வண்ணம் 8

வண்ணம் 8
வண்ணம் 08
உந்தன் உயிரை
கொண்டு எந்தன்
உயிர் உருவானது .!
நந்தினி டீனிடம் கூறிவிட்டு., நேராக கீர்த்தியை பார்க்க சென்றாள்…
அங்கே சென்று பார்த்தால் , சூர்யாவுடன் கீர்த்தி பேசிக்கொண்டு இருந்தாள்..
இதை கண்ட நத்தினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திரும்பி செல்லலாம் என்று திரும்பிய நேரம்.
சூர்யா நந்தினியை கண்டு “ந..நந்..நந்தினி” என்று திக்கித் திணறி கூப்பிட்டான்..
சூர்யா கூப்பிடவும் கீர்த்தியும் திரும்பி பார்க்க., அங்கே நந்தினி அமைதியாக நின்றிருந்தாள்..
“வா டி ஏன் அங்கேயே நிக்கிற” என்று கேட்ட கீர்த்தியை பார்த்து “இல்ல நீ ஏதோ பேசிட்டு பிசியா இருந்த அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்” என்றாள் எங்கோ பார்த்த படி…
“ஐம் சாரி நந்தினி “என்று கூறிய படி தன் முன் நின்று கை எடுத்து கும்பிட்ட சூர்யாவை பார்த்து பதறி போய் ,
“கைய கீழ இறக்குங்க அத்தான். நான் உங்கள விட வயசுல சின்ன பொண்ணு என்ன போய் கும்பிட்டுகிட்டு இருக்கீங்க.”
“நான் பண்ணது மிகப்பெரிய தப்பு நந்தினி எனக்கு அதுக்கு மன்னிப்பே கிடையாது என்று எனக்கு தெரியும். ஆனாலும் எனக்கு உன்கிட்ட மன்னிப்பு கேக்குறத தவிர வேற வழியே இல்லை மா” என்று மீண்டும் மன்னிப்பு கேட்பவனை கண்டு எப்படி இந்த சூழ்நிலையை மாற்றுவது என்று தெரியாமல் அப்படியே நின்றாள்..
“போதும் பா நீங்க சின்ன பிள்ளை தனமா விளையாண்டது போதும் இதோட நிறுத்திக்கோங்க எவ்ளோ ஜோக்ஸ் எம்மாடி என்னால தாங்கவே முடியல என் வாழ்க்கைல இவ்ளோ ஜோக்ஸ் ஒரே நேரத்துல கேட்டதே இல்ல” என்று கூறி வயிற்றில் கை வைத்து சிரிக்க முடியாமல் சிரித்தாள் கீர்த்தி….
இதை கண்ட இருவரும் ஏலியனை கண்டது போல் அவளை பார்த்தனர்..
ஆனால் நந்தினிக்கு புரிந்தது நிலமையை மாற்ற தான் கீர்த்தி இப்படி செய்கிறாள் என்று.. அவளுக்கு கண்களாலே ஒரு நன்றியை கூற அவளும் அதற்கு ஏற்றார்போல் கண் சிமிட்டினாள்.
அதன்பிறகு சூர்யாவிடம் என பேசுவது என்று தெரியாமல் கீர்த்தியை பார்த்த படி, ” நான் நாளைக்கு ஊட்டில உதய் சார் அம்மாக்கு உதவிக்காக போக போறேன் டி. இனி நீ இங்க தனியா தான் வேலை பாக்கனும் “என்று கூற அவளை இறுக்கி அணைத்து கொண்ட கீர்த்தி,
“மிஸ் யூ டி “என்க
“மிஸ் யூ டூ டி “
“சரி கொஞ்சம் வேலை இருக்கு அப்புறமா பார்க்கலாம் ” என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.
சூர்யா அவள் செல்லும் பாதையையே தவிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.. ஏதோ அவனது உயிர் அவனை விட்டு விலகி செல்வது போல் இருந்தது…
ஃபோனில் சொன்னது போல் ஜீவா அண்டர் கௌர்ண்டில் பொருத்தப்பட்ட கார் பார்க்கிங் ஏறியாவுக்கு வந்து நின்றான்..
அவன் முன் ஒருவன் வந்து நிற்க..அதை கண்ட ஜீவா ஹாய் என்று கூறி சிரிக்க
அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு, “நான் சொன்ன வேல முடிஞ்சதா” என்று அதிகார குரலுடன் கேட்க
” நீங்க சொன்ன மாறியே முடிச்சிட்டேன். இனி எல்லாம் உங்க பொறுப்புல தான் இருக்கு . அம்முவும் எப்படியோ ஊட்டிக்கு போறதுக்கு ஒத்துக்கிட்டா.. நாளைக்கு நைட்டு கிளம்புறோம் ” என்று கூற அதற்கு பதிலாக அந்த உருவத்திடம் சிரிப்பே பதிலாக கிடைக்க அதை கண்டு ஜீவாவும் புன்னகைத்தான்…
“நான் சொன்ன படியே செஞ்சதுக்கு ரொம்ப நன்றி “என்று அந்த உருவம் கூற
” இதுல நான் எதுவும் பண்ணல இனி நீங்க பண்ண போறதுல தான் எல்லாமே இருக்கு “என்று கூறிய ஜீவா “சரி நான் கிளம்புறேன் உங்கள நம்பி தான் இத செஞ்சேன் அவளை பத்திரமா பாத்துக்கோங்க . நான் இப்போ போறேன் அம்மு வந்துருப்பா ” என்று விட்டு கிளம்பினான்..
நந்தினி ரிசப்ஷன்க்கு வந்தவள் ஜீவாவை தேட அவன் இல்லாமல் போக அவன் மொபைலுக்கு அழைக்க அவன் எடுத்த பாடு இல்லை…
ரிசப்ஷனிடம் கேட்க போக அதற்குள் ஜீவா அவன் முன் வந்து நின்றான்…
“எங்க அப்பு போன.?உனக்கு கால் பண்ணா எடுக்க மாட்டியா .? இவ்ளோ நேரம் எங்க இருந்த சொல்லு அப்பு.? ஏன் இப்படி அமைதியா நின்னு என்னையே பாக்குற “என்று கேட்க…
“அம்மு இப்படி மூச்சு விடாமல் கேள்வி கேட்டுட்டே இருந்தா நான் எப்படி பதில் சொல்றது சொல்லு” என்க
“சாரி” என்றவள் “ஆமா நீ எங்க போன.?” என்று முதல் கேள்வியை கேட்க…
சுற்றி முற்றி பார்த்த ஜீவா நந்தினியின் காதருகில் குனிந்து “என்னோட கடமை கொஞ்சம் அவசரமா அழச்சது அதான் வேகமா இந்த இடத்தை விட்டு காலிப் பண்ணிட்டேன் “என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்…
அதனை கேட்டவள் ,”சரி வா போகலாம்” என்று கூறி நந்தினி முன்னே நடக்க ஜீவா ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்ட படி அவள் பின்னே சென்றான்….
பின் இருவரும் வீட்டுக்கு சென்று தேவையான பொருட்களை எடுத்து வைத்தனர்…
அடுத்தநாள் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தது…
நந்தினி ஜீவா இருவரது எண்ணமும் பயணத்தை நோக்கி இருந்தது…
கவி சுஜி தன் அக்காவை பிரிந்து எப்படி இருக்க போறோம் என்ற கவலையில் பள்ளிக்கு விடுமுறை எடுத்து அக்காவுடன் இருந்து நேரத்தை செலவிட்டனர்…
சிவசங்கரன் மட்டும் உள்ளுக்குள்ளே பயந்து கொண்டு இருந்தார் நந்தினியின் வாழ்வை எண்ணி…
கார்த்திக்கிடமிருந்து வெங்கட் அவளுக்கு எதிரான ஆதாரத்தை என்ன அறிய முற்பட்டு தோற்று தான் போனான்…
கார்த்திக் மற்றும் வெங்கட் இருவரும் சேர்ந்து கிராம மக்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளும் செய்தனர்…
கார்த்திக்கே முன் வந்து மக்களுக்கு பல உதவிகள் செய்து கொண்டு இருந்தான்…
இதே இருவரும் இன்று கடைசி நாள் என்பதற்காக விழிப்புணர்வு முகாம் ஒன்று நடத்த திட்டமிட்டு அதை செய்ய தொடங்கினர்…
கார்த்திக் பேசிக்கொண்டு இருக்கையில் அவனுக்கு அழைப்பு வந்ததை அதை பார்த்த அவன் கண்களில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது..அதை கவனமாக குறித்துக் கொண்டான் வெங்கட்.
அந்த நொடியே வெங்கட்டிடம் மைக்கை கொடுத்துவிட்டு தனியாக நின்று பேசிவிட்டு வந்தான்…
பின்பு இருவரும் முகாமை முடித்து கொண்டு இரவு கிளம்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்…
உதயும் தான் வந்த வேலை முடிவுற்றது என்று தெரிந்தவுடன் சுமித்ராவிற்கு அழைப்பு விடுத்து கூறினான்.. சுமியும் அதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டாள் . ஆனால் இனி அவளுக்கு தன்னால் தான் கஷ்டம் வர போகுது என்று தெரியாமல் மகிழ்ச்சியுடன் இருந்தாள்…
அன்று இரவே அவன் ஃப்ளைட் பிடித்து கோவை கிளம்ப ஆயத்தமானான்.
சூர்யா தனது அறையில் இருந்துகொண்டு மொபைலையே பார்த்துக் கொண்டு இருந்தான்….
“ஏன் நந்து மா என்ன விட்டு ரொம்ப தூரம் போற நான் செஞ்ச தப்புனால தான நீ இந்த ஊர விட்டு போற .. ப்ளிஸ் போகாத நந்து மா நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சி கூட பாக்க முடியல ..நீ இந்த வீட்டுக்குள்ள வரும்போது உனக்கு ஐஞ்சு வயசு தான். அப்போவே நீ என் மனசுல எனக்கான ராணியா வந்திட்ட. அப்போதுல இருந்து உன்ன மட்டுமே நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கேன்.இப்போ திடிர்ன்னு என்ன விட்டு போறேன்னு சொன்ன என்ன அர்த்தம்” என்று அவனது ஃபோனில் சிரித்த முகமாக இருந்த நந்தினியிடம் பேசிக்கொண்டு இருக்க..
அந்த நேரம் பார்த்து கங்கா உள்ள வரது தெரிந்துக் கொண்ட சூர்யா தன் மொபைலை மறைத்து வைக்க முயன்ற போது அவன் மொபைலில் இருந்த அவளது ஃபோட்டோ டெளிட் ஆனது அவன் வாழ்வில் இருந்தும்…
“சூர்யா அம்மா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா” என்றார் அவனுக்கு பால் பாயாசத்தை ஊட்டி விட்டபடி…
“எதுனால மா இப்போ இந்த பாயாசம்” என்று கேட்ட தன் மகனை பார்த்து ,
“அந்த வீட்டு சனியன் இன்னையோட ஒழிய போகுதே அதுக்கு தான்” என்று கூற
“என்ன மா சொல்றீங்க யார் ஒழிய போறாங்க “என்று எதுவும் தெரியாமல் கேட்க..
“அதான் டா நம்மள பிடிச்ச பீடை தான் அந்த வீட்ட விட்டு போக போகுதுல அத கொண்டாட தான் இந்த பாயாசம் “என்று அடுத்த வாய் ஊட்டி விட அவனுக்கு அது தொண்டையினுள் செல்ல மறுத்தது…
கடினப் பட்டு அதை உண்டவனை சாப்பிட அழைத்து இல்லை இல்லை இழுத்துச் சென்றார் கங்கா. டைனிங் டேபிளில் எல்லாம் அவனுக்கு பிடித்த உணவு வகைகளாக இருந்தது
சூர்யாவால் இதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை. தன் அன்னையின் மகிழ்வை கெடுக்க விரும்பாமல் அதை ஏற்ற மாதிரி நடிக்க தொடங்கினான்…
இங்கே சிவசங்கரன் வீட்டிலிருந்து பெட்டியுடன் தன் வாழ்வையே மாற்ற போகும் பயணத்திற்கு முதல் அடியை எடுத்து வைத்தாள். அவள் பின்னே ஜீவாவும் சென்றான்.
கேப் அவர்கள் வீட்டின் முன் நிற்க , அதில் ஏற போவதற்கு முன் தன் இரு தங்கைகளையும் அணைத்துக் அழுது தீர்த்தாள் நந்தினி.
பின் சில பல அறிவுரைகளை கூறி இருவரையும் விடுவித்தவள் தன் மாமாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு விடை பெற்றாள்…
இருவரும் சென்னை சென்ட்ரல் வந்து சேர்ந்தனர். இன்னும் ரயில் எடுக்க சிறிது நேரம் இருப்பதால் அங்கிருந்த கல்பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்..
அவன் தோல் சாய்ந்தபடி நந்தினி அமர்ந்திருந்தாள்..
அவளை காண்பதற்காக வேக வேகமாக வந்த அந்த கருப்பு அவளை கண்டதும் தூரத்தில் இருந்து இரசிக்க தொடங்கியது.. அவள் கண்ணில் இருந்து வந்த அந்த கண்ணீர் துளி அந்த கருப்பு உருவத்தின் நெஞ்சத்தை கிழித்தது போல் உணர்ந்தது…
அவளது கண்ணீரை துடைத்து தன்னுடன் ஒன்றினைத்து அவளை சமாதானம் செய்ய எண்ணிய மனதை அடக்கியவன் அந்த இடத்தை விட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பினான்..
அவன் சென்ற அடுத்த நொடி அவளது உயிரையே எடுத்து சென்றது போல் உணர்வு ஏற்பட உடனே எழுந்தவள் சுற்றி முற்றி எதை தேடுகிறோம் என்று தெரியாமலே தேட தொடங்கினாள்…
” என்ன தேடுற அம்மு ” ஜீவா அவளை நோக்கி கேட்க திறுத்திறுவென முழித்தளை காப்பதற்காகவே ‘கோவை செல்லும் இரயில் இன்னும் சிறிது நேரத்தில் மூன்றாவது பிளாட்பேரத்தில் வந்து சேரும்’ என்று ஒலிப் பெருக்கியிலிருந்து குரல் வர இருவரும் ரயிலில் ஏறி அமர்ந்தனர்….
அவள் தேடுவதை கண்ட அந்த கருப்பு உருவம் , ‘என்ன மன்னிச்சிடு நிதி மா. இப்போ உன் கண்ணுக்கு நான் கெட்டவனா தெரியுறேன்.. எல்லாம் பிரச்சனையும் சீக்கிரம் முடியட்டும். இப்போ நான் போறேன் என்னோட உயிரையும் எனக்கு சொந்தமான உன்னோட உயிரையும் உன்கிட்டயே கொடுத்துட்டு போறேன் ‘ அந்த உருவம் அவ்விடத்தை விட்டு மறைந்தது..
கார்த்திக் மற்றும் வெங்கட் இருவரும் அந்த கிராமத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்….
உதயும் சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள ஏர்போர்டிற்கு சென்று போர்டிங்காக காத்திருந்தான்…
இவர்கள் அனைவரும் அவர்களது பயணத்தை தொடங்கினர் வெவ்வேறு இடங்களில் இருந்து….
இதற்கிடையில் ராஜிவ்வும் தன் தந்தையை காண அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கீர்த்தியிடம் சொல்லி ஊட்டிக்கு கிளம்பிச் சென்றான்…
கீர்த்தி தன் வேலையை முடித்துவிட்டு வீட்டு வீட்டிற்கு வந்தவளை பார்த்து அவள் தந்தை எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்து விட்டு சென்றார்…
தன் அறைக்கு சென்று ரெஃபிரஷ் ஆகி வந்தவளுக்கு அவள் அன்னை ஜெயந்தி காப்பியை அவளிடம் தராமல் பக்கத்திலிருந்த டிபாயில் வைத்து விட்டு சென்றார்.
இதை கண்ட அவளுக்கு ஒன்றும் புரியாமல் போக.., தன் தங்கையான விஷ்ணுப்ரியாவிடம் சென்று என்னவென்று கேட்க ‘அவளோ எனக்கு தெரியாது’ என்று தோலை குழுக்கி விட்டு சென்றாள்.
சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் சாப்பாடு பரிமாற எல்லாரும் அமைதியாக சாப்பிடுவதை கண்டு விஷ்ணு பேச வாய் திறக்க அவளை பேசாமல் சாப்பிடுமாறு அதட்டினார் ராஜரத்தினம்.
“இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சினை?” என்று சாப்பாட்டை தட்டி விட்டு கேட்ட அடுத்த நொடி கண்ணத்தில் கை வைத்த படி நின்றிருந்தவளுக்கு அடுத்த ராஜரத்தினம் கூறிய செய்தியை கேட்டு அப்படியே உறைந்து நின்றாள்…
தேடல் தொடரும்.