💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 23 💋

eiHO4LK40803-090ddb2c

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 23 💋

தந்தையின் நிலையை யோசித்துக்கொண்டிருந்த  பியானா, தாயை எவ்வாறு அழைத்து வருவான். இறந்தவரை மீட்க முடியுமா, இல்லை தந்தையை ஏமாற்றதான் முடியுமா? என்று சிந்தனைவலையில் சிக்கிக்கொண்டிருக்க, “சேய்யூ நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல. ஒரு மாசமா டாடிய அம்மாவ பார்க்கக் கூட்டிட்டு போறேங்கனு ஏமாத்திட்டு இருக்கீங்க” 

‘உங்கப்பா உங்கள ஏமாத்துறது தெரியல, இதுல நான் உங்கப்பாவ ஏமாத்துறேனு சொல்லுறா’ என்றெண்ணியவன், “ஆமா பியூமா என்னதான் பண்றது, மாமவ சமாளிக்கதான் அப்படி சொல்லி ஏமாத்திட்டு இருக்கேன். இல்ல நம்ம அப்பாவ சமாளிக்க முடியுமா சொல்லு?” 

“எப்படி சேய்யூ, இன்னும் ஏமாத்திக்கிட்டு இருக்க போறீங்களா, இன்னும் எத்தன மாசம் ஏமாத்தப்போறீங்க என் டாடிய, உங்களுக்கு மனசாட்சியே இல்லயா? உண்மை தெரிஞ்சு டாடிக்கு ஏதாவது ஆனா நீங்கதான் பதில் சொல்லனும், சொல்லிட்டேன்” என்று கோபமாக கூறினாள் பியானா. 

“ஓகே ஓகே ச்சில், இதுக்கெல்லாம் நாளைக்கே முற்றுப்புள்ளி வச்சிரலாம்” என்று கட்டை விரலை உயர்த்தி கூறினான். 

‘உங்க அப்பாவோட கலைத்திறன நாளைக்கு அரங்கேற்றி காட்டுறேன்’

“என்ன சேய்யூ, நான் என்ன சொல்றேன், உங்களுக்கு எல்லாம் விளையாட்டா இருக்கா?” 

“அந்த ஆட்டத்தை நாளைக்கு பாரு, இப்போ நம்ம ஒரு குட்டி ஆட்டம் போடலாமா?” என்று கண்களை சிமிட்டி கேட்டான் அவன். 

இந்த ஒரு மாதத்திற்கு இடையில் பியானாவை பல இரவுகள் தூங்கவிடவில்லை புறஞ்சேயன். 

அதை நினைத்து இன்றிரவும் அவள் அருகில் செல்ல, பெண்ணவள்  மறுத்து விட்டாள். 

மாதவிலக்கு வருவதற்கு முன்னரான ஒரு வாரப்பகுதியில் அவளுக்கு ஏற்படும் உடல் சோர்வு, இடுப்பு வலி, கைகால் குடைசல் எதுவுமே ஏற்படவில்லை. ஆதலால் சற்று தள்ளி இருக்க முடிவு செய்து கொண்டாள். 

“எனக்கு டயர்டா இருக்கு சேய்யூ வேணாமே” என்றவள் கெஞ்சிக்கேட்டாள். 

“முன்னவே சொல்லலாம்தானே டயர்டா இருந்தா சீக்கிரம் தூங்கு பியூமா” என்று கட்டிலில் கிடத்தி கால்களை பிடித்துவிட ஆரம்பித்தான். 

“காலெல்லாம் புடிக்க வேணாமே” அவள் கால்களை அவன் பிடித்து விடுவது சங்கடமாய் கருதினாள்.

“ஏன், பழைய காலம் மாதிரி புருசனுக்கு அடிமையா புருசன் கால புடிச்சுவிடனும். பொண்டாட்டிங்க கால புருசன் புடிச்சு விடக்கூடாது, அதுதான் பொண்ணுங்களுக்கு விதியா என்ன? அப்படி இருந்தா, அந்த விதி நமக்கு மாறட்டும். நான் என் பொண்டாட்டிக்கு கால் புடிச்சு விடுவேன். யாரும் எதுவும் கேட்கக் கூடாது. என் பொண்டாட்டியாவே இருந்தாலும் வாய மூடிக்கிட்டுத்தான் இருக்கனும்” மிருதுவாக அவள் கால்களைப் பற்றியவாறே இவ்வனைத்தையும் கூறினான் அவன். 

“அதெல்லாம் ஓகே புருசா, டாடி விஷயத்துல எதும் விளையாட மாட்டீங்கதானே?” என்று சுமூகமாக பேசி சஞ்லமாய் வினா தொடுத்தாள். 

“நாளைக்கு நடக்கப்போறத நீ பார்க்கத்தான் போற, எல்லாம் நல்லதுக்குதான். நிம்மதியா தூங்கு”

“ஓகே சேய்யூ, இன்னும் ஒரே ஒரு கேள்வி, ப்ளீஸ்”

“ம்ம், சீக்கிரம் கேளு” 

“ஃபர்ஸ்ட் நைட் அப்போ டெடி பியர் எனக்கு தெரியாம எப்படி வாங்குனீங்க, ஆன்லைன்ல எடுத்தீங்களா? ரொம்ப அழகாக இருந்துச்சு” 

“ஆமாம், ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சே ஒன் மந்த ஆகுது. இப்போதான் கேக்கத் தோணிச்சா? நீ சாக்லெட் வாங்க ஷோப்பிங்க் போனியா, அப்போதான் வாங்கினேன் பட் உனக்கு காட்டல” 

அவள் மீண்டும் பேசுவதற்கு வாயை திறக்க, அவள் வாயை தன் கைகளால் மூடியவன், “ஓகே சொல்லக்கூட வாயைத்திறக்க வேணாம். வாய மூடிட்டு தூங்கச் சொன்னேன். கண்ண மூடு” என்று கால்களை மிருதுவாய் பிடித்து அவளை உறக்கத்தில் ஆழ்த்திவிட்ட பின்னர் அவனும் அவளை கட்டியணைத்து சில பல யோசனைகளின் பின்னர் அவனும் உறக்கத்தில் ஆழ்ந்தான். 

பனியும் நீரென உருகிட, நெருப்பும் நீரை உறிஞ்சிட, ஆழி பிளந்து அண்டயோனி(கதிரவன்)  அவதரித்தான் அன்று புறஞ்சேயனின் வாகைத்திருநாளை பறைசாற்றிடவே! 

இரவெல்லாம் அவன் கட்டிய கங்கணம், பள்ளத்திலிருக்கும் நீரை மேட்டிற்கு இழுத்து எடுப்பதுதான். திட்டமெல்லாம் திடமாயிருக்க இருக்க, புதிய சூர்யோதயத்தின் புதுத்துணர்ச்சியோடு சோர்வில்லா உடலோட எழுந்தமர்ந்தான் கடகனாய். (காரியத்தை நடத்துபவன் கடகன் – வல்லவன்) 

‘நான் பண்றது உனக்கு புடிக்காது பியூ, வேறவழி தெரியல எனக்கு, சாரி’ 

இருவரும் தந்தையை பார்ப்பதற்கு ஆயத்தமாயினர். கீழே வந்து வேர்லினை தேட அவள் அங்கே இல்லை. 

வேர்லின் சீக்கிரமாக வெளியே கிளம்பியிருப்பதாக லக்ஷதா கூறினாள்.

“சனிக்கிழமை காலேஜ் லீவு, டாடிய பார்க்க வாரேன்னு சொன்னா பட், எங்க போனாளோ தெரியலயே?”

“நம்ம கிளம்புவோம் பியூ, நேரமாச்சு” என்றான் புறஞ்சேயன்.

“சரி” என்று இருவரும் கீழ்பாக்கத்திற்கு கிளம்பினர். 

***

“சார், நாங்க அங்கிள வெளிய அழச்சிட்டு போகலாமா?” என்று புறஞ்சேயன் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டான். 

“அழச்சிட்டு போகலாம் சார், ஈவினிக்குள்ள மறுபடியும் கொண்டு வந்து  விட்டுரனும், போகும் போது ஃபார்ம்ல சைன் பண்ணிட்டு போங்க” 

“ஓகே சார், டைமுக்கு வந்துறோம்” 

“எங்க சேய் போறோம். டாடி நம்மகூட வருவாரா?” 

“சும்மா அப்படி வெளிய போயிட்டு வரலாம். நீ கூப்பிடு வருவாரு” 

“ம்” என்றவள் தந்தையின் அருகில் சென்றாள். “டாடி, நம்ம வெளிய போயிட்டு வருவோம் வாங்க” என்று தனிந்த குரலில் கூறினாள். 

“நான் எங்கயும் வரல!” என்று ஜான் சட்டென்று கூறினார். 

“இதுக்குதான் சேய் முதல்லே சொன்னேன். டாடி எங்கயும் வரமாட்டாங்க” 

“கீதா ஆன்டிய பார்க்கப்போறோம். நீங்க வரலயா அங்கிள்?” என்று புறஞ்சேயன் கூற, ஜான் வாயை பிளந்தார். ஜானின் செய்கையை நன்கு கவனித்தான் புறஞ்சேயன். 

தந்தையின் கையை பற்றி இழுத்துக்கொண்டு வந்தாள் பியானா, “கார்ல ஏறுங்க டாடி” என்று சீருந்தின் முன்கதவை திறந்துக்கொடுத்தாள். 

மாமனும் மருமகனும் முன்னே அமர்ந்து கொள்ள பியானா பின்னே அமர்ந்துகொண்டாள். 

“ஷோப்பிங் போகலாம் பியூமா, அப்பாவுக்கு தேவையான டிரஸஸ் எல்லாம் எடுக்கலாம்” என்று பாதையின் வளைவுசுளிவுகளை கடந்து பேரங்காடியின் வாசலில் வண்டியை நிறுத்தினான். 

முதலில் இறங்கிய பியானா, தந்தை அமர்ந்த பக்கத்தின் கதவை மெதுவாக திறந்தாள். “டாடி மெதுவா தலைய குனிஞ்சு இறங்கி வாங்க” என்று தந்தையின் உச்சந்தலையில் கையை வைத்து இறங்கியதும் எடுத்துக்கொண்டாள். 

ஒவ்வொரு அசைவிலும் குழந்தை போல் தந்தையை கவனித்துக்கொண்டாள். 

எப்போதும் ஆண்கள் உடை தேர்ந்தெடுப்பதற்கு நேரம் செலவிடுவது குறைவுதான் இப்போதும் அப்படித்தான், பியானாவை தேனீர் கடையில் அமரச்செய்து விட்டு ஜானிற்கு தேவையான அத்தனை உடைகளையும் வாங்க சென்றனர் புறஞ்சேயனும் ஜானும். 

இவன் தேர்ந்தெடுத்த உடைகளை ஜானுக்கு காட்டி விருப்பம் கேட்டுவிட்டு விருப்பம் கூறிய ஆடைகளை விலைப்பட்டியலில் சேர்த்துக்கொண்டான். 

புறஞ்சேயன் தேர்வு செய்த உடைகளை ஜான் ‘ஆமாம் சாமி’ என்பது போல் தலையாட்டிதுதான் உண்மை.  

“பியூமா ஷோப்பிங் முடிஞ்சு லஞ்ச் எடுத்துட்டு போய் கார்ல சாப்பிடலாம்” என்றான்  புறஞ்சேயன். 

“ஏன் சேய்யூ இங்கவே சாப்பிடலாமே!” உணவை வாங்கிச்சென்று வாகனத்தில் வைத்து  உண்பது அலுப்பாக இருந்தது பியானாவிற்கு. 

“வேணாம் பியூமா, இங்கவே சாப்பிட்டா மாஸ்க்க கழட்டிட்டு சாப்பிடனும். கொரோனா வேற ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது, அப்பாக்கும் சரியில்ல அதான்” கொரனோ உலகை விட்டு செல்லாது ஆதலால், நாம்தான் கவனமாகயிருக்க வேண்டும் என்பதே அவன் கருத்து. 

“ஓகே சேய்” சீருந்தில் அமர்ந்து வாங்கி வந்த உணவுப்பொதிகளை பிரித்து, பியானா முதலில் ஜானிற்கு புகட்ட அதனை மறுத்து தானே உண்டார். அதனை தொடர்ந்து அவர்களும் உண்டனர். 

வெளியே அழைத்து வந்தும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை ஜானிடம். 

“சங்கீதா எப்போ வருவா?” என்று ஜான், புறஞ்சேயனிடம் வினவினார்.

‘நல்லாவே நடிக்கிறீங்க மாமா’ மனதிற்குள் எண்ணிவிட்டு,

“இதோ இப்போ அவங்களதான் பார்க்கப் போறோம் அங்கிள்”

இவர்கள் பேசுவதை கேட்ட பியானா 

வியர்வையில் துளிகளில் நனைந்திருந்த முகத்தை ஈரம் ஒட்டத் துடைத்தெடுத்தாள். ‘எங்கம்மானு யார காட்டப்போராறோ தெரியலயே, அவங்க, அம்மான இல்லனு தெரிஞ்சா டாடி என்ன ரிஹேக்ஷன் பண்ணுவாரோ தெரியலயே ஜீசஸ்!” என்று சிலுவையிட்டுக்கொண்டாள். 

வண்டியை சற்று வேகமாக செலுத்த ஆரம்பித்தான் புறஞ்சேயன். “சேய் ஏன் இவ்ளோ ஸ்பீடா போறீங்க?” 

“ஐயோ பியூமா, பிரேக் புடிக்க மாட்டீங்குதே!” 

“என்னாது பிரேக் புடிக்கலயா?” என்றவள் வியக்க, ஜானின் மனது படபடத்தது. அதனை புறஞ்சேயன் கவனிக்க மறுக்கவில்லை. 

வாகனங்களுக்கு குறுக்கு நெடுக்கே இவன் வேகமாக வண்டியை செலுத்த, வண்டி குலுங்க உள்ளிருப்பவர்கள் அல்லோலப்பட்டனர். 

“சேய் பயமா இருக்கு, எப்படியாவது கார நிறுத்துங்க” 

“முடியல பியூ, அதுக்குதான் டிரை பண்ணுறேன்” என்று அவள் புறம் திரும்பி கூறினான். 

“சேய், முன்னாடி லாரி!” என்று உச்சக்கட்டமான குரலில் ராகமிழுத்தாள். 

வேகமாக முன்னே திரும்பியவன் பார ஊர்திற்கு குறுக்கு வண்டியை விட, சாலை கடப்பதற்கு ஒரு பெண் இருப்பதை கவனிக்காமல் அவள் மீது மோதினான். அத்தோடு வண்டியிலிருந்து சாவியையும் வேகமாக பிடுங்கினான். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததே என்று புறஞ்சேயன் தலையில் கையை வைத்தான். 

விபத்திற்குள்ளான பெண்ணோ மயக்கநிலையில் இருக்க, “சங்கீதா, கீதா!” என்று பதறி அடித்து கத்திக்கொண்டு சீருந்தின் கதவை திறந்து ஓடினார் ஜான்.   

அன்னையின் வடிவத்தில் அப்பெண்ணை பார்த்ததால்

பியானாவோ திகைத்துப் போயிருந்தாள். பெற்றத்தாயை பிணமாய் பார்வையிட்ட காட்சிகளெல்லாம் பியானாவின் கண் முன்னே தோன்றி மறைந்தன.

நீல வர்ண புடவை அணிந்து, இடை தாண்டிய நீண்ட கேசம், உச்சி வகிட்டில் குங்குமத்துடன் சில நரைமுடிகள். பியானாவின் தாய் சங்கீதாவின் வடிவம் தற்காலத்திற்கு ஏற்றாற்போல் ஒரு பெண் இருப்பது ஒர் அதிர்வுதானே! அனைவருக்கும். இருப்பினும் அது தாயல்ல என்பதில் உறுதியாய் இருந்தாள் பியானா. 

ஓடிச்சென்று ஜானோ அப்பெண்ணை மடியில் கிடத்தி, “சங்கீதா!” என்று கன்னத்தை தட்டிக்கொண்டிருந்தார். 

“என்ன சேய், இப்படி பண்ணிட்டீங்க. 

யாருனு தெரியல, எக்சிடன்ட் பண்ணிட்டீங்க. சீக்கிரம் ஆஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் வாங்க” என்று கூற, ஒரு பெண் மீது மோதிவிட்டோமே என்கிற பயமோ பதற்றமோ இன்றி  ஆசுவாசமாகதான் வண்டியை விட்டு இறங்கி நடந்தான். முதலில் தலையில் கையை வைத்தவன், இப்போ இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? 

ஜானோ தன் மனைவி பெயரை சொல்லிக்கொண்டிருக்க, “டாடி அவங்க அம்மா இல்ல” என்று எடுத்துக்கூறினாள். 

உடனே ஜான், ” ஆமா மா, இது சங்கீதா இல்ல. அன்வி, என்னோட அன்வி!” என்றவர் கதறினார்.

“ஐய்யோ டாடி! இவங்க வேறயாரோ, நம்ம வேர்லின் இல்ல” தங்கையின் பெயரை தந்தை கூறவதை ஆச்சர்யமாய் எண்ண மறந்திருந்தாள் பியானா.

“ஐயோ ரத்தம் கொட்டுதே!” என்று அப்பெண்ணின் நெற்றியில் ஓடும் செங்குருதியை தொட்டுப்பார்த்த ஜானிற்கு எதிர்பாராவிதமாக இடது பக்க கை தானே திரும்ப, வாய் ஒரு புறம் கோணிக்கொண்டு வலிப்பு ஏற்பட ஆரம்பித்தது வாயில் நுரை தள்ளியது. தெருவில் செல்பவராக எல்லாம் கூட்டாமாய் கூடினர்.

இத்தனை விடயங்கள் நடப்பதை சந்தோசமாக கைபேசியில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்தான் புறஞ்சேயன். 

“சேய் சீக்கிரம் ஆஸ்பிடல் போகனும் ஆம்பியுலன்ஸுக்கு கால் பண்ணுங்க” 

“கொஞ்சம் பொறு” என்று அவன் கையிலிருக்கும் சீருந்தின் சாவியை கொடுத்து வலிப்பை நிறுத்த முயற்சித்தான். ஜானை தரையில் நேரேபடுக்க வைத்து ஒருபக்க தலையை நிலத்தோடு சாய்த்து மறுபுறம் காதை பொத்திப்பிடித்தான். 

கொஞ்சம் கொஞ்சமாக வலிப்பு குறைய ஆரம்பித்தது ஜானிற்கு.

நன்றாக குறைந்தவுடன் அமரச்செய்தான் ஜானை.  இரு கைகளை பலமாக தட்டி, “சான்ஸே இல்ல, ஃபர்பெக்ட் ஆக்டிங் அங்கிள்!” என்று வீரியமாய் விளம்பினான் புறஞ்சேயன். 

அவன் கூறும் வார்த்தைகளில் திக்பிரம்மை பிடித்தது பியானாவிற்கு, “என்ன சொல்லுறீங்க சேய்?” நடப்பவை எல்லாம் நாடகமா என்பதுபோல் அவன் பேசிய வார்த்தைகள். 

விபத்திற்குள்ளான பெண்ணைப் பற்றி, “வேர்லின் நீ எழும்பு, உங்க அப்பா போட்ட வேஷம், நீ போட்ட வேஷத்துல கலைஞ்சு போச்சு” என்று கூறியவுடன் வேர்லின் எழுந்து அமர்ந்தாள். அப்போதுதான் உறுதியானது வேர்லின்தான் அப்பெண்ணேன்று! 

தண்ணீர் இல்லாத குளத்தில் மீன் ஆனது ஜானின் மனம். பியானாவிற்கோ வாயடைத்துப்போய் வார்த்தையில்லா தருணமானது.  நடப்பவை எல்லாம் நிஜமா என்று தன்னையே கிள்ளிப்பார்க்கும் அளவிற்கு. 

மக்கள் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைத்து விட்டான் புறஞ்சேயன். 

முதன் முதலில் பியானாவை பார்ககும் போது முனிவர் போல் முடியும் தாடியும் வளர்த்திருந்த ஜான், மகளைப்பார்த்த அத்தனை ஆசையும் கண்ணில் தேங்கி இருக்க அதை முடக்கியதேனோ,

உடையை அகற்றி பார்வையிட்டால்

சங்கீதாவின் பெயரை பச்சை குத்தியது தெரியவருமே என்று உடை அகற்றுவதைகூட மறுத்தார் ஜான். 

இப்படி பெற்ற பிள்ளைகளை அறியாமல் மனநலம் பாதித்தது போல் வாழ்வதற்கு காரணம் என்னவோ? இப்போது கடிவாளம் புறஞ்சேயனின் கையில் இருக்க, ஜானின் வாயால் சற்று நேரத்தில் எல்லா உண்மையும் வந்துவிடும்.

***

Leave a Reply

error: Content is protected !!