⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

லேவியின் நவி 2

இதுவரை யாரையும் ஏறெடுத்து பார்க்காத கண்கள் உன்னை மட்டும் ஆர்வமாய் தழுவுவது ஏன்?

ஜான் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வைஷு அவளின் பையிலிருந்து எடுத்த பொருள் அவளின் ஐடி கார்டு.

இது அவள் அந்த கம்பெனியின் கிண்டி வளாகத்தில் சென்று வாங்கிக் கொண்டது. அங்கேதான் அவள் இன்டர்வியூ அட்டென்ட் செய்ததும். இப்பொழுது போகப் போவது சோழிங்கநல்லூர் எல்காட் வளாகம் அது அவளுக்கு புதிது.

அவள் ஐடியில் இருந்த டேக் அவன் வேலை செய்யும் அதே கம்பெனியினுடையது தான்.

அதை காணவும் அங்கேயே குத்தட்டம் போடச் சொல்லி மனம் தூண்ட ‘பப்ளிக் பப்ளிக்’ என்று அதை தட்டி உள்ளே அனுப்பினான்.

பின் அவளிடம் சென்று, “நியூ ஜாய்னியா?” என வினவ,

யார் என்று தெரியாத ஒரு ஆடவன் தன்னிடம் வந்து பேசவும் திருதிருவென விழித்தாள்.

அதை உள்ளுக்குள் ரசித்தவன் “இல்ல நானும் அதே கம்பெனி தான் என தன் ஐடியை காட்டி, கேப் நம்பர் 4808 தானே?” என்றான்.

அப்போது தான் விவரம் புரிந்தவள் ‘ஆம்’ என வேகமாக தலையாட்டினாள். அதில் வெளிப்பட்ட சிறுபிள்ளை தனம் இன்னும் அவனை கவர்ந்தது.

“இது ஸ்டார்டிங் பாயிண்ட் சோ கேப் அதோ இருக்கு பாருங்க அங்க தான் போட்டு இருக்கும்”, என கேப் நின்ற இடத்தை சுட்டிக் காட்ட,

‘அவ்வளவு நேரமும் ரோட்டை மட்டும் பார்த்தோமே சற்று ஒதுங்கியிருந்த கேப்பை பார்க்காமல் விட்டோமே’ என மானசிகமாய் தலையில் அடித்துக் கொண்டாள்.

அவளின் எண்ணம் அவள் முகத்தில் பிரதிபலிக்க, இவன் முகம் குறுநகையை தத்தேடுத்து கொண்டது.

“சரி வாங்க போவோம்”, என அவளை அழைத்துவிட்டு முன்னே சென்றான்.

இவளும் அவன் பின்னேயே சென்றாள்.

கேபில் ஏறியவுடன் கேப் சாட்டை டிரைவரிடமிருந்து வாங்கி அவளின் பெயரை பார்த்தான்.

“வைஷ்ணவி”

“ம்…”

“இந்தாங்க இது கேப் சாட்” என ஒரு பேப்பரை காட்ட,

அதில் வேலை செய்பவரின் பெயர், முகவரி, கேபில் ஏறிய நேரம், அவரின் கையெழுத்து என தனி தனியே எக்ஸ்சல் வடிவில் இருந்தது.

பெயர் மற்றும் முகவரி முன்னமே நிரப்பி இருக்க, இவர்கள் வண்டியில் ஏறிய நேரம் மற்றும் கையெழுத்து போட வேண்டி இருந்தது.

அதை அவள் நிரப்பி கொடுக்க, அவனும் நிரப்பினான்.

அவள் முதல் சீட்டில் ஜன்னல் அருகே அமர, இவன் டிரைவர் அருகே அனைவரையும் பார்க்கும் மாறு இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தான்.

அது தான் அவன் எப்பொழுதும் அமரும் சீட்.

இவள் காதில் ஹெட்செட் மாட்டி அமைதியாய் கண்மூடி சீட்டில் சாய,

பிரம்மன் அணுஅணுவாய் ரசித்து வடித்த, அழகிய சிலையென கண்மூடி அமர்ந்திருந்தவளை தன்னையும் அறியாமல் அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தான் ஜான்.

காதில் பாடல் ஓடினாலும், அதில் கவனம் செல்லாது அவள் நினைவு பின்னோக்கி சென்றது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருகே வெண்ணாரையூர் (கற்பனை பெயர்) என்றொரு நகராட்சி உள்ளது. அவ்வூரின் விவேகானந்தர் தெருவில் அமைந்துள்ளது வைஷ்ணவியின் வீடு.

காலை எழுந்தவுடன் படுக்கையில் தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரப்பனை “பிள்ளையாரப்பா இன்னைக்கு நாள் நல்லபடியா போகணும்” என வேண்டிக்கொண்டு தன் நாளை துவங்கினாள் வைஷு.

அதன் பின் பல் துலக்கி, நீராடி தோட்டத்திலிருந்து பூப்பறித்து பூஜையறையிலிருக்கும் அனைத்து சாமிகளுக்கும் வைத்துவிட்டு, இவளின் இஷ்ட தெய்வமான பிள்ளையாருக்கு அருகம்புல் மாலையும் அணிவித்தாள்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான்

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு”.

இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் தெளிவாய் உச்சரித்து,

தலையில் இரண்டு கையை இருபுறமும் வைத்து குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு தரையில் விழுந்து வணக்கி நமஸ்கரித்தாள்.

வீட்டில் பூஜை முடித்து அருகில் இருக்கும் வெண்காடீஸ்வரர் கோவிலுக்கு சென்றாள். இது அவள் தினசரி வழக்கம்.

அன்று காலை அவள் வேறொரு எதிர்பார்ப்புடன் இருந்ததினால் கோவிலில் நன்றாகவே வேண்டிக் கொண்டு வந்தாள்.

அவள் வேண்டுதல் வீண் போகவில்லை வீட்டிற்கு வந்தவுடன் அவள் தாய் கொடுத்த, நுரைத்ததும்பிய பில்டர் காபியை மிடறு மிடறாய் ரசித்து அருந்தி கொண்டிருந்த நேரம் அவளுக்கு ஒரு கால் வந்தது.

அதில் கூறப்பட்ட விஷயத்தை கேட்டு துளி குதித்தாள் பெண்.

அவளின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம், ஒரு மாதத்திற்கு முன்பு அவள் அட்டென்ட் செய்த, இன்டர்வியூவில் அவள் செலக்ட் ஆகி விட்டாள் என்பதுதான்.

ஆனால் அங்கு நைட் ஷிப்ட் இருக்க வாய்ப்பு இருப்பதாய் கூறியிருந்தார்கள். பிக்கப் டிராப் இரண்டிற்கும் கேப் வசதி இருந்தது.

ஆனால், அது குறிப்பிட்ட இடம் வரை தான். எனவே அவளை அருகே ஏதேனும் தங்குமிடம் பார்த்துக்கொள்ள சொன்னார்கள் கம்பெனி நிர்வாகம்.

அதுதான் இவளுக்கு பிரச்சனையா இருந்தது. தன் பாட்டி மற்றும் அன்னையுடன் வசித்து வருகின்றாள் வைஷு. இதுவரை இவர்களைப் பிரிந்து அவள் இருந்ததில்லை.

பள்ளி, கல்லூரி எல்லாமே பக்கத்திலே இருந்ததினால். இதுவரை அந்த வீட்டை விட்டு வெளியே சென்று தங்க வேண்டிய தேவை வரவில்லை.

ஆனால் இந்த வேலை அவளுக்கு வேண்டும். இத்தனை நாள் அவள் அன்னை தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.

ஒரு கதவு அடைத்தால் மறுக்கதவு திறக்கும் என்பார்கள் அதைப்போல்தான் கணவன் இழந்த பின்னும் தன் சொந்தக்காலில் நிற்பதற்கு ஏற்றார் போல் அவருக்கு ஒரு கவர்மெண்ட் வேலை இருந்தது.

இது அவர் பதினெட்டு வயதிலேயே கிடைத்து விட்ட வேலை, அது அரசு மருத்துவமனையில் ஆய்வக நுட்புனர் (lab technician) பணி.

முதலில் பழைய பஞ்சாங்கமாய் வேலைக்குப் போக கூடாது என்று அவர் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும், காமாட்சி அது அனைத்தையும் தவிடு பொடியாக்கி அந்த வேலைக்கு சென்று இருந்தார்.

அதன் பின் தான் அவருக்கு திருமணம் ஆனது. தன் கணவனுடன் அன்பான வாழ்க்கை வாழ்ந்தார் காமாட்சி.

முரளியும் அவரின் காதலினால் மனைவியை திக்கு முக்காடு செய்திருந்தார். அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தால் விதிக்கு தான் பொறுக்காதே?

வைஷ்ணவி ஆறு மாத கருவாக அவரின் வயிற்றில் இருக்கும் போது, தன் கணவரை ஒரு விபத்தில் இழந்தார்.

எல்லாம் இந்த குழந்தை வயிற்றில் வந்த நேரம் தான் என்று தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை கணவனின் உறவுகள் சாட, அவர்கள் யாரும் வேண்டியதில்லை என்று தனியே வந்து விட்டார் இவர்.

அந்த ஒற்றை சம்பளத்தை வைத்துக்கொண்டு பெண்ணை எம்.காம் அக்கவுண்டிங் அண்ட் பினான்ஸ் படிக்க வைத்து, ஒரு இடம் வாங்கி வீடு வேறு கட்டி இருந்தார்.

இப்பொழுது அதற்கான ஹோம் லோன் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த லோனினால் சம்பளம் சிறிதாய் கையை கடிக்க துவங்கியிருந்தது.

எனவே தான் தன் படிப்பை முடித்த கையோடு வேலை வாய்ப்புகள் பற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷு.

அப்பொழுது ஒரு பேப்பரில் பார்த்து அப்ளை செய்தது தான் இந்த வேலை. போன வாரம் தான் இன்டர்வியூ அட்டென்ட் செய்துவிட்டு வந்தாள்.

முடிவை அவர்கள் தொலைபேசியில் தெரிவிப்பதாய் கூறியிருத்த நிலையில்,

இதோ இப்பொழுது அவள் செலக்ட் ஆகிவிட்டால் என்ற செய்தி வந்துவிட்டது. ஆனால் வீட்டிலிருந்து வெளியே சென்று தங்க வேண்டுமே என்ற கவலை அவளை சூழ்ந்தது.

ஒரு பெண்ணுக்கு வேலை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்தார் காமாட்சி.

கணவன் இழந்த பின் தன் அன்னையும் தன் மகளுமே அவரின் உலகமாகி போனார்கள்.

எனவே பெண்ணை வெளியே அனுப்பாமல் தன்னுடனே வைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் எத்தனை நாள் அவர் அப்படி வைத்துக் கொள்ள முடியும்.

எப்படியும் அவளுக்கு ஒரு திருமணம் செய்து வேறு வீட்டுக்கு அனுப்பி தானே ஆக வேண்டும்.

அதற்கு ஒரு ஒத்திகையாய் பெண்ணை இந்த வேலைக்காக வெளியூர் அனுப்ப எண்ணினார்.

வைஷ்ணவிக்குமே அவள் பாட்டி, அவள் அன்னை, கோவில் இதுதான் அவளின் உலகம்.

என்னதான் வீட்டிலேயே பூஜை புனஸ்காரம் செய்தாலும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது என்பது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதில் ஒரு மனநிறைவு, மன அமைதி கிடைப்பதாய் தோன்றியது அவளுக்கு.

அவள் மிகுந்த யோசனையிலிருந்து போது அவள் அன்னை தான் “உனக்கு இருபத்தி இரண்டு வயசு ஆயிடுச்சு அம்மு. இனி இந்த உலகத்தை நீ தனியா பேஸ் பண்றதுக்கு ரெடியா இருக்கணும்”.

“புரியுதும்மா ஆனா உங்க ரெண்டு பேர விட்டுட்டு எப்படி இருப்பேன்னு தான் தெரியல”.

“ரொம்ப ஓவரா பண்ற அம்மு நீ இங்கு இருந்து குரோம்பேட்க்கு ஒன்றரை மணி நேரத்துல வந்துடலாம் அப்புறம் என்ன?”

“அதுக்கு நான் இங்க இருந்தே போயிட்டு வருவேனே”

“அது சரிப்பட்டு வராது தினமும் இவ்வளவு தூரம் டிராவல் பண்ணினா உடம்பு என்னத்துக்கு ஆவுரது”.

அவள் அம்மா கூறுவது அவளுக்கு புரிந்தது. அதுவும் இரவு நேர ஷிப்ட் வேறு இருப்பதால் எவ்வாறு இங்கிருந்து சென்று வர முடியும்?

“சரி ஒன்னு பண்ணு வீக் எண்ட் ஆனா இங்க வந்துரு. ஒரு ரெண்டு வாரம் நைட் ஷிப்ட் வரும்னு சொன்னல அப்ப மட்டும் அங்கேயே தங்கிடு ஏன்னா ரொம்ப உடம்பு சோர்ந்து போயிடும்.”

அவர் சொல்வதும் இவளுக்கு சரியென பட அங்கு தங்க ஒத்துக் கொண்டாள்.

அவள் பாட்டி திலகவதிக்கு இவள் செல்ல பேத்தி. இருக்காதா பின்னே அவருக்கு இருப்பதோ ஒரே பெண் அந்த ஒரே பெண்ணின் பெண் இவள்.

தன் அன்பு கணவனை பூத உடலாய் கண்ட பின் காமாட்சிக்கு ஒன்றும் புரியாத நிலை. தன் உயிருக்கு உயிரான கணவரை இழந்த துக்கத்தில் உண்ணவில்லை உறங்கவில்லை.

திலகவதி பெண்ணின் நிலை கண்டு பயந்து விட்டார். அவர் தான் பெண்ணை தேற்றி வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றி கூறி “உன்னை நம்பி இருக்கும் அந்த சிசுவை காப்பாற்று” எனக்கூறி அவரை தேற்றி கொண்டு வந்தது.

பின் தன் தாய், வயிற்றில் இருக்கும் தன் குழந்தை இவர்களுக்காக வாழ முடிவெடுந்து உடல்நிலையை பேணினார்.

அவர் குழந்தையை விட்டு மூன்று மாதத்தில் வேலைக்கு செல்ல, திலகவதி தான் தன் பேத்தியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டார்.

விவரம் தெரியும் முன்னமே பூஜை அறையில் சாமி படங்களுக்கு எதிரே இருந்த தன் தந்தையை வணங்குவாள்.

விவரம் அறிந்த பின் அவரை பற்றி அறிய ஆர்வம் கொண்டு அன்னையிடம் கேட்க, அவரும் தன் காதல் கணவனை பற்றி நிறைய கூறுவார்.

ஆனால் இவள் அப்படி போனதும் அவரை நினைத்து அழுவார்.

ஒரு நாள் அதை கவனித்தவள் அதிலிருந்து அன்னையிடம் அதை பற்றி பேசமாட்டாள். ஆனால் தன் பாட்டியிடம் கேட்டுக் கொள்வாள்.

இப்படியாக அவள் அன்னை மற்றும் பாட்டியுடன் வளர்ந்தவள், தனியே எங்கேயும் இருந்ததில்லை இப்போது ஹாஸ்டல் வாழ்க்கை அவளுக்கு கவலையை கொடுத்தது.

வேலைக்கு சேரும் நாளுக்கு முந்தினம் தான் காமாட்சி அவளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு சென்று விட்டார்.

காலையில் எழுந்ததும் குளிந்து ஹாஸ்டல் வாசலில் இருக்கும் பிள்ளையரை வணக்கி கொள்வாள்.

அதன் பின், அது காபியா, டீயா அல்லது தண்ணீரா என கண்டுபிடிக்க முடியாத படி ஒரு பானத்தை கையில் வைத்திருக்கும் நேரம் தன் அன்னையின் நுரைத்ததும்பிய பில்டர் காபியை எண்ணி அவள் மனம் ஏங்கும்.

அதை தொடர்ந்து இட்லி என்று ஒரு கல்லை வைத்து சாம்பார் என்ற உப்புசப்பில்லாத தண்ணீரை ஊற்றும் போது கண்களில் சிறிதாய் நீர்ப்படலம் தன் முன்னிருந்தத்தை மறைத்தது.

பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ பசிக்கு இரண்டு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு கிளம்பி இருந்தாள் அவள்.

தனக்கு வீட்டு ஞாபகமாக இருக்கிறது. தனக்கு இந்த உணவு பிடிக்கவில்லை, அது பிடிக்கவில்லை, இது பிடிக்கவில்லை என்று அனைத்தையும் தான் ஜான் பார்க்கும்போது தன் பிள்ளையாரிடம் முணுமுணு வென்று கூறிக் கொண்டிருந்தாள் வைஷு.

அதன் பின்பு தான் தன் செல்ல வேண்டிய கேப் நம்பர் மெசேஜ் வரவே அவசரமாக கிளம்பியது.

இதோ இப்பொழுது முதல் நாள் ஆபீஸ் நோக்கி கேபில் சென்று கொண்டிருக்கிறாள் வைஷு.

தன்னை யாரோ அழைப்பது போல் தோன்ற அவசரமாக காதிலிருந்து ஹெட்சட்டை எடுத்து கண்களை திறந்து பார்த்தாள்.

ஜான் தான் அவள் பேக்கை தட்டி அழைத்திருந்தான்.

“சாரி ஆபீஸ் வந்துருச்சு. ரொம்ப நேரமா கூப்பிட்டேன் நீங்க கவனிக்கல அதான் பேகை தட்டினேன்.”

“ம்…” என கீழே இறங்கிறாள்.

‘யப்பா எவளோ பெரிய ஆபீஸ் எவளோ பில்டிங்ஸ். இதில நம்ப பிளாக் எங்க இருக்கு’ என யோசித்துக் கொண்டே தன் பேசிக்கு வந்திருந்த அவள் பிளாக் டீடெயில்ஸ்சை பார்த்தாள்.

‘பி’ பிளாக் இரண்டாம் தளம் பைனான்ஸ் டிபார்ட்மென்ட் என இருந்தது அதில். இவள் அங்கே பைனாஸ் டிபார்ட்மென்டில் தான் வேலை பார்க்க போகிறாள்.

கேப் நிறைருந்த இடத்திற்கு அருகே இருந்ததோ ‘இ’ பிளாக்.

அதை கவனித்தவள் தான் போக வேண்டியது ‘இடப்புறமா வலப்புறமா?’ என யோசிகையில் அவள் பேசி அழைத்தது.

“அம்மா”…என அழைத்த தோணியே பெண் தன்னை தேடுகிறாள் என்பதை உணர்த்தியது அந்த அன்னைக்கு.

அவருக்குமே பெண்ணின் பிரிவு வருத்தத்தையே கொடுத்திருந்தத. தினமும் காலை எழுந்தவுடன் அவள் முகத்தில் தான் முழிப்பார் அவர்.

இருந்தும் அதை வெளிக்கட்டாமல் “என்ன அம்மு ஆபீஸ் போய்டீயா” என்றார்.

“ம்…வந்துட்டேம்மா ஆனா இன்னும் என் பிளாக்கை கண்டுபிடிக்கல”.

“யார்கிட்டயாசும் கேட்டு போமா”

“சரி மா”.

“காலையில என்ன சாப்பிட”

“இட்லி சாம்பார்மா”, என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.

“ஏன்டி ஒரு மாதிரி சொல்ற நல்லா இல்லையா”.

“அதுலாம் ஒன்னும் இல்லமா நல்லா தான் இருந்துச்சி. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா”.

“சாப்டாச்சு, நான் ஹாஸ்பிடல் வந்துட்டேன்”, என அவர் கூறிக் கொண்டிருக்கும் போது ரத்தம் டெஸ்ட் செய்ய ஒரு பேஷன்ட் வர, அவர் வேலையிருப்பதாய் பேசியை வைத்து விட்டார்.

அதுவரை அவள் பேசை கேட்டுக் கொண்டிருந்த ஜான் அவள் பேசியை வைக்கவும் “எந்த பிளாக்” என இவளை விசாரிக்க.

அவள் விவரம் சொன்னாள். “நானும் அதே பிளாக் தான் ஆனா ஐந்தாவது மாடி”, என்றான் இவன்.

பின் இருவரும் அங்கே சென்று லிப்ட் மூலம் இவளை இரண்டாம் தளத்தில் விட, அதுவரை அவனிடம் ஏதும் பேசாதவள் “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

அந்த நன்றியை ஒரு சிறு தலையசைப்பில் ஏற்றுக் கொண்டு, ஐந்தாம் தளம் நோக்கி அவளின் இனிமையான நினைவுகளுடன் சென்றான் இவன்.

எங்கோ மரக்காணத்திலிருந்த ஜானையும் வெண்நாரையூரிலிருந்த வைஷுவையும் ஒன்றாய் ஒரே ஆபீஸில் ஒரே பிளாக்கில் வேலைக்கு என்று கொண்டு வந்து விட்டிருந்தது விதி.

இனி அந்த விதி அவர்களுக்காய் என்னென்ன வைத்திருக்கிறது? தொடர்ந்த பார்ப்போம்…

 

 

error: Content is protected !!