இருந்தாள்.
எட்டு வருடங்களின் பின்னே கர்ப்பமாகி நான்கு மாதங்கள் கடந்திருக்க மகள் இருக்கும் நிலைக்கண்டு அதிர்ச்சியில் நித்திலாவும் மயக்கமாக, கல்யாண வீடே அமர்க்கலம் ஆனது.
ஹரியின் அன்னையோ மருமகளை அப்போதும் சாடிக்கொண்டு வர, கோபமடைந்த ஹரி,
“ம்மா இப்போவாவது நிறுத்துறியா உன்னோட பேச்சை.” என்றிட, எல்லோர் முன்னும் என்பதால், வாய் மூடிக்கொண்டார் கிருஷ்ணவேணி அம்மா.
ஹரீஷ் கவியைத் தூக்க, மனைவியை ஏந்திகொண்ட ஹரியும் அவசரமாக வைத்தியாசலைக்கு விரைந்தனர்.
கண்ணனின் பெற்றோரிடம், ஹரி,
“அண்ணா டென்ஷன் பண்ணிக்க வேணாம், நீங்க பங்ஷன் கவனிங்க.” என்றிட,
“ஹரி எதுன்னா கால் பண்ணு நான் வரேன்.” எனக் கார்த்திகேயன் கூற, சரியென்று கிளம்பினர்.
முருகன் அவர்களுக்கு உதவிக்காய் கிளம்பப்பார்க்க பவித்ரா அவன் கைகளை பிடித்திருப்பதிலேயே புரிந்தது விடமாட்டாள் என்று. சபை முன்னிலும் தன்னிலை வெட்கி, பிறர் உணராமல் இருக்க மிகக் கடினப்பட்டு இருந்தான் முருகன்.
கணேஷின் அன்னையும் அவனை கண்ணனோடு இருக்கக் கூறிவிட்டு ஹரியுடன் வருவதாகக் கிளம்பினாள்.
இப்படியாக, மணவீட்டார்கள் விருந்தினரை சங்கடப்படுத்திக்கொள்ளாமல் சிறப்பாகவே நடத்தி முடிக்க, விருந்தினர் மண்டபம் விட்டு கிளம்பினர். முருகன் குடும்பத்தினர் கிளம்ப வண்டியில் போகும் போது,
“என்ன அவ்வளவு தைரியமா எல்லாரும் இருக்கப்ப வந்து கேக்குறா, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு. “
“எனக்கென்னமா தெரியும், அவங்களா வந்து பேசுறப்ப என்னால மறுக்க முடில.”
“ஹோ! சார் அவங்க மனசு கஷ்டப்படும்னு இதம்மா பேசுனீங்களோ?”
“அப்டில்லாம் இல்ல பவி.”
“அப்றம் வேறெப்டி? “
முருகனின் நாவில் சனிபகவான் வந்து அமர்ந்தார் போலும்.
“என்னைக் கட்டிருந்தா இதோ இந்த பெரிய கார்ல போயிருப்பா, இப்போ சின்ன கார்லா போறா, அதை நினச்சு வந்து பேசியிருக்கலாமே.”
“ஹோ சாருக்கு அவளைக் கட்டிக்கணும்னு எண்ணம் இருந்ததோ? அதான் அவ்ளோ சாந்தமா பேசுனீங்களோ?”
“ஐயோ பவி அப்டில்லாம் இல்லம்மா. “
பின்னிருக்கையில் மகளும் அன்னையும் அமர்ந்திருக்க, முருகன் முன்னால் சாரதியோடு அமர்ந்திருந்து பவித்ரா பேசப்பேச திரும்பி பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
மண்டபத்தில் நடந்தது இதுதான். பவித்ராவை பெண் பார்க்க முன்னமே பார்ந்திருந்த பெண் ஒருவர் திருமணத்திற்கு வந்திருக்க, அந்தப்பெண்ணோ முருகனிடம் வந்து, “என்ன சார் பொண்ணு பிடிச்சதுனாலதானே பார்க்க
வந்திங்க. அப்புறம் எதுக்கு தகவல் சொல்லி அனுப்பாம எங்களை ஏமாத்துனீங்க. எங்க நிலை யோசிச்சு பார்த்தீங்களா?”முருகன் அந்த நேர குழப்பத்தில் எதோ மறந்துவிட்டான், ஆனால் அந்தபெண்ணுக்கும் வீட்டினருக்கும் எதிர்பார்ப்பு இருந்து எமார்ந்து போனார்கள் போல. அந்த ஆதங்கத்தை இன்று இவனைக்காணவும் பேசிவிட்டாள். இதைக்கண்ட பவித்ரா அவனோடு முட்டிக்கொண்டாள்.
“அப்போ உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்கு, அப்படித்தானே? “
“அச்சோ பவி” என பின்னால் திரும்ப அவன் மூக்கிலேயே குத்தியிருந்தாள்.
இவர்கள் பேச்சை விளையாட்டாக எண்ணி வந்த சாரதியோ இப்படியாகவும் வண்டியை சடாரென நிறுத்த வண்டிவிட்டு இறங்கிய பவித்ரா விருவிருவென தெருவில் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
முருகனின் மூக்குக் கண்ணாடியும் உடைந்திருக்க அதை கலற்றியவன் சாரதியைப் பார்க்க அவரும் இவனைத்தான் பார்திருந்தார்.
“வண்டியை ஓரமா நிறுத்துங்க வரேன். ” என வண்டிவிட்டுறங்கியவன், பவித்ராவின் பின்னாலேயே ஓடி அவளைக் கெஞ்சு கூத்தாடி அழைத்து வந்து வண்டியில் ஏற்றினான்.
இதையெல்லாம் பார்த்திருந்த மகளோ எப்போதும் நடப்பது தானே என்பது போல அவர்களையே பார்த்திருந்து விட்டு யன்னல் வழியே வேடிக்கை பார்க்க திரும்பிக்கொண்டாள்.மனதில் சில செயல்கள் அவர்களுக்கு எற்றாற்போல பதிந்து விடுகின்றன். இப்படியாக இவர்களது நாள் முடிய,
அங்கே வைத்தியசாலையில் நித்திலாவின் கரு அதிர்ச்சியில் கலைந்திருக்க, கவியின் காலில் கணுக்காலில் முள்ளில் சிறு முறிவு ஏற்பட்டிருக்க, அவளுக்கும் காலில் கட்டுப் போடப்பட்டிருந்தது. வீட்டில் நடக்கும் பிரச்சினைகளாலும் நிம்மதி இழந்திருந்த ஹரி, தன் மனைவி மகளையும் அழைத்துக்கொண்டு வேலை மாற்றல் வாங்கிக்கொண்டு அடுத்த மாதமே அந்த தெருவை விட்டு சென்றிருந்தான்.